Saturday, September 16, 2017


அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..?

vikatan 
அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..?

றிஞர் அண்ணா 1963-ம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். நாடாளுமன்றத்தில் 'சென்னை மாகாணம்' என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார். காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. எம்.என். லிங்கம் என்ற உறுப்பினர், "தமிழ்நாடு என பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விடப்போகிறீர்கள்?" என்று கேட்டார். “நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கிறீர்களே, இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்று அண்ணா கேட்டதும், காங்கிரஸ் உறுப்பினரிடம் இருந்து பதிலேதுமில்லை.

முதல்வராக அண்ணா இருந்தபோது, அவரின் பேச்சு எதிர்க்கட்சியினரும் ரசிக்கும்படியாக இருக்கும். ஒரு சமயம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து, “மிருகக்காட்சி சாலைக்கு நான் தந்த ஆண் புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் தந்த பெண் புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட அண்ணா, "சம்பந்திகள் இருவரும் உட்காரந்து, உங்கள் பிரச்னையைப் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்” என்றதும் சபை சிரிப்பால் நிறைந்தது.
பெரியார் தன் முதுமைப் பருவத்தில் செய்துகொண்ட திருமணத்தினால், அண்ணா அவருடன் முரண்பட்டார். பெரியாரின் செயலால் கருத்துவேறுபாடு கொண்ட திராவிடர் கழகத்தினர், அண்ணா தலைமையில் திரண்டனர். பெரியாரின் செயலால் தொண்டர்கள் கண்ணீர் விடுவதாகவும் அந்தக் கண்ணீர் கடலாகி, அதில் பெரியார் மூழ்குவதாகவும் அட்டைப்படம் வெளியிட்டது திராவிட நாடு. எரிச்சலான பெரியார், அண்ணாவின் ஆதரவாளர்களை 'கண்ணீர்த் துளிகள்' என கிண்டலடித்தார். தி.மு.கழகம் உருவானது. ஆனாலும், பெரியாரை தரம் தாழாமல் விமர்சனம் செய்து கண்ணியம் காத்தார் அண்ணா. 
பெரியாருடன் முரண்பட்டு அரசியல் செய்தாலும், 1967 தேர்தலில் தி.மு.க வென்று தமிழக முதல்வராகப் பதவியேற்ற அண்ணா முதலில் சென்று சந்தித்தது பெரியாரைத்தான். தி.மு.கழகத்தின் வெற்றியை பெரியாருக்குக் காணிக்கையாக்குவதாகச் சொல்லி காலில் விழுந்து ஆசி பெற்றார் அண்ணா. இதன்மூலம் அவர் தன்னை சங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டதாக பெரியார் நெகிழ்ந்து எழுதினார்.

அண்ணா ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல; தேர்ந்த நடிகரும்கூட. தான் எழுதிய 'சந்திரோதயம்', 'சந்திரமோகன்' போன்ற நாடகங்களில் நடித்தும் இருக்கிறார்.  புகழ்பெற்ற 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் எம்.ஜி.ஆர். ஆனால், என்ன காரணத்தினாலோ தொடர்ந்து அதில் நடிக்கமுடியாத சூழல் உருவானது. அப்போது அந்த கதாபாத்திரத்திற்கு, தனது இல்லத்தில் தங்கியிருந்த 'கணேசன்' என்ற நாடக நடிகரை நடிக்க வைத்தார் அண்ணா. அந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒருநாள் அந்த நாடகத்தைக் காணவந்த பெரியார், கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “நாடகம் நடந்த இரண்டரை மணிநேரமும் நான் கணேசனை காணவில்லை. சிவாஜியையே கண்டேன்” என நெகிழ்ந்தார். அந்த நடிகர்தான், நடிகர் திலகம் 'சிவாஜி' கணேசன்.

