Friday, August 18, 2017

மருத்துவ சேர்க்கையில் கூடுதலாக 57 'சீட்'

பதிவு செய்த நாள்18ஆக
2017
00:14

சென்னை: அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரம்பாத, 57 இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.அதில், தமிழகத்தில் இருந்து, 435 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டன. இதற்கான கவுன்சிலிங், சமீபத்தில் நடந்தது.

தமிழக மருத்துவக் கல்வி தேர்வு குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 57 மருத்துவப் படிப்பு இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த இடங்கள், மாநில சேர்க்கையில் இடம்பெறும்,'' என்றார்.
அண்ணாமலை செட்டியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பதிவு செய்த நாள்18ஆக
2017
00:08


சென்னை: ராமசாமி செட்டியார் அறக்கட்டளை சார்பில், ஆண்டு தோறும் வழங்கப்படும், டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பிறந்தநாள் நினைவுப் பரிசுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அறக்கட்டளை, ஆண்டு தோறும், 50 வயதுக்கு மேற்பட்ட, கல்லுாரி பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கி வருகிறது. 

இவ்விருதுக்கு, படைத்த நுால்கள், ஆய்வாளர்களை உருவாக்கிய விபரங்களையும் தெரிவிக்க வேண்டும். அதே போல், ஆதரவற்றோர், முதியோர் காப்பகங்களை சிறப்பாக நடத்தும் தன்னார்வலர்களுக்கும், பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்விருதுக்கு விண்ணப்பிப்போர், காப்பகத்தை நடத்துவோர், காப்பகம் செயல்படும் விதம் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, 'டாக்டர் மு.அ.மு.ராமசாமி செட்டியார் அறக்கட்டளை, 82, சாந்தோம் நெடுஞ்சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28' என்ற முகவரிக்கு, வரும், 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அடுத்த மாதம், 30ம் தேதி நடக்கும் அண்ணாமலை செட்டியாரின், குடும்ப விழாவில், பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாளய அமாவாசை : காசிக்கு சிறப்பு ரயில்

பதிவு செய்த நாள்18ஆக
2017
00:03

சென்னை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், மஹாளய அமாவாசையை ஒட்டி, காசி யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், செப்., 15ல், மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக காசிக்கு செல்லும். காசியில், புனித நீராடி, காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம்; மஹாளய அமாவாசையன்று, கயாவில், முன்னோருக்கு மரியாதை செலுத்தலாம்; அலகாபாத்தில், திரிவேணி சங்கமத்தில் நீராடலாம்.
ஹரித்துவாரில் மானச தேவியை தரிசிக்கலாம்; டில்லியில், குதுப்மினார், இந்தியா கேட், ராஜ்காட், தீன்மூர்த்தி பவன், இந்திரா காந்தி நினைவிடம் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். மதுராவில், கிருஷ்ண ஜன்ம பூமியை தரிசிக்கலாம்.

இந்த சுற்றுலா, 11 நாட்கள் கொண்டது; ஒருவருக்கு, 10 ஆயிரத்து, 395 ரூபாய் கட்டணம். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சலுகை உண்டு. மேலும் விபரங்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம்

பதிவு செய்த நாள்18ஆக
2017
04:52




சென்னை: 'வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், இரு நாட்களுக்கு, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்' என, வானிலை மையம் கூறியுள்ளது.

கனமழை:

இது குறித்து, வானிலை மையம் கூறியுள்ளதாவது: தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தென் மாநிலங்களில், ஒரு வாரத்துக்கும் மேலாக, பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில், வங்கக் கடலில், சென்னை - நெல்லுார் இடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக, இன்று மாறும் என, கணிக்கப்பட்டு உள்ளது. அதனால், இன்று தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மட்டும், சில இடங்களில் மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது.

இரு நாட்களுக்கு..

அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை  மையம் கூறியுள்ளது.

6 ஆண்டுகளில் அதிக மழை:

கடந்த ஜூன் 1 முதல் ஆக., 17 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையானது 210 மி.மீ., என பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவை விட 33 சதவீதம் அதிகம். மேலும், கடந்த 6 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.
ஜெ.,மரணம்,குறித்து,விசாரணை,முதல்வர்,பழனிசாமி,அதிரடி

ஜெயலலிதா மறைந்து, எட்டு மாதங்களுக்கு பின், அவரது மரணம் குறித்து விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக் கப்பட உள்ளது. அவர் வசித்த, சென்னை, போயஸ் தோட்ட வீடும் அரசுடமையாக்கப் படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.





