Tuesday, November 28, 2017

HC acquits 35 US anti-piracy ship crew held in '13 'with illegal arms'

TNN | Updated: Nov 28, 2017, 07:44 IST



The ship was impounded and the crew and guards were detained in October 2013 after the vessel allegedly entere... Read More MADURAI: The 35 crew members and guards of US anti-piracy ship Seaman Guard Ohio, jailed under the Arms Act, were on Monday acquitted of all charges by the Madurai bench of the Madras high court.

The ship was impounded and the crew and guards were detained in October 2013 after the vessel allegedly entered Indian waters with "illegal arms without adequate permission." The 'Q' branch of the Tamil Nadu police booked the crew members under various Acts, including the Arms Act, IPC and the Essential Commodities Act.

On January 11 last year, the Tuticorin district and sessions court sentenced all the crew members to five years rigorous imprisonment and fined them 3,000 each. Ruling on an appeal filed by the crew members, including captain Dudnik Valentyn, Justice A M Basheer Ahamed said the prosecution had failed to prove that the Indian Coast Guard
முதுநிலை பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

Added : நவ 28, 2017 00:30

சென்னை: பணியில் முன்னுரிமை அளிக்கக் கோரி, 11வது நாளாக, முதுநிலை பயிற்சி டாக்டர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ பணியாளர் தேர்வாணயத்தின் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, நிபுணர் டாக்டர்களுக்கு முன், தங்களுக்கு பணியிடம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதுநிலை பயிற்சி டாக்டர்கள், சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்ககத்தில், 11வது நாளாக, போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றைய போராட்டத்தில், கண்களில் கறுப்பு துணிகட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, பயிற்சி
டாக்டர்கள் கூறுகையில், 'எங்கள் கோரிக்கையை, அரசு ஏற்கவில்லை. பேச்சுவார்த்தைக்கும் யாரும் வரவில்லை. இதை கண்டித்தே, கறுப்பு துணி கட்டி போராட்டம் செய்தோம்'
என்றனர்.
கழிப்பறையை கையால் சுத்தம் செய்த மாணவியர் : திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அட்டூழியம்

Updated : நவ 27, 2017 23:36 | Added : நவ 27, 2017 22:26 |



திருவள்ளூர்: திருவள்ளூரில், தலைமை ஆசிரியரின் அடாவடி உத்தரவால், எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல், அரசு மேல்நிலைப் பள்ளி கழிப்பறையை, மாணவியர் சுத்தம் செய்தனர். இது, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே, கடும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், ஜே.என்.சாலை அருகில், கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ளது, ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. இங்கு, ஆறாம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரை, 1,000 மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியர் - ஆசிரியைகள் பயன்படுத்த, 10 கழிப்பறைகள் உள்ளன. தனியார் சுகாதார பணியாளர் மூலமாக, இந்த கழிப்பறைகளை சுத்தம் செய்ய, மாதம், 2,500 ரூபாய், அரசு வழங்குகிறது. கடந்த மாதம் வரை, இப்பள்ளியில், தனியார் மூலம், கழிப்பறை சுத்தம் செய்யும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில், கடந்த, 24ம் தேதி, வகுப்பு தலைவர் மற்றும் துணை தலைவர் பொறுப்பில் இருந்த மாணவியரை அழைத்த, தலைமை ஆசிரியர், பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், கழிப்பறையை சுத்தம் செய்யாவிட்டால், பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாது என, எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால், அச்சத்தில் ஆழ்ந்த மாணவியர், அழுதபடியே, எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி, கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்தனர். இதனால், இரண்டு நாட்களாக யாருடனும் பேசாமல் இருந்த மாணவியர், நேற்று முன்தினம், தங்கள் பெற்றோரிடம், கழிப்பறையை சுத்தம் செய்தது குறித்து தெரிவித்துஉள்ளனர்.இதையடுத்து, நேற்று காலை, பள்ளிக்கு சென்ற பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். ஆனால் அவர்களை, தலைமை ஆசிரியர் திட்டியதோடு, வெளியேற்றியதாக கூறப்படுகிறது. 'மாணவியரை, கழிப்பறையை சுத்தம் செய்ய உத்தரவிட்ட தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2,000 நர்ஸ்கள் உள்ளிருப்பு போராட்டம் : கழிப்பறையை பூட்டி முறியடிக்க போலீஸ் முயற்சி

