Friday, April 7, 2017

சொத்து குவிப்பு வழக்கில் 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு சிறை
vertisement

பதிவு செய்த நாள்

06 ஏப்
2017
23:04
திருச்சி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேலுக்கு, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், இரண்டாண்டு சிறை தண்டனை விதித்தது. தமிழகத்தில், 1991 - 96 வரையிலான, அ.தி.மு.க., ஆட்சியில், முசிறி தொகுதி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் பிரின்ஸ் தங்கவேல், 53. இவர், பதவி காலத்தில், 20.80 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 1997ல் திருச்சி ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் விசாரணை, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், 44 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 88 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் அடிப்படையில் நேற்று, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். இதில், முன்னாள், எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேலுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை, மூன்று ஆண்டுக்கு குறைவு என்பதால், தண்டனை பெற்றவர் மேல்முறையீடு செய்ய வசதியாக, ஒரு மாதத்துக்கு தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இதையடுத்து, பிரின்ஸ் தங்கவேல் விடுவிக்கப்பட்டார். இவர், அ.தி.மு.க.,வின், ஓ.பி.எஸ்., அணியில் உள்ளார்.
ரயில்வே ஸ்டேஷன் ஜப்தி : கரூரில் சலசலப்பு




கரூர்: கரூர் - சேலம் அகல ரயில் பாதை பணி, 1999ல் துவங்கப்பட்டது. கரூர் அருகில் உள்ள ஆத்துார், காதப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 325 பேரின் நிலம், ரயில் பாதைக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இவர்கள், அரசு வழங்கிய இழப்பீடு குறைவாக உள்ளதாக கூறி, கரூர் சார்பு நீதிமன்றத்தில், 2002ல், வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க, 2012ல், உத்தரவிட்டது. நிலம் அளித்த, 325 பேரில், 310 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால்,   ௫ கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்காத, ஆறுபேர் மேல்முறையீடு செய்தனர். இழப்பீடு வழங்காததால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை, ஜப்தி செய்ய, கரூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி, நேற்று பகல், 11:30 மணிக்கு நீதிமன்ற அமீனாக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். ரயில் நிலைய மேலாளர் சுரேந்தர்பாபு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.'வரும், 27ம் தேதிக்குள் இழப்பீடு தொகை செலுத்த, நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது' என்ற தகவல், அமீனாக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பின், அவர்கள் திரும்பி சென்றனர்.
'நீட்' தேர்வு கட்டாயமானதால், தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மீண்டும், பிளஸ் ௧ பாடங்களை படித்து, பயிற்சியை துவக்கி உள்ளனர்.

அகில இந்திய அளவில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' என்ற, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். தமிழகத்தில், ௨௦௧௬ல், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர மட்டும், இந்தத் தேர்வு கட்டாயமாக இருந்தது. இந்த ஆண்டு, அனைத்து கல்லுாரிகளுக்கும் கட்டாயமாகி உள்ளது.'நீட்' தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது.தமிழக மாணவர்களுக்கு, இந்தத் தேர்வில் விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு, மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால், தமிழக அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பாமல், மாணவர்கள், 'நீட்' தேர்வுக்கு தயாராகின்றனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகள், நேரடியாக பயிற்சி மையங்களை அணுகி, 'நீட்' தேர்வுக்கு, சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றன. சிறப்பு ஏற்பாடு செய்யாத பள்ளிகளின் மாணவர்கள், தனியார் பயிற்சி மையங்களில், தாங்களே நேரடியாக சேர்ந்து, பயிற்சி பெறுகின்றனர். 'நீட்' தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள் இடம்பெறும் என்பதால், அந்த பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்ணை குறிக்கோளாக கொண்டு, பாடம் நடத்தும் பள்ளிகள், 10ம் வகுப்புக்கு பின், இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடங்களையே நடத்தி வருகின்றன. இந்த பள்ளிகளில், பாடங்களை வரிக்கு வரி மனப்பாடம் செய்த மாணவர்கள், 'நீட்' தேர்வில் ஜொலிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அதற்கு முந்தைய, பிளஸ் ௧ பாடத்தை, தற்போது படிக்க துவங்கி உள்ளனர்.இது, தமிழக கல்வித்துறையின் செயல்பாடுகளும், திட்டமிடலும், பள்ளிகளை நடத்தும் விதமும், எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை காட்டுவதாக, கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பழைய ரேஷன் கார்டுகளை திருப்பி தர தேவையில்லை!