பரபரப்பு அரசியல் தலைவர் என பெயர் எடுத்தாலும் அண்ணாவுக்குள் ஒரு படைப்பாளி எப்போதும் உண்டு. பொதுக்கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு நேரம்கடந்து வீடு திரும்பினாலும், தன் டைரியில் ஓவியம் வரைவது, ஜோக் எழுதுவது என தனக்கு பிடித்தமானவற்றைச் செய்து அந்தநாளின் டென்ஷனைக் குறைத்துக்கொள்வார். போராட்டங்களில் கலந்து சிறை செல்லும்போது அண்ணா தன்னைக் காண வருபவர்களிடம் கேட்கிற விஷயம் ஒன்று புத்தகம். மற்றொன்று வெள்ளைத்தாள். அதில் விருப்பம்போல் படங்களை வரைந்து தள்ளுவார். போர் வீரன், வனம் என அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் காணக்கிடைப்பவை. அவர் தன் டைரியில் எழுதிவைத்த ஜோக்குகளில் ஒன்று இது....

ஹோட்டலில் சாப்பிட வந்தவர்: "ஏம்பா.. வடை இவ்வளவு மோசமா இருக்கு...சின்னதாவும் இருக்கே?"
சர்வர்: "பின்னே, என்னங்க...மோசமாகவும் இருந்து, பெரியதாவும் இருந்தா தின்ன முடியாதுங்களே? அதான்!"

