பணம் கையில் தங்கவில்லையா - இதைப் படிங்க! #Savings
ஜெ.சரவணன்
VIKATAN
பணம் கையில் இருக்கிறதோ இல்லையோ, செலவுகளுக்குப் பஞ்சமே இல்லாத வாழ்க்கைமுறையில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவசியச் செலவுகளான வாடகை, உணவு, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை எல்லாம் தாண்டி மாதம் ஒரு புது டிரெஸ், வாரம் ஒரு படம், பெரிய ஹோட்டலில் சாப்பாடு, பார்க், பீச். இவை தவிர வருடத்துக்குச் சிலமுறையேனும் சுற்றுலா. இப்படி நாம் செய்யும் செலவுகள்தான் இந்தியப் பொருளாதாரத்தையே தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன; வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. ஆனால், நம்முடைய நிதி நிலை எப்படி இருக்கிறது? நாடு வளர்கிறது... நாம் வளர்கிறோமா?
இந்தக் கேள்விக்கு நம்மிடம்தான் பதில் இருக்கிறது. வருமானம் என்பது செலவு செய்யத்தான் என்றாலும், சேமிப்பு, முதலீடு, வருமானத்தைப் பெருக்குதலும் அடங்கும். ஆனால் சேமிக்கவோ, முதலீடு செய்யவோ நம்மிடம் பணம் தங்க வேண்டும் அல்லவா?
‘இப்படி வந்தது, எப்படிப் போச்சுன்னே தெரியலை’ இதுதான் சம்பளதாரர்கள் பெரும்பாலோரின் புலம்பல். நம் பணத்தை நாம்தான் செலவுசெய்கிறோம். ஆனால், நம்முடைய செலவுகளைத் திட்டமிடாதபோது எப்படிச் செலவானது என்றே தெரியாது.
பணத்தை எப்படி நம்மிடம் தங்கவைப்பது? பட்ஜெட் போட்டு செலவுசெய்தால், பணத்தை எளிதில் நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
முதலில் பேனா-பேப்பர் எடுத்து, கடந்த மாதம் நீங்கள் என்னென்ன செலவுகள் செய்தீர்கள் என்பதை ஒரு பட்டியலிடுங்கள். நீங்கள் பட்டியலில் போட்டுள்ள செலவுகளைக் கூட்டினால் உங்கள் வருமானத்தில் பாதிகூட வராது. ஏனெனில், பல செலவுகளை நீங்கள் மறந்தேபோயிருப்பீர்கள். வாடகை, உணவு தவிர பெரிதாக எதுவும் செலவாகவே தெரிவதில்லை. அப்படித் தெரியாமல் இஷ்டத்துக்குச் செய்யும் செலவுகள்தான் ஏராளம். வரும் மாதத்தில் நீங்கள் செய்யும் செலவுகளை அப்போதே குறித்துவைத்துக்கொள்ளுங்கள். அது பத்து ரூபாயாக இருந்தாலும் சரி. மாத இறுதியில் நீங்கள் குறித்துவைத்த செலவுகளை ஒருமுறை பாருங்கள். அதில் நீங்கள் என்னென்ன வீண்செலவுகளைச் செய்திருக்கிறீர்கள், குறைந்த செலவில் முடிக்கவேண்டியவற்றை கூடுதல் செலவாக்கியிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியும்.
ஆரோக்யமான உணவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவுசெய்யலாம். அதற்காக சூப்பர் மார்க்கெட்களில் பேக்கிங் செய்யப்பட்ட பொருள்கள்தான் ஆரோக்கியமானவை என அர்த்தம் அல்ல. முடிந்தவரை காய்கறிகள், மளிகைப் பொருள்களை உங்கள் அருகிலுள்ள சில்லறை வணிகர்களிடமே வாங்கிக்கொள்ளலாம். ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களைத் திட்டமிட்டு ஒரே முறை வாங்கி வைத்துவிடுவது செலவைக் குறைக்க உதவும். ஆனால், அவற்றைக் கெட்டுப்போகாமல் முறையாக வைத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள் எத்தனை நாள் வரும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த அளவுக்கு மட்டும் வாங்குங்கள். அழுகிப்போய் தூக்கி எறியும் நிலைக்கு கொண்டுவர வேண்டாம்.
அடுத்து முக்கியமாக மின்சாரமும் காஸும். இரண்டும் ஆற்றல் சார்ந்த நுகர்வுகள். அவற்றை உற்பத்திசெய்ய எவ்வளவு செலவு செய்யவேண்டியிருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவை பற்றாக்குறையானால் பெறுவதற்கு அதிக செலவு செய்யவேண்டியிருக்கும். அது பற்றி நமக்கு என்ன கவலை என நினைக்க வேண்டாம். தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள், விசிறிகளை எல்லாம் அணைத்துவிடுங்கள். தேவையில்லாமல் காஸைத் திறந்துவிடுவது. உணவுப்பொருள்களை அடுப்பிலேயே அதிக நேரம் வைத்துவிட்டுக் கவனிக்காமல்விடுவது இவற்றையெல்லாம் தவிர்த்தால், உணவையும் பாதுகாக்கலாம், காஸ் வீணாவதையும் தவிர்க்கலாம். தண்ணீரும் இதில் அடங்கும். தண்ணீருக்காகக் கணிசமாகச் செலவுசெய்கிறோம். ஆனால், அதை நாம் உரிய முறையில் பயன்படுத்தத் தவறுகிறோம்.
