Saturday, January 20, 2018

ஜெயலலிதா மரணம்... அதென்ன கிளினிக்கல் டெத்... பயாலஜிக்கல் டெத்...

இரா.செந்தில் குமார்

“டிசம்பர் நான்காம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்” என்று, சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திடீரென, தான் பேசியதை மறுத்த திவாகரன், “மருத்துவத்துறையில் கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத் என இரண்டு வகை உண்டு. டிசம்பர் 4 - ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அது கிளினிக்கல் டெத். கருவிகள் உதவியோடு பயாலஜிக்கல் டெத் ஆகிவிடாமல் காப்பதற்காக மருத்துவர்கள் முயற்சி செய்தனர். அப்போலோ மருத்துவர்களிடமிருந்துதான் இதைத் தெரிந்து கொண்டேன். கிளினிக்கல் டெத் ஆனவர்கள் 24 மணி நேரத்தில் பயாலஜிக்கல் டெத் ஆகி விடுவார்கள். அதைத் தடுக்க முடியாது. அதனால், டிசம்பர் 5 - ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் மருத்துவர்கள் வந்து ஜெயலலிதாவின் மரணத்தை உறுதி செய்தார்கள்." என்று கூறியுள்ளார்.



டிசம்பர் நான்காம் தேதியே ஜெயலலிதாவுக்கு இதயத்துடிப்பு நின்று போய்விட்டது. இதயத்தின் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்காக சிகிச்சைகள் (Cardiopulmonary resuscitation-CPR) மேற்கொள்ளப்பட்டன. அதனால் எந்தப் பலனும் இல்லாமல் போகவே, எக்மோ (ECMO) கருவியுடன் ரத்த நாளங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன. 24 மணி நேரத்துக்கு அதிகமாக முயற்சி செய்தும் எந்தப் பலனும் இல்லாமல் போகவே டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் இறந்து விட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

அதென்ன கிளினிக்கல் டெத்..? பயாலஜிக்கல் டெத்..? பொதுநல மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.

“கிளினிக்கல் டெத் என்று தனியாக ஒன்று கிடையாது. ‘கிளினிக்கல் டெத்’ என்றாலே அது மரணத்தைத்தான் குறிக்கும். அதற்குப் பிறகு எந்த முயற்சி எடுத்தும் பயனில்லை. அதன்படி பார்த்தால் ஜெயலலிதாக நான்காம் தேதியே இறந்திருக்கக் கூடும். அதன் பிறகு ஸ்பைக் ஜெனரேட்டர் போன்ற கருவிகளால் செய்த முயற்சிகள் என்பது பாதுகாப்பு கருதி, செய்தியைத் தாமதப்படுத்துவதற்காக இருந்திருக்கலாம்” என்றார்.

இறுதியாக ஜெயலலிதா மரணத்தை நரம்பியல் மருத்துவர்கள் வந்து பரிசோத்து அறிவித்ததாக திவாகரன் தெரிவித்திருந்தார்.



ஜெயலலிதா மூளைச்சாவடைந்திருந்தாரா?

இதுகுறித்து நரம்பியல் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம் "மூளையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் நின்று விடுவதுதான் மூளைச்சாவு. மூளைச்சாவடைந்த ஒருவர் மீண்டு வரவே முடியாது. அவரின் மரணம் உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால், இதயத் துடிப்பு இருக்கும். உடலில் உள்ள பல உறுப்புக்களின் செயல்பாடுகள் இருக்கும்.

மூளைச்சாவடைந்த ஒருவர் உண்மையிலேயே ளைச்சாவடைந்திருக்கிறார் இனிமேல் அவரால் மீண்டு வர முடியாது என்பதையும், நரம்பியல் மருத்துவர்கள் பரிசோதித்துதான் முடிவு செய்ய வேண்டும்.

