Saturday, November 11, 2017


தேர்வு நாளில் மாரத்தான் : அலைக்கழித்த அமைச்சர்

Added : நவ 11, 2017 02:09



திருநெல்வேலி: திருநெல்வேலியில் கல்லுாரி, பல்கலை தேர்வுகள் நடக்கும் நேரத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா மாரத்தான் போட்டி நடத்தி, மாணவர்களை அலைக்கழித்தனர்.
திருநெல்வேலியில் நாளை, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நேற்று காலை, கல்லுாரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி, காலை, 7:00 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் ராஜலட்சுமி, பிரபாகரன் எம்.பி., ஆகியோர், 8:00 மணிக்கு தான் வந்தனர். அதன் பின், போட்டி துவங்கியது.

பங்கேற்பாளர்கள், ஐகிரவுண்டில் இருந்து திருச்செந்துார் சாலையில், வி.எம்.சத்திரம் வரை சென்று, காலை, 9:30 மணிக்கு திரும்பினர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மற்றும் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வுகள் நடக்கின்றன.
இந்நிலையில், 9:30 மணி வரை அலைக்கழிக்கப்பட்ட மாணவர்கள், அவசர அவசரமாக கல்லுாரிகளுக்கு சென்றனர்.

கொலை முயற்சி வழக்கில் 'ஆசிப்' அகமது மீண்டும் கைது


நவ 11, 2017 


சென்னை: கூலிப்படையினரை ஏவி, சினிமா பைனான்சியரை கொலை செய்ய முயன்ற வழக்கில், 'ஆசிப்' பிரியாணி ஓட்டல் உரிமையாளர், மீண்டும் கைது செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஆசிப் அகமது, 45. இவர், சென்னை ஆலந்துார் உட்பட, 17க்கும் மேற்பட்ட இடங்களில், 'ஆசிப் பிரியாணி' என்ற பெயரில், ஓட்டல்கள் நடத்துகிறார். 
தொழிலை விரிவுபடுத்த, 2014 - 16 வரை, இரண்டாவது மனைவி, நந்தினி என்பவருடன், சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த, சினிமா பைனான்சியர், கோதண்ட ராமன், 52, என்பவரிடம், 5.70 கோடி ரூபாய் கடன் வாங்கினார்; அதற்கு வட்டி செலுத்தவில்லை என, கூறப்படுகிறது.

இதனால், பணத்தை திரும்ப தரும்படி, கோதண்டராமன் பலமுறை கேட்டதால், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின், ஆசிப் அகமது, இரு தவணைகளில், நான்கு கோடி ரூபாய்க்கு, காசோலை மற்றும் வரைவோலை கொடுத்துள்ளார்.
காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது; வரைவோலை போலி என, தெரிய வந்தது.

இந்நிலையில், 2017 ஜன., 5ல், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே, கோதண்டராமன், இருசக்கர வாகனத்தில் சென்ற போது, மர்ம நபர்கள், அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால், வெட்டிக் கொல்ல முயன்றனர். தீவிர சிகிச்சைக்கு பின் அவர், உயிர் பிழைத்துள்ளார்.
இது குறித்து, கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில், ஆசிப் அகமது, நந்தினி ஆகியோர், கூலிப்படையை ஏவி, கோதண்டராமனை கொல்ல முயன்றது தெரிந்தது. இந்த வழக்கில், அப்போதே, நந்தனி மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். ஆசிப் அகமது, 'எஸ்கேப்' ஆகி வந்தார்.

