Saturday, November 25, 2017

Common ticket for metro trains, buses: CMRL begins trial

| Updated: Nov 25, 2017, 06:35 IST
Representative image

CHENNAI: Hopping on and off from metro trains to Metropolitan Transport Corporation (MTC) buses and vice versa will be hassle free soon as Chennai Metro Rail Limited (CMRL) has commenced trials for using its smart cards in ticketing machines for MTC buses.

CMRL managing director Pankaj Kumar Bansal said they were closely working with MTC for introducing common ticketing.

"Trials are on," he said noting that smart cards of metro rail can be used in the handheld electronic ticketing machines of conductors. Of the 30 slots in the smart card, one slot would be earmarked for using in the electronic ticketing machines.

"The software will be made according to MTC ticket prices," he told on the sidelines of a talk on CMRL Project - 'A Remarkable Transformation of Transportation Landscape in Chennai' organised by the Chennai International Centre here on Friday.

On the second phase of the metro rail project, he said, the work pertaining to 50% of the total 107km is likely to start by the next financial year.

Refusing to reveal the stretch that would be covered in the first chunk of the phase two, Pankaj Kumar Bansal said, "We hope that we would be able to sign the agreement and by next financial year so that we would be able to start the procurement."

If every thing goes by this timeline, the second phase would be completed by 2025.

The second phase will include 20km stretch along Rajiv Gandhi Salai or Old Mahabalipuram Road from Tidel Park to Siruseri.

Madavaram will also be linked in this phase. The CMRL managing director also said that the study for Comprehensive Mobility Plan (CMP) of Chennai Metropolitan Area (CMA) for the mobility of people would be launched. Tenders would be floated soon, he added.

Vellore: 4 girl students of govt school kill themselves after teacher scolds them

| TNN | Updated: Nov 24, 2017, 21:55 IST
 
(Representative image)
 
VELLORE: Four girl students of a government higher secondary school committed suicide by jumping into a well reportedly after a teacher of the school scolded them in Vellore district of Tamil Nadu on Friday evening.

The bodies of three students have been fished out by the fire and rescue services personal. The body of the fourth victim has not been found until the last report from the village in the district. The bodies of students identified as Revathi, Sankar and Deepa were fished out while the body of Manisha has not been recovered so far.

All of them pursued Class 11 at a government school in Panapakkam near Arakonam in Vellore district.

A police team, led by deputy superintendent of police (Arakonam) S Kuthalingam, DSP (Ranipet) Vijayakumar and Avalur police inspector Sathiyalingam visited the crime spot and made preliminary inquiries.

Police suspected that the four girls resorted to take the extreme step after a teacher of the school scolded them and asked them to bring their parents to the school for a briefing about their academic performance.

Fake lawyer serves as ‘magistrate’ for 21 years

| TNN | Updated: Nov 25, 2017, 05:29 IST

CHENNAI: It is perhaps time to look for fake judicial officers too, not just fake lawyers. The authorities at the Bar Council of Tamil Nadu and Puducherry are yet to get over the shock of finding that a man managed to served the Tamil Nadu judicial service as a magistrate for more than 21 years without any recognised law degree.

Responding to a showcause notice from the Bar Council, the 'magistrate', P Natarajan of Ulaganeri in Madurai, said, "It is not fair and justified to cancel enrollment as advocate of a person who was in judicial service for more than 25 years, including 21 years as judicial magistrate."

Natarajan said he did his BGL 'course' at Sarada Law College affiliated to Mysore University in Karnataka for two years through correspondence/distance education mode and was awarded a 'degree'. Apparently, he attended classes only for the third year during 1975-78.

At the time of the convocation, he told the Bar Council, he was not informed that his degree was valid only for 'academic' purposes and not for employment.

He was then selected as judicial magistrate on February 15, 1982, and after a 'peaceful' tenure of nearly 22 years, he retired on June 30, 2003.

As if this was not enough, within a month of his retirement, he enrolled himself Jas lawyer with the Bar Council of Tamil Nadu and Puducherry and was assigned enrolment number MS1739/2003.

After the Supreme Court ordered verification of certificates, the Bar council authorities stumbled upon his case and slapped a showcause notice on Natarajan on January 4, 2016.

The notice traced the academic as well as service history of Natarajan and called upon him to explain why he should not be removed from the rolls.

