Sunday, July 9, 2017


ஜூலை 14 அன்று வெளியாகும் நான்கு படங்கள்!



விக்ரம் வேதா, பண்டிகை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கூட்டத்தில் ஒருத்தன்...

இந்த நான்கு படங்களும் அடுத்த வாரம் ஜூலை 14 அன்று வெளிவரவுள்ளது.

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து நடித்துள்ள படம் விக்ரம் வேதா. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. பிறகு அதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் தணிக்கையில் மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துள்ளது. யூ/ஏ கிடைக்கும் பட்சத்தில் இந்தப் படமும் ஜூலை 14 அன்று நிச்சயம் வெளிவரவுள்ளது.

விக்ரம் வேதா படத்தை சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமைந்துள்ளது.

ஒரே நாளில் நான்கு படங்களும் வெளிவருவதால் ஒவ்வொரு படமும் மற்ற படத்தால் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. அதிலும் விக்ரம் வேதா படம் வெளிவருகிற பட்சத்தில் மற்ற 3 சிறிய படங்களும் பாதிக்கப்படும் என்றறியப்படுகிறது. இதனால் கடைசி சமயத்தில் ஒன்றிரண்டு படங்களி வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
ஆங்கிலம் தெரியாது ஆனாலும்... போயிங் 777 விமானம் இயக்கிய முதல் இளம் பெண் கமாண்டர் 
 


கேப்டன் அனி திவ்யா (30 வயது), இவர் பதான்கோட்டில் பிறந்தாலும் தன் குழந்தைப் பருவம் முதலே ஆந்திரபிரதேச மாநிலத்தின் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.

இந்நிலையில், போயிங் 777 ரக விமானத்தை இயக்கிய முதல் இளம் கமாண்டர் என்ற சாதனையைப் படைத்தார் அனி திவ்யா.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் எனது பெற்றோர், ஆசிரியருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பல தடைகளைக் கடந்து, ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து கடின முயற்சியின் மூலமாக இந்த இடத்தை தற்போது அடைந்துள்ளேன்.

சிறு வயது முதலே பொருளாதார சிக்கல், மொழிப் பிரச்னை, கலச்சார வேற்றுமை ஆகியவற்றை வெற்றியுடன் கடந்து வந்ததற்கு எனது பெற்றோரும், நண்பர்களும் பெரிதும் உதவினர்.

நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால், பைலட் பயிற்சி பெற போதுமான அளவு பண வசதி இல்லை. இருப்பினும், எனது பெற்றோர் என் மீது நம்பிக்கை வைத்து பல சங்கடங்களுக்கு இடையில் பைலட் பயிற்சி பெற வைத்தனர். அவர்கள் இதற்காக செலவு செய்த பணத்தை அவ்வளவு எளிதில் என்னால் சம்பாதித்து விட முடியாது.

இதற்கிடையில் பலர் என்னை கேலி செய்தனர். அதிலும் குறிப்பாக எனக்கு ஆங்கிலம் தெரியாது. ஏனென்றால், விஜயவாடாவில் யாரும் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. ஆகவே எனக்கும் முழுமையாக தெரியாது.

நான் சிறு வயது முதலே, தெலுங்கு மொழியில் தான் எழுதி, படித்து, பேசிக்கொண்டிருந்தேன். மற்ற இடங்களிலும் தெலுங்கு மொழியே பிரதானமாக இருந்தது.

ஆனால், இந்த மொழிப் பிரச்னையில் இருந்து வெளிவர எனது பயிற்சி மையம் பெரிதும் உதவியது. சரியாக ஆங்கிலத்தை உச்சரிக்கவும், புரிந்துகொள்ளவும் சிறிது சிரமப்பட்டேன். பிறகு அவற்றை சரி செய்து கொண்டேன். இருந்தாலும், அதை நினைத்து நான் வருந்திய நாட்கள் அதிகம்.

எனது பைலட் பயிற்சி மையம் மிகவும் தரமானது. அங்குதான் விமானியாக அனைத்து திறமைகளையும் வளர்த்துக்கொண்டேன். இப்போது பைலட்டாக பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் வாழ்நாள் கனவு நிறைவேறியது என்றார்.

