Thursday, March 23, 2017

எம்.பி.,க்கள் பென்ஷனை நிறுத்துங்க! :   சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடில்லி: 'பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், இதர படிகளை நிறுத்த வேண்டும்' என, தாக்கல் செய்யப் பட்டுள்ள மனு குறித்து பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு, சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

சுப்ரீம் கோர்ட் டில், 'லோக் பிரஹாரி' என்ற, அரசு சாரா அமைப்பு தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில், கூறியிருப்பதாவது:'

'எம்.பி.,க் கள் பதவிக் காலம் முடிந்த பின், அவர்களுக்கு ஓய்வூதியம், இதர படிகள் வழங்கப்படுவது, அரசியல் சட்டத்திற்கு  முரணானது; அவற்றை நிறுத்த வேண்டும்' என,கூறப்பட்டுள்ளது.




இந்த மனுவை பரிசீலித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதி, சலமேஸ்வர் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு,'நோட்டீஸ்' அனுப்பி

உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பதில் அளிக்கும்படி, லோக்சபா, ராஜ்யசபா ஆகியவற் றின் செயலர்களுக்கும், நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
'ஆன்லைனில்' தகவல் அறியும் உரிமைச்சட்ட மனு : தமிழகத்தில் அமலாவது எப்போது

மதுரை: மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களை 'ஆன்லைனில்' அனுப்பும் நடைமுறை அமலாகியிருக்கும் நிலையில், தமிழகத்திலும் அந்நடைமுறை கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் விதமாக, 2005ல் தகவல் அறியும் உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.அதன்படி, பொதுமக்கள் தேவையான தகவல்களை பெற, சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு நீதிமன்ற வில்லை, கேட்பு வரைவோலை (டி.டி.,) போன்ற முறைகளில் பணம் செலுத்தி, தபால் மூலம் மனுக்களை அனுப்ப வேண்டும்.தபால் முறை அதிக வேலைப்பாடு கொண்டது என்பதால், அதனை எளிமையாக்க மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் தரப்பில், 'ஆன்லைனில்' தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களை அனுப்பும் முறையை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, முதன் முதலாக மத்திய அரசு துறைகள் இம்முறையை அமல்படுத்தின. தற்போது 1,847 துறைகள், அலுவலகங்களுக்கு பொதுமக்கள் 'ஆன்லைனில்' மனுக்களை அனுப்பி, தகவல்களை பெறலாம்

.மகாராஷ்டிர அரசும் 'ஆன்லைன்' முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் சில மாநிலங்கள், இதற்கான முதற்கட்ட வேலையை துவக்கி விட்டன. இது குறித்து, மாநில அரசுகளுக்கு அவ்வப்போது மத்திய அரசு நினைவூட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களை 'ஆன்லைனில்' அனுப்பும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இங்கு லோக் ஆயுக்தா சட்டம், சேவை பெறும் உரிமைச்சட்டம் போன்றவற்றை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படாத நிலையில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் மட்டுமே ஊழல்களை வெளிக்கொண்டு வரவும், சேவைகளை பெறவும் ஆயுதமாக பயன்பட்டு வருகிறது.எனவே மற்ற மாநிலங்களை போல் 'ஆன்லைன்' வசதியை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் பெறலாம்

விரைவில் வழங்க உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை, இணையதளம் மற்றும், அரசு இ - சேவை மையங்களில் செய்து கொள்ளலாம்.தமிழகத்தில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல்; முகவரி மாற்றம்; பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகள், உணவு வழங்கல் உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அங்குள்ள ஊழியர்கள், மக்களை, அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.

 ஏப்., 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. அதில், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள், இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஆதார்' கார்டில் உள்ள பெயர், முகவரி அடிப்படையில் தான், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும். அதில், பிழைகள் இருப்பின், ரேஷன் கார்டுதாரர், தாங்களாகவே, 'டி.என்.பி.டி.எஸ்.டாட் காம்' என்ற இணையதளத்தில் சரி செய்து கொள்ள, மார்ச், 20 வரை அவகாசம் வழங்கப்பட்டது.தற்போது, கார்டுகள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. எனவே, பிழை இருப்பவர்கள், கவலை அடைய வேண்டாம். அவர்கள், ஸ்மார்ட் கார்டு பெற்ற பின், வீட்டில் இருந்தபடியே, பி.டி.எஸ்., இணையதளத்தில் தாங்களாகவோ அல்லது அரசு, இ - சேவை மையங்களிலோ, சரி செய்து கொள்ளலாம். பிழை திருத்திய கார்டை, தேவைக்கு ஏற்ப, இ - சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம். கூடுதல் கார்டுக்கு, அந்த மையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏப்., 1ல் துவக்கம் : சென்னையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதனால், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்துாரில், 'ஸ்மார்ட்' கார்டு வினியோகம் மற்றும் பொது வினியோக திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், முதல்வர் பழனிசாமி, ஏப்., 1ல் துவக்கி வைக்கிறார்.
6 மாத சம்பளம் கிடைக்காது! :  டாக்டர்களுக்கு எச்சரிக்கை
மும்பை: 'மஹாராஷ்டிராவில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், பணிக்கு திரும்பா விட்டால், ஆறு மாதச் சம்பளத்தை இழக்க நேரிடும்' என, அந்த மாநில அரசு எச்சரித்துள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலத்தில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும்3,500 டாக்டர்கள், கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல், மொத்தமாக விடுப்பு எடுத்து,வேலைநிறுத்த போராட்டத்தில்

ஈடுபட்டு வருகின்றனர். பணியிடங் களில் பாதுகாப்பு கோரி, இந்த போராட்டத்தை, டாக்டர்கள் நடத்தி வருகின்றனர்.





இதனால், அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளனர்.