மாணவி தற்கொலையால் விடுதிக்கு தீவைப்பு: சத்யபாமா பல்கலை.க்கு ஜனவரி 1 வரை விடுமுறை - ‘இரட்டையர்களில் ஒருவரை இழந்துவிட்டேன்’ என்று தந்தை கண்ணீர்

  சத்யபாமா பல்கலைக்கழக மாணவி விடுதியில் தற்கொலை செய்துகொண்டதால், விடுதிக்கு மாணவர்கள் தீ வைத்தனர். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு ஜன வரி 1-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள் ளது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் ராகமோனிகா (18). இவர், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் நடந்த செமஸ்டர் தேர்வின்போது, அருகே இருந்த மாணவியின் விடைத்தாளை ராகமோனிகா பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்வு அறையில் இருந்து ராகமோனிகா வெளியேற்றப்பட்டுள்ளார். விடுதி அறைக்குச் சென்ற ராகமோனிகா, அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சகோதரர் ராகேஷ் மற்றும் தோழிகளுக்கு ‘உங்களை விட்டுப் பிரிகிறேன்’ என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தேர்வு அறைக்குள் செல் போன் அனுமதி இல்லை என்பதால், தேர்வு முடிந்ததும் செல்போனை பார்த்த ராகேஷ், அதிர்ச்சி அடைந்து, ராகமோனிகாவின் விடுதிக்கு ஓடினார். காவலாளி அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அங்கு சென்றபோது, ராகமோனிகா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியது. பல்கலைக்கழக விடுதிக்கு மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு தீ வைத்தனர். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப் பட்டது.
ராகேஷ் கூறும்போது, “நானும், அக்காவும் இரட்டையர்கள். ஒரே வகுப்பில் படித்தோம். வெவ்வேறு அறைகளில் தேர்வு எழுதினோம். தேர்வு முடிந்து செல்போனை பார்த்தபோது அக்கா 3 முறை மெசேஜ் செய்திருப்பதைப் பார்த்து, விடுதிக்கு ஓடினேன். அவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார் என்று எவ்வளவோ கூறியும் காவலாளி உள்ளேவிட மறுத்துவிட்டார். அவர் உடனே அனுமதித்திருந்தால், அக்காவைக் காப்பாற்றி இருப்பேன்” என் றார்.
ராகமோனிகாவின் தந்தை ராஜா, நேற்று காலை சென்னை வந்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மகள் ராகமோனிகா வின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுதார். ‘‘என் மகள் தவறே செய்திருந்தாலும் அதை எப்படி கண்டிக்க வேண்டும் என்று தெரியவேண்டாமா? அவருக்கு கவுன்சலிங் கொடுத்திருக்கலாமே. இப் போது என் இரட்டைப் பிள்ளைகளில் ஒருவரை இழந்துவிட்டேனே’’ என்று கதறி அழுதார்.

மாணவர்கள் மீது வழக்கு

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு, பிறகு விடுமுறை தொடங்க இருந்தது. தற்போதைய அசம்பாவிதம் காரணமாக, ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு ஜனவரி 2-ம் தேதி முதல் நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையில், விடுதிக்கு தீ வைத்த மாணவர்கள் மீது, பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக செம்மஞ்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

‘தற்கொலை வேண்டாமே’

உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகள்தான் தற்கொலைக்கு முதல் காரணம். படிப்புடன் கூடிய வாழ்க்கைக் கல்வியையும், சின்னச் சின்ன பிரச்சினைகளை சமாளிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். போராடும் குணம், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 044-24640050 என்ற சிநேகா தொண்டு நிறுவனத்தின் எண்ணை தொடர்புகொண்டு 24 மணி நேரமும் பேசலாம். இது இலவச சேவை. பேசுபவரின் பெயர், விவரங்களைக்கூட தெரிவிக்க அவசியம் இல்லை. முழு ரகசியம் காக்கப்படும் என்கிறது சிநேகா தொண்டு நிறுவனம்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழா: பெண் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம்

Published : 24 Nov 2017 10:03 IST

காட்டாங்கொளத்தூர்



காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு. அருகில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், எஸ்ஆர்எம். கல்விக் குழுமங்களின் வேந்தர் பாரிவேந்தர், பல்கலைக்கழக தலைவர் பி.சத்தியநாராயணன் உள்ளிட்டோர்.

பெண் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

அறிவியல் படிப்பதுதான் சிறந்தது என்ற சூழல் தற்போது நிலவுகிறது. பன்முகத் தன்மை கொண்ட, கல்வியை கொண்டு மாணவர்களைச் செதுக்க வேண்டும். பழமையும், புதுமையும் கலந்த சிந்தனை கொண்ட மாணவர்களை உருவாக்க பேராசிரியர்கள் முன்வர வேண்டும். இதற்கு பேராசிரியர்கள் தங்களைத் தினமும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நம் நாட்டில் பாகுபாடும், பாரபட்சமும் என்றும் இருந்ததில்லை. முயன்றால் இங்கு எவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். பெண் கல்வியில் இன்றைய நிலையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் இருக்கிறது. பெண்களைப் போற்றும் தன்மைகொண்ட நம் கலாச்சாரமே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, “இன்று தமிழகம் கல்வியில் தனித் தும் பெற்று முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்வியின் நேர்த்தியும் தனித்துவமுமே இதற்கு காரணம் ஆகும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் 6 ஆயிரம் மாணவ , மாணவிகள் பட்டம் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற 185 மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே. பி. அன்பழகன், எஸ்ஆர்எம். கல்விக்குழுமங்களின் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர், பல்கலைக்கழக தலைவர் பி.சத்தியநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



