Tuesday, April 24, 2018

மாநில செய்திகள்

ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


t
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு மே 3-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.

ஏப்ரல் 24, 2018, 05:00 AM

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-

இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்வது அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி பதிவு செய்ய கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் முதல் வாரம் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. ஜூலை மாதம் முதல் வாரம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடங்குகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 16-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு வெளியாவது ஒருவாரம் வரை தள்ளிப்போனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அனைத்தும் நடைபெறும். 10 நாட்களுக்கு மேல் தள்ளிபோனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மாற்றம் செய்யப்படும். அதேபோன்று மருத்துவ கலந்தாய்வை பொறுத்தும் தேதியில் மாற்றம் செய்ய நேரிடலாம்.

மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்- லைன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஆன்-லைன் வசதியை பெற முடியாத நிலையில் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை பற்றி தனக்கு தெரியாது என்று கருதும் மாணவர்களுக்காகவும் தமிழகத்தில் 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த உதவி மையத்தை மாணவர்கள் அணுகலாம்.

அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ்களும் உதவி மையத்தில் தான் சரிபார்க்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் தான் அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்று இல்லை. அவரது பெற்றோரோ அல்லது உறவினரோ அசல் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணம் ரூ.500 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ.250 ஆகும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும்.

உதவி மையத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் அங்கு பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும். ஆன்-லைன் மற்றும் உதவி மையத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து அசல் கல்வி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்தை சான்றிதழ் சரிபார்ப்பின் போது அணுக வேண்டும். அங்கு விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யும்போதே தங்கள் விருப்பப்படி எந்த உதவி மையத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். உதவி மையங்களில் விண்ணப்பதாரர்களுக்கு என்ஜினீயரிங் கல்லூரிகள் பற்றிய தகவல் கையேடு வழங்கப்படும். ஆன்-லைன் முறையிலான கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான செயல் முறைகள் பற்றி மாணவர்களுக்கு வீடியோ காட்சி மூலம் உதவி மையத்தில் விரிவாக எடுத்துக்கூறப்படும்.

இதன்பின்பு, தரவரிசை பட்டியல் ஆன்-லைனில் வெளியிடப்படும். இதில் ஏதேனும் குறை இருந்தால் அதை சரிசெய்ய ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னையில் செயல்படும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்க்கை செயலாளரை அணுகி குறைகளை சரி செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண் அடிப்படையில் பல குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். அவ்வாறு பிரிக்கப்பட்ட குழுக்கள் கலந்தாய்வு சுற்றுகளில் மதிப்பெண்களின்படி அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான முன்வைப்பு தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்திய பின்பு தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்யலாம். எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் வரிசையாக பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்படும்.

இதன்பின்பு, தற்காலிக இட ஒதுக்கீடு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களது லாக்-இன் மூலமாக மறுநாள் பார்த்துக்கொள்ளலாம். இதை 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கலந்தாய்வு குறித்த தகவல் அவ்வப்போது விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்படும். அதேபோன்று இ-மெயிலுக்கும் தகவல் அனுப்பப்படும். மேலும், தகவல் அறிய விரும்புபவர்கள் https://tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். அதேபோன்று 044-22359901-ல் தொடங்கி 22359920 வரையிலான தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, தொழிற்துறை படிப்புக்கான கலந்தாய்வு, ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்படாத பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப ஆதிதிராவிட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு ஆகியவை நேர்முக கலந்தாய்வாக சென்னையில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜ், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாநில செய்திகள்

எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் ரஜினிகாந்த் பேட்டி




தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஏப்ரல் 24, 2018, 05:45 AM

சென்னை,

அமெரிக்கா செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- போராட்டத்தில் போலீசார் மீது எதார்த்தமாக நடந்த நிகழ்வை மட்டும் கோடிட்டு காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்று உங்கள் மீது இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறாரே?

பதில்:- போலீசார் சீருடையில் இருக்கிற போது, கை வைப்பது மன்னிக்க முடியாத குற்றம். அதே நேரம் சட்டம் கையில் இருக்கிறது என்று போலீசாரும் வரம்பு மீறி போகக்கூடாது.

கேள்வி:- குருமூர்த்தி உங்களை சந்தித்தற்கு என்ன காரணம்?

பதில்:- குருமூர்த்தி எனக்கு 25 ஆண்டுகால நண்பர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம். இதில் தனித்துவம் ஒன்றும் கிடையாது.

