Tuesday, August 8, 2017


ராகு கோவில் உண்டியல் எரிந்து காணிக்கை பணம் சேதம்
பதிவு செய்த நாள்07ஆக
2017
19:55

தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் ராகு கோவிலில், உண்டியல் எரிந்து, காணிக்கை பணம் சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில், நவக்கிரகங்களில் ஒன்றான, ராகு தலம் அமைந்துள்ளது. இக்கோவிலில், ராகு காலத்தில், ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஜூலை, 27ல், ராகு பெயர்ச்சி நடந்தது. அன்று முதல், பரிகாரம் செய்யும் ராசிக்காரர்கள், தினமும் ராகு கால நேரத்தில், பரிகார பூஜை செய்து, வழிபட்டு வருகின்றனர். கோவிலின் வெளி பிரகாரத்தில், கொடி மரம் அருகே, 6 அடி உயரத்தில், எவர்சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை, ராகு காலம் என்பதால், கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, மழையும் பெய்ததால், தண்ணீரில் நனையாமல் இருக்க, உண்டியலை துாக்கி, கோவில் ஊழியர்கள் ஒதுக்குப்புறமாக வைத்தனர். மாலை, 6:00 மணியளவில், உண்டியலில் இருந்து, புகை வெளியேறியது. உடனடியாக, கோவில் ஊழியர்கள், உண்டியலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின், உண்டியலை திறந்து, காணிக்கையை எண்ணினர். அதில், 1,450 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்திருந்தன. மீதமிருந்த, 45 ஆயிரம் ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. 'உண்டியலில் யாராவது ஊதுபத்தியை சொருகி வைத்திருக்கலாம்; அவை எரிந்து உண்டியலுக்குள் விழுந்ததால், ரூபாய் எரிந்திருக்கலாம்' என, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.



Advertisement
அமெரிக்காவில் மகன் 'பிசி' : எலும்புக்கூடான தாய்

பதிவு செய்த நாள்08ஆக
2017
00:18

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர், ரிதுராஜ் சஹானி, 43. மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கும் இவர், அங்குள்ள, பிரபல, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது, 68 வயது தாய், மும்பையில் அந்தேரியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில், 10வது மாடியில் தனியாக வசித்து வந்தார். ரிதுராஜ், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இந்தியா வருவது வழக்கம். அதே போல், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே தாயுடன் போனில் பேசி வந்தார். கடைசியாக, கடந்த ஆண்டு ஏப்ரலில், தாயுடன் போனில் பேசிய ரிதுராஜ், அதன் பின் அவரை தொடர்பு கொள்ளவில்லை. சமீபத்தில் நாடு திரும்பிய ரிதுராஜ், மும்பையில் வசிக்கும் தாயை காணச் சென்றார். நீண்ட நேரம், 'காலிங்பெல்' அடித்தும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கம் வீட்டாரின் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றார்.அங்கு, அவரது தாயின் எலும்புக்கூடு மட்டுமே, நாற்காலியில் அமர்ந்த நிலையில் இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அக்கம் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தனர். சில மாதங்களாகவே, அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும், எலியோ, பூனையோ இறந்திருக்கலாம் என நினைத்ததாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
எலும்புக்கூட்டை கைப்பற்றிய போலீசார், அதை, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வருமான வரி தாக்கல் உயர்வுக்கு காரணம் என்ன
புதுடில்லி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016 -17 நிதியாண்டில்வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.





'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புதான் இதற்கு காரணம்' என, மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த, 2016 - 17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஆக., 5ல் முடிந்தது. 

கணக்கு தாக்கல் தொடர்பாக, மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள செய்தி யில்கூறியுள்ளதாவது:

2.82 கோடி பேர்,

கடந்த, 2016 - 17 நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான, ஆக., 5வரை, 2.82 கோடி பேர், கணக்கை தாக்கல் செய்துள்ளனர். முந்தைய ஆண்டில், 2.26 கோடி பேர் மட்டுமே தாக்கல் செய்திருந்தனர். இது, 25 சதவீதம் உயர்வு.தனிநபர் கணக்கு தாக்கலும், 25.3 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தம், 2.79 கோடி தனிநபர், கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த, 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்ட, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, கணக்கில் வராத ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கறுப்புப் பணத்துக்கு எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் தங்கள் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஆக.,9-ல் உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

பதிவு செய்த நாள்07ஆக  
2017 20:05




சேலம்: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வருகிற 9-ந்தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகின்ற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை மழைக்காலங்களில் குளமாகும் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட்

