Thursday, September 14, 2017

தலையங்கம்

தமிழ்நாட்டில் ‘நவோதயா’ பள்ளிக்கூடங்கள்



1986–ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் முட்டி மோதிக்கொண்டு, நவோதயா பள்ளிக்கூடங்கள் திறக்காத ஒரு நிலைக்கு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இப்போது ஒரு விடையை அளித்துள்ளது.

செப்டம்பர் 14 2017, 03:00 AM
1986–ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் முட்டி மோதிக்கொண்டு, நவோதயா பள்ளிக்கூடங்கள் திறக்காத ஒரு நிலைக்கு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இப்போது ஒரு விடையை அளித்துள்ளது. அப்போதைய புதிய கல்விக் கொள்கையில் நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசாங் கத்தின் உதவியுடன், மாவட்டத்திற்கு ஒரு ஜவகர் நவோதயா பள்ளிக்கூடம் தொடங்கப்படவேண்டும். இந்த பள்ளிக் கூடங்கள் உண்டு, உறைவிடப் பள்ளிக்கூடங்களாக இருக்கும். ஆண், பெண் இருபாலாரும் கல்வி கற்கக்கூடிய இந்த பள்ளிக்கூடங்களில், 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை கல்வி கற்றுக்கொடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட மலைவாழ் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு தவிர,

75 சதவீதம் இடஒதுக்கீடு கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கப்படும். முழுக்க முழுக்க இலவசமான இந்த பள்ளிக்கூடங்களில் 9 முதல் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த கல்விவசதி, விடுதி வசதிக்காக மாதம் ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த நவோதயா பள்ளிக் கூடங்கள் தொடங்க மாவட்டந்தோறும் மாநில அரசுகள் 30 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும். மத்திய அரசாங்கம்

3 ஆண்டுகளுக்குள் ரூ.20 கோடி வழங்கி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி கல்வி கற்றுக் கொடுக்கப்படும். இந்த பள்ளிக்கூடங்களில் மும்மொழி பாடத்திட்டம் அடிப்படையில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தமிழக அரசு இருமொழிக்கொள்கையை பின்பற்றுவதால், தொடக்கம் முதலே நவோதயா பள்ளிக் கூடங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட அனுமதிக்க வில்லை. இந்தியா முழுவதிலும், தமிழ்நாட்டை தவிர, எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப் பட்டுவிட்டன. இந்தநிலையில், தமிழ்நாட்டிலும் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படவேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்

கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட பெஞ்சு, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படவேண்டும். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க தமிழக அரசு 8 வாரத்திற்குள்

முடிவெடுக்கவேண்டும். மத்திய அரசாங்கம் உயர்நீதி மன்றத்திலேயே எழுத்துப்பூர்வமாக இந்த பள்ளிக்கூடங் களில் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று உறுதி அளித் திருக்கிறது. 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்புவரை தமிழ் கட்டாய மொழியாக கற்றுக்கொடுக்கப்படும். 11, 12–ம் வகுப்புகளில் விருப்பமொழியாக தமிழ் கற்றுக்கொடுக் கப்படும். உள்கட்டமைப்பு வசதிகளையும் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருக்கிறது. பொதுவாக நவோதயா பள்ளிக்கூடங்களில் உயர்தரகல்வி கற்றுக்கொடுக்கப் படுகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் மருத்து வக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்தது. இந்தியா முழுவதிலும் உள்ள 598 நவோதயா பள்ளிக்கூடங்களில் படித்த 14 ஆயிரத்து 183 பேர் ‘நீட்’ தேர்வு எழுதியநிலையில், 11 ஆயிரத்து 875 பேர் வெற்றிபெற்றுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களில் 5 பேர்தான் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டும் பிளஸ்–2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்த நிலையில் கூட 30 பேர்தான் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தி வேண்டாம் என்று ஒருபக்கம் சொன்னாலும், பாரத இந்தி பிரசார சபா நடத்தும் இந்தி படிப்புகளில், தென்மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள். நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்குவதில் அரசியலை கலந்துவிடாமல், படிக்கப்போகும் மாணவர்கள், அவர் களை படிக்கவைக்கும் பெற்றோர்களின் கருத்துகளை அறிந்து, இதுபற்றி ஒரு திட்டவட்டமான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
உலக செய்திகள்

மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 மாணவர்கள் 2 வார்டன்கள் பலியாகியுள்ளனர்.
செப்டம்பர் 14, 2017, 08:43 AM

கோலாலம்பூர்,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை பள்ளியில் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 23 மாணவர்கள், 2 வார்டன்கள் என மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளனர். பள்ளியின் மூன்றாவது மாடி கட்டிடத்தில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் காயம் அடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து இது என்று மலேசிய தீ அணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போட்டியாளர்கள் தகுதி நீக்கத்தால் அதிரடி சிங்கப்பூர் முதல் பெண் அதிபரானார் ஹலீமா

