Saturday, January 20, 2018

Dead woman 'gives birth' to stillborn ten days after she died

THE ASIAN AGE 
 
Published : Jan 19, 2018, 8:54 pm IST

In a shocking case, a stillborn baby emerged from its mother 10 days after she had died, plunging the family into fresh grief.

The woman, 33-year-old Nomveliso Nomasonto Mdoyi had suddenly complained of breathlessness at her home in the village of Mthayisi in South Africa’s southern Eastern Cape province.

The mum-of-five died shortly afterwards and her body was given to a firm of funeral directors ahead of her burial.

However, 10 days after she had passed away, staff noticed that a dead baby had appeared between the legs of her lifeless body.

Experts say that the relaxation of muscles after death or even a build-up of bacteria could cause an unborn baby to be expelled experts.

The boss of the funeral directors for Lindokuhle Funerla Fundile Makalana said that when they took the body from the mortuary tray to her coffin, they discovered that there was a newly born baby between her legs.

'The baby was dead. We were so shocked and frightened that we did not even have time to look at the sex of the baby.

He went on to add that even though they have been in business for 20 years, they have never heard of a dead woman give birth.

The shocking incident left her mother Mandzala Mdoyi, 76, even more grief-stricken.

The family reportedly ignored some suggestions of witchcraft and held a funeral and cremation as planned, with the baby in the coffin with its mother.

It is not clear whether the baby's life could have been saved had doctors provided different treatment when the mother fell ill.
From today, travelling by train will be cheaper than buses

By B Anbuselvan | Express News Service | Published: 20th January 2018 02:02 AM |

 
CHENNAI: From today, travel by train will be cheaper than that in buses. The State government on Friday announced hike in bus fares in eight public transport corporations it operates. The government’s release announcing the fare hike highlighted how in Tamil Nadu the bus fares are still comparatively cheaper than the neighbouring States and also how the low fares are making the transport corporations unsustainable and forced them into huge debts.

But the revised ticket fare, which comes into effect from Saturday, will burn a hole in the pockets of commuters. Long-distance passengers have to shell out about Rs 100 to Rs 200 more when travelling distances above 200 km in TNSTC and SETC buses.

For ordinary class mofussil buses, the fares are hiked from 42 paise per kilometre to 60 paise. For ‘Express’ and ‘Deluxe’ buses, the fares have been hiked from 56 paise per kilometre to 80 paise. The fares for ‘Super Deluxe’ buses is now 90 paise from 60 paise per km. For ‘Ultra Deluxe’ buses, the new fare is 110 paise, which is nearly a 50 per cent hike from 70 paise hitherto.

This means, ticket fare of a semi-sleeper bus operated by State Express Transport Corporation (SETC) from Chennai to Madurai will increase from Rs 275 to Rs 415 in Super deluxe buses. It will cost a passenger Rs 505 in Ultra Deluxe buses against Rs 325, the earlier fare. However, the fare in a second class sleeper in train will be just Rs 315, including reservation charges.

Similarly, a bus ticket in SETC from Chennai to Tirunelveli would cost Rs 590 and Rs 720 in ‘Deluxe’ and ‘Ultra Deluxe’ buses. So far, the fares were only Rs 330 and Rs 380. A train ticket in second class sleeper for the same distance is only Rs 385.

The ticket fares in relatively short distance routes, lesser than 300 km, such as Chennai - Vellore, Chennai - Tiruvannamalai, Chennai - Villupuram and Chennai - Puducherry will go up by Rs 50 to Rs 65 in both TNSTC and SETC buses.

For instance, the fare in an ‘Ultra Deluxe’ bus from Chennai to Vellore would go up to Rs 160. Till Friday, it was only Rs 98. Even in a TNSTC bus, a ticket would cost Rs 118 (old fare was Rs 80). But a reserved seat in a superfast train in second class is only Rs 90 between Chennai and Katpadi, near Vellore.

The ticket fares of Air Conditioned Deluxe buses and Volvo buses have been increased by 50 to 60 paise per km. The AC bus fares are to be charged 140 paise a kilometre, compared to 90 paise hitherto, while Volvo bus tickets is to be fixed at 170 paise as against the earlier fare of 110 paise a km.

The government also increased the minimum ticket fares of all buses. The minimum ticket fare in Metropolitan Transport Corporation (MTC) buses has been increased to Rs 5 from Rs 3 for ordinary buses and the maximum fare increased to Rs 23.