அரசையும், அமைச்சர்களையும் மிரட்டும் தினகரன் கும்பலுக்கு பீதி ஏற்படுத்தும் விதமாக, இந்த அதிரடி அறிவிப்புகளை, நேற்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், . சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; டிச., 5ல், இறந்தார். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், 'ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது அது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை மறைமுகமாக கையில் வைத்திருந்த சசிகலா தரப்பினர், அதை கண்டுகொள்ளவில்லை. ஆட்சியாளர்களும், அதற்கு துணை போயினர். தற்போது, ஆளும் கட்சியிலும், ஆட்சியிலும் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. சசிகலா குடும்ப ஆதரவால், ஆட்சிப் பொறுப்பேற்றமுதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அந்த குடும்பத்தின் பிடி யில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துள்ளனர்.

அதற்கான நடவடிக்கைகளின் துவக்கமாக, 'துணை பொதுச்செயலராக, தினகரன் நியமிக்கப் பட்டது செல்லாது' என, அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்களை கூட்டி, முதல்வர் பழனிசாமி, அதிரடி

தீர்மானம் நிறைவேற்றினார். அதனால், ஆத்திர மடைந்த தினகரன்,தனக்கென ஆதரவு அணியை உருவாக்கி, கட்சியை கைப்பற்ற, காய் நகர்த்தி வருகிறார்.

அவர் பக்கம் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களை காட்டி, முதல்வர் பழனிசாமியையும், அமைச் சர்களை யும் பகிரங்கமாக மிரட்டத் துவங்கி உள்ளார். 'எனக்கு எதிரான தீர்மானத்தை ரத்து செய்து, அமைச்சர்கள் அனைவரும், என் பக்கம் வராவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும் எச்சரித்து உள்ளார்.

இந்நிலையில், பகிரங்கமாக மிரட்டும் தினகரன் கும்பலுக்கு பீதியை ஏற்படுத்தும் விதமாக, இந்த இரண்டு அதிரடி அறிவிப்புகளை, முதல்வர் பழனிசாமி, நேற்று வெளியிட்டு உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

ஜெ., இறப்பு குறித்து, விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி தலைமையில், ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்படும். நீதிபதி பெயர், பின்னர் அறிவிக்கப்படும். குறுகிய காலத்தில், அறிக்கை சமர்ப் பிக்க உத்தர விடப்படும். சென்னை,போயஸ் தோட்டத்தில்,ஜெ., வாழ்ந்த, 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவிட மாக்கி, பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக் கும் படி, பல்வேறு தரப்பினரிடம் இருந்து, கோரிக்கைகள் வந்துள்ளன.

ஜெ.,யின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும் அறியும் வகையில், அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு, அரசு நினைவிடமாக மாற்றப் பட்டு, பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக் கப்படும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

-நமது நிருபர்-
22 வரை மருத்துவ அட்மிஷன் நிறுத்தி வைப்பு  'நீட்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, வரும், 22ம் தேதி வரை நிறுத்தி வைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





'நீட்' எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு ரேங்க் பட்டியல், மாநிலக் கல்வி வாரிய, 'மெரிட்' பட்டியல், மாநில கல்வி வாரியத்தில் படித்த எத்தனை பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றனர் உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்யவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'நீட்' எனப்படும் மருத்துவக் கல்வியில் சேருவ தற்கான நுழைவுத் தேர்வு, சமீபத்தில் நடத்தப் பட்டது. 'மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் படித் தவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்கு தயாராக வில்லை என்பதால், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழக அரசு கோரி வருகிறது.

இதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்கும் முயற்சி யில், மத்திய அரசு உதவியுடன், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், நீட் முறையி லேயே மாணவர் சேர்க்கையை நடத்த உத்தர விடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ''நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில், அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான நடவடிக்கை கள் நடந்து வருகின்றன. ''வரும், 22ம் தேதிக்குள் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்,'' என, மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டார்

ஜெனரல், துஷார் மேத்தா தெரிவித்தார். தமிழகத் துக்கு விலக்கு அளிப்பதற்கு, இந்திய மருத்துவ கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த வழக்கு களைத் தொடர்ந்துள்ள மாணவர்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், நளினி சிதம்பரம், ''தமிழகத்தில், 10 ஆண்டுகளில், கிராமப் பகுதியைச் சேர்ந்த, 250 பேர் மட்டுமே மருத்துவக் கல்லுாரி களில் சேர்ந்துள் ளனர். ''அதனால், நீட் தேர்வு கிராமப்புற மாணவர் களுக்கு எதிரானது என்ற வாதத்தை ஏற்க முடியாது,'' என்றார்.

