Tuesday, January 23, 2018

ஜூலை 8ல், 'நெட்' தேர்வு : யு.ஜி.சி., விதிகள் அறிவிப்பு

Added : ஜன 23, 2018 02:15

உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஆண்டுக்கு ஒரு முறை, நெட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்த தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. நடப்பாண்டில், நாடு முழுவதும், ஜூலை, 8ல், நெட் தேர்வு நடக்கும் என, யு.ஜி.சி., நேற்று அறிவித்தது. இந்த ஆண்டுக்கான தேர்வு விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் தாளில், 50 மற்றும் இரண்டாம் தாளில், 100 வினாக்கள் இடம் பெற உள்ளன. முதல் தாளில் பொதுவான வினாக்களும், இரண்டாம் தாளில், தேர்வர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்தும், வினாக்கள் இடம் பெறுகின்றன.

தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, பிப்.,1ல், https://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச், 6 முதல், ஏப்., 25 வரை, 'ஆன்லைனில்' தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என, யு.ஜி.சி.,அறிவித்துள்ளது.

வயது வரம்பில் சலுகை : இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற, நெட் தேர்வு எழுத வேண்டும். தேர்வு விதிகளின்படி, 28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, நெட் தேர்வில் பங்கேற்க முடியும். இந்த வயது உச்சவரம்பு, இந்த ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வரும், ஜூலையில் நடக்கும் தேர்வில், 30 வயது வரை உள்ளவர்கள், நெட் தேர்வை எழுதலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
நீட்' தேர்வு எப்போது? : சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கை 'லீக்'

Added : ஜன 23, 2018 02:07

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, மே, 6ல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாவிட்டாலும், அதன் சுற்றறிக்கை, 'லீக்' ஆகியுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, மே மாதம் நடக்க உள்ள தேர்வு குறித்து, இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகவில்லை.

இந்நிலையில், மே, 6ல், நீட் தேர்வு நடக்கும் என, செய்திகள் வெளியாகின. https://medical.aglasem.com என்ற தனியார் இணையதளத்தில், இந்த செய்தி இடம் பெற்றது. இதை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளதாக, 'டிவி'க்களில், நேற்று செய்தி வெளியானது. நீட் தேர்வு குழுவின் இணை செயலர், ஸன்யம் பரத்வாஜ் கையெழுத்திட்ட சுற்றறிக்கையின், ஒரு பகுதி மட்டும், தனியார் இணையதளத்தில் வெளியானது. அதில், நீட் தேர்வை, மே, 6ல் நடத்த ஏற்பாடுகள் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. ஆனால், சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தேதி அறிவிக்கப்படவில்லை.

- நமது நிருபர் -
ஷேர் ஆட்டோ கட்டணம் குறைப்பு : சேலத்தில் மாற்றி யோசிக்கிறாங்க

Added : ஜன 23, 2018 01:11




சேலம்: தமிழகத்தில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, பயணியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தியில் உள்ள பயணியரை, தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில், சேலத்தில் ஷேர் ஆட்டோக்களின் கட்டணம், பாதியாகக்குறைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் ஷேர் ஆட்டோக்களில் ஜன., 20 வரை, குறைந்த பட்ச கட்டணம், எட்டு முதல், 10 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. இதில், பெரும்பாலான டிரைவர்கள் கட்டணமாக, 10 ரூபாய் வசூலித்துவந்தனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஐந்து ரோடு, சாரதா கல்லுாரி சாலை வழியாக, அஸ்தம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டிக்கு இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் கட்டணத்தை, உரிமையாளர்கள் குறைப்பு செய்துள்ளனர்.

