Wednesday, April 12, 2017

மந்திரி விஜயபாஸ்கர் மீதான பிடி இறுகுகிறது : குவாரியை தோண்ட துவங்கியது வரித்துறை

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான, வருமான வரித்துறை பிடி இறுகுகிறது. அவருக்கு சொந்தமான குவாரியில், மத்திய பொதுப்பணித் துறை உதவியுடன், ஆய்வுப் பணி துவங்கி உள்ளது.

புதுக்கோட்டை- மற்றும் அன்னவாசல் இடையே, திருவேங்கைவாசல் பகுதியில், 'ராசி புளூ மெட்டல்ஸ்' கல் குவாரி மற்றும், 'கிரஷர்' மையத்தை, விஜயபாஸ்கரின் பினாமி நடத்தி வருகிறார். இதில், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வருமானம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை வளையத்தில், விஜயபாஸ்கர் சிக்க, இந்த குவாரி மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. அங்கு, 7ம் தேதி, விசாரணைக்கு சென்ற அதிகாரிகள், மலை போல் குவித்துள்ள மணல் மற்றும் ஜல்லியை பார்த்து, வாயடைத்துப் போயினர். இந்நிலையில், நேற்று அங்கு வருமான வரித்துறையினர், மீண்டும் ஆய்வை துவக்கியுள்ளனர்.

500 லாரிகள் : இதுகுறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: திருவேங்கைவாசலில் உள்ள குவாரியில் குவிக்கப்பட்டுள்ள மணல், ஜல்லியை, பல ஆண்டுகளுக்கு விற்கலாம் போல தெரிகிறது. மேலும், மணல், ஜல்லி மற்றும், 'ரெடிமிக்ஸ்' போன்றவற்றின் மதிப்பை ஆய்வு செய்ய, எங்களிடம் நிபுணர்கள் இல்லை. அதனால், மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகளை உதவிக்கு அழைத்து உள்ளோம். அவர்கள், இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள மணல், ஜல்லி மற்றும் இதர பொருட்களின் மதிப்பை ஆய்வு செய்து, எங்களுக்கு அறிக்கை அளிப்பர். அதன் அடிப்படையில், ஒரு ஆண்டில் அங்கு கிடைக்கும் வருவாயை, நாங்கள்  ணக்கிட முடியும். அவ்வாறு வரும் தொகையையும், வருமான வரி தாக்கல் படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொகையையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். அதன் அடிப்படையில், வருமான வரி வசூலிக்கப்படும். மேலும், முந்தைய ஆண்டுகளுக்கான வருமானமும், அதற்காக செலுத்திய வரித்தொகையும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். அது குறைவாக இருப்பதாக தெரிந்தால், அதற்குரிய வருமான வரி வசூலிக்கப்படும். குவாரியில், 500க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகின்றன.
இவற்றுடன், 20க்கும் மேற்பட்ட, 'டாரஸ்' ரக லாரிகள் மற்றும் ஏராளமான, 'ரெடிமிக்ஸ்' உபகரணங்களும் உள்ளன. அவை, யாருக்குச் சொந்தமானவை என்றும், ஆய்வு செய்து வருகிறோம்.

வாக்குமூலம் : மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி, 'எஸ்.ஆர்.எஸ்., மைனிங் நிறுவனத்தில் விஜயபாஸ்கரும், மறைமுக பங்குதாரர்' என, வாக்குமூலம் அளித்துள்ளதால், வேறு குவாரிகளில் இருந்தும், அமைச்சருக்கு வருமானம் வருகிறதா என்பதையும், ஆராய வேண்டியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

குவாரி என்னுடையதே!: 'திருவேங்கைவாசலில் உள்ள குவாரி, எனக்குச் சொந்தமானது தான்' என, அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக் கொண்டுள்ளார். அதை குத்தகைக்கு விட்டுள்ளதாகவும், குறைந்த அளவில் தான் வருமானம் கிடைக்கிறது என்றும் விஜயபாஸ்கர், விசாரணையில் கூறியதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