பதிவு செய்த நாள் 06 ஏப்
2017

20:51 புதிதாக வழங்கப்படும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெற்ற பின், பழைய ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்ற தவறான தகவல், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருவதால், உணவு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த கார்டு, ரேஷன் கடைக்கு வந்ததும், கார்டுதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' பற்றிய எஸ்.எம்.எஸ்., வரும். அதை, ஏழு தினங்களுக்குள், ரேஷன் கடைக்கு சென்று, ஊழியரிடம் தெரிவித்ததும், ஸ்மார்ட் கார்டு தரப்படும். அப்போது, பழைய கார்டை, கடைகளில் ஒப்படைக்க தேவையில்லை. ஆனால், சிலர், 'ஸ்மார்ட் கார்டு பெறும் வேளையில், பழைய ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டி இருப்பதால், அதனை முழுவதுமாக, 'ஸ்கேன்' அல்லது நகல் எடுத்து கொள்ளவும்' என, வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கார்டுதாரர், ஸ்மார்ட் கார்டு பெறும் போது, பழைய கார்டை கடைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதில், 'ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டு விட்டது' என்று, ஊழியர் முத்திரை வைத்து, ரேஷன் கார்டுதாரரிடமே, பழைய கார்டை திரும்ப தருவர். எக்காரணம் கொண்டும், பழைய கார்டை, திரும்ப வாங்க கூடாது என, ஊழியர்களிடம் கூறப்பட்டு உள்ளது. இதனால், பழைய கார்டை நகல் எடுக்கவோ, ஸ்கேன் செய்யவோ வேண்டாம். அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை, பழைய கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். பழைய கார்டை, ஊழியரிடம் வழங்கினால், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். அதை யாரிடமும் தர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

பிழை ஏன்? : ஸ்மார்ட் கார்டில் உள்ள பெயர், தந்தை பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி ஆகிய விபரங்கள், 'ஆதார்' கார்டை, ஸ்கேன் செய்ததில் பெறப்பட்டவை. எனவே, ஆதார் கார்டில் பிழை இருந்தால், அது, ஸ்மார்ட் கார்டிலும் வருகிறது. அது பற்றிய அச்சம் வேண்டாம்.
பொது வினியோக திட்ட இணையதளத்தில் சென்று, பிழையை சரி செய்யலாம். புது கார்டை, அரசு இ - சேவை மையங்களில் வாங்கி கொள்ளலாம்.

- நமது நிருபர் -

Thursday, April 6, 2017

Chennai airport to stop hand baggage stamping

By Express News Service  |   Published: 06th April 2017 02:29 AM  |  
Last Updated: 06th April 2017 05:49 AM  |   
Chennai Airport | EPS


CHENNAI: Chennai airport will soon be following seven other airports in the country by scrapping the stamping of hand baggage tags by the Central Industrial Security Force (CISF) at the airport, according to Chennai Airport Director G Chandramouli.
He told Express that a team comprising senior officials from the Bureau of Civil Aviation Security and CISF would be carrying out inspection so that the possibility of a security breach can be ruled out once the stamping of tags is done away with.
“Chennai had missed the bus as the team could not carry out inspection due to Cyclone Vardah,” said Chandramouli, who along with the Regional Executive Director was honoured by Union Civil Aviation Minister Ashok Gajapathi Raju in New Delhi recently for effectively tackling the effects of cyclone that hit the coast of Chennai.
“Once the inspection is done, they will ask us to modify security architecture following which the stamping of hand baggage will be scrapped,” he said.
Seven major airports — Delhi, Mumbai, Bengaluru, Hyderabad, Kolkata, Kochi and Ahmedabad —  in the country have done away with stamping of hand baggages from April 1.