2017-08-07@ 21:24:27




பாரத ரத்னா எம்ஜிஆர் மத்திய பஸ் நிலையமானது சேலம் மக்கள் மட்டுமல்லாது பிற மாவட்ட பயணிகளாலும் அதிகம் அறியப்பட்ட ஒன்று. கடந்த 25 வருடங்களுக்கு முன் சேலம் பழைய பஸ் நிலையம் மட்டுமே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடுமையான போக்கு வரத்து நெரிசல் மற்றும் இடபற்றாக்குறை காரணமாக சேலம் மாநகராட்சியின் மூலம் அச்சுவான் ஏரி கையகப்படுத்தப்பட்டு கடந்த 1994ம் ஆண்டு சேலம் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் 50 ஆயிரத் துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். சேலம் மத்திய பஸ் நிலையத்திற்கு சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, ஓசூர் ஆகிய வெளிமாவட்ட பஸ்கள் முதல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பஸ்கள் வரை வந்து செல்கிறது. இதனால், பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் மத்திய பஸ் நிலையமானது தண்ணீர் தேங்கி குளமாக காட்சியளிக்கிறது. இதனால், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஏரியாக இருந்து மாற்றப்பட்ட புதிய பஸ் நிலையம் 20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் மழைநீர் புகாத வண்ணம் தரைதளம் அமைக்கப்படாததால், மழைக்காலங்களில் பஸ் நிலையம் வரும் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்டுக்குள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளினால் பயணிகள் நடப்பதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை.

மழைக்காலங்களில் பஸ் நிலையம் முழுவதையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பஸ் ஸ்டாண்டிலிருந்து வேறு பஸ் பிடிக்க வெளியே வர முடிவதில்லை. சேலம் மாநகராட்சியால் பஸ் நிலையத்திற்கு இன்னும் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் தரைதளம் அமைக்கப்படவில்லை. இதனால், சிறிதளவு மழை பெய்தாலும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் பஸ் ஸ்டாண்டு கடைகளுக்குள் புகுந்துவிடுகிறது. குளம்போல் தேங்கியுள்ள மழைநீரிலேயே பேருந்துகள் செல்லும்போது சேரும் சகதியுமாக தேங்கிய மழைநீரை பயணிகளின் மீது வாரி இறைத்து செல்கிறது.

மேலும், பஸ் நிலையத்தை சுற்றிய பகுதிகளில் சிறுநீர் கழிப்பதால், சிறுநீர் நாற்றம் அதிகளவில் வீசுகிறது. இதனால், வெளியூர் பயணிகள் மத்தியில் சிறுநீர் பஸ் நிலையம் என்ற பெயரை சேலம் பஸ் நிலையம் பெற்றுள்ளது. பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. இது மாநகராட்சி அதிகாரிகளால் முறையாக பராமரிக்கப்படாததால் பயணிகள் திறந்தவெளி கழிப்பிடத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், பஸ் நிலையம் முழுவதும் கடுமையான துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

பயணிகள் நடைமேடைகளை ஆக்கிரமித்து பழ வியாபாரிகள் முதல் பலரும் கடைகளை வைத்துள்ளதால் நடைமேடைகளில் நடக்க முடியாமல் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அதிகாரிகளின் நடவடிக்கையால் தற்காலிகமாக கடை களை அகற்றும் வியாபாரிகள் அதிகாரிகள் சென்றவுடன் கடைகளை வைத்துக்கொள்கின்றனர். கடந்த ஒருமாதத்திற்கு முன் மாநகராட்சி பஸ் நிலையத்தில் ₹5 கோடி மதிப்பில் நடைமேடை அமைக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கியுள்ளது. இதனை மாற்றி அமைத்து முதலில் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகாலும், தரைதளமும் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.
காரில் அரசு முத்திரை... கையில் பூங்கொத்து... நான் ஜாயின்ட் செகரட்ரி வந்திருக்கேன்...