ண்ணாவுக்கு மூக்குப்பொடி போடும் வழக்கம் உண்டு. அண்ணாவிடம் ரசித்த விஷயம் என்ன என்று எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை கேட்டபோது, "பொதுக்கூட்டத்தில் மற்றவருக்குத் தெரியாமல் லாவகமாக, அவர் மூக்குப்பொடி போடும் அந்த சில விநாடிகள் பார்க்க ரசனையாக இருக்கும்" என்று பதிலளித்தார். ஆம், அத்தனை ரசனையாக மூக்குப்பொடி போடுவார் அண்ணா.
இரவு நெடுநேரம்வரை எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் வழக்கம் கொண்டவர் அண்ணா. அதனால், பகல் 10 மணிக்கு மேல்தான் எழுதுவார். காஞ்சிபுரத்தில் அவரைக் காண வருபவர்கள், அவருக்காக வீட்டில் வாசற்படியில்  காத்திருப்பதைப் பார்க்கும் அவரது சித்தி, “கட்சிக்கு உதயசூரியன்னு பேரை வெச்சிட்டு, ஒருநாளும் அது உதிக்கறதைப் பார்க்க மாட்டேங்குறானே" என குறைபட்டுக் கொள்வார் காத்திருப்பவர்களிடம். இதைக்கேட்டு, அந்த இடமே சிரிப்பொலியால் அலறும்..
1968-ம் ஆண்டில் மருத்துவக்கல்லுாரி மாணவர் ஒருவருக்கும், பஸ் நடத்துனர் ஒருவருக்குமான மோதல் பெரிய பிரச்னையாகி பேருந்து தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் செய்தன. அண்ணா தலையிட்டும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. மாணவர் சார்பாக, அண்ணா மன்னிப்பு கேட்டும், அவர்கள் மனமிரங்கி வரவில்லை. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, அண்ணா மயக்கமுற்றார். வாயிலிருந்து ரத்தம் வந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அண்ணாவுக்குப் புற்றுநோய் எனத் தெரியவந்தது. 
லைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், அண்ணாவுக்குமான நட்பு ஆச்சரயமானது. கலைவாணருக்காக அண்ணா எழுதிய கதை “நல்லதம்பி”. கதைப்படி, படத்தில் கலைவாணருக்கு ஒரே ஒரு கதாநாயகிதான். அது பானுமதி. அந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது, அண்ணா ஒருமுறை கலைவாணர் இல்லத்திற்குச் சென்றார். அப்போது தன் கணவருடன் தான் நடிக்கமுடியவில்லையே என கலைவாணரின் மனைவி 'மதுரம்' கவலைப்பட்டதை அவரின் செயல்மூலம் தெரிந்துகொண்டார் அண்ணா. அன்றிரவே "நல்லதம்பி" படத்தின் கதையில் மதுரத்திற்கென ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, கலைவாணருக்கு ஜோடியாக்கினார் அண்ணா. 
தனக்கு புகழ்கொடுத்த அந்தப் படத்திற்கு சன்மானமாக, அண்ணாவுக்கு ஒரு காரை பரிசளித்தார் கலைவாணர். காஞ்சிக்கு நேரில்வந்து அதை தந்ததோடு, பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய காலம் என்பதால் குறிப்பிட்ட காலம்வரை அந்தக் காருக்குத் தேவையான பெட்ரோல் டோக்கன்களையும் கொடுத்தார் கலைவாணர்.
ந்தி எதிர்ப்பு நிலை, திராவிட நாடு கோரிக்கை இவற்றால் அண்ணாவின் மீது கோபத்தில் இருந்தவர் அன்றையப் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவர், சென்னை வந்தபோது தி.மு.க.-வினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டியதற்காக 'நான்சென்ஸ்' என தி.மு.க. தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். அதே நேரு, மாநிலங்களவைக்கு அண்ணா தேர்வாகிச் சென்றபோது, அவரது கன்னிப்பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு அயர்ந்துபோனார். நேரம் கடந்ததை மாநிலங்களவைத் தலைவர் சுட்டிக்காட்டியபோது, உணர்ச்சிவயப்பட்டு குறுக்கிட்ட நேரு ‘அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்; பேசவிடுங்கள்” என கேட்டுக்கொண்ட அதிசயம் நடந்தது. அண்ணாவின் உரை அந்த அளவுக்கு நேருவைக் கட்டிப்போட்டது.
ண்ணாவின் பேச்சுக்கு யாரும் அவ்வளவு எளிதில் மறுத்துப் பேசிவிட முடியாது. வலுவான வாதங்களை வைப்பதில் சமர்த்தர் அவர். ஒருமுறை பெரியாரைக் காண சுதேச கிருபாளினி வந்தார். அந்த வார “ரிவோல்ட்” இதழில் கதர் கட்டுவது மூடநம்பிக்கை என பொருள்படும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் பெரியார். இதை குறிப்பிட்ட கிருபாளினி, "நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருந்து தெருத் தெருவாக கதரை சுமந்து விற்றுக் கட்சியை வளர்த்திருக்கிறீர்கள். ஆனால், இப்போது இப்படி எழுதுவது தவறு!" என்றார். அதற்குப் பதில்கூற முயன்ற பெரியாரின் பேச்சை மறுதலித்து, தொடர்ந்து கிருபளானி ஆவேசத்துடன் பேசவே, குறுக்கே புகுந்த அண்ணா, " 'விபூதி அணிந்தவன் சிவ பக்தன். நாமம் போட்டவன்தான் வைணவன்!' என்று சொல்லும் நம்பிக்கை போன்றதுதான் கதர் கட்டுபவன்தான் தேசபக்தன் என்பது" என்று ஒரே போடாகப் போட, அமைதியானார் கிருபளானி.
திராவிட நாடு கொள்கையை அண்ணா முன்வைத்தபோது பெரும் சர்ச்சையானது. தி.மு.க-வை தடைசெய்ய வசதியாக, மத்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வரும் அளவுக்குப் போனது. 1962-ம் ஆண்டு சீனப் படையெடுப்பின்போது, உருவான கொந்தளிப்பான அரசியல் சூழலில், திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடுவதாக அறிவித்தார். திராவிட நாடு ஆதவாளர்கள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்குப் பயந்து அண்ணா பின்வாங்கி விட்டதாக அவர்கள் விமர்சித்தனர். 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில், நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்து விடுவதாகும். நாம் அப்படி நடந்துகொண்டால், வருங்காலத் தலைமுறை நம்மைச் சபிக்கும்' என்று 1962 அக்டோபர் மாதம் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்ததும், திராவிட நாடு கொள்கையை தான் கைவிட்டதற்கான காரணத்தை தெரிவித்தார் அண்ணா. இதன்மூலம் தான் ஒரு பக்குவப்பட்ட அரசியல் தலைவர் என்பதை நிரூபித்தார் அவர்.

