Friday, November 3, 2017

சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை; ‘இரவு முழுவதும் மழை பெய்யும்’ - தமிழ்நாடு வெதர்மேன்



சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

நவம்பர் 02, 2017, 09:09 PM

சென்னை,

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது.

சென்னை நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. மதியத்திற்கு பிறகு வானிலை அப்படியே மாறியது சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியது. மாலையில் மழை தீவிரம் காட்ட தொடங்கியது. மழை காரணமாக பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆழமாக செல்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்நிலையில் வியாழன் இரவு (இன்று) முழுவதும் மழை நின்று பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் அவருடைய பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள செய்தியில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஓ.எம்.ஆர். மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் நல்ல மழை தொடங்கிவிட்டது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்கிறது. ஒருபுறம் வட சென்னையில் இருந்து நகரும் மேகங்கள், மற்றொருபுறம் மேற்குகில் இருந்து நகரும் மேகம் காரணமாக நேற்று இரவுபோல் லேசான மழையாக இல்லாமல், இரவு முழுவதும் மழை நின்று பெய்யும் என கூறிஉள்ளார்.

2015 டிசம்பருக்கு பின்னர் அதிகமான மழை பெய்கிறது, கடந்த 2 மணி நேரங்களில் அதிகமான இடங்கள் 100 மில்லி மீட்டர் மழையை பெற்று உள்ளது. கனமழை அடுத்த ஒரு மணி நேரங்களுக்கு தொடர்ந்து பெய்யும். சென்னையில் அடுத்த ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலும் மழை பெய்வது நிற்காது, மேகங்கள் கவர்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது, மழை தொடர்ந்து பெய்யும். தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக்கில் தெரிவித்து உள்ளார்.
மாவட்ட செய்திகள்

பள்ளிக்கரணையில் நாராயணபுரம் ஏரி உபரிநீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்தது


சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உபரிநீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்தது. புழுதிவாக்கம் ராமர் கோவிலில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது.

நவம்பர் 02, 2017, 04:00 AM

ஆலந்தூர்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம், வேளச்சேரி, கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து பலத்த மழைபெய்தது.

மடிப்பாக்கம்–புழுதிவாக்கம் ராம்நகர் வடக்கு பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் கால்வாய்களில் தண்ணீர் செல்லாமல் தேங்கி இருந்தன.

மாநகராட்சி அதிகாரிகள், பொக்லைன் எந்திரங்களை கொண்டு தற்காலிகமாக கால்வாய்களை ஏற்படுத்தி தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

புழுதிவாக்கம் ராம்நகரில் உள்ள ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் கோவிலில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.

தெருக்களில் உள்ள மழைநீர் கால்வாய்களில் அடைப்புகள் எடுக்கப்படாததால் கோவிலுக்குள் மழைநீர் புகுந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீரை, மதகுகள் வழியாக மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினார்கள். ஆனால் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல வழிஇன்றி நாராயணபுரம் ஏரி அருகே உள்ள பள்ளிக்கரணை ஸ்ரீநகர், மகாத்மா காந்தி நகர், லட்சுமி நகர், எல்.ஐ.சி. நகர், ராஜேஷ் நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட வெளியே வரமுடியாத வகையில் இடுப்பு வரை தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து கைவேலிக்கு தண்ணீரை அனுப்ப கல்வெட்டுகளில் இருந்த அடைப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பெருங்குடி மண்டல அதிகாரிகள், மழை வருவதற்கு முன்பே கால்வாய்களை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு இருந்தால் ஓரளவு தண்ணீர் தேங்காமல் பாதுகாத்து இருக்கலாம். ஆனால் அதிகாரிகள் மழைக்கு முன்னர் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள்.

