Saturday, August 5, 2017


நீங்க கல்யாணம் ஆனவரா? பல மனைவிகள் இருக்கா? வில்லங்கமாக கேள்வி கேட்கும் கல்லூரி!
சோ.கார்த்திகேயன்


எந்த ஒரு விண்ணப்பப் படிவத்திலும், திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா போன்ற கேள்விகள் மட்டுமே கேட்கப்படுவது வழக்கம். ஆனால், பீகார் மருத்துவக் கல்லூரியில் வில்லங்கமாகக் கேட்கப்பட்ட கேள்விகள், பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.




பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரி, தனது ஊழியர்களை நியமிக்கும் பொருட்டு, அவர்களிடம் நீங்கள் கல்யாணம் ஆகாதவரா (virgin), உங்களுக்குப் பல மனைவிகள் உண்டா? போன்ற வில்லங்கமான கேள்விகளைக் கேட்டிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த மருத்துவக் கல்லூரியில், புதிய ஊழியர்களை நியமிக்கும் பொருட்டு விண்ணப்பப் படிவத்தில் திருமணம்குறித்த சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்தக் கேள்விகள் மருத்துவமனை ஊழியர்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்தப் படிவத்தில், ஆண் ஊழியர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால், அந்த விவரங்களை வழங்குமாறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில், பெண் ஊழியர்களுக்கு அவர்களது கன்னித்தன்மை பற்றிக் குறிப்பிடுமாறும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது மட்டுமன்றி ,பெண் ஊழியர்களாக இருந்தால், அவர்களுடைய கணவருக்கு ஏற்கெனவே மனைவி இருக்கிறதா, அவருடைய மனைவி உயிருடன் இருக்கிறாரா எனப் பல வில்லங்கமான கேள்விகள் கேட்கப்பட்டு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
Posted Date : 09:50 (01/08/2017)

மன்னார்குடி திவ்யாவை கொன்ற இளவரசி உறவினர்களின் வாக்குமூலம்!

சே.த.இளங்கோவன்

VIKATAN



உலகமெங்கும் சராசரியாக ஒருநாளைக்கு 5,500 கோடி 'வாட்ஸ்அப்' மெசேஜ்கள் அனுப்பப்படுவதாக அந்த நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்றதொரு மெசேஜ் உதவியால், தற்கொலை என ஜோடிக்கப்பட்ட திவ்யா என்ற பெண்ணின் மரணம், கொலை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இக்கொலைக்குக் காரணமானவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்ததில், பல திகில் பின்னணிகள் வெளியாகி உள்ளன.

"திருவாரூர் மாவட்டம் சேரன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ கார்த்திகேயன் மகள் திவ்யா. இவரை, மன்னார்குடியைச் சேர்ந்த முத்தழகன்-ராணி தம்பதியின் மகனான திருச்சி அப்போலோவில் மருத்துவராகப் பணியாற்றும் இளஞ்சேரனுக்கு, கடந்த 2011-ம் ஆண்டில் திருமணம் செய்துவைத்தனர். முத்தழகன் யார் என்றால், மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.பாலகிருஷ்ணனின் மகனாவார். மேலும், முத்தழகனின் சகோதரி வளர்மதியை, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளஇளவரசியின் அண்ணன் வடுகநாதன் திருமணம் முடித்துள்ளார். இப்படி அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தில் 100 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து, அந்தக் குடும்பத்தில் வாக்கப்பட்டார் திவ்யா. பல்வேறு வண்ணக் கனவுகளோடு புகுந்தவீடு சென்ற திவ்யாவின் கனவுகள் சில வருடங்களிலேயே நிர்மூலமாக்கப்பட்டது. ஆம், புது மலராகச் சென்ற திவ்யாவை பிணமாகத்தான் திருப்பி அனுப்பியது முத்தழகன் குடும்பம். 'சந்தேக மரணம்' என்று வழக்குப்பதிவுசெய்து முத்தழகன், ராணி, இளஞ்சேரன் மூவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தது மன்னார்குடி காவல்துறை. இந்நிலையில், இந்த வழக்கில் திடீர்த் திருப்பமாக, சந்தேக மரணமாக இருந்த திவ்யா வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட திவ்யாவின் கணவர் உள்ளிட்ட மூவரையும், ஜூலை 27 முதல் 29-ம் தேதிவரை மூன்று நாள்கள், மன்னார்குடி போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்துள்ளனர். விசாரணையின்போது கிடைத்தத் தகவல்கள், இந்த வழக்கில் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர், விசாரணையை அறிந்த போலீஸ் உயரதிகாரிகள்.