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த பிறகு, திரைத்துறையில் இருந்த நண்பர்கள் கூட உங்களை விமர்சனம் செய்வதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அரசியல் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது.

கேள்வி:- சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறீர்கள். கட்சி பணி எந்த நிலையில் இருக்கிறது. நீங்கள் அமெரிக்கா சென்று வந்த பின்னர் அரசியல் கட்சி அறிவிப்பு இருக்குமா?

பதில்:- மன்றத்துக்குள் நடக்கிற விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. நான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் தெரியாது. கண்டிப்பாக உங்களுக்கு (பத்திரிகையாளர்கள்) சொல்லாமல் அதை செய்ய முடியாது. சரியான காலத்தில் அதை தெரிவிப்பேன்.

கேள்வி:- பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நீங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லையே?

பதில்:- அது ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது உண்மையானால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்து கிடையாது.

கேள்வி:- கவர்னர் பெயரும் அடிபடுகிறதே?

பதில்:- அதை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை.

கேள்வி:- பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் தொடர்ந்து முரண்பட்ட தகவல்களை முகநூல், டுவிட்டரில் பதிவு செய்துவிட்டு, அட்மின் பதிவு செய்ததாக மழுப்பலாக கூறி வருகிறார்களே...

பதில்:- தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அதில் 2-வது கருத்தே கிடையாது.

கேள்வி:- கனிமொழி தொடர்பாக...

பதில்:- அது பற்றி, நான் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

முன்னதாக ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று சந்தித்து பேசினார். காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரையிலும் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்தும், தற்போதைய தமிழக அரசியல் நிலை குறித்தும், தொடர்ந்து அரங்கேறி வரும் போராட்டங்கள் குறித்தும் 2 பேரும் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. சந்திப்பு முடிந்ததும் ஆடிட்டர் குருமூர்த்தியை வீட்டுக்கு வெளியே வந்து ரஜினிகாந்த் வழியனுப்பி வைத்தார்.

இதையடுத்து கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். அங்கு, ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு தமிழகத்துக்கு திரும்பும் வரை ரஜினி மக்கள் மன்றத்தினர் எவ்வாறு செயல்படவேண்டும்? என்று ஆலோசனை வழங்கினார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் ரஜினி கண்டிப்புடன் கூறியதாக கூறப்படுகிறது.

காலா படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்றார். அவர் தமிழகம் திரும்பியதும், முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில், ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

சென்னையில் இருந்து விமானத்தில் அவர் துபாய் புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் 2 வாரங் கள் தங்கி முழு உடல் பரிசோதனை செய்ய உள்ளார். இந்த பயணத்தின்போது, அமெரிக்கா, கனடாவை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுகிறார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், அவர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளார். ரஜினிகாந்து டன் அவரின் மகள் ஐஸ்வர்யா வும் சென்றார்.

இதனிடையே ரஜினி மக்கள் மன்றத்தின் அடுத்தகட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து பேச ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களோடு ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் மற்றும் நிர்வாகி சுதாகர் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். ரஜினிகாந்தின் அமெரிக்க பயணம் நிறைவடைந்த பின்னர் கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம் என்றும், கொடி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
தலையங்கம்

உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லையா?





உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால்தான், மக்களின் பல அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.

ஏப்ரல் 24 2018, 03:30 AM

ஜனநாயகத்தின் அஸ்திவாரம் என்னவென்றால், ‘உள்ளாட்சி அமைப்புகள்’ தான். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கெல்லாம் கடந்த 2016–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24–ந்தேதியுடன் பதவிகாலம் முடிவடைந்தது. அக்டோபர் 17 மற்றும் 19–ந்தேதிகளில் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தநேரத்தில் தி.மு.க. சார்பில் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்று வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு அரசும் வார்டுகளை வரையறை செய்யப்போகிறோம் என்றுசொல்லி ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

