Tuesday, April 4, 2017

முதலில் அமெரிக்கா... இப்போது சிங்கப்பூர் - கலக்கத்தில் இந்திய ஐ.டி. ஊழியர்கள்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதுமே, மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குப் பணிபுரிய செல்லும் ஐ.டி.ஊழியர்களுக்கு ஹெச்1-பி விசா கட்டுப்பாடுமூலம் சிக்கலை உருவாக்கினார். இதனால், இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் நிறையப் பேர் சிக்கலைச் சந்தித்தனர். ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை.

அதேபோல சிங்கப்பூரும் புதிய சிக்கலை உருவாக்கிவருகிறது. இந்தியாவில் இருந்து பயிற்சிக்காக சிங்கப்பூருக்குச் செல்லும் இந்திய ஐ.டி.ஊழியர்களுக்கு, விசா வழங்க மறுத்துவருகிறது. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான நாஸ்காம் மற்றும் சில தொழில் நிறுவனங்கள், சிங்கப்பூரில் பயிற்சி அளிப்பதற்காகத் தேர்வுசெய்து வைத்திருந்த ஊழியர்களுக்கு விசா வழங்க, சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்துவிட்டது.

மேலும், சிங்கப்பூரில் இருக்கும் எச்.சி.எல்., டி.சி.எஸ். இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிஸன்ட், எல் அண்ட் டி இன்ஃபோடெக் போன்ற இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு, 'எங்கள் நாட்டின் திறமையான ஊழியர்களை உங்கள் அலுவலகங்களில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என்றும் அறிக்கை அனுப்பி இருக்கிறது.

இதன்மூலம், இந்தியாவின் திறமையான ஊழியர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதை மறைமுகமாகத் தடுக்க ஆரம்பித்துள்ளது சிங்கப்பூர்.

4ஜி வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்!

By DIN  |   Published on : 04th April 2017 12:33 AM
jio
4ஜி தொழில்நுட்பத்தில் தரவுகளை அதிவேகத்தில் பதிவிறக்கம் செய்வதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது.
செல்லிடப்பேசிக்கான அகண்ட அலைவரிசை வேகம் குறித்த பிப்ரவரி மாதத்துக்கான புள்ளிவிவரங்களை திங்கள்கிழமை வெளியிட்ட டிராய் அதில் தெரிவித்துள்ளதாவது:

சென்ற பிப்ரவரியில் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி பதிவிறக்க வேகம் 16.48எம்பிபிஎஸ் (மெகாபிட்ஸ் பெர் செகண்ட்)-ஆக இருந்தது. ஜனவரி மாத வேகமான 17.42எம்பிபிஎஸ் வேகத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவானதாகும். இருப்பினும், அந்த மாதத்தில் அதுவே மிகவும் வேகமான இணைய சேவையாகும்.

இந்த வேகத்தைக் கொண்டு ஒரு திரைப்படத்தை 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
ஜியோவின் 4ஜி வேகம் அதன் போட்டி நிறுவனங்களான ஐடியா செல்லுலார் (8.33எம்பிபிஎஸ்), மற்றும் ஏர்டெல் (7.66எம்பிபிஎஸ்) நிறுவனங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.

மேலும், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது அந்த இரண்டு நிறுவனங்களின் 4ஜி வேகம் பிப்ரவரியில் குறைந்து போயுள்ளது.
இவை தவிர, வோடஃபோன் நிறுவனத்தின் 4ஜி வேகம் 6.13 எம்பிபிஎஸ்-லிருந்து 5.66எம்பிபிஎஸ்-ஆகவும், பி.எஸ்.என்.எல். வேகம் 2.89 எம்பிபிஎஸ்-லிருந்து 2.01எம்பிபிஎஸ்-ஆகவும் சரிந்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டொகோமோ மற்றும் ஏர்செல் ஆகியவற்றின் 4ஜி வேகம் பிப்ரவரியில் முறையே 2.67எம்பிபிஎஸ், 2.52எம்பிபிஎஸ் மற்றும் 2.01எம்பிபிஎஸ்-ஆக இருந்தது என்று அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ள அதிரடி சலுகைகள் என்ன..?

