Wednesday, April 12, 2017

Man takes 225 sleeping pills with lover, dies
Chennai:
TIMES NEWS NETWORK 
 


A couple reportedly consumed 225 sleeping pills in a bid to commit suicide at a private resort in Mamallapuram on Monday .
 
Doctors at Government Hospital, Mamallapuram, pronounced the 30-year-old man dead on arrival. The woman survived.

Policemen rescued her.They admitted her to Government General Hospital, Chengalpet, where doctors said she was in a serious condition but is recovering.
The Mamallapuram police retrieved a suicide note from the room in which the couple stayed. The note stated that they had decided to kill themselves because the woman's parents objected to their marriage. It said they had consumed 225 sleeping pills.

Employees at the resort grew suspicious when the couple remained indoors after arriving on Sunday morning and did not step out. When they knocked on the door on Monday afternoon, the woman, I Chitra, 23, a resident of Perambur, fought off stupor to open the door. Before losing consciousness, Chitra revealed that she and her boyfriend had attempted suicide.
The employees informed the local police and they hurried to the spot. A police officer identified the man as D Sivagurunathan, 30, a resident of Sholinganallur. Police informed the families of the couple about what had happened.

“Sivagurunathan and Chitra worked at a private security firm in T Nagar in Chennai,“ the officer said.“They had been in a relationship for three years.“
Chitra recently informed her parents that she intended to marry Sivagurunathan. They took his horoscope to an astrologer.

Chitra's parents refused to allow her to marry Sivagurunathan after the astro loger said their horoscopes did not match. They started looking for a bridegroom for their daughter.
“Sivagurunathan and Chitra travelled to Mamallapuram on Sunday and took a room in a resort,“ the officer said. “They appear to have discussed the situation and decided to commit suicide.They stayed up late into the night before consuming the pills on Monday morning.“

கடன் வாங்கி செலவழித்த அமைச்சர்கள் பரிதவிப்பு 
DINAMALAR

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரனை வெற்றி பெற வைப்பதற்காக, கடன் வாங்கி செலவழித்த அமைச்சர்கள், தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், கடன் தொகையை எண்ணி கலக்கத்தில் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பணத்தை வாரி இறைத்தனர்.




பெரும் தொகை :

அதற்காக, ஒவ்வொரு அமைச்சரும், குறிப்பிட்ட தொகை தர வேண்டும் என, தினகரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமைச்சர்கள் கோடிக்கணக்கில்

பணம் வழங்கி உள்ளனர். பல ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்தவர்கள், சிரமம் இன்றி, கேட்ட தொகையை கொடுத்து விட்டனர்.

புதிதாக அமைச்சரானவர்களோ, கடன் வாங்கி தந்துள்ளனர். மேலும்,தொகுதியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், கட்சி நிர்வாகிகளுக்கும், பிரசாரத்திற்கும் பெரும் தொகையை செலவழித் துள்ளனர். அனைத்து அமைச்சர்களும், தங்கள் பங்கு தொகையை, அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொடுத் துள்ளனர். அவர், வாக்காளர்களின் எண்ணிக்கைக் கேற்ப, பணத்தை பிரித்து கொடுத்துள்ளார்.

வருமான வரித்துறை :

ஒரு அமைச்சர், 18 கோடி ரூபாய் கொடுத்து உள்ளார். அதில், பெரும் தொகையை, கடனாக பெற்றுள்ளார்.நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பின் அமைச்சரானவர்; சமீபத்தில், போதையில் உளறி கொட்டியவர் அவர்.
இதுதவிர, பெண் அமைச்சர் ஒருவர் உட்பட, மேலும் பலரும் கடன் வாங்கி பணம் கொடுத்துள்ளனர். தேர்தலில், தினகரன் வெற்றி பெற்றால், அவர் முதல்வராவார்.

நான்கு ஆண்டுகள் நன்றாக சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில், கடன் வாங்கி பணம் கொடுத்துள்ளனர்.