மந்திரி கைதா? : வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: குவாரியை பொறுத்தவரை, எங்களது இலக்கு வருமான வரி மட்டுமே. அங்குள்ள விதிமீறல்கள் பற்றி, நாங்கள் ஆய்வு செய்யவில்லை. அதுபற்றி, சுற்றுச்சூழல் துறை தான் ஆய்வு செய்து, முடிவெடுக்க வேண்டும்.
மத்திய பொதுப்பணித்துறை ஆய்வு முடிவுகள் வந்த பின், அதுபற்றி சம்பந்தப்பட்ட துறை தொடர்பு கொண்டால், அப்போது, அதை பகிர்ந்து கொள்வது பற்றி பரிசீலிப்போம். அதனால், குவாரி விவகாரத்தில், இப்போதைக்கு கைது என்ற கோணம் எழவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! : விஜயபாஸ்கரின் குவாரிக்காக, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பமான, 'போர்வெல்' வெடியால், மலைகள் துண்டு துண்டாக பிளக்கப்படுகின்றன. அதன் அதிர்வுகளால், திருவேங்கைவாசல் வியாக புரிஸ்வர் கோவில் மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாக்கியிருப்பதாக, அப்பகுதியை சேர்ந்தவர்கள் குமுறுகின்றனர். ஆனால், காவல்துறை, மாவட்ட நிர்வாகம், புகார் தர முன்வரவில்லை; அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

- நமது சிறப்பு நிருபர் -

இன்று முதல் குடிக்க மாட்டேன்...' : காப்பு கட்டி 'குடி'மகன்கள் சத்தியம்

ஆத்துார்: போதை பழக்கத்தில் இருந்து மீள, ஆத்துார், மதுரகாளியம்மன் கோவிலில், 'இனிமேல் குடிக்க மாட்டேன்' என, 'குடி'மகன்கள் சத்தியம் செய்து, காப்பு கட்டி செல்கின்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார், வசிஷ்ட நதி வடக்கு பகுதியில் உள்ள சம்போடை வனத்தில், மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஆத்துார் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக, மது பழக்கத்துக்கு அடிமையான பலர், மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்து, அம்மன் மடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு, கையில் கயிறு கட்டி செல்கின்றனர். மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்ய வரும், 'குடி'மகன்களிடம், 'இனிமேல் குடிக்க மாட்டேன்' என, கற்பூரத்தை அணைத்து, சத்தியம் வாங்கும் கோவில் பூசாரி, அவர்களுக்கு கையில், 'சிவப்பு' நிற கயிறு கட்டி விடுகிறார்.

பூசாரி ராஜாமணி கூறியதாவது: மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்து செல்லும், 'குடி'மகன்கள், மது குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். சிலர் கையில் உள்ள கயிற்றை அவிழ்த்து விட்டு, மீண்டும் குடிக்கின்றனர். அவர்கள், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பல பெண்கள், கணவர், மகன்களை, ஆத்துாருக்கு அழைத்து வந்து, மதுரகாளியம்மன் கோவிலில், சத்தியம் வாங்கிச் செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிற்றுகிழமைகளில்
பெட்ரோல், டீசல் கிடைக்காது

புதுடில்லி: 'பெட்ரோல் பங்க்குகள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது' என, இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.




ஒவ்வொரு மாதமும், 'மன் கி பாத்' என்னும் ரேடியோ நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களி டையே, பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றி வருகிறார். கடந்த மாதம் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'வாரத்துக்கு ஒரு நாள்,


எரிபொருளில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளையடுத்து, 'அடுத்தமாதம், 14 முதல், ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை விடப்படும்' என, சி.ஐ.பி.டி., என்னும் இந்திய பெட்ரோல் டீலர் கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயண் கூறியதாவது:

எங்கள் கூட்டமைப்பின் கீழ், கேரளா, தமிழகம், கர்நாடகா மற்றும்மஹாராஷ்டிர மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகள், இயங்குகின்றன. எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி, வாரந் தோறும் ஞாயிறு அன்று, அனைத்து பங்க்குகளும்இயங்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், மற்றொரு அமைப்பான, அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கத் தலைவர் அஜய் பன்சால் கூறுகையில், ''டில்லி உள்ளிட்ட, 21 மாநிலங்களில், எங்கள் சங்கத்துக்குட் பட்ட பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்; கமிஷன் தொகை தொடர்பான பேச்சு, தொடர்ந்து நடக்கும், என்றார்.
89 கோடி கறுப்பு பணமா; கள்ள பணமா? விஜயபாஸ்கரை விடாத அதிகாரிகள்

பதிவு செய்த நாள்
ஏப் 11,2017 13:47




விஜயபாஸ்கரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள்

சென்னை:

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், இரண்டு நாட்களுக்கு முன், வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தி, பல்வேறு விதமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், முறைகேடாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்காக, வருமான வரித் துறை அதிகாரிகள் முன், ஆஜரானார்.