2017-08-08@ 01:02:24




* தனி அலுவலகம் கேட்டு அடம்பிடித்த வாலிபர்
* சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சேலம் : சேலத்தில் அரசு ஜாயின்ட் செகரட்ரி எனக்கூறி, தனி அலுவலகம் கேட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு, உயர் அதிகாரிகள் வைத்திருக்கும் அரசு முத்திரையுடன் கூடிய சொகுசு காரில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி வந்தார். முதல் மாடியில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு அலுவலகத்திற்கு கையில் பூங்கொத்துடன் சென்றார். அவருடன் 55 வயது மதிக்கத்தக்க நபர், சால்வையுடன் நின்று கொண்டிருந்தார். நேர்முக உதவியாளர் விஜய்பாபுவிடம், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என, டிப்டாப் ஆசாமி அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து, அலுவலகத்தில் அமரவைத்த விஜய்பாபு, அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தார். தொடர்ந்து, பேசிய டிப்டாப் ஆசாமி, தான் அரசுத்துறை இணை செயலர் எனவும், தனக்கு தனியாக அலுவலகம் ஒதுக்கித்தருமாறும் கேட்டார். மேலும், தான் இணை செயலாளராக நியமிக்கப்பட்டதற்கான பைல்களையும் அளித்தார். ஆனால், விஜய்பாபுவிற்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, டிப்டாப் ஆசாமி கொண்டு வந்த பைல்களை படித்து பார்த்தார். அப்போது, அந்த பைல்கள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து ரகசியமாக சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசனுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், இருவரையும் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ஐஏஎஸ் அதிகாரி என கூறிய டிப்டாப் ஆசாமி, சேலம் கிச்சிப்பாளையம் நாராயணா நகர் 6வது தெருவைச் சேர்ந்த தர் (26) என்பது தெரியவந்தது. கெஜ்ஜல்நாய்க்கன்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்த தர், வீட்டின் அருகிலேயே தனியாக அலுவலகம் வைத்துள்ளார். தான் ஐஏஎஸ் படித்து முடித்துவிட்டதாகவும், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணிக்கு சேர வேண்டும் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் இதனை நம்பியிருந்தனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் ₹12 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை, ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தான் நேற்று பணியில் ேசருவதாக கூறி புதிய கோட், சூட் அணிந்து டிப்டாப் ஆக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மேலும், இணை செயலராக போலியாக ஆவணமும் தயாரித்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு தனி அலுவலகம் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு, அதிகாரியிடம் வசமாக சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து தரை கைது செய்த போலீசார், சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும், ஐஏஎஸ் எனக்கூறி ஏதேனும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்: போலி ஐஏஎஸ் அதிகாரி என நடித்து ைகது செய்யப்பட்ட தரை, நேற்றிரவு அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர். வீட்டின் முகப்பிலேயே, தமிழ்நாடு அரசு பொதுத்துறை (ஆய்வு) தலைவர் மற்றும் இணை செயலாளர் அலுவலகம், சேலம் என அரசு முத்திரையுடன் கூடிய போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது. உள்ளே தரை அழைத்து சென்ற போலீசார், வீட்டில் இருந்து கம்ப்யூட்டர், விலை உயர்ந்த செல்போன் மற்றும் மூட்டை, மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

சந்திக்க மறுத்த கலெக்டர்

சேலத்தில், நேற்று மாலை ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி கைது செய்யப்பட்ட தர், கடந்த ஒருவாரமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நோட்டமிட்டு சென்றுள்ளார். அவரது காரில் அரசு முத்திரை இருந்ததால், போலீசார் அந்த காரை மடக்கவில்லை. நேற்று, பூங்கொத்துடன் கலெக்டரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர் சம்பத்தை சந்திக்க பலவழிகளில் முயற்சி செய்தார். ஆனால், கலெக்டர் அவரை சந்திக்க மறுத்துள்ளார். அங்கிருந்த உதவியாளர்கள் கலெக்டர் பிசியாக இருப்பதாக கூறினர் பின்னர், நேர்முக உதவியாளர் விஜய்பாபுவை சந்திக்குமாறு அனுப்பி வைத்தனர்.

போலி பணி நியமன ஆணை

ஐஏஎஸ் எனக்கூறி, பலருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை தர் வழங்கியதாக கூறப்படுகிறது. நேற்று கூட, சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு டிரைவர் வேலைக்கான பணிநியமன ஆணையை வழங்கியுள்ளார். தொடர்ந்து, அவரையே தனது காருக்கும் டிரைவராக பணியமர்த்தியுள்ளார். நேற்று அந்த வாலிபர்தான், கலெக்டர் அலுவலகத்திற்கு தர் வந்த காரை ஓட்டி வந்துள்ளார். இதனால், இதுபோல வேறு யாருக்கும் போலி பணிநியமன ஆணைகளை தர் வழங்கியுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் போலி ஐ.ஏ.எஸ். கைது

2017-08-07@ 20:23:43

சேலம்: சேலம் ஆட்சியரின் தனி உதவியாளரிடம் ஐ.ஏ.எஸ். எனக்கூறி மோசடி செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார். ஆட்சியர் பி.ஏ.வை தொடர்பு கொண்ட ஸ்ரீதர் என்பவர் தான் ஒரு ஐ.ஏ.எஸ். எனக்கூறியுள்ளார். தமிழக அரசின் கூடுதல் செயலாளரான தனக்கு அலுவலகம் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். ஸ்ரீதரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆட்சியரின் தனி உதவியாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் சேலத்தை சேர்ந்த ஸ்ரீதர் போலி ஐ.ஏ.எஸ்.அதிகாரி எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 6 மாதங்களாக தனது காரில் தமிழக அரசின் முத்திரையை வைத்து ஸ்ரீதர் பயன்படுத்தியுள்ளார்.

NEWS TODAY 26.01.2026