Tuesday, June 5, 2018

NEET exam,medical entrance test,நீட்,ரிசல்ட்,கட்சிகளுக்கு,மூக்கறுப்பு
dinamalar 05.06.2018

'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழகத்தில் குரல் எழுப்பிய அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்ட மூக்கறுப்பாக, இத்தேர்வு எழுதிய, 1.14 லட்சம் பேரில், 45 ஆயிரம் மாணவர் - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் வாயிலாக, பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், நீட் தேர்வு நன்றாக எழுதியதன் காரணமாக, டாக்டராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள, 7,470 மருத்துவ படிப்பு இடங்களுக்கு போட்டியிடும் அளவுக்கு, ஆறு மடங்கு மாணவர்கள் தகுதி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டு வந்தனர். இதில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தங்களது பொருளாதார செல்வாக்கை பயன்படுத்தி, தனியார் கல்லுாரிகளில் சேர்ந்தனர். அதனால், டாக்டர்களின் தகுதியும், திறமையும் கேள்விக்குறியானது.

கடும் எதிர்ப்பு :

அதனால், உயிரை காப்பாற்றும் புனித தொழிலான மருத்துவத்தில், தரத்தை உறுதி செய்யும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு, தமிழகத்தில் உள்ள பல கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

'நீட் தேர்வால், தமிழகத்தில் சமூக நீதி பாதிக்கப்படும். தமிழக மாணவர்களால், மருத்துவம் படிக்க முடியாது; பிற மாநில மாணவர்கள், தமிழக மாணவர்களுக்கான இடங்களை அபகரிப்பர்' என்றெல்லாம், இக்கட்சி கள், மத்திய அரசுக்கு எதிராக, தீவிர பிரசாரம் செய்தன.
இப்பிரச்னை, உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதும், 'நீட் தேர்வு கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டது.




இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட, அனைத்து மாநிலங்களுக்கும், நீட் தேர்வு கட்டாயமானது. இதில், தமிழக அரசு, விலக்கு கேட்டும் கிடைக்கவில்லை. எனவே, நீட் தேர்வுக்கு, தமிழக அரசின் சார்பில், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், நீட் தேர்வு, மே, 6ல், நாடு முழுவதும் நடந்தது. இதன் முடிவுகளை நேற்று, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டது. நாடு முழுவதும், தேர்வு எழுதிய, 12.69 லட்சம் பேரில், 56 சதவீதமான, 7.14 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம், 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட தேர்வில், சென்னை, பத்மசேஷாத்ரி பள்ளி மாணவி, கே.கீர்த்தனா, 676 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், 12ம் இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில், 1.14 லட்சம் பேர், நீட் தேர்வை எழுதினர். அவர்களில், 45 ஆயிரத்து, 336 பேர், தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லுாரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். அதாவது, தேர்வு எழுதியோரில், 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் வாயிலாக,

கவுன்சிலிங் நடத்தப்படும். இதில், மொத்த இடங்களில், 85 சதவீதம், நீட் தேர்ச்சி பெற்ற, தமிழக மாணவர்களுக்கே வழங்கப்படும். 85 சதவீத இட ஒதுக்கீட்டில், தோராயமாக, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 3,894 இடங்களும், பி.டி.எஸ்., என்ற, பல் மருத்துவ படிப்புக்கு, 1,880 இடங்களும் என, மொத்தம், 5,774 இடங்கள் உள்ளன.

மேலும், இந்த ஆண்டு முதல், நீட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள, இந்திய மருத்துவமான - ஆயுஷ் படிப்புகளுக்கு, 1,696 இடங்கள் உள்ளன. எனவே, தமிழக ஒதுக்கீட்டில், மொத்தம், 7,470 மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றுக்கு, இந்த இடங்களை விட, ஆறு மடங்கு அதிகமாக, 45 ஆயிரத்து, 336 மாணவர்கள் போட்டியில் உள்ளனர்.

'நீட் தேர்வால், தமிழகத்தில் சமூக நீதி பாதிக்கப்படும்; தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு பாழாகி விடும்' என்றெல்லாம் பிரசாரம் செய்த, கட்சிகளுக்கு ஏற்பட்ட மூக்கறுப்பாக, 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்க தகுதி பெற்றுள்ளனர். இதன் காரணமாக, பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், நீட் தேர்ச்சி மூலமாக, மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அரசு ஒதுக்கீடு :

தமிழகத்தில், நிகர்நிலை பல்கலைகளில், 1,349 மருத்துவ இடங்கள் உள்ளன. அவற்றுடன், அகில இந்திய ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., 456 மற்றும் பி.டி.எஸ்., 30 இடங்களையும் சேர்த்து, 1,835 இடங்களிலும், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தமிழக மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த, மத்திய அரசு ஒதுக்கீட்டிலும் சேர முடியும்.

