Tuesday, August 8, 2017


முஸ்லிம் பெண்களுக்கு மத்திய அரசு புது சலுகை

பதிவு செய்த நாள்07ஆக
2017
21:33



புதுடில்லி: பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தில், கல்லுாரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இதற்காக, அவர்களது பெற்றோரை ஊக்குவிக்கும் வகையிலும், பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர், ஷாகிர் ஹுசைன் அன்சாரி கூறியதாவது: சிறுபான்மையினர் விவகார அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பை முடிக்கும் முஸ்லிம் மாணவியருக்கு, 10 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முடிக்கும் மாணவியருக்கு, 12 ஆயிரம் ரூபாயும், உதவித் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், உதவித் தொகை பெற்ற மாணவியர், பட்டப்படிப்பை முடித்ததும், அவர்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். தற்போது, இத்திட்டத்திற்கென தனி இணையதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில், இந்த திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன், திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


நீட்'தேர்வு விவகாரம் : சுருதி மாறும் தமிழக அரசு


''நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என, இந்த வாரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர், ராதாகிருஷ்ணன், கூறினார்.





மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்துவதற்காக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அடிக்கடி டில்லி வந்து செல்கிறார்.

தனி ஆர்வம்

நேற்று, மீண்டும் அவர் டில்லி வந்தார்.வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற, ரக் ஷா பந்தன் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டதால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர்கள் எவரும், அலுவலகங்களுக்கு வரவில்லை. ஆனாலும், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து தங்கியிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரை, காலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார்.
நீட் விவகாரம் தொடர்பாக, நிருபர்களுக்கு பேட்டியளிப்பதில், விஜயபாஸ்கரும், தம்பிதுரையும், எப்போதும் தனி ஆர்வம் காட்டுவது வழக்கம்.

மத்திய அமைச்சர்களை, இவர்கள் சந்திக்கும் புகைப்படங்களும், பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விலக்கு கிடைக்குமா

ஆனால், விஜயபாஸ்கர், நேற்று டில்லி வந்த தகவல் கூட, பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. நீட் தொடர்பான அமைச்சரின் டில்லிபயணங்கள் குறித்த, ஊடகங்களின் விமர்சனங்களே, இதற்கு காரணம் என தெரிகிறது.இந்நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சரே, நேற்று டில்லியில் இருந்தும், வழக்கத்துக்கு மாறாக, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: நீட் விவகாரம் தொடர்பாக, 85 சதவீத ஒதுக்கீட்டை பெறுவதற்கான சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு நடவடிக்கைகள், தீவிரமாக நடக்கின்றன. எனவே, நீட் விவகாரத்தில், தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது, இந்த வாரத்துக்குள் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை, நீட் தொடர்பாக உறுதியாக போராடி வருவதாகவும், நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என, தமிழக அரசு கூறிவந்த நிலையில், தற்போது, மாநில அரசின் சுருதி மாறத் துவங்கியுள்ளது, கவனிக்கத்தக்கது.

கவுன்சிலிங் எப்போது?

நாடுமுழுவதும் உள்ள, அரசுமருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி, 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், முடிந்தது.

இந்நிலையில், தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய, 85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங், ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.

அதேபோல், இந்தாண்டு, 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வரும், 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

-நமது டில்லி நிருபர் -
ஆகஸ்ட் 22 ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு



ஆகஸ்ட் 22 -ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஆகஸ்ட் 07, 2017, 09:28 PM

சென்னை,


பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். நாடு தழுவிய அளவில் வங்கிகள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால், வங்கிப்பணிகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடு, கிடு உயர்வு



கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 08, 2017, 04:15 AM


சென்னை,

கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 14–ந் தேதியும் (திங்கட்கிழமை), சுதந்திர தின விழா 15–ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், மேலும் 2 அரசு விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று வர முடிவு செய்துள்ளனர்.

இதனால் 11–ந் தேதி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது.இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களின் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் கட்டண உயர்வு தெள்ளத்தெளிவாக இடம் பெற்றுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வியாழக்கிழமை வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.780 (ஏ.சி.) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலியால் 11–ந் தேதி முதல் 17–ந் தேதி வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.1,600 கட்டணம் என்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, ‘தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ் கட்டணத்தை கண்காணிப்பது போன்று தற்போதும் கண்காணிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.ஆம்னி பஸ்கள் விவரம் இன்றைய பயண கட்டணம் 11–ந் தேதி பயண கட்டணம்