கேள்விகள் என்ன:வருமான வரித் துறை அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்ட கேள்வி விவரங்கள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளன.

1.அமைச்சராக இருக்கும் நீங்கள், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, தனிப்பட்ட முறையில் எவ்வளவு செலவு செய்தீர்கள்?

2.மொத்தமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் தங்கமணி வரையில், பலர் மூலம், 89 கோடி ரூபாய் அளவுக்கு, ஆர்.கே.நகர் மக்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் கிடைத்துள்ளன. ஆர்.கே.நகர் தேர்தலுக்காக, தினகரன் தரப்பில் இருந்து, இவ்வளவு ரூபாய் மட்டும்தான், செலவு செய்யப்பட்டுள்ளதா?

3.அரசு மருத்துவரான பாலாஜிக்கு, செப் 1, 2016ல், ஐந்து லட்ச ரூபாய் கொடுத்துள்ளீர்கள். அது எதற்காக கொடுக்கப்பட்டது?

4.பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவு பணம், இதுவரை கொடுக்கப்பட்டது? உங்களிடம் இருந்து அதிகப் பணம் வாங்கியது, அரசியல்-புலனாய்வுப் பத்திரிகையின், செய்தி ஆசிரியர் என்கின்றனரே. இது சரியா?

5.அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து சப்ளை செய்யும் கம்பெனிகளிடம் இருந்து 45 சதவீத கமிஷன் பெற்றதாக சொல்கின்றனரே..?

6.ஆர்.கே.நகர் தொகுதிக்காக தயார் செய்து வைக்கப்பட்டு பின், கொடுக்கப்பட்ட பணத்துக்கான கணக்கு-வழக்கு என்ன?

7.ஆர்.கே.நகரில் மக்களுக்கு வழங்கப்பட்ட பணம்… கறுப்புப் பணமா? நல்ல பணமா?
















8.ஆர்.கே.நகரில் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் 89 கோடி ரூபாய்க்கான வரவு-செலவு கணக்கு என்ன? அந்த பணத்துக்கு வருமான வரி கட்டப்பட்டுள்ளதா?

இப்படி நிறைய கேள்விகள், விஜயபாஸ்கரிடம், வருமான வரித் துறை அதிகாரிகள் கேட்க, அவர், அதிர்ந்து போய், பல கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் வாங்கியதற்கான ஆவணங்களாலும் சிக்கல்

பதிவு செய்த நாள் 12 ஏப்  2017   02:48



அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனையின் போது, சுகாதாரத் துறையில் பணி இடமாற்றம், பணி நியமனம் போன்றவற்றுக்கு, லஞ்சம் பெற்றது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில், சில ஆவணங்கள் வெளியாகி உள்ளன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அந்த ஆவணங்களில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு மருந்துகள் வாங்கியதில், 67 லட்சம் ரூபாய்; எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அலுவலக உதவியாளர் பணி நியமனங்களுக்கு, 32 லட்சம் ரூபாய்; பணியிட மாறுதல், நியமனம் மூலம், 2.38 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 2016 நவ., 1 முதல், நவ., 10 வரை பணியிட மாற்றம், நியமனங்கள் மூலம், 5.16 கோடி ரூபாய் பெற்றதாக தெரிகிறது.

சுகாதாரத் துறையில் நடந்த முறைகேட்டில் சிறு பகுதி தான் இது. கடந்த ஆட்சியிலும், அவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போதைய ஆவணம் உண்மை என்றால், அவர் எவ்வளவு பணம் சம்பாதித்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது.எனவே, துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து, தனி விசாரணை கமிஷன் மூலம், விசாரணை நடத்த வேண்டும் என, சமூக நல ஆர்வர்கள் மற்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணி நியமனம், இடமாற்றம் போன்றவற்றுக்கு, அமைச்சர் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால், அவர் பதவி இழக்க நேரிடும்.