Dailyhunt

இந்திய சினிமாவுக்கு உலக முகம் கொடுத்தவர் கே. பாலச்சந்தர் கவிஞர் வைரமுத்து புகழாரம்

திருவாரூர்: இந்திய சினிமாவுக்கு ஓர் உலக முகம் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் என்றார் கவிஞர் வைரமுத்து.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடியில் இயக்குநர் சிகரம் மறைந்த கே. பாலச்சந்தருக்கு மார்பளவு வெண்கலச் சிலை வைக்க கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்துள்ளார். சிலைத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை.9") மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை கவிஞர் வைரமுத்து சிலை வைக்கப்பட்ட இடம் மற்றும் விழா முன்னேற்பாடுகள் குறித்து பார்வையிட்ட போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 

இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் பிறந்த ஊரில், பிறந்த தெருவில், அவர் வீட்டு வாசலில் இப்போது நான் நிற்கிறேன். பிறந்த வீடு தற்போது பள்ளியாக செயல்படுகிறது. அவரது வீட்டு வளாகத்தில் அவரது சிலை நிறுவப்படுகிறது. இந்திய சினிமாவுக்கு ஓர் உலக முகம் கொடுத்தவர். தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு தனி நிறம் கொடுத்தவர்.

பாலச்சந்தருக்கு முன்னும், பாலச்சந்தருக்கு பின்னும் ஒரு திரை வரலாறு எழுதப்படலாம். அப்படிபட்ட மாமேதையை பெற்றுக்கொடுத்த மண் இந்த மண்.
அவர் பிறந்த வீட்டில், பிறந்த மண்ணில் இந்த விழா கொண்டாடப்படுவதான் நாங்கள் பெருமையாக கருதுகிறோம். மார்பளவு வெண்கலச் சிலையை இயக்குநர் சிகரத்தின் துணைவியார் ராஜம் பாலச்சந்தர் திறந்து வைக்கிறார்.

கலைஞானி பத்மபூசன் விருது பெற்ற நடிகர் கமலஹாசன், இயக்குநர்கள் மணிரத்தினம், வசந்த் எஸ். சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், நானும் புகழுரை நிகழ்த்துகிறோம். விழாவில் பெருமைக்குரியவர்கள் சிறப்பு பெறுகிறார்கள்.
இந்த விழாவை நான் எப்படி கருதுகிறேன் என்றால் அறிவு கொண்டாடப்பட வேண்டும், கலை உலகத்தின் முன்னோடிகள் மதிக்கப்பட வேண்டும். இதனால் இளைய தலைமுறை புதிய எழுச்சிப் பெற வேண்டும்.

திரை உலகில் தடம் பதித்த ஒருவர் எதிர் காலத்தில் கொண்டாடப்படுவார்கள் என்ற நம்பிக்கை இளைய தலைமுறையினருக்கு வரவேண்டும். பாலச்சந்தர் படத்தைப் பொருத்த வரையில் நான் அவரது படங்களை பாடங்கள் என்று கருதுகிறேன்.

இயக்குநர்கள், கதாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், நடன இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், பாடலாசி ரியர்கள், இசை அமைப்பாளர்கள் அத்தனை பேரும் பாலச்சந்தரின் படத்தைப் பார்த்தால் கற்றுக்கொள்ளலாம். அவர் கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசான். அந்த மாமனிதரின் திருவிழா நடைபெறுகிறது.

தமிழகத்தின் கலை ரசிக பெருமக்களையும், ஒருங்கிணை ந்த தஞ்சை மாவட்ட தமிழ் அன்பர்களும் வருக வருக என வரவேற்கிறேன்.