மூளைச்சாவடைந்த ஒருவருக்கு ஆப்னியா பரிசோதனை செய்யப்படும். செயற்கை சுவாசம் பொருத்தியிருக்கும்போது அவரின் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடுகளின் அளவுகள் கணக்கிடப்படும். பின்னர் செயற்கை சுவாசத்தை நிறுத்தி அதே சோதனைகள் செய்யப்படும். மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக செயற்கை சுவாசக் கருவிகள் இல்லாமல் சுவாசிக்க முடிகிறதா என்று பரிசோதிக்கப்படும். அப்போது மூச்சு விட முடியவில்லை என்றால் உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்படும்.

சுத்தமாக மூச்சு விட முடியாத நிலையில், மீண்டும் ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடின் அளவு பரிசோதிக்கப்படும். அப்போது பாசிட்டிவ் என்று வந்தால் மூளைச்சாவு உறுதி செய்யப்படும். ஆனால் அறிவிக்கப்படாது.

இதே சோதனை மீண்டும் ஆறுமணி நேரம் கழித்து செய்யப்படும். முதலில் பரிசோதனை செய்த மருத்துவர் குழு இல்லாமல் வேறொரு குழு பரிசோதிக்க வேண்டும். அவர்கள் ஏற்கெனவே சிகிச்சையளித்து வந்த மருத்துவர்களாகவும் இருக்கக் கூடாது. அப்போதும் பாசிட்டிவ் என்று வந்தால் மூளைச்சாவடைந்தது உறுதி செய்யப்படும்.



மூளைச்சாவடைந்த ஒருவர் மரணமடைந்து விட்டார் என்பதையும் நரம்பியல் மருத்துவர்கள்தாம் உறுதி செய்யவேண்டும். ஜெயலலிதாவை நரம்பியல் மருத்துவர்கள் பரிசோதித்து அறிவித்திருக்கிறார்கள் என்றால் அவர் மூளைச்சாவடைந்திருக்கக் கூடும்.

மருத்துவ விதிகளில் கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத் என்று ஒன்றும் கிடையாது, பிரெயின் டெத், டெத் ஆகிய இரண்டுதான் இருக்கிறது." என்றார் அவர்.

  ஜெயலலிதா மரணம் குறித்து மர்மங்கள் எப்போது விலகுமோ தெரியவில்லை!
இப்படி அநியாயமா ஏத்துறது எங்களோட ரத்தத்தை உறிஞ்சுற மாதிரி இருக்கு' - கொந்தளித்த கூலித் தொழிலாளிகள்

பாலஜோதி.ரா



தமிழக அரசு நேற்று பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி, உடனடியாக நள்ளிரவு முதல் அதை அமலுக்குக் கொண்டு வந்தது. காலையில் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் கூடுதல் கட்டண வித்தியாசத்தை அறிந்து அதிர்ந்துப்போனார்கள். மலைக்கும் மடுவுக்கும் உள்ள உயர்வாக அது மக்களுக்குத் தோன்றியதால், தமிழ்நாடு முழுக்க தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். பேருந்து நடத்துநர்களுக்கும் மக்களுக்கும் நடக்கும் வாக்குவாதம் மாநிலத்தின் மிக முக்கிய பேருந்து நிலையங்களில் தற்போது நடந்து வருகிறது. விலை உயர்வு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், இந்தக் கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டிருப்பதால், மக்களின் மனநிலை கொதிநிலையில் இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேருந்து நிலையத்தில், இன்று காலை தனியார் பேருந்துகள் மக்களால் சிறைபிடிக்கப்பட்டன. பயணிகளுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையே, நடந்த வாக்குவாதம் உச்சத்தைத் தொட்டது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில், கடும் வசவுகளால் பயணிகள் அரசாங்கத்தை வறுத்தெடுத்தனர். "கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா. இப்படி அநியாயமா ஏத்துறது எங்களோட ரத்தத்தை உறிஞ்சுற மாதிரி இருக்கு. சம்பாதிக்கிற பணத்துல பாதியைப் பஸ்காரனுக்கே கொடுத்துட்டா, நாங்க எப்படி குடும்பம், குழந்தைக்குட்டிகளைப் பார்க்கிறது. சாகடிக்கிறாங்களேங்க. பஸ் கட்டணம் ஏறிடுச்சு. சம்பளத்தை ஏற்றிக்கொடுங்கனு நாங்க வேலை செய்யிற முதலாளிகளுக்கிட்ட கேட்க முடியுமா" என்று ஆத்திரம் பொங்கும் குரலில் கொதிக்கிறார்கள் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள்.

"அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதோடு தனியாருக்கும் இந்தக் கட்டண உயர்வை தாரை வார்த்திருக்கறாங்களே ஏன். இது மக்களுக்கான அரசாங்கமா, தனியார் முதலாளிகளுக்கான அரசாங்கமா. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைக் கூட்டிக் கொடுக்கணும்னா அரசாங்கமே செய்யணும். மக்களுடைய பாக்கெட்டிலிருந்து பிடுங்கித் தரக்கூடாது" என்று அன்றாடம் அலுவலகத்துக்குச் சென்று வருகிறவர்கள் புலம்புகிறார்கள். "மின்வாரியம், போக்குவரத்து, பால்உற்பத்தி இந்தத் துறைகள் லாபத்தில் இயங்குவதாக தமிழ்நாட்டை ஆண்ட எந்த அரசும் இதுவரை சொன்னதே இல்லை. கட்டணத்தை உயர்த்தணும்னு முடிவு பண்ணும்போதெல்லாம், 'நஷ்டத்தில் இயங்குகிறது' என்று ஆட்சியாளர்கள் சொல்வதே வழக்கமாக இருக்கிறது. அடுத்து வர்ற 23-ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யப்போகிறார்கள். அவர்களும் ஊதிய உயர்வைத்தான் முன் நிறுத்துகிறார்கள். என்ன நடக்கும். பேருந்துக் கட்டண உயர்வைத் தொடர்ந்து அடுத்ததாக, மின்கட்டண உயர்வு இருக்கும். 'மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதால், இந்த விலை உயர்வை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் மின்கட்டணம் {குறைவுதான்'னு சொல்லுவாங்க" என்ற மக்களின் கொதிப்பையும் பல்வேறு இடங்களில் பார்க்க முடிந்தது.
  இந்நிலையில், மக்களின் எதிர்ப்பைக் காரணம் காட்டி, இன்னும் இரண்டு தினங்களில் உயர்த்தப்பட்ட கட்டணத்திலிருந்து ஓரளவு குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கட்ட வண்டி... கட்ட வண்டி... காப்பாத்தும் நல்ல வண்டி!

''பாரப்பா பழனியப்பா... பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா.... உள்ளம்தான் சிறியதப்பா..."

இப்படி கேலி செய்தவாறு, மாநகரச் சாலைகளில் தடக்... தடக்... சத்தத்துடனும், ஜல்... ஜல்... சலங்கை ஒலியுடனும், ஒருகாலத்தில் கலக்கிக் கொண்டிருந்தது நம் நாட்டின் பாரம்பரியப் போக்குவரத்து வாகனமான மாட்டு வண்டி (கட்டை வண்டி). இன்றோ... நகர சாலைகளில் இதை ஓட்டிச் சென்றால், மக்கள் கேலியாகத்தான் பார்க்கிறார்கள். பேருந்துகளை டிரைவர்கள் மெதுவாக ஓட்டினாலே, ‘என்ன கட்டவண்டியா ஓட்டுறே?’ என்று சிடுசிடுக்கும் மக்களுக்கு நடுவில், நிஜ கட்ட வண்டிகள் வந்தால்... அவ்வளவுதான். வண்டியோட்டியை வறுத்தே தின்றுவிடுவார்கள்.