மேலும் வேளச்சேரி பேபி நகர், உதயம் நகர், பெருங்குடி கல்லுக்குட்டை போன்ற பகுதிகளில் வீடுகளை சுற்றி இடுப்பு அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Thursday, November 2, 2017

Posted Date : 02:30 (02/11/2017)

உத்தரப் பிரதேச என்.டி.பி.சி-யில் பாய்லர் வெடித்து விபத்து... 20 பேர் பலி!
ர.பரத் ராஜ்

உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் இருக்கும் என்.டி.பி.சி அனல் மின் நிலையத்தில், பாய்லர் வெடித்ததன் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. பாய்லர் வெடித்ததை அடுத்து, பலர் மின் நிலையத்தில் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று யூகிக்கப்படுவதால் பலி எண்ணிக்கை உயரம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தால் பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.




இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, `ரேபரேலி என்.டி.பி.சி-யில் ஏற்பட்டிருக்கும் விபத்து மிகவும் கஷ்டத்தைக் கொடுக்கின்றது. இறந்தவர்களின் குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் இருக்கின்றன. காயமடைந்தவர்கள் சீக்கிரமே குணமாகட்டும். இந்த சம்பவம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சீக்கிரமே இயல்பு நிலை திரும்பிட அதிகாரிகள் வேலை செய்து வருகின்றனர்' என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் செய்துள்ளார்.

கடலூர் வெள்ள தடுப்புப் பணியில் ஊழல்: நீதிமன்றமே முன்வந்து வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை!

க.பூபாலன் எஸ்.தேவராஜன்

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் நிவாரணப் பணி என்று கோடி கணக்கில் கொளையடிக்கப்படுகின்றன. இதை நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




இதுகுறித்து, "ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை என்றாலே அதிகம் பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டம்தான். இதிலிருந்து நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று முன்னால் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு, "நிரந்தர வெள்ள தடுப்புப் பணி"க்காக ரூபாய் 140 கோடி நிதி ஒதுக்கினார். அத்தோடு, சிறப்பு நிதியாகவும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் எந்த ஒரு பணியும் முழுமையாக முடிக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இப்போதுதான் கடலூர் நகரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மழைக்கு வெட்டிய வாய்க்கால்களை மழை முடிந்ததும் மூடிவிட்டு, மறுபடியும் அதே இடத்தில் இப்போது தோண்டுகிறார்கள். மழை வந்தால் தோண்டுவதும், முடிந்தால் மூடுவதுமாக இருக்கிறார்கள். இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வே இல்லை. இரண்டு நாள் மழைக்கே கடலூர் நகரம் தாக்குபிடிக்காமல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில், "வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. கடுமையான மழை வந்தாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்ப்படாதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.




மழை வெள்ள நிவாரணப் பணிகள், நிரந்தர தடுப்புப் பணிகள், தூர்வாருதல் என இரண்டு ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2015-ல் அடித்த மழை வெள்ளத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கியதாக 100 கோடி ரூபாய் கணக்கு காட்டினார் அமைச்சர் எம்.சி.சம்பத். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிற்ப்பு கிளம்பியது. அதன்பிறகு அது ரூபாய் 40 கோடியாக குறைந்தது. இது ஒன்றுதான் வெளியில் தெரிந்தது. வெளியில் தெரியாமல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எவ்வளவு அடித்திருக்கிறார்களோ, அல்லது அடிக்கப்போகிறார்களோ என்று தெரியவில்லை. இதுகுறித்து அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் வெள்ளை அறிக்கை கொடுக்கவேண்டும். மழை வெள்ளம் என்றாலே பொதுமக்களுக்குத்தான் பயம். ஆனால், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அல்ல. அவர்களுக்கு கொண்டாட்டம்தான். இதுகுறித்து நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று விசாரணை செய்யவேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

''அவர் அப்படி இல்லவே இல்லை!'' - கிராமத்தின் நம்பிக்கையை சிதைத்த ஐ.பி.எஸ். அதிகாரி