உள்ளூர் மக்கள் அனைவரும் உங்கள் வீட்டு விழாவுக்கு எல்லோரும் வரவேண்டும். ஊடகத்துறையினர் இந்த விழாவை உலக விழாவாக மாற்றிக்கொடுக்க வேண்டும். எங்கள் பாலச்சந்தர் என்ற தமிழ்நாட்டுக் கலைஞரை உலக கலைஞராக உயர்த்திப் பிடியுங்கள் என்றார் வைரமுத்து.
பிரபல நாளிதழ், வார இதழ்களை இணையத்தில் திருடியவர் கைது! -பிரான்ஸ் கூட்டாளியும் சிக்குகிறார்

பிரபல நாளிதழ் மற்றும் வார இதழ்களை இணையத்தில் திருடி, பல லட்சக் கணக்கில் சம்பாதித்த, ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஆனந்த் (23). இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் பிரபல தனியார் தமிழ், ஆங்கிலம் நாளிதழ் மற்றும் வார இதழ்களை இணையத்தில் திருடி, அதை magnet.com என்ற இணையதளம் மூலம் புழக்கத்தில் விட்டு, பல லட்சக் கணக்கில் பணம் சம்பாதித்து வந்தார்.

இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இவருக்கு சம்பந்தம் இருப்பதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆனந்தை இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஃபிரான்ஸ் நாட்டில் பணிபுரிந்து வரும் முகமது இஸ்மாயில் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.



இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ஃபிரான்ஸ் தூதரகம் மூலம் முகமது இஸ்மாயிலிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இன்று கைது செய்யப்பட்ட ஆனந்த், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Dailyhunt

மதுரையில் 50-வது நாளை நோக்கி 'ராஜாபார்ட் ரங்கதுரை'! 



டெக்னிக்கலில் மிரட்டும், மாறுபட்ட கோணங்களில் காட்சிப்படுத்தப்பட்ட, பெரிய ஸ்டார்கள் நடித்த படங்கள் ஒருவாரம் ஓடினாலே வெற்றிப்படம் என்று கொண்டாடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்த 'ராஜபார்ட் ரங்கதுரை', தற்போது மதுரை மீனாட்சி பாரடைஸில் ஐம்பதாவது நாளை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது.

மதுரையில் பழைய படங்கள் பார்ப்பதற்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. உடல் உழைப்பு தொழிலாளர்கள் நிறைந்திருக்கும், வில்லாபுரம், அவனியாபுரம், சுப்ரமணியபுரம், ஜெய்ஹிந்துபுரம், செல்லூர், தெற்குவாசல் பகுதிகளில் அமைந்துள்ள திரையரங்குகளில் தியாகராஜபாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், நாகேசுவரராவ், என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் நடித்த பழைய படங்கள் அடிக்கடி திரையிடப்படும். 75 முதல் 80 களில் ரஜினி, கமல் நடித்த படங்களும், ஐம்பது வயது தாண்டியவர்களுக்காக திரையிடப்படுகின்றன.

மாலை வேளைகளில் குடும்பமாகவோ, நண்பர்களுடனோ இதுபோன்ற பழைய படங்கள் பார்க்க வருகிற மக்கள் மதுரையில் நிறைந்திருப்பதால்தான், 'ராஜபார்ட் ரங்கதுரை' தற்போது ஐம்பதாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் மாலை மற்றும் இரவு காட்சியாக இப்படம் திரையிடப்பட்டு வருகிறது.



இதுபற்றி படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவரிடம் கேட்டால், ''சிவாஜி நடித்த மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. சிவாஜியின் நடிப்புக்கு இணையே இல்லை. நாடக நடிகராக அவர் நடித்திருக்கும் இப்படத்தில் உறவுகளால் ஏமாற்றப்படுவதுதான் கதை. இந்த படத்தின் கதையை அடிப்படையாக வைத்து பல தமிழ் படங்கள் வந்ததன. அதெல்லாம் இதுபோல இல்லை. இப்படத்தின் பாடல்களும் அவ்வளவு அருமையானது. அதனால்தான் திரும்பத் திரும்ப படம் பார்க்க வருகிறோம்'' என்றார்.

