Sunday, July 30, 2017

‘Be alert about DoB change pleas’

By Siva Sekaran  |  Express News Service  |   Published: 30th July 2017 02:32 AM  |  
Last Updated: 30th July 2017 08:12 AM  
 
CHENNAI: IF an employee seeks an alteration of his date of birth on the eve of his retirement, then a court of law must be doubly careful and cautious in accepting the request, as the attitude or tendency among the employees to raise such a plea comes only at the fag end of their career. Therefore, such a plea for alteration at the eleventh hour should not be entertained because of the possible wide ranging ramifications and repercussion to follow, which may result in compounding the problem in a manifold ways, the Madras High Court has ruled.

A division bench of Justices M Venugopal and S Baskaran gave the ruling while dismissing a revision  application from Jeyaratnakumar, on July 24 last. Challenging the orders dated February 1, 2008 of a division bench refusing to effect change in his date of birth, petitioner filed the present revision in 2017.

Petitioner was appointed as Assistant Public Prosecutor in the Department of Prosecution by the TN Public Service Commission in 1995 on the basis of his date of birth of June 1, 1960.
Facing superannuation, he moved the High Court to change his date of birth as February 9, 1961. As the single judge refused, he approached a division bench, which in 2008 upheld the single judge’s rejection order.Petitioner was given the appointment only on the basis of his year of birth as 1960. Otherwise, his candidature would have been rejected on grounds of shortage of age, the bench had pointed out.

தீர்வு!

By ஆசிரியர்  |   Published on : 29th July 2017 01:56 AM  | 

 நீட் தகுதித் தேர்வில் கலந்து கொண்ட சமச்சீர் கல்வி பயின்ற மாணவர்களில் வெறும் 5 விழுக்காட்டினர் மட்டும்தான் மருத்துவக் கல்லூரியில் இடம்பெறத் தகுதி பெற்றிருக்கிறார்கள். சமச்சீர் கல்வி முறையில் 12 ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றும்கூட நீட் தேர்வு எழுதாததால் மருத்துவம் படிக்க முடியாமல் போனவர்கள் ஒருபுறம்; சமச்சீர் கல்விமுறையில் படித்து அதிக மதிப்பெண் பெறாமல், தனியார் பயிற்சி வகுப்புகள் மூலம் தங்களைத் தயார் செய்துகொண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு மூலம் தகுதி பெற்றிருப்பவர்கள் இன்னொருபுறம்.

