Sunday, September 17, 2017

KUVEMBU UNIVERSITY CONVOCATION


Period Of Service As ‘Work-Charged Employee Will Be Treated As ‘Qualifying Service’ For Pension-Supreme Court [Read Judgment] | Live Law

Period Of Service As ‘Work-Charged Employee Will Be Treated As ‘Qualifying Service’ For Pension-Supreme Court [Read Judgment] | Live Law: In a judgment which could give major relief to fourth class employees in government department rendering services as work charged or officiating or temporary, the Supreme Court has held that period of service as ‘work charged’ will also be counted as qualifying service for pensionary benefits. The appellants were employees in the service of Uttarakhand …

1965 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் அர்ஜன் சிங் காலமானார்!


இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் உயிரிழந்தார்.
அர்ஜன் சிங்

1965-ம் ஆண்டு அது. இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. அக்னூர் பகுதி மீது கடுமையான தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அப்போது 44 வயதான அர்ஜன் சிங், ஒரு இளம் விமானப்படை பிரிவுக்கு தலைமை தாங்கி சென்று போரிட்டார். அவரது துணிச்சலான வீரத்தால் எதிரிகள் வீழ்ந்தனர். இந்திய விமானப்படை வெற்றிப்பாதையில் பயணித்தது. குறிப்பாக, அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அர்ஜன் சிங். விமானப்படையில் 5 நட்சத்திரம் அந்தஸ்து பெற்ற ஒரே அதிகாரி அர்ஜன்சிங்தான்.

இதனிடையே, நேற்று காலை அர்ஜன் சிங்குக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அர்ஜன் சிங் உடல் நலன் குறித்து நேரில் சென்று விசாரித்தனர்.  

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அர்ஜன் சிங் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 98. இதையடுத்து, அர்ஜன் சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் விடிய, விடிய வெளுத்துவாங்கும் மழை: இன்றும் பெய்யும் என்று அறிவிப்பு

இரா. குருபிரசாத்
தே.அசோக்குமார்

சென்னையில் கடந்த சில நாள்களாக வெயில் சற்று அதிகமாக இருந்த நிலையில், நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, அடையார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், "காரைக்காலில் இருந்து நெல்லூர் நோக்கி காற்று செல்வதால், இன்று (நேற்று) இரவு சென்னையில் மழை வராவிட்டால், வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப்பிரதேச கடலோரப்பகுதிகள்தான் மிகவும் துரதிருஷ்ட பகுதியாக இருக்கும். நான் ஏற்கெனவே கூறியதுபோல், இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) சென்னைக்கு மிகச்சிறந்த நாள்கள். நகரின் சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். மிகவும் வேகமாக காற்று வீசத் தொடங்கி, மழையும் மிக வேகமாக பெய்யக்கூடும்.



வேலூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் சிறிய இடைவெளிக்கு பின், குறிப்பிடத்தகுந்த மழை பெய்துள்ளது. அதேசமயம், மேற்கு கடற்கரை பகுதிகள் அமைதியாக இருந்து வருகிறது. ஆனால், நாளை (இன்று) மற்றும் நாளை மறுநாள் (நாளை) மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகலில் நல்ல மழை இருக்கும். அதனால் நீர்வரத்தும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
பெரியாரும் மோடியும்! - இருவேறு துருவங்களின் பிறந்தநாள் இன்று!

ஜெ.சரவணன்

செப்டம்பர் 17ம் தேதியான இன்றைய தினத்தை தமிழினம் அவ்வளவு எளிதில் மறந்துவிடல் ஆகாது. தமிழ்ச் சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் உருவாக வித்திட்ட பகுத்தறிவு பகலவன் பெரியார் என்று எல்லோராலும் போற்றப்பட்ட ஈ.வெ.ராமசாமியும், பாரத பிரதமர் நரேந்திர மோடியும் இந்த ஒரே நாளில் பிறந்திருப்பது என்பது மிகவும் விசித்திரமானதுதான். ஏனெனில் இவர்கள் இருவேறு துருவங்கள். நரேந்திர மோடி பிறக்கும்போது பெரியாருக்கு வயது 71.



பெண்களின் முன்னேற்றம், சாதி தீண்டாமையை ஒழித்தல், கடவுள் மற்றும் மதம் குறித்த பார்வை என பல அத்தியாவசிய கருத்தாக்கங்களை தமிழின மக்களிடையே விதைத்தவர் தந்தை பெரியார். காலம் அனைத்தையும் மாற்றும் திறன் கொண்டிருந்தாலும் அந்த மாற்றத்தை நிகழ்த்த எதோ ஒரு சக்தி அவசியமாகிறது. அத்தகைய தவிர்க்க முடியாத சக்தியாக தனது காலத்தில் திகழந்தவர் பெரியார். கடைசிவரை தனது கொள்கைகளில் பிடிவாதமாக இருந்த சுயமரியாதைக்காரர். இன்றும் நீதிக்கும் நேர்மைக்கும் தலைதூக்கும் கோபத்துக்கெல்லாம் இவரே அடித்தளமாக இருக்கிறார். இந்தத் தமிழ் சமூகத்தின் பல மாற்றங்களுக்கு இவரே சூத்திரதாரி.

பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடி தன்னளவில் தனது வாழ்வில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அவரது வாழ்வின் திருப்புமுனைகள் யதார்த்தமாக அவருக்கு வாய்த்திருந்தாலும்கூட அதனைப் பயன்படுத்திக்கொண்ட விதத்தில் அவரது சாமர்த்தியம் அனைவருக்கும் ஒரு பாடம்.

இருவருரின் பிறந்தநாளையும் அவர்களது தொண்டர்கள் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

TRAIN NEWS

துணை மருத்துவப் படிப்புகளுக்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம்


By DIN  |   Published on : 17th September 2017 02:24 AM  
துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 19}ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 484 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 5,479 இடங்களும் உள்ளன. கலந்தாய்வுக்கான தகுதிப்பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. 
கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ளவர்கள் www.tnhealth.org,  www.tnmedicalselcetion.org ஆகிய இணையதளங்களில் உள்ள இணைப்பில் சென்று தங்கள் சமவாய்ப்பு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 19}ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகள் 146 பேரின் பெயர்ப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

NEWS TODAY 17.07.2026