வருகிற ஒன்பதாம் தேதி இப்படத்தின் ஐம்பதாவது நாள் விழாவை பெரிய அளவில் கொண்டாட மீனாட்சி பாரடைஸ் திரையரங்க உரிமையாளரும், சிவாஜி ரசிகர்களும் முடிவு செய்திருக்கிறார்கள். அன்றைய தினம் படம் பார்க்க வருகிற ரசிகர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

Dailyhunt


s

முடிவுக்கு வரும் ஆஃபர்கள்... ஜியோ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ந்தியத் தொலைதொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையே ஜியோ ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதியிலிருந்து ஜியோ தனது நெட்வொர்க் சேவையைத் தொடங்கியது. இலவச டேட்டா, கால்ஸ் எனத் தொடக்கம் முதலே ஆஃபர்களை அள்ளிவீசும் அந்நிறுவனம், நெட்வொர்க் சேவையைத் தொடங்கி ஆறே மாதத்தில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று உலகையே வியக்க வைத்தது. ஜியோ இல்லாத ஊரே கிடையாது எனச் சொல்லும் அளவுக்கு அந்த நெட்வொர்க் தற்போது நாடு முழுவதும் வளர்ந்துள்ளது.

ஜியோ

தொடக்கத்தில் 2016-ம் ஆண்டு இறுதிவரை இலவச கால் மற்றும் டேட்டா ஆஃபரை அறிவித்த அந்நிறுவனம், அதன்பின் இந்த இலவச ஆஃபரை அடுத்தாண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்தது. மார்ச் மாதம் இந்த ஆஃபர் முடிவடைவதற்குள் ரூ.99 செலுத்தி ஜியோ பிரைம் சேவையில் இணைந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் அறிவுறுத்தியது. பிரைம் சேவையில் உறுப்பினராகும் வாடிக்கையாளர்கள், ஒரு வருடத்திற்கு ஜியோ வழங்கும் அதிரடி ஆஃபர்களைப் பெறலாம். பிரைம் சேவையில் இணைந்துகொள்ளும் கால அவகாசமும் அதன்பின் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் இலவச ஆஃபரைப் பயன்படுத்தியவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பேர் தற்போது ஜியோ பிரைம் சேவையில் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தடுமாறும் இணைய வேகம் :
4G சிக்னல்கள் தடையில்லாமல் கிடைத்தாலும், டேட்டா ஸ்பீடு விஷயத்தில் ஜியோ கவனம் செலுத்தியே ஆகவேண்டும். லண்டனைச் சேர்ந்த 'ஓபன்சிக்னல்' என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஜியோ நிறுவனத்தின் சராசரி டேட்டா டவுன்லோடு ஸ்பீடு 3.92 Mbps ஆகப் பதிவாகியுள்ளது. இது 3G சேவையின் உலக சராசரியான 4.4 Mbps என்பதைவிடக் குறைவாகும். சில சமயம் 2ஜியை விட பொறுமையாக இருக்கிறது ஜியோ.
ஜியோ

ஆஃபர்கள் ஒரு ப்ளாஷ்பேக் :

பிரைம் சேவையில் இணைந்து ரூ.303 செலுத்துபவர்களுக்கு 'சம்மர் சர்ப்ரைஸ்' என்ற பெயரில் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச ஆஃபர் வழங்கியது அந்நிறுவனம்.  இதன்படி, ரூ.303-க்கு ரீசார்ஜ் செய்தவர்களுக்கு, இலவசமாக  நாளொன்றுக்கு ஒரு ஜி.பி அளவுக்கு 4G டேட்டாவும் மற்ற ஜியோ சேவைகளும் வழங்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்குள் ரூ.303-க்கு ஒருவர் ரீசார்ஜ் செய்திருந்தால், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு (ஒவ்வொரு மாதமும் தலா 28 நாள்கள் வேலிடிட்டி) இதற்கு முன்னர் அனுபவித்த இலவச சேவைகள் தொடரும். ஏப்ரல் மாதம் செலுத்தியிருந்த ரூ.303 தொகையை ஜூலை மாதத்திற்கான ப்ரீபெய்ட் தொகையாக ஜியோ கணக்கெடுத்துக்கொள்ளும். உதாரணமாக ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒருவர் ரூ.303 செலுத்தியிருந்தால், அவரது 'சம்மர் சர்ப்ரைஸ்' ஆஃபரின் வேலிடிட்டியானது ஜூலை 20-ம் தேதியோடு முடிவடையும்.
ஜியோ அறிவித்த இந்த இலவச ஆஃபர் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் விதிமுறைகளுக்கு எதிரானது என மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புகாரளித்தன. இதையடுத்து, இந்த சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரைக் கைவிடும்படி ட்ராய், ஜியோ நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஏற்கெனவே இந்த ஆஃபரில் இணைந்தவர்களுக்கு மட்டும் இலவச சேவைகள் தொடரும் என ஜியோ
 கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அறிவித்தது.

