Sunday, November 12, 2017

இப்படியும் உங்கள் ஏடிஎம்மில் பணம் திருடப்படலாம்: மாம்பலத்தில் புதிய சம்பவம்

இப்படியும் உங்கள் ஏடிஎம்மில் பணம் திருடப்படலாம்: மாம்பலத்தில் புதிய சம்பவம்
மாம்பலம் கனரா வங்கி ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் கருவி பொருத்தி வாடிக்கையாளர் பணத்தை அபகரிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்-ல் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி விட்டு சென்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக வங்கி ஏடிஎம்-ல் பணம் போட வந்த ஊழியர்கள் ஸ்கிம்மர் கருவி பொருத்தி உள்ளதை கண்டு பிடித்தனர். உடனடியாக இது பற்றி தி.நகர் வங்கி மேலளாளர் மகேஷிடம் தகவல் அளிக்க அவர் குறிப்பட்ட ஏடிஎம் மையத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.

மர்ம நபர் ஏடிஎம்-ல் பொருத்திய ஸ்கிம்மர் கருவியை எடுத்து குமரன் நகர் காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்து புகார் அளித்தார். குமரன் நகர் போலீஸார் சம்பந்தப்பட்ட ஏடிஎம்-க்கு சென்று விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் சம்பந்தப்பட்ட நபரின் உருவம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள ஏடிஎம்களில் இது போன்று ஸ்கிம்மர் கருவி மூலம் திருடும் கும்பல் மீண்டும் கைவரிசையை காட்டத் துவங்கியுள்ளது. துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் வாடிக்கயாளர்கள் பணம் பறிபோக வாய்ப்புள்ளது.

எப்படி வேலை செய்கிறது ஸ்கிம்மர் கருவி:

ஸ்கிம்மர் கருவி என்பது நமது ஏடிஎம் கார்டில் உள்ள மேக்னட் சிப்பில் உள்ள நமது டேட்டாக்களை திருடும் கருவி ஆகும். நாம் ஏடிஎம் கார்டை நுழைக்கும் இடத்தில் அதற்கு மேல் பொருத்தப்படும் வகையில் தயாரிக்கிறார்கள்.

கார்டை நுழைக்கும் இடத்தில் அதை பொருத்தி விட்டு மர்ம நபர்கள் சிறிது தூரத்தில் அமர்ந்து கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். நீங்கள் பணம் எடுக்க உங்கள் ஏடிஎம் கார்டை நுழைக்கும்போது நொடியில் உங்கள் டேட்டாவை அந்த ஸ்கிம்மர் மெஷின் திருடி விடும். உங்கள் அக்கவுண்டில் பணம் இருப்பதையும் உங்களுக்கான ஏடிஎம் ரகசிய குறியீடுகளை அது எடுத்துவிடும்.

நீங்கள் சென்றவுடன் பணம் எடுக்க வருவது போல் அந்த நபர் ஸ்கிம்மர் மெஷினை எடுத்து ஒரு மணி நேரத்தில் உங்கள் டேட்டாவுடன் கூடிய கார்டை தயாரித்து உங்கள் பணத்தை எடுத்து விடுவார்கள். இதற்கு உங்கள் ’பின்’ நம்பரை கவனிக்க வைஃபை வசதியுடன் கூடிய கேமராவையும் பொருத்தியிருப்பார்கள்.

இதற்கு எச்சரிக்கையாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஏடிஎம் கார்டு நுழைக்கும் இடத்தில் வித்யாசமாக உணர்ந்தீர்கள் என்றால் ஜாக்கிரதையாக சோதித்த பின்னரே பணம் எடுக்க கார்டை நுழைக்க வேண்டும்.

புதிதாக தற்போது வேறொரு மோசடியிலும் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். பணம் வெளியே வரும் இடத்தில் ஒரு சிறிய பெட்டி போன்ற கருவியை பொருத்துகிறார்கள். அதன் மூலம் வாடிக்கையாளர் எடுக்கும் பணம் வெளியே வராமல் அந்த பெட்டிக்குள்ளேயே சுருண்டுவிடும்.
வாடிக்கையாளர் பணம் வரவில்லை என்று வங்கியில் புகார் அளிப்பார். ஆனால் பெட்டியை உருவி வாடிக்கையாளர் பணத்தையும் எடுத்துச்சென்று விடுவார்கள். இது நவீன திருட்டு ஆகும். ஆகவே வாடிக்கையாளர்களே உஷார்.

நிற்காமல் செல்லும் தனியார் பேருந்துகள்... கொதிகொதிக்கும் மக்கள்!

