Thursday, May 4, 2017

Plea to HC for weightage to 'Plus 2' marks in MBBS admission

Thu, 4 May 2017-09:10pm , PTI
 
The Madras High Court today sought the Medical Council of India's stand on a plea for factoring in both the NEET and the higher secondary examination marks of students for admitting them to the MBBS course in the state.

A vacation bench of justices N Kirubakaran and V Parthiban sought the stands of MCI and other respondents, issuing them notices for tomorrow, when the matter will again come up for the hearing.
The plea to take into account the marks of both the 'plus 2' and the National Eligibility-cum Entrance Test for the admission to the under-graduate medical courses in the state was made to the court by Dr P Ramachandran of Kattumannarkoil in Cuddalore district.

Petitioner Ramachandran said the clause V of the MCI's notification dated December 21, 2010 had said all admissions shall be made solely on the basis of the marks secured in the NEET.
The petitioner prayed for a direction to the MCI to modify this in the interest of the students coming from backward states like Tamil Nadu.

(This article has not been edited by DNA's editorial team and is auto-generated from an agency feed.)
20 இளைஞர்கள் வெட்டிய மூன்று கிணறுகள்! காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? பகுதி -3 #Cauvery #Hogenakkal

மு.நியாஸ் அகமது


நம் உடலில் இருக்கும் ஆன்மாவுக்கு நிகரானது ஆற்றில் ஓடும் நீர்'' என்பார் தத்துவஞானி ஹென்றி. அப்படியானால், நீரை மாசுப்படுத்துவது என்பது நம் ஆன்மாவை மாசுப்படுத்துவதாகும்தானே...? இதையே இப்படி யோசித்துப்பாருங்கள், அந்த நீரைக் கைப்பற்றுவது அது, ஓடும் நிலப்பரப்பில் வாழும் அத்தனை உயிர்களையும் கைப்பற்றுவதுதானே...? ஆம், நீரெனப்படுவது அதிகாரம். நீரைக் கைப்பற்றினால் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடலாம். நீரை விஷமாக்கினால், அதிகாரத்தை நிலைகுலையச் செய்யலாம். அதனால்தான், 18-ம் நூற்றாண்டில் சென்னையைக் கைப்பற்ற சென்னை மின்ட் பகுதியில் உள்ள ஏழுக்கிணற்றில் விஷம் கலக்கத் துடித்தான் நவாப். அதே ஏழுக்கிணற்றை முற்றும் முழுவதுமாகத் தனதாக்கிக்கொள்ள மக்கள் மீது வன்முறையை ஏவினான் ஆங்கிலேயன். தாகத்தை மட்டும் தீர்க்கவல்லதல்ல நீர், அதிகாரப்பசியைத் தீர்க்கவல்லது நீர்தான். இதை நாம் சரியாகப் புரிந்திருக்கிறோமா... உணர்ந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. ஆனால், தர்மபுரியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் மிகச்சரியாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், நீரைப் பரவலாக்க அதாவது அதிகாரத்தைப் பரவலாக்க உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

“முப்பது நாள்கள்... இருபது இளைஞர்கள்... மூன்று கிணறுகள்!”

 
சென்ற அத்தியாயத்தில் ஐந்து தனி நபர்கள் இணைந்து ஆறு ஏரிகளை, ஓர் ஓடையை புனரமைத்ததைப் பார்த்தோம்தானே...? உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகமும், தயக்கமும் எழுந்திருக்கும்... “அவர்களால் சாத்தியமாகி இருக்கிறது. இது எப்படி எங்களால் சாத்தியமாகும்? அதிகாரத்தை எதிர்த்து, ஆட்களைத் திரட்டி... மக்களை இணைத்து ஏரிகளை மீட்டெடுப்பது எங்களால் இயலாது. அதற்கு அதிக நேரம் தேவை. பணத்தைக்கூடச் செலவழித்துவிடலாம். ஆனால், நேரத்தைச் செலவழிப்பது முடியாத காரியம்” என்று யோசித்திருப்பீர்கள். என்னிடம் பேசிய பலரும் இதைத்தான் சொன்னார்கள். இந்தத் தயக்கங்களுக்கு எளிய தீர்வைச் சொல்கிறார்கள்... இருபது இளைஞர்கள்.

