Wednesday, July 12, 2017

அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நாளை துவக்கம்

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017

23:49 சென்னை: மருத்துவப் படிப்புக்கான, அகில இந்திய கவுன்சிலிங், 'ஆன்லைன்' மூலம் நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கின்றன. இதன்படி, மொத்தம், 4,100 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், நாளையும், நாளை மறுதினமும், ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது; முடிவுகள், 15ல் வெளியிடப்படும்.

இடங்கள் ஒதுக்கீடு பெற்றோர், 22க்குள் தேர்ந்தெடுத்த கல்லுாரிகளில் சேர வேண்டும்.

இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5 - 7 வரை நடைபெறுகிறது. அதன் முடிவுகள், ஆக., 8ல் வெளியிடப்படும். இதில் இட ஒதுக்கீடு பெற்றோர், ஆக., 16க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள், ஆக., 16 மாலை, 5:00 மணிக்கு பின், மாநில ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்படும்.
டாக்டர் கு.கணேசனுக்கு சிறந்த மருத்துவர் விருது

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
23:40




மதுரை: சென்னையில் நடந்த தேசிய மருத்துவர்கள் தின விழாவில், ராஜபாளையத்தை சேர்ந்த டாக்டர் கு.கணேசனுக்கு 'தலை சிறந்த மருத்துவர் விருது' வழங்கப்பட்டது.

இந்திய மருத்துவச் சங்க தமிழக கிளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த 14 டாக்டர்களுக்கு 'தலைசிறந்த மருத்துவர்' விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் 40க்கும் மேற்பட்ட மருத்துவ நுால்களை தமிழில் எழுதிய டாக்டர் கு.கணேசனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த விருதை வழங்கினார் . சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவச் சங்க செயலர் முத்துராஜன், மாநிலத் தலைவர் ரவிசங்கர், தேசிய துணைத் தலைவர் பிரகாசம் கலந்து கொண்டனர். டாக்டர் ராஜசேகர் நன்றிகூறினார் .

தினமலர் 'என்பார்வை' பகுதியில் டாக்டர்.கு.கணேசன் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஏசி' பஸ்களில் கட்டணம் உயர்வு

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
23:03




சென்னை: நாடு முழுதும், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., ஜூலை, 1ல், அமலுக்கு வந்தது. இதில், 'ஏசி' பஸ்களின் கட்டணத்திற்கு, 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதனால், அரசு விரைவு போக்குவரத்து கழகம்மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகங்கள் இயக்கும், 'ஏசி' பஸ்களிலும், தனியார் இயக்கும் ஆம்னி பஸ்களிலும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 'ஏசி' பஸ்களில், வழக்கமான கட்டணத்துடன், ஜி.எஸ்.டி.,யாக, 5 சதவீதம் சேர்த்து
வசூலிக்கப்படுகிறது.சென்னை மாநகர, 'ஏசி' பஸ்களில், 15 - 100 ரூபாய் வரை கட்டணத்தில், ஜி.எஸ்.டி.,யாக, கூடுதலாக, ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை,வசூலிக்கப்படுகிறது.

இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், 'ஏசி'பஸ்களில், கூடுதலாக,5 சதவீத கட்டணம்வசூலிக்கிறோம்.'நாங்கள், பயணியரிடம் வரியை வசூலித்து, மத்திய அரசுக்கு செலுத்தி விடுகிறோம். அதை பயணியர் புரிந்து கொள்ள வேண்டும்' என்றனர்.
சம்பளத்துடன் ஒரு நாள் விடுப்பு : பெண் ஊழியர்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017

22:31 புதுடில்லி: சமூக வலைதளங்களில் ஏற்பட்ட விழிப்புணர்வை அடுத்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், தன் பெண் ஊழியர்களின் மாதவிடாய் காலத்தின் முதல் நாளில், சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்து உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் மும்பையைச் சேர்ந்த, 'டிஜிட்டல் மீடியா' நிறுவனம், கல்ச்சர் மெஷின். இந்த நிறுவனம், கடந்த மாதம், யூ டியூபில், வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதன் மூலம், அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களிடம், அவர்களின் மாதவிடாய் கால பிரச்னைகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டு பதில் பெறப்பட்டது.அவ்வாறு பதில் அளித்த பெண்களில் பெரும்பாலானோர், 'மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் விடுப்பு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்' என, பதில் அளித்துள்ளனர். அந்த சமயத்தில், நிறுவனத்தின் ஆண் நிர்வாகியிடம் விடுப்பு கேட்க தயக்கமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கல்ச்சர் மெஷின் நிறுவனம், பெண் ஊழியர்கள், மாதவிடாய் காலத்தின் முதல் நாளில், சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளிப்பதாக, அறிவித்துள்ளது. இதனால், அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மிக்க மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
தக்காளி கிலோ ரூ.100:இன்னும் கூடுமாம்

