Thursday, July 13, 2017

பஸ் நிலைய சிக்கல் தீருமா? : கிளாம்பாக்கத்தில் ஆய்வு

பதிவு செய்த நாள் 13 ஜூலை
2017
00:54

வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பஸ் நிலைய திட்டத்துக்கு தேர்வான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள், கோயம் பேட்டுக்கு வந்து செல்வதால், நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க, வண்டலுாரில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. இங்கு, புதிய பஸ் நிலையத்துக்கான வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், திட்டத்துக்கு தேர்வான நிலத்தில் பெரும்பகுதி, இந்திய தொல்லியல் ஆய்வு துறையால் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது தெரிய வந்தது. இதனால், புதிய பஸ் நிலைய பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து, கிளாம்பாக்கம் நிலத்தை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, தொல்லியல் துறையால் தடை செய்யப்பட்ட பகுதிகள், தனியார் ஆக்கிரமிப்புகள் குறித்து, விசாரித்தனர். இங்கு, சில பகுதிகளில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பு களை அகற்ற, வருவாய் துறைக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரி கள் உத்தரவிட்டனர். இருப்பினும், தொல்லியல் துறை தடையால் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கும் வழிமுறைகள் ஏதும், இறுதி செய்யப்படவில்லை என, அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -
டாக்டர்களுக்கு கவுன்சிலிங்


சென்னை: அரசு மருத்துவ கல்லுாரிகளில் படிப்பை முடித்த இரண்டாண்டு ஒப்பந்த டாக்டர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங் இன்று நடைபெறுகிறது. தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் முதுநிலை படித்த அரசு சாரா டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டு பணியாற்ற ஒப்பந்தம் போடப்படுகிறது. இதில் முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்பை முடித்த டாக்டர்களுக் கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில் இன்று முதல் துவங்கி 15ம் தேதி வரை பணி நியமன கவுன்சிலிங் நடைபெறுகிறது.
பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணி முடிக்கவில்லை : உர்ஜித் படேல்

பதிவு செய்த நாள்
ஜூலை 12,2017 18:59




எண்ணிக்கொண்டே இருக்கிறோம்; உர்ஜித் படேல்

புதுடில்லி: ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை இன்னும் எண்ணி முடிக்கவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்., கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் இருவர் பணமதிப்பிழப்பிற்கு பின்பு எவ்வளவு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வந்துள்ளதாக பாராளுமன்ற குழு சார்பில் இன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் :'' கடந்த நவம்பரில் மொத்தம் 17.7 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. தற்போது 15.4 லட்சம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் உள்ளது.

நேபாள் மற்றும் கோ ஆப்ரேட்டிவ் வங்கிகளில் இருந்து பழைய ரூபாய் நோட்டுக்கள் வரவேண்டியதுள்ளது. மேலும் தபால் நிலையங்களில் பொதுமக்கள் மாற்றிய ரூபாய் நோட்டுக்கள் இன்னும் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்படவில்லை.

தற்போது வரை வந்துள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணியை சிறப்பு குழு தெடர்ந்து நடத்தி வருகிறது. அந்த பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடந்து வருகிறது. பணி செய்பவர்களுக்கு ஞாயிறு அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.'' என கூறினார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கடந்த ஜனவரி மாதம் இதே போல் பாராளுமன்ற குழுவில் பணமதிப்பிழப்பு குறித்து பதிலளித்தார். ஆனால் எம்.பி.,களுக்கு மேலும் பல கேள்விகள் இருந்ததால் குழு தலைவர் வீரப்ப மொய்லி இடைப்பட்ட காலத்தில் 2 முறை உர்ஜித் படேலுக்கு பதிலளிக்க வருமாறு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாரமாக தொடர்ந்து ஏறுமுகம் தக்காளி கிலோ ரூ.120:10 ஆண்டுக்கு பின் கிடுகிடு உயர்வு, பொதுமக்கள் கடும் பாதிப்பு

2017-07-13@ 00:33:15

சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிலோ தக்காளி ரூ.120க்கு சில்லரை கடைகளில் விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு தக்காளி லாரிகளில் அனுப்பப்படுகிறது. இதேபோல் ஆந்திர மாநிலம் மதனபள்ளி, புங்கனூர், பலமனேரி உள்ளிட்ட  பகுதிகளில் இருந்தும் கர்நாடகாவில் சீனிவாசபுரம், சிந்தாமணி, கோலார்,  ஒட்டிபள்ளி முதலான ஊர்களில் இருந்தும் தமிழகத்தில் தேனி, ஒட்டன்சத்திரம்,  பொள்ளாச்சி முதலான பகுதிகளில் இருந்தும் இந்த தக்காளி அனைத்தும் கோயம்பேடு  மார்க்கெட்டுக்கு வருகிறது.

