Sunday, November 5, 2017

தொடர்மழை பாதிப்பு : தாம்பரத்தில் மேலும் ஒரு கட்டுப்பாட்டு அறை


By DIN  |   Published on : 05th November 2017 02:25 AM  
தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாட்டு அறை சேவை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (பேரிடர் மேலாண்மை மையம்) கடந்த 4 நாள்களுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது. 
கட்டுப்பாட்டு அறைக்கு, நாள்தோறும் குடியிருப்பு, கல்விக் கூடங்கள், நிறுவனப் பகுதியிலிருந்து அவசர கால தொலைபேசி எண்கள் மூலம் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அதன்படி, மழைநீர் சூழ்ந்த பகுதிகளான, தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், ஆலந்தூர், பல்லாவரம், திருக்கழுகுன்றம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக அழைப்புகள் வருகின்றன. அதன்படி, இதுவரை 370-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து, பொதுமக்களின் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
இதற்காக, கட்டுப்பாட்டு அறையில், வானிலை ஆய்வு மைய அறிவிப்புகள், பாதிக்கப்பட்டுள்ள இடங்களைக் கண்காணிப்பதற்காக தொலைக்காட்சி செய்திகள், கணினி, வாக்கி-டாக்கி, தொலைபேசி (காஞ்சிபுரம்: 044-25619299) உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களுடன் செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் 3 குழுவினர் சுழற்சி முறை அடிப்படையில், பணியாற்றி வருகின்றனர்.
தாம்பரத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை: தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக புகார்கள் பெறப்பட்டுள்ளதால் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் புதிதாக கட்டுப்பாட்டு அறை சனிக்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. இதில், 04422410050, 9445051077 என்ற எண்களில் மழை பாதிப்புள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 
நிவாரண முகாம்கள்: மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், பெருங்களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்போரூர் பஞ்சம்திருத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வரதராஜபுரம் அஷ்டலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் 3 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. மழைநீர் சூழ்ந்துள்ள இடத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்லலாம் என மாவட்ட பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மாநில செய்திகள்

ரூ.5.70 கோடி மோசடி புகாரில் சென்னையில், பிரியாணி கடை அதிபர் கைது

சென்னையில் ரூ.5.70 கோடி மோசடி புகாரில், பிரியாணி கடை அதிபர் ஆசிப் அகமதுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நவம்பர் 05, 2017, 04:15 AM

சென்னை,

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். பைனான்சியரான இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகார் மனுவில், ஆசிப் பிரியாணி லிமிடெட் இயக்குனர் ஆசிப் அகமது(வயது 45) என்னிடம் ரூ.5 கோடியே 70 லட்சம் கடன் பெற்றார். நான் கொடுத்த கடனை திரும்ப கேட்ட போது, ஆட்களை வைத்து என்னை கொலை செய்ய முயற்சித்தார். பின்னர் என்னிடம் சமரசம் பேசி ரூ.2 கோடிக்கு வரைவோலை வழங்கினார். அதனை வங்கியில் செலுத்திய போது, அது போலி என்று தெரிய வந்தது. எனவே ஆசிப் அகமது மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிப் அகமது மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் ஆசிப் அகமதுவை தேடி வந்தனர். இந்தநிலையில் தூத்துக்குடியில் ஆசிப் அகமதுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர்.

விசாரணைக்கு பின்னர் ஆசிப் அகமது சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடி புகார் தொடர்பாக ஆசிப் அகமதுவின் மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கணினிமயமாக்கியதில் அலட்சியம் 70% பணி பதிவேடுகளில் குளறுபடி அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிர்ச்சி

2017-11-05@ 00:40:49




சேலம்: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி பதிவேடுகளை கணினிமயமாக்கம் அவுட்சோர்சிங் முறையில் செய்யப்பட்டதில் 70 சதவீதம் குளறுபடி நடந்துள்ளது. இதனால் ஓய்வூதிய பலன்கள் பெறும் போது சிக்கல் ஏற்படும் என ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழக அரசுத்துறைகளில் அலுவலக உதவியாளர் முதல் உயர் அதிகாரிகள் வரை, 7 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களாக 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அரசு ஊழியர்களின் பணி பதிவேடு என்பது, அவர்களின் உயிர்நாடி என கருதப்படுகிறது. ஒவ்வொருவருடைய பணி நியமனம் முதல் அவர்கள் ஓய்வு பெறும் வரை உள்ள அனைத்து விவரங்களும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். பல்வேறு காரணங்களால் பேப்பரில் உள்ள பணி பதிவேட்டை பராமரிப்பதில், சிக்கல் இருந்து வருகிறது.