தமிழக அரசு பாடதிட்டத்தில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.யு. சிங், தன் வாதத்தின்போது, ''நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 33ஆயிரம் பேரில், 30 ஆயிரம் பேர் மாநில பாடதிட்டத்தில் படித்தவர்கள். ''அதனால், பிளஸ் 2 தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தினால், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவர்,'' என்றார்.

இந்த வாதங்களைக் கேட்ட, உச்ச நீதிமன்ற அமர்வு அளித்துள்ள உத்தரவு:

மருத்துவ மாணவர் சேர்க்கையில், கடைசி நேரம் வரை தமிழக அரசு ஏன் இழுத்தடிப்பை செய்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் எவரும் பாதிக்கக் கூடாது என விரும்புகிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில், அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளதாக இங்கு கூறினர்.

தகுதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தப் பட்ட நீட் தேர்வு முறையை, மத்திய அரசே உடைத் தெறியக் கூடாது. ஒரு புறம் மாநில பாடதிட்டத்தில் படித்து, நீட் தேர்வுக்கு தயாராக முடியாத மாணவர் கள்; மறுபுறம், நீட் தேர்வு எழுதி, மருத்துவக் கல்வி யில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் உள்ளனர்; இருவரையும் சமநிலையில் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் முடிவெடுக்கும் வகையில், வரும், 22ம் தேதி, தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை நடத்த, இடைக்கால தடை விதிக்கப் படுகிறது. நீட் தேர்வு எழுதி, தகுதி பெற்றுள்ள மாண வர்களின், ரேங்க் பட்டியல், மாநில கல்வி வாரிய மெரிட் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். மாநில கல்வி வாரியத்தில்படித்த எத்தனை பேர், நீட்

தேர்வை எழுதினர், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் போன்ற தகவல்களை அளிக்க வேண்டும்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

அவசர சட்டத்துக்கு அவசியம் ஏற்படாதோ?:

உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவு காரண மாக, எல்லா பணிகளும் முடிந்து, தயார் நிலையில் உள்ள அவசர சட்டத்தை பிறப்பிக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வராது என்றே தெரிகிறது. இதுவரை, எந்த பிடியும் இல்லாமல் காத்துக் கிடக்கும், நீட் ஆதரவு தரப்பு, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், அடுத்த நிமிடமே கோர்ட் படியேற தயாராகும்.

இதனால், அவசர சட்டம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு ஏற்படும். இப்போதுள்ள குழப்பத்தில், அவசர சட்ட விவகாரமும் சேர்ந்து, கூடுதல் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற பயம், மத்திய, மாநில அரசுகளிடம் காணப்படுகிறது.

எனவே, அவசர சட்டத்தை அவசரப்பட்டு பிறப் பித்து, கோர்ட்டுக்கு தர்ம சங்கடத்தை அளிப்ப தற்கு பதிலாக, கோர்ட் உட்பட அனைத்து தரப்பும் ஏற்கும், சமரச பார்முலா வை, மத்திய, மாநில அரசுகள் தயார் செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த சமரச பார்முலாவே, தற்போதுள்ள பிரச்னைக்கு தீர்வாக அமைந்து விட்டால், இவ்வளவு நாட்களும் போராடி கிடைக்கப் பெற்ற அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய அவசியமே ஏற்படாமல் போகலாம். கோர்ட் உத்தரவின்படி, அந்த சமரச பார்முலா வின் கீழ், இந்த ஆண்டு மருத்துவ இடங்கள், தமிழகத்தில் நிரப்பப்படக் கூடும்.