ஏ.சி. வசதி– ரூ.780 – ரூ.1,600

படுக்கை ஏ.சி.வசதி – ரூ.920 – ரூ.1,600

அதிவேக சொகுசு ஏ.சி. வசதி– ரூ.900 – ரூ.1,900

பென்ஸ் படுக்கை ஏ.சி.வசதி– ரூ.1,100 – ரூ.1,900

(இந்த கட்டணம் விவரம் குறிப்பிட்ட தனியார் ஆம்னி பஸ் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது)
தலையங்கம்

இறப்பு சான்றிதழ் வாங்க ஆதார் அட்டை



ஆகஸ்ட் 08 2017, 03:00 AM



இந்தியா முழுமைக்கும் அனைத்து மக்களுக்கும் 12 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டை வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அரசு அனைத்து சேவைகளுக்கும் இப்போது ஆதார் எண் பதிவிடுவது கட்டாயமாகிவிட்டது. பல்வேறு நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு போய்ச்சேர இந்த ஆதார் அட்டை நிச்சயமாக பெரும் பங்காற்றுகிறது. இப்போது ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் நடக்காது என்றநிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30–ந்தேதி கணக்குப்படி, இந்தியாவில் 83 சதவீதம் பேர்களுக்குமேல் ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் சற்று மந்தமாக இருப்பது தெரிந்தது. 85 சதவீதம் பேர்களுக்கு மட்டுமே அன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ஆதார் அட்டை வழங்கப்பட்டநிலை இருந்தது. இப்போது நிச்சயமாக இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.

பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டை வழங்கும்பணி விரைவில் தீவிரப்படுத்தப்பட இருக்கிறது. ஆஸ்பத்திரியிலும், வீடுகளிலும் பிறந்த குழந்தைக்கு கருவிழியையும், விரல் ரேகைகளையும் பதிவு செய்து ஆதார் அட்டை வழங்கிவிடுவதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் அட்டை கண்டிப்பாக வேண்டும் என்றநிலை இருக்கும்நிலையில், இப்போது ஒருவர் இறந்த பிறகுகூட ஆதார் அட்டை தேவைப்படும் என்ற அவசியத்தை மத்திய அரசாங்கம் உருவாக்கிவிட்டது. சிலநேரம் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு இறப்பு சான்றிதழை வாங்கி, போலி வாரிசு சான்றிதழையும் வாங்கி அவரது சொத்துக்களை கபளிகரம் செய்யும் நிலைமை நாட்டில் பெருகிவருகிறது. இதைத்தடுக்க இறப்பு சான்றிதழ் கோரும் அவரது வாரிசுதாரர் தன்னுடைய ஆதார் எண் தன்னுடைய மனைவி அல்லது பெற்றோர் ஆதார் எண் மட்டுமல்லாமல், இறந்தவரின் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். இது அக்டோபர் 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது.

இறந்தவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு இது நிச்சயம் அவசியம் என்றும், இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆதார் மட்டும் போதும் என்றவகையில், மேலும் பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இறந்தவரின் இறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பம் செய்யும் போது, அவருக்கு ஆதார் அட்டை இல்லையென்றால் விண்ணப்பம் செய்கிறவர்கள் தங்களுக்கு தெரிந்தவரை இறந்தவருக்கு ஆதார் எண் இல்லை என்ற தகவலை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் இதில் ஏதாவது தவறு இழைக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதார் எண் இருந்து, விண்ணப்பம் செய்கிறவர்கள் அவருக்கு ஆதார் எண் இல்லையென்று தெரிவித்தது மோசடி அல்லது தவறு என்று தெரிந்தால் ஆதார் சட்டம் மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின்படி ஒரு குற்றமாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, இரவு வெகுநேரம் கழித்து பத்திரிகை தகவல் அலுவலகம் ‘டுவிட்டரில்’ இது கட்டாயமல்ல என்ற ஒரு தகவலை தெரிவித்துள்ளது. இது நிச்சயமாக வரவேற்கத்தகுந்த ஒரு முடிவு. ஆதார் அட்டை வாங்கியிருக்காதவர்களின் குடும்பங்களெல்லாம் என்ன செய்வார்கள்? எனவே தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் 100 சதவீதம் எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கிய பிறகும், பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணியை எளிதாக்கிய பிறகுமே இதுபோல ஆதார் அட்டை கட்டாயம் என்று அனைத்து சேவைகளுக்கும் கொண்டு வரவேண்டும். அதுவரையில் ஆதார் எண்ணை குறிப்பிடுவது விருப்பத்தின் அடிப்படையில் என்று தான் இருக்கலாமே தவிர, அது இல்லாமல் முடியாது என்ற நிலைவேண்டாம்.
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் இந்த வாரத்துக்குள் இறுதி முடிவு


