Wednesday, March 22, 2017


வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீனுக்கு எஸ்.ஆர்.எம் பச்சமுத்து ரூ.10 கோடி உத்தரவாதம்



சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் வசூலித்த வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஜாமீன் வழங்க ஹைகோர்டில் எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து ரூ.10 கோடி உத்தரவாதம் அளித்தார்.

எஸ்ஆர்எம் கல்லூரியில் 225 மருத்துவ சீட்டில் மதனுக்கு மட்டும் ஆண்டுதோறும் 50 சீட் வழங்கப்படுமாம். இதன் மூலம் மதனுக்கு ரூ.25 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

இது தவிர இவர் வாங்கி கொடுக்கும் 50 சீட்டுகளுக்கான கமிஷன் தொகையும் மதனுக்கு கிடைத்ததால் ராஜ வாழ்க்கை வாழ்ந்த மதன் வேந்தர் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார்.




கடந்த ஆண்டும் எம்பிபிஎஸ் சீட்டுக்கு பணம் வாங்கினார். அதில் பாதி பணத்தை கல்லூரி நிர்வாகத்தில் உள்ள ஒருவரிடம் தனது கூட்டாளியான சுதீர் மூலம் கொடுத்து அனுப்பினார். அந்த பணத்தை சுதீர் கொடுக்கும் போது அதை வீடியோ எடுத்துக் கொண்டனர்.


இந்த சூழ்நிலையில் கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கும் ரவி பச்சமுத்து, திடீரென இந்த ஆண்டு சீட் வழங்க தடை விதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மதன் இந்த விவகாரத்தில் பச்சமுத்து மாட்டினால்தான் தாம் தப்பிக்க முடியும் என நினைத்து கடிதம் எழுதி வைத்து தலைமறைவானார்.


பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் சுமார் 179 நாள்கள் தலைமறைவாக இருந்த மதன், திருப்பூரில் உறவினர் வர்ஷா வீட்டில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் மதன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் மதன், எஸ்ஆர்எம் குழுமத்தின் ஏஜென்ட் என்பதால் ஜாமீனுக்கான உத்தரவாத தொகையான ரூ.10 கோடியை கட்ட பச்சமுத்துக்கு கோர்ட் ஆணையளித்தது. கோர்ட் உத்தரவை அடுத்து மதன் ஜாமீனுக்காக ரூ.10 கோடிக்கு உத்தரவாதம் அளிப்பதாக பச்சமுத்து கூறியுள்ளார்.

Source: tamil.oneindia.com


மேச்சேரி அருகே கட்டிய மறுநாளே பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், முத்தாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தில் சத்துணவுக் கூடமும், அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. சுற்றுச் சுவர் இல்லாத இப்பள்ளிக்கு, மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.1 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை பணிக்கு பூமிபூஜை போடப்பட்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பெய்த லேசான மழையில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.
செவ்வாய்க்கிழமை இதனைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கட்டப்பட்ட சுற்றுச் சுவர் முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு, தரமான பொருள்களைக் கொண்டு மீண்டும் சுற்றுச் சுவர் கட்டவேண்டும் என பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த கல்வித் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
Dailyhunt
உ.பி. அரசு அதிகாரிகள் 15 நாள்களுக்குள் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்: யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை அடுத்த 15 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வராக ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். அவருடன் 46 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் தங்களது அசையும், அசையா சொத்துகள் குறித்த விவரங்களை அடுத்த 15 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அரசு அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வராகப் பொறுப்பேற்ற பின் யோகி ஆதித்யநாத், அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது அமைச்சர்கள் மட்டுமல்லாது அரசு அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை அடுத்த 15 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். 
தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகருர் முகமது ஷமி (60) சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக முதல்வர் ஆதித்யநாத், மாநில காவல்துறை தலைவர் ஜாவீத் அகமதுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் போலீஸார் எவ்வித மெத்தனமும் காட்டக்கூடாது என்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தமது அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மேலும், மாநிலத்திலுள்ள 75 மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோரை காணொலிக் காட்சி மூலம் ஜாவீத் அகமது தொடர்புகொண்டு சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் நிர்வாக ரீதியிலான பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
அமைச்சரவையின் முதல் கூட்டத்தின்போது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார் கேசவ் பிரசாத் மௌரியா.
முன்னதாக, அலகாபாத் மாவட்டத்திலுள்ள மவுஆயிமா கிராமத்தின் முன்னாள் ஊராட்சித் தலைவரும், பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகருமான முகமது ஷமி (60) ஞாயிற்றுக்கிழமை இரவு சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் இல்லத்தில் யாகம்: இதனிடையே, லக்னௌவிலுள்ள முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் கோரக்பூர் மற்றும் அலகாபாதிலிருந்து வந்த 7 புரோகிதர்கள் திங்கள்கிழமை சிறப்புப் பூஜைகளையும், யாகத்தையும் மேற்கொண்டனர்.
எனினும், இந்த இல்லத்தில் யோகி ஆதித்யநாத் குடிபுகவுள்ள நாள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
Dailyhunt
பள்ளியில் ஏசி பொருத்தியதால் கட்டணத்தை உயர்த்தலாமா? தில்லி நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