2011–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பெண்கள் ஆகியோர்களுக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்வதற்காகவும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும், வார்டுகளின் தொகுதி வரையறைகளை உருவாக்குவதற்காகவும் பரிந்துரை செய்வதற்கு தொகுதிவரையறை ஆணையம் ஒன்றை அமைப்பதாக கூறி, அந்த சட்டத்தை அரசு நிறைவேற்றி தொகுதிவரையறை ஆணையமும் அமைத்துவிட்டது. இனி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்தபிறகுதான் தேர்தல் நடத்தமுடியும். இப்போது மறுவரையறை ஆணையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுவரையறை செய்வதற்காக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வந்த 8 ஆயிரத்து 9 ஆட்சேபணைகள் மற்றும் கருத்துருக்களில், 3 ஆயிரத்து 642 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 4 ஆயிரத்து 367 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. சென்னை மாநகராட்சி தவிர, மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10 ஆயிரத்து 952 ஆட்சேபணை மனுக்கள் மற்றும் கருத்துருக்களில், 3 ஆயிரத்து 933 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் 7 ஆயிரத்து 19 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இதேபோல, சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில், 586 ஆட்சேபணைகள் கருத்துருக்களில் 190 மனுக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டும், 20 மனுக்கள் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டும், மீதமுள்ள 376 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த மனுக்களையெல்லாம் பரிசீலனை செய்தபிறகுதான், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாசல் திறக்கப்படும். இந்த ஆட்சேபணைகள் மற்றும் கருத்துருக்களின் அடிப்படையில் வார்டுகளில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். அதற்குபிறகும் நிறைய நடைமுறைகள் இருக்கின்றன. இதையெல்லாம் பார்த்தால், இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லையென்று தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவேண்டிய பெருமளவிலான நிதி கிடைக்காமல் போகும்நிலை ஏற்படும். உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால்தான், மக்களின் பல அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கமுடியும். எனவே, மறுவரையறை பணிகளுக்காக ஆணையத்திற்கு வந்துள்ள ஆட்சேபணைகள், கருத்துருக்களை எவ்வளவு விரைவில் பரிசீலனை செய்து, அரசுக்கு பரிந்துரை அனுப்ப முடியுமோ? அவ்வளவு விரைவாக அனுப்பவேண்டும். அரசும் உடனடியாக இடஒதுக்கீடுகள் கூடிய மறுவரையறை ஏற்பாடுகளை செய்து ஆணை வெளியிடவேண்டும். ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த, மக்கள் வசதிகளைப்பெற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தவேண்டும்.

Monday, April 23, 2018

Police foil 4th child marriage in three days  TNN 

| Apr 23, 2018, 06:48 IST

 Ekatha.Ann@timesgroup.com
CHENNAI : At 6am on Sunday, minutes before 16-year-old Savitha* was to mount a podium in Thiruvottiyur to marry a distant relative, the music abruptly stopped. Police and social welfare officials had come to her rescue. She could finally return to school like she wanted to.

Since Friday, social welfare officials, police and Childline volunteers have thwarted four child marriages in Chennai. Based on a tip to the NGO Don Bosco Anbu Illam, police officials and the district social welfare officer stopped the wedding and produced the teenager and her family before the Child Welfare Committee, Chennai.


“We let the child return to the family with an undertaking from the family and a local head that they wouldn’t marry her off till she turns18,” said CWC member Sheila Charles Mohan.

But in two other cases, CWC decided against sending the children back to their families. On Saturday, they received an alert that a 15-year-old girl from MR Nagar, Kodungaiyur, was to be married to a 25-year-old man. They were engaged a month ago; the marriage was scheduled for this year. The police and child welfare officials said the family resisted when they intervened. They moved the child, with her consent, temporarily to a registered home.

A 17-year-old girl from Erukkanchery, likewise, was to get married in a few months. Officials met the family on Friday and got an undertaking from them that they would not marry her off till she is an adult. “But the child sought protection till she completed her education. So we shifted her to a home,” said an official who was part of the rescue team.

On Friday, the Chennai collectorate received a call from a Class XII student from Villivakkam who said her parents had fixed her wedding for next month. The child and her family were asked to appear before the CWC on Monday.

“More people are reporting, but families are yet to wake up to the seriousness of the problem,” said Sheila.

In the Tiruvottiyur case, the mother was a 34-yearold. “She got married when she was 16, so getting her daughter married at this age seemed natural to her,” said Sheila. The four children and their families were referred to the district social welfare officers to complete formalities to ensure they aren’t married off till they are18 years old.
 
