Wednesday, March 8, 2017

குருவாயூர் விரைவு ரயில் முன்பதிவுப் பெட்டிகளில் இருக்கை எண்கள் இல்லாததால் பயணிகள் அவதி

By DIN  |   Published on : 08th March 2017 04:21 AM  |    
சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயிலின் முன்பதிவு இருக்கை வசதி பெட்டிகளில் எண்கள் இல்லாததால் பயணிகள் குழப்பத்துக்கும் அவதிக்கும் ஆளாகின்றனர்.
குருவாயூர் விரைவு தினசரி சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. முதலில் இந்த ரயில் கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்துக்கும் குருவாயூருக்கும் இடையே இயக்கப்பட்டது.
பின்னர் படிப்படியாக நாகர்கோவில், மதுரை, சென்னை எழும்பூர் வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 2013- 2014 ஆம் ஆண்டுக்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இந்த விரைவு ரயிலின் இணைப்பாக மதுரை-தூத்துக்குடி இடையே இணைப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களை கேரளத்தின் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களோடு இணைக்கிறது. இந்த ரயில் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களை பகல் நேரத்தில் சென்னையோடு இணைக்கிறது.
சென்னை எழும்பூரிலிருந்து காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு குருவாயூர் சென்றடைகிறது.
குழப்பமான வரிசை எண்கள்: குருவாயூர் விரைவு ரயிலில் முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும் உள்ளன. இந்தப் பெட்டிகளில் இருக்கை எண்கள் இல்லாமலும், வரிசை எண்கள் அழிக்கப்பட்டும் இருக்கிறது. இதன் காரணமாக பயணிகள் தங்களது முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையைக் கண்டுபிடித்து உட்காருவதற்குள் அவதிக்குள்ளாகின்றனர். அதிலும், ரயிலில் வரும் முதியவர்கள் தங்களது இருக்கையைத் தேடுவதற்குள் ரயில் தாம்பரத்தைத் தாண்டிவிடுகிறது. ரயில் பயண்ச் சீட்டு பரிசோதகரும் செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்த பின்தான் சோதனைக்கே வருகிறார். அதற்குள் முன்பதிவுப் பெட்டியில் பயணிகளிடையே பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்படுகிறது. எனவே, சரியான விவரங்களுடன் கூடிய வரிசை எண்களை இருக்கைகளில் வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குருவாயூர் விரைவு ரயிலில் அனைத்துப் பெட்டிகளும் "பயோ டாய்லெட்' வசதி கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை சரியாகப் பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுவதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி கூறியது: புதிய பெட்டிகள் குருவாயூர் விரைவு ரயிலில் இணைக்கப்பட்டதால் இத்தகைய தவறு நேர்ந்துள்ளது. விரைவில் இந்தத் தவறுகள் சரி செய்யப்படும் என்றார் அவர்.

பழுதடைந்துள்ள ஸ்கேனர் கருவி !
எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வரும் வாகனங்களை முழுமையாகச் சோதனை செய்வதற்கு, அங்குள்ள நுழைவு வாயில் தரைப் பகுதியில் அதிநவீன ஸ்கேனர் கருவிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டன.
ஆனால் இந்த ஸ்கேனர் கருவிகள் பராமரிக்கப்படாமல், உடைந்து போய் இப்போது காட்சியளிக்கின்றன.
எழும்பூர் ரயில் நிலையத்தில் ஸ்கேனர் கருவி வைக்கப்பட்டதன் நோக்கம் வாகனங்கள் உள்ளே நுழையும்போது, முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டு விடும். விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்களில் இந்த ஸ்கேனர் கருவிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் வாகனங்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
எப்படி இயங்கும்?: எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் வாகனங்கள் நுழையும்போது தரையில் வைக்கப்பட்டுள்ள மூன்று சிசிடிவி கேமராக்களும் இயக்கப்படும்.
அவற்றில் ஒன்று ஓட்டுநரின் முகத்தையும் மற்றொன்று கார் பதிவு எண்ணையும் மூன்றாவது கேமரா காரின் அடிப்பகுதி முழுவதையும் ஸ்கேன் செய்யும்.
இவ்வாறு கார் ஸ்கேன் செய்யப்படுவதை, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் திரை மூலம் ரயில்வே பாதுகாப்புப்படையினர் கண்காணிப்பர். இப்போது இந்தக் கருவி பழுதடைந்துள்ளதால் ரயில் நிலையத்தின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது.