இதற்கிடையே, கோதண்டராமனுக்கு, போலி வரைவோலை மற்றும் காசோலை கொடுத்த வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், நவ., 4ல், ஆசிப் அகமதுவை கைது செய்தனர். 
கோடம்பாக்கம் போலீசார், கூலிப்படையை ஏவி, கோதண்டராமனை கொல்ல முயன்ற வழக்கில், ஆசிப் அகமதுவை நேற்று கைது செய்து, மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்

‛சால்வையை தவிருங்கள்': தமிழக கவர்னர் வேண்டுகோள்


சென்னை: தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வை, பூங்கொத்து கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தகவல் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மருத்துவமனைக்கு ஜப்பான் அரசு நிதியுதவி
 நவ 11, 2017 01:11


மதுரை: ஜப்பான் நிதி உதவியுடன், மதுரை அரசு மருத்துவமனை, 300 கோடியில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' தரத்திற்கு ஜொலிக்கபோகிறது. தென் மாவட்ட அளவில, முக்கிய சிகிச்சை அளிக்கும் தரமான மருத்துவமனையாக, மதுரை அரசு மருத்துவமனை, 70 ஆண்டுக்கும் மேலாக திகழ்ந்து வருகிறது. மாநிலத்திலேயே முதல் முறையாக, உடல் உறுப்பு தானம் மூலம், இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை திட்ட நிதி, 150 கோடியில், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணி நடக்கிறது.
மத்திய சுகாதாரத் துறை, ஜப்பான் நிதி உதவியுடன் மருத்துவமனைகளை தரம் உயர்த்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் மதுரைக்கு மட்டும்,300 கோடியில் திட்டம் வர உள்ளது.
இது குறித்து, மருத்துவமனை பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'படிப்படியாக, ஐந்து கட்டமாக கட்டுமான பணிகள் நடத்தி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தரத்திற்கு ஜொலிக்கப்போகிறது. இதற்கான கட்டுமான பணி, 2018ல் துவக்கப்படலாம்' என்றார்.
சென்னை கல்லூரிக்கு சிங்கப்பூரில் கவுரவம்

 நவ 11, 2017 00:39

சென்னை: சென்னையைச் சேர்ந்த, ஆரோ கல்வி சேவை என்ற நிர்வாகவியல் கல்லுாரி உட்பட, மிகச் சிறந்த சர்வதேச பயிற்சியுடன் கூடிய நிர்வாகவியல் கல்வியை அளிக்கும் கல்வி நிறுவனங் களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஆசிய நாடான, சிங்கப்பூரைச் சேர்ந்த, சிங்கப்பூர் வர்த்தக திறன் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, சர்வதேச தரத்துடன் கல்வி அளிக்கும் நிறுவனங்களுக்கு விருது வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது, சென்னையைச் சேர்ந்த, ஆரோ கல்வி சேவை, பெங்களூரின், ஐ.எஸ்.பி.ஆர்., பிசினஸ் ஸ்கூல், கோல்கட்டாவின், மை பிரைவேட் டியூடர் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அங்கு சென்று படிக்கும் வகையில், கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மிகச் சிறந்த கல்வி கற்பதற்கான நிறுவனங்களுக்கான விருது, புனேயைச் சேர்ந்த, ஏ.எஸ்.எம்., கல்விக் குழுமம், கவுகாத்தியின், பிரான்சன் உறைவிடப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
இனி, 'ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங்!'  கணினி முன் அமர்ந்து கல்லூரி தேர்வு செய்யலாம்


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன் சிலிங், அடுத்த ஆண்டு முதல், 'ஆன் லைனில்' நடத்தப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், வெளியூர் மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டிய அலைச்சல் இல்லை.





உத்தரவு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கவுன்சிலிங்கை, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை நடத்துகிறது.இந்நிலையில், 2016ல் நடந்த கவுன்சிலிங்கில், மாணவர்

சேர்க்கை செயலராக இருந்த,பேராசிரியை இந்துமதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகம் செய்தார்.