Published on : 03rd April 2017 03:36 PM  |
bsnl
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் '249 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் ' திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி தினசரி 10 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ரிலையன்ஸ் ஜியோ. இதன் வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்களும், அதிரடி ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ் ஜியோ. டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து இலவச சலுகைகள் முடிந்த பிறகு, ரூ.99 செலுத்தி ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி ஜியோ இலவச சேவைகள் நேற்றுடன் அவகாசம் முடிவதாக இருந்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் நலனுக்காக வருகின்ற 15-ஆம் தேதி வரை ஜியோ ப்ரைம் உறுப்பினர் ஆகலாம் என்றும் ரூ.99 (ப்ரைம் உறுப்பினர்) மற்றும் ரூ.303 செலுத்தினால் (ஏப்.15) அடுத்த 3 மாதங்களுக்கு அளவற்ற இணைய தள வசதி, அழைப்புகளைப் பயன்படுத்தலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான சலுகைகள் வெளியிட்டுள்ளது. மாதத்திற்கு '249 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் ' திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி தினசரி 10 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளைப் பெறலாம். அதுமட்டுமின்றி  தினசரி 10 ஜிபி டேட்டா 2 எம்பிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு கிடைக்கும்.  இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை நீங்கள் எந்த நெட்வார்க்கிற்கு எவ்வளவு நேரம் பேசினாலும் இலவசம் தான். மேலும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம்.


249 ரூபாய் பிராட்பேண்ட் திட்டத்தை  தேர்ந்தெடுத்தால்  ஒரு மாதத்திற்கு 300 ஜிபி டேட்டா என்ற அதிரடி அறிவிப்பை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது.  இதற்கு புதிய பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு வாங்கவேண்டும்.
இது தொடர்பான  முழுமையான தகவல்களை பெற 1800 345 1500. என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். வயர்லைன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் இந்த அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

அதிக பயன்பாடு ஆபத்து

By லோ. வேல்முருகன்  |   Published on : 04th April 2017 01:29 AM  | 

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மனிதர்கள் பல வழிமுறைகளை கையாளுவர். ஒரு சிலர் வெயில் காலம் தொடங்கியவுடனே மொட்டை மாடியில் மாலை வேளைகளில் இரண்டு மூன்று முறை தண்ணீர் தெளித்து பின்னர் படுத்து உறங்குவார்கள்.

ஒரு சிலர் வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் திறந்து விட்டு தூங்குவார்கள். சிலரோ இளநீர் உள்ளிட்டவைகளை அருந்தி தங்களது உடல் சூட்டை தணித்துக் கொள்வர். இதுபோன்று இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி கோடை வெப்பத்தை சமாளித்தால், அதில் எந்த தவறும் இல்லை. நமது உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் இன்றைய நவீன உலகில் வீடுகள், அலுவலகங்கள், வங்கிகள், துணிக் கடைகள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும் குளிரூட்டிகளின் (ஏர் கண்டிஷனர்) பயன்பாடு அதிகரித்து வருகிறது.

அமெரிக்க பொறியாளர் வில்லிஸ் ஹேவிலேண்டு என்பவரால் 1902 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட குளிரூட்டியானது முதலில் ஜன்னல்களில் மாட்டி பயன்படுத்தும் வகையில் (விண்டோ ஏசி) இருந்தது.
இதையடுத்து 1950-களில் அமெரிக்கா போன்ற நாடுகளில் இதன் விற்பனை குடியிருப்பு வட்டாரங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் நவீனமாக பல வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு சுவர்களை அலங்கரிக்கத் தொடங்கியது. ஸ்பிலிட் ஏசி, சென்ட்ரலைஸ்டு ஏசி, வாகனங்களில் பயன்படுத்தும் ஏசி என பல வகையாக குளிரூட்டிகள் தற்போது உள்ளன.

தொடக்கத்தில் கணினி போன்ற இயந்திரங்கள் அதிக சூடாவதை குறைப்பதற்காக குளிரூட்டி கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்த தொடங்கினர். பின்னர் அதுவே அனைத்து இடங்களையும் வியாபிக்கத் தொடங்கிவிட்டது.