தமிழகத்திலுள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,900 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 434 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குத் தரப்படுகின்றன. மீதமுள்ள 2,466 இடங்கள் தமிழக அரசால் நிரப்பப்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல், அரசால் நிர்வகிக்கப்படும் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் உள்ள 128 இடங்களும் அரசின் நேரடி ஒதுக்கீட்டில் உள்ளன. தமிழகத்தில் உள்ள 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1,300 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் நிர்வாகத்துக்கான இடங்கள் போக அரசு ஒதுக்கீட்டுக்கு 783 இடங்கள் இருக்கின்றன.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படுமேயானால், தமிழக அரசின் சமச்சீர் கல்வி முறையில் படித்த மாணவர்
களுக்கு 85 விழுக்காடு இடங்களையும், மீதமுள்ள இடங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் கல்வி பெற்றிருப்பவர்
களுக்கும் ஒதுக்கலாம் என்பதுதான் தமிழக அரசின் வேண்டுகோள். அதாவது, அரசிடமுள்ள 2,466 இடங்களில் 2,094 இடங்களையும் தனியார் கல்லூரிகளில் உள்ள 763 இடங்களில் 664 இடங்களையும் சமச்சீர் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கித் தருவதன் மூலம் அவர்களது நலனைப் பாதுகாக்க முடியும் என்று கருதுகிறது மாநில அரசு. இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் பிரச்னை.
85% இடங்களை சமச்சீர் கல்வி மாணவர்களுக்கு வழங்க ஏக
மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது தமிழக சட்டப்பேரவை. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இயற்றிய சட்டம் இதுவரையில் குடியரசுத் தலைவரின் ஒப்பு
தலைப் பெறவில்லை. அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காவது நீட் தகுதித்தேர்வின் அடிப்
படையிலான மாணவர் சேர்க்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவசரச் சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே இந்தக் கோரிக்கை சாத்தியமாகும்.
மாநில அரசுகளின் கல்வித் தரம் மிகவும் மோசமானதாக இருக்
கிறது என்பதும், பெருநகரங்களில் இயங்கும் என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களின் அடிப்படையில் இயங்கும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தரத்துடன் ஒப்பிடும்படியாக இல்லை என்பதும் உண்மைதான். கிராமப்புற மாணவர்கள் அந்தத் தரத்துக்கு உயர்த்தப்பட வேண்டும் என்பது லட்சியமாக இருந்தாலும்கூட, அது உடனடி சாத்தியமா என்றால் இல்லை. இன்னும்கூட சத்துணவு கிடைக்கிறது என்பதற்காகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் லட்சக்கணக்கில் இருக்கும் நிலையில் அடித்தட்டு மக்கள் அதிக நன்கொடையும் கல்விக் கட்டணமும் அளித்துத் தங்கள் குழந்தைகளை மருத்துவர்களாக்க விழைவது அசாத்தியமானதே.
அதேபோல, அரசின் சமச்சீர் கல்வியின் தரத்தை "என்.சி.இ.ஆர்.டி.' புத்தகங்களின் அடிப்படையில் மாற்றியமைத்து கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதும், லட்சியத்தின் பாற்பட்டதாக இருக்குமேயொழிய நடைமுறை சாத்தியமாக இல்லை. நூற்றாண்டுகளாக கல்வி வாசனையே இல்லாத சாமானியர்களை, ஆங்கில வழிக் கல்விக்கோ அல்லது அவர்களுடைய புரிதலுக்கு எட்டாத கல்வி முறைக்கோ உடனடியாக உட்படுத்த வேண்டும் என்பது அவலை நினைத்து உரலை இடிப்பதாக அமையும்.

அதற்காக தகுதி இல்லாதவர்களும் வருங்காலத்தில் நல்ல மருத்துவர்களாக உருவாக முடியாதவர்களும் மருத்துவப் படிப்பில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதல்ல நமது வாதம். அடித்தட்டு மாணவர்களிலும் சமச்சீர் கல்வி முறையில் படித்த புத்திசாலி மாணவர் 
களுக்கு, அதிகக் கல்விக் கட்டணம் அளித்துப் படித்த வசதியான மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புத் தரப்பட வேண்டும். நீட் தேர்வு எழுதாதவர்கள் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றம் கருதுவது சரியல்ல.
தமிழகத்தில் 6,877 பள்ளிக்கூடங்களில் மருத்துவப் படிப்புக்கான தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4.2 லட்சம். 268 தனியார் பள்ளிகளில் கட்டணமும் நன்கொடையும் அளித்து சி.பி.எஸ்.இ. முறையில் மருத்துவப் படிப்புக்கான தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4,276. மாவட்டந்தோறும் அரசு நிறுவியிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் பெரும்பாலான இடங்  களும் 4.2 லட்சம் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டு, வசதி படைத்த 4,276 மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று சொன்னால் இதைவிட பெரிய அநீதி எதுவும் கிடையாது. இந்த வாதத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் எடுத்துரைக்கத் தவறியதா அல்லது நீதிமன்றம் அதைப் புரிந்துகொள்ளத் தவறியதா என்று தெரியவில்லை.
இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கிறது. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் பிளஸ்2-வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்ணையும் கூட்டிப் பார்த்து அவற்றின் சராசரியைக் கணக்கிட்டு அதனடிப்படையில் மருத்துவக் கல்விக்கான தகுதி நிர்ணயிக்கப் படுவதுதான் அது.
அப்துல் கலாம் சிலை அருகில் பைபிள், குர்ரான் வைத்தார் அவரது அண்ணன் பேரன்

By DIN | Published on : 30th July 2017 11:32 AM |

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அவரது மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ந் தேதி திறந்து வைத்தார்.