குறைந்த மதிப்பெண் எவ்வளவு?

'நீட்' தேர்வில், மருத்துவ இடங்களில் சேருவதற்கான, 'கட் ஆப்' என்ற, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 'கட் ஆப்' ஒன்பது மதிப்பெண் குறைந்துள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களது இன அடிப்படையில், குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. இதன்படி, பொதுப் பிரிவினருக்கு, 119 மதிப்பெண் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில், 691 மதிப்பெண் வரை, 6.35 லட்சம் மாணவர்கள் பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில், மாற்றுத் திறனாளிகளுக்கு, குறைந்தபட்சமாக, 107 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினருக்கும், குறைந்தபட்ச மதிப்பெண், 96. பிற்படுத்தப்பட்டோரில், 54 ஆயிரத்து, 653 பேர்; தலித் பிரிவில், 17 ஆயிரத்து, 209; பழங்குடியினர், 7,446 பேர், இந்த குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளில், பொதுப் பிரிவினர், 205; பிற்படுத்தப்பட்டோர், 104; தலித், 36; பழங்குடியினர், 12 பேர், தகுதி பெற்றுள்ளனர். இந்த பட்டியலின்படி, குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்கள், மருத்துவ படிப்பில் சேர தகுதியானவர்கள். அவர்களுக்கு, அகில இந்திய தர வரிசை பட்டியலின் படி, மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.
மோசம்!

நாடு முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரிகளின் தரம்...
பணியில் அமர்த்த லாயக்கில்லாத 94 சதவீத பட்டதாரிகள்


புதுடில்லி : நாடு முழுவதும், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக, பிரபல, தகவல் தொழில் நுட்ப நிறுவன நிர்வாகி கூறியுள்ளார். 'இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 94 சதவீதம் பேர், வேலையில் நியமிக்க தகுதி அற்றவர்கள்' என, அவர் கூறியிருப்பது, இன்ஜினியரிங் மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.



கடந்தாண்டு, 'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' என்ற வேலை மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், 'நாட்டின், 95 சதவீத இன்ஜினியர்கள், மென்பொருள் மேம்பாட்டு வேலையில் சேர்க்க தகுதி அற்றவர்கள்' எனத் தெரிய வந்தது. இந்த ஆய்வு முடிவை, பிரபல தகவல் தொழில் நுட்ப வல்லுனர், மோகன்தாஸ் பாய், திட்டவட்டமாக மறுத்தார். 'இந்த ஆய்வு முடிவுகள், வெறும் குப்பை' என, அவர் கடுமையாக சாடி இருந்தார்.

'மணிபால் குளோபல் எஜுகேஷன்' நிறுவன தலைவரான, மோகன்தாஸ் பாய், 'இன்போசிஸ்' நிறுவன இயக்குனர் குழுவில் உறுப்பினராக இருந்தவர். 'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' ஆய்வு முடிவை, பயோகான் நிறுவன தலைவர், கிரண் மஜும்தாரும் நிராகரித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய தகவல் தொழில் நுட்ப துறை ஜாம்பவான்களில் ஒருவரான, டெக் மஹிந்திரா நிறுவன தலைவரும், மேலாண்மை இயக்குனருமான, சி.பி.குர்னானி கூறியுள்ளதாவது: இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தரம் மோசமாக உள்ளதால், இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 94 சதவீதம் பேர், வேலைக்கு தகுதி அற்றவர்களாக உள்ளனர். நாட்டின், 10 முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 6 சதவீதம் பேரை மட்டுமே பணியில் அமர்த்துகின்றன. மீதமுள்ள, 94 சதவீதம் பேரின் நிலை என்ன?

வேலையில் நியமிப்பதற்கான திறனுடன் இன்ஜினியரிங் பட்டதாரிகள் இல்லாததால், அவர்களை பணியில் அமர்த்திய பின்,

அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காகவே, டெக் மஹிந்திரா நிறுவனம், 5 ஏக்கர் நிலத்தில், 'டெக் அண்ட் லேர்னிங் சென்டர்' என்ற பயிற்சி மையத்தை நிறுவியுள்ளது. பிற முன்னணி நிறுவனங்களும், பயிற்சி மையங்களை நிறுவி, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கின்றன.

வேலையில் நியமிக்கப்படும் பட்டதாரிகளை, விஷய ஞானம் உள்ளவர்களாக, தக்க திறன் பெற்றவர்களாக, வேலைக்கு உகந்தவர்களாக மாற்றும் பெரிய பொறுப்பு, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தலையில் விழுந்துள்ளது.