''நீரை மீட்க... நிலத்தடி நீரை உயர்த்த அதிக உழைப்பு எல்லாம் தேவையில்லை. காலையில் கொஞ்சம் ஓய்வுநேரத்தையும், குறைந்த உழைப்பையும் செலவிட்டாலே போதும்'' என்கிறார்கள் தர்மபுரி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

இவர்கள் செய்ததெல்லாம் என்னவோ எளிய விஷயம்தான். ஆனால், கிடைத்ததெல்லாம் மகத்தான பலன். ஆம், இருபது இளைஞர்கள்... முப்பது நாட்கள் தொடர்ந்து உழைத்து... மூன்று கிணறுகளை வெட்டி இருக்கிறார்கள்.

இனி அவர்கள் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்...

“சில ஆண்டுகளுக்கு முன், எங்கள் பகுதியில் ஒரு தோல் தொழிற்சாலை ல்பட்டுவந்தது. 'தொழிற்சாலை வந்தால் நல்லதுதானே... அதனால் வேலை வாய்ப்புக் கிடைக்கும்' என்று முதலில் மகிழ்ந்தோம். ஆனால், அந்தத் தொழிற்சாலை சில ஆண்டுகளிலேயே விஷத்தை உமிழத் தொடங்கியது... நிலத்தடி நீரை உறிஞ்சியது. அத்துடன், அந்த நீரையும் மாசுப்படுத்தியது. தண்ணீரில் உப்பு ஏறி, அந்தத் தண்ணீர் டி.டி.எஸ் 2,300-க்கு மேல் உயர்ந்தது. சராசரியாக, 500 டி.டி.எஸ் உள்ள தண்ணீர்தான் குடிக்க உகந்தது. இந்தப் பகுதி நீர் முழுவதும் குடிக்கப் பயனற்றதாகிப் போனது. என்ன செய்யலாம் என்று பலருடன் உரையாடியபோது, அவர்கள் சொன்ன ஆலோசனை 'கிணறு வெட்டுங்கள்' என்பதுதான்.

முதலில் பெரிதாக எந்த நம்பிக்கையும் இல்லாமல்தான் பணியைத் தொடங்கினோம். அதிக நபர்கள் எல்லாம் இல்லை. இருபது பேர் தினமும் மூன்று மணி நேரம் செலவிட்டு முப்பது அடியில் கிணறு வெட்டினோம். அந்தச் சமயத்தில் சரியாக மழையும் பெய்தது. மழை நீர் கீழே இறங்க இறங்க... நிலத்தடி நீரும் உயர்ந்தது. தண்ணீரின் டி.டி.எஸும் குறையத் தொடங்கி இருக்கிறது” என்கிறார் தர்மபுரி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி.

இந்த அனுபவம் தந்த உற்சாகத்தில், இவர்கள் தொடர்ந்து பொது இடங்களில் கிணறு வெட்டும் பணியில் இறங்கி இருக்கிறார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு ஒருங்கிணைப்பளர் உமாசங்கர், “இதே டி.டி.எஸ் பிரச்னை இந்தப் பகுதியில் பல இடங்களில் இருக்கிறது. அதனால், சில இடங்களை அடையாளம் கண்டு அங்கு கிணறு வெட்டத் தொடங்கி இருக்கிறோம். இப்போது, இந்தப் பணி அதே தர்மபுரியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்துகொண்டிருக்கிறது. மழை பெய்தால், இந்தப் பகுதியில் ஆங்காங்கே தேங்கும் நீர் இந்தக் கிணற்றை வந்து அடைவதுபோல வடிவமைத்திருக்கிறோம். இதற்கு நல்ல பயனும் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது” என்கிறார் அவர்.

“கிணறு வைத்த வீடு!”

