Wednesday, April 18, 2018

HC stays med admission on spl mark plea

Sureshkumar.K@timesgroup.com 18.04.2018

Chennai: Postgraduate medical admissions across India came to a grinding halt on Tuesday with the Madras high court ordering the Director General of Health Services (DGHS), New Delhi, and Tamil Nadu’s state selection committee to not allot seats to students both under the all-India quota and state quota until further orders.

Justice S Vaidyanathan was passing the orders on a batch of petitions which wanted the court to direct the DGHS to comply with Post Graduate Medical Education Regulations in admissions to PG medical courses and award due weightage marks for service rendered in remote/difficult areas.

‘Can go on with counselling, but must not allot seats’

The authorities can go on with counselling, but must not allot seats till further orders, said Justice S Vaidyanathan in his interim order.

Some of the petitions also wanted reservation of 50% of seats for service candidates under all-India quota too.

When the pleas came up for hearing, assistant solicitor-general Karthikeyan submitted that though first phase of counselling had been completed admissions would not be made till the court passed final orders.

The petitions filed by Dr C Sudhan and six others said they were in-service candidates in Tamil Nadu Medical Services, working as assistant surgeons in government medical facilities. They had appeared for NEET PG-2018 and secured more than 50% marks and were duly declared as eligible for admission to PG medical courses this year.

“The places we serve are notified as remote/difficult by the state government and hence we are entitled for additional weightage (incentive) marks as per Regulation 9 (IV) of PG Regulations 2000 under all India quota seats. But, authorities are proceeding to conduct counselling for admissions to PG courses without awarding such weightage marks for in-service candidates,” the petitioners said.

Claiming that the move was in violation of MCI regulations, they added that it would adversely affect the interests of the petitioners who were entitled to weightage marks for service rendered by them in remote/difficult areas for determination of merit in selection.

They further pointed out that even in admissions made during the last academic year, the authorities had failed to allot the mandated 50% seats to service candidates as required by the regulation.

Tamil Nadu has 1,648 PG medical seats in its 13 government medical colleges. Of this, 50% go to the all India quota for which counselling would be conducted by DGHS.

The remaining 50% would go to the state quota filled by directorate of medical education through a seperate counselling.

Out of such 50% state quota seats, in-service candidates are demanding 50% reservation.

Tuesday, April 17, 2018

புற்றுநோய் அச்சத்தில் தமிழ்நாடு.. எல்ஐசி கேன்சர் பாலிசிக்கு அமோக வரவேற்பு!

 Written By: Tamilarasu Updated: Monday, April 16, 2018, 19:28 [IST]
 
லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் 6 மாதத்திற்கு முன்பு புற்றுநோய்க்கான காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. புற்று நோய்க்காக எல்ஐசி அறிமுகம் செய்த இந்தக் காப்பீடு திட்டத்தினை இது வரை 88,750 நபர்கள் வாங்கியிருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 முக்கிய மாநிலங்கள் முக்கிய மாநிலங்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டும் 88,750 பாலிசிகளில் 58.5 சதவீதத்தினை வாங்கி இருக்கிறார்கள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. புற்று நோய்க்கான இந்த 88,750 பாலிசிகளின் முதல் பிரீமியம் தொகை மட்டும் 42.68 கோடி ரூபாய் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது. தென் மாநிலங்கள் தென் மாநிலங்கள் தென் மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழ் நாட்டில் இருந்து 25,670 நபர்கள் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ள புற்று நோய்க்கான இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கியுள்ளனர்.

வட மாநிலங்கள் வட மாநிலங்கள் வட மாநிலங்கள் பக்கம் என்றால் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் புற்றுநோய்க்கான இந்தப் பாலிசியை அதிகபட்சமாக 26,280 நபர்கள் வாங்கியுள்ளார்கள். ஆய்வு அறிக்கை ஆய்வு அறிக்கை நவம்பர் மாதம் வெளியான மாநில அளவிலான ஆய்வு ஒன்றில் தமிழ் நாடு, குஜராத், மாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய வளர்ச்சி படைத்த மாநிலங்களில் தான் தொற்று நோய் இல்லாத கேன்சர் உள்ளிட்ட நோய்களின் மையங்களாக மாறியிருப்பது தெரியவந்துள்ளது.

