Sunday, January 28, 2018

ஆசிரியர், மாணவர்களுக்கு விடுப்பு பொது தேர்வு முடியும் வரை ரத்து

Added : ஜன 28, 2018 02:15

'பொதுத் தேர்வு முடியும் வரை, ஒரு மாதத்துக்கு எந்த விடுமுறையும் எடுக்கக் கூடாது' என, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிகள் தடை விதித்துள்ளன.

தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு, பிளஸ் 2வுக்கு, மார்ச் 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7ல் துவங்குகிறது; 10ம் வகுப்புக்கு, மார்ச், 16ல் துவங்க உள்ளது.

பொதுத் தேர்வுகளுக்கு, இன்னும் ஒரு மாதமே உள்ளதால், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகளும், திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. தினமும் காலையில், ஒரு மணி நேரம், சிறு தேர்வும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தேர்வு முடியும் வரை, ஆசிரியர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என, அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
கட்டுப்பாடு விதித்து   உள்ளனர். 

'பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுக்கான முன் தயாரிப்பு இருப்பதால், மாணவர்கள், சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் பள்ளிக்கு வந்து, ஒத்துழைப்பு தர வேண்டும்; இதற்கு, பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்' என, பள்ளி முதல்வர்கள்  உத்தரவிட்டு உள்ளனர். - நமது நிருபர் -
காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே மார்ச்சில் ரயில் சேவை துவக்கம்
Added : ஜன 28, 2018 02:12




- சிறப்பு நிருபர் -

காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையேயான அகல ரயில் பாதையில், சோதனை ஓட்டம் முடிந்துள்ளதால், மார்ச்சில் ரயில் இயக்கப்பட உள்ளது. அதேநேரத்தில், காரைக்குடி - திருவாரூர் இடையே, 2019 ஜனவரியில் ரயில்களை இயக்கும் வகையில், பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைபூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே இருந்த, 187 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, 1,700 கோடி ரூபாய் செலவில், அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, 2012ல் துவங்கியது. 

சோதனை வெற்றி

இதில், காரைக்குடி - திருவாரூர் இடையே, 2014; திருத்துறைபூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே, 2015ல், ரயில் போக்குவரத்து துவங்கும் என, அறிவிக்கப்  பட்டிருந்தது. 

பணிகள் மந்த கதியில் நடந்ததால், ஆறு ஆண்டுகளாகியும் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. தற்போது, காரைக்குடி -
பட்டுக்கோட்டை இடையே, 73 கி.மீ., பாதைப் பணி
முடிந்துள்ளது. 

கண்டனுார் புதுவயல், பெரியகோட்டை, வாளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயுங்குடி, பேராவூரணி, ஓட்டங்காடு, பட்டுக்கோட்டையில், ரயில்
நிலையங்கள் மற்றும் நடைமேம்பாலங்கள் அமைக்கும் பணி
முடிந்துள்ளது. 

இப்பாதையில்,    வெள்ளாறு, அம்புலி ஆறு மற்றும் அக்னி ஆற்றில், பெரிய பாலங்கள், சிறிய பாலங்கள் கட்டும் பணி முழுவதுமாக முடிந்து, அதிகாரிகள், டிராலி மற்றும் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தி உள்ளனர்.

இப்பாதையில், பிப்., இரண்டாவது வாரத்தில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், ரயிலை இயக்கி சோதனை நடத்த உள்ளார்.
பின், ஒப்புதல் அளித்ததும், மார்ச்சில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே, ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது.

திருவாரூர் பணி மந்தம்

இத்திட்டத்தில், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையேயான, 74 கி.மீ., பாதை பணி, மந்த கதியில் நடந்து வருகிறது. அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை நிலையங்களில் கட்டுமான பணி நடந்து வருகிறது.

திருத்துறைபூண்டியில், நிலைய கட்டுமான பணி, தற்போது தான் துவக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை - திருத்துறைபூண்டி இடையே, ரயில் பாதை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து, ரயில்வே திட்ட தலைமை அதிகாரி கூறியதாவது:
தளவாடப்பொருட்கள் விலையேற்றம், ஒப்பந்த மதிப்பீடு மாற்றம், மண் மற்றும் மணல் தட்டுப்பாடு என, அடுத்தடுத்து பல சிக்கல்கள் உருவாகின.
இதனால், இவற்றை சரி செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், திட்டமிட்டபடி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இதனால், முதல் கட்டமாக, காரைக்குடி - பட்டுகோட்டை இடையே, மார்ச்சிற்குள் ரயில்கள் இயக்கப்படும்.
 
பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதை பணியை, டிசம்பருக்குள் முடித்து, காரைக்குடி - திருவாரூர் இடையே, 2019 ஜனவரியில், ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய பாதை 

தஞ்சை - பட்டுக்கோட்டை இடையே, 460 கோடி ரூபாயில், 46 கி.மீ., புதிய அகல ரயில் பாதை; மன்னார்குடி - பட்டுக்கோட்டை இடையே, 300 கோடி ரூபாயில், 41 கி.மீ., பாதை அமைக்க நிதி 

ஒதுக்கக்கோரி, ரயில்வே வாரியத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இத்திட்டங்களுக்கு, வரும் பட்ஜெட்டில், போதிய நிதி ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரி
கூறினார்.

ஐந்து மாவட்டங்களுக்கு பயன்
இந்த பாதைப்பணிகள், ஆறு ஆண்டுகள் ஆகியும்
இன்னும் முடியவில்லை. இந்தப்பணிகள் முடிந்தால், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை என, ஐந்து மாவட்ட மக்கள் பயன்பெறுவர். காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே, மார்ச்சில் ரயில்கள் இயக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் போக்குவரத்து, பட்டுகோட்டை, பேராவூரணி
மற்றும் அறந்தாங்கியில் இருந்து, காரைக்குடி அழகப்பா கல்லுாரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். அதற்கேற்ப, அதிக ரயில்கள் இயக்க வேண்டும்.

செல்வராஜ், நிர்வாகி 

அறந்தாங்கி பயணியர் சங்கம், பொதுவாக்கோட்டை.
அதிக பஸ்களை இயக்கணும்
அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டையில் இருந்து, சென்னைக்கு ரயில் வசதி இல்லை; அரசு போக்குவரத்து கழக பஸ்களும் அதிகம் இயக்கப்படவில்லை. இதனால், ஆம்னி பஸ்களில், அதிக கட்டணம் செலுத்தி, சென்னை செல்ல வேண்டியுள்ளது. 

அவற்றில், விசேஷ நாட்களில், இரண்டு மடங்கு
கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, ரயில் பாதை பணிகள் முடியும் வரை, இங்குள்ள முக்கிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு, அரசு போக்குவரத்து கழக பஸ்களை அதிகம் இயக்க வேண்டும்.
சிவேதி நடராஜன்
பேராவூரணி பயணியர் சங்க நிர்வாகி
'வருவாய் தாமதமாகும்'

பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர், அசோக்குமார் கூறியதாவது:
''அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதி மக்கள், தொழில், பணி ரீதியாக, சென்னையில் அதிகம் பேர் உள்ளனர். மீட்டர் கேஜ் பாதையில், இயக்கப்பட்ட கம்பன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில், சென்னை மார்க்கத்தில் தான், அதிக வருவாய் இருந்தது.
இங்கிருந்து, நெல், அரசி, தேங்காய், மீன்,
கருவாடு மற்றும் உப்பு அதிகம் எடுத்துச் செல்லப்படது. 

ஆறு ஆண்டுளாக, ரயில் போக்குவரத்து இல்லாததால், லாரிகளில், சென்னைக்கு அதிக செலவு செய்து, அனுப்பப்பட்டு வருகிறது.
பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கியில் இருந்து, பொதுமக்கள், ரயிலில், காரைக்குடி வழியாக சுற்றுப்பாதையில், கூடுதல் துாரம் பயணித்து, கூடுதல் செலவு செய்து, சென்னை செல்ல விரும்பவில்லை. 

அதனால், இத்திட்டத்தில், பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதை பணி முடிந்து, சென்னைக்கு ரயில் போக்குவரத்து துவங்கும் வரை, எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
'என்' வகை ரேஷன் கார்டில் அரிசி வாங்க வழி உண்டா?

Added : ஜன 28, 2018 01:50


ரேஷனில் எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டுகளை, பொருட்கள் வாங்கும் கார்டுகளாக மாற்ற வாய்ப்புகள் உள்ளதாக, உணவுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், அரிசி கார்டு, போலீஸ் கார்டு, சர்க்கரை கார்டு மற்றும் எந்த பொருட்களும் வாங்காத, 'என்' கார்டு என, நான்கு விதமான ரேஷன் கார்டுகள் உள்ளன. 

இதில், அரிசி கார்டு மற்றும் போலீஸ் கார்டு களுக்கு, இலவச அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படு கின்றன. சர்க்கரை கார்டுக்கு, அரிசி தவிர்த்த மற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

'என்' வகை கார்டுக்கு, எந்த பொருளும் வழங்கு வதில்லை. அவர்கள், தங்களது ரேஷன் கார்டை, முகவரி சான்றுக்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டானது, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதது என்ற இரு பிரிவில் வழங்கப்பட்டாலும்...
பழைய கார்டுகளின் வகையில் தான், பொருட் கள் தரப்படுகின்றன. ஸ்மார்ட் கார்டு வரவால், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான, போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளன.