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மாவட்டங்களின் ஒரு நாள் தக்காளி தேவை 90 லாரிகள் முதல் 120 லாரிகள் உள்ளது. எனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 90  லாரிகளில் வந்த தக்காளி, தற்போது வெறும் 40 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதனால் தக்காளி விலை உயர்ந்துவிட்டது. அதுமட்டுமில்லால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் தக்காளி, பீகார், ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் விளைச்சல் குறைவானதால் அந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவை நம்பி இருந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் தக்காளிக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலும் தக்காளி வரத்து கடுமையாக குறைந்துள்ளது.

இதனால் நல்ல தரமான பெரிய தக்காளி  கோயம்பேட்டில் கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் வறட்சி காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்தது.  இதனால்தான் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து குறைவாக உள்ளது. எனவே  மொத்த தக்காளி கொள்முதல் வரத்து பாதிக்கும் குறைவாக மாறியதால், கடந்த ஒரு  மாதத்திற்கு முன்பு ரூ.30க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி படிப்படியாக  உயர்ந்து, ஒரு கிலோ ரூ. 90க்கு விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில்  அதிகபட்சம் ரூ. 120 வரை விற்கின்றனர். அதேபோல, பச்சைமிளகாய் ஒரு கிலோ ரூ. 20லிருந்து 30 ரூபாய்க்கும் கொத்தமல்லி ஒருகட்டு ரூ. 5லிருந்து ரூ. 15 ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளது. வரத்து குறைவால் ஏற்பட்ட இந்த விலையேற்றம் இன்றோ நாளையோ குறைந்துவிடும் என்றும் வியாபாரிகள் கூறினர்.

10 ஆண்டுக்கு பின்: கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ. 15லிருந்து 20 ரூபாய் வரை விற்றது. அப்போது தினமும் 50 லாரிகளில் இருந்து 60 லாரிகளில் தக்காளிகள் வந்தன. அச்சமயம் பெய்த கடும் மழையினால் திடீரென பல்வேறு இடங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 20 லாரிகளில் மட்டுமே தக்காளிகள் வந்தன. அப்போது ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்றது. நாளடைவில் குறைந்து மீண்டும் ஒரு கிலோ ரூ. 15லிருந்து ரூ.20க்கு விற்கத் தொடங்கியது.

விலை உயர்வு 2 மாதம் நீடிக்கும்

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சௌந்தரராஜன் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக கர்நாடகா, ஆந்திராவில் இருந்து நேரடியாக  லாரிகளில் தக்காளி வந்துவிடும். தற்போது தக்காளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பீஹார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சென்றால் அதிக விலை கிடைக்கும் என்பதால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளிகளை வியாபாரிகள் அங்கே கொண்டு சென்று விடுகின்றனர். மேலும் தக்காளிக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இந்நிலையில் மழை குறைந்ததால் தமிழகத்தில் தக்காளி விளைச்சலும் குறைந்துவிட்டது. உதாரணத்திற்கு ஒட்டன்சத்திரம், தேனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 30க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி வரும். தற்போது கிருஷ்ணகிரியில் இருந்து மட்டும் ஓரிரு லாரிகளில் தக்காளிகள் வருகின்றன. இதனால்தான் தக்காளி விலை உயர்ந்து விட்டது. இதே நிலை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் 13 ஜூலை
2017
00:17


மதுரை: மதுரை அய்யர்பங்களா மாணவர் சிபியின் சார்பில் அவரது தந்தை வழக்கறிஞர் கே.கே.கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு

எனது மகன் சிபி. இவர் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வில் 500 க்கு 473 மதிப்பெண் பெற்றார். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வில் 476 மதிப்பெண் பெற்றார். மருத்துவ படிப்பிற்கு உறுதியாக இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 85 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டில் சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜூன் 22 ல் அரசாணை பிறப்பித்தார்.

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் ஒரே மாதிரியாக மாணவர் சேர்க்கையை பின்பற்றும் வகையில், 'நீட்' கொண்டு வரப்பட்டது.
தமிழக அரசின் அரசாணையானது, பல்வேறு பாடத்திட்ட மாணவர்களை பாகுபடுத்தும் வகையில் உள்ளது.