புது தில்லி: பள்ளியில் குளிர்சாதனக் கருவியை (ஏசி) பொருத்தியதற்கும், அதனால் ஏற்படும் மின்சார செலவை ஈடுசெய்யவும், கல்விக் கட்டணத்தை உயர்த்தலாமா என்ற வழக்கில் தில்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
பள்ளிகளில் குளிர்சாதன கருவிகளைப் பொருத்தியக் காரணத்தால், பள்ளிக் கட்டணத்தை 15 சதவீத அளவுக்கு உயர்த்தியிருப்பது சட்டவிரோதமானது என்றும், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத்தை திரும்ப செலுத்தவும் உத்தரவிட்டு தில்லி கல்வித்துறை கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
தில்லி கல்வித் துறை கடந்த 2016, ஜூன் 16ம் தேதி வெளியிட்ட இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இரண்டு தனியார் பள்ளிகள் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
அதில், மோசமான வெப்பநிலையும், காற்று மாசுபாடும் காரணமாக பள்ளிகளில் குளிர்சாதனக் கருவி பொருத்தப்பட்டது. அவற்றை பராமரிக்கவே, கூடுதலாக 15 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதில் லாப நோக்கம் எதுவும் இல்லை. ஆண்டுக் கட்டணத்தையும், கல்விக் கட்டணத்தையும் உயர்த்த எந்த விதியும் தடை செய்யவில்லை என்று பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கல்வித் துறை சார்பில் வாதாடுகையில், பள்ளிகள் கல்விக் கட்டணத்தை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளன. இதில் வழக்கமான ஆண்டுக் கட்டணம் 10 சதவீதம் அளவுக்கும், கூடுதலாக குளிர்சாதனக் கருவி பொருத்தியதற்கு 15 சதவீதமும் அடங்கும். இவ்வாறு 25 சதவீத அளவுக்கு கட்டணம் உயர்வது மற்ற கட்டணங்களின் உயர்வுக்கும் வழி வகுக்கும் என்று கூறியது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி. காமேஸ்வர் ராவ், பள்ளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், குளிர்சாதனக் கருவிகளைப் பொருத்தத் தேவையான செலவினங்களை, பள்ளிக்குக் கிடைக்கும் கல்விக் கட்டணத்தில் இருந்து சேமித்து அதில் தான் மேற்கொள்ள வேண்டும். அதோடு, குளிர்சாதனக் கருவிகளை இயக்குவதால் ஏற்படும் மின்சாரக் கட்டணத்தை ஈடு செய்யவும், கல்விக் கட்டணத்தை உயர்த்த முடியாது. ஏற்கனவே பள்ளிகள் ஆண்டுக் கல்விக் கட்டணத்தை வழக்கம் போல உயர்த்தும் போது, கூடுதலாக கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.
Dailyhunt
பணி நேரத்தில் பான் மசாலா போடாதீங்க: அலுவலர்களை அதிர வைத்த உ.பி முதல்வர்!



