Thursday, September 14, 2017

மது, செல்போன், புடவை, கொலுசு வாங்க 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற தந்தை

Published : 14 Sep 2017 08:27 IST

புவனேஸ்வரம்

மது, செல்போன், புடவை, கொலுசு வாங்க தனது 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற தந்தையை போலீஸார் கைது செய்துள் ளனர்.

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலராம் முகி. இவரது மனைவி சுகுடி. இவர்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். மூன்றாவதாக கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் சுகுடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார் பலராம். தகவல் அறிந்த போலீஸார் பலராம் முகியை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இதுகுறித்து பத்ராக் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனுப் சாகு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பலராம் முகிக்கு நிரந்தர வருமானம் இல்லை. அத்துடன் குடிப்பழக்கமும் உள்ளவர். அதனால் 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தில் ரூ.2 ஆயிரத்தில் செல்போன், மகளுக்கு ரூ.1,500-ல் வெள்ளி கொலுசு, மனைவிக்கு புடவை ஆகியவற்றை வாங்கி உள்ளார். மீதி பணத்தில் மது வாங்கி உள்ளார். இதுகுறித்து பலராமின் மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்.

குழந்தையை விற்க பலராமின் மைத்துனர் பாலியாதான் உதவி செய்துள்ளார். இவர் அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார். சோம்நாத் சேத்தி என்பவர் அரசு ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய 24 வயது மகன் கடந்த 2012-ம் ஆண்டு இறந்துள்ளார். ஒரே மகனை பறி கொடுத்த சோகத்தில் சோம்நாத் சேத்தியின் மனைவி மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

ஆண் குழந்தையைத் தத்தெடுத்தால் அவருடைய மனநிலை மாற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். அதை அறிந்த பாலியா, பலராமிடம் பேசி குழந்தையை விற்க ஏற்பாடு செய்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீஸ் கண்காணிப்பாளர் அனுப் சாகு கூறினார்.- ஏஎன்ஐ
ரவுடிகளும், சமூக விரோதிகளும் ஊழியர்களாக நியமனம்: சுங்கச் சாவடிகள் முறையாக இயங்குவதில்லை - உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

Published : 14 Sep 2017 09:22 IST

மதுரை
தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் சுங்கச் சாவடி பணியாளர்களாக நியமனம் செய்கின்றனர். அவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை 67-ல் பெட்டைவாய்த்தலை முதல் குளித்தலை வரை சாலையில் இருபுறமும் மணல் லாரிகள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால், திருப்பராய்த்துறை, மனவாசி சுங்க மையங்களில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘சேலம் செல்லும் வழியில் திண்டுக்கல் - கரூர் சாலையில் அரவக்குறிச்சி சுங்க மையத்தில் அடையாள அட்டை கேட்டு தன்னை 20 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைத்ததாகவும், தனது காரில் தேசிய கொடி பறக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதி என முத்திரை இடம் பெற்றுள்ளது. இருப்பினும் தன்னிடம் அடையாள அட்டை கேட்டதாகவும்’ நீதிபதி கே.கே.சசிதரன் தெரிவித்தார்.

பின்னர், தேசிய நெடுஞ்சாலை குழுமத்தின் தலைமை பொது மேலாளர் மற்றும் கரூர்- திண்டுக்கல் சுங்க மையங்களை நிர்வகித்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டின் (டிகே) எக்ஸ்பிரஸ்வேஸ் மதுகான் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொது மேலாளர், அரவக்குறிச்சி சுங்கச் சாவடி பொறுப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, ‘தமிழகத்தில் சுங்க மையங்களில் ரவுடிகளும், சமூக விரோதிகளும் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலத்தவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழி தெரிவதில்லை. சுங்க மையங்களில் நீதிபதியையே நிறுத்தும்போது, சாதாரண மக்களின் நிலைமை பரிதாபகரமானது.

நடவடிக்கை எடுப்பதில்லை

இந்த விதிமீறல் தொடர்பாக சுங்க மைய ஒப்பந்ததாரர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை குழுமம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் சுங்க மையங்கள் முறையாக செயல்படுவதில்லை. கேரளாவில் சுங்க மையங்களில் முறைகேடு நடந்தபோது மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடுத்த உதாரணம் உள்ளது.

தமிழகத்தில் சுங்க மையங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழியில்லை. நோயாளிகளுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் சுங்கச் சாவடி பணியாளர்களாக நியமனம் செய்கின்றனர். அவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை 67-ல் பெட்டைவாய்த்தலை முதல் குளித்தலை வரை சாலையில் இருபுறமும் மணல் லாரிகள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால், திருப்பராய்த்துறை, மனவாசி சுங்க மையங்களில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘சேலம் செல்லும் வழியில் திண்டுக்கல் - கரூர் சாலையில் அரவக்குறிச்சி சுங்க மையத்தில் அடையாள அட்டை கேட்டு தன்னை 20 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைத்ததாகவும், தனது காரில் தேசிய கொடி பறக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதி என முத்திரை இடம் பெற்றுள்ளது. இருப்பினும் தன்னிடம் அடையாள அட்டை கேட்டதாகவும்’ நீதிபதி கே.கே.சசிதரன் தெரிவித்தார்.