தற்கொலை செய்துகொண்ட மாணவி; கொந்தளித்த மாணவர்கள்: கல்லூரி நிர்வாகம் விளக்கம்

Published :  23 Nov 2017  12:37 IST

சிறப்புச் செய்தியாளர்


சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் நேற்று (புதன்கிழமை) தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி நிர்வாகத்தின் விளக்கத்தில், "தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதே நடவடிக்கைதான் சம்பந்தப்பட்ட மாணவி மீதும் எடுக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலையும் மாணவர்கள் போராட்டமும்:

ஹைதராபாத்தில் உள்ள தனியர் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் ராஜா ரெட்டி என்பவரின் மகள் துவ்ரு ராகா மோனிகா. இவர் பொறியியல் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று பருவநிலை தேர்வு நடந்தது. அப்போது, தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாணவி மோனிகாவை கண்காணிப்பாளர் வெளியேற்றியுள்ளார். அவரை அறையில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்னதாக ஒரு படிவத்தில் கையெழுத்தும் வாங்கியுள்ளார். படிவத்தில் கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு மோனிகா விடுதி அறைக்குச் சென்றுள்ளார். அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு முடிந்தவுடன் விடுதி அறைக்குத் திரும்பிய சக தோழிகள் மோனிகாவின் சடலத்தைப் பார்த்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

'குட்பை' எஸ்எம்எஸ்

தற்கொலைக்கு முன்னதாக அதே கல்லூரியில் பயின்று வரும் அவருடைய சகோதரருக்கு 'குட்பை' என மெசேஜ் அனுப்பியுள்ளார் மோனிகா. தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்து தனது செல்ஃபோனைப் பார்த்த மோனிகாவின் சகோதரர் படித்து விடுதிக்கு விரைந்துள்ளார். அங்கு சகோதரியின் சடலத்தைப் பார்த்து அவர் அதிர்ந்து போயுள்ளார்.

மோனிகா அனுப்பிய குறுந்தகவல் செய்தியை செம்மஞ்சேரி காவல் உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

கல்லூரியின் அழுத்தமே காரணம்:

இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம்தான் காரணம் என்று கூறி மாணவர்கள் சிலர் நேற்று இரவு கல்லூரி வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கல்லூரி வளாகத்தில் இருந்த மின்விளக்கு, பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சில மாணவர்கள் கல்லூரி வாயிலுக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். சிலர் கல்லூரி வளாகத்தில் இருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர். உடனே, தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அதையடுத்து, அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தற்கொலை தீர்வாகாது..

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை நிச்சயம் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் தோன்றினால் யாராக இருந்தாலும் மாநில உதவி மையமான 104- உதவி எண்ணுக்கு அழைக்கலாம். அல்லது 'ஸ்நேகா' தற்கொலை தடுப்பு மையத்தை 044-24640050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: சென்னை முதலைப் பண்ணை

Published on : 22nd November 2017 04:23 PM  


* "புலி இருக்கும் காடு மிகவும் வளமானது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை முதலை இருக்கும் நீர்நிலை மிகவும் தூய்மையானது என்பதும்'. அப்படிப்பட்ட முதலைகளை காத்து பராமரித்து வருகிறது The Madras Crocodile Bank எனப்படும் "சென்னை முதலைப் பண்ணை'.

* சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் வடநெம்மேலியில் அமைந்துள்ள இந்த முதலைப் பண்ணை 1976-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

* அமெரிக்கரான ரோமுலஸ் விட்டேகரும் அவரது மனைவி சாய் விட்டேகரும் இணைந்து இந்தப் பண்ணையை ஆரம்பித்தனர்.

* பிறப்பால் அமெரிக்கரான விட்டேகர், ஏழு வயதிலேயே குடும்பத்துடன் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர். முதலை, பாம்புகள் ஆகியவை குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர்.

* உலகின் மிகச் சிறந்த ஊர்வனவியலாளர்கள் பட்டியலைத் தயாரித்தால், அதில் முதன்மை இடங்களில் இடம்பிடித்திருக்கும் பெயர் சென்னையின் ரோமுலஸ் விட்டேகர்.

* 2005- ஆம் ஆண்டு "பசுமை ஆஸ்கர்' எனப்படும் மிக உயரிய விருதான "ஒய்ட்லி' விருதைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பெற்றார்.

