Saturday, April 15, 2017

UGC releases list of over 35,000 approved journals

The University Grants Commission (UGC) has approved over 35,000 journals and the research work published in them would be considered for the purpose of promotion and direct recruitment of varsity teachers.

The teaching community and other stakeholders have been demanding a list of notified journals for a long time to set a benchmark for research and allied activities in the field of higher education.
The UGC has released the list of the approved journals, and the research work published only in them would be considered for the purpose of Career Advancement Scheme (CAS) and recruitment of teachers and other academic staff, an official said.

"The list of journals is available as a web-based database with search and browse interface on the UGC website.

Universities can recommend inclusion of additional peer- reviewed journals that are not listed in the existing list through a university-level academic journal expert committee," UGC secretary Jaspal Sandhu, said in a letter addressed to vice-chancellors of all universities.

The Commission has asked the varsities to send their recommendations before May 15.
Listed journals are indexed in Web of Science, Scopus and Indian Citation Index. Journals covered in a selected indexing and abstracting services have been also added to the approved list.

The list is broadly categorised into three streams Science, Social Sciences and Arts and Humanities.
The direct recruitment of teachers and other academic staff is carried out under the UGC (Minimum Qualifications for Appointment of Teachers and other Academic Staff in Universities and Colleges and Measures for the Maintenance of Standards in Higher Education) (4th Amendment), Regulations, 2016.
(This article has not been edited by DNA's editorial team and is auto-generated from an agency feed.)

தலைவர்கள் பிறந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறையில்லை'.

தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் ஆகியவற்றுக்காக, பள்ளிகளுக்கு இனி விடுமுறை அளிக்கப்பட மாட்டாது' என, உ.பி., அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 

அம்பேத்கரின் 126வது பிறந்த தினம், நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது. நாட்டுக்காகவும், சமூகத்துக்காகவும் உழைத்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாள் ஆகியவற்றுக் காக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது, சிறிதும் தேவையற்றது.ஏனெனில், பல குழந்தை களுக்கு, பள்ளிக்கு விடுமுறை அளிக் கப்பட்டது ஏன் என்பது கூட தெரியவில்லை.

தலைவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங் களை அறிந்து, குழந்தைகள் ஊக்கம் பெற வேண்டும். அதற்கு அவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில், பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தி, அவர்களை பற்றி குழந்தைகளிடம் தெரிவிக்க வேண்டும்.அம்பேத்கர் வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள், பலருக்கு ஊக்க சக்தியாக அமைந்தது. அதனால், இனி, தலைவர்களின் பிறந்த நாள்,நினைவு நாள் ஆகியவற்றுக்கு, உ.பி.,யில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட மாட்டாது.

மேலும், பள்ளிகள், ஆண்டுக்கு, 220 நாட்கள் பணி யாற்ற வேண்டும் என, விதிகூறுகின்றன. ஆனால், எந்த பள்ளியும், 220 நாட்கள் பணியாற்றுவது இல்லை. இதற்கு, அதிக விடு முறைகள் தான் காரணம். இதனால், பாடத்தை முடிக்க முடியாமல், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

எந்த மதத்துக்கும், ஜாதிக்கும், மாநில அரசு, விரோதமானதல்ல. வளர்ச்சியில் பின்தங்கி யுள்ள, சமூகங்களைச் சேர்ந்த மக்களை முன் னேற்றுவதே அரசின் லட்சியம். என் ஆட்சியில், பாரபட்சம், தீண்டாமை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.இவ்வாறு அவர் பேசினார்.

நேரத்தை வீணடிக்கலாமா?

By எஸ். ஸ்ரீதுரை | Published on : 15th April 2017 01:15 AM

தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று சேலம் மாநகரில் புதிய நகைக்கடை ஒன்றின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. நகைக் கடையைத் திறந்து வைக்க வருகை தந்தவரோ சமீப காலமாகப் பல திரைப்படங்களில் நடித்துப் பிரபலமாகியுள்ள இளம் கதாநாயகி ஒருவர்.