முன்பெல்லாம் அனைத்து ஊர்களிலும், வீடுகளிலும் கிணறுகள் இருந்தன. பொதுக் கிணறுகள் பெருமிதங்களின் சின்னமாக இருந்தன. ஆனால், எந்தப் புள்ளியில் அது தன் பெருமிதங்களை உதிர்த்தன என்று தெரியவில்லை. இரண்டு தசாப்தங்களில் கிணறுகள் அனைத்தும் தொலைந்து, அந்த இடங்களை ஆழ்துளைக் கிணறுகள் பிடித்தன. அனைத்தையும் பணமாகவே பார்க்கும் நிறுவனங்களும், நிறுவனமயமாகி... நிறுவனங்களுக்காக மட்டுமே பணி செய்யும் அரசுகளும் ஆழ்துளைக் கிணறுகளை ஊக்குவித்தன. பெரும்பசியுடன் இயங்கிய ஆழ்துளைக் கிணறுகள், அந்தப் பகுதியில் இருந்த அனைத்து நீர்வளங்களையும் உறிஞ்சி நம் நிலத்தைப் பாலையாகிவிட்டுச் சென்றுவிட்டன. கிணறுகள் இல்லாமல், ஆழ்துளைக் கிணறுகள் வற்றி, ஏரிகள், குளங்கள் தூர்ந்த நிலையில் இப்போது நாம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் காவிரியிலிருந்து உறிஞ்சிக்கொண்டிருக்கிறோம். இன்று காவிரியும் வற்றத் தொடங்கிவிட்டது... நாளை என்ன செய்யப் போகிறோம்...?

காவிரியை மீட்டல் என்பது... ஆழ்துளைக் கிணறுகளை ஒழிப்பதிலும், மீண்டும் கிணறுகள் வெட்டுவதிலும்... பொதுக் கிணறுகள் பயன்பாட்டைக் கொண்டுவருவதிலும் இருக்கிறது. இதை இன்று... இப்போதே தொடங்காமல் போனால், நம் நிலம் பாலையாகத்தான் போகும்!

இருபது இளைஞர்கள், முப்பது நாள்கள் செலவிட்டு, மூன்று கிணறுகளை வெட்டி இருக்கிறார்கள். இந்த இளைஞர்களின் படிப்பினைகளை அப்படியே உள்வாங்கி, பரப்புவோம். வாருங்கள், புதுக் கிணறுகள் செய்வோம். அப்படியே, இருக்கும் கிணறுகளையும் தூர்வார்வோம்.

"மனநல சிகிச்சை என்பது கர்ணனுக்கான சலுகை!" - நீதியரசர் சந்துரு


உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ள கர்ணனுக்கும் இடையே மோதல் வலுத்துவருகிறது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துருவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

''நீதிபதி கர்ணனுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையே வலுத்துள்ள இந்த மோதல் எதைக் காட்டுகிறது?''  

''ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியோ அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியோ தவறிழைத்தால் அவரைப் பதவி நீக்கம் செய்யக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் அப்படிப்பட்ட வேலை பாதுகாப்பை அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. ஆனால், நாடாளுமன்ற கண்டனத் தீர்மானத்தைத் தவிர்த்து வேறு ஏதேனும் தண்டனையை அளிக்க முடியுமென்றால், அதற்குச் சட்டத்தில் இடமில்லை. மேலும், நீதிபதிகள் தாங்கள் அளிக்கும் தீர்ப்புகளுக்காக அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் குற்ற வழக்குகளை யாரும் தொடர முடியாது. அப்படியான பாதுகாப்பு வளையம் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு உள்ளாகும்போது நீதிபதிகளுக்குக் கிடைக்காது. தொடர்ந்து தவறு செய்துவரும் நீதிபதி கர்ணனைச் சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்தபிறகும் அதே தவறுகளைச் செய்துவருகிறார். அவர் மீது சென்னை உயர் நீதிமன்றமே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய வேதனையான நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, மூத்த நீதிபதியின் மனைவி ஒருவர் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். 3 தலித் நீதிபதிகள் உட்பட 21 நீதிபதிகள் அவர் மீது எழுத்துமூலமான புகார்களை நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். இவற்றையெல்லாம் சரியான நேரத்தில் விசாரிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம் அதற்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்கத்  தவறியதன் விளைவே தற்போது அதற்கான பலனை அனுபவித்து வருகிறது."

''இந்த மோதல் உருவாக மையப்புள்ளியாக எதனைக் கருதுகிறீர்கள்?''

