Sunday, April 2, 2017

 கிராம பணி: டாக்டர்களுக்கு கட்டாயமாகுமா?

தமிழகத்தில், அரசு டாக்டர் பணி நியமனத்தில் நடக்கும் முறைகேடுகள், நகர்ப்புற மருத்துவமனைகளில் பணி பெறுவதை மையப்படுத்தியே நடப்பதால், அதை தவிர்க்க, டாக்டர்கள் கிராமப்புறங்களில் பணி செய்வதை, கட்டாயமாக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த, 2012 வரை, அரசு பணியாளர் தேர்வாணையமே, டாக்டர்களையும் தேர்வு செய்தது.

நடவடிக்கை

ஆனால், டாக்டர்கள், செவிலியர் உள்ளிட்ட பதவிகளின் முக்கியத்துவம் கருதி, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. வாரியம் அமைந்தது முதல், அதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், அரசு டாக்டர்கள் பணி நியமனத்தின் போது, கிராம மருத்துவமனைகளை புறக்கணித்து, நகர மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணி நியமனம் பெறுவதையே, பலரும் விரும்புகின்றனர்.
அது தான் முறைகேடுகளுக்கு வழி வகிக்கிறது என்பதால், டாக்டர்கள் கிராமப்புறங்களில் பணி செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து

உள்ளது.தி.மு.க., ஆட்சியில், ஷீலா ராணி சுங்கத், சுகாதாரத் துறை செயலராக இருந்தார். அப்போது, அரசு பணிக்கு வரும் டாக்டர்கள், முதல் இரண்டாண்டுகள் கிராம ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள் போன்றவற்றில் பணி செய்வதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுத்தார்.

பின், பல்வேறு காரணங்களுக்காக, அத்திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் அத்திட்டம் கொண்டு வரப்பட்டால், புதிதாக பணியில் சேரும் டாக்டர்கள், இரண்டாண்டுகள் கிராமங்களில் பணி செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படும். இதனால், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணி பெற, சிபாரிசு தேட   வேண்டிய அவசியம் இருக்காது.

இரண்டாண்டுகள் பணி நிறைவு பெற்றதும், எவ்வித பிரச்னையும் இன்றி, மாவட்ட, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணி மாறுதல் பெறலாம். அவர்கள் இடத்தில், புதிதாக பணிக்கு வரும் டாக்டர்கள் அமர்த்தப்படுவர்.

ஆனால், தற்போது கடைபிடிக்கும் நடைமுறைகளால், புதிதாக பணியில் சேரும் டாக்டர்கள், சிபாரிசு மூலம் நேரடியாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணி பெறலாம் என்ற நிலை உள்ளது.
இதனால், ஏற்கனவே பல ஆண்டுகள், கிராமப்புறங்களில் பணி செய்து, புதிய வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் டாக்டர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அவர்கள் ஆர்வமற்ற நிலையில், தங்கள் பணியை தொடர்வதால், சிகிச்சையின் தரம் குறைகிறது.

ஊழல்கள்

கிராமங்களில், டாக்டர்கள் பணி செய்வதை உறுதி செய்யும் விதமாக, இதற்கு முன், மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களும் தோல்வியில் முடிந்தன.
அங்கு பணி செய்வதை தவிர்க்க, அரசு டாக்டர்கள், எந்த விலையையும் கொடுக்க தயாராக உள்ளனர். அதன் வெளிப்பாடே தேர்வு வாரியத்தில் நடக்கும் ஊழல்கள்.
அப்பணியை கட்டாய மாக்கினால், ஊழலை ஒழிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -
 கடும் வெயில் 2 பேர் பலி

திருச்சி, திருச்சியில் கடும் வெயில் காரணமாக, சாலையில் சென்ற இருவர் மயங்கி விழுந்து இறந்தனர்.

திருச்சியில் மார்ச் மாதம் துவக்கத்தில், சில நாட்கள் திடீர் மழை பெய்தது. இருப்பினும், வெயில் கடுமையாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக, பகல், 12:00 மணி முதல், 4:00 மணி வரை, வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் கடுமையாக உள்ளது.