தற்போது, தேர்தல் நிறுத்தப்பட்டதாலும், வருமான வரித் துறை நெருக்கடியாலும், கடனை திரும்ப செலுத்த முடியுமா என்ற கலக்கத்தில் உள்ளனர்.அதேபோல, அமைச்சர் களை நம்பி கடன் கொடுத்தவர்களும், பணம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உள்ளனர்.

- நமது நிருபர் -

மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக போதிய இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

ராமநாதபுரம் ராஜு தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் மருத்துவக் கல்லுாரிகளில் 2009--10 முதல் 2016--17 வரை எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பிற்கு 35 ஆயிரத்து 357 இடங்களுக்கு   மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் வெறும் 278 பேர்தான். இது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இதிலிருந்து தமிழக அரசுப் பள்ளிகளின் நிலைமையை அறிய முடியும்.அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான கல்வி மற்றும் மதிப்பெண் பெற முடியவில்லை.எம்.பி.பி.எஸ்.,மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, போதிய இட ஒதுக்கீடு வழங்க, நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜு மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு,'மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்குமாறு அரசுக்கு, இந்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்,' என உத்தரவிட்டது.

மந்திரி விஜயபாஸ்கர் மீதான பிடி இறுகுகிறது : குவாரியை தோண்ட துவங்கியது வரித்துறை

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான, வருமான வரித்துறை பிடி இறுகுகிறது. அவருக்கு சொந்தமான குவாரியில், மத்திய பொதுப்பணித் துறை உதவியுடன், ஆய்வுப் பணி துவங்கி உள்ளது.

புதுக்கோட்டை- மற்றும் அன்னவாசல் இடையே, திருவேங்கைவாசல் பகுதியில், 'ராசி புளூ மெட்டல்ஸ்' கல் குவாரி மற்றும், 'கிரஷர்' மையத்தை, விஜயபாஸ்கரின் பினாமி நடத்தி வருகிறார். இதில், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வருமானம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை வளையத்தில், விஜயபாஸ்கர் சிக்க, இந்த குவாரி மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. அங்கு, 7ம் தேதி, விசாரணைக்கு சென்ற அதிகாரிகள், மலை போல் குவித்துள்ள மணல் மற்றும் ஜல்லியை பார்த்து, வாயடைத்துப் போயினர். இந்நிலையில், நேற்று அங்கு வருமான வரித்துறையினர், மீண்டும் ஆய்வை துவக்கியுள்ளனர்.

500 லாரிகள் : இதுகுறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: திருவேங்கைவாசலில் உள்ள குவாரியில் குவிக்கப்பட்டுள்ள மணல், ஜல்லியை, பல ஆண்டுகளுக்கு விற்கலாம் போல தெரிகிறது. மேலும், மணல், ஜல்லி மற்றும், 'ரெடிமிக்ஸ்' போன்றவற்றின் மதிப்பை ஆய்வு செய்ய, எங்களிடம் நிபுணர்கள் இல்லை. அதனால், மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகளை உதவிக்கு அழைத்து உள்ளோம். அவர்கள், இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள மணல், ஜல்லி மற்றும் இதர பொருட்களின் மதிப்பை ஆய்வு செய்து, எங்களுக்கு அறிக்கை அளிப்பர். அதன் அடிப்படையில், ஒரு ஆண்டில் அங்கு கிடைக்கும் வருவாயை, நாங்கள்  ணக்கிட முடியும். அவ்வாறு வரும் தொகையையும், வருமான வரி தாக்கல் படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொகையையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். அதன் அடிப்படையில், வருமான வரி வசூலிக்கப்படும். மேலும், முந்தைய ஆண்டுகளுக்கான வருமானமும், அதற்காக செலுத்திய வரித்தொகையும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். அது குறைவாக இருப்பதாக தெரிந்தால், அதற்குரிய வருமான வரி வசூலிக்கப்படும். குவாரியில், 500க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகின்றன.
இவற்றுடன், 20க்கும் மேற்பட்ட, 'டாரஸ்' ரக லாரிகள் மற்றும் ஏராளமான, 'ரெடிமிக்ஸ்' உபகரணங்களும் உள்ளன. அவை, யாருக்குச் சொந்தமானவை என்றும், ஆய்வு செய்து வருகிறோம்.