ஆனால், மனிதனின் முதல் வாகனமே... இந்தக் கட்ட வண்டிதான்! கால ஓட்டத்தில் எவ்வளவோ விஷயங்கள் மாறினாலும் இதன் ஆரம்ப வடிவம் மட்டும் இன்று வரை மாறவில்லை. முதன்முதலில் விவசாயப் பணிகளுக்காகத்தான் இந்த மாட்டு வண்டிகள் புழக்கத்துக்கு வந்தன. ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்களும் சரி, நிலம் இல்லாதவர்களும் சரி, மாட்டுவண்டி வைத்திருப்பதை கௌரவமாக நினைத்த காலம் உண்டு.

சொல்லப்போனால், இன்று வீட்டுக்கு வீடு கார் நிற்பதை கௌரவமாக நினைக்கிறார்கள் அல்லவா! சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை... மாட்டு வண்டி வைத்திருப்பதுதான் கௌரவமாக இருந்தது. அதிலும் கூண்டு வண்டி என்று சொல்லப்படும் வண்டிகளை வைத்திருப்பவர்கள்... இன்றைக்கு கார் வைத்திருப்பதற்கு சமமாக மதிக்கப்பட்டனர்.

குடும்பத்தோடு கோயில்களுக்குச் செல்வதும், விசேஷங்களுக்கு செல்வதும் இதுபோன்ற மாட்டு வண்டியில்தான். கூண்டு வண்டி இல்லாதவர்கள், வண்டியின் மீது பச்சை தென்னை ஓலையை கூண்டு போல கட்டி, அடியில் வைக்கோலை பரப்பி, அதன்மீதும் தென்னை ஓலையைப் பரப்பிவிடுவார்கள். முதலில் பெண்கள், குழந்தைகளை ஏற்றி அமர வைத்துவிட்டு, ஆண்கள் முன்புறமாக நின்றுகொண்டு போவார்கள். இந்தப் பயணத்தின் சுகமே அலாதிதான். இன்று டெல்லிக்கும், சென்னைக்கும் ஃப்ளைட்டில் போய் வந்தாலும் கிடைக்காத சுகம்.



விவசாயிகளுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அவர்களின் சொந்த வேலைகளுக்குக் கைகொடுப்பதோடு, வருமானத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தன இந்தக் கட்டை வண்டிகள். இன்றைக்கு இருக்கும் அத்தனைச் சாலைகளும், அன்று மாட்டுவண்டிகள் போட்டுக் கொடுத்தவைதான். அந்த மண் சாலையின் மீதுதான் ஜல்லிக் கற்களைக் கொட்டி, தாரை ஊற்றி பளபள சாலையாக மாற்றி, கார்களிலும் பைக்குகளிலும் பறக்கிறோம். ஒவ்வொரு பகுதிக்குமே, அந்தப் பகுதியின் பாரம்பரியத்துக்கேற்ற பிரத்யேக வண்டி, வாகனங்கள உண்டு. தமிழ்நாட்டில் மாடுகள், குதிரைகள் என்றால், ராஜஸ்தான் பகுதியில் ஒட்டகங்கள், பனிப் பிரதேசங்களில் கரடிகள் என்று பழக்கப்படுத்தி வண்டிகளில் பயன்படுத்துவார்கள். தமிழகத்தில் மரத்தால் செய்யப்பட்ட கட்டை வண்டிகளையே பயன்படுத்தி வந்தனர். 70, 80 ஆம் ஆண்டுகளில் டயர்களுடன் இணைக்கப்பட்ட இரும்பு வண்டிகள் புழக்கத்துக்கு வந்தன.

அரசு இந்த வண்டிகளை இலவசமாக கொடுக்கவே கட்டை வண்டிகளின் அடையாளம் மாறத் தொடங்கியது. இருப்பினும் சென்னையின் பாரீஸ் மற்றும் பிற மாவட்டங்களின் காய்கறி சந்தைகளில் இன்றைக்கும் பழமை மாறாத கட்டை வண்டிகள் வலம் வருவது ஆச்சர்யமே! இந்த வண்டிகள், இன்றைக்கும் பல குடும்பங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கின்றன!


