Monday, March 20, 2017


சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு உயர்நீதிமன்றம் சாட்டையடி



சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் வரும் 27-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, மத்திய குற்றப்பிரிவில் (சி.சி.பி.) 2011–ம் ஆண்டு வரை பல வழக்குகளில் விசாரணை முடிக்கப்படாமலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன், நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்கு விசாரணையை இரண்டு மாதத்தில் முடிக்க அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த வழக்குகளின் நிலை குறித்தும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அறிக்கை அனுப்ப வேண்டும். நான்கு மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் காவல்துறை ஆணையர் நேரில் ஆஜராகி வாய்மொழியாகவும், எழுத்துபூர்வமாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, உயர்நீதிமன்றம் வழங்கிய காலஅவகாசம் கடந்த டிசம்பருடன் முடிவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் தாமதமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, வரும் 27-ம் தேதி காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஃப்ரீவைஃபை முதல் ஹாட்ஸ்பாட் வரை... போட்டியை சமாளிக்க ஓலா-வின் புது வியூகம்!


வாடகைக் கார் தொழிலைப் பொறுத்தவரை இந்தியா மிகப்பெரிய சந்தையைக் கொண்ட நாடு. 2020-ம் ஆண்டில் இந்தச் சந்தையின் மதிப்பு 700 கோடி அமெரிக்க டாலர் கொண்டதாக இருக்கும் என சாப்ட்பேங்க் மதிப்பிடுகிறது. ஓலா, உபெர் போன்ற பெரிய நிறுவனங்களில் தொடங்கி, சின்னஞ்சிறிய நிறுவனங்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும் சந்தையைப் பிடிக்கப் போராடி வருகின்றன. இந்தப் போட்டியைச் சமாளிக்க ஒவ்வொரு நிறுவனமும் அதிரடி சலுகைகளையும் வசதிகளையும் வழங்கிவருகின்றன. ஆனால் இவை மட்டும் போதாது என தொழில்நுட்ப உதவிகளோடு களம் இறங்கியிருக்கிறது ஓலா கேப்ஸ் நிறுவனம்.
வாடகைக்கார்
2010-ம் வருடம் பவிஷ் அகர்வால் என்பவரால் மும்பையில் தொடங்கப்பட்ட ஓலா கேப்ஸ் நிறுவனம், தற்போது பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஓலா அப்ளிகேஷன் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 1,50,000 புக்கிங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் உள்ள வாடகைக் கார் சந்தையில் பெரும்பங்கை தன்வசம் வைத்திருந்த ஓலா கேப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, பன்னாட்டு நிறுவனமான உபெர் 2013-ம் ஆண்டு நேரடிப் போட்டியில் குதித்தது. அதன் பின் ஏற்பட்ட பெரும் போட்டியைச் சமாளிக்க ஓலா கேப்ஸ் நிறுவனம் பலவிதமான சலுகைகளை வாரி வழங்கத் தொடங்கியது. ஆனாலும் வாடிக்கையாளர்களைத் தன்வசம் வைத்துக்கொள்வதற்காகத் தற்போது தொழில்நுட்ப உதவியை நாடியிருக்கிறது அந்நிறுவனம்.
இதற்கு முன்பு ஓலா அப்ளிகேஷன் மூலம் ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்ய வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தி வந்தது. ஆனால் தற்போது எஸ்.எம்.எஸ் மூலம், இணையம் இல்லாமலேயே வாடகைக் காரை புக்கிங் செய்யும் வசதியை ஓலா நிறுவனம் அனுமதிக்கிறது.