The starting fare in an ordinary town bus has been increased to Rs 6 from Rs 5, while for ‘Express’ buses the minimum fare (upto 30 km) is to be Rs 24 as against the earlier fare of Rs 17. Similarly, the lowest fare in non-stop deluxe buses has been hiked to Rs 27 from Rs 18, while the minimum fare of ultra deluxe buses will be Rs 33, as against Rs 21 in the past.

The minimum fares of AC and Volvo buses have also been increased to Rs 42 and Rs 51 respectively, from Rs 27 and Rs 33 till Friday. In addition to this, passengers will be charged between Rs 1 and Rs 10 towards tollgate fee. For the bus fares from Rs 25 to Rs 501 passengers should pay anywhere between Rs 1 and Rs 10 towards toll fee.

In the event of loss of life and injuries due to accidents, passengers in the age group of one to 15, will have an insurance coverage up to Rs 2.5 lakhs, those in the age group of 16 to 60, will get a coverage up to Rs 5 lakhs. Passengers above 60 years, will be covered up to Rs 2.5 lakhs. The last time the ticket fare was hiked was in November 2011. An official release said.
படிப்போம் பகிர்வோம்: கொஞ்சம் கல்வி கொஞ்சம் இலக்கியம்!

Published : 19 Jan 2018 10:55 IST

ச.ச. சிவசங்கர்



செலினா

‘இன்றைய இளைஞர்களுக்கு வாசிப்புப் பழக்கமே இல்லை; சமூக ஊடகம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில்தான் மூழ்கிக்கிடக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், சென்னைப் புத்தகக் காட்சியில் சுற்றி வந்தால், அப்படிக் கூறுவது தவறு எனச் சொல்லவைக்கிறது. தாங்கள் படிக்கும் துறை சார்ந்து புத்தகங்கள், நாவல்கள், இலக்கியப் படைப்புகள், வரலாற்று நூல்கள் என அரங்குகள் ஏறி இறங்கி இளைஞர்கள் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

சிவில் தேர்வு எழுதுவோருக்கு சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது மிகப் பெரிய வரப்பிரசாதம்தான். தாங்கள் எழுதும் தேர்வுக்கு ஏற்ற புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்றால், சும்மா விடுவார்களா? ஒரே குடைக்குள் ஓராயிரம் புத்தகங்களா என வியந்தபடி பலரும் சிவில் தேர்வுப் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். சிவில் தேர்வு புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்த ஓர் அரங்கில் ஏராளமான புத்தகங்கள் வாங்கிக்கொண்டிருந்தார் யாஷர் முகமத் ஷா என்ற இளைஞர்.


யாஷர் முகமத் ஷா எல்லாம் படிப்பு

வாங்கிய நூல்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, “எனது சொந்த ஊர் திருநெல்வேலி. சென்னையில் தங்கி ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகத் தயாராகிவருகிறேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்குள் நுழைந்த பிறகுதான் புத்தகக் கண்காட்சிக்கே வரத் தொடங்கினேன். போன வருடம்தான் முதன்முறையாக வந்தேன். ஐ.ஏ.எஸ். தேர்வு தொடர்பான புத்தகங்களையும் பாடங்களுடன் தொடர்புடைய புத்தகங்களையும் தான் பொதுவாக வாங்குவேன். விரும்பிய, தேடிய புத்தகங்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைப்பதை நினைத்தால் அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது” என்று பூரித்துப்போனார் அவர்.

கவிதை... கவிதை...

இன்று பல ஊர்களிலும் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. ஆனால், சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சி தனித்தன்மை வாய்ந்தது. சென்னைப் புத்தகக் காட்சிக்காக வெளியூர்களிலிருந்து வருவோரும் உண்டு.

அப்படி ஊட்டியிலிருந்து வந்திருந்த செலீனா கூறும்போது, “செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்க்கிறேன். மூன்றாவது ஆண்டாக சென்னைப் புத்தகக் காட்சிக்கு வந்திருக்கிறேன். எனக்கு இலக்கிய நூல்கள் வாசிப்பில் ஆர்வம் அதிகம். சமீப காலமாக அரசியல், கவிதை நூல்கள் வாசிப்பதிலும் ஆர்வம் கூடியிருக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நரன் எழுதிய ‘கேசம்’ என்ற நூலை வாங்கினேன்” என்கிறார் செலீனா.

பட்டிமன்றத்துக்குத் தயாராக..