டில்லி போன்ற பெரிய நகரங்களில், பிளஸ் 2 தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவன், பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பதில்லை; மாறாக, இன்ஜினியரிங் படிப்பில் சேர்கிறான். இத்தகைய மாணவர்களை, வேலையில் சேர்வதற்கான தகுதி உடையவர்களாக மாற்றும் வகையில், நம் கல்வி இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

இந்திய தகவல் தொழில் நுட்ப துறைக்கு, திறமைசாலிகளே தேவை. 2022க்குள், தகவல் தொழில் நுட்ப துறைக்கு, 60 லட்சம் ஊழியர்கள் தேவை என, 'நாஸ்காம்' எனப்படும், தேசிய மென் பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது. ஆனால், நம்மிடம் திறமைசாலிகளுக்கு பற்றாக்குறை உள்ளது; இது, மிகப்பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

குர்னானியின் கருத்து, ஆஸ்பைரிங் மைண்ட்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளை பிரதிபலிப்பதாக உள்ளது. இக்கருத்து, இன்ஜினியரிங் மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தரமற்ற கல்லுாரிகளுக்கு மூடுவிழா :

இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பின் தரம் மிகக் குறைவாக உள்ளதென்ற கருத்து, சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. ஐ.ஐ.டி., போன்ற, தொழில்நுட்ப கல்வி மையங்கள் தவிர, பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லுாரிகளால், தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியவில்லை.

தரம் குறைந்த இன்ஜினியரிங் கல்லுாரிகள், நாடு முழுவதும் புற்றீசல் போல், பல ஆண்டுகளாக முளைத்து விட்டதே, இந்த நிலைக்கு காரணம் என, இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அதனால், இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இத்தகைய கல்வி நிறுவனங்கள் அதிகளவில் மூடப்பட்டு வருகின்றன. இதனால், நடப்பாண்டில் மட்டும், 80 ஆயிரம் இடங்கள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் குறைந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், 3.1 லட்சம் இடங்கள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில், 200 இன்ஜினியரிங் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

1.4 சதவீதம் மட்டுமே, 'ஓகே' : 'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' நிறுவனம் நடத்திய ஒரு தேர்வில், 4.77 சதவீத மாணவர்கள் மட்டுமே, ஒரு மென்பொருளுக்கான, சரியான தர்க்கத்தை எழுதக் கூடியவர்களாக இருந்தனர். 500 கல்லுாரிகளில், தகவல் தொழில் நுட்ப பிரிவில் பயின்ற, 36 ஆயிரம் பேர், 'ஆட்டோமேடா' என்ற, மென்பொருள் மேம்பாட்டு திறன் மதிப்பீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில், 60 சதவீதம் பேரால், சரியான மென்பொருள் கட்டளைகளை எழுத இயலவில்லை. 1.4 சதவீதம் பேர் மட்டுமே மிக சரியான மென் பொருள் கட்டளை எழுதுபவராக இருந்தனர். 'மெக்கானிகல் டிசைன்' இன்ஜினியர்களில், 5.55 சதவீதம் பேர், சிவில் இன்ஜினியர்களில், 6.48 சதவீதம் பேர், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்களில், 7.07 சதவீதம் பேர் மட்டுமே, பணியில் அமர்த்தக்கூடிய திறன் பெற்றவர்கள் என, ஆஸ்பை
மாவட்ட செய்திகள்

சேலத்தில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழை




சேலத்தில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு குடியிருந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஜூன் 04, 2018, 04:55 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மாலை வேளையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாநகரில் நேற்று மாலை 4 மணியளவில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், இடியுடன் பலத்தமழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலையிலும், தாழ்வான பகுதியிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக ஆங்காங்கே உள்ள கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.

சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ்நிலையம், கிச்சிபாளையம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, களரம்பட்டி, அழகாபுரம், மணக்காடு, அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு பாதிப்பு ஏதும் இல்லை. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

பெரமனூர் நாராயணன் தெரு 20 அடி ரோடு, கோவிந்தகவுண்டர் தோட்டம், மணக்காடு ராஜகணபதி நகர், களரம்பட்டி, மேயர் நகரில் 5-வது தெரு உள்ளிட்ட பகுதியில் மழை நீர் சாக்கடை கழிவுநீருடன் கலந்து தெருவில் ஆறாக ஓடியது. பெரும்பாலான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றதால் நடைபயிற்சிக்கு வந்தவர்கள், பயிற்சியில் ஈடுபடமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரமனூர் மெயின்ரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு பின் தங்களது வாகனங்களை மெதுவாக ஓட்டி சென்றனர்.
மாநில செய்திகள்

நீட் தேர்வு முடிவு: முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி





நீட் தேர்வு முடிவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார். #NeetExam

ஜூன் 04, 2018, 04:53 PM

மே 6-ல் நடந்த நீட் தோ்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். தமிழகத்தில் 1,14,602 மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ளனா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.

