Wednesday, August 16, 2017


மாணவர்களுக்கு 'போதை' சப்ளை மாணவர், மருந்தாளுனர் கைது: 2000 மாத்திரைகள் பறிமுதல்
பதிவு செய்த நாள்15ஆக
2017
23:16




மதுரை,மதுரையில் கல்லுாரி மாணவர்களிடம் மாத்திரைகளை விற்று, போதைக்கு அடிமையாக்கிய கல்லுாரி மாணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இரண்டாயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரையில் கல்லுாரி மாணவர்கள் சிலர், துாக்க மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துகின்றனர். மாணவர்களின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டு சிலர் மாத்திரை விற்பதாக, திடீர்நகர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி மதுரை சின்னம்பட்டி கல்லுாரி மாணவர் பிரபாகரன், 20, மூலக்கரை மருந்தாளுனர் சரவணகுமார், 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களது அறையில் இருந்து 2,௦௦௦ போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

* போலீசார் கூறியதாவது: வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மருந்துக் கடைகளில், டாக்டர் பரிந்துரைபடி துாக்க மாத்திரை கொடுக்கின்றனர். மருந்து சீட்டு இல்லையெனில் தரக்கூடாது. இதை மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்களும் கண்காணிப்பர். ஏனெனில், மாத்திரையை உட்கொண்டு துாங்காவிட்டால், மூளையை பாதித்து போதையாக மாற்றிவிடும்.
'பார்மசிஸ்ட்' சரவணகுமார்,, மொத்த மருந்து வினியோகிஸ்தர்களிடம் துாக்க மாத்திரைகளை வாங்கி, ஒரு அட்டை 100 ரூபாய்க்கு பிரபாகரனிடம் விற்றுள்ளார். பிரபாகரன் கல்லுாரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர், மாணவர்களுக்கு அந்த அட்டையை 200 ரூபாய்க்கு விற்றுள்ளார். இதற்காக இருவரும் தெற்குவாசலில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து மாத்திரைகளை இருப்பு வைத்துள்ளனர். இவர்களது அறையில் இருந்து தலா 10 மி.கி., அளவுள்ள 2,௦௦௦ மாத்திரைகளை பறிமுதல் செய்தோம்.
ஒரே நேரத்தில் 10 மி.கி., அளவு கொண்ட மூன்று மாத்திரைகளை மாணவர்கள் உட்கொண்டு, போதையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிவேகமாக டூவீலர்களில் சென்று விபத்தில் சிக்குகின்றனர்.
இவ்வாறு கூறினர்.
பலே, ஈரோடு போலீஸ்!: 2,463 லைசென்ஸ் ரத்து

பதிவு செய்த நாள்15ஆக
2017
22:20




ஈரோடு, : ஈரோடு நகரில், 2,463 பேரின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.குடிபோதை வாகன இயக்கம்,அதிவேகமாக செல்லுதல், மொபைல் பேசியவாறு வாகனம் இயக்குவது, சிக்னலை மதிக்காமல் செல்லுதல், போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால், டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக, மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.

இது, ஆக., 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து, டி.எஸ்.பி. சேகர் கூறியதாவது:எஸ்.பி., உத்தரவுப்படி ஈரோடு நகரில், ஆக., 1 - 14 வரை வாகன தணிக்கை செய்யப்பட்டுள்ளது. குடிபோதை வாகன இயக்கம் 126; அதி வேகமாக இயக்குதல், 298; மொபைல் போன் பேசியவாறு இயக்குதல், 1,075; சிக்னலை மதிக்காமல் செல்லுதல், 363; அதிக பாரம் ஏற்றி செல்லுதல், 38; சரக்கு ஆட்டோவில் பயணியரை ஏற்றியதாக, 563 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தம், 2,463 பேரின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய கோரி, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

பதிவு செய்த நாள்16ஆக
2017
05:53



ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று(ஆக.,16) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தர்காவில் சந்தனகூடு திருவிழா இன்று(ஆக.,16) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஆக.,19 வேலைநாளாக ஈடுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 'நீட்' தேர்வு அவசர சட்டம் மத்திய அரசு இன்று ஆய்வு


பதிவு செய்த நாள்15ஆக
2017
23:04




தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கோரப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்ட வரைவு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் இன்று ஆய்வு செய்கிறது.