அதேசமயத்தில் ''கழகத்தை அழிக்க சட்டம் கொணர்ந்தனர். சட்டத்தைத் திருத்தி கழகத்தைக் காத்தோம். 'சூட்சுமம்' புரிகிறதா தம்பி?" என்று தி.மு.க. தொண்டர்களுக்கும் தன் நிலைப்பாட்டை புரியவைத்தார் அண்ணா. 
1967-ம் ஆண்டு தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. பதவியேற்புக்கு தலைவர்கள் கோட் சூட்டுடன் தயாராகிக் கொண்டிருந்தபோது, தனது  நுங்கம்பாக்கம் வீட்டில் கவலையோடு இருந்தார் அண்ணா. “தவறு நடந்து விட்டது. இவ்வளவு சீக்கிரம் நாம் பொறுப்புக்கு வந்திருக்கக்கூடாது. இன்னும் சில காலம், நாம் பொறுத்திருந்திருக்க வேண்டும். நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரசையே துார எறிந்துவிட்டு, நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள். நம் மீது பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் சொன்னார். 
ரசியல் கட்சிகள் அநாகரீகமாக ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் நிலைதான் இன்றைய அரசியல். ஆனால் 1967 தேர்தலில் காமராஜர் தோற்ற தகவல் வந்தபோது, எதிர்முகாமில் இருந்த அண்ணா கலக்கமுற்றார். "காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்” என மனம் திறந்து சொன்னார் அண்ணா. "வெற்றியைக் கொண்டாடுகிறேன் பேர்வழி" என தோற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்தக் கூடாது. கொஞ்சநாள் கொண்டாட்டங்களை தள்ளிப்போடுங்கள்" என கண்ணியத்தோடு தன் தம்பிகளுக்கு கட்டளையிட்டார். 1957 தேர்தலில் அண்ணாவின் வீட்டுமுன் அவரை அருவெறுப்புடன் விமர்சித்து எழுதி வைக்கப்பட்டது. "இரவில் படிக்கச் சிரமமாக இருக்கும். ஒரு லாந்தர் விளக்கை வையுங்கள். இதை எழுதியவரின் தகுதியை ஊர் தெரிந்து கொள்ளட்டும்" என்றார் தம்பிகளிடம். 
வாரிசு அரசியல் போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான விஷயம் இன்று தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால், அண்ணா தன் வாரிசுகள் எவரையும் அரசியலில் ஈடுபடுத்தியதில்லை. கட்சி விவகாரங்களில் தலையிட வைத்ததுமில்லை. அண்ணாவின் மறைவுக்குப்பின், கருணாநிதி ஒருமுறையும், அ.தி.மு.க உருவாகி அக்கட்சி சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்த அண்ணாவின் வளர்ப்புப் புதல்வர் பரிமளத்தை அணுகினார் எம்.ஜி.ஆர். அண்ணாவைப்போன்றே அவரது துணைவியாரும் தன் மகனை அரசியலில் ஈடுபடுத்துவதில்லை என்பதில் உறுதியாக நின்றார். 
ண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980-ம் ஆண்டு நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. திறப்பு விழாவில் கலந்துகொண்ட அன்றைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி, "இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர், பின்னாளில் ஒரு மாநிலத்துக்கு முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதையேக் காட்டுகிறது. நான் அண்ணா அளவுக்கு படித்தவனல்ல என்றாலும், சாமான்யனாகிய நானும் குடியரசுத் தலைவராக ஆனதற்கு நமது ஜனநாயக அமைப்பே காரணம்" என்றார். அநேகமாக மாநில முதல்வராக இருந்த ஒருவரின் நினைவு இல்லத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது என்பது அதுவே முதல்முறை.
ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி பேசுகையில், "திராவிட இயக்க அரசியல்வாதியாக அண்ணாவைப் பார்த்தாலும், அவர் ஒரு காந்தியவாதியாகத்தான் இருந்தார். எதையும் யாருக்கும் புரியும் வகையில் சொல்வதில் அவர் கெட்டிக்காரர். குடும்பக் கட்டுப்பாட்டை பற்றி பேசும்போது பாமரர்களுக்கு புரியும்படி “பெருமாளுக்கு இரண்டு பிள்ளைகள்” எனக் கூறினார். தீவிர நாத்திகவாதியான அவர், மக்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காக தன் கொள்கைளை தள்ளிவைத்து, கடவுளை துணைக்கு அழைக்கவும் தயங்கவில்லை. அவர் ஒரு ஜென்டில்மேன்" என்றார்.

அரசு  குழந்தைகள் நலமருத்துவமனை முடங்கியது ! திடீர் மின் தடையால் விபரீதம்!

