Saturday, April 22, 2017

60 வயதானால் 50 சதவீத கட்டணம்

பதிவு செய்த நாள்22ஏப்
2017
00:00

புதுடில்லி: மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்டணத்தை பெறும் வயது வரம்பை, 63ல் இருந்து, 60 ஆக குறைத்துஉள்ளது, 'ஏர் இந்தியா' விமான நிறுவனம்.இது குறித்து, ஏர் இந்தியா, நேற்று வெளியிட்டுள்ள செய்தி:விமான பயணத்துக்கான மூத்த குடிமக்களுக்கு, பயணக் கட்டணத்தில், 50 சதவீதம் சலுகை பெறுவதற்கான வயது, 63ல் இருந்து, 60 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு விமான பயணம் செய்வோருக்கு, இந்த சலுகை அளிக்கப்படும். வயது குறித்த தகுந்த ஆதாரத்துடன் இந்த சலுகையை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துணைவேந்தர்களுக்கு மீண்டும் 'செக்' : இஷ்டத்துக்கு நியமனம் செய்ய தடை
பதிவு செய்த நாள்22ஏப்
2017
01:10

மதுரை: 'துணைவேந்தர் பணிக்காலம் முடியும் மூன்று மாதங்களுக்கு முன்பல்கலையில் எவ்வித பணி நியமனங்களும் மேற்கொள்ளக்கூடாது' என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 24 அரசு பல்கலைகள், 2500க்கு மேற்பட்ட அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. 'இவற்றில் 2017 ஏப்.,௧௨ க்கு பின் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை மறுஉத்தரவு வரும் வரை நிரப்பக்கூடாது' என உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவிட்டார்.இதன் பின்னணியில், 'சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் 1,031ஆசிரியர், 4,722 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உபரியாக உள்ளன. இவற்றில் முறையே 545 மற்றும் 2,643 பணியிடங்களை தமிழகத்தில் உள்ள பல்கலை, அரசு, உதவி பெறும் கல்லுாரிகள், பாலிடெக்னிக்கு களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி முடியும் வரை புதிய பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.இதனால், பெரும்பாலான துணைவேந்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்து மீள்வதற்குள், 'துணைவேந்தர் பதவி காலம் முடியும் நிலையில், கடைசி மூன்று மாதங்களில் பணிநியமனம் செய்யக்கூடாது' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:பல்கலைகளில் பணி நியமனங்களில் பல லட்சம் ரூபாய் பேரம் நடக்கிறது. இதன் பின்னணியில் பெரும்பாலும் துணைவேந்தர்கள் உள்ளனர். இஷ்டத்திற்கும் பணி நியமனம் நடந்ததால்தான், அண்ணாமலை பல்கலை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான உபரி பணியிடங்களை மற்றும் நடவடிக்கையால், அரசு கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.ஒரு பல்கலையில் எத்தனை பணியிடங்களை நிரப்பலாம் என்பதை பொறுத்தே, துணைவேந்தர் பதவிக்கு மறைமுகமாக விலை நிர்ணயிக்கப்படுகிறது.'கேட்டதை' கொடுத்து துணைவேந்தர் பதவியை பிடித்து ஒன்றுக்கு இரண்டு மடங்காக 'கல்லா' கட்டிக்கொள்ளும் நடைமுறை இருப்பதால்தான் உயர்கல்வி தரம் கேள்விக்குறியாகி வருகிறது.மேலும், 'துணைவேந்தர் பதவிக்காலம் முடியும் கடைசி மூன்று மாதங்களில் தான் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன' என்ற தகவலும் உள்ளது.இதனால்தான் இதுபோன்ற தடைகள் அடுத்தடுத்து விதிக்கப்படுகிறது. உயர்கல்வியில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், துறை செயலர் சுனில்பாலிவலின் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது; இதுதொடர வேண்டும்.இவ்வாறு கூறினார்.
இ - சேவை மையங்களில் புதிய ரேஷன் கார்டு
பதிவு செய்த நாள்21ஏப்
2017
23:37