கணினி போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படும் 'சிப்பு'கள் மிகவும் நுண்ணியவை. அவை அதிகமாக சூடேறினால் பழுதாகும் வாய்ப்பு அதிகம். இதன் காரணமாகத்தான் கணினிகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து பயன்படுத்தப்பட்டன. நாளடைவில் அலுவலகங்களில் குளிரூட்டிகள் பயன்படுத்தத் தொடங்கினர்.

அலுவலகங்களில் குளிரூட்டிகள் பயன்படுத்தும்போது ஊழியர்கள் புத்துணர்வுடன் பணிபுரியும் சூழல் உண்டானது. பணிகள் தொய்வின்றி நடக்கவும், ஊழியர்கள் வசதியாக பணிபுரியவும் முடிகிறது என்பதால் அலுவலகங்களில் குளிரூட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆனால் இன்று பெரும்பாலான மனிதர்கள் இயற்கை காற்றை சுவாசிக்காமல், குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். அதுவும் கோடை காலங்களில் குளிரூட்டிகளை அதிகமாகவே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு அதிகரித்து வரும் குளிரூட்டிகளின் பயன்பாட்டால் மனிதர்களின் உடல் நலம் கெடுவதோடு மட்டுமல்லாமல், புவி வெப்பமயமாதலும் அதிகரித்து வருகிறது.

மின்விசிறிகளில் இருந்து வெளிவரும் காற்றானது அறையின் வெப்பநிலையை பொருத்தே இருக்கும். ஆனால் குளிரூட்டிகள் அவ்வாறு இல்லாமல் நமக்கு குளிர்ந்த காற்றை கொடுத்து அறையின் வெப்ப
நிலையை குறைக்கிறது. இதனால் நமக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

குளிரூட்டப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு, சோர்வு, உலர்ந்த சருமம், சுவாசப் பிரச்னைகள், தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்.
மேலும் ஒவ்வொரு கோடை காலத்திலும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சுமார் 400 பேர் வரை உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சிலர் கார்களில் ஏசியை போட்டு தூங்குவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். அலுவலகம், ஷாப்பிங் போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள் வாகன நிறுத்தத்தில் கார்களை நிறுத்தி விட்டு, தூங்கும் தங்கள் குழந்தைகளை குளிரூட்டிகளை அணைக்காமல் காரிலேயே விட்டுச் செல்வர்.
அவ்வாறு விட்டுச் செல்லும் போது விஷவாயு தாக்கி குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால் நிபுணர்கள் கார்களில் குளிரூட்டிகளை போட்டுக் கொண்டு தூங்குவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

இயற்கையாக கிடைக்கும் காற்றுதான் மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை தரும். செயற்கையாக உண்டாக்கப்படும் காற்று ஆபத்தை தரும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் சிறிது நேரம் இருந்தால் அதனால் எந்த தீங்கும் ஏற்படாது. முறையாக பராமரிக்கப்படாத குளிரூட்டிகளால் ஒவ்வாமை, ஆஸ்துமா, கண், மூக்கு, தொண்டைகளில் எரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.
எனவே குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படும் காற்று வடிகட்டிகளை (ஏர் பில்டர்) முறையான கால இடைவெளியில் சுத்தப்படுத்திட வேண்டும். குளிரூட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும் அறையின் ஜன்னல் கதவுகளை அவ்வப்போது திறந்து வைக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் வெளிப்புறக் காற்று அறை முழுவதும் பரவி அறையில் காற்று மாசு குறையும்.

மேலும், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் பழைய குளிரூட்டியை மாற்றிவிட்டு புதிய குளிரூட்டியைப் பொருத்த வேண்டும்.
வெளியில் நிலவும் வெப்பநிலையை விட ஐந்து டிகிரி வித்தியாசம் இருக்கும் வகையில் குளிரூட்டிகளை பயன்படுத்த வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற வழிமுறைகளை குளிரூட்டிகள் பயன்படுத்துபவர்கள் கடைபிடித்து நோய் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ளலாம்.