'நீட்' அவசர சட்ட வரைவுக்கு ஒப்புதல் பெற சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் மத்திய சுகாதாரத்துறை, உள்துறை மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளை இன்று சந்தித்து, கூடுதல் ஆவணங்கள் வழங்க உள்ளனர். மேலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் சட்ட வல்லுனர்களும் தமிழக அரசின் சட்ட வரைவு அம்சங்களை இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை பெற்ற பின் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து மத்திய அரசு முடிவு செயயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம்
இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி மருத்துவ மாணவர்
சேர்க்கையை ஆக., 31க்குள் முடிக்க வேண்டும். தற்போதைய நிலையில் இன்னும் 15 நாட்களில் கவுன்சிலிங்கை முடிப்பது
சாத்தியமில்லை. நீட் தேர்வு விலக்கு கோரிக்கைக்கும் இன்னும் முடிவு கிடைக்கவில்லை. அதனால் ஆக., 31க்கு பிறகும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கூடுதல் அவகாசம் கேட்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான
மனுவை சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைவில் சமர்ப்பிக்க உள்ளனர்.
இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம்
பதிவு செய்த நாள்15ஆக
2017
22:33


இன்ஜி., கல்லுாரிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள, கணிதம், இயற்பியல் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப்., 1ல் அனைத்து தனியார் இன்ஜி., கல்லுாரிகளும் வகுப்புகளை துவங்க உள்ளன. இரண்டு வாரங்களுக்கு, மாணவர்களுக்கு இன்ஜினியரிங் முன் தயாரிப்பு பயிற்சி வழங்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, ஆங்கில மொழித்திறன் பயிற்சி, தொடர்பு ஆங்கிலம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இடம் பெற்றுள்ள, கணிதம், இயற்பியல் போன்ற அடிப்படை பாடங்களை நடத்த, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

'சமீபத்தில் நடந்து முடிந்த, அண்ணா பல்கலையின் தேர்வில், இயற்பியலில், 70 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதன் எதிரொலியாகவே, கணிதம், இயற்பியலில், இந்த ஆண்டு முதல், முன் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது' என, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் மறைவு

பதிவு செய்த நாள்15ஆக
2017
22:35




சென்னை, பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம்,79 உடல்நலக்குறைவால், நேற்று சென்னையில் காலமானார். சிவாஜி நடித்த, ரத்ததிலகம் படம் மூலம் சினிமாவுக்கு வந்த சண்முகசுந்தரம், கர்ணன், இதயக்கனி, படிக்காத பண்ணையார், கரகாட்டக்காரன், சென்னை 28, கோவா உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகாபாரத தொடரில், துரியோதனனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர். மிமிக்ரி பயிற்சி பெறுவோர், இவரது குரலை பின்தொடர்வது அலாதிப்பிரியம்.சின்னத்திரை தொடர்களிலும் நடித்த இவர், சில மாதங்களாக உடல்நிலை சரியின்றி அவதிப்பட்டு வந்தார். 

நேற்று காலை உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், போகும் வழியிலேயே சண்முகசுந்தரம் உயிர் பிரிந்தது. இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.

நடிகர் சங்கம் இரங்கல்நடிகர் சண்முகசுந்தரம் மறைவுக்கு, நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை: மூத்த தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம், கல்லுாரியில் படிக்கும் போதே, நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு, கலை வாழ்க்கையை துவங்கியவர். இயல்பான நடிப்பாற்றலால், ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். கடின உழைப்பாலும், நற்பெயருடன் புகழும் பெற்ற விளங்கிய சண்முகசுந்தரத்தின் மறைவு, திரைஉலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


'நீட்' தேர்வு இழுபறி; இப்போதைக்கு முடிவுறாது!