திடீர் மின்வெட்டு காரணமாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நேற்று மாலைமுதல் இரவுவரையில் பல மணி நேரத்துக்கு முடங்கியது.  அரசு மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதித்திருந்த தாய்மார்கள், இந்த திடீர் மின்வெட்டால் பதறினர். சுகாதாரத்துறை மந்திரியான டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில், 'தற்காலிக கருத்தடை ஊசி' அறிமுக விழாவும் நேற்றுதான் இங்கு நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது.  மருத்துவமனையின் ஐந்தாம் தளத்தில் மந்திரி பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்த அதே இடத்தில்தான்  தாய்-சேய் நலம் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவும் இயங்கி வருகிறது.  இதே ஐந்தாம் தளத்தில்தான் மின் தடையும் ஏற்பட்டது.இந்த திடீர் மின் தடை காரணமாக இன்குபேட்டரில்  வைக்கப் பட்டிருந்த குழந்தைகளின் நிலை குறித்து பெற்றோர்கள் நிலைகொள்ளாமல் தவித்தனர். இன்னொரு பக்கம், சுகாதாரத்துறை மந்திரிபங்கேற்கும் விழாவின் போது இப்படி ஆகி விட்டதே என்று மருத்துவமனை நிர்வாகமும் பதறியது.  வேறுவழியில்லாமல் குழந்தைகளுடன் பெற்றோர்கள், மருத்துவமனையை விட்டு காற்றோட்டமான மரத்தடியில் தஞ்சம் புகுந்தனர்.

ஐந்தாம் தளத்தில் நடக்கவிருந்த விழாவும், மின் தடை காரணமாக வேறு தளத்துக்கு உடனடியாக மாற்றப்பட்டது. மின்தடையை உடனே  சரிசெய்ய  மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏதும் உடனுக்குடன் பலனளிக்கவில்லை.விழாவில் பங்கேற்க வந்திருந்த மந்திரி விஜயபாஸ்கர், அங்கிருந்த சூழ்நிலையைப் பார்த்ததும், மருத்துமனை அதிகாரிகளைக் கூப்பிட்டு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.  மந்திரியை அருகில் பார்த்துவிட்ட,குழந்தைகளின் பெற்றோர்கள், "மருத்துவமனையில் எங்களைப் பாடாய்ப் படுத்துகின்றனர். எல்லாவற்றுக்கும் பணம் கேட்டு இங்குள்ள ஊழியர்கள் தொல்லை கொடுக்கிறார்கள். டாக்டர்களிடம் இது குறித்து சொன்னால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை... மின்சாரம் திடீரென்று போனதால் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். ஜெனரேட்டர் வசதி கூட இல்லை" என்று வரிசையாகப் புகார்களை அடுக்கினர். 'கண்டிப்பாக இதை நான் கவனிக்கிறேன்" என்று உறுதியளித்த மந்திரி விஜயபாஸ்கர், இன்னொரு தளத்தில் ஏற்பாடு செய்திருந்த அதே அரசு விழாவில் பங்கேற்க கிளம்பி விட்டார். ஏழைகளுக்கு அரசு மருத்துவனைதான் நோய்க்காலங்களில் நிரந்தர ஆதரவு என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது... அதை உறுதியாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

HC ORDER

ED attaches properties worth Rs 10 cr in medical college bribery case

TNN | Sep 13, 2017, 20:44 IST




NEW DELHI: In a donation and bribery case against the owner of a medical college in Vadodra, the Enforcement Directorate on Wednesday attached properties worth Rs 10 crore acquired by the college president Mansukh Shahon charges of money laundering.

Mansukh Shah, president of Sumandeep Vidyapeeth in Vadodra, was accused of accepting Rs 20 lakh as bribe for giving admission to a student. A case was registered against him after the anti-corruption bureau (ACB) of Ahmedabad caught him with the bribe money in February this year. The ACB case was later turned into a money laundering case under the Prevention of Money Laundering Act by the ED.

"The student had paid the bribe for admission and for being allowed to appear for the MBBS exam conducted by the university," according to ED.

The ED probe later revealed that Mansukh Shah was running a racket of collecting bribe from his students in lieu of their admission to various courses and for appearance in exams. "The bribe was collected by his accomplices Vinod alias Bharat Savant and Ashok Tailor," a senior the ED officer said.