"ஒருவருடைய பின்னணியை முறையாக விசாரிக்காமல், நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதுதான் இத்தனை குழப்பங்களுக்கும் மையப்புள்ளி. நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் நடைமுறையை இந்தச் சம்பவம் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவரது நியமனத்துக்குப் பரிந்துரை செய்த உயர் நீதிமன்றத்தின் கொலிஜியம் நீதிபதிகளான முகோபாத்தியாயா, மிஸ்ரா, கங்குலி ஆகிய மூன்று பேரும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கர்ணனுடைய நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த இந்தியத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், 'தனக்கு அவரது பின்னணி பற்றித் தெரியாது' என்று கூறியுள்ளார். எனவே, கொலிஜிய நடைமுறையைக் கைவிட்டுவிட்டு நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு உருவாக்குவதே இத்தகைய கேலிக்கூத்துகளைத் தவிர்க்க முடியும்."

''உச்ச நீதிமன்றம் வரம்பை மீறுகிறதா?''  

''கர்ணன் மீது தொடுத்துள்ள நீதிமன்ற அவதூறு வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 7 மூத்த நீதிபதிகள் விசாரித்து வருகிறார்கள். இன்னும் வழக்கு முடியவில்லை. இதில், வரம்பை மீறுவதற்கு என்ன செயல்பாடு நடந்துள்ளது? கர்ணன் குறித்து புகார் வந்தவுடனேயே உச்ச நீதிமன்றம் உள்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். ஆனால், தற்போது எடுத்துள்ள நடவடிக்கை அவதூறு குற்றத்துக்கானது. அதில், கர்ணன் குற்றவாளியா... இல்லையா என்பதை இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த வழக்குக்கான ஒத்துழைப்பைத் தராமல் கர்ணன் தன்னுடைய வழியில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அதற்கு ஊடகங்களும் அதீத முக்கியத்துவம் அளித்து அதனைப் பெரிதாக்கி வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் 7 பேரின் உத்தரவுகளுக்கும், லெட்டர் பேடில் 4 வரி எழுதி கர்ணன் கையெழுத்திட்டுக் கொடுக்கும் அறிக்கைக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் கொடுத்துவருவது எந்த விதத்தில் நியாயமாகும்?"

கர்ணன்

''நீதிபதி கர்ணன் என்ன செய்திருக்க வேண்டும்... என்ன செய்திருக்கக் கூடாது?''  

"தலித் சமூகத்திலிருந்து வந்த நீதிபதியான ஒருவர், தன்னுடைய பதவியையும் அதிகாரத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் நீதிபதியே ஆஜரானது இதுவே முதல்முறை. சேம்பரில் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பது, தலைமை நீதிபதிகளிடம் தனக்கு குறிப்பிட்ட அதிகாரப் பங்கீடு அளிக்க வேண்டும் என்று மிரட்டுவது போன்ற பல்வேறு தவறானச் செயல்களைச் செய்துள்ளார். மேலும், நீதிபதிகளின் மனைவிகளை அசிங்கமாகப் பேசுவது... அதனைத் தட்டிக் கேட்பவர்களை எதிர்த்து 'வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் புகார் அளிப்பேன்' என்று கூறி மிரட்டியிருக்கிறார். இதுபோன்ற தவறானச் செயல்களைத் தவிர்த்துவிட்டு நீதிபரிபாலனை செய்திருந்தால் அவரை யார் குறைகூறுவார்கள்?"

''நீதிபதி ஒருவர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருடைய கருத்தையும், புகாரையும் தெரிவிக்க அவருக்கு உரிமையில்லையா?''