சென்னை: அரசு இ - சேவை மையங்களில், புதிதாக ரேஷன் கார்டு பெறவும், ரேஷன் கார்டில் திருத்தம் செய்யவும், 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அரசு இ - சேவை மையங்கள் உள்ளன.இம்மையங்களில், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற, வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும், புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், மொபைல் எண் மாற்றம் போன்ற சேவைகளை, 24ம் தேதி முதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'மொபைல் ஆப்'பில் ஊழியர் விபரம் - உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது வினியோக திட்டத்துக்கு, 'tnepds' என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், ரேஷன் கடையில் பதிவு செய்த, மொபைல் போன் எண்ணை பதிவிட்டதும் செயல்பட துவங்கும். ரேஷன் ஊழியரின் பெயர், மொபைல் போன் எண், உணவுப் பொருட்கள் இருப்பு, கடை விடுமுறை உள்ளிட்ட விபரங்கள், மொபைல் ஆப்பில் இருக்கும். வேலை நேரத்தில் ஊழியர்கள் கடையை விட்டு, எங்கும் செல்லக் கூடாது; அவ்வாறு சென்றிருந்தால், மக்கள், மொபைல் ஆப்பில் உள்ள, போன் எண் மூலம் ஊழியர்களை தொடர்பு கொள்ளலாம். அது குறித்த புகாரையும், போன் மூலமே தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நேர்மையான அதிகாரிகளுக்கு அரசின் ஆதரவு கூடுதலாக உண்டு’ மோடி பேச்சு

‘நேர்மையான அதிகாரிகளுக்கு அரசின் ஆதரவு கூடுதலாக உண்டு’ மோடி பேச்சு
ஏப்ரல் 22, 05:30 AM

புதுடெல்லி,

நேர்மையான அதிகாரிகளுக்கு அரசின் ஆதரவு கூடுதலாக உண்டு என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி கூறினார்.குடிமைப்பணிகள் தினம்

சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய குடிமைப்பணி அதிகாரிகள் (ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்) அணியின் மத்தியில், முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல் உரை ஆற்றிய தினம் (1947, ஏப்ரல் 21–ந் தேதி), குடிமைப்பணிகள் தினமாக 2006–ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் 11–வது குடிமைப்பணிகள் தினம் டெல்லியில் நேற்று நடந்தது. சாதனை படைத்த குடிமைப்பணி அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருதுகளை வழங்கி பேசினார்.கூடுதல் ஆதரவு

அப்போது அவர் கூறியதாவது:–

இந்த நாள், மறு அர்ப்பணிப்பு நாள். குடிமைப்பணி அதிகாரிகள் தங்கள் பலம், திறமைகள், சவால்கள், பொறுப்புகள் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள்.

இப்போது நிலவுகிற சூழல்கள், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல்களில் இருந்து மாறுபட்டதாகும். இனி வரும் ஆண்டுகளில் இந்தச் சூழல்கள் இன்னும் மாற்றம் பெறும்

நேர்மையான, உண்மையான ஈடுபாடுள்ள குடிமைப்பணி அதிகாரிகளுக்கு எனது நிர்வாகம் கூடுதல் ஆதரவு தர விருப்பம் கொண்டுள்ளது. இது அதிகார வர்க்கத்துக்கான நேரம்.விரைவான முடிவு

நீங்கள் விரைவான முடிவுகளை எடுக்கலாம். அரசு அதிகாரிகள் மீதான பொறுப்புகள் அதிகரித்துள்ளது. இது வேலைகளில் மட்டுமல்ல, சவால்களிலும்தான்.

அரசியல் தலைமை சீர்திருத்தங்களை கொண்டு வரலாம். ஆனால் அதிகார வர்க்கம்தான் செயல்படுத்த வேண்டும். அதில் பொதுமக்களின் பங்களிப்பு மாற்றத்தை கொண்டு வரும். எல்லோரையும் ஒரே அலைவரிசையில் கொண்டு வர இருக்கிறோம். அதன் பின்னர் நாம் நல்ல பலன்களை அடைய முடியும்.நான் உங்களுடன் இருக்கிறேன்

அதிகாரிகள் சரியான முடிவுகளை எடுக்கிறபோது, அதனால் பாதிப்பு வருமோ என நினைக்க தேவையில்லை. நேர்மையான நோக்கத்துடனும், உண்மையுடனும், மக்கள் நலனுக்காக ஒரு முடிவு எடுத்தால், உங்களை நோக்கி இந்த உலகின் எந்தவொரு சக்தியாலும் விரல்களை உயர்த்த முடியாது.

என்ன நடந்தாலும், நான் உங்களுடன் இருக்கிறேன்.2022–ம் ஆண்டுக்குள்...

நீங்கள் வேலை செய்கிற பாணியையும், சிந்திக்கும் பாங்கையும் மாற்றிக்கொண்டால் நல்லது.