குறிப்பாக, ஒருசில அலுவலகங்களில் உள்நோக்கத்தோடு பணி பதிவேடுகள் திருடப்படுவதுடன், திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இதுபோன்ற குறைபாடுகளை களைய, அனைத்து பதிவுகளும் ஆன்லைனுக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. 

அதன் ஒருபகுதியாக, ஊழியர்களின் அனைத்து விவரங்களும் கணினிமயமாக்கும் நடவடிக்கை கடந்த சில மாதங்களாக கருவூலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியானது அவுட்சோர்சிங் முறையில், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுகள் சரியாக உள்ளதா? என அரசு ஊழியர்களுக்கு அனுப்பி, சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கணினிமயமாக்கப்பட்ட 70 சதவீத பதிவுகள் குளறுபடிகளுடன் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறியதாவது: பணி பதிவேடுகள் கணினிமயமாக்கும் பணிகள் முற்றிலும் அனுபவமில்லாத, கல்லூரி மாணவர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்தெந்த விவரங்களை எங்கு குறிப்பது என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இருப்பதை அப்படியே காப்பியடிக்கும் வேலையை கூட, சரிவர மேற்கொள்ளவில்லை. கணினிமயமாக்கும் பணியை பலகோடி ரூபாய்க்கு அவுட்சோர்சிங் முறையில் மேற்கொண்டிருப்பது அபத்தமானது. அரசு ஊழியர்களையே தங்களது பதிவுகளை முறைப்படுத்தி கொடுக்க உத்தரவிட்டிருந்தால், ஒரு சில மணிநேரங்களில் பணிகள் முடிந்திருக்கும். துல்லியமாகவும் இருந்திருக்கும். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பதிவுகளில், பெரும்பாலான இடங்களில் தவறு நடந்துள்ளது. குறிப்பாக, ஊழியர்கள் பணியில் சேர்ந்த தேதி, துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தேதி, பயிற்சி மேற்கொண்ட நாள் போன்ற தேதிகள் தொடர்பான விவரங்கள் எதுவும் தகுந்த இடங்களில் குறிப்பிடப்படவில்லை.

கணினிமயமாக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு, பணி பதிவேட்டின் வரைமுறை கூட தெரிந்திருக்கவில்லை. கணினியில் ஏற்றி சரிபார்க்க அனுப்பப்பட்டதில் கூட, பலரது பதிவேடு காணாமல் போயிருந்தது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவரது விவரங்கள் அனைத்தும் கணக்கு தணிக்கை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். இதில், அவர்களின் பணி பதிவேடுகள் தான் முக்கிய இடம்பெறும். அவற்றில் குளறுபடிகள் இருந்தால், ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கவும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட அதிமுக்கியமான பதிவேடுகளை குளறுபடிகளுடன் மேற்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, குளறுபடிகளை முழுமையாக சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