கோவையைச் சேர்ந்த பாபு, 45 என்பவர், திருச்சியில், குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்து வந்தார். நேற்று, காந்தி மார்க்கெட் பகுதியில் சென்றபோது, அவர் மயங்கி விழுந்து இறந்தார்.
அதே போல், திருச்சி அரியமங்கலம் பகுதியில் நடந்து சென்ற, 38 வயதுடையவர் மயங்கி விழுந்து இறந்தார்.
 முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு கட்டாயம்: தமிழக அரசு

'நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து

உள்ளது.தமிழகத்தில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' நுழைவுத்தேர்வு இன்றி, முறையே பிளஸ் 2 மற்றும் மருத்துவ கல்லுாரி தேர்வுகள் அடிப்படையிலேயே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், நீட் தேர்வை கட்டாயமாக்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், எம்.டி., - எம்.டி.எஸ்., போன்ற அனைத்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இது, மருத்துவ மாணவர்களுக்கும், மருத்துவத்தில் சேர உள்ள மாணவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம், 13 அரசு கல்லுாரிகள் மற்றும் எட்டு தனியார் கல்லுாரிகளில், 1,692 இடங்கள் உள்ளன.

இவற்றில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமின்றி, மாநில இடங்களுக்கும், நீட் மதிப்பெண் தேவை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, நிகர்நிலை பல்கலை உள்பட அனைத்து கல்லுாரிகள், பல்கலைகளுக்கும், தமிழக அரசே கவுன்சிலிங் நடத்தி, மாணவர்களை சேர்க்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, தனியார் கல்லுாரிகளின் ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைகளின் இடங்களுக்கு, சுயமாகவே மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, மார்ச், 29ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; ஏப்., 4 வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஏப்., 7 வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக, மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் இந்த அறிவிப்பால், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கும், நீட் கட்டாயமாகும் என்பது உறுதி ஆகியுள்ளது.

- நமது நிருபர் -
ஊழியர்களுக்கு புதிய 'அலவன்ஸ்'  கிடைப்பதில்... தாமதம்? இன்னும் தீரவில்லை 7வது சம்பள கமிஷன் குளறுபடி

புதுடில்லி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஏற்ப, 'அலவன்ஸ்' எனப்படும், 'படி'களை மாற்றி அமைப்பதில், இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. இதனால், ஏப்., 1 முதல், புதிய விகித அடிப்படையில், 'படி' வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.




மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப் படுகின்றன; ஊதியக் குழு பரிந்துரையின் அடிப் படையில், சம்பள விகிதம் மாற்றி அமைக்கப் படுகிறது.

அதன்படி, ஏழாவது ஊதியக் குழு அளித்த பரிந் துரைகளை, மத்திய அரசு, 2016ல் அமல்படுத்தி யது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.5 சதவீதமும், ஓய்வூதியதாரர்களுக்கு, 24 சதவீதமும் ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, சம்பளத்துடன் கூடிய படியும், உயர்த்தப்பட வேண்டும். இது தொடர்பாக, மத்திய நிதித் துறை செயலர் தலைமையில்,

2016 ஜூலையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பல மாதங்களாக ஆய்வு செய்து வரும் இக் கமிட்டி, தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்க, கால தாமததித்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர் களுக்கு இதுவரை, 196 வித மான படிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில், பலவற்றை ரத்து செய்யும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்தது. அது போலவே, வீட்டு வாடகை படியை முடிவு செய்வதிலும் சிக்கல் நீடிக் கிறது. இக்கமிட்டி, நீண்ட ஆலோசனை நடத்திய பின்னும் முடிவு எட்டப்படவில்லை. சில தினங் களுக்கு முன், டில்லியில் கூடிய இக்கமிட்டி கூட்டத் தில், சில படிகளை ரத்து செய்வது தொடர்பாக, மத்திய அரசின், 14 துறைகளிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு மேலும் தாமதமாக கூடும். எனவே, முன்ன தாக திட்டமிட்டபடி, புதிய நிதியாண்டின் துவக்க மான, ஏப்., 1ல் இருந்து, மாற்றியமைக்கப் பட்ட, படிகளை அமல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது.எனினும், பணிகளை முடித்து, பார்லி., கூட்டத் தொடர் முடிந்த பின், ஏப்., இறுதி யில், மத்திய அரசு, படி விபரங்களை அறிவிக்கலாம் என, தெரிகிறது. அதே சமயம், படிகளை, முன்தேதியிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வீட்டு வாடகை 'படியில்' மாற்றம்?