இது குறித்து, ஷேர்ஆட்டோ டிரைவர்கள்கூறியதாவது: சேலம், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கொண்டப்பநாயக்கன்பட்டி வரையிலான, வழித்தடத்தில், 50 ஷேர் ஆட்டோக்களுக்கு மட்டுமே, அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், பயணியர் ஆட்டோக்கள், ேஷர் ஆட்டோவாக இயக்கப்படுகின்றன. இதை போக்குவரத்து துறை அதிகாரிகள், கண்டு கொள்வதில்லை. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், பயணியரை எங்கள் பக்கம் இழுப்பதற்காக, கட்டண குறைப்பு செய்துள்ளோம். டவுன் பஸ்சில், குறைந்த பட்ச கட்டணம், எட்டு ரூபாயாக உள்ளதால், எங்களின் ஆட்டோக்கள், ஐந்து ரூபாயில் இயக்கப்படுவதால், பயணியர் மத்தியில், ேஷர் ஆட்டோக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜன. 29 பல்கலை பட்டமளிப்பு விழா

Added : ஜன 23, 2018 00:51

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையின் 51வது பட்டமளிப்பு விழா ஜன., 29 நடக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகிக்கிறார். உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், உயர் கல்வி செயலாளர் சுனில் பாலிவல் ஆகியோர் சிறப்புரையும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா பட்டமளிப்பு உரையும் ஆற்றுகின்றனர். விழாவில் 300க்கும் மேற்பட்டோர் பி.எச்.டி., பட்டங்கள் பெறவுள்ளனர். இதுதவிர இளநிலை, முதுநிலை மற்றும் எம்.பில்., படிப்புகளில் 59 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. துணைவேந்தர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மதுரையில் ஆய்வு : ஜன., 30, 31ல் மதுரையில் தங்கும் கவர்னர் ஆய்வில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார். துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ் பொது மக்கள் கூடும் இடங்களில் துப்பரவு பணியிலும் ஈடுபடுகிறார்.

Monday, January 22, 2018

Odisha govt hikes stipend of pre and para-clinical PG students
January 17, 2018

The State Government on Tuesday hiked the stipend for doctors pursuing Pre and Para-Clinical Post Graduation courses in Government-run Medical College and Hospitals.

As per the decision, stipend has been increased to Rs 48,302 from Rs 39,950 for first year students, Rs 50,658 for second year and Rs 53,014 for third year, respectively.

“The CM has approved financial incentive of Rs 18,000 per month for doctors pursuing Pre and Para-Clinical Post Graduation courses in Govt Medical Colleges. Both In-service& Direct PG students will get incentive over & above their salary & stipend 
respectively,” said Health and Family Welfare Minister Pratap Jena in a press release.

“Incentive will encourage more students to take up Pre and Para Clinical disciplines as Anatomy, Physiology, Biochemistry, Pharmacology, FMT, Pathology, Microbiology & Community Medicine and lead to filling up of vacant posts in Government services,” the Minister added.

The State Government had earlier announced a hike in stipend of house surgeons from Rs 15,000 to Rs 20,000. Besides, the Government has decided to provide an additional monthly stipend to Rs 18,000 for post graduate students undertaking pre and para-clinical courses at State-run medical colleges.

Both in-service and post graduate doctors will be entitled for the monthly stipend which has been introduced for the first time by the Odisha Government, informed Health Minister Pratap Jena.
The State Government had earlier announced a hike in stipend of house surgeons from Rs 15,000 to Rs 20,000 on January 1.
``படையெடுக்கும் பயணிகள்... ரயில்களில் கூடுதல் கோச்! ஆசீர்வாதம் ஆச்சாரி தகவல்

MUTHUKRISHNAN S





தமிழகத்தில், பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வை அடுத்து, ரயில்களில் முன்பதிவுசெய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பிவழிகிறது. பதிவுசெய்யும் பெட்டிகளிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. சென்னையில் ஓடும் புறநகர் மின்சார ரயில்களில், கடந்த சில தினங்களாகக் கூட்டம் அதிகரித்துள்ளது. அதுபோல, கன்னியாகுமரி, கோவை, திருச்சி ரயில்கள் என நீண்ட தூர ரயில்களிலும் வழக்கத்தைவிட அதிகப் பயணிகள் பயணிக்கின்றனர். எனவே, கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு வாரிய உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி கூறினார்.