திருத்தணி மாவட்டத்தில் 107 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவு
தினகரன் 15 hrs ago
22.04.2018 

  திருத்தணி: திருத்தணி மாவட்டத்தில் 107 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் திருத்தணியில் 107 டிகிரி வெயில் செல்ஷியஸ் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர்.
தற்கொலை செய்து தன் கூட்டத்தைக் காக்கும் தியாகி எறும்புகள்! #ExplodingAnts 

க.சுபகுணம்
vikatan  

மும்முரமாகப் போர் நடந்துகொண்டு இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் பிணங்கள். அந்த புல்டாக் எறும்புகளின் ( Bulldog ants) படை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் மிகுந்த பலசாலிகளாக இருக்கின்றன. இந்த எக்ஸ்ப்ளோடிங் எறும்புகளால் ( Exploding ants) ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அப்போது எறும்புகள் படையில் இருந்து ஒன்று மட்டும் படைத் தலைவரிடம் வருகிறது.

"நமது படை அழிந்துகொண்டே வருகிறது. இப்படியே போனால் நாம் வாழ்விடத்தை இழக்கவேண்டியது தான்."

"நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்"

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். அந்தப் பார்வை இருவருக்கும் அவர்கள் ஒரே விஷயத்தை யோசிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. "நான் சிந்திப்பதைத் தான் நீயும் சிந்திக்கிறாயா!"



Picture Courtesy: CE.Timothy Paine

"ஆம் தலைவா... அவர்களை வரச்சொல்ல வேண்டியது தான். வேறு வழியில்லை."

படைத்தலைவர் இலைகளால் செய்த ஹாரனை எடுத்து ஊதுகிறார். அந்தப் படை வருகிறது. அடர் சிவப்பு உடம்புடனும், கருப்பு நிறப் பின் பகுதியோடு வீறுநடை போட்டு நடந்துவருகிறது. அது வந்தவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த மற்ற எறும்புகள் பின் வாங்குகின்றன. இது முன்னேறிச் சென்று எதிரியோடு சண்டையிடுகிறது. எதிரி பலமாகத் தாக்குகிறான். அனைத்தையும் வாங்கிக் கொள்கிறது. சமயம் பார்த்துக் காத்திருந்த எறும்புகள் ஒவ்வொன்றாக சமயம் கிடைக்கக் கிடைக்க தனது புட்டத்தைத் தூக்கிக்கொண்டு எதிரியை முறைத்தவாறு நிற்கின்றன. தனது உடலை எவ்வளவு தூரம் தனக்குள்ளேயே இழுக்கமுடியுமோ அவ்வளவுக்கும் உள்ளிழுக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் வெடித்துச் சிதறுகிறது. அது வெடித்ததில் வெளியான மஞ்சள் திரவம் காரத்தன்மை மிகுந்து இருந்ததால் அது எதிரியின் மேல் பட்டதும் அவர்களும் உயிரிழக்கிறார்கள். புல்டாக் எறும்புகளின் படைபலம் குறைகிறது. போர் முடிந்து எக்ஸ்ப்ளோடிங் எறும்புகள் வெற்றி பெறுகிறார்கள். அந்தத் தற்கொலைப் படையின் மகத்தான தியாகத்தால் பல்லாயிரம் எறும்புகளின் வாழ்விடம் பாதுகாக்கப் படுகிறது.



Picture Courtesy: Mark Moffett

ஃபேண்டஸி கதை கேட்பது போல் இருந்ததா! இது கதையல்ல, நிஜம்.

போர்னியோ காடுகளில் வசிக்கும் ஒருவகை எறும்பு இனம் தான் இந்த எக்ஸ்ப்ளோடிங் எறும்புகள். இவை ஆயிரக்கணக்கில் காலனிகளாக வாழக்கூடியவை. பொதுவாகவே எறும்புகளை நாம் அவற்றின் ஒருங்கிணைப்பு, அயராத உழைப்பு, நேரம் தவறாமை போன்ற குணங்களுக்காக ஆச்சரியத்துடன் பார்ப்போம். அந்த வரிசையில் இப்போது இந்த எறும்புகளின் தியாக உணர்வும் சேர்ந்துகொண்டது. பொதுவாகச் சிற்றுயிர்களில் ரசாயனப் போர்முறை அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணமாக பீட்டல் என்ற வண்டு இனம் வேட்டையாடியால் விழுங்கப்பட்டாலும் கூட அதன் உடலில் இருந்து ஒருவகை திரவத்தை வெளியிட்டு அதைக் காயப்படுத்தி அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும். கரையான் கூட சில சமயங்களில் தனது தாடைக்குக் கீழ் இருக்கும் சுரப்பியில் இருந்து எதிரியைத் தோற்கடிக்க திரவத் தாக்குதலைப் பயன்படுத்தும். இவ்வாறு சிற்றுயிர்களில் இது பொதுவான யுக்தியாக இருந்தாலும் எறும்புகளில் இதைத் தற்போது தான் கண்டுபிடித்து உள்ளார்கள் விஞ்ஞானிகள்.