இது தவிர்த்து போட்டியைச் சமாளிக்க இரண்டு முக்கியமான வழிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ஓலா கேப்ஸ் நிறுவனம். அதில் ஒன்று... 'ஹாட்ஸ்பாட்' என்ற ஓலாவின் தனிச்சிறப்பு அம்சம். வாடகைக் கார் எளிதாகக் கிடைக்கும் இடத்தை மேப்பிங் செய்து, அந்த இடத்தை 'ஹாட்ஸ்பாட்' என ஓலா நிறுவனம் குறிப்பிட்டுவிடும். இதன் மூலம் வாடிக்கையாளர்களும் டிரைவர்களும் 'ஹாட்ஸ்பாட்' அருகே செல்ல ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இருவருக்கும் இது நேர விரயத்தைக் குறைக்கிறது. இது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர் புக்கிங் மேற்கொள்ளும்போது 'ஹாட்ஸ்பாட்' இடமானது சில மீட்டர் தூரத்தில் இருந்தால் அவர்களை அந்த இடத்துக்கு வரச்சொல்லி அறிவுறுத்தும்படி, ஓலா தனது அப்ளிகேஷனில் சில மாற்றங்களை விரைவில் கொண்டுவரவிருக்கிறது.
ஓலா கையாளும் தொழில்நுட்ப யுக்திகள்
இரண்டாவதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Ola Play என்ற சேவையை ஓலா நிறுவனம் தொடங்கியது. இதன் மூலம் காரின் பின் சீட்டில் அமர்ந்தபடி, காரில் உள்ள ஆண்ட்ராய்டு டேப்பில் திரைப்படம், சீரியல், கிரிக்கெட், மியூசிக் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் கண்டும், கேட்டும் ரசிக்க முடியும். இதற்காக ஆப்பிள் மியூசிக் நிறுவனத்துடனும், சோனி லைவ் நிறுவனத்துடனும் ஓலா ஒப்பந்தம் செய்துள்ளது. நான்கு பக்கமும் உயர்தர ஸ்பீக்கர்கள் பொறுத்தப்பட்டு, ஆண்ட்ராய்டு டேப் வசதி கொண்ட கார்களை வழங்க மஹேந்திரா குரூப் நிறுவனத்தின் உதவியை நாடியிருக்கிறது ஓலா நிறுவனம். பிரைம் சேவையில் செயல்படும் உயர் ரகக் கார்களிலும் விரைவில் இந்த ஓலா ப்ளே வசதி அறிமுகமாகவிருக்கிறது.
மேலும், தற்போது டிரைவர்கள் அனைவரும் புக்கிங் மற்றும் மேப் விவரங்களைப் பார்க்க ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதை நீக்கி, டிரைவர் இருக்கைக்கு முன்பாகவே ஒரு திரையில் அத்தனை தகவல்களையும் பார்த்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்த Qualcomm நிறுவனம் மூலம் மேற்கொள்ளவிருக்கிறது. காரில் வாடிக்கையாளர்கள் நுழைந்தவுடன், காரில் உள்ள வைஃபை வசதியைப் பயன்படுத்தும் வகையில் சில தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துவருகிறது.
ஏசியின் அளவைக்கூட இனி வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் இருந்தே தேர்வு செய்துகொள்ளும் அளவுக்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைச் செய்துகொடுக்க ஓலா நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
'சந்தையைப் பிடிப்பது எளிது. ஆனால் அதைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினம்' என்பது வர்த்தக உலகின் பிரபலமான சொல்வழக்கு. இதைப் புரிந்துகொண்ட ஓலா நிறுவனம், போட்டியைச் சமாளிக்கத் தொழில்நுட்ப உதவிகளோடு களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