Added : நவ 27, 2017 22:24



சென்னை: ஊதிய உயர்வு கேட்டு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நர்ஸ்கள், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மருத்துவ பணியாளர் தேர்வாணயம் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 9,990 நர்ஸ்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு, மாத ஊதியமாக, 7,700 ரூபாய் வழங்கப்படுகிறது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு, 500 ரூபாய் தான் அதிகரிக்கப்படுகிறது.
இதனால், சம்பள உயர்வு மற்றும் காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நர்ஸ்கள், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்திற்கு, போராட்டம் நடத்த வந்தனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை, போலீசார் கைது செய்ய சென்றபோது, அதிகளவில் நர்ஸ்கள் குவிந்தனர்.
அதனால், அவர்கள் அனைவரையும், டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ளே வைத்து, கேட்டை பூட்டினர். இதையடுத்து, வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில், நர்ஸ்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. ஒரே நேரத்தில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நர்ஸ்கள் குவிந்ததால், மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டன. மருத்துவமனைகளிலும், நோயாளிகள் அவதிப்பட்டனர்.

இது குறித்து, நர்ஸ்கள் கூறியதாவது: நாங்கள் ஒவ்வொருவரும், மற்ற மாவட்டங்களில் தான் பணியமர்த்தப்பட்டுள்ளோம். எங்களுக்கு போதிய சம்பளமும், காலமுறை ஊதியமும் வழங்கப்படவில்லை. 7,700 ரூபாய் மட்டும் வைத்து, எங்களது குடும்பத்தை, நாங்கள் எப்படி நடத்துவது என, தெரியவில்லை. எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கு முன்பே, அரசுக்கு கோரிக்கை வைத்தோம். போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பும் வெளியிட்டோம்; ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. அதை தொடர்ந்தே, போராட்டம் நடத்துகிறோம்.
மருத்துவ பணிகள் இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் ஆரம்ப சுகாதாரத் துறை இயக்குனர் என, மூன்று தரப்பிலும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எனவே, கோரிக்கைகள் ஏற்கும் வரை, போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது: மருத்துவ பணியாளர் தேர்வாணயத்தின் வழியாக, இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில், நர்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒப்பந்தத்திற்கு பின், இவர்களை, அரசு நர்ஸ்களாக பணியில் அமர்த்துவோம். அப்போது, தேவையை விட அதிகமாக இருப்பின், சிலர் காத்திருப்பு பட்டிலில் இருப்பர். இவர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தவும், அரசு பரிசீலித்து வருகிறது; விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கழிப்பறைகளுக்கு பூட்டு! : நர்ஸ்கள் போராட்டத்தை முடக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு, வெளியில் இருந்து உணவு, குடிநீர் வருவதை தடுத்து நிறுத்தினர். உள்ளே இருந்து வெளியேறவும், வெளியில் இருந்து உள்ளே வரவும், யாரையும் அனுதிக்கவில்லை. இதனால், உணவு இல்லாமல் போராட்டத்தை, நர்ஸ்கள் தொடர்ந்தனர். மேலும், வளாகத்தில் இருந்த கழிப்பறைகளும் மூடப்பட்டன. சில பெண் நர்ஸ்கள், டி.எம்.எஸ்., அலுவலக ஊழியர்களின் உதவியுடன், அலுவலக கழிப்பறையை பயன்படுத்தினர்.

'மீடியா'க்களுக்கு தடை! : போராட்டத்தை செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களை, போலீசார் அனுமதிக்கவில்லை. 'மீடியாக்களை, உள்ளே அனுமதிக்க வேண்டும்' என, நர்ஸ்கள் கோஷமிட்டும், போலீசார் கண்டுகொள்ளவில்லை. பத்திரிக்கையாளர்களிடம் பேச விடாமல், அவர்களையும் தடுத்து விட்டனர்.