பிரபலமடையாத நல்ல திட்டம்

By க. பழனித்துரை  |   Published on : 07th March 2017 02:39 AM   
அண்மையில் ஒருநாள் அதிகாலை புறப்பட்டு நான் காரில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தபோது காலை உணவிற்காக ஒரு ஹோட்டல் வாசலில் இறங்கினேன். அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒருவர் இருந்தார். வெளியே கார் அருகில் அவரையே பார்த்தபடி ஒரு மூதாட்டி நின்றிருந்தார்.
காரில் இருந்தவர் சில மாத்திரைகளைக் கையில் எடுத்துக்கொண்டு பின் அவற்றை மொத்தமாக வாயில் போட்டு தண்ணீரை ஊற்றிக் குடித்துவிட்டு காரிலிருந்து உணவகத்திற்குப் புறப்பட்டார். அப்பொழுது தன் மணிபர்சிலிருந்து 50 ரூபாயை அந்த மூதாட்டியிடம் கொடுத்து ’நீ மாத்திரை வாங்கிக்கொள்' என்று கூறினார்.
அத்துடன் அவர் இன்னொரு செய்தியை அந்த மூதாட்டியிடம் கூறினார். ’பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகச் சேவைப்பிரிவு இங்கு எங்காவது இருக்கும் அங்கு சென்று மருந்துகளை வாங்கினால் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
நான் அந்த மூதாட்டி அருகில் சென்று ’உங்களுக்கு என்ன மாத்திரை வேண்டும்' என்று கேட்டேன். ’நான் ஒரு நீரிழிவு நோயாளி, எனக்கு அதற்கான மாத்திரை தேவை. அதனை வாங்குவதற்கு வழியில்லாமல்தான் இந்த இடத்தில் காரில் வருபவர்களிடம் எதாவது பணம் கிடைக்காதா என்று இங்கு வருகிறேன்' என்று கூறினார்.
அந்த மூதாட்டியின் நிலை என்னை ஏதோ செய்து கொண்டே இருந்தது. அடுத்த வாரத்திலேயே தில்லி செல்ல வேண்டியிருந்தது. அப்படி தில்லியில் இருந்தபோது என் நண்பர் ஒருவரைச் சந்திக்க தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவர் நான் தங்கி இருந்த விருந்தினர் இல்லம் வந்தார்.
அவருடன் இன்னொரு நண்பரை அழைத்துவந்தார். அவரை என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகத்திற்குப்பின் அவர் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். 2008-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழைகளுக்கான அற்புதமான மருந்தகத் திட்டம் இன்னும் அந்த ஏழைகளை எட்டிப்பார்க்கவே இல்லை. எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் எட்ட வேண்டிய இலக்கை நாங்கள் எட்டவில்லை என்று ஆதங்கப்பட்டு கூறினார்.
எனக்கு அப்போது நான் சந்தித்த மூதாட்டியின் முகம் என் கண்முன் வந்தது. அந்தக் கதையை அவரிடம் கூறினேன். உடனே அவர் ’இந்த மாதிரி ஏழைகளுக்குத்தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது' என்றார்.
இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் செயல்படாமலே இருந்து, தற்போது புதிய வடிவம் பெற்றுள்ளதை விளக்கினார். இந்தத் திட்டத்தின் பெயர் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தக சேவை வளர்திட்டம்.
இதை மாநில அரசுகள் எல்லா மருத்துவமனைகளிலும் ஆரம்பித்து ஏழைகளுக்கு உதவலாம், அதேபோல் மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் இந்தத் திட்டத்தில் இணைந்து ஏழைகளின் துயர் துடைக்கப் பணி செய்யலாம்.
இதனை ஒரு சமூகச் சேவையாகச் செய்யலாம். அதே நேரத்தில் இதில் ஒரு வணிகமும் இருக்கின்றது. இந்த மக்கள் மருந்தகத்தை ஆரம்பித்து நடத்துபவர்களுக்கு 20%-லிருந்து 30%-வரை லாபம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் இணைந்து இந்த மக்கள் மருந்தகத்தை துவக்க எண்ணுபவர்களுக்கு ரூ.2.50 லட்சம் வரை அரசு நிதி உதவி அளிக்கின்றது. இதன் மூலமாக சேவையும் செய்யலாம், லாபமும் ஈட்டலாம்.
இந்த மருந்தகத்தில் 800 மருந்துகள் வரை இன்று விற்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எல்லா மருந்தகங்களிலும் 1000 மருந்து வகைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்குத் தேவை ஒரு இடம், அதற்கான லைசென்ஸ் இவை இரண்டும்தாம். இருந்தால் உடனே மனுச் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்தச் சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிர்வாகக் கட்டமைப்பை தனி நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, மக்கள் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் என்பது 2008-ஆம் ஆண்டே துவங்கப்பட்டது. எனினும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றவுடன் ஏழைகளுக்கான திட்டங்களை வடிவமைத்தபோது, கிடப்பில் போடப்பட்ட இந்தத் திட்டத்தை எடுத்து புதுப்பொலிவுடன் புதுப்பெயரிட்டு நாடு முழுவதும் இந்த மருந்தகங்களை உருவாக்கி ஏழைகள் பயன் அடைய முயன்று வருகின்றார்.
இன்று லட்சோப லட்சம் ஏழை எளிய மக்கள் மருத்துவச் செலவின் சுமையை தாங்க முடியாமல் பரிதவித்துக் கொண்டுள்ளனர். ஏனென்றால் மருந்துகளின் விலை என்பது கட்டுக்கடங்காமல் செல்லும் காலத்தில் இப்படியொரு திட்டம் என்பது ஏழைகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
இதனை எடுத்துச் சென்று மக்களுக்குச் சேவை செய்ய முன் வரும் எவருக்கும் உதவிட மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள புதிய BPPI என்ற அமைப்பு தயாராக உள்ளது. இந்தத் திட்டம் மக்களுக்குச் செல்ல வேண்டும் என்று நாம் எண்ணினால், நாம் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் எங்கே மக்கள் மருந்தகம் என்று கேட்க வேண்டும்.
அந்த மருந்தகம் வந்தால் நாம் இன்று செலவழிக்கும் தொகையில் 80% பணத்தைச் சேமிக்கலாம். தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் இதை ஆரம்பிக்கலாம். எல்லா தொண்டு நிறுவனங்களும் இதை ஆரம்பித்து ஏழைகளுக்கு உதவலாம்.
இந்த ஏழைகளுக்கான மக்கள் மருந்தகத் திட்டத்தை மறைத்தே வைத்திருக்கின்றார்கள். முதலில் உடனே எல்லா அரசு மருத்துவமனைகளிலும் மக்கள் மருந்தகம் அமைக்க அரசை வற்புறுத்த வேண்டும். அப்போதுதான் ஏழைகளுக்கான இத் திட்டம் ஏழைகளை சென்றடையும்.