'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லுாரியில் இட ஒதுக்கீடு கிடைப்பதில் சிரமமாக உள்ளது. இது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது.

தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடிவுக்கு வரும்வரை மருத்துவக் கல்லுாரியில் ஒரு எம்.பி.பி.எஸ்., இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். இதுபோல் மேலும் ஒருவர் மனு செய்தார்.
நீதிபதி கே.கல்யாண சுந்தரம்

உத்தரவு: இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலக தேர்வுக்குழு செயலருக்கு உத்தரவிடப்
படுகிறது. விசாரணை ஜூலை 14க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றார்.
சலுகைகள் பெற 'ஆதார்' கட்டாயமா? 

5 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும்


புதுடில்லி: 'தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை உட்பட, ஆதார் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்த வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 18 - 19ம் தேதிகளில் விசாரிக்கும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று அறிவித்துள்ளது.



நாடு முழுவதும், அரசின் பல்வேறு இலவசத் திட்டங்களையும், மானியங்களையும் பெற, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்த வழக்கின் விசாரணையை விரைவில் துவங்க வேண்டும்' என, வாதிட்டனர்.
'இந்த வழக்கை, ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டுமா' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது.

ரகசியம்

ஆனால், 'ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும்' என,

அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறினார். இதையடுத்து, 'ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை உட்பட, ஆதார் தொடர் பான பல்வேறு விவகாரங் கள் குறித்த வழக்குகளை, 18 - 19ம் தேதிகளில் விசாரிக்கும்' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவித்தனர்.
முன்னதாக, கடந்த, 7ம் தேதி, ஆதார் வழக்குகளை விசாரித்த, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 'ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், சுப்ரீம் கோர்ட்டின் பெரிய அமர்வு விசாரிக்கும்; இந்த விஷயத்தில், தலைமை நீதிபதி இறுதி முடிவு எடுத்து, அரசியல் சாசன அமர்வை அமைப்பார்' என, தெரிவித்தது.

பரிந்துரை

அப்போது, மூன்று நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றிருந்த, நீதிபதி சலமேஸ்வர், 'அரசியல் சாசன அமர்விற்கு, ஒரு வழக்கு பரிந்துரை செய்யப்பட் டால், அதன் பின், அந்த வழக்கு தொடர்பான அனைத்து விவகாரங்களையும், அந்த அமர்வுதான் விசாரிக்கும். 'எனக்கு தெரிந்த வரை, ஒன்பது நீதிபதி கள் அடங்கிய பெரிய அமர்வு தான், இந்த விவகா ரத்தை கையாள வேண்டும்' என, கருத்து தெரிவித்தார்.

இருப்பினும், 'ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வா அல்லது ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வா என்பது குறித்து, தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும்' என, மூன்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு முன், ஜூன், 27ல், ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட்டின் இரு

நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அரசு சலுகை களை பெற, ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவு எதிராக, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது.

அரசு உறுதி

அப்போது,ஆதார் அட்டை இல்லாத காரணத்தை காட்டி, யாருக்கும், அரசு சலுகை கள் கிடைக்காமல் போகாது என, அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.'மத்திய அரசின் நலத்திட்டங்களில் அளிக்கப்படும் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெற, ஆதாரை கட்டாய மாக்கக் கூடாது' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுளை ஏற்கனவே பிறப்பித்துள்ளது.

இருப்பினும், சமையல், 'காஸ்' மானியம், ஜன் தன் திட்டம், பொது வினியோக முறை ஆகிய வற்றின் பலன்களை பெற, பொதுமக்களி டம் இருந்து, அவர்களின் விருப்பத்துடன், ஆதார் அட்டைகளை பெறுவதற்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 12, 2017

Whether NRI Student Can Seek Medical Admission Only In NRI quota In Deemed Universities- Kerala HC To Decide | Live Law

Whether NRI Student Can Seek Medical Admission Only In NRI quota In Deemed Universities- Kerala HC To Decide | Live Law: A Non-Resident Indian (NRI) student has petitioned the Kerala High Court on finding that only seats in NRI quota in deemed universities were made available to him for exercising choices in the centralized medical counseling held for deemed universities, regardless of his merit. From this year onwards, admission to all seats in private colleges and …

NEWS TODAY 22.08.2026