'டூ-- வீலர் லைசென்ஸ்' இனி கஷ்டம் விதிமுறைகளை கடுமையாக்க உத்தரவு

சென்னை,இருசக்கர வாகன   ஓட்டுனர் உரிமம் வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்கும்படி, போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், இருசக்கர வாகன விபத்துகள் அதிகரிக்கின்றன. இதற்கு, சாலை விதிகளை அறியாமல், இரு சக்கர வாகனங்களை இயக்குவதே காரணம் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால், 'இருசக்கர வாகனங்களை விற்போரும், அதற்கான ஓட்டுனர் உரிமம் வழங்குவோரும், விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்' என, போக்குவரத்து துறை கமிஷனர், தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, சாலை விதிகள் குறித்து தெரிவதில்லை. அதனால், நாளுக்கு நாள் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதை கட்டுப்படுத்துவதும், விபத்துக்கான காரணங்கள் குறித்து, வாகன ஓட்டிகளுக்கும், வாகன விற்பனையாளர்களுக்கும் புரிய வைப்பதும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இரு சக்கர வாகன விற்பனையாளர்களுக்கு, போக்கு வரத்து கமிஷனர் பிறப்பித்துள்ள உத்தரவு:வாகனத்தின் தன்மை, சாலை விதி, மீறுவோருக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து, குறும்படமாக வெளியிடும் வகையில், 'டிவி'யுடன் கூடிய, 'சாலை பாதுகாப்பு மையம்' என்ற அமைப்பை, விற்பனையகத்திலேயே, வரும், 10ம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும்.அம்மையத்தில், பயிற்சி பெற்ற பின், வாகன உரிமம் வழங்கலாம் என்ற, பரிந்துரைக் கடிதத்தை இணைத்து, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இம்மையத்தை, வரும், 15ம் தேதிக்குள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வர்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Saturday, November 4, 2017

With no one to issue tickets, passengers get free ride

Clerk fails to turn up for duty on medical grounds

About 400 passengers had a free, albeit short ride today on board the Rameswaram – Madurai passenger train (56724) at Rameswaram without valid tickets on Wednesday as the clerk, posted at the booking counter, ‘failed to turn up’ for duty.
Besides the booking counter, there were two automatic ticket vending machines in the station but there was no facilitator to issue tickets to the passengers who came to board the passenger train, scheduled to leave at 5.30 a.m.
Railway officials said the clerk, Rohit Kumar Meena, 30, who was present at the station, suffered severe chest pain around 3.40 a.m.
He left for the government hospital in the island without informing anyone. He was to report for duty at 4.30 a.m. at the booking counter.
Counter deserted
On coming to know that the counter was deserted and passengers were growing restive, Station Manager Rameshwar Meena informed the higher officials.
On their instruction, he posted his deputy Santhosh Kumar Kanwar at the booking counter at 5.20 a.m., but the latter could distribute only five tickets in the short span of 10 minutes, the officials said.
Blessing in disguise
An engine fault in the Chennai Egmore-Rameswaram Express (22661) came as a blessing in disguise for the railway officials as the Rameswaram-Madurai passenger train was held up at Ramanathapuram station for about 45 minutes for the exchange of engines of the two trains.
Even as the engines were exchanged, the officials addressed passengers through the public address system, asking them to buy the tickets at the station, after which all the passengers bought tickets, the officials said.
This was ascertained by a special squad, which checked the passengers at Manamadurai, the officials added.
Officials said Mr. Meena was later referred to the government district headquarters hospital here and he was kept under observation.

HC notice to RBI for non-return of documents

Madurai Bench of the Madras High Court on Thursday ordered notice to the Principal Secretary, Ministry of Finance; Regional Director, Reserve Bank of India; and Axis Bank in a case of non-return of security documents even after repayment of a loan.
Justice R. Mahadevan, who took up the case for hearing, also directed the respondents to file their counter in four weeks. The petitioner, K. Venkatesh, a rice mill owner, claimed that he had obtained a loan of Rs. 50 lakh (cash credit over limit) from Axis Bank, Rajapalayam, after submitting a post-dated cheque, Rs. 100 stamp paper and blank papers with signature. Though a no-objection certificate was given by the bank for clearing the loan, the bank authorities were yet to return the documents after repayment. The repayment was not recorded in the Permanent Account Number (PAN), because of which the Credit Information Bureau India Limited (CIBIL) recorded the petitioner as defaulter, he contended.
No valid reason was given by the bank and it did not respond to a legal notice. A representation for return of documents was made to the Ministry of Finance, Regional Director of Reserve Bank of India and Axis Bank authorities.
But the request was not considered by them, said the petitioner.

New V-C for Karunya University


P. Mannar Jawahar, the former vice-chancellor of Anna University who recently won a nearly four-year battle against the institution in connection with a disciplinary action taken against him, took charge as the vice-chancellor of Karunya University on October 30. A noted academic, Mr. Jawahar had completed his Ph.D. at IIT, Delhi, and had pursued post doctoral research at Warsaw University, Poland.

NEWS TODAY 01.07.2026