Pictutre Courtesy: Pensoft Publishers

ஆங்கிலத்தில் ஆட்டோதிஸிஸ் ( Autothysis) என்று அழைக்கப்படும் இந்த வகைச் செயலுக்கு கிரேக்க மொழியில் சுயத்தைத் தியாகம் செய்தல் என்று பொருள். அந்த இனத்தில் பிறக்கும் இனப்பெருக்கம் செய்யமுடியாத பெண் எறும்புகளே பெரும்பாலும் இந்த வகைத் தியாகத்தைச் செய்கின்றன. அந்தப் பெண் எறும்புகள் தங்களை வெடிக்க வைத்துக்கொள்ள தன் உடலை உள்நோக்கி இழுக்கும். இரண்டாகப் பிரிந்து இருக்கும் உடல் பகுதிகளை மடக்கித் தன்னைத் தானே உடைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும். அவ்வாறு அது உடையும்போது மஞ்சள் நிறத்தில் பசை போன்ற திரவம் வெளிப்படும். விஷத்தன்மை வாய்ந்த திரவத்தால் பாதிக்கப்படும் எதிரி உயிரினம் இறந்துவிடும்.

தற்கொலைப் படையாகச் செயல்படுவது மட்டுமே இந்த எறும்புகளின் வேலை அல்ல. இருப்பதிலேயே பெரிய தலையைக் கொண்ட எறும்புகள், பல சமயங்களில் எதிரிகள் அவர்களது காலனிக்குள் நுழையாமல் இருக்க அகலமான தனது வாயில் இருந்து வெளிப்படும் உமிழ்நீரைக் கொண்டு தற்காலிகமாக ஒரு தற்காப்புச் சுவரை உருவாக்கும்.



Picture Courtesy: Heinz Wiesbauer

மனித உடலில் இருக்கும் செல்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஏதேனும் ஆபத்தான செல்கள் இருப்பதைக் கண்டுவிட்டால் அதை அழிப்பதற்குத் தன்னையே அழித்துக்கொள்ளும். அதுபோலத் தான் இந்த எறும்புகளும். தமது கூட்டத்தைக் காக்கத் தங்களையே தியாகம் செய்கின்றன. ஹென்றி டேவிட் தோரேவ் எழுதிய பேட்டல் ஆஃப் ஆண்ட்ஸ் என்ற சிறுகதையில் எறும்புகளுக்குள் நடக்கும் சண்டையை அவர் பார்த்ததாக எழுதியிருப்பார். சிறு வயதில் அதைப் படித்தபோது கற்பனைக் கதை என்றே நினைத்திருப்போம். அது எவ்வளவு உண்மை என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துவிட்டது.
மூலிகையே மருந்து 2: நோய்களைப் பதறவைக்கும் ‘குப்பை!

Published : 21 Apr 2018 10:20 IST


டாக்டர் வி. விக்ரம் குமார்





குப்பை என்றாலே யாருக்கும் பயன்படாது என்பதை மையமாக வைத்து, ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’, ‘நீ செல்லாத காசு. உன்னைக் குப்பையிலதான் போடணும்’ என்பன போன்ற சொலவடைகள் நமக்குப் பரிச்சயமானவை. அந்த வகையில் அதிகம் கண்டுக்கொள்ளப்படாத ‘குப்பைமேனி’ எனும் தாவரம், பல்வேறு நோய்களை விரட்டும் வல்லமை படைத்தது.

மழைக் காலத்தில் சர்வ சாதாரணமாக குப்பைமேனியைப் பார்க்க முடியும். பல மருத்துவக் குணங்கள் கொண்ட குப்பைமேனி, அனைத்து இடங்களிலும் சாதாரணமாக வளரக்கூடியது! இதைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடும் வழக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் உண்டு.