நிற்காமல் செல்லும் தனியார் பேருந்துகள்... கொதிகொதிக்கும் மக்கள்!
நாமக்கல் மாவட்டம், பவானி குமாரபாளையத்தில், பஸ் ஸ்டாண்ட்டுக்கு வராமல் செல்லும்  தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானியிலிருந்து, சேலம் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. ஆனால், சேலத்திலிருந்து, பவானி வரும்போது, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு பெரும்பாலான தனியார் பஸ்கள் வருவதில்லை.
இதனால் வயதானவர்கள், அதிக பாரம் கொண்டு வருபவர்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் என, பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மதியம், 1:50 மணியளவில், தனியார் பேருந்து ஒன்று  பள்ளிபாளையம் பிரிவு சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டதால், பயணிகள் மற்றும் நடத்துநரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, அனைத்து பேருந்துகளும் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்வதற்கு தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று குமாரபாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சிலர், "தனியார் பேருந்துகள் மட்டுமில்லாமல், அரசு பேருந்துகளும் சில சமயங்களில் பள்ளிபாளையம் பிரிவிலேயே திரும்பிவிடுகின்றது. சில மாதங்களுக்கு முன் இவ்வாறு பேருந்துகள் திரும்பி செல்வது குறித்து நாளிதழில் செய்தியாகவும் வந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. காலையில் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவியருக்கும், வேலைக்குச் செல்லும் பணியாளர்களுக்கும் ரொம்ப சிரமமாக உள்ளது.
 
இதைப் பற்றி சேலம் போக்குவரத்து அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளோம். ஆனால், இதுவரையிலும் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் இந்த நிலைமை. இதனால், மாற்றுத் திறனாளிகள், நிறை மாத கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் இதனைக் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை மறியல் அல்லது போராட்டம்  நடத்துவோம்" என்று எச்சரிக்கை விடுத்தனர். 

மூன்றாவது நாளாக தொடர்ந்த ரெய்டு: கடுப்பில் காவல்துறை

மூன்றாவது நாளாக தொடர்ந்த ரெய்டு: கடுப்பில் காவல்துறை
தமிழகத்தில் மூன்றாவது நாளாக தொடரும், ஐ.டி ரெய்டால் காவல்துறையினர் கடுப்பில் உள்ளனர்.
சசிகலா, தினகரன் குடும்பம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம், இன்று மூன்றாவது நாளாக ரெய்டு தொடர்ந்து நடந்து வருகிறது. 187 இடங்களில் தொடங்கிய ரெய்டு, தற்போது 40 இடங்களில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கர்சன் எஸ்டேட்டில் இன்று தொடர்ந்து சோதனை நடைபெற்றது. குறிப்பாக, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அதேபோல கோவையில், தொழிலதிபர்கள் ஆறுமுகசாமி, சஜீவன் சம்பந்தப்பட்ட இடங்களில் இன்று தொடர்ந்து ரெய்டு நடைபெற்றது. அவிநாசி சாலையில் உள்ள ஆறுமுகசாமிக்கு சொந்தமான வணிக வளாகத்திலும், போத்தனூரில் உள்ள சஜீவன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது.
இந்த ரெய்டால் சம்பந்தப்பட்டவர்கள் எரிச்சல் ஆவது இயல்புதான். ஆனால், காவல்துறையையும், இந்த ரெய்டு கடுப்பேற்றியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக, போலீஸ் பாதுகாப்புடன்தான் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், சில காக்கி சட்டைகள் கடுப்பில் உள்ளனர்.
கோவையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸில் சிலர் நம்மிடையே, "நல்லா சாப்பிட்டு, நிம்மதியா தூங்கி மூணு நாள் ஆகுது. இந்த ரெய்டு நாள எதுவுமே பண்ண முடியல. சீக்கரம் முடிஞ்சா பரவாயில்ல" என்றனர் கடுப்பாக.

'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி ஏ.டி.எம்.,மில் பணம் திருட முயற்சி

ஸ்கிம்மர் கருவியை பொருத்தி ஏ.டி.எம்.,மில் பணம் திருட முயற்சி
குமரன் நகர், நவ. 12-ஏ.டி.எம்., மையத்தில், 'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களை திருடி பணம் கொள்ளை அடிக்க முயற்சி நடந்துள்ளது.சென்னை, மேற்கு மாம்பலம், கோவிந்தன் சாலையில், கனரா வங்கியின், ஏ.டி.எம்., மையம் அமைந்துள்ளது.சிறிய கேமராநேற்று மாலை, இந்த, ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப, வங்கி ஊழியர்கள் சென்றனர். அப்போது, ஏ.டி.எம்.,மில் ஸ்வைப் செய்யும் கருவியுடன், 'ஸ்கிம்மர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ஸ்கிம்மர் எனும் கருவியை, ஏ.டி.எம்., கார்டு ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைத்து, ரகசிய எண் பதிவு செய்யும் இடத்தில் சிறிய கேமராவை பொருத்தும் மர்ம நபர்கள், வாடிக்கையாளரின் தகவல்களை திருடி, ஏ.டி.எம்., கார்டுகளை க்ளோனிங் செய்து, பணம் திருடி வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த வங்கி மேலாளர், ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய எண் தெரிய, ஏ.டி.எம்.,மில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை பறிமுதல் செய்து, குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், ஏ.டி.எம்.,மில் ஸ்கிம்மர் கருவியை பொருத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.சிக்கல்ஏ.டி.எம்.,மில் இருந்த மூன்று கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில், அவை பழுதடைந்துள்ளதால், ஸ்கிம்மர் பொருத்திய, மர்ம நபர்கள் கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.மேலும், வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chennai: Man poses as ortho surgeon from US, cheats woman