லக்னோ: உத்தரப்பிரதேச அரசு ஊழியர்கள் இனிமேல் பணி நேரத்தில் பான், பான்மசாலா உள்ளிட்ட புகையிaலை பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபடக் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு யோகி ஆதித்யநாத் இன்று தலைநகர் லக்னோவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பவன் என்னும் தலைமைச் செயலக கட்டிடத்திற்கு முதன்முறையாக வருகை தந்தார். துணைமுதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவும் அவருடன் வருகை தந்திருந்தார்.

இந்த வருகை குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மவுரியா பேசினார். அபொழுது அவர் கூறியதாவது:

முதல்வர் இன்று இந்த கட்டிடத்தின் எல்லா தளங்களுக்கும் சென்று பார்வையிட்டார்.
அத்துடன் அங்குள்ள அதிகாரிகளிடமும் பேசினார். அப்பொழுது அலுவலகத்தின் சுவர்களில் ஆங்காங்கே வெற்றிலை எச்சில் கறைகளை கண்டு அதிருப்தியடைந்த முதல்வர், அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொருட்டு, இனிமேல் அரசு ஊழியர்கள் இனிமேல் பணி நேரத்தில் பான், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபடக் கூறியுள்ளார்
அத்துடன் அலுவலக சூழ்நிலையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் பொருட்டு பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
இவ்வாறு மவுரியா தெரிவித்தார்.
Dailyhunt

ஜாமீன் வழக்குகளில் கருவேல மரங்களை வெட்ட வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் தவிக்கப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுரை
DINAMANI

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் போது, கருவேல மரங்களை வெட்ட வேண்டும், மான்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என, கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஞானம் என்பவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், மனுதாரரை கருவேல மரங்களை வெட்டும்படி நிபந்தனை விதிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து, வழக்கத்தில் இல்லாத வகையில் கருவேல மரங்களை வெட்ட சொல்வது, மிருகங்களுக்கான குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் வழக்கில் தண்டிக்கப்படும் வரை சம்பந்தப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவர் தான். விசாரணைக்கு முன் அவர்களுக்கு தண்டனை வழங்குவது, மனித உரிமைக்கு எதிரானது.



மேலும் நீதிமன்றங்கள் சட்டத்துக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். அதே போன்று, நீதிபரிபாலனத்தின் போது, கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இது போன்ற நிபந்தனைகள், குற்றவாளிகள் குற்றம் செய்து விட்டு, கருவேல மரங்களை வெட்டுவதாகக் கூறி ஜாமீனில் விடுதலையாகக் கூடிய எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Dailyhunt

இரட்டை இலைக்கு ஓ.பி.எஸ் - சசிகலா அணியினர் முன்வைத்த வாதம் 

இவைதான்!
டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை ஒதுக்கீடு தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளன.

அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்ற சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் கடுமையாகப் போராடி வருகின்றன. இன்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் விவாதம் நடந்தது.

சசிகலா தரப்பு வாதம்: 'செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் ஆதரவு எங்களுக்குதான். கட்சியின் சட்டவிதிகளில் சசிகலா பதவி வகிக்கத் தடை இல்லை. கட்சியில் பிளவு இல்லை. கட்சியின் பெரும்பான்மையான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் ஆதரவு எங்களுக்குதான் உள்ளது'

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்: 'அ.தி.மு.க.,வின் சட்ட விதிகளின்படி தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியே கிடையாது.
குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் எப்படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இதுகுறித்து ஏற்கெனவே தேர்தல் ஆணையத்துக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லாத சசிகலா, வேட்பாளரை எப்படி அங்கீகரிக்க முடியும்?'



வாதங்கள் முடிவடைந்ததும், செய்தியாளர்களை சந்தித்த சசிகலா ஆதரவு அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், " இரட்டை இலை சின்னத்தை முடக்குவது தொடர்பாக வாதங்களை நாங்கள் முன்வைக்கவில்லை" என்றார்.

மேலும் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வம், "அ.தி.மு.க ஆட்சிமன்றக்குழுதான் வேட்பாளரை தேர்வு செய்தது. சசிகலா தேர்வு செய்யவில்லை. ஓ.பி.எஸ் தரப்பில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். ஓ.பி.எஸ் அணியினரின் சதியை உடைப்போம்", என்றார்.
Dailyhunt

NEWS TODAY 25.12.2025