''அரசமைப்புச் சட்டம் 222-வது பிரிவின் கீழ் ஓர் உயர் நீதிமன்றத்தில் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியை வேறோர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. கர்ணன் இடமாற்றம் செய்யப்பட்ட கொல்கத்தா நீதிமன்றமும் பாரம்பர்யம் மிக்க நீதிமன்றம்தான். தனது ஊர்மாற்றத்தை எதிர்த்து அன்றைய தலைமை நீதிபதியிடம் அவர் முறையீடு செய்தார். அது, ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தன்னுடைய நீதிமன்ற மாற்றத்தை எதிர்த்து அவர் வழக்குத் தொடர்ந்திருக்கலாம். அப்படி வழக்குத் தொடர்ந்தாலும் வெற்றிபெற்றிருப்பாரா என்பது சந்தேகம்தான். பதவியிலிருக்கும் நீதிபதி தனது கருத்துகளையும் புகார்களையும் தெரிவிப்பதற்கு முறையான வழிகள் உள்ளன. அவற்றை நீதிபதி கர்ணன் கடைப்பிடிக்கவில்லை. அவருக்குக் கிடைத்த ஆலோசகர்கள் அப்படி. அதனால் அப்படித்தான் நடந்துகொள்வார்.''
நீதிபதி சந்துரு

''நீதிபதிகள் பதிலடி கொடுக்கும் இந்த மனநிலையைப் பார்க்கும்போது, நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விகுறியாக்கும் அல்லவா?''


"கர்ணனின் மனநலன் நலமாக உள்ளதா என்று அறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அது அவருக்குக் காட்டப்பட்ட சலுகை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவக்குழு அறிக்கை அளிக்க முன்வந்தால், அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனையை உச்ச நீதிமன்றம் ஒருவேளை தவிர்த்திருக்கும். ஆனால், கர்ணன் உச்ச நீதிமன்ற 7 மூத்த நீதிபதிகளின் மனநிலையையே கேள்விக்குள்ளாக்கிவிட்டார். மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள மாட்டேன் என்று கூறியதன் மூலம் அவர் மீது அனுதாபம் கொள்ளக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்துவிட்டார். எனவே, அவருக்குரிய தண்டனையை உச்ச நீதிமன்றம் வழங்கப்போவது உறுதியாகிவிட்டது."

''இந்த மோதல் முடிவுக்கு வர என்ன செய்ய வேண்டும்?''

"சாதாரண இந்தியக் குடிமகன் ஒருவர் கர்ணனைப் போன்று செயல்களைச் செய்திருந்தால் 1971-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி 6 மாத சிறைத்தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கலாம். இது ஓர் அவதூறுக்கான தண்டனை. ஒவ்வோர் அவதூறும் தனித்தனி தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம். இதுவரை கர்ணன், 'தன்னை நாடாளுமன்ற கண்டனத் தீர்மானத்தின் மூலமே பதவி நீக்க முடியும்' என்று கூறிவந்துள்ளார். மே 23-ம் தேதி ஓய்வடையப்போகும் அவருக்கு அப்படிப்பட்ட நடைமுறையைக் கடைப்பிடிப்பதற்கான வழிகள் இல்லை. ஒருவேளை, அதைவைத்தும் அவர் இவ்வாறு பேசி வரலாம். அதனால் மே 24-ம் தேதி முதல் அவரும் ஒரு சாதாரண குடிமகன்தான். எனவே, அரசமைப்பு பாதுகாப்பு இன்றி நிராயுதபாணியாக நிற்கப்போகும் நமது மகாபாரத கதாநாயகனின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பதுதான் எனது கணிப்பு.''

படங்கள்: தி.ஹரிஹரன்

ஒரு ஆட்டோ... ஒரு ட்வீட்.. அடித்தது அதிர்ஷ்டம்! #Mahindra

யார் கவனிக்கப்போகிறார்கள் என்றெல்லாம் எண்ணாமல், ரசனை சார்ந்து வாழ்பவர்களுக்கு அதற்குண்டான அங்கீகாரம் எப்போதாவது கிடைக்கத்தான் செய்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மார்ச் 19-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த ‘யாரோ ஒரு’ அனில் என்பவர், வழியில் ‘யாரோ ஒருவர்’ தன் ரசனைக்கேற்ப டிசைன் செய்த ஆட்டோவைப் பார்க்கிறார். கிட்டத்தட்ட மஹிந்திரா கம்பெனியின் ஸ்கார்ப்பியோ போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது அந்த ஆட்டோ. அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