"போலீஸ் விசாரணையில் கிடைத்த உண்மைகள் என்ன?" என முக்கிய அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம். "போலீஸ் விசாரணையின்போது, ஒரு இருகிய மனநிலையில்தான் முத்தழகன் இருந்தார். 'எனக்கு வயசாகிடுச்சு. உடல் பலகீனமா இருக்கு. மன உளைச்சல ஏற்படுத்துற கேள்வி ஏதும் கேட்காதீங்க' என்றார் எடுத்தவுடனே. 'உங்க மெடிக்கல் ரிப்போர்ட்ல இருந்து, எல்லாமே பார்த்துவிட்டுத்தான், நாங்க விசாரணை நடத்த வந்திருக்கோம். சட்டப்படிதான் எங்கள் விசாரணை இருக்கும். பயப்படாதீங்க' என்று கூறி விசாரணை டீம் கேள்விகளைக் கேட்டது. பல கேள்விகளுக்கு 'ஆம்', 'இல்லை' என்று ஒரு வார்த்தையில் மட்டுமே அனைவரும் பதிலளித்தனர். திவ்யா மரணம் குறித்து துருவித் துருவி போலீஸார் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். 'திவ்யா தற்கொலைதான் செய்துகொண்டார்' என்று சாதித்தவர்களிடம், 'சம்பவத்தன்று ஏழு மணியளவில் தன்னோட பெரியம்மா பொண்ணுக்கு திவ்யா கால் செய்து பேசியிருக்கிறார். அதேநேரத்தில் வாட்ஸ்அப்பில், நட்பு வட்டங்களுக்கு இயல்பாக மெசேஜ் அனுப்பியுள்ளார். கணவர் இளஞ்சேரனுக்கும் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அந்த மெசேஜ் எல்லாம், இயல்பாகவே உள்ளது' என்று கேட்டபோது, 'இல்லை' என்று மறுத்துள்ளனர் முத்தழகன் குடும்பத்தினர். திவ்யா அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜில் உள்ள தகவல்களை விசாரணை அதிகாரிகள் காட்டவே, கப்சிப் ஆகினர். திவ்யாவின் வாட்ஸ்அப், இரவு ஏழரை மணி வரையிலுமே ஆன்லைன் காட்டியுள்ளது. எனவே, அவர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனவே, இனியும் நீங்கள் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்று கேட்டுள்ளனர்.

தொடர்ந்து, மௌனத்தைக் கடைபிடித்த முத்தழகன் குடும்பத்தினரிடம் கேள்வியெழுப்பிய டீம், 'திவ்யாவை நீங்களே அடித்துக் கொன்றுவிட்டு, நாடகமாடியுள்ளீர்கள். அதிலும், உச்சகட்டமாக அரசு மருத்துவமனைக்கு திவ்யாவை கொண்டு வந்தபோது, 'அம்மாவை திருடன் வந்து கொன்னுட்டுப் போய்ட்டான்' என இரண்டு வயசுப் பையனைப் பேசவைத்து, அதை ரெக்கார்டு செய்து, திவ்யா குடும்பத்தினரிடம் போட்டுக் காட்டியுள்ளீர்கள். ஒருவர் இறந்த துக்கத்தில் இருப்பவர்கள், இப்படியெல்லாம் ரெக்கார்டு செய்யணும் என்று யோசிக்க முடியுமா? அப்படியென்றால் தவறுசெய்த நீங்கள், தப்பிக்க பச்சை குழந்தையையும் பகடைக்காயாக மாற்ற முயற்சித்துள்ளீர்கள்' என்று விசாரணை அதிகாரிகள் தங்கள் குரலில் கடுமையைக் கூட்டினர். அதன்பின்னரே கடைசியில் திவ்யாவை தாங்கள் கொலைசெய்ததை முழுமையாக ஒப்புக்கொண்டனர்" என்றனர் அதிகாரிகள்.



முத்தழகன் குடும்பத்தினரின் வாக்குமூலம் என்ன?

"திவ்யாவிடம் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு 17.7.17 அன்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரித்து, திருவாரூரில் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவில் எஸ்.எஸ்.ஐ-யாக இருக்கும் ராணியின் அண்ணன் சிவக்குமாரை வரவழைத்துள்ளனர். அவர், கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் செந்திலைக் கூட்டி வந்துள்ளார். அவர்களும் சேர்ந்து திவ்யாவை மிரட்ட, ஒரு கட்டத்தில் சண்டை உச்சம் அடைந்து, திவ்யாவைத் தாக்கியுள்ளார் முத்தழகன். அதன்பிறகு அங்கிருந்த சிவகுமார், கரூர் செந்தில் ஆகியோர் சேர்ந்து, திவ்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுள்ளனர். வீட்டுக்கு வெளியே பேரனுக்கு சோறூட்டிக்கொண்டிருந்த ராணி, அவரைக் காரில் வைத்து பூட்டிவிட்டு, வீட்டிற்குள் வந்தவர் தடயங்களை எல்லாம் அழித்துள்ளார். இந்தக் கொலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பேசப்பட்டு, ஒரு லட்சம் ரூபாயை சிவகுமாருக்கு முத்தழகன் முன்பணமாகக் கொடுத்துள்ளார். இதன்பிறகே, இந்தக் கொலை அரங்கேறியுள்ளது" என்றனர் போலீஸ் அதிகாரிகள் விரிவாக.