திருச்சியில் பழனிசாமி அரசு விழா : தூங்கி வழிந்த எம்.எல்.ஏ.,க்கள்

திருச்சி: திருச்சியில் நேற்று, முதல்வர் பழனிசாமி விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் துாங்கி வழிந்தனர்.திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களில், நலத்திட்ட பணிகள் துவக்க விழா நேற்று, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

 முதல்வர் பழனிசாமி, திட்டங்களை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

வாசிக்க திணறல் : விழாவில், எழுதி வைத்து படித்த முதல்வர் பழனிசாமி, தமிழில் எழுதியிருந்ததை கூட படிக்க முடியாமல், வார்த்தைகள் உச்சரிப்பில் திணறினார். ஜெயலலிதாவின் சாதனைகளை குறிப்பிட்டு பேசும் போது, மேடையில் இருந்த அமைச்சர்கள் மட்டும் கைதட்டினர்.அறந்தாங்கி, மணப்பாறை எம்.எல்.ஏ.,க்கள் கண்ணயர்ந்தனர். அமைச்சர், ஓ.எஸ்.மணியன் துாக்கத்தை அடக்க முடியாமல், திண்டாடினார்.
மரியாதை இல்லை : முதல்வரை வரவேற்கும் வகையில், திருச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனர், போஸ்டர்களில், ஜெ., சசிகலா, தினகரன் படங்கள் பெரிதாக இடம் பெற்றிருந்தன. பழனிசாமி படம், போஸ்டரின் கீழே, போனால் போகிறது என்பது போல் போடப்பட்டிருந்தது.
கடும் பாதுகாப்பு : முதல்வருக்கு ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களோ, தீபா ஆதரவாளர்களோ கருப்புக் கொடி காட்டக்கூடும் அல்லது கருப்புச்சட்டையுடன் வந்து எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என, உளவுத்துறை போலீசார் எச்சரித்திருந்தனர்.எனவே, விழா நடந்த அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி அருகே, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் விழா நடந்த அரங்கில், கருப்புச் சட்டை அணிந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