எம்.குமரேசன்

ஹைடெக்காக காப்பியடித்து மாட்டிக் கொண்ட நெல்லை ஐ.பி.எஸ் அதிகாரி, சபீர் கரீமுக்கு சொந்த ஊர் கொச்சி அருகேயுள்ள வயல்கரா என்கிற கிராமம். இந்த சிறிய கிராமத்தில் இருந்து ஐ.பி.எஸ் அதிகாரி ஆனவர் என்ற வகையில் சபீர் கரீமைப் பார்த்து கிராமமே பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது. ஹீரோவாக வலம் வந்த அவர், சொந்த கிராம மக்கள் வைத்திருந்த நம்பிக்கையே சிதைத்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே சபீர் கஷ்டப்பட்டு படித்துள்ளார். வயல்கரை கிரமத்தில்தான் பள்ளி படிப்பை படித்திருக்கிறார். ஐ.பி.எஸ் ஆபிசர் ஆவதற்கு முன்னர், சிவில் சர்வீஸ் பயிற்சி மையங்களில் பணி புரிந்திருக்கிறார். பயிற்சிக்கு வந்த ஜாய்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐ.பி.எஸ் ஆன பின்னரும் சொந்த ஊருக்கு வந்து மாணவ- மாணவிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்பது எப்படி...? என தயாராவது குறித்து வகுப்பு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வயல்கரை கிராமத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு சபீர்தான் ரோல் மாடல். சொந்த கிராமத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ஆரம்பிப்பது சபீரின் இன்னொரு லட்சியம். கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 'நானும் சபீர் போல ஐ.பி.எஸ். ஆவேன்' என்று சொல்வார்கள். அந்தளவுக்கு கிராமத்து மக்களின் இளைஞர்களின் நம்பிக்கையையும் நன் மதிப்பையும் பெற்றிருந்தார் அவர்.

சொந்த கிராமத்தின் மீது பற்றும் மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறையும் கொண்டிருந்தவரா இப்படி காப்பியடித்து மாட்டிக் கொண்டார் என்பதை வயல்கரை கிராமத்து மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. வயல்கரை கிராமத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகளின் முகத்தில் ஒருவித சோகம் அப்பியிருக்கிறது.

சபீர் அவரின் மனைவி ஜாய்சியும் சிறைக்குச் செல்ல நேரிட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படத்தைப் பார்த்துவிட்டு, அதேபோல் காப்பயடிக்க முடிவு செய்ததாக சபீர் தெரிவித்துள்ளார். சபீர், ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் ஒரு சினிமாதான் காரணமாக இருந்திருக்கிறது. அந்த மலையாளப் படத்தின் பெயர் 'கமிஷனர்'!

கமிஷனர் அவரை ஹீரோவாக்கியது... முன்னாபாய் முகத்தை மாற்றியுள்ளது!

மழை நேரத்தில் சென்னையின் ட்ராபிக் அப்டேட்ஸ் தெரிந்துகொள்ள ஈஸி வழி! #TrafficAlert

Posted By: Mohan Prabhaharan
Published: Wednesday, November 1, 2017, 19:00 [IST]

Oneindia Tamil

சென்னை : சென்னையின் ட்ராபிக் நிலவரத்தை சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையின் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். இது தங்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதாக பயனாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

சென்னை மாநகரத்தின் ட்ராபிக் நிலவரம் பற்றி சொல்லவே வேண்டாம். காலை, மாலை என்று வகை தொகை இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சாதரண காலங்களிலேயே அப்படி என்றால் மழைக்காலங்களில் அவ்வுளவு தான். வாகன ஓட்டிகளின் சிரமத்தை சொல்லவே முடியாது.




தற்போது இந்த பிரச்னைக்கு தீர்க்கும் நோக்கில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை களமிறங்கி உள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் ட்ராபிக் எப்படி இருக்கிறது, மழையால் போக்குவரத்தில் மாற்றம் எதாவது இருக்கிறதா என்பதைத் தெரிவிப்பதற்காக சென்னை போக்குவரத்துக்காவல்துறை புதிய ட்விட்டர் பக்கத்தை துவங்கி உள்ளது.

@CCTraffic_Alert என்கிற அந்தப் பக்கத்தை மக்கள் பின் தொடர்ந்து, சென்னையின் ட்ராபிக் குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தங்கள் நேரம் சேமிக்கப்படுவதாகவும், பயணத்திற்கு திட்டமிட்டுக் கொள்ளவும் முடிகிறது என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.

