Sunday, July 30, 2017

அதிரடி!

வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்க வரித்துறை... சமூக வலைதளங்களை பயன்படுத்த திட்டம்

புதுடில்லி, வரி ஏய்ப்பாளர்களை கண்டறிய, வங்கிகளை மட்டும், இனி, வருமான வரித் துறை நம்பியிருக்கப் போவதில்லை. 'இன்ஸ்டா கிராம்' போன்ற சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி, வரி ஏய்ப்பாளர்களை கண்டு பிடிக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.




வருமான வரி வசூலிக்க, பல்வேறு நடவடிக்கை களை, மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனாலும், எதிர்பார்த்த அளவு, வருமான வரி வசூலாவதில்லை என்பது தான் உண்மை. கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வர, பல சலுகை திட்டங்களை, அரசு அறிவித்தது. ஆனால், அதிலும், எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை. வரி ஏய்ப்பாளர்களின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துக் கொண்டே போகிறது.

வங்கிகள் மூலம் தான், பெரும்பாலும் வரி ஏய்ப்பாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். இவர்களின் வரவு - செலவு, சேமிப்பு, கடன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு தான், வரி ஏய்ப்பாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வங்கிகளை தவிர, சமூக வலை தளங்களை பயன்படுத்தியும், வரி ஏய்ப்பாளர் களை கண்டறிய, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இது பற்றி, வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: 'இன்ஸ்டா கிராம், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங் களை, பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சமூக வலைதளங்களில், தங்கள், குடும் பத்தின் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். தாங்கள் வாங்கிய விலையுயர்ந்த காரின் முன், புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதை சமூக வலைதளங்களில் வெளி யிடுகின்றனர்.புதிதாக வாங்கிய சொத்துகளின் படங்களையும் வெளியிடுகின்றனர்.

இதனால், இந்த சமூக வலைதளங்களை கண் காணிக்க முடிவு செய்துள்ளோம். இதில், கணக்கில் காட்டாத சொத்துகளுக்கான படங்களை வெளி யிட்டிருந்தால், அதை கணக்கில் எடுத்துக் கொண்டு விசாரிப்போம். இதில், மூன்றாவது நபர் தலையீடு இருக்க முடியாது.இதற்காக 'பிராஜக்ட் இன்சைட்' என்ற பெயரில், ஆவண காப்பகம் ஒன்று விரைவில் துவங்கப்பட உள்ளது.

இதில், வருமான வரி செலுத்துவோரின் விபரங்கள், அவர்களின் விரல் ரேகை உட்பட, அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.சமூக வலைதளங்களை கண் காணிக்க குழு அமைக்கப்படும். அந்த குழு, சமூக வலைதளங்களில் ஆய்வு செய்து, வருமான வரி தொடர்பான புகைப்படங் களை,பிராஜக்ட் இன்சைட் டுக்கு அனுப்பும்.அதை வைத்து,நாங்கள் விசாரணை நடத்துவோம். இதனால், வரி ஏய்ப்பாளர்களை கண்டறிந்து, வரி வசூலை அதிகரிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

வசூல் அதிகரிக்கும்

வருமான வரி ஆலோசகர் ஒருவர்கூறியதாவது: பெல்ஜியம், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுக ளில், வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்க, நவீன தொழிற்நுட்பங்கள் தான் அதிகளவில் பயன்படுத்ப்படுகின்றன.பிரிட்டனில்,2010 முதல்,இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், 3,456 கோடி ரூபாய் வருவாய் இழப்பு தடுக்கப் பட்டுள்ளது. மேலும், வரி ஏய்ப்பாளர்கள் மீதும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த முறை அமலுக்கு வரும் போது, வரி வசூல் நிச்சயம் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

திட்டத்துக்கு வரவேற்பு

இது பற்றி சமூக வலைதள ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:சமூக வலைதளங்கள் பெரும் பாலும், ஆபாசத்துக்கு தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன என, ஆதாரமின்றி சிலர் குற்றம் சாட்டுகின்றனர்; இது தவறு. சமூக வலைதளங்கள் மூலம், மக்களுக்கு நல்ல தொடர்பு கிடைக்கிறது.

அதே போல், சமூக வலைதளங்கள் மூலம், வரி ஏய்ப்பாளர்களை கண்டறியும், மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. ஏனெனில், சமூக வலைதளங்களில், தங்களை பற்றிய விபரங் களை தெரிவிப்பவர்கள், மிகவும் கவனத்துடன் செயல்பட, இது வழிவகுக்கும். அதே நேரத்தில் ஏரி ஏய்ப்பு செய்வதையும் தடுக்க முடியும்.