- நமது நிருபர் -
திருமணமான 9 நாளிலேயே கணவரை கொலை செய்த புதுப்பெண் கைது; பரபரப்பு வாக்குமூலம் 


திருமணமான 9 நாளிலேயே கணவரை கொலை செய்த புதுப்பெண் கைது; பரபரப்பு வாக்குமூலம்

திருமணம் ஆன 9 நாட்களிலேயே கணவரின் தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்த புதுப்பெண் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏப்ரல் 12, 02:56 AM பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 28), சிற்ப கலைஞர். இவருக்கும் கடலூரை சேர்ந்த 17½ வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 2-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் அவரது தாய் வீட்டில் தாலி பிரித்துக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரமேஷ் மற்றும் இருவீட்டாரின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கிருந்து புதுமண தம்பதி ரமேஷின் தாய் வீட்டிற்கு வந்தனர். ரமேஷின் தாய் ராணி ரேஷன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். கணவன்-மனைவி இருவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது வீட்டில் தலைநசுங்கிய நிலையில் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீசார் விசாரணை

சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய ராணி, தனது மகன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுந்தார். ரமேஷின் மனைவியும், யாரோ கொலை செய்துவிட்டதாக கூறி கணவரின் பிணத்தை பார்த்து கதறி அழுதார். இந்த கொலை தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இருந்த ரமேஷின் மனைவி மீது போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறினார். இதனால் சந்தேகம் வலுத்து, அவரிடம் மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குழவிக்கல்லை போட்டு கொலை

அப்போது, ரமேஷின் தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் அவரது மனைவி ஒப்புக்கொண்டார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என்னை என் பெற்றோர் கட்டாயப்படுத்தி ரமேசுக்கு திருமணம் செய்துவைத்தனர். அவர் வழுக்கை தலையாக இருந்ததால் எனக்கு அவருடன் வாழ பிடிக்கவில்லை. எனது கணவரை பார்த்து என்னிடம் சிலர் கேலி செய்தனர். தாம்பத்திய வாழ்க்கையிலும் ரமேஷ் என்னை சந்தோஷப்படுத்தவில்லை. இதனால் எனக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.

நாடகமாடினேன்

எனது தாய் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நானும், ரமேசும் இந்த வீட்டிற்கு வந்துவிட்டோம். அப்போது, நாங்கள் தனியாக இருந்ததால், என்னை தாம்பத்தியத்துக்கு ரமேஷ் அழைத்தார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். இதனால் அவர் என் மீது கோபமடைந்து, என்னுடைய அம்மாவை ஆபாசமாக திட்டினார்.

இதில் ஆத்திரமடைந்த எனக்கும், அவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர், நான் அவரை சமாதானப்படுத்தினேன். இதில் ரமேஷ் அமைதியாக சென்று படுத்து தூங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். அதன்படி, வீட்டில் இருந்த கிரைண்டர் குழவிக்கல்லை எடுத்து, ரமேஷின் தலையில் போட்டேன். அதில் அவர் தலைநசுங்கி இறந்தார்.

அதன்பிறகு நான், மாமியார் ராணியிடம் வெளியே இருந்து வந்த ஒருவர் அவரை கொலை செய்ததாக கூறி நாடகமாடினேன். ஆனால், போலீசாருக்கு என்மேல் சந்தேகம் எழுந்து, என்னிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதால் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அந்த இளம்பெண் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷின் மனைவியை கைது செய்தனர். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறார் காப்பகத்தில் அடைத்தனர்.

திருமணமான 9-வது நாளிலேயே கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடு வழி

சில தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ‘தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள அனைத்து மதுக்கடைகள், கிளப்புகள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தையும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் மூடிவிடவேண்டும். 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை உள்ள நகரங்களில் இந்த தூர எல்லை 220 மீட்டராக குறைக்கப்படுகிறது’ என்றும் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள இந்த உத்தரவால், டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் கிளப்கள் மற்றும் ஏராளமான நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்களும் மூடப்பட்டுவிட்டன. இந்த அதிரடி உத்தரவால், மாநில அரசுகளின் வருமானம் மட்டுமல்ல, சுற்றுலாவும் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. நட்சத்திர ஓட்டல்களுக்கு தங்க வருபவர்கள் வசதிபடைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். இதுதவிர பல்வேறு கருத்தரங்குகள் குறிப்பாக சர்வதேச கருத்தரங்குகள், விருந்துகள், விழாக்களில் கலந்து கொள்ளத்தான் வருவார்கள்.