Shah and his family members had invested the bribe money in shares of dormant listed companies. Shah used these inactive companies to launder the money routing them through a complex network of shell companies. "Shah and his family members purchased shares of these shell companies at a very low price and later sold them at a high cost and deposited the proceeds in his bank accounts," the officer said.

The bribe money was shown as capital gains from share transactions. The ED has traced and attached such laundered money to the tune of Rs 10 crore, out of which Rs 1.73 crore was bank balances in the saving bank accounts and Rs 8.35 crore in fixed deposits in the names of Shah and his family members. The case is still under investigation.

MEDICAL DIALOGUES

Read more at Medical Dialogues: ED attaches property worth Rs 10 crore of Mansukh Shah, the man who sold Medical Seats and Marks 

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக் கோரி பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை

kalviseithi

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள அருகன்குளத்தை சேர்ந்த சமுத்திரகனி மகன் காளிமுத்து (35). இவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்ள வன்னியன்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் காளிமுத்துவும் கலந்து கொண்டார். அப்போது ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் இல்லையென்றால் ஆசிரியர்கள் எப்படி காலம் தள்ள முடியும் என பேசினாராம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பெற்றோருடன் உணவருந்திய காளிமுத்து வெளியில் சென்று விட்டு வருவதாக குடும்பத்தாரிடம் கூறி விட்டு சென்றார். அவர் சிறிது தூரம் நடந்து சென்றவுடன் விஷத்தை குடித்து அங்கு மயங்கி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று காலை காளிமுத்து இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கூறுகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெல்லை மாவட்ட ஆசிரியர் தற்கொலை செய்தது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்றார்.

ஆசிரியர் தற்கொலை விவகாரம் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக காளிமுத்து மதுவுடன் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து ெகாண்டதாக சிவகிரி போலீசார் தெரிவித்தனர்.
திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்?

எஸ்.கதிரேசன்

திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது பிரதான வாசலின் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம் பாருங்கள். காரணம் அந்தக் கடப்பாரை பெருமாளை ஸ்பரிசித்த பெருமை கொண்டது.
எப்படி..?




திருப்பதி திருமலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான 'கோகர்ப்ப ஜலபாகம்' என்னும் குளத்தைத் தோண்ட பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது என்பதும், அப்போதுதான் பெருமாளின் திருமேனியை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு அந்த கடப்பாரைக்கு ஏற்பட்டது என்றும் சொல்லும்போது நம்முடைய வியப்பு பன்மடங்கு கூடுகிறது. திருமலையில் இன்றைக்கும் எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கும் இந்த நந்தவனத்தை முதலில் அமைத்த அனந்தாழ்வான்தான், அந்தக் குளத்தையும் ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அனந்தாழ்வான்?

வாருங்கள் திருவரங்கத்துக்குச் செல்வோம்...

திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. 'நாம் திருவரங்கத்தில் நந்தவனமும், தபோவனமும் அமைத்துக்கொண்டு பெருமாளின் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக் கிறோம். ஆனால், 'சிந்துப்பூ மகிழும் திருவேங்கடம்' என சதா சர்வகாலமும் பாடிப் புகழும் வேங்கடமுடையானுக்கு இப்படி ஒரு நந்தவனமும் தபோவனமும் அமைக்க முடியவில்லையே' என்பதுதான் அவருடைய ஆதங்கம்.



அதை ஒரு நாள், தமது சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தும்விட்டார். தெரிவித்ததோடு நில்லாமல், 'உங்களில் எவர் வேங்கடவனின் கைங்கர்யத்துக்கு அனுதினமும் மாலை தயாரித்துத் தரும் வேலையை எடுத்துக்கொள்ளப் போகிறீர் ?' எனக் கேட்கவும் செய்தார். ஆனால், பசுஞ்சோலைகளும் மருதாணிப் பூக்களும் செழித்துக் கிடக்கும் காவிரிக்கரையில் நீராடிவிட்டு, அரங்கனைத் தொழும்போது கிடைக்கும் சுகானுபவம் வேறெங்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் எவரும் வாய் திறக்கவில்லை.