'200 பேரின் பணி 1 மாதத்தில் நிரந்தரம்'

''ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகள், படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவர். ஏற்கனவே நிலுவையில் உள்ள, 200 நர்சுகள், ஒரு மாதத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவர்,'' என, அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார். டில்லியில் நடைபெற்ற, 'உடல் உறுப்பு தான நாள்' நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழக அமைச்சர், விஜயபாஸ்கர், நிருபர்களிடம் கூறியதாவது: தேர்வாணையம் மூலம், நர்ஸ் பணிக்காக, 9,999 பேர் தகுதித் தேர்வு எழுதி, உரிய முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள், தங்கள் சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். அரசாணையின்படி, அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை, தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய பின், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அந்த வகையில், இன்னும் கடைசி குழுவில், 200 நர்சுகள் உள்ளனர். அவர்களை, ஒரு மாதத்தில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களும், படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவர். அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம், ஒவ்வொரு ஆண்டும், புதிய புதிய காலியிடங்கள் உருவாகின்றன. அவற்றில் ஏற்படும் காலியிடங்களை கணக்கில் வைத்து, இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். நர்சுகள், மருத்துவ துறையின் ஓர் அங்கம். சேவை துறையில் பணியாற்றும் இவர்கள், நோயாளிகளின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்பும்படி, அரசு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -
ரேஷன் கடைகளுக்கு 10 நாட்கள் விடுமுறை

Added : நவ 27, 2017 22:14

ரேஷன் கடைகளுக்கு, 2018ல், 10 நாட்களுக்கு, பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், குறைந்த விலையில், உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசு, 2018ல், மொத்தம், 23 நாட்களுக்கு, பொது விடுமுறை அறிவித்துள்ளது. அந்த ஆண்டிற்கு, ரேஷன் கடைகளுக்கான பொது விடுமுறை குறித்த அறிவிப்பை, உணவுத் துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பொங்கல், குடியரசு தினம், மே தினம், ரம்ஜான், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளுக்கு, ரேஷன் கடைகள் செயல்படாது.

இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருவள்ளுவர் தினம், உழவர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களுக்கு, அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம், ரேஷன் கடைகள், வழக்கம் போல் செயல்படும்; 10 நாட்கள் விடுமுறை விபரம், ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டு உள்ளது. அதை பார்த்து, மக்கள், விடுமுறையை தெரிந்து கொள்ளலாம்' என்றார்.

- நமது நிருபர் -
கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து

Added : நவ 27, 2017 20:50 |

  லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டத்தில் உள்ள உராய் சிறை வளாகத்தில் அழகுக்காக வளர்க்கப்படுவதற்காக ரூ. 5 லட்சம் செலவில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அந்த செடிகள் மற்றும் தாவரங்களை, அப்பகுதியில் உலவிக்கொண்டிருந்த கழுதைகள் தின்று நாசம் செய்துவிட்டன. இதனையடுத்து, கட்நத 24ம் தேதி, ஜலாவுன் போலீசார், அந்த கழுதைகளை உராய் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, தனது கழுதைகள் மாயமானதை அறிந்த கமலேஷ் என்பவர், தமது கழுதைகள், சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்து உராய் சிறை நிர்வாகத்திடம்,. கழுதைகளை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். அதற்கு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சி உள்ளூர் பிரமுகர் சக்தி காஹோயின் உதவியுடன் சிறையில் இருந்த கழுதைகளை, கமலேஷ் மீட்டுள்ளார்.

பெங்களூருவில் கனமழை; 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்

Added : நவ 28, 2017 06:44

சென்னை: பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெங்களூருவில் விமானங்களை தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூருவில் தரையிறங்க வேண்டிய 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

NEWS TODAY 08.07.2026