தற்போது சிவகுமார், செந்தில் ஆகியோரைத் தனிப்படை போலீஸார் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். அதேநேரம் திவ்யாவின் குடும்பத்தினரோ, "இளஞ்சேரனுக்கு திருச்சியில் வேறொரு பெண்ணுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொள்ள இருந்தார். இந்தத் தகவல் தெரிந்து, திவ்யா அதைக் கண்டித்தார். அதன்காரணமாகவே, திவ்யாவை அவர்கள் அடித்துக்கொன்றுவிட்டனர். முத்தழகனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்காமல், எளிய தண்டனை கிடைக்க மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு முக்கியக் கல்வி நிலைய வேந்தர், முத்தழகன் குடும்பத்துக்கு சப்போர்ட் செய்கிறார். எந்தவகையிலும் முத்தழகன் குடும்பம் தப்பிக்கக்கூடாது" என்கின்றனர் அழுத்தமாக.


திவ்யா வழக்கை விசாரித்து வரும் மன்னார்குடி டி.எஸ்.பி அசோகனிடம் இதுபற்றி நாம் கேட்டோம். "வழக்கை முறையாக விசாரித்து வருகிறோம். கஸ்டடி எடுத்து விசாரித்ததில் கிடைத்த தகவல்களை, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். மேற்கொண்டு இந்த வழக்கின் தன்மையை, திவ்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே சொல்ல முடியும்" என்றார் சுருக்கமாக.

திவ்யாவின் மரணம் ஏற்படுத்திய வலி, இன்னும் சில நாள்களுக்கு மன்னார்குடி மக்கள் நெஞ்சில் இருந்து அகலாது.
''தடுப்பூசி போடுற வரைக்கும் சிரிச்சுட்டே இருந்தா என் பொண்ணு''! - அரசு மருத்துவமனை அலட்சியத்தால் கதறும் தாய்

வீ கே.ரமேஷ்




ஏழ்மையான மக்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு வருவதாலோ என்னவோ, அங்கே எப்போதும் அலட்சியமும் கவனக்குறைவும் மருந்து வாசனைகளை மீறி வியாபித்திருக்கும்.

அப்படித்தான், சேலம் மாவட்டம், கருப்பூரில் மருத்துவர்களின் கவனக்குறைவால் நான்கு மாத பெண் குழந்தை, இந்த மண்ணைவிட்டு சென்றுவிட்டது. ஶ்ரீநிதி என்ற அந்தக் குழந்தைக்குப் போடப்பட்ட தடுப்பூசியே மரணத்துக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மருத்துவமனை தரப்பில் இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது மற்றொரு கொடுமை. குழந்தையின் தந்தை நம்மிடம் பேசினார்.





''என் பேரு மணி. கொத்தனார் வேலை செஞ்சுட்டிருக்கேன். ஒருநாளைக்கு 400 ரூபாய் கிடைக்கும். என் தாய்மாமன் மகள் கெளசல்யாவோடு எட்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு. ஓமலூர் பக்கத்துல கருப்பூரில் அருந்ததியர் தெருவில் குடியிருக்கிறோம். கல்யாணமாகி மூணு வருஷமா குழந்தை இல்லை. பல கோவில்களுக்குப் போய் சாமிகளைக் கும்பிட்டு பிறந்தவன் முகேஷ். அவனுக்கு அஞ்சு வயதுசாகுது. இப்போ, நாலு மாசத்துக்கு முன்னாடி சேலம் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைப் பிறந்துச்சு. ரொம்ப சந்தோஷப்பட்டோம். அஞ்சு நாளைக்கு முன்னாடிதான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன்.

சொந்தக்காரங்க, அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் வந்து பார்த்தாங்க. எல்லோருக்கும் சாக்லெட் வாங்கிக் கொடுத்தோம். ரொம்ப அழகா இருக்கான்னு சொன்னாங்க. குழந்தை ஆரோக்கியமாகவும் இருந்துச்சு. ஶ்ரீநிதின்னு பேரு வெச்சோம். நான் கூலி வேலை செஞ்சாலும் மனைவிக்கோ, குழந்தைக்கோ எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கிட்டிருக்கேன். வசதி இல்லாமல்தான் கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போறோம்'' என்ற குழந்தையின் தந்தை, சற்றே அமைதியாகித் தொடர்கிறார்.