DECCAN CHRONICLE.
PublishedNov 12, 2017, 1:24 am IST


Another case of matrimonial fraud, victim files complaint.


The woman never got the visa and when she started questioning him about it, he kept on dodging her and subsequently cut off the contacts with the woman.

Chennai: A 33-year-old man was arrested by the cyber crime wing of the city police on Saturday for impersonating and cheating women of several lakhs through matrimonial sites.

In September, a divorcee with an autistic child approached the city police commissioner's office seeking action against an ortho surgeon from the US. The woman had registered her name in one of the matrimonial websites through which the accused contacted her.

“He identified himself as Dr Prashanth Prasad, an ortho surgeon living in USA. He invited me and my son to USA to take the marriage proposal forward claiming that he was occupied with work and couldn't come to India,” the woman mentioned in her complaint.

The man suggested the woman apply for a fiancée visa (K1/K2 visa) and on the pretext of helping her with the process, he usurped Rs 11.5 lakh from her, police said.

The woman never got the visa and when she started questioning him about it, he kept on dodging her and subsequently cut off the contacts with the woman.

Realising that she had been taken for a ride, the woman approached the police, after which special teams were formed to investigate the case. During the course of the investigation, police found out that the man who posed himself as an ortho surgeon is a resident of Guduvanchery near Chennai.

He had cheated several women impersonating himself as Dr Prashanth, Gowtham, George among many names, police said. His original name is R. Kumar Durai. He was produced before the Alandur judicial magistrate and remanded in judicial custody. Police advised the public to exercise caution while dealing with strangers through matrimonial websites.

After uproar, Pune University removes vegetarian condition for gold medalist


DECCAN CHRONICLE.

PublishedNov 12, 2017, 2:15 am IST

The Shelar family, in honour of Maharishi Keertankar Shelar, started the medal back in 2006.

Pune University

Pune: After the backlash on social media, the Savitribai Phule Pune University has decided not to confer the gold medal given in the name of Ramchandra Shelar till his family removes the condition that only those students who are vegetarian and teetotallers, can apply for the honour.

When the varsity posted a circular on its website recently, listing the eligibility criteria of the now scrapped gold medal, it was met with sheer outrage. But the backlash seems to have taught them a lesson as they omitted the medal prize from the website in a bid to assert that the institution has taken steps to undo their action.

Professor (Dr) Nitin R. Karmalkar, Vice-Chancellor, said that the sponsors of the Maharishi Keertankar Shelar Mama Gold medal are the Shelar family. “And their traditions keep them from indulging in non-vegetarian food and alcohol. The Shelar family, in honour of Maharishi Keertankar Shelar, started the medal back in 2006. And they wanted it just so,” he said. He said, “Now, with the consent of the Shelar family, we will be annulling the scholarship,” he said.

Monsoon active again, city to get rain until Wednesday

TNN | Nov 11, 2017, 23:56 IST

Chennai: The northeast monsoon is once again active and is expected to bring rain to the city until Wednesday. The met office has predicted about 2cm-6cm of rain on Sunday.

Weather blogger Pradeep John said, "This will be the second spell of the northeast monsoon. Usually one spell brings rainfall for only 3-4 days, but the first spell had brought rainfall for nine days." Rainfall will be concentrated in the coastal districts, particularly in the stretch connecting Chennai and Nagapattinam.

The city will get intermittent showers on Sunday, said area cyclone warning centre director S Balachandran. Most parts of north coastal TN and some parts of south coastal TN will get rainfall on Sunday. Isolated rainfall will occur in the interior districts.

Some spells will bring heavy (7-11cm) or very heavy rainfall (12-20cm) in Chennai, Kanchipuram and Tiruvallur, said Pradeep John.

According to an IMD bulletin, a fresh low pressure area is likely to form over southeast Bay of Bengal around Tuesday.

Since October, Tamil Nadu has received 25cm, against the normal of 26cm. Chennai however has recorded excess rainfall, receiving 68cm against the normal of 41cm.

The combined level of the four drinking water reservoirs at Chembarambakkam, Poondi, Redhills and Cholavaram is currently 37% of the total capacity.

The met office has forecast a maximum and minimum temperature of 29°C and 24°C on Sunday.

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...