 காத்திருப்புக் காலம் காத்திருப்புக் காலம் எல்ஐசி புற்று நோய்க்கான காப்பீட்டினை 2017 நவம்பர் 14-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்தப் பாலிசிக்கான காத்திருப்புக் காலம் 180 நாட்கள் ஆகும். இந்தப் பாலிசியை வாங்கிய 180 நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகையினைப் பெற முடியாது. விருப்பம் I - நிலை தொகை காப்பீடு விருப்பம் I - நிலை தொகை காப்பீடு பாலிசி காலம் முழுவதும் அடிப்படை தொகை காப்பீடு மாறாமல் இருக்கம். எனவே ரூ. 10 லட்சம் மதிப்பிலான பாலிசியை வாங்கினால், அந்த பாலிசி காலவரையாகும் வரை இந்தத் தொகையினைப் பயன்படுத்த முடியும்.

விருப்பம் II - காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு விருப்பம் II - காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு அடிப்படை காப்பீடு தொகை முதல் 5 ஆண்டுகள் வரை ஒவ்வொரு ஆண்டும் 10% கூடுதலாக உயர்ந்துகொண்டே செல்லும். ஒருவேலை பாலிசிதாரருக்கு 5 வருடத்திற்குள் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அடிப்படை காப்பீடு தொகை உயர்வு நின்று விடும். எனவே 10 லட்சத்திற்குப் பாலிசி வாங்கினால் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் காப்பீடு உயர்வு என 5 வருடம் கிடைக்கும். அதாவது 10 லட்சம் காப்பீடு வாங்கி 15 லட்சம் ரூபாய் வரை பெற முடியும். உதாரணத்திற்குப் பாலிசி வாங்கிய 3 வருடத்திற்குப் பிறகு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டால் 13 லட்சம் ரூபாய் வரை காப்பிடு பெறலாம்.

 இரண்டு ஆண்டுக்கு பிரீமியம் தொகை உயராது. காப்பீடு தொகை அளவு காப்பீடு தொகை அளவு லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின கேன்சர் பாலிசி திட்டத்தின் கீழ் குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் வரை காப்பீடு பெற முடியும். வயது வயது பாலிசிதாரர்களுக்குக் குறைந்தது 20 வயதில் இருந்து 65 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். குறைந்தது 50 ஆண்டுகள் முதல் 75 ஆண்டுகள் வரை காப்பீடு அளிக்கப்படும்.

Read more at: https://tamil.goodreturns.in/news/2018/04/16/tamilnadu-fears-on-cancer-diesease-lic-cancer-policy-finds-most-buyers/articlecontent-pf55738-011068.html?utm_source=desipearl&utm_campaign=desipearl&utm_medium=www.tamilmithran.com
 
அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க மக்கள் ஆர்வம் : ஒரே நாளில் சவரனுக்கு 136 ரூபாய் குறைவு

 
தினகரன் 
 
சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் ஒரே நாளில் சவரனுக்கு 136 ரூபாய் குறைந்துள்ளது. வரும் புதன்கிழமை அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அன்றை தினம் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுவதால் ஏராளமானவர்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை திடீரென குறைந்திருக்கிறது. தங்கத்தின் விலை வீழ்ச்சி குறித்து தங்க நகை விற்பனையாளர்கள் கூறிய போது 2 நாட்கள் முன்பாக சிரியா நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர், அதன் காரணமாக உலகத்தில் மற்ற நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை குறைந்திருப்பதாக தங்க நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். அட்சய திருதி நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். பொதுமக்கள் நகைகளை வாங்கும் போது ஹல்மார்க் முத்திரை உள்ள தங்க நகையை வாங்குமாறும் விஐஎஸ் நிறுவனத்திடம் அங்கீகாரம் பெற்ற நகை கடைகளுக்கு செல்லுமாறும் இந்திய தரச்சான்று நிறுவனம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
விளைச்சலோ அதிகம்; விற்பனையோ அமோகம்! 'நுங்கு'க்கு படையெடுக்கும் மக்கள் 

பாலஜோதி.ரா

vikatan 17.04.2018 

கொளுத்தியெடுக்கும் கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, மக்கள் நுங்கை விரும்பி வாங்குவதால், அதன்விற்பனை சூடுபிடித்துள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், வெப்பத்தைச் சமாளிக்க மக்கள் நுங்கை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் காணப்படும் மிகக் கடுமையான வறட்சியைத் தாங்குவதற்கும், வெயிலின் சூட்டைத் தணிக்கவும் பொதுமக்கள் ஐஸ்கிரீம், குளிர் பானங்களோடு, இயற்கைக் குளிரூட்டிகளான இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, நுங்கு, மோர் ஆகியவற்றையும் தேடி வாங்கிச் சாப்பிடுவார்கள். இதன்மூலம் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து ஓரளவுக்காவது தங்களை சமாளித்துக்கொள்வார்கள்.