இது வரம், சாபமல்ல!

By ஆசிரியர்  |   Published on : 04th April 2017 01:34 AM  |   

நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பொது மருத்துவத்துக்கான எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவத்துக்கான பி.டி.எஸ். உள்ளிட்ட கல்வித் தகுதிகளுக்கு அகில இந்திய அளவிலான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு(National Eligibility cum Entrance Test) எனப்படும் 'நீட்' தேர்வின் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற காரணத்தைக் கூறி தமிழகம் இனியும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற முடியாது என்று தோன்றுகிறது.

சர்வதேச அளவில் இந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடிப்படைத் தகுதியைத் தேர்வு மூலம் முடிவு செய்து அதனடிப்படையில் மட்டும்தான் மதிப்பெண் அடிப்படையில் ஆனாலும், நன்கொடை அடிப்படையானாலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட முடியும் எனும் நிலை ஏற்பட்டால், இந்திய மருத்துவக் கல்வியின் தரம் உறுதிப்படுத்தப்படும் என்பதுதான் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டதன் நோக்கம்.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்துத் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு உறுதிப்படுத்தப்பட்டது. அந்த முடிவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, 'நீட்' தேர்வு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.

பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தந்த அழுத்தத்தின் காரணமாக, மாநில அரசுகள் விருப்பப்பட்டால், 'நீட்' தேர்விலிருந்து அவற்றுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதற்கான அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. ஆனாலும்கூட, தனியார் மருத்துவக் கல்லூரிகள் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது. கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு மட்டும், மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றது.
மருத்துவக் கல்வியில் உள்ள பிரச்னைகளுக்கு 'நீட்' நுழைவுத் தேர்வே தீர்வு என்று நினைத்துவிட வேண்டாம். 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களைப் பெறும் மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டணங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்குக் கடுமையான கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்துக் கவலைப்படாத நமது அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும். 'நீட்' நுழைவுத் தேர்வை மட்டுமே எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரச்னை தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு அல்ல. நமது மாநில அரசின் கல்வித் திட்டம் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தின் அளவுக்குத் தரம் வாய்ந்ததாக இல்லாமல் இருப்பதுதான். 'நீட் தேர்வை நடத்துவது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்பதால், அந்தக் கல்வித் திட்டத்தின் தரத்தில் படித்திருந்தால் மட்டுமே, அந்தத் தேர்வை எதிர்கொள்ளமுடியும்.

இந்த ஆண்டு 'நீட்' தேர்வு எழுதுவதற்கு தமிழகத்திலிருந்து 88,431 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்கள் தனியார் பயிற்சி நிலையங்கள் நடத்தும் 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் படித்தவர்கள். அநேகமாக எல்லா தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் 'நீட்' தேர்வையே சாக்காக வைத்து அதற்கான தனிப் பயிற்சிக்கென ரூ.50,000-த்திலிருந்து ரூ.1 லட்சம் வரை வசூல் செய்கிறார்கள். முறையான பயிற்சி பெற்றவர்களால்தான் அந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. 'நீட்' குறித்த அடிப்படையே தெரியாத பலர் பயிற்சி வகுப்புகள் நடத்துவதும், தனியார் பள்ளிகளுடன் இணைந்து பயிற்சி வழங்குவதும் அரசுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.
கிராமப்புற மாணவர்களால் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு எழுத முடியாது என்கிற காரணத்தைக் காட்டி அவர்களை எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இப்படியே வைத்துக் கொண்டிருக்கப் போகிறோம்? 'நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோருவதன் மூலம் தமிழக மாணவர்களின் தரத்தை அரசே குறைத்து மதிப்பிடுவது அவமானகரமாக இல்லையா' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் எழுப்பியிருக்கும் கேள்வி கவனத்தில் கொள்ளத்தக்கது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை, நமது பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தரத்துக்கு உயர்த்துவதும், தமிழக அரசே நமது மாணவர்களை 'நீட்' தேர்வுக்கு முறையான தகுதியுள்ள ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளித்துத் தயார் படுத்துவதும்தானே ஆக்கபூர்வமான அணுகுமுறையாக இருக்க முடியும்?