ஆகஸ்ட் 08, 2017, 05:00 AM


தமிழக சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–


புதுடெல்லி,

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் இந்த வாரத்துக்குள் இறுதி முடிவு தெரிந்துவிடும் என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–தமிழகத்தில் சேலம், பொள்ளாச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. இங்கு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எந்தவகை காய்ச்சலாக இருந்தாலும் இறப்பு ஏற்படாது. இறப்பு என்பது டெங்கு காய்ச்சலால் மட்டுமே ஏற்படாது. டெங்கு காய்ச்சலுடன் வேறு ஏதாவது நோய் பாதிப்பு இருக்கும். டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். வளர்ந்த கொசுக்களை ஒழிக்க சுகாதாரத்துறையிடம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எந்திரங்கள் உள்ளன. இருந்தாலும் கொசுப்புழுக்கள், கொசு முட்டையை ஒழிப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.மருத்துவ கல்வி சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கான 85 சதவீத இடஒதுக்கீட்டை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, நம்பர் ஆவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. நீட் தேர்வு விலக்குக்கான அவசர சட்டத்தை பொறுத்தவரை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த வாரத்துக்குள் இறுதி முடிவு தெரிந்துவிடும். இப்படியா? அல்லது அப்படியா? என்பது தெரிந்துவிடும்.

மாநில அரசின் இடங்களுக்குத்தான் நாம் விலக்கு கேட்கிறோம். நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கோ, தனியார் கல்லூரி இடங்களுக்கோ அல்ல. தமிழ்நாட்டில் மட்டுமே பொது நுழைவுத்தேர்வு இல்லாமல் இருந்தது. பிற மாநிலங்களில் ஏதோ ஒரு நுழைவுத்தேர்வு மருத்துவ படிப்புக்கு இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டுக்கு விலக்கு கேட்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, August 6, 2017


The great engineering seat sale

By Ashmita Gupta | Express News Service | Published: 05th August 2017 01:23 AM |





Agents of a private college talk to students outside Anna University; (inset) a pamphlet given to students | Martin Louis

CHENNAI: The latest clearance sale in the city is not at T Nagar, the retail hub, but at Guindy, in and around the Anna University premises to be precise. That is where staff and faculty are trying to hard sell vacant engineering seats in their colleges after failing to attract students in the ongoing counselling process.

Their target is students from rural families, and also first generation graduates, who are offered incentives including tuition fee waiver — a substantial relief for poorer families yearning for a professional degree holder.

Agents distribute pamphlets announcing various schemes, where the tuition fee is fixed on the basis of cut-off marks. Students with 180 marks and above, can avail a complete waiver, while those with lesser marks will get a partial waiver based on various slabs. Some calculate this in terms of percentage (25%, 50% and 100% off), while others in actual cash, saying students need to only pay `15,000, `10,000 or nothing, depending on cut-off marks.

That is not all. Such is the persistence of these agents that they even manage to enter the counselling halls pretending to be parents or guardians. Officials in charge of the counselling say many of them have been caught and reported to the local police.

“These are either staff members or professors from colleges that have had no admissions. They mainly target candidates from rural background or first generation graduates who don’t have much knowledge about counselling,” said a Tamil Nadu Engineering Admission official, requesting anonymity.

These agents lure parents with offers of tuition fee waiver, and enter counselling halls along with the students pretending to be parents or guardians. “Students believe they would be benefitted, and agree to have the agents with them as their guardian or parents,” the official said.

In one instance, a candidate was accompanied by an English professor, who claimed to be his brother. “But while the professor kept speaking in English, the candidate, his ‘brother’, did not know how to converse in the language. This raised suspicion, and the truth soon came out,” the official said. The professor was handed over to the local station.

There was also a case where the candidate first claimed the person with him to be his father before addressing him as brother, and that panic was enough for the officials to bring out the truth. In two other cases, agents were locked inside rooms and handed over to police.

Such efforts to fill up the vacant engineering seats are not unusual. The officials have made arrangements for stringent verification before permitting candidates and their companions inside. “However, this year, colleges seem very desperate to get students; such fraudulent activities have increased when compared to last year,” said a official. “It is doubtful how much of these offers are actually real.”

Officials at Kotturpuram police station, where the agents are usually sent to, say no cases have been registered. Instead the agents are let off after a stern warning. The officials at the university are able to keep a close watch on these agents inside their premises, but those outside are beyond their control. There, scores of agents are seen distributing pamphlets that announce offers like discount sales announcements at retail outlets during festival seasons.

NEWS TODAY 26.01.2026