''கருப்பூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடறதுக்காக, ஜூலை 26-ம் தேதி காலையில் ஒன்பது மணிக்கு என் மனைவியும் தாத்தாவும் குழந்தையோடு போனாங்க. குழந்தை நல்லா சிரிச்சுக்கிட்டே போனதைப் பார்த்தேன். ஆஸ்பத்திரியில் டாக்டர் யாருமில்லை. நர்ஸூங்க ரெண்டு பேரு குழந்தைக்கு ரெண்டு ஊசிகளைப் போட்டாங்க. 'தடுப்பூசி போட்டிருக்கோம், காய்ச்சல் வரும். இந்த ஒரு மாத்திரையை நான்காக உடைச்சு ஒவ்வொரு வேளையும் கொடுங்க'னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. மதியம் ரெண்டு மணிக்கெல்லாம் குழந்தைக்குக் காய்ச்சல் வந்துடுச்சு. சொன்ன மாதிரி அந்த மாத்திரையை உடைச்சு பாலில் கலந்து கொடுத்தும், காய்ச்சல் குறையலை. தலையெல்லாம் சூடாகி, குழந்தை கதறி இருக்கு. என் மனைவி குழந்தையை மடியில்போட்டு தாலாட்டிட்டே இருந்திருக்கா. சாயந்திரம் நாலு மணிக்கு குழந்தை அழுதுட்டே உயிரை விட்டுருச்சு'' என்று கண்ணீரை அடக்க முடியாமல் குலுங்கினார் மணி.



அழுது அழுது சோர்ந்திருந்த குழந்தையின் தாய் கெளசல்யா, ''என் குழந்தை இல்லாத வீட்டில் இருக்கவே பிடிக்கலை. பக்கத்துல எந்தக் குழந்தை அழுதாலும் என் குழந்தை அழுது கூப்பிடற மாதிரியே இருக்கு. என் பையன், 'பாப்பா எங்கே? எப்போ வரும்?'னு கேட்கும்போது மனசு துடியா துடிக்குது. எங்களை மாதிரி வறுமையில் இருக்கிறவங்கதான் கவர்மென்ட் ஆஸ்பத்திருக்குப் போறாங்க. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் சரியா பார்க்க மாட்டோம்னு சொல்லியிருந்தால், கடனை வாங்கியாவது வேற ஆஸ்பத்திரிக்குப் போயிருப்போம். அநியாயமாக என் குழந்தையை ஊசி போட்டு கொன்னுட்டாங்க. ஊர்ல எல்லோரும் சேர்ந்துபோய், போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்தோம். இதுக்கு நடுவுல அந்த ஆஸ்பத்திரியிலிருந்து ஒரு நர்ஸ் வீட்டுக்கு வந்து குழந்தைக்குப் போட்ட தடுப்பூசி அட்டையை வாங்கிட்டு போயிடுச்சு. போலீஸ்காரங்க, 'கேஸ் வந்தால், உன் குழந்தையை அறுத்து போஸ்ட் மார்டம் பண்ணித்தான் கொடுப்போம். பிஞ்சு குழந்தையை அறுக்க சம்மதிக்கிறியா?னு கேட்டாங்க. வேணாம்னு கேஸை வாபஸ் வாங்கிட்டோம்'' என்கிறார் வேதனையுடன்.

ஶ்ரீநிதி பிறந்ததும், இரண்டு குழந்தை போதும் என்று குடும்பக் கட்டுப்பாடும் செய்துகொண்டிருக்கிறார் கெளசல்யா. ''டாக்டரும் நர்ஸூங்களும் வீட்டுக்கு வந்து 'குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷனை நீக்கிடறோம்'னு சொல்லி இருக்காங்க. ஆனா, செத்த குழந்தை விஷயத்தில் எந்த நியாயமும் கிடைக்கலை. என் குழந்தையை என்கிட்டே இருந்து பிரிச்சுட்டாங்க. ஆஸ்பத்திக்குப் போகும்போதுகூட சிரிச்சுட்டே இருந்த குழந்தை இப்போ எங்களைவிட்டுப் போயிடுச்சு.'' என்று தேம்பி தேம்பி அழுகிறார் கெளசல்யா.

கருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டதற்கு, ''இது விஷயமா நாங்க எந்தத் தகவலையும் பத்திரிகைகளுக்கு சொல்லக் கூடாது. எதுவாக இருந்தாலும், ஹெல்த் அதிகாரி பூங்கொடி மேடமிடம் கேட்டுக்கங்க'' என்றார்கள். ஆனால், மாவட்ட ஹெல்த் அதிகாரியான பூங்கொடி எண்ணுக்குப் பலமுறை தொடர்புகொண்டும் பதில் இல்லை.

மருத்துவம் என்ற உன்னத பணியில் இருப்பவர்கள், கூடுதல் கவனம் மற்றும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்!

தட்கல் டிக்கெட்டுகள்: ஆன் லைனில் புக் செய்து பிற்பாடு பணம் செலுத்தும் வசதி

தட்கல் ரயில் டிக்கெட்டுகளை தற்போது ஆன்லைனில் புக் செய்து பிற்பாடு பணம் கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட்டுகளை வீட்டுக்கு வரவழைத்த பிறகு அதற்கான தொகையை கொடுக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இ-டிக்கெட் புக்கிங் சேவை வழங்கி வரும் நிறுவனமான ஆந்துரில் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே நாளொன்றுக்கு 1,30,000 தட்கல் டிக்கெட்டுகளைக் கையாண்டு வருகிறது. இதில் பெரும்பாலான டிக்கெட்டுகள் கவுண்டர் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் புக் செய்யப்பட்டு விடுகின்றன.
தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்யும் போது அதற்கான தொகையைச் செலுத்தும் வழிமுறையில் காலதாமதம் ஏற்பட்டு டிக்கெட் இருந்தாலும் தொகை செலுத்துதலில் ஏற்படும் தாமதத்தினால் வெயிட்டிங் லிஸ்ட் ஆகிவிடும் நிலை நீடித்து வருகிறது.
தற்போது டிக்கெட் டெலிவரியின் போது தொகையைச் செலுத்தினால் போதும் என்ற திட்டத்தினால் புக்கிங் சில விநாடிகளில் நடைபெறுவதோடு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தட்கல் புக் செய்யும் போது கட்டணத் தொகையைச் செலுத்துவதற்கான வங்கிச் சேவையை நாடும் தருணத்தில் இணையதள இணைப்பு கிடைப்பது தாமதமாவதால் டிக்கெட் புக் செய்யும் நடவடிக்கையே பயனற்று போவதும் நடைபெறுகிறது.
டிக்கெட்டுகளின் டிஜிட்டல் டெலிவரி குறுஞ்செய்தி அல்லது இ-மெயில் மூலம் நடந்து விடுகிறது, ஆனால் டிக்கெட்டுக்கான கட்டணத்தொகை வசூலிப்பது இவ்வகையில் 24 மணிநேரம் ஆகிறது.
மேலும் டிக்கெட் புக் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் பேமண்ட் லிங்க் மூலம் 4 மணி நேரத்துக்குள் டிக்கெட் கட்டணத் தொகையைச் செலுத்தினால் ரூ.50 கழிவு உண்டு.
டிக்கெட் டெலிவரிக்கு முன்னால் டிக்கெட்டை ரத்து செய்யும் வாடிக்கையாளர்கள் டிக்கெட் ரத்துக் கட்டணம் மற்றும் டெலிவரிக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவித்தால் பயனாளர் கணக்கு துண்டிக்கப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் ரிசர்வேஷன் கவுன்ட்டர்களை விடுத்து ஆன்லைன் வசதியைப் பயன்படுத்திக் கொள்வதை அதிகரிக்க ஐஎஸ்ஆர்டிசி இதனைச் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதற்காக ஐஎஸ்ஆர்டிசி-யின் ‘பே ஆன் டெலிவரி’ லிங்கில் பதிவு செய்து கொள்வது அவசியம்.
‘இ-பே லேட்டர்’
இதே போன்று ஐஎஸ்ஆர்டிசி ஆன்லைனில் இ-டிக்கெட் புக் செய்து 15 நாட்கள் கழித்து ‘இ-பே லேட்டர்’ வசதி மூலம் கட்டணம் செலுத்தும் முறையை சோதனை முயற்சியாக அறிமுகம் செய்துள்ளது. இந்த இ-பே லேட்டர் வசதியைப் பயன்படுத்தினால் 3.5% கூடுதல் கட்டணம் மற்றும் பொருந்தக்கூடிய வரியுடன் வசூலிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஐஎஸ்ஆர்டிசி இணையதளப் பக்கத்தில் இந்த ‘இ-பே லேட்டர்’ லின்க் காணப்படும்.

Daddy, If I Die, Who Will Eat My Food?” Says 7-year-old Fighting A Rare Blood Disorder

“You don’t know what it is to have a child with Thalassemia. I wouldn’t wish this life upon any parent or any child. People think it is just anemia. My little girl lives her life thinking every day might just be her last day. Even if this disease is manageable in some way, the effect it has over your child, and that perpetual fear, is something you can’t imagine.”