பெயர்க் காரணம்:

குப்பைமேனியின் தாவரவியல் பெயர் Acalypha indica. குப்பைமேனி Euphorbiaceae குடும்பத்தைச் சார்ந்தது. மேனியில் உண்டாகும் நோய்களை விரட்டுவதாலேயே, ‘மேனி’ என்ற பெயரும் உண்டு!

அது மட்டுமல்லாமல் அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா மட்டுமன்றி பெரும்பாலான தென்கிழக்கு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்திலும் குப்பைமேனி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘தந்தமூலப்பிணிதீத் தந்திடுபுண்… குன்மம்… வாதம்… தினவு சுவாசம்…’ என நீளும் சித்த மருத்துவப் பாடல், பல்நோய்கள், மூலம், வாத நோய்கள், கப நோய்கள் போன்றவைற்றுக்கு குப்பைமேனி எப்படிப் பயன்படுகிறது என்பதைக் குறித்து விளக்குகிறது.

மருந்தாக:

Acalyphine, Clitorin, Acalyphamide, Aurantiamide, Succinimide போன்ற வேதிப்பொருட்கள் குப்பைமேனியின் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகின்றன.

குப்பைமேனி இலைச் சாறு, ஆடுதீண்டாப்பாளை இலைச்சாறு, நல்லெண்ணெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயை, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர ‘சைனஸைடிஸ்’ பிரச்சினைகள் குறையும். Bacillus subtilis, Escherichia coli, Pseudomonas aeruginosa போன்ற பாக்டீரியா வகைகளை எதிர்த்து, குப்பைமேனியின் உட்பொருட்கள் செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் இலைச் சாறு 200 மி.லி.யோடு, 100 மி.லி. தேங்காய் எண்ணெய் சேர்த்து, நீர் வற்றும்வரை கொதிக்க வைத்து, கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளால் உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளுக்கு (Urticaria) தடவலாம். மூட்டு வலிகளுக்கும் துயரடக்கி செய்கையுடைய இந்த எண்ணெய்யைப் பூசி ஒத்தடம் கொடுக்கலாம்.


வீட்டு மருத்துவம்:

விரல் இடுக்குகளில் ஏற்படும் சொறி, சிரங்கு, தொடை இடுக்குகளில் ஏற்படும் படர்தாமரை போன்றவற்றுக்கு குப்பைமேனி இலையை அரைத்துப் போட விரைவில் குணமாகும்.

கோழையை இளக்கி வெளியேற்றும் செய்கைகொண்ட குப்பைமேனி இலைகளைக் காயவைத்துப் பொடி செய்துகொண்டு, ஒரு கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க இருமல் குணமாகும். இலையை அரைத்து நீரேற்றத்தால் ஏற்பட்ட தலைபாரத்துக்கு நெற்றியில் பற்றுப்போட, பாரம் இறங்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலைக் கட்டுப்படுத்த இதன் இலைச்சாறு ஐந்து துளியும் துளசி இலைச்சாறு ஐந்து துளியும் கலந்து கொடுக்கலாம்.

மலக்கட்டுப் பிரச்சினை தீர, குப்பைமேனி இலைச்சாறு அரை ஸ்பூன் எடுத்து அரை டம்ளர் வெந்நீரில் கலந்து கொடுக்க, மலத்தை நன்றாக இளக்குவதோடு, வயிற்றில் உள்ள புழுக்களையும் அழித்து வெளியேற்றும்.

உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலைச் சாற்றை, நல்லெண்ணெய்யோடு சேர்த்துக் காய்ச்சி வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தலாம். வயதானவர்களுக்குக் கால் மூட்டுக்களில் ஏற்படும் வலியுடன் கூடிய வீக்கங்களுக்கு, குப்பைமேனி இலையைச் சுண்ணாம்புடன் கலந்து பூசலாம்.

குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி சிறுநெல்லிக்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட, உடலில் தோன்றும் வாயுக்கோளாறுகள் நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். பத்து குப்பைமேனி இலைகள், இரண்டு சின்ன வெங்காயம், சிறிது வாழைப்பூ சேர்த்து அரைத்து, சிறுநெல்லி அளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட, மூல நோயில் வடியும் குருதி நிற்கும்.

குப்பைமேனியை மருந்தாக மேற்சொன்ன அளவுகளில் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் வாந்தி, கழிச்சல் உண்டாகும் ஆபத்து உண்டு.

கட்டுரையாளர்,

அரசு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

NEWS TODAY 30.06.2026