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வான, 'நீட்'டில் இருந்து விலக்கு கோரும், அவசர சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ வழக்கு தொடர்வதற் கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.



அவசர சட்டத்தால், மாநில பாடத் திட்டத்தில் படித்து, நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் பாதிக் கப்படும் சூழல் உள்ளதால், அவர்கள் தரப்பில், நீதிமன்றத்தை அணுக உள்ளனர்.நீட் தேர்வுக்கு, 2016 - 17ம் ஆண்டில் மட்டும், தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க, தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு, இதுவரை ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 85 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் புதிய உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்தது.

அதுவும், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன் றத்திலும் அடி வாங்கியது. அதனால், அவசர சட்டம் கொண்டு வருவது தவிர, வேறு வழியில்லை என்ற ரீதியில், தற்போது, மத்திய அரசிடம், அவசர சட்டத்தின் வரைவு தாக்கல்

செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக் கீட்டுக்கான இடங்களுக்கு, நீட் தேர்வில், இந்த ஆண்டு விலக்கு அளிக்க வேண்டும் என்ற ரீதி யில், அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது.

மத்திய அரசும், அவசர சட்டத்துக்கு ஆதரவு தெரி விப்பதால், ஜனாதிபதியின்ஒப்புதல் கிடைப்பதில், எந்த சிக்கலும் இருக்காது. இருந்தாலும், அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர, பாதிக்கப்பட்ட வர்கள் தரப்பில் தயாராகின் றனர்.

சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்ட மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடுத்தாலும், மாநில பாடத்திட்டத்தில் படித்த வர்களும், நீதிமன்றத்தை நாடுவதற்கான வாய்ப்பு கள் உள்ளன.

பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்ணும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்ணும் பெற்ற, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, நீட் இல்லை என்றால், மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும். நீட் வரும் என்ற எதிர்பார்ப்பில், பிளஸ் 2 தேர்வுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக் காமல், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் இவர்கள்.

அவசர சட்டம் குறித்து, வழக்கறிஞர் பி.வில்சன் கூறும்போது,அவசர சட்டமும், நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது தான்; அதை எதிர்த்து வழக்கு தொடர முடியும். அதேநேரத்தில், அவசர சட்டம் கொண்டு வர, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது,'' என்றார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தங்கசிவன் கூறும் போது, ''நீட் தேர்வு விலக்கால், மாநில பாடத்திட்டத் தில் படித்து, நீட் எழுதியவர்கள், தங்களுக்கு பாதிப்பு வரும் என கருதும்போது, அதை எதிர்த்து வழக்கு தொடர்வர். மருத்துவப் படிப்பில் சேர, நீட் தேர்வு

கட்டாயம் என்ற எதிர்பார்ப்பில், அதற்கு தயா ராகி இருப்பர். சட்டப்படியான இந்த எதிர்பார்ப் பில் பாதிப்பு வரும்போது, அதே முகாந்திரத் தின் அடிப்படையில், வழக்கு தொடர முடியும்,'' என்றார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சக்திவேல் கூறும்போது, ''அவசர சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடரலாம்; உச்ச நீதிமன்றத்திலும் தொடர லாம். எந்த அடிப்படையில், அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது என்பதை பொறுத்து, கேள்விக்கு உள்ளாக்கப்படும். பொது பட்டிய லில் கல்வி வருவதால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டமான, மத்திய அரசு சட்டத்தை மீற முடியாது.

எனவே, நீட் தேர்வுக்கு, நிரந்தர விலக்கு கோர முடியாது,'' என்றார்.உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கினாலும், அடுத்த கட்டமாக, உச்ச நீதிமன்றத்தை பாதிக்கப்பட்டவர்கள் அணுகுவர். அதனால், உச்ச நீதிமன்றத்தில் தான், இந்தப் பிரச்னைக்கு விடை கிடைக்கும் என்கின்றனர், சட்ட வல்லுனர்கள்.
-நமது நிருபர்-

NEWS TODAY 28.01.2026