அனில், மஹிந்திரா குழுமத்தில் பணிபுரிபவர்.  எடுத்த படத்தை ‘நல்லாருக்குல்ல சார்..?  நம்ம டிசைன் இந்தியன் ரோட்ல எவ்ளோ பாப்புலர் பாருங்க’ என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு Tag செய்து ட்விட்டரில் போடுகிறார்
ஆட்டோ
பத்து நிமிடத்தில் ரிப்ளை வருகிறது ஆனந்திடமிருந்து. “அட... செம.. அவர் யார்னு பிடிச்சுக் குடுங்களேன். இந்த ஆட்டோவை நான் வாங்க ஆசைப்படறேன்.  பதிலுக்கு அவருக்கு ஒரு 4 வீலர் தர்றேனே...” 
Scorpio Auto
பாஸுக்கெல்லாம் பாஸு சொன்னதாச்சே... கொச்சி மஹிந்திரா டீலரில் பணிபுரிகிறவர்கள், ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு கேரளாவின் ஒரு கிராமத்தில் இருக்கும் அந்த  ஆட்டோக்காரர் சுனிலைக்  கண்டுபிடித்துவிடுகிறார்கள். ’அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்’ என்று அவரும் ஒப்புக்கொள்ள, இப்போது அவர் மஹிந்திரா சூப்பர் மினி வேனின் உரிமையாளர்.
மஹிந்திரா

நேற்றைக்கு இதை ட்விட்டரில் போட்டு நன்றி தெரிவித்திருக்கிறார் ஆனந்த். இவரைக் கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

Anand Mahindra
ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், ரெனோ, செவர்லே என்று எக்கச்சக்க வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு மத்தியில், இந்திய நிறுவனமான மஹிந்திராவுக்கு இந்தியர்களிடத்தில் செம மவுசு உண்டு. விற்பனையைத் தாண்டி இன்னொரு விஷயமும் இதில் அடங்கியிருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த், வித்தியாசமாக முயற்சி செய்பவர்களையும், வெற்றியாளர்களையும் ஊக்குவிப்பதில் ரொம்ப ஆர்வம் கொண்டவர்.  ஆனந்த்துக்குப் பிடித்து விட்டால், அடுத்த நிமிடம் உரியவரின் வீட்டில் மஹிந்திரா கார் நிற்கும்.

அப்படி மஹிந்திராவின் கார்களை ஷோரூம் போய் காசு கொடுத்து வாங்கியவர்களுக்கு இணையாக, பரிசாக வாங்கிய வி.ஐ.பி.க்கள் பட்டியல், சாக்‌ஷி மலிக், பி.வி.சிந்து, மாரியப்பன் தங்கவேலு என்று  பெருசு. சாக்‌ஷி மலிக், ஆனந்த்  பரிசாகக் கொடுத்த தார் ஜீப்பில்தான் இப்போது பயணிக்கிறாராம்.‘‘சாக்‌ஷி, இப்போது இந்தியாவின் மிகப் பெரிய மல்யுத்த வீராங்கனை. அவருடைய ஸ்டைலுக்கும், தன்மைக்கும் ‘தார்’ போன்ற ஆஃப்ரோடு கார்களில் பயணிப்பதுதான் அவருக்குச் சிறந்த கௌரவமாக இருக்கும். அவருக்கு தார் 4 வீல் டிரைவ் மாடலைப் பரிசாக அளிப்பதில் மஹிந்திரா கௌரவப்படுகிறது!’’ என்று அப்போது சொன்னார் ஆனந்த் மஹிந்திரா.  அதாவது, திறமையாளர்களின் தேவை அறிந்து பரிசு கொடுப்பதுதான் ஆனந்தின் ஸ்டைல். சுனிலுக்கு ஸ்கார்ப்பியோ மிகப் பிடிக்கும் என்பதால்தான், தனது ஆட்டோவை ஸ்கார்ப்பியோ ஸ்டைலிலேயே ரீ-டிசைன் செய்திருக்கிறார்.

ஆனந்த் நினைத்தால், சுனிலுக்கு ஸ்கார்ப்பியோவையே பரிசாகக் கொடுத்திருக்கலாம்தான். ஆனால், ஷேர் ஆட்டோவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்; மினி ட்ரக் ஆகவும் லோடு அடித்துக் கொள்ளலாம் என்பது சுப்ரோவின் ஸ்பெஷல் என்பதால்தான், ஆட்டோக்காரரான சுனிலுக்கு  5.50 லட்சம் மதிப்புள்ள சுப்ரோ வேனைப் பரிசாக இறக்கியிருக்கிறார் ஆனந்த்.
பிடிச்சதைச் செய்ங்க.. அதிர்ஷ்டம் ஆகாசத்துல இருந்து இல்ல... ஆனந்த்கிட்ட இருந்துகூட வரும்!