இதையடுத்து, எந்த பொருளும் வாங்காத, 60 ஆயிரம், 'என்' கார்டுகளையும், அரிசி கார்டுகளாக மாற்ற, உணவுத் துறை முடிவு செய்தது. ஆனால், அரசு ஒப்புதல் அளிக்காததால், அது குறித்த அறிவிப்பு தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர், 'என்' கார்டுகளை, அரிசி கார்டு களாக மாற்றம் செய்வது தொடர்பாக, உணவு வழங்கல் துறைக்கு, தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு, அத்துறை அளித்துள்ள பதில்:

'என்' கார்டு வைத்து உள்ளோர், பொருட்கள் பெறும் வகையில் மாற்றம் கோரி மனு அளித்தால், நேரில் ஆய்வு செய்யவும்...
குடும்பத்தின் தற் போதைய பொருளாதார நிலை கருதி, சம்பந்தப் பட்ட உதவி கமிஷனரின் பரிந்துரைப்படி, அத் தியாவசிய பொருட்கள் பெறும் கார்டாக மாற்றவும் வழிவகை உண்டு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'அரசு கையில் தான் தீர்வு'

இது குறித்து, கூட்டுறவு மற்றும் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'என்' கார்டை, பொருட்கள் பெறும் கார்டாக மாற்றுவது தொடர்பாக, சட்டசபையில், முதல்வர் அல்லது உணவுத் துறை அமைச்சர் அறிவிக்க வேண்டும். பின், அதை செயல்படுத்த அரசாணை வெளியிட வேண்டும். அப்போது தான், 'என்' கார்டுகள், பொருட்கள் தரும் கார்டாக மாற்றப்படும். அதுவரை, மனுக்களை பெற்றாலும், பொருட்கள் பெறும் கார்டாக மாற்ற, அதிகாரிகள் பரிந்துரைக்க முன்வரமாட்டர்.

நிதி நெருக்கடியை காரணம் காட்டி, 'என்' கார்டுக்கு பொருட்கள் வழங்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்தாமல் உள்ளது. 60 ஆயிரம் கார்டுகளுக்கு பொருட்கள் தருவதால், அரசுக்கு அதிக செலவு ஏற்பட போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
ரயில்வேக்கு ரூ.8,000 அபராதம்

Added : ஜன 28, 2018 01:36

நாகர்கோவில்;குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாமதமாக இயக்கப்பட்டதால், ரயில்வே நிர்வாகத்துக்கு, 8,000 ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்உத்தரவிட்டு உள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள், செல்வராஜ் சாலோமன், பிரின்ஸ்லிசேம். இருவரும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, பார்வையற்றவர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, ஐந்து எடை பார்க்கும் இயந்திரங்கள், 20 ஊன்றுகோல் கருவிகளை வழங்கதிட்டமிட்டனர்.இதற்காக, 2014 மே, 9ல், நாகர்கோவிலில் இருந்து, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து ராஞ்சி செல்ல முன்பதிவு செய்தனர்.

வழக்கமாக, இரவு, 9:15 மணிக்கு சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், அன்று, இரண்டு மணி நேரம், 25 நிமிடங்கள் தாமதமாக, இரவு, 11:40 மணிக்கு தான், சென்னை சென்றது.இதற்குள், இரவு, 11:00 மணிக்கு, ராஞ்சி ரயில் புறப்பட்டு விட்டது. இதையடுத்து, அந்த ரயிலின் டிக்கெட்டை ரத்து செய்த இருவரும், மறு நாள், சொந்த ஊருக்கே திரும்பினர்.பின், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி, நாராயணசாமி, உறுப்பினர், சங்கர் ஆகியோர் விசாரித்தனர். பின், 'பாதிக்கப்பட்டவர்களுக்கு, சென்னை - ராஞ்சி, ராஞ்சி- - சென்னை முன்பதிவு மற்றும் ரத்து கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.