இதுதொடர்பாக ஆசீர்வாதம் ஆச்சாரி இன்று கூறுகையில், 'தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு, பொது மக்கள் ரயில் வண்டிகளை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். உயர்த்தப்பட்டுள்ள பஸ் கட்டணத்தோடு ஒப்பிடுகையில், ரயில் கட்டணம் சுமார் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை குறைவாக உள்ளது. இதன் காரணமாக, அனைத்து ரயில்களிலும் கூடுதல் புக்கிங் ஆகிவருவதால், வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை சில ரயில் வண்டிகளுக்கு 100-க்கும் மேல் சென்றுவிட்டது.

இதன் காரணமாக, எந்தெந்த ரயில் வண்டிகளில் கூடுதல் கோச்சுக்களை இணைக்க முடியும் என்று சர்வே எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளைப் பணித்துள்ளேன். இயன்றவரை ஒவ்வொரு ரயில் வண்டியிலும் (அந்தந்த வண்டியின் திறனுக்கு உட்பட்டு) கூடுதலாக ஒரு கோச்சை இணைக்க ஏற்பாடுசெய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்வாறு இணைக்கப்படும் கூடுதல் கோச் மூலம், சுமார் 70 முதல் 100 பயணிகள் கூடுதலாகப் பயணிக்கலாம்.

திருச்சி டிவிஷனைப் பொறுத்தவரை, தஞ்சாவூர் - சென்னை உழவன் எக்ஸ்பிரஸ் வண்டியில் கூடுதலாக 2 கோச்சுகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பிற ரயில் வண்டிகளில் இணைக்க 15 கூடுதல் கோச்சுகள் தேவைப்படுகின்றன. மதுரை டிவிஷனைப் பொறுத்த வரை சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வண்டியிலும் 2 கோச்சுகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு கூடுதல் கோச்சுகளை இணைக்குமாறு தென்னக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பேருந்துக் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், தமிழக மக்களின் துயர்துடைக்க மோடி அரசு எந்த நேரமும் தயாராக உள்ளது' என்று கூறினார்.
“டிக்கெட்டுக்கே 3,000 போச்சு... சம்பளம் மொத்தத்தையும் புடுங்கிருங்க!” - விகடன் சர்வேயில் கதறும் மக்கள் #VikatanSurveyResult

ஐஷ்வர்யா




தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வு சாதாரண விஷயம்தானே என்று எளிதில் கடக்கக்கூடியதாக இல்லை. அது தொடர்பாக ‘ விகடன்’ நடத்திய ஆன்லைன் சர்வேயில், பொதுமக்கள் அளித்துள்ள பதில்கள் அதனை உறுதிபடுத்துகின்றன.


அரசின் பேருந்துக் கட்டண உயர்வு முடிவு உங்களை பாதித்துள்ளதா? அப்படியென்றால் எந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பதிவு செய்யவும்.. என்ற கேள்விக்கு பொதுமக்களின் கருத்துகள் கீழ்வருமாறு,

“நான் பயணிக்கும் பேருந்தில் 8 ரூபாய் இருந்த டிக்கெட் விலை, தற்போது 15 ரூபாயாகியுள்ளது. 'கட்டண உயர்வு ஏன்' என்று அரசிடம் விளக்கம் கேட்டால், 'அண்டை மாநிலத்தைவிடக் குறைவுதானே' என்று பதில் கூறுகிறார்கள். அண்டை மாநிலத்தில் பேருந்துகளுக்குக் காப்பீடு உண்டு; டீசலுக்கு வாட் வரி இல்லை; எட்டு வருடங்களுக்கு மேல் ஒரு பேருந்தை அங்கே அவர்கள் இயக்குவதில்லை. அதை இவர்கள் இங்கே செய்வார்களா?”