மின் கட்டணத்தையும் ஆதாருடன் இணைக்கும் உ.பி அரசு...

Yogi Adityanath

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து, குடிமக்கள் அனைத்து வித மானியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும் ஆதார் உபயோகத்தைக் கட்டாயப்படுத்தி வருகிறது. அனைத்துக்கும் ஆதார் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது. இருந்தும், மத்திய அரசு விடாப்பிடியாக ஆதார் உபயோகத்தை பரவலாக்கும் முனைப்போடு இருக்கிறது.

இந்நிலையில், பா.ஜ.க ஆட்சி அரியணையில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தில், மின் கட்டணத்தை ஆதாருடன் இணைக்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு, மாநிலத்தில் நிகழும் மின் திருட்டைத் தடுக்க குறைந்தபட்சம் 75 காவல்நிலையங்களையாவது அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மின் திருட்டில் யாராவது பிடிபட்டால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.   

'கத்தரி வெயில்' என்பதன் உண்மை அர்த்தம் என்ன?


"கத்தரி வெயில் தொடங்கியது", "அக்னி நட்சத்திரம் ஆரம்பமானது" போன்ற செய்தித் தலைப்புகளை, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் தொடக்கத்தில் படித்திருப்போம். ஆனால், இந்த வார்த்தைகளை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துவதில்லை. இவை அறிவியல்பூர்வமான வார்த்தைகள் கிடையாது என்பது தான் காரணம்.

‘காற்றழுத்த தாழ்வுப் பகுதி’, ‘வெப்ப சலனம்’, ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’, ‘வளி மண்டல மேல் அடுக்கு’ போன்ற வானிலை சார்ந்த கலைச்சொற்களைப் பயன்படுத்தி மக்கள் மனதில் இடம்பெற்றவர் ஓய்வு பெற்ற சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன். அவர் இதுகுறித்து, 'அக்னி நட்சத்திரம், கத்தரி வெயில் போன்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை. கத்தரி வெயில் என்பது 100 சதவிகிதம் வானிலை துறையின் வார்த்தை கிடையாது. அது பஞ்சாங்கத்தின் வார்த்தை. வானிலை துறையானது ராசியின் அடிப்படையில் இயங்குவதில்லை. மே மாதம் வெப்பம் அதிகரிக்கும் தான். இது ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இயல்பான செயல். எனவே, கத்தரி வெயில் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று வானிலை துறை கூறுவதில்லை' என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின் படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயண காலமே அக்னி நட்சத்திரம் எனவும், கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'மிஞ்சியது எதுவும் இல்லை... எஞ்சியது வெறுங்கைதான்!' - சவுதியிலிருந்து திரும்பியவர்கள் நிலை

எம்.குமரேசன்
 
வுதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து பணிபுரிபவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க, அந்நாட்டு அரசு வழங்கிய பொது மன்னிப்பைப் பயன்படுத்தி, 20 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்.
   சவுதியில் இருந்து வெளியேறும் இந்தியர்கள்
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர்.  ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த பல்வேறு நாட்டு மக்களுக்கும் வளைகுடா நாடுகள் வேலைவாய்ப்பை வழங்குகின்றன. தாய்நாட்டில் பிழைக்க வழி இல்லாத நிலையில், வளைகுடா நாடுகளில் கூலித்தொழிலுக்குச் சென்று, சொற்ப சம்பளத்துக்காக  லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். விசா காலம் முடிந்த பிறகும் இந்தியர்கள் ஏராளமானோர் சவுதியில் தங்கியிருப்பதாகப் புகார் எழுந்தது. அப்படித்  தங்கியிருப்பவர்கள் பிடிபட்டால், கடுமையான தண்டனை வழங்கப்படும். சிறைத் தண்டனைக்குப் பிறகே தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இப்போதெல்லாம் சட்டப்படி தண்டனை வழங்கி சிறையில் அடைப்பதைவிட, 'பொது மன்னிப்பு ' கொடுத்துவிடவே சவுதி அரசு விரும்புகிறது. 'விசா முடிந்தும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள், வொர்க் பெர்மிட் இல்லாமல் பணிபுரிபவர்கள் எனச் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்கியிருப்பவர்கள் 90 நாள்களுக்குள் தாங்களே முன்வந்து ஒப்புக்கொண்டுவிட்டால், தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்; எந்தப் பிரச்னையும் இல்லாமல் தாயகம் திரும்பலாம் ' என சவுதி அரசு அறிவித்திருந்தது. சவுதி அரசின் இந்த அறிவிப்புக்கு, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மே 1-ம் தேதி வரை சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 20,321 இந்தியர்கள், தாய்நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இதில், 1,500 தமிழர்களும் உள்ளனர்.

