Wednesday, July 12, 2017

வறட்சியிலும் புரட்சி காணும் திண்டுக்கல் பேரீச்சம்பழம்

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
23:58


திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வறட்சியிலும், புரட்சி காணும் வகையில் பேரீச்சம் பழம் சீசன் துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கே மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆழ்துளை கிணறு மூலம் வறட்சியிலும், புரட்சி காணும் விதமாக பேரீச்சம்பழம் காய்த்துள்ளது. திண்டுக்கல், முள்ளிப்பாடியில் 13 ஏக்கரில் பேரீச்சம் பழத் தோட்டம் உள்ளது. இதில் 612 மரங்கள் உள்ளன. இவை பிப்ரவரில் பூக்கும். அப்போது இயற்கையான மண் புழு மற்றும் தொழு உரம் இடப்படுகிறது. ஜூன், ஜூலை முதல் ஆகஸ்ட் வரை அறுவடை காலம். திண்டுக்கல்லில் சீசன் களைகட்டி உள்ளதால், இவற்றை பல மாவட்ட வியாபாரிகளும் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரை தரத்திற்கேற்ப விற்பனையாகிறது.

உரிமையாளர் அன்பழகன் கூறியதாவது: பேரீச்சம்பழம் மரத்திலேயே பழுக்கும்போது பறித்து சாப்பிட்டால் அதிகளவு சத்தும், சுவையும் இருக்கும். இதனால் பல மாவட்டங்களில் இருந்து வாங்கி செல்கின்றனர்.
பூக்கும்போது காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டுகள் தாக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை உழவு செய்ய வேண்டும். தென்னை மரத்தை விட அதிகளவில் தண்ணீர் தேவைப்படும். வறட்சியிலும் பேரீச்சம்பழத்தில் புரட்சி செய்கிறோம். தற்போது சீசன் களைகட்டி
உள்ளது என்றார்.
MBBS counselling hinges on HC reservation ruling
Chennai
TIMES NEWS NETWORK 
 


The Tamil Nadu government's schedule to release MBBSBDS merit list on July 14, and to start counselling on July 17, now hinges on the Madras high court order on the state's policy of reserving 85% of its MBBSBDS seats for state board students. The court ordered status quo on the admission process, before reserving its verdict, on Tuesday .
 
Justice K Ravichandrabaabu, after marathon arguments by counsel for three plus students from CBSE stream, and state advocate-general R Muthukumaraswamy , reserved his judgment later in the evening.

The students assailed the legality of June 22 order of the government apportioning the available MBBSBDS seats to state board and CBSE students in the ratio of 85%:15%.

In his submissions, Muthukumaraswamy said NEET promoted inequality among students of state boards and their counterparts from CBSE stre am. Out of 4.30 lakh students who completed Plus Two under Tamil Nadu state board this year, about 84,000 students appeared for NEET. Whereas out of 4,000 students who did Plus Two under CBSE, about 2,000 appeared for NEET, he said.
Overwhelming majority of questions in NEET were based on CBSE syllabus and not related to state board syllabus, the AG said, adding that there about 250 CBSE schools in the state, and they are located mostly in urban areas.

He said Tamil Nadu government was not in favour of NEET and that was the reason why it passed two Bills for PG and UG medical admissions, seeking exemption for the state from the NEET regime. Counsel for the petitioner-students, however, said there could be no different distribution of MBBSBDS seats between candidates of state and other boards either under the government resolutions or rules governing admission to professional medical courses.

All students who had qualified Class 12 from schools within the state of Tamil Nadu are entitled to be considered alike for all available MBBSBDS seats, they argued, adding that NEET marks alone could be considered for admissions.

The petitioner-students' counsel said the apex court had clearly stated that when admission was based on NEET it should make no difference whether the qualifying examination was conducted by the state board or central board. No discrimination can be made between the schools affiliated to the state board or the CBSE, they said.
Jul 12 2017 : The Times of India (Chennai)
 
HC: Keep MBBS seat vacant for girl with upper limb disability
Chennai:
TIMES NEWS NETWORK 
 


Entertaining a plea from a girl who suffered 55% upper limb disability in an electrical mishap, the Madras high court has asked authorities to keep one MBBS seat vacant for her. If, in the end, she wins the case, she could be admitted.
 
Justice K Ravichandrabaabu, granting the interim relief to A Mathumitha of Dharmapuri district, posted the case to July 25 for further hearing. The selection com mittee handling MBBSBDS admissions and the directorate of medical education should file their counter-affidavits by then.

Mathumitha, 18, who suffered the disability in 2010, wrote NEET examination this year and qualified.When she submitted her application under physically handicapped (PH) category on July 7, she was informed that people with upper limb disability were ineligible as per clauses (1)(k), VIII (40)(iii)(a) and (e) which summarily excluded such candidates.