நீங்களும் அந்தப் பக்கத்தை தொடர https://twitter.com/CCTPolice_Alert இந்த சுட்டியை அழுத்தவும்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பரிசளித்து வாழ்த்திய காதலன் நள்ளிரவில் மணப்பெண்ணுடன் ஓட்டம்

2017-11-02@ 00:50:23




வேலூர்: காட்பாடி அருகே நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாலிபர், மணமக்களுக்கு பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, இரவோடு இரவாக மணப்பெண்ணை அழைத்து சென்று கோயிலில் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னை கூட் ரோடை சேர்ந்தவர் சுகுமார். இவர் இறந்து விட்டார். இவரது மகள் நிரோஷினி(24) தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவரும் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அப்ரன்டீஸாக உள்ள குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையை சேர்ந்த விக்னேஷ்(25) என்பவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நிரோஷினிக்கு அவரது குடும்பத்தினர் உறவிலேயே மாப்பிள்ளை பார்த்து நவம்பர் 1ம் தேதி திருமணம் நிச்சயம் செய்தனர்.

திருமணம் ராணிப்பேட்டை பெல் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடப்பதாக இருந்தது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது திடீரென இரண்டு பரிசு பொருட்களுடன் மண்டபத்துக்கு வந்த நிரோஷினியின் காதலன் விக்னேஷ் ஆளுக்கொரு பரிசு பொருளை கொடுத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது எந்த சலனத்தையும் நிரோஷினி காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், மணமகனோ பரிசு கொடுத்தவர் மணமகளின் தூரத்து உறவுக்காரராக இருக்கும் என்று நினைத்து ஜாலியாக பேசி, சாப்பிட்டு விட்டு போகும்படி கேட்டுக் கொண்டார். அங்கிருந்த செல்லும்போது நிரோஷினிக்கு புரியும்படி, பரிசு பார்சலை பிரித்து பார்க்கும்படி சைகை காட்டிவிட்டு சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில் மணமக்களுக்கு நலுங்கு வைக்கும் சடங்குகள் தொடங்கின. முதலில் மணமகனுக்கு சடங்குகள் நடந்தன.

பின்னர் மணமகள் அறையில் சென்று பார்த்த உறவினர்கள், நிரோஷினி இல்லாததை கண்டு அதிர்ந்தனர். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மண்டபம் முழுவதும் தேடினர். நலுங்கு முடிந்து திருமணத்துக்கு தயாரான மணமகனுக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அதிர்ச்சியில் உறைந்தார். எங்குதேடியும் நிரோஷினி கிடைக்காததால் அவருக்கு திடீரென உறைத்தது. இரவு தன்னிடமும், நிரோஷினியிடமும் பேசிய நபர் குறித்து விசாரித்தார். நள்ளிரவு வரை அவர் மண்டபத்துக்குள் அங்குமிங்கும் பரபரப்பாக திரிந்ததாக பலரும் கூறினர். இதையடுத்தே மணமகள் காதலனுடன் ஓடியது தெரியவந்தது. இதனால் களை கட்டிய திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. இருதரப்பு உறவினர்களும் மண்டபத்தில் இருந்து புறப்பட்டனர்.

மணமகனும் விரக்தியில் தனது உறவினர்களுடன் சோகமாக திரும்பி சென்றார். மணமகளின் உறவினர்களோ மதியம் 12 மணி வரை தேடும் முயற்சியை தொடர்ந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு லத்தேரி காவல்நிலையத்தில் விக்னேஷ் என்ற வாலிபருடன் நிரோஷினி மணமக்களாக மாறி தஞ்சமடைந்திருப்பதும், அவர் அந்த வாலிபரை லத்தேரி பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. மேலும் லத்தேரி போலீசார் மணமகள் தரப்பினரை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தி காதல்ஜோடி மேஜர் என்பதால், அவர்களது திருமணத்தை தடுக்க வழியில்லை என்று கூறினர். அப்போது காதலனுடன் தான் செல்வேன் என்று நிரோஷினி கூறியதால் அவருடன் அனுப்பி வைத்தனர்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...