'தினகரனுக்கு எதிராக வியூகம் வகுத்தாரா எடப்பாடி?' - மீனவ கிராமங்களில் அதிர்ச்சி அறிவிப்பு


 
டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வரும் 23-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். 'இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் உறுதியாக உள்ளனர். அதையொட்டியே மீனவர்களுக்கு எதிராக முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்குகிறார் டி.டி.வி.தினகரன். தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்துவிட்டன. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் களத்தில் இருக்கிறார். ஆர்.கே.நகரில் ஏழு முனைப் போட்டி நிலவுவதால், 'வெற்றி யாருக்கு?' என்பதை கணிக்க முடியாத சூழலே உள்ளது. " தொகுதி முழுவதும் அட்டவணை சமூகத்தினரும் மீனவ சமூக மக்களும் அதிகமாக உள்ளனர். இதில், அட்டவணை சமூகத்தினர் 28 சதவீதம் பேர் உள்ளனர். 13 சதவீத அளவுக்கு மீனவ சமுதாய மக்கள் இருக்கின்றனர். இதர சமூகத்து மக்கள் 30 சதவீதம் உள்ளனர். தொகுதியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் மீனவ மக்களின் பங்கு மிக அதிகம். இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டே அரசியல் கட்சிகள் வியூகங்கள் வகுத்து வருகின்றன" என விவரித்த வடசென்னை அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 
எடப்பாடி பழனிசாமி"கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவ மக்கள் மீது இலங்கை அரசு கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இளம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதனால், கொந்தளித்த மீனவ சமூகத்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். மாநில அரசு சார்பில் இலங்கை அரசுக்கு வலுவான கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை என்ற கோபமும் மீனவ மக்கள் மத்தியில் உள்ளது. பிரிட்ஜோ மறைவுக்குப் பிறகு மீண்டும் கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை அரசு மீண்டும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியது.
இதைக் கண்டிக்க வேண்டிய மாநில அரசோ, 'மீனவர்கள் எல்லை தாண்டிப் போக வேண்டாம்' என அறிவுறுத்துகிறது. இவ்வளவு காலம் இல்லாமல், இப்படியொரு அறிவிப்பு வெளியாகி இருப்பது, மீனவ மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முக்கியக் காரணமே ஆர்.கே.நகர் தேர்தல்தான்" என்றவர், "அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் மிக முக்கியமானது மீனவ மக்களின் வாக்குகள். 'இந்த வாக்குகள் அனைத்தும் தினகரனுக்கு வந்துவிடக் கூடாது' என்பதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உறுதியாக இருப்பதை சுட்டிக் காட்டும் வகையிலேயே இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால், முதலமைச்சர் நாற்காலியை நோக்கி அவர் வருவார் என்பதை கொங்கு மண்டல அமைச்சர்கள் நம்புகின்றனர். அதைக் கணக்கில் வைத்துக் கொண்டே இப்படியொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது" என்றார். 
இதுகுறித்து, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த மீனவர் சின்னத்தம்பி நம்மிடம் பேசும்போது, "ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்பேரில், நேற்று ஒலிபெருக்கி மூலம் மீனவ கிராமங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 'எல்லை தாண்டிப் போகக் கூடாது; தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது' என்பதுதான் அறிவிப்பின் சாராம்சம். 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் ஷரத் 5-ன்படி, பாக் ஜலசந்தியில் இரண்டு நாட்டு மீனவர்களும் மீன் பிடித்துக் கொள்ள உரிமை உண்டு. அதேநேரம், 1976-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, மன்னார் வளைகுடாவிலும் வங்காள விரிகுடாவிடாவிலும் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எது கடல் எல்லை என்பதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. தமிழக எல்லையையும் தேசிய எல்லையையும் வரையறுப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கச்சத்தீவை மீட்க வேண்டும் என சட்டசபையில் மூன்றுமுறை தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. தற்போது வெளியான அறிவிப்பும் மத்திய அரசின் தூண்டுதலோடுதான் வெளியாகியிருக்கிறது. இதற்கு மாநில அரசு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. இதுபோன்ற அறிவிப்புகளால் மீனவ மக்கள் மத்தியில் கொந்தளிப்புதான் உருவாகும்" என்றார் ஆதங்கத்தோடு. 
"முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையில் சில விவகாரங்களில் கருத்து வேற்றுமைகள் அதிகரித்து வருகின்றன. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தில், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் பழனிசாமி. தினகரனோ, காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்து வாழ்த்து தெரிவித்தார். ஆட்சி அதிகாரத்தை எந்தவித சிரமமும் இல்லாமல் கொண்டு போவதற்கு மத்திய அரசின் தயவு தேவை என்பதில் எடப்பாடி அரசு தெளிவாக இருக்கிறது. ஆட்சியை அவ்வளவு எளிதில் இன்னொருவர் கைக்கு விட்டுக் கொடுக்கவும் இந்த அரசு தயாராக இல்லை. இதையொட்டி மத்திய அரசின் நேரடி நடவடிக்கைதான் மீனவ கிராமங்களில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு. இதனால், மீனவ மக்கள் நிறைந்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் பாதிப்பை உண்டாக்கும் என்பதும் மாநில அரசுக்குத் தெரியும். 'தினகரன் வெற்றி பெற்றுவிடக் கூடாது' என்பதற்கான முதல் தொடக்கமாகத்தான் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இனி ஆர்.கே.நகர் முழுக்க சமுதாயரீதியாகவும் தினகரனுக்கு எதிராக, சில வியூகங்கள் வகுக்கப்பட உள்ளன. எந்தச் சூழலிலும் டி.டி.வி பெற்றுவிடக் கூடாது என்பதில் சசிகலாவின் உறவினர்களும் உறுதியாக உள்ளனர்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 
'தேர்தலில் போட்டியிட சசிகலாவின் அனுமதியை தினகரன் வாங்கினாரா?' என மன்னார்குடி சொந்தங்கள் கொந்தளிப்பில் உள்ளனர். தினகரனைத் தோற்கடிக்கவும் அவர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர். 'இதற்கு எதிராக என்ன வியூகம் வகுக்கப் போகிறார் தினகரன்?' என்ற கேள்வி ஆர்.கே.நகர் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. 