Assailing these provisions, Mathumitha said nonclinical medical experts will handle research and development and laboratory-oriented jobs with the designations of doctors. She said candidates with upper limb disabilities did not deserve any blanket denial of admission and added non-clinical courses like microbiology , pathology , pharmacology and community medicines could be handled by them.



குரூப்-4 இளநிலை உதவியாளர் பதவிக்கு ஜூலை 17 முதல் கலந்தாய்வு

2017-07-12@ 00:37:55
சென்னை: குரூப்-4 இளநிலை உதவியாளர் பதவிக்கு வரும் 17ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பதவிக்கு வரும் 17ம் தேதி  முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகிறது. தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு எஸ்எம்எஸ், இ-மெயில் வாயிலாகவும், கலந்தாய்விற்கான அட்டவணை (அழைப்புக் கடிதம்) மின் அஞ்சல் வாயிலாகவும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு: விசாரணை தள்ளிவைப்பு

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
23:08

சென்னை: மருத்துவப் படிப்பில், 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. அதுவரை, தற்போதைய நிலை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், ஞானம் நகரைச் சேர்ந்த, தார்னிஷ்குமார் சார்பில், அவரது தாயார் கயல்விழி தாக்கல் செய்த மனு:என் மகன் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்'டிலும், அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளான். மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் தேர்வு, நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் நடக்க வேண்டும்.

மாநில பாட திட்டம் : மாணவர்கள் சேர்க்கை விதிமுறைகளின்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுதவிர, வேறு விதத்தில் ஒதுக்கீடு வழங்க முடியாது. மாநில பாடத் திட்டம், மத்திய இடைநிலை கல்வி திட்டத்தில் படித்தவர்கள் என, மாணவர்களை வகைப்படுத்த முடியாது. இதை, இந்திய மருத்துவ கவுன்சிலும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், ஜூன், 22ல், தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 85 சதவீதம்; மத்திய இடைநிலை கல்வி வாரிய திட்டத்தில் படித்தவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருக்கும் போது, அவர்கள் படித்த பாடத்திட்டத்தின் அடிப்படையில், வேறுபாடு காட்டக் கூடாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மத்திய இடைநிலை கல்வி திட்டம்மற்றும் இதர திட்டங்களில் படித்த மாணவர்களின் உரிமையை, 15 சதவீதங்களுக்கு என, கட்டுப்படுத்த முடியாது.எனவே, ஜூன், 22ல், தமிழக அரசு கொண்டு வந்த ஒதுக்கீட்டு முறை பாரபட்சமானது; அதை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள், நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் நளினி சிதம்பரம், பி.எஸ்.ராமன், சுந்தரேஷன் உள்ளிட்டோர் வாதாடினர்.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் முத்து குமாரசாமி வாதாடியதாவது: தேர்வு 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மாநில பாடத்திட்டத்தில் படித்த, 4.30 லட்சம் மாணவர்களில், 84 ஆயிரம் பேரும், சி.பி.எஸ்.இ.,யில் படித்த, 4,000 மாணவர்களில், 2,000 பேரும், 'நீட்' தேர்வு எழுதி உள்ளனர்.
தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில், 50 சதவீதம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருந்தன. மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீத ஒதுக்கீடு என்றால், 2,000 பேருக்கு இடங்கள் கிடைக்கும்; சி.பி.எஸ்.இ., படித்தவர்களில், 520 பேருக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி ரவிச்சந்திரபாபு, வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். அதுவரை, தற்போதைய நிலை நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
துணைவேந்தர் நியமனம் : 3 பல்கலை சட்டத்தில் திருத்தம்