என்னதான் கண்கவரும் விளம்பரங்கள் மூலம் பெரிய, பிரபல குளிர்பானக் கம்பெனிகள் தங்களது கூல்டிரிங்ஸைக் குடிக்கும்படி மக்களைக் கூவிக்கூவி அழைத்தாலும், மக்கள் நுங்கையும் இளநீரையும் விரும்பிச் சுவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் விரும்பக்கூடிய ரசாயனக் கலப்படமற்ற இயற்கை உணவுப் பொருள்களுக்கு மவுசு சமீபகாலமாக கூடிக்கொண்டேவருகிறது. அதிலும் எவர்கிரீன் இளநீரும் நுங்கும் இப்போது சக்கைப்போடு போடுகின்றன.

இதில், இளநீருக்கு மட்டும் சீசன் ஏதுமில்லை. ஆண்டுதோறும் பரவலாக அது கிடைக்கும். அதேபோல, சீசனுக்கு முன்பாகவே தர்பூசணியும், வெள்ளரிப்பிஞ்சும், வெள்ளரிப் பழங்களும் விற்பனைக்குவந்து சாலையோரங்களில் குவிக்கப்பட்டுவிடும். ஆனால், நுங்கு குறைவாகவே கிடைக்கும். இந்த வருடம், ஏகோபித்த மக்களின் எதிர்பார்ப்பாகவே இருக்கிறது நுங்கு. மக்களின் எதிர்பார்பைப் பூர்த்திசெய்யும்விதமாக விற்பனைக்காக நுங்குகள் குவிக்கப்பட்டுள்ளன. உடல் குளிர்ச்சிக்கு மட்டுமல்லாமல்,வெப்பத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேர்க்குரு,வேனல் கட்டி போன்ற தோல் பாதிப்புகளுக்குப் பூசிக்கொள்ளும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.



புதுக்கோட்டை மாவட்டத்தில் பனைமரங்கள் குறைந்து விட்டபோதும், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, செங்கப்பட்டி, இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, நார்த்தாமலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்சயமம் நொங்கு வெட்டப்படுகிறது. இந்தப் பகுதிகளில் இந்த வருடம் நுங்கு விளைச்சல் அதிகம் என்பதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாட்டு வண்டிகளில் குலைகுலையாக நுங்கை ஏற்றிவந்து கடைவீதிகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது ஒரு முழு நுங்கின் விலை 10 ரூபாயும் 3 நுங்குச் சுளைகள் 10 ரூபாய் என்றும் சாலையோரக் கடைகளில் விற்கப்படுகிறது.

புதுக்கோட்டை முதல் விராலிமலை வரையுள்ள கட்டியாவயல் குருக்களையாப்பட்டி, ஆரீயூர் அன்னவாசல், சத்திரம், காலாடிப்பட்டி, தாண்றீஸ்வரம், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி விராலிமலை வரை சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கேப்பைக்கூழ், நுங்கு, போன்றவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவ்வழியாகச் செல்பவர்கள், வெயிலை சமாளிக்க இதுபோன்ற கடைகளில் வாகனங்களை நிறுத்தி வாங்கிச் சாப்பிட்டு மகிழ்கின்றனர்.
'என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள்' - கலெக்டர் ஆபிஸில் தீக்குளிக்க முயன்ற 80 வயது மூதாட்டி! 

எம்.கணேஷ் வீ.சக்தி அருணகிரி

vikatan  

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டமனூரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (16.4.2018) காலை மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்கள், தங்களது மனுக்களோடு கலெக்டரை சந்திக்க வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கே வந்த குருவம்மாள், தனது பையில் வைத்திருந்த மண்ணென்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டு வரிசையில் வந்து நின்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்குள்ள மக்கள் மூதாட்டியிடம் விவரம் கேட்டனர், ‘’என்னுடைய பெயர் குருவம்மாள், ஊர் கண்டமனூர், இரண்டாயிரம் ரூபாய் ஒத்திக்கு ஒரு வீட்டில் இருந்தேன். ஒத்தி முடிந்ததும் வீட்டை காலி செய்யச் சொன்னார்கள். எனக்கு யாரும் இல்லை. பிள்ளைகள் கைவிட்ட நிலையில், வேறு வீடு பார்த்துச் செல்லலாம் என்று கொடுத்த இரண்டாயிரம் ரூபாயைக் கேட்டேன். தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். எவ்வளவோ போராடியும் என் பொருள்களை எல்லாம் வெளியே தூக்கிவீசி விட்டார்கள். கண் தெரியாத நிலையிலும், துடைப்பம் செய்து பிழைத்து வருகிறேன். நடக்கவே முடியாத நிலையில் என்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். எனவே, என்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள்’’ என்றார் கண்ணீரோடு. இச்சம்பவம் அறிந்து பாதுகாப்பில் இருந்த போலீஸார், மூதாட்டியை மீட்டு அழைத்துச்சென்றனர். ‘’நீங்க மட்டும் என்ன நியாயம் வாங்கி கொடுக்கவா போறீங்க?’’ என்று போலீஸைப் பார்த்து விரக்தியுடன் சொன்னார் மூதாட்டி.
சம்பளம் கொடுத்து சம்மர் டூர்.. கண்ணு போட்டுடாதீங்க ப்ளீஸ்! - 'ராஜா ராணி' ஷப்னம் 