DINAKARAN
2017-09-14@ 00:22:10




சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலீமா யாகோப் தேர்வாகியுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஹலீமா யாகோப்புக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூர் அதிபராக இருந்த டோனி டான் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். சிங்கப்பூரில் அதிபராவது என்பது கெடுபிடிகள் நிறைந்தது என்ற நிலையில் தற்போது மலாய் இனத்தை சேர்ந்தவர்களே தேர்தலில் போட்டியிடலாம் எனவும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், ஆளும் மக்கள் செயல்பாட்டு கட்சி உறுப்பினருமான ஹலீமா யாகோப்(63) உள்பட 5 பேர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 3 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. தொழிலதிபர்கள் முகமது சலே மரிக்கான் மற்றும் பரீத் கான் ஆகிய இருவரின் மனுக்கள், தகுதிக்கு குறைந்தபட்ச தேவையான 2 விதிமுறைகளில் ஒன்றை பூர்த்தி செய்யாததால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் அந்த 2 போட்டியாளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மலாய் இனத்தை சேர்ந்த ஹலீமா யாகோப் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலை சந்திக்காமலே அவர் சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். இவருக்கு இன்று இஸ்தானாவில், மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டின் 8வது அதிபராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹலீமா யாகோப் தனது வெற்றி குறித்து கூறுகையில், ‘`நான் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அடைந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கடும் முயற்சி மேற்கொள்வேன்’’ என்றார். ஹலீமாவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சேலம் பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் இருந்து நடிகையின் படம் நீக்கம்
2017-09-14@ 00:58:27




ஓமலூர்: ஓமலூர் அருகே ஒரு பெண்ணின் ரேஷன் கார்டில் நடிகை காஜல் அகர்வால் படம் இடம் பெற்றது. காஜல் படத்துக்கு மேல் சம்பந்தப்பட்ட பெண்ணின் படத்தை அதிகாரிகள் ஒட்டினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமம் ஆர்சி செட்டிப்பட்டி கோமாளி வட்டம் என்னும் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி சரோஜாவுக்கு கடந்த 11ம் தேதி ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. அதில், அவரது புகைப்படத்துக்கு பதில் நடிகை காஜல் அகர்வாலின் படம் இருந்தது.

இதுகுறித்த செய்தி, நாளிதழ்களில் நேற்று வெளியானது. இதன்பேரில், வட்ட வழங்கல் அலுவலர் அருள்பிரகாஷ் நேற்று, சரோஜாவுக்கு வழங்கப்பட்டு ஸ்மார்ட் கார்டினை வாங்கி விசாரித்தார். பின்னர், அந்த கார்டை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மையத்தில் கொடுத்து நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் மறைக்கப்பட்டு, அதற்கு மேல் தற்காலிகமாக சரோஜாவின் புகைப்படத்தை அச்சிட்டு மீண்டும் அவரிடம் வழங்கப்பட்டது.
275 கி.மீ., தூரம் லாரியை ஓட்டி வந்த போதை டிரைவர்பெரும் விபத்து தவிர்ப்பு
பதிவு செய்த நாள்14செப்
2017
01:40

திருமங்கலம், நான்கு வழிச்சாலையில் 25 டன் எடையுள்ள 500 சிமென்ட் மூடைகளுடன் 14 சக்கரம் கொண்ட டைலர் லாரியை 275 கி.மீ., துாரம் போதையில் ஓட்டி வந்ததாக டிரைவர் சுவாமிநாதன்,37, கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலியை சேர்ந்த இவர், நேற்று அதிகாலை அரியலுார் அருகே உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் இருந்து 25 டன் எடையுள்ள 500 மூடைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கொல்லம் புறப்பட்டார். இந்த லாரி 14 வீல் கொண்ட டைலர் வகை லாரி.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: லாரி ஓட்டத்தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் சுவாமி
நாதன் போதை ஏறும் வகை குடித்தார். இந்த லாரி பெரும்பாலான பயணத்தை நான்கு வழிச்சாலையிலேயே கடந்துள்ளது. 

கட்டுப்பாடு இழந்த நிலையில் லாரி மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசார், திருமங்கலம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு தகவல்
கொடுத்தனர். அவர் சக போலீசாருடன் லாரியை விரட்டி ராஜபாளையம் ரோட்டில் மடக்கினார். அப்போதும் சுவாமிநாதன் போதையில் நிதானமின்றி காணப்பட்டார். அவரை கைது செய்தோம்.

டிரைவர் போதைக்கும், அவர் லாரி ஓட்டிய வேகத்திற்கும், லாரியின் வலுவான கட்டமைப்பிற்கும் எதிரே ஏதாவது வாகனம் சிக்கியிருந்தால் பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கும். அவரது
ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.
லண்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மல்லையா

பதிவு செய்த நாள்14செப்
2017
07:01




லண்டன்: மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் மல்லையா இன்று(செப்.,14) ஆஜராகிறார்.

பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் கடனாக வாங்கி திரும்ப செலுத்தாமல் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமறைவாக லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கு லண்டன் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மல்லையா ஆஜராக உள்ளார்.
சிங்கப்பூருக்கு முதல் பெண் அதிபர்

பதிவு செய்த நாள்
செப் 13,2017 21:45




சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக, ஹலிமா யாகப், 63, போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டார்.

ஆசிய நாடான சிங்கப்பூரில், அதிபர் பதவிக்கான தேர்தல், இந்த மாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் முறையாக, இந்தத் தேர்தலில், மலாய் பிரிவினர் மட்டுமே போட்டியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம், 55 லட்சம் மக்கள் தொகை உடைய சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கு, மூன்று பேர் போட்டியிட்டனர்.

இதில் சாலேஹ் மரிகன், பாரித் கான் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, முஸ்லிம் மலாய் பிரிவைச் சேர்ந்த, ஹலிமா யாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகரான யாகப், நாட்டின் முதல் பெண் அதிபராகி உள்ளார். தேர்தல் நடத்தப்படாமலும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூகவலைதளங்களில் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

NEWS TO DAY 16.07.2026