மாணவர் சேர்க்கையை தாமதப் படுத்துவதற் காக, இந்திய மருத்துவ கவுன்சில், தமிழக அரசின் மீது கோபத்தில் உள்ளது. நேற்றைய வாதத்தின்போது கூட, 'மாணவர் சேர்க்கையை திட்டமிட்டபடி நடத்தி முடிக்காவிட்டால், தமிழ கத்துக்கான மருத்துவ இடங்களை நாங்களே எடுத்துக் கொள்வோம்' என, கடுமை காட்டியது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, சமரச பார்முலா வுக்கு பின்னும் கூட, சிக்கல் கள் எழுமோ என்ற குழப்பங்களும், சந்தேகங் களும் நீடிக்கவே செய்கின்றன.

- நமது டில்லி நிருபர் -

Supreme Court bars medical admissions in Tamil Nadu till Tuesday

Asks MCI and State govt to come up with a balancing plan in admissions

The Supreme Court on Thursday barred medical admissions in Tamil Nadu till August 22, thus stalling any prospects of the State kickstarting medical admissions in the next couple of days in case an ordinance meant to freeze NEET this year in the State is promulgated.
The ordinance has already been cleared by the Union Law Ministry, after a favourable legal opinion from Attorney-General K.K. Venugopal. It was supposed to be promulgated by August 22.
The court has now effectively deflected the course of events.
Directing status quo in medical admissions till August 22, which is also the next date of court hearing, the apex court ordered the Medical Council of India (MCI) and the state government to chalk out a balancing plan — one by which both students who have got through NEET and rural students ill-equipped for NEET can be “adjusted” in the medical admission list.
“This is a human problem... Our motto is 'whatever we do, a student who has laboured for NEET and got a rank should not suffer, whatever be the cost',” Justice Misra observed.A Bench of Justices Dipak Misra, Amitava Roy and A.M. Khanwilkar underlined that the Supreme Court will not allow NEET to be “demolished” at any cost.
The court further directed the State government to file the list of students from the Tamil Nadu State Board who appeared for NEET this year.
The Bench was hearing a petition filed by senior advocate Nalini Chidambaram and advocate Anushree Menon, appearing for a batch of CBSE students who cleared NEET in Tamil Nadu. They argued that the ordinance was unconstitutional and played with the lives of thousands of students who had prepared and cleared NEET.
Senior advocate Vikas Singh, for MCI, opposed any further delay in admissions. He submitted that Tamil Nadu has violated the mandate of the Supreme Court's orders that NEET would be the sole basis for medical admissions. Mr. Singh said Tamil Nadu was acting in contempt of the court's orders.
He said other states have already finished their second round of counselling, while Tamil Nadu has neither published its rank list nor started counselling.
“The State cannot create a fait accompli and say 'I will only do it this way'. They have to declare the rank list. It seems the State does not want its students poised on the equal platform NEET offers and is trying to create various categories of students – Plus Two and NEET,” Mr. Singh submitted.
He said any change in the admission mechanism now would render the NEET merit list redundant.
To this Tamil Nadu government, represented by senior advocate Shekhar Naphade, justified its ordinance, saying “every change in law is bound to bring some inconvenience to somebody. Does it mean the State cannot bring a law?”
“But why did you wake up so late to the plight of its rural students?” Justice Misra asked Mr. Naphade.

“But we are concerned with the lives of young students here... You are a welfare state. We understand your concern for the rural students, but what will happen to students who got through NEET? Do you even have a plan for them?” Justice Misra asked Mr. Naphade“No competent legislature should be asked such a question... whenever there is change in law, somebody will suffer,” Mr. Naphade replied.
Senior advocate C.U. Singh, also for some students, said over 30000 students from State Board have qualified in NEET this year. The students had a whole year to prepare for the exams and any exemption given to Tamil Nadu would open the flood gates for similar demands of exemption from other states.
Additional Solicitor General Tushar Mehta, appearing for the Centre, submitted these were “potential” arguments after the promulgation of the ordinance, and it was premature to voice them now.
Mrs. Chidambaram argued that the recent ordinance to exempt Tamil Nadu from NEET this year was merely a political bargaining chip which would affect the lives and careers of students.
“The state government is prevaricating and attempting at the last moment to change the criteria for admission to MBBS seats in government medical colleges and government quota seats in self financing colleges in Tamil Nadu from NEET-based to Plus 2 marks in violation of the Supreme Court's decision and Section 10 D of the Medical Council of India Act. Tamil Nadu government is acting for extraneous considerations to benefit private state board schools,” the petition alleged.

NEWS TODAY 28.01.2026