Tuesday, August 29, 2017

எல்லாம் ஒரு விளம்பரமே...! எம்.எல்.ஏ.க்கள் அடிக்கும் கூத்து!!!


புதுச்சேரி: புதுச்சேரியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 'கம்பு சுத்துவது, டீக்கடையில் டீ குடிப்பது,
பைக் ஓட்டுவது' போன்ற நடவடிக்கைகள், 'எல்லாம் ஒரு விளம்பரம் தான்' என்பது போன்று உள்ளது.

கொஞ்சம் ‛ஓவர்':

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர், புதுச்சேரி அடுத்த, சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலர், தினமும் நடைபயிற்சி செல்வதை, வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் ஏழுமலை, கதிர்காமு, தங்கதுரை உள்ளிட்ட சிலரது நடவடிக்கைகள் கொஞ்சம், 'ஓவராக' உள்ளது.

போட்டி போட்டு 'போஸ்':

புதுச்சேரி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ஏழுமலை, தெருவோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். 'நட்சத்திர ஓட்டலில் கிடைக்காத டீயா, வெளியில் கிடைத்து விடப்போகிறது' என, சிலர், 'கமென்ட்' அடித்தனர். இருந்தும், அவரது செயல் பத்திரிகை மற்றும் 'டிவி'க்களில் வந்ததால், மறுநாள் மேலும் சில, எம்.எல்.ஏ.,க்கள் சாலைக்கு வந்து விட்டனர். 'நாய்க்கு பிஸ்கட் போடுவது, டீ குடிப்பது, பேப்பர் படிப்பது' போன்ற நடவடிக்கையில் இறங்கி, பத்திரிகைகளுக்கு போட்டி போட்டு, 'போஸ்' கொடுத்தனர்.

'பந்தா':

சின்ன வீராம்பட்டினம் விடுதிக்கு நேற்று முன்தினம் திரும்பிய அவர்கள், மீண்டும், நடைபயிற்சி, யோகா, நீச்சல், கம்பு சுற்றுவது, பத்திரிகையாளர்களிடம் பைக் வாங்கி ஓட்டுவது என, பத்திரிகைகளுக்கு பல்வேறு கோணங்களில் போஸ் கொடுத்து அசத்தினர். துவக்கத்தில் ஓரிருவர் மட்டுமே, இந்த நடவடிக்கையில் இறங்க, தற்போது, 'பந்தா' காட்டும், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

IT EMPLOYEES UNION SEES RED IN PINK SLIPS

BLUE WHALE GAME CLAIMS 1 IN UP

15 DOGS POISONED BURNT AT CHITLAPAKKAM

BLUE WHALE WHALE CHALLENGE COPS ADVISORY

மாநில செய்திகள்

நீல திமிங்கல விளையாட்டு: போலீசார் எச்சரிக்கை



சென்னை நகர போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஆகஸ்ட் 29, 2017, 03:45 AM

சென்னை,

நீல திமிங்கலம் என்ற பெயரில் இணையதள விளையாட்டு ஒன்று தற்போது இளைஞர்கள் மத்தியில் மோகத்தை உண்டாக்கி வருகிறது. அந்த விளையாட்டு இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் விதமாக அமைந்துள்ளது. அதிகாலையில் இளைஞர்களை தூக்கத்தில் இருந்து எழ வைக்கிறது.

இளைஞர்களின் உயிருக்கு சவால்விடும் வகையில் அமைந்துள்ள இந்த விளையாட்டில் ஈடுபட விடாமல், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும்.

இணையதளத்தில் விளையாடும் இந்த விளையாட்டை விளையாட விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியில் வேறு விதமான விளையாட்டில் இளைஞர்களை ஈடுபடுத்துவதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹார்வி புயல் பாதிப்பு 200 இந்திய மாணவர்கள் ஹூஸ்டனில் தத்தளிப்பு: 2 பேர் கவலைக்கிடம்

2017-08-29@ 01:51:52



புதுடெல்லி : அமெரிக்காவை தாக்கிய ஹார்வி புயல் பாதிப்பில் சிக்கி 200 இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர். அமெரிக்காவின் பல இடங்களில் சேதத்தை விளைவித்துள்ள ஹார்வி புயலால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் கடுமையான மழைப்பொழிவும் காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. அமெரிக்காவின் அலபாமா, ஜார்ஜியா, கென்டக்கி உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கிய பயங்கரமான புயலாக கருதப்படும் ஹார்வி புயலால், நேற்று முன்தினம் டெக்சாஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி டெக்சாசில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘ஹார்வி புயலால் ஹூஸ்டனில் தொடர்மழை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹூஸ்டன் பல்கலைக் கழகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், 200 இந்திய மாணவர்கள் கழுத்தளவு வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், ஷாலினி என்ற மாணவியும், நிகில் பாட்டியா என்ற மாணவரு்ம் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக தூதரக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

NEWS TODAY 11.07.2026