இரண்டு ஆண்டுகளாக, ஆன்லைன் விண்ணப்ப முறை பின்பற்றப்படுகிறது. அதை தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில், ஆன்லைனிலேயே கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டு
உள்ளது.இதற்காக, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலராக, அண்ணா பல்கலை பேராசிரியர், ரைமண்ட் உத்தரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிமுகம்

ஏற்கனவே, 2015 வரை, இவர், இப்பொறுப்பில் இருந்துள்ளார். அவரது மேற்பார்வையில், வரும் கல்வி ஆண்டில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்துவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.
இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, அண்ணா பல்கலையின் மண்டல அலுவலகங் களில், ஆன்லைன் கவுன்சிலிங் உதவிமையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மாணவர்கள், தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே, ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.விண்ணப் பங்கள் ஏற்புக்கு பின், தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, விருப்ப இடங்களை பதிவு செய்யும் முறை


அறிமுகம்செய்யப்படும். பின், அவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைக்கு ஏற்ப, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

வழிகாட்டல்:

எனவே, வரும் கல்வி ஆண்டில் மாணவர் களும், பெற்றோரும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்திற்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. எங்கேயும் அலையாமல், கணினி முன் இருந்து, கல்லுாரியை தேர்வு செய்யலாம். 'இதற்கான வழிகாட்டல் மற்றும் அறிவிப்புகள், பிப்ரவரி யில் அறிவிக்கப்படும்' என, உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -
'மிடாஸ்' மதுபான கொள்முதல்  கை கழுவுகிறது 'டாஸ்மாக்'

வருமான வரி சோதனையை தொடர்ந்து, சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான, 'மிடாஸ்' நிறுவனத்திடம் இருந்து, மதுபானம் கொள்முதல் செய்வதை முழுவதுமாக நிறுத்த, 'டாஸ்மாக்' முடிவு செய்துள்ளது.




தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், பீர் மற்றும் மது வகைகள் சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

12 லட்சம் பெட்டிகள்

இந்நிறுவனம், 11 நிறுவனங்களிடம் இருந்து, மாதத்திற்கு சராசரியாக, 48 லட்சம் பெட்டி மது வகைகளை வாங்குகிறது. அதில், சசிகலா

குடும்பத்தினருக்கு சொந்தமான, மிடாசிடம் இருந்து மட்டும், 12 லட்சம் பெட்டிகள் வாங்கப்படுகின்றன. தி.மு.க., ஆதரவு நிறுவனங் களான, 'எஸ்.என்.ஜே., கல்ஸ்' ஆகியவற்றிடம், ஆறு லட்சம் பெட்டி; மற்ற நிறுவனங்களிடம் இருந்து, மூன்று - நான்கு லட்சம் பெட்டிகளும் வாங்கப் படுகின்றன.

முதல்வர் பழனிசாமி,தினகரன் மோதலை தொடர்ந்து, மிடாசிடம் வாங்கும் மதுபானங்களை, எட்டு லட்சம் பெட்டி, ஏழு லட்சம் பெட்டி என, டாஸ்மாக் படிப்படியாக குறைத்தது.அதன்படி, இம் மாதத்திற்கு, ஐந்து லட்சம் பெட்டிகள் சப்ளைக்கான, 'ஆர்டர்' மட்டுமே தரப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயம்

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, டாஸ்மாக்கில், மிடாஸ் ஆதிக்கம் அதிகம் இருந்தது. மிடாஸ் மது வகைகளை, 'குடி'மகன்கள் விரும்பாத நிலையிலும், அதிகளவில் வாங்கப் பட்டு, வலுக் கட்டாயமாக விற்கப்படும். முதல்வர் பழனிசாமி, தினகரன் மோதல், டாஸ்மாக்கில் மிடாசின் ஆதிக்கத்தை குறைத்தது.

சில மூத்த அமைச்சர்கள், மிடாசுக்கு ஆதரவாக இருந்ததால், மது கொள்முதலை நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், மிடாஸ் ஆலை உட்பட, சசிகலா, தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு,அலுவலகங்களில், சோதனை நடத்தினர். அதனால், அடுத்த மாதத் தில் இருந்து, மிடாசில் இருந்து, மது வகைகள் வாங்குவதை முழுவதுமாக நிறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...