வாக்குமூலம் : மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி, 'எஸ்.ஆர்.எஸ்., மைனிங் நிறுவனத்தில் விஜயபாஸ்கரும், மறைமுக பங்குதாரர்' என, வாக்குமூலம் அளித்துள்ளதால், வேறு குவாரிகளில் இருந்தும், அமைச்சருக்கு வருமானம் வருகிறதா என்பதையும், ஆராய வேண்டியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

குவாரி என்னுடையதே!: 'திருவேங்கைவாசலில் உள்ள குவாரி, எனக்குச் சொந்தமானது தான்' என, அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக் கொண்டுள்ளார். அதை குத்தகைக்கு விட்டுள்ளதாகவும், குறைந்த அளவில் தான் வருமானம் கிடைக்கிறது என்றும் விஜயபாஸ்கர், விசாரணையில் கூறியதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

மந்திரி கைதா? : வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: குவாரியை பொறுத்தவரை, எங்களது இலக்கு வருமான வரி மட்டுமே. அங்குள்ள விதிமீறல்கள் பற்றி, நாங்கள் ஆய்வு செய்யவில்லை. அதுபற்றி, சுற்றுச்சூழல் துறை தான் ஆய்வு செய்து, முடிவெடுக்க வேண்டும்.
மத்திய பொதுப்பணித்துறை ஆய்வு முடிவுகள் வந்த பின், அதுபற்றி சம்பந்தப்பட்ட துறை தொடர்பு கொண்டால், அப்போது, அதை பகிர்ந்து கொள்வது பற்றி பரிசீலிப்போம். அதனால், குவாரி விவகாரத்தில், இப்போதைக்கு கைது என்ற கோணம் எழவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! : விஜயபாஸ்கரின் குவாரிக்காக, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பமான, 'போர்வெல்' வெடியால், மலைகள் துண்டு துண்டாக பிளக்கப்படுகின்றன. அதன் அதிர்வுகளால், திருவேங்கைவாசல் வியாக புரிஸ்வர் கோவில் மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாக்கியிருப்பதாக, அப்பகுதியை சேர்ந்தவர்கள் குமுறுகின்றனர். ஆனால், காவல்துறை, மாவட்ட நிர்வாகம், புகார் தர முன்வரவில்லை; அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

- நமது சிறப்பு நிருபர் -

இன்று முதல் குடிக்க மாட்டேன்...' : காப்பு கட்டி 'குடி'மகன்கள் சத்தியம்

ஆத்துார்: போதை பழக்கத்தில் இருந்து மீள, ஆத்துார், மதுரகாளியம்மன் கோவிலில், 'இனிமேல் குடிக்க மாட்டேன்' என, 'குடி'மகன்கள் சத்தியம் செய்து, காப்பு கட்டி செல்கின்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார், வசிஷ்ட நதி வடக்கு பகுதியில் உள்ள சம்போடை வனத்தில், மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஆத்துார் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக, மது பழக்கத்துக்கு அடிமையான பலர், மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்து, அம்மன் மடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு, கையில் கயிறு கட்டி செல்கின்றனர். மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்ய வரும், 'குடி'மகன்களிடம், 'இனிமேல் குடிக்க மாட்டேன்' என, கற்பூரத்தை அணைத்து, சத்தியம் வாங்கும் கோவில் பூசாரி, அவர்களுக்கு கையில், 'சிவப்பு' நிற கயிறு கட்டி விடுகிறார்.

பூசாரி ராஜாமணி கூறியதாவது: மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்து செல்லும், 'குடி'மகன்கள், மது குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். சிலர் கையில் உள்ள கயிற்றை அவிழ்த்து விட்டு, மீண்டும் குடிக்கின்றனர். அவர்கள், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பல பெண்கள், கணவர், மகன்களை, ஆத்துாருக்கு அழைத்து வந்து, மதுரகாளியம்மன் கோவிலில், சத்தியம் வாங்கிச் செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிற்றுகிழமைகளில்
பெட்ரோல், டீசல் கிடைக்காது

புதுடில்லி: 'பெட்ரோல் பங்க்குகள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது' என, இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.