180 கேள்விகள். தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து பீகாரை சேர்ந்த மாணவி கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியலில் 180க்கு 171, வேதியியலில் 180க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் தேர்வு முடிவு 12.30 மணிக்கே வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ,தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 45336 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது 39.55 சதவீதம் ஆகும் .தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 12 வது இடம் பிடித்து உள்ளார்.

தமிழில் தேர்வு எழுதிய 24,720 பேரில் 1.86 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் நீட் தேர்வில் அதிகம் தேர்வு அடைந்து உள்ளனர். 76,778 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

வெளிநாடு வாழ் மாணவர்களில் 1200 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

நீட் தேர்வு முடிவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

இரண்டாவது இடம் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரோகன் புரோகித்துக்கு கிடைத்துள்ளது. அவர் எடுத்த மதிப்பெண்கள் 690.
அதே போல டெல்லியை சேர்ந்த ஹிமான்ஷூ ஷர்மா 690 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

முதல் 50 இடங்கள் பெரும்பாலானவை வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்த 7,314 மாணவர்கள் வேறு மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதி உள்ளது தெரியவந்துள்ளது

இந்தியா முழுவதும் தேர்ச்சி விகிதம் 53.85 ஆக உள்ளது. சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 7,14,563 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தகுதி மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். இதில் பொதுப்பிரிவினர் 119 கட் -ஆஃப் மதிப்பெண்ணையும், மற்ற பிரிவினர் 96 கட்-ஆஃப் மதிப்பெண்ணை பெற்றிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட செய்திகள்
 
அரசு ஊழியர்களுக்காக சென்னை அண்ணாநகரில் 606 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள்

அரசு ஊழியர்களுக்காக சென்னை அண்ணாநகரில் 606 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள்
 
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் கட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கான 606 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகளை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். 
 
சென்னை,

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் ஏற்கனவே இருந்த அரசு ஊழியர்களுக்கான 126 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகள் பழுது காரணமாக இடிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வாடகைக் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் ரூ.200 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அந்த இடத்தில் அரசு ஊழியர்களுக்காக 606 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இந்த வாடகை குடியிருப்புகளை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதேபோல திருவள்ளூர் மாவட்டம் எலாவூரில் ரூ.23 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தலைமை செயலகத்தில் திறந்துவைத்தார். மேலும் ரூ.381 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள 3 ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் 2 புறவழிச்சாலைகளுக்கும் அடிக் கல் நாட்டினார்.

ஆவடியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
மாநில செய்திகள்
 
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 11-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 11-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
 
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 11-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 
 
சென்னை,

தமிழ்நாடு மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் கிடைக்கும். வருகிற 11-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். விண்ணப்பங்கள் 18-ந் தேதி வரை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19-ந் தேதி (மாலை 5 மணிக்குள்) ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘செயலாளர், தேர்வுக்குழு, 162, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10’, என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

தரவரிசை பட்டியல் 28-ந் தேதி வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெறும்.

2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 22-ந் தேதி முதல் ஜூலை 24-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது. கல்லூரிகளில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். 18-ந் தேதிக்குள் அனைத்து மாணவர்களும் சேர்ந்துவிட வேண்டும்.

மற்ற விவரங்கள் அனைத்தையும் www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதள முகவரிக்கு சென்று பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Boy who took exam in Ernakulam scores low 

L. Renganathan 

 
TIRUVARUR, June 05, 2018 00:00 IST


Kasturi Mahalingam, who was allotted Ernakulam to take NEET, scored low marks because of the resultant pressure. His father died following a cardiac arrest, his mother, Bharathi Mahadevi, said. He could muster just 84 marks in the exam.

Krishnasamy Srinivasan of Thiruthuraipoondi in Tiruvarur district, who accompanied his son Kasturi to the exam centre, died following a cardiac arrest in Kochi.

The boy was allotted a centre in Ernakulam and he and his father had to rush to the exam centre under extreme pressure, Ms. Bharathi Mahadevi said.

“Now, it is up to the State government to do something to help my son become a doctor and realise the dream of his father,” she said. Kasturi Mahalingam had secured 825 out of 1,200 marks in the Plus Two exams.

NEWS TODAY 14.02.2026