அய்யனார் ராஜன்

vikatan  

நாள் தவறாம சீரியல் பார்த்துட்டு வர்றீங்களா, அப்ப உங்களுக்கு நிச்சயம் இந்தச் சந்தேகம் இருக்கும். அதெப்படி இப்ப எல்லா சீரியல்லயும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுன்னு சீன் போயிட்டிருக்கு? ஆமாம். 'அழகு', 'ராஜாராணி' சீரியல்களின் யூனிட் இப்போதுதான் ஏற்காட்டில் ஷூட்டிங்கை முடித்து விட்டு வந்திருக்கிறார்கள். 'சரவணன் மீனாட்சி' தொடரின் ஷூட்டிங் கொடைக்கானல் சுற்று வட்டாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில சீரியல்கள் ஊட்டி, ஏலகிரி, கொல்லிமலை போன்ற இடங்களுக்குச் செல்லத் தயாராகி வருகிறார்கள். எப்படி?



''சென்னை வெயில்ல இருந்து தப்பிக்க ஓடறோம். சாதாரண மக்களைப் போலத்தான் ஆர்ட்டிஸ்டுகளும் வெயிலுக்கு எங்காச்சும் ஒதுங்கினாத் தேவலைன்னு நினைக்கிறாங்க. ஆனா ஸ்கூலுக்கு கோடை விடுமுறை விடற மாதிரி சீரியலுக்கு விட முடியுமா? சொல்லப் போனா, லீவு நாட்கள்ல பார்வையாளர்கள் அதிகமாகுறாங்க. நடிகர், நடிகைகள் எல்லாரும் சம்மர் டூர் போறோம்னு கிளம்பிட்டா ஷூட்டிங் எப்படி நடக்கும்? அதனாலதான், ஒரு ரெண்டு மாசத்துக்கு கதையை அந்த மாதிரி இடங்களுக்கு நகர்த்த வேண்டியிருக்கு'' என்கிறார் பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த இயக்குநர்.




'ராஜா ராணி'க்காக ஒரு வாரம் ஏற்காட்டில் தங்கியிருந்து திரும்பிய ஷப்னத்திடம் கேட்டால், ''ஏதோ புரடியூசர் புண்ணியத்துல சம்பளமும் வாங்கிக்கிட்டு சம்மரையும் என்ஜாய் பண்ணிட்டிருக்கோம். ஜனங்களுக்கும் காட்சிகள் கண்ணுக்கு குளுமையா இருக்கு. கண்ணு போட்டு இதுக்கு வேட்டு வச்சிடாதீங்க' எனப் பதறுகிறார்.
விடைத்தாள் திருத்தும்போது மாரடைப்பால் உயிரிழந்த தலைமையாசிரியர்! - ஈரோடு அருகே சோகம்

17.04.2018



கோபிசெட்டிபாளையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியர் ஒருவர், பள்ளியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவை அடுத்த புஞ்சை புளியம்பட்டி காயிதே மில்லத் வீதியைச் சேர்ந்தவர், ஏசுராஜா (53). இவர், புஞ்சை புளியம்பட்டியிலுள்ள கே.வி.கே அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். தற்போது 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டுவரும் நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில், மதிப்பெண் சரிபார்க்கும் அதிகாரியாக ஏசுராஜா இருந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் சுமார் 4.15 மணியளவில் மதிப்பெண் சரிபார்க்கும்போது திடீரென ஏசுராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட, வலியால் துடித்துச் சரிந்திருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுசெய்யும்போதே ஏசுராஜாவின் உயிர் பிரிந்தது. இதையடுத்து, ஏசுராஜாவின் குடும்பத்தினருக்குத் தகவல் சொல்ல, அவர்கள் உடலை அவர்களது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டிக்கு எடுத்துச் சென்றனர். உயிரிழந்த ஏசுராஜாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில், ஒருவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாராம். இன்னொரு மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பணியின்போது பள்ளிக்கூடத்திலேயே, தலைமையாசிரியர் ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

NEWS TODAY 23.12.2025