'குருவின் மனக்குறையைப் போக்குபவர் உங்களில் எவருமில்லையா?' என்ற மறுபடியும் ஆச்சர்யத்துடன் பார்த்தார். அப்போது ஒற்றை ஆளாக எழுந்து நின்றார் அனந்தாழ்வான், கண்களில் வைராக்கியம். உதட்டில் புன்முறுவல். அனந்தாழ்வானை வாரி அணைத்து உச்சி முகர்ந்து திருமலைக்கு அனுப்பி வைத்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு 'திருமாலை சேவை' செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவரும் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.

முன்னதாகவே அங்கே வந்து சேர்ந்திருந்த ராமாநுஜரின் தாய்மாமனான திருமலை நம்பி அவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.

'அனந்தாழ்வா, உனக்கு குடிசைபோட்டுத் தருகிறேன். மேலும் நந்தவனம் அமைக்கவும் ஏற்பாடு செய்கிறேன். முதல் காரியமாக பெருமாளை வணங்கிவிட்டு வந்து உணவு அருந்துங்கள். களைப்பு தீர ஓய்வு எடுங்கள். நாளை முதல் உங்கள் பணியை ஆரம்பிக்கலாம்' என்றார். அனந்தாழ்வானும் அவரது மனைவியும் அப்படியே செய்தனர்.





திருமலையில் குடிசை ஒன்றைக் கட்டினார். அதனருகே நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமாநுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

மழைக்காலத்தில் செடிகள் பூத்துக் குலுங்கின. தண்ணீர் பிரச்னை எழவில்லை. கோடைக் காலத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். நந்தவனம் அருகே சிறுபள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் ஒரு பகுதியை மேடாக்கினார். குளத்தின் ஒரு பக்கத்தை மட்டும் மண்இட்டு உயரமாக நிரப்பி, பள்ளத்தை ஆழப்படுத்தினார். 'நானும் உங்களுக்கு உதவுகிறேன்' என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.



மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். அப்போது அவர் கருவுற்று இருந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வானோ, 'நம்மால் ஊரார் பிள்ளை எதற்கு சிரமப்பட வேண்டும் என்று நினைத்தவராக, அந்தச் சிறுவனைப் பார்த்து, 'உன் வேலை எதுவோ அதைப் போய் செய்' என்று அனுப்பிவிட்டார்.

தனக்குக் கூலி எதுவும் வேண்டாம் என்று சிறுவன் கூறியும், அனந்தாழ்வான் மறுத்துவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார். அதனாலேயே அந்தச் சிறுவனை தன் திருப்பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான்.
எனவே, 'வேலை செய்ய கூலியே வேண்டாம். நான் மண் சுமக்கிறேன். மண் சுமந்த புண்ணியம் தங்கள் மனைவிக்கே கிடைக்கட்டும்' என்றான் சிறுவன். 'பாவ புண்ணிய விஷயங்களில் சிறுபையனான இவன் தனக்கு புத்திமதி சொல்கிறானே என ஆத்திரமுற்ற அவர் 'அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசாமல் போய்விடு. கண்டிப்பாக இவ்விஷயத்தில் நீ தலையிடாதே' என்று சிறுவனைக் கடிந்துகொண்டு அங்கிருந்து அனுப்பினார்.



சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார். அனந்தாழ்வான் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. என்ன ஆச்சர்யம்... அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.

'' தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள் ''என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.

'சரி, தம்பி' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, ''சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை''என்று பதில் சொல்லி சமாளித்தாள்.

சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான். இதனால், கோபம் தலைக்கேற கடப்பாறையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய்விட்டான்.



அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வானுக்கும் தொடர்ந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை. குடிசைக்குத் திரும்பிவிட்டார்.

மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்யவந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 'அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்துவந்தனர்.

பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.

''சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க'' என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.

'அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்''என்று அசரீரியாகக் கேட்டார்.

''கருணைக் கடலே! உன் அருளே வேதனை போக்கும். கஷ்டம் துடைக்கும். என்னை மன்னியுங்கள் சுவாமி'' என்றார். பெருமாளோ மோகனமாக தனக்கே உரிய புன்னகையை உதித்தார்.

'சரி ' ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அர்ச்சகர்கள் குழம்பினர்.

'சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார். அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. இதை நினைவுபடுத்தும்விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.

NEWS TO DAY 16.07.2026