மூத்த அதிகாரிகள் நமக்கு எல்லாம் தெரியும் என்ற உணர்வில் இருந்து கொஞ்சம் விலகி இருங்கள். இளைய அதிகாரிகளின் யோசனைகளை கேட்டு செய்யுங்கள். அதிகாரிகள் ஏதோ பள்ளத்தில் இருந்து வேலை செய்வது போல தனிமையில் செய்ய வேண்டாம். அனைவரும் ஓரணியாக செயல்படுங்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகள்படி இந்தியாவை 2022–ம் ஆண்டுக்குள் உருவாக்குவதற்கு குடிமைப்பணி அதிகாரிகள் சூளுரை எடுத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
தலையங்கம்
‘ஆமாம் சாமி’ போடாதீர்கள்


ஏப்ரல் 22, 02:00 AM

‘ஜனநாயகம் என்ற மாளிகை’ சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம், பத்திரிகை ஆகிய 4 தூண்களால்தான் தாங்கப்படுகிறது. ஒவ்வொரு அமைப்பும் தனித்தனி அங்க மாக தனக்குரிய தனித்துவத்துடன் செயல்படுகிறது என்றாலும், சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களா னாலும் சரி, நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளா னாலும் சரி, பத்திரிகைகள் தரும் ஆலோசனைக ளானாலும் சரி, அவற்றை செயல்படுத்த வேண்டிய மாபெரும் பொறுப்பு நிர்வாகத்திடம்தான் இருக்கிறது. அதனால்தான், சர்தார் வல்லபாய் பட்டேல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணிகளான சிவில் சர்வீசஸ் பணிகளை இரும்புச் சட்டம் என்று வர்ணித்தார். பல நேரங்களில் அரசு ஊழியர்களும், அதிகாரவர்க்கங்களும், அரசியல்வாதிகளின் சட்டத்துக்கு புறம்பான ஆணைகளுக்கு அடிபணிந்து செல்வதால்தான் நிர்வாகத்தில் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. ஊழலுக்கு வித்திடுகின்றன.

இந்திய குடிமைப்பணிகள் தினம் என்று அழைக்கப் படும் சிவில் சர்வீசஸ் தினத்தில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, ‘சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு ‘‘ஆமாம் சாமி’’ போடுபவர்களாக அதாவது, ‘யெஸ் மேன்’களாக இருக்கக்கூடாது. அரசியல் வாதிகள் ஏதாவது தவறான உத்தரவுகளை பிறப்பித்தால், தைரியமாக அதை செய்யமுடியாது என்று கூறி, அதற்கான விதிகளை எடுத்துக்காட்டுங்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படாதீர்கள். அரசியல்வர்க்கம் தவறு இழைக்கும்போது, அவர்கள் தவறை சட்டப்பூர்வமாக தவறு என்று சுட்டிக்காட்டி, அந்த கோப்புகளில் கையெழுத்து போடாதீர்கள். அரசின் பொதுவான நலனையும்,
ஏழை மக்களின் நலனையும் மனதில் வைத்துக் கொண்டு எந்த முடிவையும் எடுப்பதில் தயக்கம் காட்டாதீர்கள். பாரபட்சம் இல்லாமல், உங்களுக்கு ‘பொறுப்பு கடமை’ இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்’ என்று அறிவுரை கூறினார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற இந்திய ஆட்சிப்பணிகள் அதிகாரிகள் எப்படி செயல்படு கிறார்களோ, அதை பின்பற்றித்தான் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் தங்கள் பணியை ஆற்று வார்கள். பல அதிகாரிகள் தாங்கள் நேர்மையாக இருக்கும் போது, திறமையாக இருக்கும்போது, முதல்–அமைச்சரோ, அமைச்சர்களோ மற்றும் அரசியல் ரீதியான தலைவர்களோ சொல்வதற்கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போடாமல் தைரியமாக பணியாற்றிய பல உதாரணங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது.

பெருந்தலைவர் காமராஜர் முதல்–அமைச்சராக இருந்தபோது, திருநெல்வேலியில் ஒரு காங்கிரஸ்காரரின் சினிமா தியேட்டரை காலையில் திறந்தார். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த பசுபதி இதை சற்று நேரத்துக்கு முன்பு காமராஜரின் கவனத்துக்கு கொண்டு சென்று, ‘ஐயா இந்த தியேட்டரில் சில அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை’ என்று மிக துணிச்சலோடு தெரிவித்தார். உடனே காமராஜர், ‘நான் திறந்து வைக்கிறேன்; நீங்கள், உங்கள் கடமையைச் செய்யுங்கள்’ என்று கூறினார். அதன்படி காமராஜர் காலையில் தியேட்டரை திறந்து வைத்தார். அடுத்த சில மணி நேரத்தில் மாவட்ட கலெக்டர் பசுபதி அந்த தியேட்டருக்கு ‘சீல்’ வைத்தார். இப்படிப்பட்ட முன்உதாரணங்களை இப்போதுள்ள சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் பின்பற்றினால், காலம்காலமாக அந்த அதிகாரிகளின் பணி மக்களால் போற்றப்படும், பின்பற்றப்படும். நேர்மையும், துணிச்சலும், ஊழலும் இல்லாதவகையில், உயர் அதிகாரிகள் செயல்பட வேண்டும். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கேப்டன் நாகராஜன் எப்போதும் சொல்வதுபோல, ‘ஆளும்வர்க்கம் சொல்வதையெல்லாம் கேட்கவில்லை என்று இடமாறுதல் செய்தாலும், அவர்களுக்கு பின்னால் இருக்கிற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அடைமொழிகளை அவர்களைவிட்டு யாராலும் எடுக்க முடியாது. உச்சகட்டமாக ஒரு பணியி லிருந்து இன்னொரு பணிக்குத்தான் மாற்ற முடியுமேதவிர, வேறு எதுவும் செய்யமுடியாது. தவறுக்கு துணை போக மாட்டோம்’ என்ற உறுதியை அனைத்து சிவில் சர்வீசஸ் அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டால், நிர்வாகம் தூய்மையாக இருக்கும், வேகமாக செயல்படும்.