புத்தகக் காட்சிக்கு முதன்முறையாக வந்திருந்த, சென்னை லயோலா கல்லூரி மாணவர் அருண் என்பவரைப் புத்தகக் காட்சியில் சந்திக்க நேர்ந்தது. இதுவரை வராமல் இந்த ஆண்டு மட்டும் புத்தகக் காட்சிக்கு வந்த ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டோம்.


“ நான் இப்போது பட்டிமன்றங்களில் சென்று பேசி வருகிறேன். தெரிந்த விஷயங்களை சில பட்டிமன்றங்களில் பேசி கைத்தட்டல் வாங்கிவிடலாம். தொடர்ந்து அதையே பேசினால் அரைத்த மாவாகிவிடும். புதிய விஷயங்களைப் பகிர வேண்டும் என்றால், நூல்கள் அதிகம் படித்தால்தான் முடியும்.

அந்த வகையில்தான் முதன்முறையாக இங்கே வந்தேன். பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய ‘பெரியார்’ நூலை வாங்கினேன். இனி தொடர்ந்து புத்தகக் காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கவும் வாசிக்கவும் உத்தேசித்துள்ளேன்’ என்கிறார் அருண்.

சும்மா ரவுண்டு

இப்படிப் புத்தகம் வாங்கும் நோக்கத்துடன் வரும் இளையோர் மத்தியில், நண்பர்களுடன் பொழுதுபோக்குவதற்காகப் புத்தகக் காட்சிக்கு வந்திருந்தவர்களையும் பார்க்க முடிந்தது. அப்படி ஃபிரெண்ட்ஸ்களுடன் வந்திருந்த சென்னை எம்.ஓ.பி. வைணவா கல்லூரி மாணவி ரம்யா என்ன சொல்கிறார்? “இதற்கு முன்பு இரண்டு புத்தகங்களை வாங்கினேன்.


ரம்யா

அந்தப் புத்தகங்களையே இன்னும் படித்து முடிக்கவில்லை. இருந்தாலும் புத்தகக் காட்சிக்கு வந்து செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே வந்தால் நன்றாகப் பொழுதுபோகும். மற்றப்படி பிரம்மாண்டமான அரங்கம், ஏராளமான நூல்கள் என ஒவ்வொன்றையும் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது” என்கிறார் ரம்யா.

ஒட்டுமொத்தமாக இளைஞர்களின் ரசனைக்கு விருந்தாக இருக்கிறது சென்னைப் புத்தகக் காட்சி.

படங்கள்: நீல்கமல்



இனி அடிக்கடி பேருந்துக் கட்டணம் உயரும்: தமிழக அரசு சூசகம்

Published : 19 Jan 2018 22:06 IST ]

  சென்னை



இனி பேருந்துக் கட்டணம் அடிக்கடி உயர வாய்ப்புள்ளது என தமிழக அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.

தமிழக அரசியலில் பேருந்துக் கட்டண உயர்வு கொள்கை முடிவாக இதுவரை இருந்துவந்துள்ளது. பேருந்துக் கட்டண உயர்வு என்பது மிகுந்த போராட்டத்திற்கிடையே நடக்கும். சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சினை என்பதால் பேருந்துக் கட்டண உயர்வு விவகாரத்தில் அரசியல் கட்சிகள் யோசித்து முடிவெடுத்து வந்தனர்.

ஜெயலலிதா தான் முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஆறு மாதத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. இதன் விளைவு அதிமுக தேமுதிக கூட்டணி முறிந்தது.

அதன் பின்னர் ஜெயலலிதா இரண்டாவது முறை ஆட்சிக்கு வரும் வரை பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் தற்போது தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை பெரிய அளவில் உயர்த்தியுள்ளது. ஜெயலலிதா இரண்டு முறை கட்டண உயர்வு ஏற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் உயர்த்தவில்லை. காரணம் அது அரசின் கொள்கை முடிவாக இருந்தது.

ஆனால் தற்போது தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதோடல்லாமல் கூடுதலாக சில விஷயங்களை அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இனி பேருந்துக்கட்டணம் என்பது கொள்கை முடிவுகளை தாண்டி அடிக்கடி உயரும் என சூசகமாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் கிரீஸ் எண்ணெய் விலை ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றை உள்ளடக்கிய அளவீட்டு குறியீட்டின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினால் பேருந்துக் கட்டணம் மாற்றியமைக்கப்படும்.

மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்துக் கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கட்டண உயர்வு இனி அடிக்கடி கால இடைவெளியில் இருக்கும், இதே போல் தனியார் பேருந்து கட்டணமும் இதையொட்டி உயர வாய்ப்புள்ளது.
ஆண்டாள் சர்ச்சை; வைரமுத்து மீது போலீஸ் வழக்கு: உயர் நீதிமன்றம் தடை

Published : 19 Jan 2018 18:09 IST

சென்னை



ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கட்டுரை எழுதியதாக கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை கொளத்தூர் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தனியார் நாளிதழில் கடந்த 8-ம் தேதி தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஆண்டாள் குறித்து கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து வைரமுத்து கருத்துக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கும் பதிவு செய்யபட்டது.

வைரமுத்து கட்டுரை குறித்து சமுதாய நல்லிணக்க பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும் வழக்கை ரத்து செய்யவும் கோரி வைரமுத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஆண்டாள் குறித்த கருத்து தன்னுடைய கருத்து அல்ல எனவும், அமெரிக்க எழுத்தாளர் கருத்தை தாம் சுட்டிகாட்டி இருந்தேன். கடவுள் ஆண்டாள் குறித்துதான் எந்த தவறான கருத்துகளையும் குறிப்பிடவில்லை மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவோ அல்லது கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது அது போன்ற நோக்கிலும் நான் அந்த கருத்து தெரிவிக்கவில்லை.

எனது கருத்தை முழுமையாக அறியாமல் புகார் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே எனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும் வழக்கை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது வைரமுத்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எந்த விதமான கருத்தையும் மனுதரார் தெரிவிக்காத நிலையில் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் தனியார் நாளிதழில் வைரமுத்து எழுதிய கட்டுரை படிக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, ''இதில் வைரமுத்து மேற்கோள் காட்டிச் சொல்கிறார். இதை எப்படி அவரது வார்த்தை என்று எடுத்துக்கொள்ள முடியும், இதில் அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர என்ன முகாந்திரம் உள்ளது.

எனக்குத் தெரிந்து வைரமுத்து ஆண்டாள் பற்றி கூறிய கருத்தில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை'' என்றார். மேலும், நீதிபதி வழக்கை மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார். வழக்கு மீண்டும் மதியம் விசாரணை தொடங்கியது.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு தொடர்பாக தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி செய்தித்தாளில் வெளிவந்த கருத்து மனுதரார் கருத்து என்று எப்படி கூற முடியும். அவர் சில குறிப்புகளை சுட்டிக்காட்டியுள்ளார் இதற்கு எப்படி மனுதரார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.

பின்னர் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதபதி ரமேஷ், சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பதாகவும், மனு தொடர்பாக காவல் ஆய்வாளர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதபதி வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்

By DIN | Published on : 20th January 2018 02:26 AM |

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கும் போது ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிம விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா இருசக்கர வாகனத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
 
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தைத் தேர்வு செய்யலாம். மேலும், வாகனத்தைப் பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம். 125 சி.சி. திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.

பணிபுரியும் மகளிர்: இருசக்கர வாகனத் திட்டமானது, பணிபுரியும் மகளிருக்கு மட்டுமே அளிக்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாகத் தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத் திட்டங்களில் பணியாற்றுவோர், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் ஆகியவற்றில் பணியாற்றுவோர் இந்தத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனங்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.
வயது என்ன?: இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெற 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது ஆண்டு வருமான அளவு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது. மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப் பகுதிகள், கைவிடப்பட்ட, கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், 35 வயதைத் தாண்டிய திருமணம் ஆகாத பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. அவற்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். கோட்ட அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
சென்னை போன்ற மிகப்பெரிய மாநகராட்சிகள், நகராட்சிகளில் விண்ணப்பங்களை விநியோகிக்கக் கூடுதலாக கவுன்ட்டர்கள் திறக்கப்படும். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்படும்.

விண்ணப்பங்களை வரும் 22-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப். 5 கடைசி நாளாகும். மாவட்ட அளவிலான கள ஆய்வுப் பணிகள் பிப்.15-க்குள் முடிக்கப்படும்.
தேர்வு செய்யக் குழு:பயனாளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட அளவில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, கிராப்புறம் மற்றும் நகர்ப்புறம் என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்களுக்கும் மாவட்ட ஆட்சியரே தலைவராக இருப்பார்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் பயனாளிகளைத் தேர்வு செய்ய தனியாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை மாநகராட்சி ஆணையாளர் தலைவராக இருப்பார். துணை ஆணையாளர் (கல்வி) உறுப்பினர் செயலாளராகச் செயல்படுவார். வாகனத்துக்கான மானியமானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும் என்று வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன ஆவணங்கள்?: இருசக்கர வாகனத்துக்கான மானியம் பெறுவோர், சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அதன்படி, வயதுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்று), ஓட்டுநர் உரிமம், வருமானச் சான்றிதழ் (வேலை அளிப்பவரிடம் இருந்து பெற வேண்டும்), வேலையின் தன்மை குறித்த சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விக்கான சான்றிதழ் (எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்), கடவுச் சீட்டு அளவு புகைப்படம், ஜாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பினராக இருந்தால்) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பொன்னான காலம்!