இந் நிலையில், மாநில மருத்துவ கல்வி அமைச்சர், கிரிஷ் மஹாஜன், மும்பையில், கூறியதாவது:

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், உடனடியாக பணிக்கு திரும்பா விட்டால், ஆறு மாத சம்பளத்தை இழக்க நேரிடும். பணி இடங்களில் டாக்டர் களின் பாதுகாப்புக்காக, 1,100 பாதுகாவலர் களை அளிக்க திட்டமிட்டுள் ளோம். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கி டையே, மும்பை மாநகராட்சி அதிகாரி கள், மூன்று நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், மும்பையைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.
போன் செய்தால் போதும் தபால்காரர் வீட்டுக்கு வருவார்

புதுடில்லி: தபால்காரருக்கு போன் செய்து, முகவரியை கூறினால், அவர் வாடிக்கையாளரின் வீட்டுக்கு வந்து, தபால்களை வாங்கிச் செல்லும் திட்டத்தை, தபால் துறை துவக்கியுள்ளது. கடிதங்களை, தபால்காரர் நம் வீட்டுக்கு எடுத்து வந்து தருவது வழக்கமாக உள்ளது. மொபைல் போன் மற்றும் இ - மெயில் வந்தபின், மக்களிடையே கடிதம் எழுதும் வழக்கம் வெகுவாக குறைந்து விட்டது; அப்படியே கடிதம் அனுப்ப வேண்டியிருந்தாலும், கூரியர் மூலம் அனுப்புகின்றனர்.

 இந்த காரணங்களால், தபால் துறை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. போட்டிகளை சமாளிக்கவும், தபால் துறையை மேம்படுத்தவும், 'மை பிரண்ட் போஸ்ட்மேன்' என்ற திட்டத்தை, தபால் துறை துவக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பகுதிக்கும், தபால்காரரின் மொபைல் எண் வழங்கப்படும். கடிதம் அனுப்ப நினைப்பவர்கள், தபால்காரருக்கு போன் செய்தால், அவர் உங்கள் வீடு அல்லது நிறுவனத்திற்கு நேரடியாக வந்து தபாலை பெற்றுச் செல்வார். இதற்கு கட்டணம் கிடையாது. தபால் துறையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தபால்காரரை தவிர, வேறு யாரிடமும் தபாலை தர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு அல்லது நிறுவனங்களில் தபாலை பெற செல்லும்போது, தபால்காரர்கள் முழு சீருடையில் செல்லும்படியும் தபால் துறை அறிவுறுத்தியுள்ளது.
எக்ஸ்பிரஸ்களாக மாறிய சாதாரண பஸ்கள்: கட்டணம் மறைமுகமாக உயர்வு

பழைய டப்பா பஸ்களை எக்ஸ்பிரஸ் பைபாஸ் ரைடர், 1 டூ 1, 1 டூ 5, என பல்வேறு பெயர்களில் மாற்றி பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
போக்குவரத்து கழகம், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில், ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், சம்பள உயர்வு, பணப்பலன் கோரி போர்க்கொடி துாக்கி உள்ளனர். அதனால் வருவாயை அதிகரிக்க, முதல் கட்டமாக, சென்னையில், சாதாரண பஸ்களை, எக்ஸ்பிரஸ்கள், சொகுசு பஸ்கள் என பெயர் மாற்றி, கட்டணத்தை உயர்த்தினர். இதற்கு, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், கட்டண உயர்வை மறுத்தார்.

ஆனாலும், சென்னையை தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும், கட்டண உயர்வு என அறிவிக்காமல் சாதாரண பஸ்கள் எண்ணிக்கையை குறைத்து, பழைய, 'டப்பா' பஸ்களை எக்ஸ்பிரஸ், பைபாஸ் ரைடர், 1 டூ 1, 1 டூ 5 என, பல்வேறு பெயர்களில் மாற்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி

அதிகாரிகள் கூறுகையில், 'போக்குவரத்து கழகங்களை, நிதி நெருக்கடியில் இருந்து மீட்க, வருவாயை பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம், கட்டண உயர்வு சாத்தியமில்லை என்பதால் சாதாரண, கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள், எக்ஸ்பிரஸ் கட்டணத்துக்கு மாற்றப்பட்டுள்ளன' என்றனர்.
- நமது நிருபர் -
சேலம் மாவட்டத்தில் 70 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 23, 04:30 AM

சேலம்,

ரே‌ஷன் கார்டுகள்

தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரே‌ஷன் கார்டுக்கு பதில், ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அனைத்து ரே‌ஷன் கார்டுகளிலும், குடும்பத்தில் உள்ள நபர்களின் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்த வரையில் மொத்தம் 10 லட்சத்து 2 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. இதில் 6 மாதத்திற்கு மேல் ரே‌ஷன் பொருட்கள் வாங்காத சுமார் 70 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த 70 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் நிறுத்தம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆதார் எண் இணைப்பு

எனவே, சம்பந்தப்பட்ட ரே‌ஷன்கார்டுதாரர்கள் உண்மையான காரணம் தெரிவித்து மனு செய்தால், பரிசீலனை செய்யப்படும் என்றும், இதுவரை 10 ஆயிரம் ரே‌ஷன்கார்டுதாரர்கள் மனு செய்துள்ளனர் என்றும், அந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 90 சதவீதம் ரே‌ஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. அந்த கார்டுகளுக்கு ரே‌ஷன் பொருள் வினியோகம் சம்பந்தமான விவரம், அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மிக விரைவில் 100 சதவீத இணைப்பு பணி நிறைவடையும். ஏப்ரல் 1–ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க, தமிழகம் முழுவதும் ரே‌ஷன் கார்டுகள் தணிக்கை செய்யப்பட்டு, 5.14 லட்சம் போலி கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

NEWS TODAY 25.12.2025