“ஒவ்வொரு வார இறுதியிலும் நான் பெங்களூரிலிருந்து விழுப்புரம் பயணிக்க வேண்டும். இனிமேல் தமிழகப் பேருந்தைத் தவிர்த்து, நான் கர்நாடக மாநிலப் பேருந்தைத்தான் அதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்”.

“ஆம்.பஸ் கட்டண உயர்வு என் பயணச்செலவை இருமடங்காக ஆக்கிவிட்டது. இதற்காக நான் மற்ற செலவினங்களைக் குறைக்க வேண்டும். இதற்குப் பதிலாக வருடம் ஒருமுறை 5 சதவிகிதக் கட்டணத்தை உயர்த்தினால் யாருக்கும் கஷ்டம் தெரியாது”.

“ஆம்! பாதிக்கிறது. 13 ரூபாய் இருந்த தூத்துக்குடி பேருந்து நிலையம் டு துறைமுகம் இடையிலான பேருந்து டிக்கெட் விலை தற்போது 25 ரூபாய்”.

“மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்துத்தான் ஊழியர்களுக்கு நிலுவைத்தொகையைக் கொடுக்க முடியும் என்பது மோசமான மேலாண்மையைக் காட்டுகிறது”.

“ஆம், நிறையவே பாதிக்கிறது. சென்னை பூந்தமல்லி டு தாம்பரம் இடையிலான டிக்கெட் விலை முன்பு 17 ரூபாய். ஆனால், தற்போது 33 ரூபாய். அனைத்து வர்க்க மக்களையும் இது பாதிக்கிறது.

“எனக்கு மாதப் பயணச்செலவு தற்போது இரண்டு மடங்காகி இருக்கிறது. இதனால் வீட்டுச் செலவுக்கான பணத்தை எப்படித் தர முடியும்? சம்பளம் முழுதும் பயணத்துக்கே சரியாகிவிடும்”.

“ஒருமுறை ஒருவர் கன்னியாகுமரியிலிருந்து சென்னை சென்றுவரக் கூடுதலாக ரூ.500 செலவாகிறது. 500 ரூபாய் என்பது நடுத்தரவர்க்கத்துக்கு அதிகமான தொகை. இதைப் போன்றுதான் மற்ற ஊர்களுக்கும். நிர்வாகச் சீர்கேட்டின் விளைவினை மக்கள் தலையில் சுமத்தியிருக்கிறார்கள்”.

“ஆம், இதிலென்ன சந்தேகம்? பாமர மக்கள் 50 சதவிகிதக் கட்டண உயர்வை எப்படிச் சமாளிக்க முடியும்?”

“இதனால் மாதம் கூடுதலாக 200 ரூபாய்வரை எனக்குச் செலவாகும்”.

“சென்னை மெட்ரோ கார்ப்பரேஷன் பேருந்துகள் மிகப் பழைமையானவை. ஒவ்வொன்றும் 10 முதல் 15 வருடங்கள்வரை பழைமையானதாக இருக்கும். ஆனால் அவற்றைத்தான் எக்ஸ்பிரஸ், க்ரீன் போர்டு, ஒயிட் போர்டு என வகைவகையாகப் பிரித்திருக்கிறார்கள். இதற்கு எதற்கு பராமரிப்பு என்கிற பெயரில் 50 சதவிகிதக் கட்டண உயர்வு?”

“பேருந்துக் கட்டணத்தை 60 சதவிகிதம் வரை எளிதாக உயர்த்தியிருக்கிறார்கள். இதுவரை பயணத்துக்காக 1500/- ரூபாய் செலவு செய்துவந்த நான், இப்போது 3000/- ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். ஆனால், இத்தனை வருடங்களாக எனக்கு எவ்வித சம்பள உயர்வும் இல்லாமல் அதே சம்பளம் இருக்கும் நிலையில் இந்த விலையேற்றத்தை நான் எப்படிச் சமாளிப்பேன்?”