மேலும், விசாரணை என்ற பெயரில், யாரை யும், துன்புறுத்தும் நடவடிக்கைக்கும் வாய்ப்பு இருக்காது. அதனால், இந்த நடவடிக்கையை, அரசு, உடனே துவக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
எங்கே அமையபோகிறது 'எய்ம்ஸ்'?; மத்திய அரசு - தமிழக அரசு 'சடுகுடு'

பதிவு செய்த நாள்
ஜூலை 30,2017 07:40



மதுரை: 'தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் இடத்தை தேர்வு செய்ய வேண்டியது மத்திய அரசுதான்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்,தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அறிவிப்பு

தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க உத்தரவிடக் கோரி, மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், பல்வேறு இடங்களில் மத்தியக்குழு ஆய்வு செய்தும், எங்கு, 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய உள்ளது என்பது பற்றி, அறிவிப்புவெளியாகவில்லை. இது குறித்த அறிவிப்பை வெளியிட, மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் இயக்குனருக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மத்திய சுகாதாரத்துறை சார்புச் செயலர், வினோத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தகுந்த இடத்தை அடையாளம் கண்டு, மாநில அரசு தான் பரிந்துரைக்கவேண்டும்; அதன்பின் மத்திய சுகாதாரத்துறை ஆய்வு செய்து, அது உகந்த இடம்தானா என்பதை முடிவு செய்யும்' என, தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனு:முடிவு செய்யப்படும்ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை தோப்பூரில், மத்திய அரசின் குழு, ஆய்வு செய்தது. இவ்விவகாரத்தில், மத்திய அரசு அவ்வப்போதுகோரும் விபரங்களை, தமிழக அரசு அளித்து வருகிறது.தமிழக அரசு, 2016, பிப்ர வரியில், 'எங்கு எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, அதற்கான பணியை விரைவுபடுத்த வேண்டும்' என, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.

மத்திய அரசு, 'விரைவில் முடிவு செய்யப்படும்' என, பதிலளித்தது.மாதிரித் திட்டம் உட்பட, கூடுதல் விபரங்களை, சமீபத்தில், மத்திய அரசுக்கு வழங்கியுள்ளோம். அடிப்படை வசதிகளை செய்துதரத் தயார். எங்கு, 'எய்ம்ஸ்' அமைப்பது என, இடம் தேர்வு செய்வதில், முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான்.

இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.வழக்கு, ஆக., 1ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
'ஆதார் - பான்' விபரம் இணைப்பதில் சிக்கல் ; வருமான வரி தாக்கலுக்கு அவகாசம்?

பதிவு செய்த நாள் 30 ஜூலை
2017
03:19



'ஆதார்' கார்டை, 'பான்' கார்டுடன் இணைப்பதில் சிக்கல் உள்ளதால், பலர் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு முதல், ஆதார் எண் இருந்தால் தான், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், பான் கார்டு எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்பின், ஆதார் அட்டை வாங்காதிருந்த, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் மையங்களை முற்றுகையிட துவங்கினர். இதனால், சில வாரங்களாக ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் அலைமோதி, சர்வர் கோளாறாகி, பணிகள் முடங்குகின்றன.

இணைப்பில் சிக்கல்

இதனிடையே, ஆதார் கார்டு வைத்திருந்தாலும், அதில் உள்ள விபரங்கள், பான் கார்டில் உள்ள விபரங்களுடன் ஒத்து போகாததால், ஆயிரக்கணக்கானோர், அவை இரண்டையும், இணைக்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த குறைபாட்டை தவிர்ப்பதற்காக, மீண்டும் பான் அட்டைக்கோ, ஆதார் அட்டைக்கோ, திருத்தம் கோரி மனு கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த நடைமுறைகள் முடிய, 10 நாட்களுக்கு மேல் ஆவதால், கடைசி தேதியான, ஜூலை, 31க்குள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.அதனால், ஜூலை, 31 கெடுவை, மேலும், ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என அவர்கள், எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து, தமிழக வருமான வரித் துறையினர் கூறுகையில், 'காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். 2016ல், ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஒரு வாரம் அவகாசம் நீடிக்கப்பட்டது. இந்த ஆண்டு நீட்டிப்பு குறித்து, உத்தரவு ஏதும் வரவில்லை' என்றனர்.