இந்த மணிமண்டபத்தில் இடம்பெற்ற அப்துல் கலாம் சிலைகளில் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் கலாம் அவர்கள் வீணை வாசிப்பது போன்ற சிலை வைக்கப்பட்டு அதன் அருகில் பகவத் கீதை புத்தகம் இடம்பெற்றது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாம் சாதி, மத, இன, மொழி என அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். எனவே வீணை வாசிப்பது போன்றும் பகவத் கீதை இடம்பெற்றதும் தவறு என தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவ்விடத்தில் திருக்குறள் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்தச் சிலையில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை அருகில் இஸ்லாமின் புனித நூலான குர்ரான் மற்றும் கிறிஸ்துவ புனித நூலான பைபிள் ஆகியவற்றை கலாம் அவர்களின் அண்ணன் பேரன் சலீம் ஞாயிற்றுக்கிழமை வைத்தார்.

இதுகுறித்து சலீம் கூறும்போது:

நான் கலாம் அவர்களுடன் 6 வருட காலம் பணியாற்றியுள்ளேன். அவரது அலுவலகத்தில் எப்போதும் அனைத்து புத்தகங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், பகவத் கீதை மட்டும் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய காரணத்தால் இதைச் செய்தேன்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன். அவர்கள் விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். கடந்த 2 தினங்களாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் அந்தச் சிலை அருகில் ஒரு கண்ணாடிப் பேழையில் குர்ரானும், பைபிளும் வைக்கப்பட்டிருந்தது.

அதையே வெளியே எடுத்து வைத்தேன். இதில் அரசியல் வேண்டாம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோரிக்கை வைத்தார்.

மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி திடீர் நிறுத்தம்!!!

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.

புழக்கத்தில் உள்ள மின்னணு அட்டைகளில் பிழைகளைத் திருத்தவும், புதிதாக வழங்கப்படவுள்ள அட்டைகள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் 1.95 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த
அட்டைகள் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆதார் விவரங்கள் அனைத்தையும் தமிழாக்கம் செய்தும், கூடுதல் விவரங்களை குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து பெற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் வாரத்துக்கு தலா 100 மின்னணு குடும்ப அட்டைகள் வீதம் வழங்கப்பட்டு வந்தன. இந்த அட்டைகளில் பிழைகள் அதிகளவு இருப்பதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மின்னணு குடும்ப அட்டை பெற்றவர்கள் அதில் திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

வீடுகளில் இணையதள இணைப்பு வைத்திருப்போர் அதன் மூலமாகவும், இணைப்பு இல்லாதோர் அரசு இணைய சேவை மையங்களுக்கும் சென்று திருத்தப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில், மின்னணு குடும்ப அட்டைகள் பிழைகள் ஏதும் இல்லாமல் 100 சதவீதம் சரியான முறையில் வழங்குவதற்காக அந்த அட்டைகள் வழங்கும் பணி தாற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.36 கோடி பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கத் தயார் நிலையில் உள்ளன.

சுமார் 25 லட்சம் பேரிடம் இருந்து புகைப்படம் உள்ளிட்ட விஷயங்களைப் பெற வேண்டியுள்ளது. எனவே, முழுமை   யான விவரங்களைப் பெற்று அட்டைகள் அளிக்கப்படும் என்றனர்.

சென்னையில் தொய்வு: சென்னை நகரத்தைப் பொருத்தவரை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் உரிய விவரங்களை முழுமையாகப் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் மின்னணு குடும்ப அட்டைப் பணிகளில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாற்றங்கள் மாறுவதில்லை: உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர்களின் மெத்தனத்தால் இணையதளம் வழி
யாக முகவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளைச் செய்த குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் மாற்றப்படவில்லை.
பழைய அட்டையிலேயே பொருள்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்த போதும் திருத்தங்களைச் செய்து தர உணவுப் பொருள் அலுவலர்கள் முன்வராத காரணத்தால் குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெற முடியாத நிலையும் பல இடங்களில் உருவாகியுள்ளது.
அடுத்த மாதம் முதல்... பிழைகள் திருத்தம், புதிய அட்டைகளை திருத்தங்கள் ஏதுமில்லாமல் தயாரிப்பது போன்ற பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டவுடன் அவை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Research no longer must for promotion of college profs: Min


New Delhi:
TNN


Union human resource development (HRD) minister Prakash Javadekar said on Saturday that research would no longer be a condition for college professors' promotion. However, research will continue to be mandatory for university teachers' promotion.