அவரவர் தாய்மொழியில் 'நீட்' தேர்வு எழுதலாம் என்று சொல்லிவிட்ட நிலையில், நமது கிராமப்புற மாணவர்களை தேசியத் தேர்வுகளின் போட்டிக்குத் தயார் படுத்துவதில் முனைப்புக் காட்டுவோம். நமது பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவோம். இதுபோல நெருக்கடி ஏற்பட்டால்தான் மாற்றங்கள் சாத்தியப்படும். 'நீட்' நமக்குக் கிடைத்திருக்கும் வரம், சாபமல்ல!

ஜூன் வரை வெயில் வாட்டும்; இயல்பை விட அதிகரிக்கும் கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குளிர் காலத்தின் பின் பருவம் முடிந்து, மார்ச், 1 முதல் கோடை வெயில் துவங்கியது. இதில், டெல்டா மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் துவக்கம் முதலே வெப்பம் அதிகமாக உள்ளது. தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், 40 டிகிரி செல்சியஸ்; சென்னை உள்ளிட்ட வடகிழக்கு
மாவட்டங்களில், 35 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பம் பதிவானது. ஆனால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்துள்ளது.

அடுத்து வரும் மாதங்களில், ஜூன் வரை, வெயிலின் அளவு கடுமையாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன், அடுத்த இரு மாதங்களுக்கான முன் கணிப்பையும், இந்திய வானிலை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.

* பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில், மேல்மட்ட வெப்ப அளவில், பெரிய மாற்றம் இல்லை. வழக்கமான கோடை வெயிலை விட, ஒரு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடுதலாக இருக்கும்

* வடக்கு, மத்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்; தென் மாநிலங்களில், 0.5 டிகிரி செல்சியஸ் அளவு மட்டும், வெப்பம் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
 Research, startups make IIT-Madras best in class

CHENNAI: Indian Institute of Technology - Madras is the second best institution in the country and the best among engineering institutions in the national institutional ranking framework (NIRF) released by the Union minister for human resource and development Prakash Javadekar on Monday. Anna University, Chennai finished 13th in the overall ranking and is sixth among engineering institutions.

This is the first time that the Union ministry of human resource and development (MHRD) has made it mandatory for all higher educational institutions in the country to take part in the annual ranking process. In the overall category, IIT-M stood second behind Indian Institute of Science, Bengaluru.

IIT-M director, Prof Bhaskar Ramamurthy, attributed the rank to the objectives of the 'Strategic Plan 2020'. "The plan spells out quantified targets for all key pillars. These include flexible curriculum, increase in faculty strength, research programme that increases publication quality and count, strong industry-academia collaboration epitomised by research park, a startup ecosystem with 100 companies being incubated currently, an expanding programme of collaborations and student exchanges with leading global universities, and an impressive placement record," he said.

Anna University was placed sixth among universities and 13th in the overall category. "Anna University was awarded the status of university with potential for excellence by the UGC. The university aims to reach greater heights through continued programmes in academics and research and strengthen its collaborations with national and international agencies," said registrar S Ganesan.

Coimbatore-based Amrita University was ranked ninth in the university category. "It is a great feeling to reach the top of the ranking," said vice-chancellor of Amrita University P Venkat Rangan. "This is a testament to the academic excellence and outstanding faculty that the university is known. We maintain a staff-student ratio of 1:10," he said. Amrita was also ranked the best private deemed university in India in the QS Rankings and Times Higher Education Rankings.

SASTRA University, Thanjavur has been ranked in all the categories of the NIRF Rankings. It has been ranked 50/724 in the overall category, 32/232 among universities, 25/1007 in engineering and 44/542 in management. "This is a significant improvement when compared to the 2016 rankings. The management acknowledges the support and encouragement of Government of India, MHRD, funding agencies, corporates, parents, students and well-wishers," said the dean of planning and development, S Vaidhyasubramaniam.

NEWS TODAY 14.02.2026