By இடைமருதூர் கி. மஞ்சுளா | Published on : 20th January 2018 01:31 AM

'எனக்கு ரொம்ப 'போர்' அடிக்கிறது' என்று கூறுபவர்கள் ஒன்று, வாசிப்பில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும், அல்லது முயற்சி செய்யவும், கடுமையாக உழைக்கவும் தயாராக இல்லாதவர்களாக இருக்க வேண்டும். இப்படிப் பட்டவர்களுத்தான் 'போர்' அடிக்கும்.உழைக்க வேண்டும், சாதிக்க வேண்டும், லட்சியத்தை எட்ட வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர் எப்போதும் ஏதாவது ஒரு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டே இருப்பர். படிப்பார்வம் உள்ளவர்களுக்கு 'போர்' அடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை!
   'போர்' அடிக்கிறது என்றால், எதிலும் மனம் ஈடுபாடு கொள்ளாமல், எந்த வேலையும் செய்ய விருப்பமில்லாமல் இருக்கும்போதுதான் இந்தச் சொல் வெளிப்படும். நம்மை ஏதாவது ஒரு பணியில் எப்போதும் ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். 'ஓடிக் கொண்டிருப்பது கடிகாரம் மட்டுமல்ல உன் வாழ்க்கையும்தான்' என்று நம் வாழ்வை துரிதப்படுத்தினார் சுவாமி விவேகானந்தர். மகாகவி பாரதியோ, 'கடிகாரம் ஓடும் முன் ஓடு' என்றார்.

வெற்றியாளர், சாதனையாளர் போன்றோரின் வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்த்தோமானால், அவர்கள் அனைவருமே கடின உழைப்பாளியாக, ஆர்வம் உள்ளவர்களாக, தொடர் முயற்சி உள்ளவர்களாக, ஒரு நொடிப் பொழுதைக்கூட வீணடிக்காதவர்களாகப் பலருக்கும் பயன் தரக்கூடிய பல நல்ல-சிறந்த செயல்களைச் செய்பவர்களாக இருந்திருக்கின்றனர்.
ஆனால், இன்றைக்கு இளைஞர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை செல்லிடப்பேசியிலும், கணினியிலும், வீண் அரட்டையிலும், கட்செவி அஞ்சலில் தேவையில்லாத காணொளிக் காட்சிகளை அனுப்புவதிலும், பகிர்வதிலும், முகநூலில் பிறர் மனத்தைப் புண்படுத்தக்கூடிய பட வடிவமைப்பிலும் ஈடுபட்டு, தங்கள் வாழ்நாளை வீணே கழிக்கின்றனர்.

இப்படிப்பட்டவர்கள் தங்களது நேரத்தை உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல், பிறருக்கும் பயன்படாமல், 'போர் அடிக்கிறது' என்ற கூறி வருகின்றனர். இந்தச் சொற்களை இப்போதெல்லாம் சிறுவர்கள்கூட கூறத்தொடங்கிவிட்டனர்! இவர்களுக்காகத்தான் 'காலம் பொன் போன்றது' என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர். காலத்தை மதித்து, உழைத்தவர்களே உயர்ந்திருக்கின்றனர்; வெற்றி பெற்றிருக்கிறார்கள்; சாதித்திருக்கிறார்கள்.

போர் அடிக்கிறது என்று கூறுபவர்கள், நினைப்பவர்கள், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இது அறிவியல் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சி காணும் காலம். இன்றைக்கு இணையதளத்தைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லோருக்கும் ஓரளவு கணினி பயிற்சியும், இணையதளப் பயிற்சியும் இருக்கிறது. பெரியவர்களைவிட சிறுவர்களே இதையெல்லாம் விரைவாகக் கற்றுத் தேர்ந்து வருகின்றனர்.