Geethika (7), was a new born when she fell sick. She had a high fever. They had just been discharged after delivery when the baby had to be admitted again for observation. 4 days, and no diagnosis. A blood test showed low hemoglobin, so she had multiple blood transfusions. The father was forced to switch several hospitals before he found out that she was born with a severe blood disorder, Thalassemia. At the time, she was 6 months old.

You always want to believe that your children are healthy, even if they have a cold

Narayan and Subbamma have an older child, Akhila (10). Akhila is a healthy young girl. The parents were first shattered to hear that their younger daughter was sick. They couldn’t believe it. Narayan wanted to do everything possible to cure her.

“I went to Guntur, I went to CMC Vellore. Everywhere, they had her admitted, ran the same tests again and told us she had Thalassemia. The only solution? Blood transfusion. Finally, a doctor asked me why I’m not giving my doctor medicines. I said she was not prescribed any.”

A father embarked on a mission to save his child and nothing was going to stop him
Narayan registered at Red Cross Hyderabad. The blood was free, but he had to pay for medicines, her special diet, and transportation every month for her transfusions. For 7 years, he has doted over Geethika watching her every breath, every step, making sure she does not fall ill. He kept asking doctors if there was a permanent cure. Everyone said the transfusions were the only way.

“For 20 days a month, my daughter is super healthy. She goes to school, she plays, she jumps around the house. When day 20 arrives, she sleeps longer. She does not want to go to school. She does not even step out of the house. I know, we have to go.”
We live in fear, fear of what might happen if one day we miss the signs
If there is any delay in transfusions, the fever sets in. Geethika begins crying out in pain. Her limbs begin to hurt and she can hardly move around because of fatigue. It scares her so much that she religiously takes her medication on time and even pulls her parents to go to the hospital. She does not flinch at the sight of blood or when they stick needles into her.

“I have spent nearly 20 lakhs over the past 7 years. She cannot eat outside food. She needs a special diet. She needs special care. All this moving around as well. We sold our land. We sold everything we have. We even borrowed from people. The priority is her health. Anything for her.”

My daughter is thinking about death and we have to stop that from happening
Narayan was still looking for a cure when he chanced upon a doctor who suggested bone marrow transplant. The estimated cost for the surgery is Rs. 15 lakhs, something Narayan cannot afford right now. He has applied for CM funds and is waiting for approval. The family is desperate to save Geethika from this disease, now more than ever.

“We were traveling back home in the train recently. I had kept her food by my side. She said to me ‘Daddy, if I die, who will eat my food?’ It just broke me. She asks questions like this sometimes. And it is hard to keep myself from bursting into tears. I cannot live if anything happens to her. I need to save her from this. I can see the disease is changing her, even in appearance. It is now or never.”
Geethika is a strong little girl, but even strong girls need to be saved. Your support can help a father give his daughter a healthy life.
Supporting Documents

The specifics of this case have been verified by the medical team at the concerned hospital. For any clarification on the treatment or associated costs, contact the campaign organizer or the medical team.

Click here to contribute to Geethika or for more details on this campaign.