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், இதைப் பற்றி பெருமையோடு பேசினார்.

"பதினோரு வயசிலிருந்தே வண்டி ஓட்டிட்டு வர்றேன். ஆரம்பத்துல கட்ட வண்டியை ஓட்டிட்டு இருந்தேன். அப்புறம் டயர் வண்டி கைக்கு வந்துச்சு. எருவு ஓட்டுறது, அறுவடை செய்ற நெல் மூட்டைகளை கொண்டு வர்றதுனு பல வேலைகள் கிடைக்கும். வண்டி வேலைகள் கிடைக்காத சமயங்கள்ல ஏர் ஓட்டுறது, மஞ்சு ஓட்டுறதுனு மத்த வேலைகளயும் செய்வேன். இந்த வண்டிக்கு பெட்ரோல், டீசல், கேஸ், இன்ஜின் எல்லாம் இந்த செவுலும், பிள்ளையும்தான் (இவரிடம் இருக்கும் மாடுகளின் செல்லப்பெயர்தான் இவை). நுகத்தடியைக் கழுத்து மேல வெச்சுட்டா... சும்மா, ஜனங்... ஜனங்னு கிளம்பிடும். பம்பரமா வேலை செய்யும்.

தினமும் பச்சைப் புல்லை போட்டுடணும். தவிடு தண்ணிய காட்டிடணும். மத்தபடி எவ்ளோ வேலைனாலும் வாங்கிக்கிலாம். என் மாடுங்க ரெண்டும் தங்கமான மாடுங்க. திருவண்ணாமலை பக்கத்துல இருக்கிற செங்கத்திலிருந்து ஜோடி 87 ஆயிரம் ரூபாய்னு வாங்கிட்டு வந்தேன். ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் வரை சம்பாதிச்சு கொடுக்குதுங்க. ஒரு குடும்பத்துக்கு தேவையான வருமானத்தை இந்த மாடுங்க சம்பாதிச்சு கொடுக்குதுங்க" என்று சொல்லி பெருமிதப் பார்வையை வீசின ரமேஷ்,"ஊருக்கு ஊரு டிராக்டர் வந்துட்டாலும், இன்னும் சில வேலைகளுக்கு மாட்டுவண்டிங்கதான் கைகொடுக்குதுங்க. முன்ன ஊருக்கு 10, 20 வண்டிகள் நின்னுச்சு. இப்ப ஒண்ணு ரெண்டு வண்டிகள் ஓடிட்டு இருக்கு" என்றபடியே டுர் டுர்... எனச் சொல்லி தன் மாடுகளை விரட்ட, வண்டி வேகமெடுத்தது!

த. ஜெயகுமார்

படங்கள்: ஆர். வருண்பிரசாத்

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!