இணையதளத்தில் ஏதாவது ஒரு சொல்லையோ இல்லை பாடலையோ, ஒரு தகவலையோ தட்டச்சு செய்தால் நூலகத்துக்குப் போகாமலேயே இருந்த இடத்திலேயே தகவல் கிடைக்கிறது. இப்படி நாம் தேடும் எந்தவொன்றையும் நமக்கு உடனே பயன்படும்படி பலர் தரவுகளைத் தொகுத்திருப்பதால்தான் நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே கதை, கட்டுரை, சிறுகதை, நாவல், ஆன்மிகம், ஜோதிடம், விளையாட்டு, உலகச் செய்திகள், திரைச் செய்திகள், பாடல்கள், தோத்திரங்கள் எனப் பலவற்றைப் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது; உடனுக்குடன் படியெடுக்கவும் முடிகிறது.

அதிலும், 'பிளாக்' என்று ஆங்கிலத்தில் கூறப்படும் வலைப்பூ, தனிநபர் பதிவேற்றம் செய்வதற்குரியது. தனிநபரால் தொடங்கப்பட்ட இத்தகைய வலைப்பூக்களில்தான் ஆழமான, அற்புதமான, ஆழங்காற்பட்ட வரலாற்றுத் தகவல்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள் பலவும் கொட்டிக் கிடக்கின்றன. இது முகநூல் அக்கப்போர் ரகம் அல்ல.

ஒரு வலைப்பூவில் ஆழமான கட்டுரைகள், அற்புதமான தகவல்கள், மிகச்சிறந்த ஆய்வுக் கட்டுரைகள், புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், மிகச்சிறந்த சொற்பொழிவுகள், வெளியே தெரியாத பல வரலாற்று உண்மைகள் என்று கொட்டிக் கிடந்ததைப் பார்த்துவிட்டு, இந்த வலைப்பூவுக்குச் சொந்தக்காரர் யார் என்று அவர் விவரக் குறிப்பைப் பார்த்து வியந்து போனேன்.

அவர் ஒரு பள்ளி மாணவி. பள்ளியில் படித்துக்கொண்டே, தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தை வீணாக்காமல், கணினியை நல்வழியில் பயன்படுத்தி, பலருக்கும் பயன்படக்கூடியவற்றை தனது வலைப்பூவில் பதிவேற்றம் செய்திருக்கிறார் என்றால் அவரை எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?
ஓர் ஆய்வுக்குத் தேவையான அனைத்தையும் நூலகம் செல்லாமலேயே, இருந்த இடத்திலிருந்தே கணினி மூலமாகப் பெறும் வாய்ப்பு இந்த வலைப்பூவில் இருக்கிறது. இணையத்தில் உங்களுக்கான பிரத்யேக வலைப்பூ தொடங்குவது மிகவும் எளிது.

இப்படித் தொடங்கும் தனி நபர் வலைப்பூவில் சமுதாயத்திற்குப் பயனுள்ள பலவகையான தகவல்களைத் தொகுத்துப் பதிவேற்றம் செய்யலாம்.
'போர் அடிக்கிறது' என்று கூறுபவர்கள் இப்படியாரு வலைப்பூவைத் தொடங்கி, அதில் படித்த, பிடித்த கதை, கவிதை, ஹைக்கூ, கட்டுரை, ஆன்மிகச் செய்திகள், திரைச்செய்திகள், விளையாட்டு, வரலாற்றுப் பதிவுகள், கல்வெட்டுச் செய்திகள் எனப் பலவற்றையும் பதிவேற்றம் செய்யலாம். மேலும், நேரம் கிடைக்கும்போது ('போர்' அடிக்கும்போது) நூலகம் சென்று அரிய பல நூல்கள் பற்றிய தகவல்களைத் தரலாம். இவை அடுத்து வரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவர்கள் நேரமும் 'போர்' அடிக்காமல் பயனுள்ளதாகக் கழியும்.

பிறகு உங்கள் குடும்பமும், உங்கள் நட்பு வட்டமும், சமூகமும் உங்களை வியந்து நோக்கும். அதுமட்டுமல்ல, வலைப்பூ பதிவின் மூலம் நீங்கள் தலைசிறந்த பதிப்பாளராகவும், எழுத்தாளராகவும் தன்னம்பிக்கையோடு வலம் வர முடியும். திறமைகளை வளர்த்துக் கொள்ள காலம் நேரம் ஏது? முதலில் ஆர்வம், அதையடுத்து இடைவிடாத முயற்சி, இறுதியாகக் கடின உழைப்பு. இந்த மூன்றும்தான் வெற்றிக்கான தாரக மந்திரம்.

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...