”நாங்க இப்ப யாசகம் கேட்பதில்லை சாமி..” - காணாமல் போகும் பூம் பூம் மாடுகள்

திருஷ்டிகழிக்கும் பொருட்கள் தயாரிப்பில் | பழனியம்மாள்
‘நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது..’ இப்படி நல்லதாய் நாலு வார்த்தை சொல்லும் பூம் பூம் மாட்டுக் காரர்களை இப்போதெல்லாம் பார்ப்பதே அரிதாகிவிட்டது. விசாரித்தால், “தொல்லை தாங்கமுடியல.. தொழிலை மாத்திக்கிட்டோம்” என்கிறார்கள்!
தொட்டி நாயக்கர் சமூகத்தின் ஒரு பிரிவினர்தான் பூம் பூம் மாடுகளை பிடித்தபடி வந்து நமக்கு நல்ல காலம் சொன்னவர்கள். திருச்சி காந்தி நகர் ஆதியன் குடியிருப்பின் அரசு தொகுப்பு வீடுகளில் சுமார் 150 குடும்பங்கள் தொட்டி நாயக்கர் சமூகத்தினர் வசிக்கின்றனர். மாடுகளை வளர்க்க தனி இடம், தீவனத்துக்காக ஆகும் செலவு, பராமரிப்புச் செலவு, மாடுகளை அலங்கரிக்கும் பொருட்களுக்கான செலவு உள்ளிட்ட காரணங்களாலும் தேவையற்ற விசாரணைகளுக்கு ஆளாக முடியாமலும் பூம் பூம் மாடுகளுக்கு குட்பை சொல்லிவிட்டார்கள் இவர்கள். திருஷ்டிகழிக்கும் பொருட்களை விற்பதுதான் இவர்களின் இப்போதைய தொழில்.
“என்ன இருந்தாலும், மாட்டைப் பிடிச்சுட்டுப் போயி நாலு வார்த்தை சொல்லி காசு கேக்குறது யாசகம் கேட்பது மாதிரித்தானே.. ஆனா, இப்ப நாங்க யாருக்கிட்டயும் யாசகம் கேட்கிறதில்ல சாமி.. இந்தப் பொருட்களை விற்று கவுரவமா வாழறோம். கடல் சங்கு, படிகாரம், வில்வக் காய், காடுகளில் விளையும் வெள்ளெருக்கு வேர், கம்பளி திரி இதையெல்லாம் தேடிப் பிடித்து வாங்கிவந்து மஞ்சள் தடவிய நூலில் கோர்த்து திருஷ்டிகழிக்கும் பொருட்களை தயாரிக்கிறோம். அவங்கவங்க வசதிக்கேற்ப எங்கக்கிட்ட 20 -லிருந்து 200 ரூபாய் வரைக்கும் திருஷ்டி பொருட்கள் இருக்கு. லாபம் பெருசா இல்லைன்னாலும் கவுரவமா பொழைக்க முடியுதே” என்று சொல்லும் பொன்னு, திருஷ்டி போக்கும் பொருட்களின் மகத்துவங்களை மளமளவென ஒப்பிக்கிறார்.
அவரைத் தொடர்ந்த பழனியம்மாள், “எங்கள்ல யாரும் சாதி மாறி கல்யாணம் செஞ்சுக்க முடியாது. அப்படி செஞ்சுக்கிட்டா அவங்கள நாங்க ஒதுக்கி வைச்சிருவோம். அவங்களோட யாராச்சும் தொடர்பு வெச்சா அவங்களயும் ஒதுக்கிருவோம். சம்பந்தப்பட்ட நபர் தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால், அவங்களுக்கு ஆயிரமோ ரெண்டாயிரமோ அபராதம் போடுவார் நாட்டார் (ஊர் தலைவர்). அபராதத் தொகையை கோயில் வரவுல சேர்த்துருவோம்” என்றவர், “முன்பு, யாசகம் கேட்ட நாங்கள் இப்ப, இந்தத் தொழிலைச் செய்யுறோம். எங்கள் பிள்ளைங்களுக்கு இதுவும் வேண்டாம். அவங்களாச்சும் படிச்சு முன்னுக்குவரணும். அதுக்காகத்தான் அவங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறோம்” என்று முடித்தார்.
பழமையில் ஊறிப்போன சம்பிரதாயங்கள்
என்னதான் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்தாலும், இந்த சமூகத்தில் சிறுவயது திருமணங்கள் இன்னமும் நடக்கத்தான் செய்கின்றன. நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளை வீட்டார் கருகமணி அணிவிக்கிறார்கள். கருகஅனி அணிந்த பெண், திருமணம் முடியும் வரை வேற்று ஆண்களுடன் பேசக்கூடாது. தங்களது இஷ்டதெய்வமான காளியம்மனை சாட்சியாக வைத்து, திருமணத்தை நடத்துகிறார்கள். மணப்பெண்ணுக்கு மணமகன் தங்க மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்து மனைவியாக ஏற்றுக் கொள்கிறார். குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் குலதெய்வக் குத்தமாகிவிடும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் இருக்கிறது.