பின்னர், தேசிய நெடுஞ்சாலை குழுமத்தின் தலைமை பொது மேலாளர் மற்றும் கரூர்- திண்டுக்கல் சுங்க மையங்களை நிர்வகித்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டின் (டிகே) எக்ஸ்பிரஸ்வேஸ் மதுகான் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொது மேலாளர், அரவக்குறிச்சி சுங்கச் சாவடி பொறுப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, ‘தமிழகத்தில் சுங்க மையங்களில் ரவுடிகளும், சமூக விரோதிகளும் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலத்தவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழி தெரிவதில்லை. சுங்க மையங்களில் நீதிபதியையே நிறுத்தும்போது, சாதாரண மக்களின் நிலைமை பரிதாபகரமானது.

நடவடிக்கை எடுப்பதில்லை

இந்த விதிமீறல் தொடர்பாக சுங்க மைய ஒப்பந்ததாரர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை குழுமம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் சுங்க மையங்கள் முறையாக செயல்படுவதில்லை. கேரளாவில் சுங்க மையங்களில் முறைகேடு நடந்தபோது மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடுத்த உதாரணம் உள்ளது.

தமிழகத்தில் சுங்க மையங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழியில்லை. நோயாளிகளுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்?

தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்சன் திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம், இவற்றுக்குரிய அகவிலைப்படி (டி.ஏ.) ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை அரசு தன் பங்கிற்கு செலுத்துகிறது. இவ்வாறு சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் வழங்கப்பட்டுவிடும்.
எஞ்சிய 40 சதவீத தொகை பங்குசந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.
 புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
பழைய பென்சன் திட்டப்படி, அரசு ஊழியர் ஒருவர் 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர் முழு ஓய்வூதியம் பெறலாம். முழு ஓய்வூதியம் என்பது அவர் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் அதற்கு உரிய அகவிலைப்படி ஆகியவற்றை உள்ளடக்கியது. 30 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் பணிக்காலத்துக்கு ஏற்ப ஓய்வூதிய தொகை நிர்ணயிக்கப்படும். இதற்கென தனி கணக்கீடு உள்ளது.
புதிய பென்சன் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியத்தொகை கிடைக்கும் என்று வரையறுக்க இயலாது. ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டின் பலனை பொருத்தது. பணிக்கொடை (கிராஜுவிட்டி), சிபிஎப் தொகையில் கடன் மற்றும் முன்பணம் பெறும் வசதி, குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு இவை எதுவும் கிடையாது என்பதால்தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய பென்சன் திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


வழித்தடங்களை தேர்வு செய்யும் பணி முடிவு 100 சிறிய பேருந்துகள் 2 மாதங்களில் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்

Published : 14 Sep 2017 09:42 IST

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மாதங்களில் 100 சிறிய பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான வழித்தடங்களை தேர்வு செய்யும் பணி முடிவடைந்துள்ளது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போக்குவரத்து இணைப்பில்லாத பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் சுமார் 200 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5, அதற்கு மேல் ரூ.6, ரூ.8 ரூ.9 என வசூலிக்கப்படுகிறது.

இந்த பேருந்துகளில் 27 பேர் அமர்ந்து செல்லலாம். இந்த பேருந்துகள் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றதையடுத்து மேலும், 100 சிறிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தினமும் ரூ. 3,500 வசூல்

சென்னையில் இயக்கப்படும் சிறிய பேருந்துகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. ஆட்டோ மற்றும் கால்டாக்சியை நம்பியிருந்த மக்கள், தற்போது சிறிய பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். சிறிய பேருந்துகள் மூலம் தினமும் தலா ரூ.3,500 வசூலாகிறது.

இதற்கான பராமரிப்பு செலவும் குறைவு என்பதால், போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் வருவாய் பெற உதவியாக இருக்கிறது. அடுத்தகட்டமாக 100 சிறிய பேருந்துகளை இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கான வழித்தடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 20 சிறிய பேருந்துகள் இயக்கப்படும். உட்புறம், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் 80 சிறிய பேருந்துகளும் அடுத்த 2 மாதங்களில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏழைகளுக்கு சேவை செய்யவே சிறப்பு நேர்காணல் மூலம் மருத்துவ மாணவர் தேர்வு: சிஎம்சி முதல்வர் அன்ன புலிமூட் விளக்கம்

Published : 14 Sep 2017 09:20 IST


வ.செந்தில்குமார்

வேலூர்




வேலூர் சிஎம்சி மருத்துவமனை. - படம்: விஎம். மணிநாதன்


அன்ன புலிமூட்

ஏழைகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுள்ள மருத்துவ மாணவர்களை தேர்வு செய்யவே எங்களுக்கு அனுமதியளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளோம் என்று சிஎம்சி முதல்வர் அன்ன புலிமூட் தெரிவித்தார்.

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, ‘நீட்’ தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது. ‘நீட்’ தேர்வுடன் தாங்கள் நடத்தும் சிறப்புத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களை மட்டுமே சேர்ப்போம் என்று வலியுறுத்தியுள்ளது.