மாட்டுவண்டியில் வந்த மாப்பிள்ளை
இருமனம் இணையும் திருமணங்கள் சமீப நாள்களாகப் பெரும் பொருள்செலவில் ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன. நாகரிகம் மெதுவாக நடைபயின்றுக்கொண்டிருந்த காலத்தில், காலையில் வயலுக்குப் போய்விட்டு, மாலை வீடு திரும்பிய பிறகு உற்றார், உறவினர்கள் கூடி நின்று வாழ்த்த இரவில்தான் திருமணங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், நாகரிகம் நான்கு கால் பாய்ச்சலில் அசுர வேகத்தில் ஓடத் தொடங்கிய பிறகு, காலை வேளையில் திருமணங்களை நடத்தி வருகிறோம். திருமணங்களில் வகைவகையான சாப்பாடு, மேள தாளம் என எந்தளவுக்கு ஆடம்பரம் அதிகமாக இருக்கிறதோ அதுதான் சிறந்த திருமணம் என்ற சிந்தனை சமூகத்தில் பரவிக்கிடக்கிறது. ஆனால், உண்மையில் திருமணங்களுக்கு ஆடம்பரம் தேவையில்லை. அன்பு நிறைந்த வாழ்த்துகள் மட்டுமே மணமக்களைச் சிறப்பாக வாழவைக்கும். இது தொடர்பாக நாம் பேசினாலும், நம்ம வீட்டு கல்யாணம் என்று வரும்போது, நாமும் தேசிய நீரோடையில் கலந்து விடுகிறோம். ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும் சங்கர் கணேஷ், தனது திருமணத்தைத் தமிழ் முறைப்படி நடத்தியதும், அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம் வந்து அசத்தியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள பழைய வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரின் மகன் சங்கர் கணேஷ், சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பாக மாலத்தீவில் ஆசிரியராக வேலைபார்த்த அனுபவமும் உண்டு. இவருக்கு தமிழ் பண்பாடு மீதும் கலாசாரம் மீதும் அதிக பற்று உண்டு. இந்நிலையில் இவரின் உறவுக்கார பெண், கலைச்செல்விக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது. தனது திருமணத்தில் வீண் ஆடம்பரங்களை தவிர்க்க நினைத்த சங்கர் கணேஷ், மணப்பெண்ணிடமும் உறவினர்களிடம் எடுத்துச்சொல்லி சம்மதம் வாங்கிக்கொண்டார். இந்நிலையில் நேற்று காலை வத்தலக்குண்டு பெருமாள் கோயிலில் இவர்களின் திருமணம் நடந்தது. வரவேற்பு வத்தலக்குண்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலில் திருமணம் முடிந்ததும், தன் துணைவியைத் தூக்கி, அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் அமர வைத்தவர், தானும் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்தார். உடன் மாப்பிள்ளை, பெண் தோழர்களும் அமர்ந்துகொண்டனர். கலர் கலர் காகிதங்கள் சுற்றி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கியது. மாட்டு வண்டியில் புதுமண ஜோடிகள் வருவதை அறிந்து பொதுமக்கள் ஆங்காங்கே கூடி நின்று ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
மாட்டுவண்டியில் வந்த மாப்பிள்ளை
மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த புதுமணத் தம்பதியினர் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வாழ்த்து சொன்ன நண்பர்கள், உறவினர்களுக்கு மணமகன் மரக்கன்றுகளைப் பரிசாக அளித்தார். மேடையில் திருவள்ளுவர், அம்பேத்கர், பாரதியார் படங்கள் இடம் பெற்றிருந்தன. இது வத்தலக்குண்டு பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மாட்டுவண்டி ஊர்வலம் பற்றி புதுமாப்பிள்ளை சங்கர் கணேஷிடம் கேட்டபோது, ‘‘எனக்கு தமிழ் கலாசாரம் மீது தீராத காதல் உண்டு. திருமணம் என்ற பெயரில் ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதை அடுத்தவருக்கு சொல்வதற்கு முன்பாக எனது திருமணத்தை அப்படி நடத்த வேண்டும் என முடிவு செய்தேன். கிராமத்து முறைப்படி மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்ததால், மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, இனி நடக்கும் திருமணங்கள் நமது தமிழ் முறைப்படி, ஆடம்பரம் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதுதான் இதன் மூலம் நான் சொல்ல வந்த செய்தி’’ என்றார். ஆடம்பரமாக நடக்கும் திருமணங்களைவிட, அலங்காரமாக நடந்த இந்தத் திருமணம் அனைவரையும் கவர்ந்தது.
+2 முடித்தவர்களுக்கு ஏர்போர்ட்டில் கொட்டிக் கிடக்கிறது வேலைவாய்ப்பு!

. "எதிர்த்த வீட்டுப் பொண்ணு எப்பவும் புஸ்தகமும் கையுமாவே இருக்கா, என்னைக்காவது ஒருநாள் காலைல வெள்ளனா எழுந்து படிக்கிறியா நீ?" எனப் பெற்றோர்கள் ​ஒருபுறம்​, ​"இதுதா​ன்​ வாழ்க்கையில் முதல் படி. இதைக் கோட்டை விட்டுட்டேன்னா அவ்வளவுதான்!", என ஆசிரியர்கள்​ ​இன்னொருபுறம்;​ இருவருக்குமிடையில் விழி பிதுங்கி கதிகலங்​குகிறது​ ​+2 ​தேர்வு எழுதவிருக்கும் ​மாணவர்களின் நிலைமை!