 With this decision, the government has addressed a long-standing grievance of teachers who have termed the academic performance index (API) comprising the research condition unfair.

Speaking at the inauguration of a two-day conference attended by teachers from over 80 universities, and organised by the Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh (ABRSM) and Delhi University's Deen Dayal Upadhyay College, the minister said that the opposition to API made him realise that compulsory research for promotions of college professors could not work. “But they still have to mandatorily do a student and a community activity for a promotion,“ he added. He said teachers intent on research could pursue it. “It will be choice-based,“ he stated. He also spoke about cre ating smart campuses with an emphasis on energy conservation and cleanliness.There will be a smart campus competition, which, he said, will centre on “saving electricity, harvesting water and energy generation through solar panels on college roofs“. “All institutes have to participate in this and we will rank them on cleanliness,“ he added.
On the issue of the norms for ad hoc employees in DU, where there are over 9,000 ad hoc teachers, much more than in other universities, the minister said the system would be changed “and their appointment be regularised in a year's time“.

DSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....


DIGITAL SERVICE REGISTER(DSR) MAINTENANCE MANUAL
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

DSR (Digital SR)

அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....

மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு பணிப்பதிவேட்டை
DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்
அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:


🍇 *அனைத்து SR யும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்*

🍇 *SR DISTRICT TREASURY -ல் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக போன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்*

🍇 *மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்*

🍇 *ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்*

🍇 *ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்*

🍇 *அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும். வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..*

🍇 *ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்*

🍇 *RETIREMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது. மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்*

🍇 *ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளி SR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்*

🍇 *SR SCAN செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்.அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...*

🍇 *SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்., இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...*

🍇 *N.O.Cஆதார்எண், சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..*

🍇 *எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது*

🍇 *DSR ல் NEXT INCREMENT ,HRA SLAB அனைத்துமிருக்கும்*


🍇 *SCAN முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,*,

*அதன்பின் நாம் ஏதேனும் பிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,உயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்*
After CAG rap, Rlys plans to stop blankets in AC coaches
New Delhi:
TIMES NEWS NETWORK 
 


Facing flak for supplying dirty blankets, railways is working on a pilot project to discontinue providing blankets in their air-conditioned (AC) coaches in some trains.
 
Recently , CAG, in its report tabled in Parliament, criticised railways on cleanliness and hygiene. On a trial basis, the railways will maintain the temperature at 24 °C, up from the cur rent 19°C to do away with the practice of providing blankets in AC coaches.

“We are trying to run a pilot on some trains,“ said a senior official. “We are not implementing it across all trains.“

As per the initial estimates, the move was a more economical option, considering that it takes `55 to clean the bedroll while passengers are charged `22 for its use.

According to railway guidelines, the blankets were to be washed every one to two months, which was not followed and the transporter was flooded with complaints.

Last year, the transporter started a scheme under which passengers with a confirmed ticket for travel can book the disposable bedrolls through IRCTC website or purchase from designated counters at the stations. The passenger can take it home after the journey .

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished On 15 Feb 2026 11:00 AM  |  Updated On 15 Feb 2026 11:00 AM New Delhi: The Union Ministry of Health and Family Welfare has informed the Lok Sabha that India currently has a total of 818 medical colleges, including AIIMS and Institutes of National Importance (INIS) across India. The details were shared in response to an Unstarred Question on February 6, 2026. Replying to queries raised by Shri Jagannath Sarkar regarding districts without government medical colleges and plans for prioritising high-population districts, Minister of State for Health and Family Welfare Shri Prataprao Jadhav said that the National Medical Commission (NMC) has reported a total of 818 medical colleges nationwide. Also Read: 18 AIIMS Functional, 4 Under Construction: Health Minister tells Parliament As per the list shared in this regard, Uttar Pradesh has the highest number of medical colleges at 88 (51 government and 37 private), followed by Maharashtra with 85 (43 government and 42 private), and Tamil Nadu with 78 colleges (38 government, 40 private). Karnataka has 72 (24 government and 48 private), Telangana has 66 (37 government, 29 private), and Rajasthan has 49 (34 government, 15 private). However, several smaller States and UTs, such as Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Chandigarh, Goa, Mizoram, Nagaland and Sikkim have only one medical college each.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished O...