பதிவு செய்த நாள் 12 ஜூலை
2017
02:44



ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 'இன்னும் விலை கூடும்' என வியாபாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிக்கு பெங்களூருவில் இருந்து ‛ஹைபிரீடு' வகை தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது, தக்காளி வரத்து குறைந்துள்ளது. வறட்சி காரணமாக தமிழகத்திலும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது.

தேனி மாவட்டம் கண்டமனுார் பகுதியில் அதிகளவு நாட்டுத்தக்காளி சாகுபடி நடக்கிறது.

இங்கும் விளைச்சல் குறைவால் தக்காளி வரத்து குறைந்தது. நேற்று ராமநாதபுரத்தில் கிலோ 85 முதல் 90 ரூபாய் வரையிலும், சில்லரை கடைகளில் 100 ரூபாய் வரையும் விற்றது.

இதுகுறித்து ராமநாதபுரம் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உரிமையாளர் பாலா கூறுகையில், ''விலை ஏற்றம் தொடரும். விளைச்சல் குறைவால் இன்னும் இரண்டு நாட்களில் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படலாம்,'' என்றார்.சின்ன வெங்காயம் கிலோ 150 வரை விற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 80 ரூபாயாக குறைந்துள்ளது.
மாநில செய்திகள்
10 ரூபாய் விலையில் ஆவின் பால் பாக்கெட் அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு

10 ரூபாய் விலையில் ஆவின் பால் பாக்கெட் அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு
10 ரூபாய் விலையில் 225 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார். 
 
சென்னை,

தமிழக சட்டசபையில் மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய மானிய கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழை-எளிய மக்களும் சத்துள்ள பால் அருந்திட ஏதுவாக 225 மில்லி லிட்டர் பால் பாக்கெட் ரூ.10-க்கு அறிமுகப்படுத்தப்படும்.

இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 5 ஆயிரத்து 439 பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு அரை லிட்டர் பால் விலையின்றி வழங்கப்படும். மருந்துவ வசதி மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.

சென்னையில் நுகர்வோர் நலனுக்காக, 115 தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள், பாலகங்களாக மாற்றி அமைக்கப்படும். தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில், பணிபுரியும் 28 ஆயிரம் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சீருடை செலவு மற்றும் தையற்கூலி ஆகியவை கூடுதலாக ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்.

50 பால் கூட்டுறவு சங்கங்களுக்கு மின்னணு பால் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும். சேலத்தில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்படும்.

விருதுநகர் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறன் கொண்ட கால்நடை தீவன தொழிற்சாலை நிறுவப்படும். தர்மபுரி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் திறன் கொண்ட புதிய தாது உப்பு கலவை தொழிற்சாலை நிறுவப்படும்.

திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி மற்றும் சிவகங்கை மாவட்ட ஒன்றியங்களில் தலா 3 புதிய பாலகங்கள் வீதம் 12 பாலகங்கள் அமைக்கப்படும். மாதவரம் பால்பண்ணைக்கு புதிய கொதிகலன்கள் வாங்கப்படும்.

திண்டுக்கல், கோவை ஒன்றியங்களில் 5 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட 2 புதிய தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

தேசிய செய்திகள்
நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி கைது

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி கைது
 
டெல்லியில் இருந்து ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு ஏர்ஏஷியா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அவ்விமானம், ராஞ்சியில் தரை இறங்க தயாரானபோது, விமானத்தில் இருந்த ஒரு பயணி, விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றார். 
 
புதுடெல்லி,

அதை கவனித்த சக பயணிகளும், சிப்பந்திகளும் அவரது முயற்சியை தடுத்து நிறுத்தினர். அப்போது நடந்த கைகலப்பில் சில பயணிகளும், சிப்பந்திகளும் காயம் அடைந்தனர். நல்லவேளையாக, எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானம் பத்திரமாக தரை இறங்கியது.

அதன்பிறகு, அந்த பயணியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அப்தாப் அகமது (வயது 32), ராஞ்சியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

NEWS TODAY 22.08.2026