​ இந்த​ அறிவுரை அட்ராசிட்டி​களுக்குக் காரணம்​, இந்தப் பரிட்சையில் நன்றாக மார்க் எடுத்தால்தான் கல்லூரியில் விரும்பிய கோர்ஸ் கிடைக்கும்; நல்ல கோர்ஸ் கிடைத்தால்தானே நல்ல வேலையும் கிடைக்கும்!




மனதுக்கு பிடித்த வேலை, மரியாதைக்குரிய பணியிடம், அதிக வேலைச்சுமையும் இருக்கக்கூடாது, கைநிறைய வருமானமும் கிடைக்க வேண்டும், இவையனைத்தையும் வழங்கும் படிப்பில் சேர உயர்நிலை வகுப்பில் அதிக மார்க் எடுக்கவேண்டிய அவசியமும் இருக்கக்கூடாது... இந்த ஐந்தடுக்கு நிபந்தனைகளையும் ஒரு துறை பூர்த்தி செய்கிறது, அதுதான் "விமானத் துறை" எனும் மேஜிக்கல் துறை!



விமானத் துறை என்றாலே பைலட் டிரெயினிங் மற்றும் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சிகள் பற்றித்தான் நமக்குப் பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆனால், பைலட்டுடன் இணைந்து செயல்படும் ஃப்ளைட் டிஸ்பாட்சர், விமானத்திலிருந்து தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் ரேடியோ டெலிபோனி பயிற்சிகள், பயணம் மற்றும் சுற்றுலா பற்றிய படிப்புகள், விமானம் மற்றும் விமான நிலைய மேலாண்மை பற்றிய படிப்புகள் என எண்ணற்ற பிற வாய்ப்புகளையும் இந்தத்துறை வழங்குகிறது.

எம்பிஏ ஏவியேஷன், பிபிஏ ஏவியேஷன் மற்றும் பிஎஸ்சி ஏவியேஷன் போன்ற தொழில்முறை படிப்புகள் கற்பதால் விமான நிறுவனங்களில் மட்டுமல்லாது, 5-ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் கஸ்டமர் கேர் நிறுவனங்களிலும் பணிபுரியலாம். இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள விமான சேவை நிறுவனங்களிலும் பிரபலமான 5 ஸ்டார் ஹோட்டல்களிலும், அல்லைய்ட் மக்கள் சேவை மையங்களிலும் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கிறது. மேலும், மற்ற தொழில்முறை படிப்புகளுடன் ஒப்பிடுகையில் இதற்கு ஆகும் செலவும் குறைவே!

+2 மாணவர்களுக்காக விமானத் துறைக் குறித்த கல்வி ஆலோசனை நிகழ்ச்சியை பிப்ரவரி 3ஆம் தேதி விகடன் நடத்தவுள்ளது. இதில் விமானத் துறையைச் சார்ந்த கல்வியாளர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்விக் கடன் பற்றி எடுத்துரைக்க வங்கி மேலாளர்கள், அரசுத்துறையினர் உள்ளிட்ட பல நிபுணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மாணவர்களும் பெற்றோரும் இத்துறைப் பற்றி விவரமாக அறிந்துகொள்ளவும் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும் இச்சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாமே!

இறந்த பெண்ணுக்குத் திடீர் பிரசவம்! - அடக்கம் செய்ய வந்தவர்களை அதிரவைத்த சம்பவம்

அஷ்வினி சிவலிங்கம்

தென் ஆப்பிரிக்காவில் தயிஸி என்னும் கிராமத்தில், பிணவறையில் சடலமாக வைக்கப்பட்டிருந்த பெண், குழந்தையை பிரசவித்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.