பிரபலங்களைப் பார்க்க முண்டியடிப்பது நம் நாட்டில் சகஜம்தானே? அதுவும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்
என்றால் பொது மக்கள் அவரை ஒரு முறை தரிசித்து ஜென்ம சாபல்யம் அடைய முட்டி மோதுவது ஒன்றும் புதிதில்லையே. நகைக் கடையைத் திறந்து வைக்க வருகை தந்த இளம் நடிகையைப் பார்க்கவும் நூற்றுக் கணக்கில் இளைஞர்கள் கூடி விட்டனர்.

நிகழ்ச்சி நடந்ததோ சேலம் நகரின் பிரதான சாலைகளில் ஒன்று (ஓமலூர் சாலை). ஆயிரக்கணக்கான வாகனங்கள் விரையும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம். பல அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் மட்டுமின்றி சேலம் மத்தியப் பேருந்து நிலையமும் அமைந்துள்ள பரபரப்பான இடம்.
சொகுசு கார் ஒன்றில் வந்து இறங்கிய நடிகையை எப்படியாவது அருகில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று முண்டியடித்த இளைஞர்கள் கூட்டத்தினால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. வேறு வழியின்றி காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு ரசிக இளைஞர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் சிரமப்பட்டுக் காரில் இருந்து இறங்கிய நடிகை வேகமாக நகைக்கடையின் வாசலை அடைந்து அதனை வெற்றிகரமாகத் திறந்து வைத்து விட்டார்.

நகைக் கடையைத் திறந்து வைத்த நடிகை, உடனடியாக கடைக்குள்ளே சென்று விட்டார். அவரை நன்றாக தரிசிக்க முடியாத அதிருப்தியில் இருந்த இளைஞர்களோடு, நடிகை வந்திருக்கும் தகவலைத் தாமதமாக அறிந்துகொண்டு ஓடோடி வந்த ரசிகர் கூட்டம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு வந்தது. சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. ஆம்புலன்சுகள், பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனமும் நகர முடியாத நிலை.
ரசிகர் கூட்டத்தை உடனடியாகக் கலைந்து செல்லும் படி காவல் துறையினர் அறிவுறுத்தியும் நிலைமை சீராகவில்லை. நடிகையை ஒரு முறை ஆசைதீரப் பார்த்துவிட்டுத் தான் கலைந்து செல்வோம் என்ற பிடிவாதம்.

இப்போது கடையிலிருந்து வெளியேறிய நடிகை, கடைவாசலில் நிறுவப்பட்டிருந்த ஒரு மேடையின் மீது ஏறி, ரசிகர்களைத் திருப்திப்படுத்த ஒரு நடனம் ஆடுகிறார். நடிகை நடனம் ஆடுவதைப் பார்த்து மேலும் தன்னிலை மறந்த இளைஞர்கள் பலர் அந்த மேடையை நோக்கி வெறிகொண்டு ஓட, குறுக்கே ஒரு கயிறு கட்டிக் காவல் துறையினர் அவர்களைத் தடுக்க வேண்டியதாகிறது.

ஒரு வழியாக மேடையிலிருந்து இறங்கிய இளம் நடிகை மிகுந்த சிரமப் பட்டுத் தனது காரில் ஏறிக் கிளம்பியதுதான் தாமதம் - அந்தக் காரைத் துரத்தியபடி இளைஞர்கள் பலர் ஓடுகிறார்கள். வேறுவழியின்றி, காவல் துறையினர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ரசிக இளைஞர்கள் கலைந்து ஓட அனைத்தும் முடிகிறது. ஒருவழியாக அந்தப் பிரதான சாலையில் போக்குவரத்து சீராகிறது. பொதுமக்களும் காவல் துறையினரும் பெருமூச்சு விடுகின்றனர். சுபம்.

என்ன ஒரு வெட்கக் கேடான சம்பவம்.
திரைத் துறையினரைப் பொது மக்கள் திரண்டு வந்து பார்த்துச் செல்வது ஒன்றும் நமக்குப் புதிய விஷயம் இல்லைதான்.
சிவாஜி, எம்.ஜி.ஆர். காலத்தில் திரளாத கூட்டங்களா. அவ்விருவரும் திரைத்துறை ஜாம்பவான்களாக இருந்தது மட்டுமின்றி, பெரும் அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பிரசாரகர்களாகவும் நமது மாநிலத்தை வலம் வந்தவர்கள்.