'அழிக்க முயற்சி' : திருச்சி வரும் வழியில், நாமக்கல்லில் கட்சியினர் மத்தியில் பழனிசாமி பேசியதாவது:ஜெயலலிதா எதிர்பாராத விதமாக இயற்கை எய்திவிட்டார். அவரது ஆட்சி தற்போது அமைந்துள்ளது. அவர் கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றி, நல்லாட்சி நடத்தப்படும். சில அரசியல்வாதிகள், இந்த இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை பெற்று வளம் பெற்றவர்கள், இந்த கட்சியையும், ஆட்சியையும் அகற்ற வேண்டும்; அழிக்க வேண்டும் என துடிக்கின்றனர். அதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ஆதார் எண் பெறாதவர்களும்
அரசின் சலுகைகளை பெறலாம்



NEW DELHI:'ஆதார் எண் பெறாத நபர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகளை பெறாலாம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.





நாட்டில், ரேஷன் பொருட்கள், சமையல் காஸ் உள்ளிட்ட பலவற்றிற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதே போல், பள்ளி கல்லுாரி களில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப் படுகிறது. இது போல், பல்வேறு திட்டங்களின் கீழ், மானியங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

தகுதியற்ற நபர்களுக்கு அரசின் சலுகைகள் போய் சேர்வதால், அரசு நிதி வீணடிக்கப்படுவ தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆதார் எண் அடிப்படையில், அரசின்


நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டது.

இதையடுத்து, ஆதார் பதிவுப் பணி விரைவுபடுத்தப் பட்டது. இதுவரை, 112 கோடிக்கும் மேற்பட்டோ ருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'பள்ளி,கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், 'ஸ்காலர்ஷிப்' பெறவும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயன் பெறவும், ஆதார் எண் கட்டாயம்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 'நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்படாத நிலையில், மத்திய அரசு இதுபோன்ற அறிவிப்பு களை வெளியிடுவது நியாயமற்றது' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுள்ளதாவது:

நாட்டில் இதுவரை, 112கோடிக்கும் மேற்பட்டோ ருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஆதார் எண் பெற, பதிவு செய்யாத நபர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும், நிரந்தர ஆதார் பதிவு மையங் களும் செயல்படுகின்றன. ஆதார் எண் அடிப்படை யில், அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள்

வழங்கப்பட்டதன் மூலம், தவறான நபர்களுக்கு மானியம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இரண்டரை ஆண்டுகளில், மத்திய அரசுக்கு, 49 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது.

ஆதார் எண் பெறாத நபர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறலாம். நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஆதார் எண் வழங்கப்படும் வரை, இந்த நடைமுறை தொடரும். அதுவரை, ஆதார் எண் இல்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் அரசின் சலுகைகள் மறுக்கப் படாது.இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 வயதில் ஆச்சரியப்படுத்தும் பாட்டி

மதுரை: உலக மகளிர் தினத்தை, பல விதங்களில் கொண்டாடுவோர், விதவிதமான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் நிலையில், 100 வயது பாட்டி லட்சுமி அம்மாள், அன்றாட நிகழ்வுகளை, நமது நாளிதழில் படித்து, விவாதித்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறார். மதுரை, சத்யசாய் நகரில் வசிக்கும் இவர்,

 1917ல் கடலுாரில் பிறந்தார். அப்பா சீனிவாச ஐயர். இவருடன் பிறந்தவர்கள், ஒன்பது பேர். 'ராலிஸ் இந்தியா' நிறுவனத்தில், உயர் பொறுப்பில் இவரது அப்பா பணிபுரிந்துள்ளார். அதனால், பல மாநிலங்களுக்கும், அவரோடு பயணப்பட்டுள்ளார்.ஆந்திராவில் கடப்பா, விஜயவாடா, கர்னுால் என, பல ஊர்களில் படித்தாலும், விருத்தாசலத்தில், ஐந்தாம் வகுப்போடு, கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவருக்கு, 10 வயதில் திருமணம்; கணவர் ராஜாராமையர், மாயவரத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இப்போது, லட்சுமி அம்மாள், தன் தம்பி மகன் சுவாமிநாதனுடன், சத்யசாய் நகரில் வசித்து வருகிறார்.தினமும், நமது நாளிதழை வரி விடாமல் படிக்கும் இவர், தற்போதைய அரசியல் களத்தை விளாசி தள்ளுகிறார். துல்லியமாக காது கேட்கவில்லை. எந்த கேள்வியை எழுதிக் கொடுத்தாலும், பதில் அளிக்கிறார்.
இனி அவரே பேசுகிறார்....