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் எஸ்பிஐ வங்கிக் கிளை தொடர்ந்து செயல்படுமா?

By ENS  |   Published on : 06th April 2017 11:01 AM  |   
sbi
பெங்களூர்: நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருப்பின், உங்கள் வங்கிக் கிளை தொடர்ந்து செயல்படுமா என்பதை அறிய இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் முறைப்படி இணைந்தன.
இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில்தான், நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருப்பின், உங்கள் வங்கிக் கிளை தொடர்ந்து செயல்படுமா அல்லது அருகில் இருக்கும் மற்றொரு எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்படுமா என்பதை அறிய இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய எஸ்பிஐ வங்கி அதிகாரி ஒருவர், ஒவ்வொரு வங்கிக் கிளையையும் தொடர்ந்து நடத்துவதா? அல்லது அருகில் இருக்கும் வங்கிக் கிளையுடன் இணைப்பதா? அல்லது வேறொரு இடத்துக்கு இடம் மாற்றுவதா என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கவே இன்னும் 3 மாதங்கள் ஆகும்.
ஒவ்வொரு வங்கிக் கிளையும் கையாளும் வங்கிக் கணக்குகள், அருகில் இருக்கும் மற்றொரு எஸ்பிஐயின் வங்கிக் கிளையின் திறன் ஆகியவற்றோடு ஒப்பிட்டு, இட வசதியையும் அடிப்படையாக வைத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
ஒரே இடத்தில் இரண்டு வங்கிக் கிளைகள் இருப்பதால் ஏற்படும் குழப்பங்களைத் தடுக்க ஒரு வங்கிக் கிளை மற்றொரு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்படும்.
6 வங்கிகள் எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டதால், நிச்சயமாக யாரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் எஸ்பிஐ வங்கிக்கு 1,888 வங்கிக் கிளைகள் உள்ளன. இதில் எஸ்பிஐ-வங்கியுடையது மட்டும் 721 கிளைகள். ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கியின் 887 கிளைகளும், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத்தின் 209 கிளைகளும் அடக்கம்.
மேலும் படிக்க : எஸ்பிஐ வங்கியுடன் மகளிர் வங்கி உள்பட 6 வங்கிகள் இணைப்பு

ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்தன.

இந்த வங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மொத்தம் 24ஆயிரமாகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 59ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

வரிச் சலுகை: போலி வீட்டு வாடகை ரசீது சமர்ப்பிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்!

By CP சரவணன்  |   Published on : 06th April 2017 04:37 PM  |
salaried_couple_tax_benifits
போலியாக வீட்டு வாடகை ரசீது சமர்ப்பிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் புதிய விதிமுறையை உருவாக்குவது குறித்து வருமான வரித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
வருமான வரி விலக்கு பெறுவதற்கு வீட்டு வாடகை ரசீதை வருமானவரித்துறையிடம் சமர்ப்பிப்பது வழக்கம். இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் ரசீது, பெரும்பாலும் போலியானவை என்றும் இதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நிகழ்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்தைக் குறைக்கும் ஒரு கருவியாக இந்தப் போலி வீட்டு வாடகை ரசீதைப் பயன்படுத்தி வருவதால், குடியிருக்கும் வீட்டிற்கு, அளிக்கப்படும் வாடகைக்கு முறையான ஆதாரங்களைக் கோரவும் முடிவுசெய்துள்ளது.
 எனவே இனி வீட்டு வாடகை என்ற பெயரில் அதிகளவில் வருமான வரி விலக்கு பெற திட்டமிட்டுள்ள தனிநபர், வாடகை ஒப்பந்தம், மின்சாரக் கட்டண அறிக்கை, குடிநீர் கட்டண அறிக்கை எனப் பல ஆதாரங்களை அதுவும் குடியிருப்பு வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...