வாகனங்களுக்காகப் பலரும் வீணாகச் செலவழிக்கிறோம். அதிக பணம் கொடுத்து ஸ்டைலுக்காக பைக் வாங்குவதால் மட்டும் பணம் வீணாவதில்லை. மைலேஜ் குறைவாக இருப்பதால் ஆகும் பெட்ரோல் செலவு, அவற்றைப் பராமரிக்க ஆகும் செலவு என வருமானத்துக்கு மீறிய வகையில் பணம் வீணாகிறது. பணம் படைத்தவர்களுக்கு அது சரிபட்டுவரும். சொற்ப வருமானத்தில் காலத்தை ஓட்டும் குடும்பங்களில் இவற்றைத் தவிர்க்கலாம். கையில் இருக்கும் பணத்தை ஆடம்பரத்துக்காக, பந்தாவுக்காகச் செலவு செய்யாமல் சேமிக்கவும் முதலீடும் செய்யலாம்.
குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருப்பது அவசியம்தான். அதற்காக சினிமா, சுற்றுலா, ஹோட்டலுக்குச் செல்வது போன்றவற்றில் தவறில்லை. இதனால் பெரும்பாலான எளியவர்கள் பிழைக்கிறார்கள். ஆனால், நம்முடைய திறன் அறிந்து அதற்கேற்ப திட்டமிடலாம். இவற்றுக்கெல்லாம் அதிகமாகச் செலவு செய்துவிட்டு, அத்தியாவசிய செலவுகளுக்குத் திண்டாடுவதில் அர்த்தமில்லை.
இவற்றையெல்லாம் புரிந்து, செயல்படுத்தினால் உங்கள் கையில் என்றும் பணம் தங்கும்.

. நடைபெறும் ஊழல் அல்ல. கடந்த பத்து வருடங்களாகப் பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெற்றுவருகிறது. அதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் மனுவை ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கடிதத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணபதி ஒருவர் மட்டுமே ஊழல் செய்துவிடவில்லை. நிறைய துணைவேந்தர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் களையெடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. கணபதியின் வழக்கை மையமாகவைத்தே அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களைத் தேர்வுசெய்யக்கூடிய பல்கலைகழகத் தேர்வுக் கமிட்டியில் நேர்மையான ஆட்களை நியமிக்க வேண்டும்.தேர்வுக் கமிட்டியில் இருப்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி நேர்மையான துணைவேந்தர்களை அவர்கள் தேர்வுசெய்வார்கள்?
குறிப்பாக ஆளுநருக்கு நெருக்கமானவரா... கோடிக்கணக்கில் பணம் கொடுப்பாரா... அதிகாரவர்க்கத்தில் இவருடைய செல்வாக்கு எந்த நிலையில் உள்ளது என்பது போன்ற தகுதிகள்தான் இன்றைய துணைவேந்தர்களின் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பதவிக்கு வரும் அந்த நபர்கள், கொடுத்த பணத்தை எடுக்கும் வேலையைத்தான் பல்கலைக்கழகங்களில் செய்கிறார்களே தவிர, கல்விக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் எண்ணுவதில்லை.தேர்வுக் கமிட்டியும் எந்த விதிமுறையும் இல்லாமல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அடங்கிவிடுகிறது எனும்போது, விருப்பப்பட்ட விமானத்தில் செல்கிறோம் என்று கூறினால்... வசதியற்ற பயணிகளும் கூடுதலாக 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்குமே?' என்ற கேள்விக்கு, பதில் தந்தார், புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினத்தைச் சேர்ந்த இப்ராஹிம் ஜே.இ, ''நான் ஹஜ் கமிட்டி மூலமாக அங்கே சென்று வந்திருக்கிறேன். அவர்களும் சிறப்பான ஏற்பாடுகளைத்தான் செய்வார்கள். ஆனால், சிற்சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அதை நாம்தான் சமாளிக்க வேண்டும். உதாரணமாக உள்ளூர் போக்குவரத்துக்குச் சமயத்தில் கூடுதலாகச் செலவு செய்யவேண்டியதுகூட வரலாம். ஆனால், தனியார் மூலமாகச் செல்லும்போது, அவர்கள் கூடுதலாகப் பணம் வசூலிப்பதால் சிரமமில்லாமல் போய்விடும்.