விண்ணப்பித்தவர்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம். கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் கடைநிலைத் தொழிலாளர்கள் இவர்கள். ரியால், ரூபாயாக மாறும்போது கிடைக்கும் கூடுதல் தொகைக்கு ஆசைப்பட்டு சவுதி சென்றவர்கள்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச்  சேர்ந்த முருகவேல் கலீஜ் `டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், 'சவுதியில் விசா காலம் முடிந்த பிறகும் நான்கு ஆண்டுகள் தங்கி பல இடங்களில் வேலை பார்த்துவிட்டேன். யாருமே முறையான சம்பளம் தரவில்லை.  இங்கே  இருப்பதைக் காட்டிலும் தாயகம் திரும்புவது நல்லது என முடிவுசெய்துவிட்டேன். கிடைக்க வேண்டிய சம்பளமும் கிடைக்கவில்லை; தங்கியிருந்த இடமும் படுமோசம். நல்ல சாப்பாடுகூட சாப்பிடவில்லை. இத்தனை ஆண்டுகளாக இங்கே தங்கியிருந்து நான் சம்பாதித்தது என்று எதுவுமே இல்லை. கஷ்டப்பட்டு வேலைபார்த்தால்  குடும்பத்தைக் கரை சேர்த்துவிடலாம் என்ற நினைப்பில்தான் இங்கே வந்தேன். எனது நினைப்பில் மண் விழுந்துவிட்டது. வெறுங்கையுடன்தான் தமிழ்நாட்டுக்குப் போகிறேன். அங்கே போய் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை' என்று வேதனையுடன் கூறியுள்ளார். முருகவேல் மட்டுமல்ல, சவுதியில் கூலிவேலைக்குச் சென்றிருக்கும் இந்தியர்களின் உண்மைநிலை இதுதான். மிஞ்சியது என்று எதுவும் இல்லை; எஞ்சியது வெறுங்கைதான்.

சவுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு, பொது மன்னிப்பு வழங்குமாறு இந்திய அரசு  கேட்டுக்கொண்டது. இதை ஏற்றுதான் சவுதி அரசு 'பொது மன்னிப்பு' அறிவித்தது. விண்ணப்பிப்பவர்கள் அவர்களது சொந்த பணத்தில்தான் நாடு திரும்ப வேண்டும். பாஸ்போர்ட் இல்லாத நிலையில் அவர்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறும் வகையில் இந்தியத் தூதரகம் வழியாகப் போக்குவரத்துக்கான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும். சவுதியில் உள்ள இந்தியத் தூதரகம் தேவையான உதவிகளை இந்தியர்களுக்குச் செய்துவருகிறது.

சவுதியில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி அனில் கூறுகையில், ``சவுதி முழுவதும் 21 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டும்  பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பயன்படுத்திக்கொள்ள முன்வராதவர்கள், இப்போதாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.  இந்தியத் தூதரகத்தில் அனைத்து உதவிகளும் கிடைக்கும் '' எனத் தெரிவித்துள்ளார்.

Long hours hurting resident docs’ mental health, NMC tells SC

Long hours hurting resident docs’ mental health, NMC tells SC TNN | Aug 2, 2026, 05.17 AM IST NEW DELHI: Long and crushing working hours hav...