Jio - Dhan Dhana Dhan

ஏப்ரல் 7-ம் தேதியிலிருந்து புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைபவர்களும், பிரைம் சேவையைத் தொடர்பவர்களும் ரூ.309 அல்லது ரூ.509 செலுத்தி 'ஜியோ தன் தனா தன்' என்ற ஆஃபரில் இலவச சேவைகளைப் பெறலாம் என ஜியோ அறிவித்தது. ரூ.309 செலுத்துபவர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜி.பி 4G டேட்டாவும், ரூ.509 செலுத்தியவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி.பி 4G டேட்டாவும் இந்த ஆஃபரில் இலவசமாக வழங்கப்பட்டது.

வேலிடிட்டி முடியும் நாள் :

இந்நிலையில், 'சம்மர் சர்ப்ரைஸ்' மற்றும் 'தன் தனா தன்' ஆகிய இரண்டு ஆஃபர்களின் வேலிடிட்டி இந்த மாதத்தோடு முடிவடையப்போகிறது. இதன்பிறகு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஜியோவின் சேவைகளைப் பெறமுடியும். ஜியோவின் நெட்வொர்க் பிடிக்காதவர்கள் இதன்பிறகு ரீசார்ஜ் செய்யாமல் விலகிக்கொள்ளலாம். சேவையில் தொடர விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது வேலிடிட்டி முடியும் நாளை 'மை ஜியோ (MyJio)' ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆப்பில் மொபைல் நம்பர் கொடுத்து லாகின் செய்துகொள்ள வேண்டும். அதன்பின் மெனுவில் உள்ள 'My Plans' ஆப்ஷனை கிளிக் செய்தால், எந்த ஆஃபரின் கீழ் நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தைக் காண்பிக்கும். அதன் கீழே அந்த ஆஃபரின் வேலிடிட்டி தேதியும் காண்பிக்கப்படும். இந்தத் தேதிக்குள் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளான்களில் ஒன்றைத் தேர்வுசெய்து, வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.
ஜியோ நிறுவனத்தின் இலவச ஆஃபர்கள் முடிவடைந்த பின்னர்தான், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு அதன் சேவையை ஒப்பிட முடியும் என்பதால், இந்த மாதம் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆருக்கு நுாற்றாண்டு விழா... தலைமைச்செயலாளருக்கு நோட்டிஸ்! - மதுரை சோகம் 

சே.சின்னதுரை



மதுரையில் அரசு நடத்திய எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழாவில் அனுமதியின்றி ஃபிளக்ஸ் பேனர்கள் வைத்ததை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

மதுரையில் கடந்த ஜூன் 30ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி,ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது . முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட இந்த விழாவிற்காக மதுரை முழுவதும் ஃபிளக்ஸ் பேனர்கள் , ராட்சத பலூன்கள், போஸ்டர்கள் என அ.தி.முக அமைச்சர்கள் மதுரையை கலங்கடித்துவிட்டனர். நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் பேனர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருந்ததோடு முறையாக அனுமதியின்றியும் வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

விளம்பர பேனர்கள் ஒருபக்கம் என்றால் இதையொட்டி நடந்த ஊர்வலமும், இசைக் கச்சேரி ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் அ.தி.மு.க வினருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, பொதுமக்களை பெரும் தொந்தரவுக்குள்ளாக்கியது. இதனைத் தொடந்து முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி ஃபிளக்ஸ் போர்டு வைத்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதில், “ ஜூன் 30ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மற்றும் திண்டுக்கல்லில் அனுமதியற்று விளம்பர போர்டுகள் அதிகமாக வைக்கப்பட்டு இருந்தன. அனுமதியின்றி ஃபிளக்ஸ் போர்டுகள் வைத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகரக் காவல்துறை ஆணையாளர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பி இருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

  இந்த மனு, நீதிபதிகள் சசிதரன்- சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு ஒத்தியும் வைத்தனர்.

NEWS TODAY 22.08.2026