'மெட்ரோ' நகரங்களில், அடிப்படை சம்பளத் தில், 30 சதவீதம் வாடகை படியாக வழங்கப்படுகிறது. இதை, 24 சதவீதமாக குறைக்க வேண்டும் என,ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்து   இருந்தது. இதற்கு, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர் . எனவே, தற்போது உள்ளபடி,30 சதவீத வீட்டு வாடகை படியே, தொடர்ந்து வழங்க கமிட்டி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

53 படிகள் நீக்கம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு, தற்போது, 196 வித மான, 'படிகள்' வழங்கப்படுகின்றன. இவற்றில், சமையல், கண்காணிப்பு, முடிவெட்டுதல், சோப், சீருடை, துவைத்தல், ஷூ, சுருக் கெழுத்து என, பலவித படிகள் வழங்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, இவற் றில் சில நீக்கப்படுகின்றன. மேலும், சில வற்றை ஒன்றிணைத்து ஒரே படியாக வழங்க வும், கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 196 படிகளில், 53 படிகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், 36 படிகள் மற்றவற்றுடன் இணைக்கப்படுகின்றன.
 எஸ்.பி.ஐ.,யுடன் இணைந்த 6 வங்கிகள்

புதுடில்லி:பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் சனிக்கிழமை(நேற்று) முறைப்படி இணைந்தன. இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது.

ஸடேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்தன.

24 ஆயிரம் கிளகைள்

இந்த வங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐ வங்கிக் கிளைகள் 24ஆயிரமாகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 59ஆயிரமாகவும் உயர்ந்தது.
 
பிரதமர் அலுவலக உத்தரவின்பேரில் நாடு முழுவதும் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தியது. சென்னையில் 13 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 
 
புதுடெல்லி, 

 நாடு முழுவதும் ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படுகிற 1,155 போலி நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன. குறிப்பாக எந்த தொழிலிலும் அல்லது வர்த்தகத்திலும் ஈடுபடாமல், சட்ட விரோத பண பரிமாற்றம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இவற்றின்மூலம் 22 ஆயிரம் பேர் பலன் பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த ஷெல் கம்பெனிகள் ரூ.13 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிரதமர் அலுவலகம் அதிரடி

கடந்த நவம்பர் 8–ந் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஷெல் கம்பெனிகள் மூலம் 550 பேர் ரூ.3,900 கோடி அளவுக்கு கருப்பு பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இப்படி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிற ஷெல் கம்பெனிகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு பிரதமர் அலுவலகம் அதிரடியாக உத்தரவிட்டது.

100 இடங்கள்

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களில் குறைந்தது 100 இடங்களில் அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் குழுக்கள் அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன.

பி.எம்.எல்.ஏ. என்னும் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் மற்றும் பெமா என்னும் அன்னிய செலாவணி பராமரிப்பு சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனைகள், சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஆமதாபாத், சண்டிகார், பாட்னா, பெங்களூரு, ராஞ்சி உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சென்னையை பொறுத்தமட்டில், 8 ஷெல் கம்பெனிகளுடன் தொடர்புடைய 13 இடங்களில் இந்த சோதனை நடவடிக்கையை அமலாக்கப்பிரிவு இயக்குனரக குழுக்கள் நடத்தி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் பிரபலங்கள்

சோதனை நடத்தப்பட்ட இடங்களில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்–மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சகன் புஜ்பால், ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் தம்பி ஆனந்தகுமார் உள்ளிட்டோருடன் தொடர்புடைய நிறுவனங்களும் அடங்கும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் 20 போலி இயக்குனர்களுடன் 700 போலி நிறுவனங்களை ஒருவர் நடத்தி வந்து இப்போது சிக்கியுள்ளார். இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சகன் புஜ்பாலுக்குரிய ரூ.46.7 கோடி சட்டவிரோத பணத்தை, சட்டபூர்வ பணமாக மாற்றித்தந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

நேற்று நடத்தப்பட்ட சோதனைகளின்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் யாரும் கைது செய்யப்படாத போதும், சந்தேகத்துக்கு உரிய நபர்களிடம் அமலாக்கப்பிரிவு இயக்குனரக குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

Saturday, April 1, 2017

பஸ்கள், ரேஷன் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

நெல்லை- புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என பல்வேறு தரப்பினரும் வாங்க மறுத்து வருகின்றனர். 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி பல முறை அறிவித்தும் இந்த குழப்பம் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் தமிழக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், போக்குவரத்து துறை ஆணையர், மின் வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் புழங்கும் அனைத்து அரசு தொடர்பான அலுவல்களுக்கும் பெற்றுக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கியின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மண்டல இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே பொதுமக்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ள அரசுத் துறைகள், அதாவது அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம், மின் கட்டணங்கள் வசூல், ரேஷன் கடைகள் ஆகியவற்றில் பொதுமக்கள் தரும் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சம் நீங்குவதுடன், அது தொடர்பான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், உணவு வழங்கல் துறை மற்றும் மின் வாரிய அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




Dailyhunt

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...