ஒவ்வொரு மாதமும், 'மன் கி பாத்' என்னும் ரேடியோ நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களி டையே, பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றி வருகிறார். கடந்த மாதம் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'வாரத்துக்கு ஒரு நாள்,


எரிபொருளில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளையடுத்து, 'அடுத்தமாதம், 14 முதல், ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை விடப்படும்' என, சி.ஐ.பி.டி., என்னும் இந்திய பெட்ரோல் டீலர் கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயண் கூறியதாவது:

எங்கள் கூட்டமைப்பின் கீழ், கேரளா, தமிழகம், கர்நாடகா மற்றும்மஹாராஷ்டிர மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகள், இயங்குகின்றன. எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி, வாரந் தோறும் ஞாயிறு அன்று, அனைத்து பங்க்குகளும்இயங்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், மற்றொரு அமைப்பான, அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கத் தலைவர் அஜய் பன்சால் கூறுகையில், ''டில்லி உள்ளிட்ட, 21 மாநிலங்களில், எங்கள் சங்கத்துக்குட் பட்ட பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்; கமிஷன் தொகை தொடர்பான பேச்சு, தொடர்ந்து நடக்கும், என்றார்.
89 கோடி கறுப்பு பணமா; கள்ள பணமா? விஜயபாஸ்கரை விடாத அதிகாரிகள்

பதிவு செய்த நாள்
ஏப் 11,2017 13:47




விஜயபாஸ்கரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள்

சென்னை:

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், இரண்டு நாட்களுக்கு முன், வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தி, பல்வேறு விதமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், முறைகேடாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்காக, வருமான வரித் துறை அதிகாரிகள் முன், ஆஜரானார்.

கேள்விகள் என்ன:வருமான வரித் துறை அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்ட கேள்வி விவரங்கள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளன.

1.அமைச்சராக இருக்கும் நீங்கள், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, தனிப்பட்ட முறையில் எவ்வளவு செலவு செய்தீர்கள்?

2.மொத்தமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் தங்கமணி வரையில், பலர் மூலம், 89 கோடி ரூபாய் அளவுக்கு, ஆர்.கே.நகர் மக்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் கிடைத்துள்ளன. ஆர்.கே.நகர் தேர்தலுக்காக, தினகரன் தரப்பில் இருந்து, இவ்வளவு ரூபாய் மட்டும்தான், செலவு செய்யப்பட்டுள்ளதா?

3.அரசு மருத்துவரான பாலாஜிக்கு, செப் 1, 2016ல், ஐந்து லட்ச ரூபாய் கொடுத்துள்ளீர்கள். அது எதற்காக கொடுக்கப்பட்டது?

4.பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவு பணம், இதுவரை கொடுக்கப்பட்டது? உங்களிடம் இருந்து அதிகப் பணம் வாங்கியது, அரசியல்-புலனாய்வுப் பத்திரிகையின், செய்தி ஆசிரியர் என்கின்றனரே. இது சரியா?

5.அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து சப்ளை செய்யும் கம்பெனிகளிடம் இருந்து 45 சதவீத கமிஷன் பெற்றதாக சொல்கின்றனரே..?

6.ஆர்.கே.நகர் தொகுதிக்காக தயார் செய்து வைக்கப்பட்டு பின், கொடுக்கப்பட்ட பணத்துக்கான கணக்கு-வழக்கு என்ன?

7.ஆர்.கே.நகரில் மக்களுக்கு வழங்கப்பட்ட பணம்… கறுப்புப் பணமா? நல்ல பணமா?
















8.ஆர்.கே.நகரில் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் 89 கோடி ரூபாய்க்கான வரவு-செலவு கணக்கு என்ன? அந்த பணத்துக்கு வருமான வரி கட்டப்பட்டுள்ளதா?

இப்படி நிறைய கேள்விகள், விஜயபாஸ்கரிடம், வருமான வரித் துறை அதிகாரிகள் கேட்க, அவர், அதிர்ந்து போய், பல கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

NEWS TODAY 30.12.2025