இன்று வரையிலும் திரை நட்சத்திரங்கள் என்றாலே நம்மவர்களுக்கு ஒரு பிரமிப்பு இருக்கத்தான் செய்கிறது. நடிக நடிகைகளை மிக அருகில் சென்று பார்ப்பதும், முடியுமென்றால் அவர்களை ஒருமுறை தொட்டுவிடுவதும், பிறகு அதனைத் தமது நட்பு வட்டாரத்தில் ஒரு சாதனையாகப் பிரகடனப் படுத்திக் கொள்ளுவது நம்மைப் பீடித்த ஒரு மனநோயாகவே இருந்து வருகிறது.

நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம். அவரவர் துறையில் அவர்களுக்குத் தெரிந்த வகையில் உழைத்துப் பணம் சம்பாதித்து வருபவர்கள்.

உண்மையாகச் சொல்லப்போனால், தத்தமது தொழிலில் கடினமாக உழைத்துப் பொருள் ஈட்டித் தமது குடும்பங்களைக் காப்பாற்றும் அனைவருமே கதாநாயக-கதாநாயகிகளே. நிஜ வாழ்க்கையில் பொறுப்புடன் உழைத்துக் கடைமையைச் செய்து வருபவர்களை விடவும் கனவுலகத்தில் உழைத்துப் பணமீட்டுபவர்கள் ஒன்றும் மேம்பட்டவர்கள் அல்லர். அவர்கள் நம்மை விடப் பிரபலமான முகங்கள் அவ்வளவே.
காலம் காலமாகத் திரைப் பிரபலங்களைக்காண மக்கள், குறிப்பாக இளம் ரசிகர்கள் கூடியதைக் கண்டிருக்கிறோம்.
ஆனாலும், சேலம் மாநகரில் கூடிய இந்தக் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே கவலையளிக்கிறது.

சென்னைப் பெருமழை, கடலில் எண்ணை கலப்பு போன்ற நிகழ்வுகளில் நிவாரணப் பணிகளுக்காக இளைஞர்கள் பலர் களம் இறங்கியதைக் கொண்டிருக்கிறோம்.

காவிரிப் பிரச்சினை, ஜல்லிக்கட்டு, மீத்தேன் வாயு திட்ட எதிர்ப்பு, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு, புதிய மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு என்று பல்வேறு சமூகப் பிரச்சினகளில் ஆயிரக்கணக்கில் களமிறங்கி அறவழியில் போராடிய - போராடி வருகிற இளைய சமுதாயத்தினரைக்கண்டு வியந்திருக்கிறோம்.

இதோ ஒரு புதிய பொறுப்புள்ள சமுதாயம் மலர்ந்திருக்கிறது என்று இறுமாந்திருக்கிறோம். இந்தப் பெருமிதங்களையும் நம்பிக்கைகளையும் பொடிப்பொடியாக்கும் வகையில், இழந்தால் திரும்பப் பெறமுடியாத தங்களது காலத்தையும் ஒரு திரைப்பட நடிகையைத் தரிசிப்பதற்காக வீணடித்த இளைஞர்களைப் பார்க்கையில் நம்மால் பரிதாபம்தான் கொள்ள முடிகிறது.
பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராடி விழுப்புண் பெற்றால் பாராட்டலாம். ஒரு கதாநாயகியை நேரில் காண்பதற்காகத் தடியடி பெற்றதை என்னென்று சொல்வது?













சோதனை மேல் சோதனை: தமிழகத்தில் தொடரும் பரபரப்பு

By திருமலை சோமு | Published on : 11th April 2017 09:41 PM

தனி மனித வாழ்விலும் சரி ஒரு நாட்டிலும் சரி மாற்றம் என்பது எதிர்பாராமல் நிகழ்ந்து விடும். அப்படி எதிர்பாராமல் நிகழ்ந்த ஒரு மரணம் தமிழகத்தை எந்த அளவுக்கு புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் தமிழகம் சந்தித்து வரும் போராட்டங்கள், அரசியல் கள நிலவரங்கள் எல்லாம் அசாதாரண சூழ்நிலையில் இருப்பதகாவே பார்க்கப்படுகிறது. இது உண்மையில் யாருக்கான சோதனை காலம் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சந்தித்த தமிழகம் இன்று வரை பலவேறு பிரச்னைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதையே பார்க்க முடிகிறது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பிழப்பின் போது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கையில் தொழிலதிபரான சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் அதில் 136 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 34 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டாக கிடைத்தது. மேலும் 177 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளும் கிடைத்தன.



இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த பரபரப்பை அடுத்து கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்காக சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தன்னெழுச்சியான இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வகையில் தமிழக அரசால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து நெடுவாசல் கிராமத்தை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனை தொடர்ந்து மத்திய , மாநில அரசை சார்ந்தவர் மக்களின் விருப்பம் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேற்றப்படாது என்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிரான போராட்டம் தற்காலிகாமாக நிறுத்தப்படுவதாக மக்கள் அறிவித்தனர்.



அந்த போராட்ட அலையை தொடந்து வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 29- வது நாளாக தமிழக விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத மாநில அரசோ ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய பணத்தை விதைக்க தொடங்கியது. மத்திய அரசோ மாற்றன் தோட்டத்தை மாடு மேய்ந்தால் என்ன ஆடு மேய்ந்தால் என்ன என்ற மெத்தன போக்கில் இருக்கிறது.

பிரதமரை சந்திக்க வைப்பதாக 8 விவசாயிகளை அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவர்களிடம் மனுவை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் சென்ற ஒரு நடிகையை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு விவசாயிகளை சந்க்க நேரம் ஒதுக்க முடியாதது ஏன் என்று போராட்டக் களத்தில் இருந்து ஒரு குரல் எழுவதை நாம்மால் கேட்க முடிகிறது. ஆனால் பிரதமரின் மனதில் குரல் மட்டும் இந்த ஏழை விவசாயிகளின் செவிகளுக்கு எட்டவில்லை என்பது வருத்தமான ஒன்றுதான்.



இப்படி போராட்டக் களமாக சென்று கொண்டிருக்கும் சூழலில்தான் ஆர்.கே.நகர் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியது. எப்படியும் வென்றுவிடுவோம் என நம்பிக்கையோடு ஒரு கூட்டம் வென்றே ஆக வேண்டும் என்று கங்கனம் கெட்டிக் கொண்டு பணியாற்றிய ஒரு கூட்டம் இதற்கிடையில் தான் காகிதங்களாக பறக்கும் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு சென்றது.

இதையடுத்து மீண்டும் வருமான வரித்துறையினர் அதிரடியாக களம் இறங்க அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியது. ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது ஒருபக்கம் இருக்க இந்த சோதனை வேதனைகளுக்கெல்லாம் பின்னணியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க இருப்பதாக கூறப்படுகிறது.



குறிப்பாக தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி எளிதில் கட்சிக்கு அடித்தளம் விடலாம் என்பதுதான் பா.ஜ.க.வின் கணக்கு. இதற்கான வேலைகளை பாஜக கடந்த நவம்பர் மாதமே தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ தமிழத்தில் அரசின் செயல்பாடுகள் சீராக இருப்பதாக தெரியவில்லை. அதற்கு உதாரணம் தான் பல்வேறு போராட்டங்களும், ஆர்ப்பாடங்களும். எந்த போராட்டத்திற்கும் இந்த எடப்பாடி அரசு முறையான நடவடிக்கை எடுக்க வில்லை என்பதே எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு.

பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ

By DIN | Published on : 15th April 2017 04:07 AM

தொடக்க விழாவில் பங்கேற்ற இந்தியாவுக்கான பெண் தொழில்முனைவோர் தூதர் மதுசரண், எம்.ஆட்டோ நிறுவனர் மன்சூர் அலிகான் ஆகியோருடன் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்.

பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ, தமிழகத்தில் முதல் முறையாக "எம்.ஆட்டோ' என்ற பெயரில் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தியாவுக்கான பெண் தொழில்முனைவோர் தூதர் மதுசரண் முதல் கட்டமாக 50 ஆட்டோக்களைத் தொடங்கி வைத்தார்.

இது குறித்து "எம்.ஆட்டோ' நிறுவனர் ஏ.மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறியது: நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் ஆட்டோக்களும், தமிழகத்தில் 3 லட்சம் ஆட்டோக்களும் ஓடுகின்றன. சென்னையில் 75,000 ஆட்டோக்கள் உள்ளன. போக்குவரத்து தேவையில் முக்கியப் பங்காற்றி வரும் இந்தத் தொழிலை, அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளோம்.

கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்குப் பயிற்சிகள் வழங்கி, ஓட்டுநர் உரிமம் எடுத்துக் கொடுத்து உதவுகிறோம். இதன் மூலம் அந்தப் பெண்கள் தொடக்கத்தில் தினமும் ரூ.500 முதல் ரூ.800 வரை சம்பாதிக்க முடியும்.

எப்படித் தொடர்பு கொள்வது? ஆட்டோவில் பயணிக்க தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் இந்த சேவை விரைவில் தொடங்கப்படும். சென்னையில் உள்ள மக்கள் இந்த ஆட்டோ சேவையைப் பெற காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை
65103 65103 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதைத் தொடர்ந்து வரும் மே 1-ஆம் தேதி முதல் 4321 4321 என்ற எண்ணில் கால் சென்டரையும், எம்.ஆட்டோ செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு சேவையைப் பெறலாம்.
அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்த வேண்டும் என்பது குறித்து பிரமாண்ட விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.
பயணிகளின் நன்மதிப்பைப் பெறுவோம்: இது குறித்து பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் மாலா, மகாலட்சுமி ஆகியோர் கூறுகையில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் எங்களாலும் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்து காட்டுவோம்.

இதன் மூலம் எங்களின் தேவைகளை நாங்களே கவனித்துக் கொள்ள முடியும். கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்களின் நன்மதிப்பைப் பெறுவதுடன் அவர்களுக்கு உரிய பயண பாதுகாப்பை வழங்குவோம் என்றனர்.

விழாவில் இந்தியாவுக்கான பெண் தொழில்முனைவோர் தூதர் மதுசரண், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி கம்ரான்கான், சமூக சேவகர் விஜயலட்சுமி தேவராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டினருக்கான பி.இ. கலந்தாய்வு அறிவிப்பு

By DIN  |   Published on : 15th April 2017 03:37 AM  |  

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாட்டினருக்கான பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 28, 29 ஆகிய இரு தினங்கள் நடத்தப்பட உள்ளது.

இதில் வெளிநாட்டினருக்கான கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதியன்றும், வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் குழந்தைகள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 29-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசித் தேதியாகும். இதுகுறித்த மேலும் விவரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

வருமான வரித் துறை சோதனை விவகாரம்: சிபிஐக்கு மாற்ற உள்துறை தீவிர பரிசீலனை

By DIN  |   Published on : 15th April 2017 01:05 AM  |
cbi-office
தமிழகத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்திய விவகாரத்துக்கு பிந்தைய விசாரணையை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்ற மத்திய உள்துறை பரிசீலித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 7-ஆம் தேதி சுமார் 50 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள், ரொக்கம், நகை போன்றவற்றின் விவரங்களை வருமான வரித் துறையினர் சேகரித்து அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சோதனை நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.5.50 கோடி ரொக்கம் புதிய ரூ.2000 நோட்டுகளாக இருப்பதால் அவ்வளவு பெரிய தொகை தனி நபர்களின் வீடுகளில் எவ்வாறு பதுக்கப்பட்டது? இந்தத் தொகை யார் மூலம் எங்கிருந்து வந்தது? என்பது தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், சோதனையின் போது சுமார் ரூ.90 கோடி அளவிலான பரிவர்த்தனைக்கான குறிப்புகளும் வருமான வரித் துறையினருக்குக் கிடைத்துள்ளது.

இந்தச் சோதனை விவரத்தை சென்னையில் உள்ள மத்திய அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை மண்டல கிளை அதிகாரிகளுடன் வருமான வரித் துறையினர் கடந்த புதன்கிழமை பகிர்ந்து கொண்டனர்.

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்குப் பதிலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ரூ.2,000 நோட்டுகள் பதுக்கல் விவகாரத்தை பிரத்யேகமாக சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே, அமைச்சர், அதிகாரிகள், தனி நபர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் தொடர்புடைய விவகாரத்தில் வரி ஏய்ப்பு நடந்ததாகக் கருதப்படும் நிகழ்வை மட்டும் வருமான வரித் துறை விசாரிக்க முடிவு செய்துள்ளது.

இதில் ரூ.2,000 புதிய நோட்டுகள் கிடைத்தது தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மேலிடத்தை வருமான வரித் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்துக்கு வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய உள்துறையை மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...