* அழியும் நிலையில் உள்ள முதலைகளைக் காப்பாற்றும் ஒரு மரபணு வங்கியாக இந்தப் பண்ணை திகழ்கிறது. ஆரம்பக் காலத்தில் இவ்வாறு அழிவு நிலையில் உள்ள முதலைகளை "அடைப்பிட இனப்பெருக்கம்' மூலம் வளர்த்து, பின் அவற்றைக் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் விட்டுவந்தனர்.

* இப்போது காடுகளின் பரப்பளவு குறைந்துவரும் காரணத்தால் முதலைகளை முன்பு போல இயற்கையான வாழிடத்துக்கு அனுப்ப முடிவதில்லை.

* 3000-க்கும் மேற்பட்ட முதலைகள் இங்கு உள்ளன.

* உலகளவில் 23 வகை முதலைகள் இருக்கின்றன. அதில் 17 வகையான முதலைகள் இங்கு உண்டு.

* முதலையின் பார்வை சக்தி கூர்மையானது. சதுப்புநில முதலை 300 அடிக்கு அப்பாலுள்ள இரையைக்கூட கண்டுபிடிக்கும் திறன் கொண்டது.

* தண்ணீரில் மூழ்கியிருக்கும்போதும் கூட முதலையால் ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும்.

* பிரதான உணவு மீன். தவிர, தவளை, நண்டு வகைகள், ஆமைகள், பறவைகள் மற்றும் சிறு பாலூட்டிகளையும் உண்ணும்.

* சதுப்பு நில மற்றும் உப்புநீர் முதலைகளால் மான், குரங்கு, நாய், எருமை போன்ற பெரிய மிருகங்களைக் கூட உண்ண முடியும்.

* உப்புநீர் முதலை மற்றும் நைல் முதலை மனிதனைத் தின்றதாக செய்திகள் உள்ளன. ஆனால், சதுப்புநில முதலைகள் மனிதனைத் தின்றதாக போதிய ஆதாரம் இல்லை.

* முதலைகள் தண்ணீருக்கு அடியில் உள்ள நிலத்தில் முட்டையிடுகின்றன. சதுப்பு நில முதலை மண்ணில் குழிதோண்டி முட்டைகளைப் புதைக்கின்றன. உப்புநீர் முதலை இலை மற்றும் மண்ணால் கூடுகட்டி முட்டையிடுகின்றன.

* ஒரு முதலையின் வாழ்நாளில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பற்கள் வளரும். காரணம், அடிக்கடி கடிப்பதால் அதன் பற்கள் உடைந்து உள்ளிருந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.

* முக்கர் முதலை, செம்மூக்கு முதலை, கரியால், யாக்கரே கைமன், குட்டை கைமன், அமெரிக்க முதலை, சியாமிய முதலை, நைல் முதலை, கருமுதலை ஆகியவை பண்ணையில் உள்ளன.

* பாம்புகளில் கருநாகம், இந்திய மலைப் பாம்பு, ராஜ மலைப்பாம்பு வெளிறிய இந்திய நாகம், 5 அனகோண்டா ஆகியவை உள்ளன.

* இதுதவிர நீர் உடும்புகள் மற்றும் கொமோடோ ராட்சத பல்லி இந்தோனேசியாவில் இருந்து வரவைக்கப்பட்டுள்ளது.

* ஆமைகள், பல்லி இனங்கள், பாம்புகள் ஆகியவையும் உள்ளதால் 2003-ஆம் ஆண்டு முதல் இந்தப் பண்ணைக்கு "தி மெட்ராஸ் க்ரோக்கடைல் பேங்க் டிரஸ்ட் மற்றும் சென்டர் ஃபார் ஹெபர்டாலஜி' எனப் பெயர் வைத்தனர்.

* சென்னை முதலைப் பண்ணை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். திங்கட்கிழமை வார விடுமுறை.

* பெரியவர்களுக்கு ரூ. 40 ரூபாயும், குழந்தைகளுக்கு ரூ.20 ரூபாயும் பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

* தினசரி இரவு 7 முதல் 8.30 மணி வரை "நைட் சஃபாரி' என்ற இரவு நேர அனுபவத்தைக் கொடுக்கிறார்கள். இதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். பெரியவர்களுக்கு ரூ.200, குழந்தைகளுக்கு ரூ.100.

* ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் பேர் இந்தப் பண்ணையைப் பார்வையிடுகிறார்கள்.

* முதலைப் பண்ணைக்கு வரும் பார்வையாளர்களுக்கு இங்கிருக்கும் உயிரினங்களைப் பற்றி பொறுமையாக விளக்கம் கொடுக்கப்படுகிறது.

* உயிரினங்களைத் தத்தெடுப்பது, ஒருநாள் விலங்கு காட்சி சாலைப் பொறுப்பாளராக இருப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவது, ஊர்வன பாதுகாப்பு தொடர்பான வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
- ஆர்.ஜி.ஜெகதீஷ்

NEWS TODAY 07.07.2026