“நாகர்கோவில் டு சென்னைக்கு ரூ.490 ஆக இருந்த பயணக் கட்டணம், தற்போது ரூ.790 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கேரளத்தில் கட்டணத்துக்கேற்ப பேருந்தின் தரம், பராமரிக்கும் பணியாளர்களின் அதிக எண்ணிக்கை, வளைவு சாலைகளால் அதிக டீசல் நுகர்வு போன்றவை இருக்கிறது. மோடி - எடப்பாடி மூலம் மாதச் சம்பளத்தில் 2,500 ரூபாய்வரை அதிகம் பட்ஜெட் விழுகிறது. இதற்கு போக்குவரத்து ஊழியர்களின் தவறு கரணம் அல்ல, ஊழல் அரசின் தவறான நிர்வாகமே காரணம்”.

“கூலிக்கு ரூ.200-க்கும் ரூ.300-க்கும் மூன்று பேருந்துகள் மாறி வேலைக்குச் செல்லும் புறநகர் மக்கள், தினமும் ரூ. 100-லிருந்து ரூ. 150 வரை பயணத்துக்கு மட்டுமே கொடுத்தால் எப்படிக் குடும்பம் நடத்துவது? இது மட்டும் அல்ல. இந்த உயர்வுடன், இதனைச் சார்ந்து விலைவாசியும் ஏறும். அதை எப்படி எதிர்கொள்வது?”

“கடுமையான விலை உயர்வு. கேளம்பாக்கம் டு பாரிஸ் கார்னருக்கு டிக்கெட் 21 ரூபாய் இருந்தது. ஆனால், தற்போது 45 ரூபாய் ஆகியிருக்கிறது”.

“நகரப்பேருந்துகளில் 20 சதவிகிதமும், புறநகர் மற்றும் விரைவுப் பேருந்துகளில் 66 சதவிகிதமும் கட்டண உயர்வை தமிழக அரசு அமல்படுத்தியிருப்பதால், அது அரசின் மோசமான நிர்வாகச் செயல்பாட்டையே காட்டுகிறது”.

“கட்டண உயர்வு மட்டுமல்லாமல், ரூ.1 முதல் ரூ.10வரை கூடுதலாகச் சுங்கவரியும் மற்றும் விபத்துக் காப்பீடும் மக்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. அதாவது, இனி மக்களிடம் பேருந்துக் கட்டணத்துடன் கூடுதலாகப் பணம் வசூல்செய்து சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் அரசுப் பேருந்து விபத்தில் பாதிக்கப்படுபவருக்கான நிவாரணம் ஆகியவை வழங்கப்படும். சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு தற்போது ரூ.505-ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்டணம் ரூ.250 அதிகரித்து, ரூ.755 ஆகியுள்ளது. அதனுடன் சுங்கவரி ரூ.10 சேர்த்து இனி, ரூ.765.00 ஆக மக்களிடம் வசூல் செய்யப்படும்.மேலும், இனி பேருந்துக் கட்டண உயர்வு டீசல் விலை உயர்வு மற்றும் நிர்வாகச் செலவைப் பொறுத்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளே நிர்ணயம் செய்துகொள்ளலாம். இதனால், இனி எந்த முன்னறிவிப்புமின்றி பேருந்துக் கட்டணம் உயரும்”.

“22,000 அரசுப் பேருந்துகளுக்கு 1,40,000 பணியாளர்களை அதிகப்படியாக நியமித்து கூடுதல் செலவினங்களை அரசே ஊழல் செய்வதற்காக அதிகப்படுத்திவிட்டு, அதை மக்கள் தலையில் கட்டுவது என்பது எவ்வளவு மோசமான நிர்வாகச் சீர்கேடு?”

“நிர்வாகத் திறமை சிறிதும் இல்லாத தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள் பதவி விலகி, ஒரு மாற்று அரசு ஏற்பட வழிவிட்டால்தான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படும்”.

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...