நுகர்வோரின் மன உளைச்சலுக்காக, 5,000, வழக்கு செலவாக, 3,000 என, மொத்தம், 8,000 ரூபாயை, ரயில்வே நிர்வாகம், ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
கதிரியக்க பாதுகாப்பு ஆடை வடிவமைப்பு மதுரை டாக்டருக்கு சர்வதேச விருது

Added : ஜன 27, 2018 23:55




மதுரை, சுற்றுச்சூழல் பாதிக்காத, கதிரியக்க பாதுகாப்பு ஆடையை கண்டுபிடித்த, மதுரை அரசு மருத்துவ கல்லுாரி உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்
குமாருக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் டி.மருதுபாண்டியன் கூறியதாவது:

எக்ஸ்ரே உள்ளிட்ட கதிரியக்கங்களை கையாளும் போது உடல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. பாதிப்புக்களை முற்றிலும் தவிர்க்கும் 'லெட்' (காரீயம்) உலோகம் அல்லாத பேரியம், பிஸ்மத் மற்றும் ஆன்ட்டிமனி ஆகிய உலோகங்களை கொண்டு குறைந்த ரூபாய் மதிப்பில் 'கதிரியக்க பாதுகாப்பு ஆடை'யை டாக்டர் செந்தில்குமார் கண்டுபிடித்தார்.

இந்திய நுண்கதிர் பாதுகாப்பு சங்க அகில உலக மாநாடு, மும்பையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் செந்தில்குமார் கண்டுபிடித்த கதிரியக்க பாதுகாப்பு ஆடைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான விருதை உலக கதிரியக்க பாதுகாப்புத்துறை தலைவர் ரோஜர் கான்டஸ், மும்பை அணுசக்தி கட்டுப்பாட்டுத்துறை தலைவர் பரத்வாஜ் வழங்கினர். இக்கண்டுபிடிப்பு கதிரியக்க பாதுகாப்பு மேம்பாட்டில் புதிய மைல்கல். இந்த ஆடை, விரைவில் பயன்பாட்டிற்கு
வரவுள்ளது.
இவ்வாறு கூறினார்.
மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் சார்பில் இன்று நடக்கிறது

Added : ஜன 27, 2018 23:51


மதுரை, தினமலர் சார்பில் மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு கருத்தரங்கு மதுரை பசுமலை மன்னர் திருமலை
நாயக்கர் கல்லுாரியில் இன்று (ஜன.,28) காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தினமலர் கல்விமலர், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பது முதல் அதிக மதிப்பெண் பெறும் வகையில் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது வரை மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும்
வல்லுனர்கள் வழிகாட்டுகின்றனர். 

விண்ணப்பிக்கும் முறை, தகுதி, கவுன்சிலிங் முறை, கல்லுாரிகளை தேர்வு செய்வது குறித்து நெல்லை செயின்ட் ஜான்ஸ் கல்லுாரி முதல்வர் ஜான் கென்னடி வேதநாதன் பேசுகிறார்.

இத்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது, எந்த
 பாடத் திட்டத்தில் வினாக்கள் கேட்கப்படும். மாதிரி வினா, நேர மேலாண்மை மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற வழிமுறைகள் குறித்து ஸ்மார்ட் டிரைனிங் ரிசோர்சஸ் இந்தியா பிரைவேட் லிட்., நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் பேசுகிறார். இணை தலைவர் வெங்கடேசன், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் விதம், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பேசுகிறார்.

மருத்துவ படிப்பின் எதிர்காலம் குறித்து சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை உதவி பேராசிரியர் டாக்டர் விஜய்கிருஷ்ணன் பேசுகிறார். அனுமதி இலவசம்.

கருத்தரங்கை எஸ்.ஆர்.எம்., பல்கலையுடன் சென்னை ஸ்மார்ட் லேர்னிங் சென்டர், தினமலர் கல்வி மலர் இணைந்து வழங்குகிறது.





வரி ஏய்ப்பு: கண்டுபிடித்த அதிகாரிக்கு விருது

Added : ஜன 28, 2018 03:33


புதுடில்லி: அரசுக்கு, 961 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்த வழக்குகளை கண்டுபிடித்த அதிகாரியின் சேவையை பாராட்டி, அவருக்கு ஜனாதிபதி விருது, நேற்று வழங்கப்பட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி இயக்குனரகத்தின் புலனாய்வு பிரிவில், 25 ஆண்டுகளாக பணியாற்றுபவர், ரவி தத் சங்கர்; வரி ஏய்ப்பு தொடர்பாக, 47 வழக்குகளை புலனாய்வு செய்துள்ளார்.

இதன் மூலம், 961.92 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதை கண்டுபிடித்துள்ளார். இதில், 99 கோடி ரூபாய் வரி, திரும்ப செலுத்தப்பட்டது.இவரது பணியை பாராட்டி, ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் சார்பில், நிதி அமைச்சர், அருண் ஜெட்லி விருது வழங்கி கவுரவித்தார்.

NEWS TODAY 14.06.2026