- நமது நிருபர் -
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும்

பதிவு செய்த நாள்
ஜூலை 30,2017 03:19



சென்னை: பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட அயோத்தி எக்ஸ்பிரஸ், கும்பகோணத்தில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து, உத்தரபிரதேச மாநிலம், பைசாபாத்துக்கு, அயோத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் துவங்கி வைத்தார். இந்த ரயில், மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சென்னை எழும்பூரில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரயில், கும்பகோணம் வழியாக சென்ற போதும், கும்பகோணத்தில் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை.

இந்த ரயில், கும்பகோணத்திலும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, கும்பகோணத்தில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படும்போது, காலை, 8:03 மணிக்கு கும்பகோணம் சென்றடையும். அங்கிருந்து, 8:07 மணிக்கு புறப்படும். பைசாபாத்திலிருந்து வரும்போது, அதிகாலை, 12:58 மணிக்கு கும்பகோணம் வந்தடையும். அங்கிருந்து, அதிகாலை, 1:00 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு விமான சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

பதிவு செய்த நாள் 30 ஜூலை
2017
07:37




சென்னை : இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, விமான சுற்றுலாவை அறிவித்துள்ளது.

* சீனாவுக்கான சுற்றுலா, சென்னையில் இருந்து, செப்., 29ல், புறப்படும். இந்த ஏழு நாள் விமான சுற்றுலாவுக்கான கட்டணம், நபர் ஒன்றுக்கு, 94 ஆயிரம் ரூபாய்

* லண்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் இத்தாலியில் உள்ள வாடிகன் நகருக்கு, 15 நாள் விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்.,12ல் துவங்கும் இச்சுற்றுலா கட்டணம், 2.48 லட்சம் ரூபாய்விரிவான தகவல்களைப் பெற, சென்னையில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 98409 02916 மற்றும், 98409 02916 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்; www.irctctourism.com என்ற இணையதளத்திலும், விபரங்களை அறிந்து கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.
ஏசி பெட்டிகளில் போர்வை கிடையாது: ரயில்வே முடிவு

புதுடில்லி: குறிப்பிட்ட சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வை வழங்குவதை நிறுத்த ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் சி.ஏ.ஜி., தனது அறிக்கையில், ரயில்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என ரயில்வேக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

செலவு அதிகம்:

இதனையடுத்து குறிப்பிட்ட சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கப்படுவதை நிறுத்தி வைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த ரயில்களில் சோதனை முயற்சியாக பயணிகள் குளிரில் நடுங்காமல் இருக்க வெப்பநிலை 19 டிகிரி செல்சியசிலிருந்து 24 டிகிரி செல்சியசாக அதிகரிக்க முடிவு செய்துளோம். மற்ற ரயில்களில் ஏசி பெட்டிளில் போர்வைகள் வழங்கப்படும். அதிக செலவு காரணமாக போர்வைகள் வழங்குவதை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. பயணிகளுக்கு போர்வை மற்றும் படுக்கை விரிப்பை சுத்தப்படுத்த ரூ.55 செலவாகிறது. ஆனால், பயணிகளிடம் ரூ.22 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புதுத்திட்டம்:

ரயில்வே விதிமுறைப்படி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அவற்றை சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், ஊழியர்கள் இதனை முறையாக பின்பற்றுவதில்லை. இதனால், பயணிகள் புகார் கூறுகின்றனர்.
இதனை தவிர்க்க ரயில்வே கடந்த வருடம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி, டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகள், ஒரு முறைபயன்படுத்தக்கூடிய படுக்கை விரிப்பு மற்றும் போர்வையை ஐஆர்சிசிடி இணையதளம் மூலம் புக்கிங் செய்து, ரயில் நிலைய கவுண்டர்களில் பெற்று கொள்ளலாம். இதன்படி 2 படுக்கை விரிப்புகள் ஒரு தலையணைக்கு ரூ.140 அல்லது ஒரு போர்வைக்கு ரூ.110 செலுத்த வேண்டும். பயணத்திற்கு பின்னர் பயணிகள் அவற்றை வீட்டிற்கு கொண்டு செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, July 28, 2017

ஆக. 2ல் சித்தா விண்ணப்பம்!!!

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ
படிப்புகளுக்கு, ஆக., 2 முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 859 இடங்கள் உள்ளன.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பை, ஆக.,2 முதல், 30 வரை, சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம் மற்றும் கோட்டார் அரசு இந்திய முறை மருத்துவக் கல்லுாரி முதல்வர்களிடம் இருந்து, அலுவலக வேலை நாட்களில், நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆக., 31 மாலை, 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, www.tnhealth.org இணையதளத்தை பார்வையிடலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house?

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house? Check daily menu at Antilia Mukesh Ambani’s home prepares around 4,000 rotis eve...