ஊரே கொண்டாடும் நேர்மையான ரேஷன் கடை அதிகாரி

ரேஷன் அதிகாரி நாகராஜன்.   -  படம்: என்.பாஸ்கரன்
ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் கடை மூடியிருப்பதைப் பார்த்து சீல் வைக்க முயற்சி செய்ய, ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவரைத் தடுத்த சம்பவம் யாருக்காவது தெரியுமா?
அது தெரியும் என்றால் உங்களுக்கு நாகராஜனையும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கிராமத்தில் நேர்மையாகப் பணிபுரிந்த ரேஷன் அதிகாரி.
பொது விநியோகப் பொருட்கள் கையிருப்பில் இருக்கும்போதே தீர்ந்துவிட்டதாகப் பொதுமக்களைத் திருப்பி அனுப்புவது, ரேஷன் பொருட்களைப் பெற வரும்போது ஆதார் கட்டாயம் என்று கூறி, பொருட்களை வழங்க மறுப்பது அல்லது ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்கப் பணம் பெறுவது ஆகியவை பெரும்பாலான ரேஷன் கடைகளில் பழக்கமான ஒன்று.
ஆனால் ரேஷன் கடை மேற்பார்வையாளரான நாகராஜன், அவர்களில் இருந்து வித்தியாசமானவராக இருந்தார். நாகராஜனின் தன்னலமற்ற சேவை குறித்துப் பொதுமக்களே கூறுகின்றனர்
''கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தள்ளி வட்டத்தில் உள்ள கிராமம் தாக்கட்டி. அங்கு பொது விநியோக சேவையின் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தவர்... இல்லை சேவையாற்றியவர் நாகராஜன். 53 வயதான நாகராஜன் அங்கு சம்பாதித்தது கிராம மக்களாகிய எங்களின் அன்பை மட்டுமே.
மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் ஒன்றான தளி வட்டத்தில் இருக்கும் சுமார் 1,350 ஏழைக் குடும்பங்களுக்கு விரைவாகவும், சீராகவும் ரேஷன் பொருட்களைப் பெற்றுத் தந்தவர் நாகராஜன். காலை 7.30 மணிக்கு சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டையில் இருந்து கிளம்பி, 8.45 மணிக்கு எங்கள் ஊரை அடைவார். தினமும் சரியாக காலை 9 மணிக்குக் கடை திறக்கப்படும். மாலை 6 மணி வரை கடை இயங்கும்.
நிறைய இடங்களில், ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் பல முறை பயணிக்க வேண்டும். ஆனால் நாகராஜனின் கடையில் ஒருவர் ஒருமுறை வந்தாலே போதும். அவர் அனைத்துப் பொருட்களையும் வாங்கிச் செல்ல முடியும்.
இதற்காக அனைத்து அட்டைதாரர்களின் தொலைபேசி எண்களையும் வாங்கி வைத்துவிடுவார் நாகராஜன். பொருட்கள் வந்தபிறகு, அனைவருக்கும் தகவல் சொல்லி, அரசு வழங்கிய எல்லாப் பொருட்களையும் ஒரேமுறையில் வழங்கிவிடுவது அவரின் வழக்கம். அத்துடன் கடைசித் தேதி வரை பொருட்கள் வாங்காதவர்களுக்கு நியாபகப்படுத்துவார்'' என்கின்றனர் பொதுமக்கள்.
இதுகுறித்து பேசும் நாகராஜன், ''நிறையப் பேர் சுமார் 5 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டெல்லாம் பொருட்களை வாங்க வருவர். அவர்களை அலைக்கழிப்பது முறையாகாது. அத்துடன் அன்றாடப் பாட்டில் ரேஷன் வாங்க மறந்துவிடுபவர்களும் இருப்பார்கள். அவர்கள் யாரும் பொருட்கள் கிடைக்காமல் பட்டினியாக இருக்கக்கூடாது'' என்கிறார்.
நாகராஜன் வழக்கமான பணியோடு மட்டும் நின்றுவிடவில்லை. அந்தாயோதயா அன்னா யோஜனா அட்டைகளைப் பெறத் தகுதியுள்ள குடும்பங்களுக்கு அதைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் ஒரு குடும்பம் 35 கிலோ அரிசியைப் பெறமுடியும். அதைப் பெறும் பழங்குடிகள் தங்களுக்குள் அதைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
இவை அனைத்துக்கும் மேலாக ஒன்று நடந்திருக்கிறது. அதுகுறித்து நினைவு கூர்கிறார் ஊர்க்காரரான சங்கே கெளடு.
''அது 2009-ம் ஆண்டின் ஒரு ஞாயிற்றுக்கிழமை. ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்ள வந்தார் மாவட்ட ஆட்சியர். அந்த நேரம் பார்த்து நாகராஜன் தன் நோயாளி மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். கடை மூடியிருப்பதைப் பார்த்து ஆட்சியர், கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
கைவசம் பூட்டு இல்லாததால் உடனே அதிகாரிகள் கிராம மக்களிடம் கடைக்கு சீல் வைக்கப் பூட்டைக் கேட்டனர். ஆனால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பூட்டு வழங்க மறுத்தனர். எங்களுக்கு இந்த ஊரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அதிகாரிகளிடம் வாதிட்டனர். பின்னர் எங்கிருந்தோ ஒரு பூட்டைப் பெற்ற அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்துச் சென்றனர்'' என்கிறார்.
ஆனால் அடுத்த நாள் நாகராஜனைப் பற்றிக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர், நாகராஜனிடம் புன்னகையுடன் சாவியைக் கொடுத்தது அவரின் நேர்மையைப் பறைசாற்றியதாக மகிழ்கின்றனர் ஊர் மக்கள்.
தமிழில்: ரமணி பிரபா தேவி

NEWS TODAY 25.01.2026