100 மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓரிடத்தை மட்டும் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்காக ஒதுக்கீடு செய்து அதன்படி, மும்பையைச் சேர்ந்த சித்தாந்த் நாயர் என்ற ஒரே மாணவரை சேர்த்துள்ளது.

இதுகுறித்து, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி முதல்வர் அன்ன புலிமூட் கூறும்போது, ‘ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே எங்கள் கல்லூரியின் நிறுவனர் (ஐடா ஸ்கடர்) அமெரிக்காவில் இருந்து இங்கு மருத்துவமனையையும் கல்லூரியையும் தொடங்கினார். அவரது எண்ணங்களை இதுவரை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

எங்கள் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்காக கூடுதல் நிதிச் சுமையை கொடுப்பதில்லை. எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டு கட்டணம் ரூ.3,000, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ரூ.400, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கு ரூ.500 மட்டுமே வசூலிக்கிறோம்.

இங்கு, கிறிஸ்துவர்கள் மட்டும்தான் படிக்கிறார்கள் என்பது தவறானது. ஆண்டுதோறும் 15 இதரப் பிரிவினரையும் சேர்க்கிறோம். தென்னிந்தியாவில் அதிக மிஷனரிகள் இருப்பதால் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர்.

‘நீட்’ தேர்வின் மூலம் வரும் சிறந்த மாணவர்களில் சேவை மனப்பான்மையுள்ள மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, சிறப்பு நேர்காணல் நடத்த அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மாணவர் சேர்க்கை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் விதிகளை மீறவில்லை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பலமுறை கூறியுள்ளனர்’ என்றார்.
பதிவுத்தபாலில் அனுப்பாத நோட்டீசை அரசு ஊழியர்கள் பெறக்கூடாது : 'ஜாக்டோ- ஜியோ' அறிவுரை

பதிவு செய்த நாள்13செப்
2017
23:21

தேனி: 'பதிவுத்தபாலில் அனுப்பாத வேலை நிறுத்த விளக்க நோட்டீசை பெற்றுக் கொள்ளக் கூடாது', என ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 முதல் ஜாக்டோ-, ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.செப்.8ல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு அரசு சார்பில் 17ஏ (விளக்கம் கேட்கும் குறிப்பாணை) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த நோட்டீசை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித் துறையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வருவாய்த் துறை, வளர்ச்சித் துறை, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேசிய, மாவட்ட 'ஜாக்டோ ஜியோ' ஒருங்கிணைப்பாளர்கள், விளக்க குறிப்பாணை நோட்டீசை தலைமை ஆசிரியரிடம் இருந்தோ, உயரதிகாரிகளிடம் இருந்தோ பெறக் கூடாது. முறைப்படி பதிவுத் தபாலில் மட்டுமே பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.இதனால் அவர்களுக்கு நோட்டீஸ் தருவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு  உள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஊழியர்களின் வீடுகளுக்கு சென்று நோட்டீஸ் ஒட்ட அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட செய்திகள்

ஒப்பந்த தொழிலாளிக்கு மீண்டும் பணி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது


ஒப்பந்த தொழிலாளிக்கு மீண்டும் பணி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி மண்டல சுகாதார ஆய்வாளர் மற்றும் அவருடைய உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

செப்டம்பர் 14, 2017, 07:45 AM

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்துக்கு உட்பட்ட 18, 19 மற்றும் 20–வது வார்டு சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாலன் (வயது 42).

19–வது வார்டு பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டு வந்த சரவணன் என்ற தொழிலாளி, ஒழுங்காக வேலை செய்யவில்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் தன்னை மீண்டும் பணியில் சேர்க்கும்படி சுகாதார ஆய்வாளர் பாலனிடம் கோரினார். அதற்கு அவர், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்கிறேன் என கூறியதாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், இதுபற்றி சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். சுகாதார ஆய்வாளரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை சரவணனிடம் கொடுத்து அதை சுகாதார ஆய்வாளர் பாலனிடம் லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

அந்த பணத்துடன் மாநகராட்சி வார்டு அலுவலகம் சென்ற சரவணன், அலுவலகத்துக்கு வெளியே நின்றபடி பாலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாலன், தனது உதவியாளர் லட்சுமிபதி(40)யை அனுப்பிவைக்கிறேன். அவரிடம் பணத்தை கொடுக்கும்படி கூறினார்.

இதையடுத்து சுகாதார ஆய்வாளர் பாலனின் உதவியாளர் லட்சுமிபதி வெளியே வந்து சரவணனிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்கிச் சென்று பாலனிடம் கொடுத்தார்.

இவற்றை அங்கு மறைந்து நின்று கண்காணித்துக்கொண்டு இருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் விஸ்வநாத் ஜெயன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சுகாதார ஆய்வாளர் பாலன் மற்றும் அவரது உதவியாளர் லட்சுமிபதி 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கியதாக கைதான பாலன், சுதந்திர தின விழாவின் போது சென்னை மாநகராட்சியின் சிறந்த சுகாதார ஆய்வாளர் என்ற விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS TO DAY 16.07.2026