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
22:51

சென்னை: துணைவேந்தர் நியமனம் தொடர்பாக, மூன்று பல்கலை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர, புதிய சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும், 13 பல்கலைகளில், காலதாமதமின்றி துணைவேந்தரை நியமிக்க, சட்டசபையில் சட்ட மசோதா, கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மீன்வளப் பல்கலை, அம்பேத்கர் சட்டப் பல்கலை, தமிழ் பல்கலை ஆகியவற்றிலும், காலதாமதமின்றி துணைவேந்தரை நியமிக்க, நேற்று சட்டசபையில், புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இப்புதிய சட்டத்தில், துணைவேந்தர் நியமனத்திற்கு, மூன்று அல்லது ஐந்து நபர் கொண்ட, தேடுதல் குழு அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்டப்படி, துணை வேந்தர் பணியிடம் காலியாகும் தேதிக்கு, ஆறு மாதங்களுக்கு முன், தேர்வு குழு அமைக்கும் பணி துவங்க வேண்டும். இரு மாதங்களுக்கு உள்ளாக, செனட் உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். துணைவேந்தர் பணியிடம் காலியாகும் தேதிக்கு, நான்கு மாதங்களுக்கு முன், தேடுதல் குழு, உரிய நபர்கள் அடங்கிய பட்டியல், தயாரிப்பு பணியை துவக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள், தேர்வு செய்த நபர்கள்
பட்டியலை, கவர்னரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பல்வேறு சூழ்நிலை காரணமாக, நான்கு மாதங்களுக்குள்ளாக, தேர்வு குழுவினர் மூன்று பேர் பட்டியலை கொடுக்காவிட்டால், கவர்னர் கூடுதல் நேரம் ஒதுக்கலாம் அல்லது குழுவை கலைத்துவிட்டு, மீண்டும் ஒரு குழுவை நியமிக்கலாம்.
சபாஷ்... வலைதளத்தில் விரிந்த மனிதநேயம்! கீழே கிடந்த, 14 ஆயிரம் ரூபாய் உரியவரிடம் சேர்ப்பு

பதிவு செய்த நாள் 12 ஜூலை
2017
00:54



திருப்பூர் · திருப்பூரில், கீழே கிடந்த, 14 ஆயிரம் ரூபாய் பணம், சமூக வலைதள தகவலால், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது; பணத்தை ஒப்படைத்த நபர்களை, பொதுமக்கள் பாராட்டினர்.

திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழியை சேர்ந்தவர் சுப்ரமணியம், 51; விவசாயி. இவர், கடந்த, 4ல், திருப்பூர் கே.செட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, வியாபாரியிடம் கொய்யாப்பழம் வாங்கினார். அப்போது, அவரது பாக்கெட்டில் இருந்த பணம், தவறுதலாக கீழே விழுந்தது. இதை கவனிக்காமல், பைக்கை எடுத்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

அங்கு பழம் வாங்க வந்த வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த இளங்கோவன், 41, கீழேயிருந்த, 14 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்தார்; புறப்பட ஆயத்தமாக இருந்த சுப்ரமணியத்திடம் கொடுக்க, சத்தம் போட்டு அழைத்தார்; அதற்குள், அவர்  புறப்பட்டு சென்றார். இதையடுத்து, யாராவது பணம் கேட்டு வந்தால், தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறிவிட்டு, இளங்கோவன் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து, நண்பர் சுந்தரபாண்டியனிடம், இளங்கோவன் கூறினார். அவர், இத்தகவலை, "வாட்ஸ்அப்', "பேஸ்புக்'கில் பதி
விட்டார்.

இது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வளைகுடா நாட்டில், மஸ்கட்டில் வசிக்கும் பூர்ணிமா , அதே தகவலை, அவர் படித்த பள்ளியின் தோழியர் குழுவில் பகிர்ந்தார். அதில், சுப்ரமணியத்தின் மனைவி கீதா, இத்தகவலை பார்த்துள்ளார். அதிலுள்ள, இளங்கோவனை மொபைல் எண்ணுக்கு, தொடர்பு கொண்டு, நடந்ததை கூறியுள்ளார்.பணத்தின் உரிமையாளர், அவர் தான் என்பதை, இளங்கோவனும், சுந்தரபாண்டியனும் உறுதி செய்தனர். இதனால், கொய்யா வியாபாரியிடம் கொடுத்து வைத்திருந்த, 14 ஆயிரம் ரூபாயை பெற்று, பணத்தை தொலைத்த அதே இடத்தில் வைத்து, சுப்ரமணியத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.

கிடைத்த காசை, சத்தம் போடாமல் எடுத்து செல்லும் இக்காலத்தில், 14 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த, இருவரின் செயலை, பலரும் பாராட்டினர்.விவசாயி சுப்ரமணியம் கூறுகையில், "கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணம், எங்கும் போகாது என்பது, இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பணம் இருப்பது குறித்து, எனது மனைவி யின் வாட்ஸ் அப் குழுவில் தகவல் வந்திருந்தது. அதை பார்த்து, தொடர்பு கொண்டு, உரிய அடையாளத்தை கூறி, பணத்தை பெற்றிருக்கிறோம்.அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படும் இந்த காலத்தில், இப்படியும் சிலர் இருப்பது, பாராட்டுக்குரியது; சமூக வலைதளங்களின் வாயிலாக, இத்தகைய பயனுள்ள தகவல்கள் பரிமாறப்படுவது, மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
உரியவரிடம் பணம் சென்றடைய, சமூக வலைதளங்கள் உதவிகரமாக இருந்ததாக, இளங்கோவன், சுந்தரபாண்டியன் கூறினர்.

NEWS TODAY 22.08.2026