Friday, April 21, 2017

நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா?... அப்ப துடைப்பத்தால் அடி வாங்குங்க!

 ஓசூரை அருகே உள்ள தர்மராஜா கோயில் திருவிழாவில் துடைப்பம், முறத்தால் அடித்து நூதன முறையில் வழிபாடு நடத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி: ஓசூரை அடுத்த டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள தர்மராஜா சுவாமி கோயில் தேர்த் திருவிழாவில் துடைப்படம், முறத்தால் அடித்து வழிபாடு நடத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. இந்த கிராமத்தில் உள்ள பழமையான தர்மராஜா சுவாமி கோயில் உள்ளது. இங்கு தேர்த் திருவிழா மற்றும் மஞ்சு விரட்டு விழா, கடந்த, 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

. அதைத்தொடர்ந்து, சித்திரை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தர்மராஜா சுவாமி மற்றும் திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று தேரோட்டம் நடந்தது. 377-ஆம் ஆண்டாக நடைபெற்ற தேர் திருவிழாவில் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. தேர் திருவிழாவின்போது துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியின்போது பெண் வேடமணிந்து வந்த பூசாமி சாமி ஆடியவாறு பழைய துடைப்பம், முறத்தால் அடிவாங்குவதற்கு கூடி நின்ற பக்தர்கள் தலையில் அடித்தார். இதில் சிறியவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் அடிவாங்கினர்.

 பூசாரியிடம் பழைய துடைப்பம் முறத்தால் அடிவாங்கினால் பேய், காத்து கருப்பு அண்டாது. நினைத்த காரியங்கள் கைகூடும். திருமணம் தடை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கொழிக்கும் என்பது கிராமமக்களின் நம்பிக்கையாகும். இதைத் தொடர்ந்து இன்று திரௌபதி அம்மன் அக்னி குண்ட தீமிதி பிரவேசம், பூங்கரகம், வாண வேடிக்கை, சிலம்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/different-temple-function-done-krishnagiri-280365.html

அமேஸான் அறிமுகம் செய்துள்ளது புதிய அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக்

By DIN  |   Published on : 20th April 2017 05:42 PM  |
amazon_fire_tv_stick
புதிய அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் ஒன்றை அமேஸான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது இதன் விலை ரூபாய் 3,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் மூலம் 
அமேஸான் பிரைம் வீடியோக்களை எளிதாக கண்டு களிக்கலாம். ரூபாய் 499 கேஸ்பேக் சலுகையை பிரைம் சந்தாதாரர்கள் பெறலாம். ஏர்டெல் 100 ஜிபி இலவச டேட்டாவை மூன்று மாதங்களுக்கு வழங்குகின்றது.  யூ பிராட்பேண்ட் 240 ஜிபி இலவச டேட்டாவை மூன்று மாதங்களுக்கு வழங்குகின்றது.
பல்வேறு விதமான உயர்தர சேனல்கள் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, ஆப்ஸ், நெட்ஃபிலிக்ஸ், யூடியூப், ஹாட்ஸ்டார், யூரோஸ் நவ் , கானா போன்ற பலவற்றை மிக சுலபமாக HDMI போர்ட் உள்ள டிவிகள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் பெறும் வகையில் வைஃபை வசதியும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கில் வழங்கப்பட்டுள்ளது.
அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் உடன் வழங்கப்படுகின்ற ரிமோட்டில் குரல் வழி தேடல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 3,000க்கு மேற்பட்ட ஆப்ஸ், கேம்ஸ் உள்பட பலதரப்பட்ட சேவைகளை பெற குறைந்தபட்ச இணைய வேகம் 4Mbps ஆக இருக்க வேண்டும்.
அமேஸான் பிரைம் வீடியோ உறுப்பினர்களுக்கு ரூபாய் 499 வரை கேஸ்பேக் சலுகை கிடைக்கின்றது. மேலும் அமேசான் தவிர க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளிலும் இது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

    1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...