இவர்களெல்லாம் பார் இல்லை, மது பரிமாறப்படாது என்றால், நிச்சயம் நட்சத்திர ஓட்டல்கள் பக்கம் வரமாட்டார்கள். சர்வதேச கருத்தரங்குகள் இந்தியாவில் நடத்தப்படாமல், வேறு நாடுகளுக்கு போய்விடும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று சுற்றுலா மற்றும் ஓட்டல் தொழில் சங்கங்களின் சம்மேளனம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 90 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இவர்கள் வருகையெல்லாம் இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுவிடும். இதுமட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை இழப்பு நேரிடும் என்ற வருத்தத்தை திட்டக்குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ள நிதி அயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் பதிவு செய்துள்ளார்.

குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களால்தான் பெருமளவு விபத்துகள் ஏற்படுகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. நிச்சயமாக இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். எனவே மது குடித்துவிட்டு மோட்டார் வாகனம் ஓட்டக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், ஆங்காங்கு சாலைகளில் இதுபோல மதுகுடித்துவிட்டு யாராவது வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்டுபிடிக்க அதிரடி சோதனைகள் நடத்துவதன் மூலமாகவும் மட்டும்தான் இத்தகைய குறைபாடுகளை சரிசெய்ய முடியும். மேலும், இத்தகைய உத்தரவினால் மாநில அரசுகளின் வரிவருவாய், வருவாய் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை கருத்தில்கொண்டு, இந்த நோக்கத்தை நிறைவேற்ற வேறுவழிகளையும் மத்திய அரசாங்கம் கண்டு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்யவேண்டும். மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் சர்மா
 
, ‘இந்த உத்தரவால் சுற்றுலா தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், இதில் ஒரு நடுவழி காணப்படும்’ என உறுதி அளித்தார். இதுமட்டுமல்லாமல், மாநில அரசுகளின் வருவாயில் பெரும்பகுதி மதுக்கடைகள் மூலமாகத்தான் கிடைக்கிறது. தமிழக அரசை எடுத்துக்கொண்டால், மாநில வருவாயில் கணிசமான அளவு டாஸ்மாக் மூலம்தான் கிடைக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் அரசின் வருமானத்தில் 16.3 சதவீதம் டாஸ்மாக் மூலம்தான் கிடைத்துள்ளது. இந்த வருமான இழப்பை மாநில அரசுகளால் தாங்கிக்கொள்ள முடியாது. பல மாநிலங்களில் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து வேறுவழிகளில் செல்ல முயற்சிசெய்கிறார்கள். மாநில நெடுஞ்சாலை என்பதை மாற்றி அமைத்து பிரதான மாவட்ட நெடுஞ்சாலை, ஊரக நெடுஞ்சாலை என்ற பெயரில் கடைகளை தொடர்ந்து நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுபோல ஒரு நிலைமை ஏற்படாமல், மதுவிலக்கு கொள்கையும் வேண்டும், அரசின் வருமானமும் பாதிக்கப்படக்கூடாது என்றவகையில், ஒரு நல்ல ஏற்பாட்டை காண மத்திய அரசாங்கமும், சுப்ரீம் கோர்ட்டும் சேர்ந்து முயற்சிக்கவேண்டும்.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished On 15 Feb 2026 11:00 AM  |  Updated On 15 Feb 2026 11:00 AM New Delhi: The Union Ministry of Health and Family Welfare has informed the Lok Sabha that India currently has a total of 818 medical colleges, including AIIMS and Institutes of National Importance (INIS) across India. The details were shared in response to an Unstarred Question on February 6, 2026. Replying to queries raised by Shri Jagannath Sarkar regarding districts without government medical colleges and plans for prioritising high-population districts, Minister of State for Health and Family Welfare Shri Prataprao Jadhav said that the National Medical Commission (NMC) has reported a total of 818 medical colleges nationwide. Also Read: 18 AIIMS Functional, 4 Under Construction: Health Minister tells Parliament As per the list shared in this regard, Uttar Pradesh has the highest number of medical colleges at 88 (51 government and 37 private), followed by Maharashtra with 85 (43 government and 42 private), and Tamil Nadu with 78 colleges (38 government, 40 private). Karnataka has 72 (24 government and 48 private), Telangana has 66 (37 government, 29 private), and Rajasthan has 49 (34 government, 15 private). However, several smaller States and UTs, such as Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Chandigarh, Goa, Mizoram, Nagaland and Sikkim have only one medical college each.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished O...