Man’s complaint against rehab centre for abusing son quashed in Chennai


By Express News Service  |   Published: 20th March 2017 04:20 AM  |  

CHENNAI: A consumer court in the city has dismissed a petition by a resident  of Chitlapakkam for failing to produce medical evidence to prove that his alcohol-addicted son was abused physically when he was in a rehabilitation centre.
P Bhaskaran said he admitted his son, aged 17, to Stepping Stone Foundation at Villivakam, after coming to know he was addicted to alcohol. The father alleged that every month when he visited his son, he would find old and new wounds on his son’s limbs and his son would complain about torture as well. The complainant alleged that he was forced to discharge his son from the rehabalitation centre and admit him at VHS hospital for further treatment, resulting in more than `two lakh expense in just a year.
The rehabilitation centre argued that the boy tried to escape from the centre many times, even injuring a staff,  but had indeed recovered with good health and only then discharged from the centre.
The District Consumer Disputes Redressal Forum, Chennai (North), presided by K Jayabalan found that VHS hospital, where the boy had been admitted had not issued a discharge summary detailing what kind of treatment the teenager underwent. Therefore, since there was no other proof to substantiate the claims, the forum found that the rehab centre could not be accused of deficiency in service and dismissed the case with no costs.

TN GOVERNMENT NEWS


CINE CLIPS


Top varsities now get special UGC benefits

No need for prior permission to set up departments if they have NAAC accreditation for three consecutive years

Noting that the University Grants Commission (UGC) has in the recent past taken a number of measures for facilitating the growth of private sector in higher education, UGC chairman Ved Prakash said now universities that obtain the highest accreditation grade for three consecutive terms stand to get certain benefits.
“Universities that obtain the highest accreditation grade from the National Assessment and Accreditation Council for three consecutive terms need not approach the UGC to set up new departments. The validity of the accreditation period will be doubled and the institutions will not be subjected to NAAC accreditation after every five years,” he said.
In addition, the UGC, he said, would not review the institution as a deemed-to-be university, and it can carry out its own review and this will be accepted by the UGC.
Funds sought
He was speaking at VIT University Day and Annual Sports Day on Sunday. Mr. Prakash was replying to VIT University chancellor G. Viswanathan, who earlier said that UGC should allot funds to performing institutions.
The UGC chairman later told reporters that the Commission has been able to implement the Choice Based Credit System (CBCS) in all Central universities.
Varsities reluctant
“We have been talking about CBCS for a very long time. Somehow, the university system was not embracing it,” he said.
He added that the disbursement of grants was now done through RTGS, and scholarships were now directly deposited into the accounts of individual scholars.
To a question on National Institute Ranking Framework, he said the second such ranking of institutions would be announced on April 4. “This creates a healthy academic competition. We are moving towards making it mandatory for institutions,” he added.
Caste issues
UGC has a regulation in place to prevent caste-based discrimination on campuses, he said, adding that each institute should have anti-discrimination officer and action was being taken against those involved.
He denied that the move to set up National Higher Education Finance Corporation would affect the financial autonomy of UGC. “Here, the government will commit to some resources, and get some funds from the corporate sector. It will provide loans to different educational institutions to help improve infrastructure or start new programme,” he said.
Nurturing talent
Earlier, speaking at the programme, he said institutions should sharpen the tools for recruiting best students. “If the best student comes from districts such as Cuddalore, Nellore or Guntur, or from non-scholarly family, or from a marginalised section, it is the duty of the university to work on that student so that the talent is appropriately nurtured and transformed into a real asset,” he said.
Mr. Viswanathan requested the Central government to introduce liberalisation in education so that institutions performing well would be recognised.
“We have to run from pillar to post to construct a building in Chennai and get 14 No Objection Certificates from the village panchayat to Airports Authority of India. The government should come up with a single window system like those offered to industries,” he said.
He urged the government to take steps to attract foreign students to India.
On the occasion, educational scholarship worth Rs. 11.69 crore was disbursed to 2,870 students on the occasion.

NEWS TODAY 23.12.2025