வீட்டில் சுவாமிநாதனுடனும், அவரது மனைவி பானுமதியுடன் தான் விவாதிப்பேன். தினமலர் நாளிதழில் ஆன்மிக மலர், சிறுவர் மலர், வார மலர் என அத்தனை இணைப்புகளையும் படிப்பேன். ராமானுஜரைப் பற்றிய பொலிக... பொலிக... கட்டுரை அருமையாக உள்ளது. சின்ன வயதில், அப்பாவுடன் பல ஊர்களுக்கு பயணித்ததால் அன்றாட நிகழ்வுகளை, மாறுதல்களை அறியும் வாய்ப்பு கிடைத்தது. இது, புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது, வயதான நிலையிலும், என் அன்றாட பணிகளை நானே செய்கிறேன். யார் எங்கே இருந்தாலும், சவுக்கியமா இருக்கணும் என்பது தான் என் பிரார்த்தனை, ஆசீர்வாதம்.இவ்வாறு அவர் கூறினார். 

வாழ்த்த, 94433 43493ல் அழைக்கலாம்.
15 நிமிடத்தில் 'எம்பாமிங்' செய்ய முடியாது! : ஜெ., மரணத்தில் மருத்துவ கவுன்சில் தகவல்

சென்னை: ''ஜெ., உடலை, 15 நிமிடத்தில, 'எம்பாமிங்' செய்வது என்பது சாத்தியமல்ல,'' என, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நீர்ச்சத்து, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, பின் வேறு நோய்கள் இருப்பதாக கூறுவதில் தவறில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகமிருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தெளிவு பெற வேண்டும். மக்கள் மத்தியில், தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். ஜெயலலிதா உறவினர்கள் யாரும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து, மருத்துவ கவுன்சிலில், எந்த புகாரும் அளிக்கவில்லை.அவருக்கு அளிக்கப்பட்ட, சிகிச்சை முறை குறித்து, உள்துறை மற்றும் சுகாதார துறைக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் சிகிச்சை குறித்து தெரிவிப்பது அரசின் கடமை. இறந்த உடலை பதப்படுத்த, சில மணி நேரங்களாகும் நிலையில், 15 நிமிடத்தில், 'எம்பாமிங்' செய்வதற்கு சாத்தியம் குறைவு. இதுதொடர்பான முழுமையான விளக்கங்களை, அத்துறை நிபுணர்களிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் ரவிசங்கர் கூறியதாவது:ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, அவர் உயிரிழந்து விட்டார். ஜெயலலிதாவுக்கு, 31 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், எந்த தவறும் இல்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டாலும், பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட, டிச., 4ம் தேதிக்கு பின், அவரது உடல் பதப்படுத்தும் பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கலாம். அதனால், 'எம்பாமிங்' செய்ய, 15 நிமிடம் போதுமானதாக அமைந்தது. மாரடைப்பு ஏற்பட்ட பின், செலுத்தப்பட்ட 'எக்மோ' சிகிச்சை கருவி, தமிழக அரசிடம் தெரிவித்த பின், அகற்றப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
எச்1 பி' விசா பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ரவிசங்கர் பிரசாத்

புதுடில்லி: அமெரிக்க அரசின் 'எச்1 பி' விசா பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார்.

விரைவில் தீர்வு:

இதுகுறித்து மத்திய சட்டத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: 'எச்1 பி' விசா நடைமுறையில், அமெரிக்க அரசின் புதிய கெடுபிடிகளால், இந்திய பொறியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களில், திறமைவாய்ந்த இந்திய இளைஞர்கள் பணியாற்றுகின்றனர். அமெரிக்க அரசின் திடீர் நடவடிக்கையால், ஐ.டி., ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து, அந்நாட்டு அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம;. விரைவில், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...