இதுகுறித்து ஆப்பிரிக்க ஊடகம் 'Dispatch live' வெளியிட்ட செய்தியில், `தென் ஆப்பிரிக்காவில் தாம்போ மாவட்டத்தில் தயிஸி என்னும் குக்கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணிப் பெண் `டோயி’ கடந்த சில நாள்கள் முன்னர் திடீரென இறந்துபோனார். 33 வயது நிரம்பிய டோயிக்கு ஏற்கெனவே ஐந்து குழந்தைகள் உள்ளன. 10 நாள்களுக்கு முன்னர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு டோயி வீட்டிலேயே இறந்துபோனார். நிறைமாத கர்ப்பிணி திடீரென இறந்துபோனது அந்தக் கிராமத்து மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இறுதிச் சடங்குக்குப் பிறகு, சடலங்களைத் அடக்கம் செய்வோரிடம் (Funeral services) டோயியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது டோயியின் சடலம் பிணவறையில் வைக்கப்பட்டது. அனைத்துச் சடங்குகளும் முடிந்த பின்னர், டோயியின் சடலத்தைப் புதைப்பதற்காகப் பிணவறை ஊழியர்கள் வெளியே எடுத்தனர். டோயியின் கால்களுக்கு இடையே பச்சிளம் குழந்தை இறந்தநிலையில் கிடந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த பிணவறை ஊழியர்கள் அதிர்ந்துபோனார்கள். இறந்த பெண் எப்படி பிரசவித்திருக்க முடியும் என்று குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். குழந்தை ஆணா பெண்ணா என்பதைக்கூட அவர்கள் கவனிக்கவில்லை. டோயியின் கிராமத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. டோயியின் தாய், “இது தீய சக்தியின் வேலைதான். என் மகள் நிறைமாத கர்ப்பிணி. திடீரென இறந்துபோனாள். அதற்கும் தீய சக்திதான் காரணம். இரண்டு சடலத்தையும் எரித்துவிடுங்கள்” என்று கதறினார். இத்தகவல் கிராமம் முழுவதும் பரவியது. சடலம் எப்படி பிரசவிக்கும். இது கண்டிப்பாக அமானுஷ்யத்தின் வேலைதான்” என்று கிராம மக்களும் நம்பினார்கள்.

சடலங்களைத் அடக்கம் செய்யும் அமைப்பு இந்தச் சம்பவம் பற்றி மருத்துவர்களிடம் கேட்டனர். ‘ஆப்பிரிக்காவில் இதுவரை இப்படி நடந்ததாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இறந்த உடலில் நுண்ணியிரிகளின் செயல்பாட்டால் இது நடந்திருக்கலாம். அப்படியில்லை என்றால் இறந்த பின்பு நடக்கும் தசை தளர்வால் குழந்தை வெளியே தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், இது இயற்கையான ஒன்றுதான். அமானுஷ்யம் என்று ஏதுமில்லை’ என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் டோயியின் சடலம், குழந்தையின் சடலத்துடன் சேர்த்து சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்கப்பட்டது.

Jharkhand man aged 100 says he has to eat mud for survival

THE ASIAN AGE 
 
Published : Jan 19, 2018, 3:40 pm IST 
 
It’s quite normal for people to have a craving for specific foods and different people across the world have different preferences. But stories about bizarre and much more severe fixations have been reported in the past few years that can come across as shocking.

In a similar shocking account, a man from Jharkhand is claiming that he needs to feed on mud for survival. The 100-year-old man started eating mud as a child and it soon developed into a daily activity for him.

Karu Paswan said that it was poverty that drove him to start consuming mud when he was 11-years-old. His family members did try to stop him, but Karu didn’t listen to anyone as eating mud became an addiction.

But no matter how revolting and weird his food habits may seem, Karu is still healthy at the age of 100. His habit may be a result of pica syndrome which causes people to gorge on different inedible things like hair and chalk.

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...