Tuesday, August 14, 2018


இனி வினாத்தாள், 'அவுட்' ஆகாதுசி.பி.எஸ்.இ.,க்கு மைக்ரோசாப்ட் உதவி 


dinamalar 14.08.2018

புதுடில்லி : இந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதால், சர்ச்சையில் சிக்கிய, சி.பி.எஸ்.இ., வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நிகழாமல் தடுக்கும் வகையில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.





சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், இந்தாண்டு நடத்திய, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியானதால் சர்ச்சை எழுந்தது. இதனால், சி.பி.எஸ்.இ.,க்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், வருங்காலத்தில், வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க திட்டமிட்ட, சி.பி.எஸ்.இ., அமெரிக்காவை ச் சேர்ந்த, தகவல் தொடர்பு துறை ஜாம்பவான் நிறுவனம், மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துள்ளது.

இரு நிறுவனங்களும் செய்துள்ள ஒப்பந்தப்படி, சி.பி.எஸ்.இ.,யின் டிஜிட்டல் கேள்வித்தாள்கள், வெளியாகாத வகையில், அதீத பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த தொழில்நுட்ப தீர்வை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும்.

இதுகுறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண்மை இயக்குனர், அனில் பன்சாலி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., நடத்தும் தேர்வுகளின்போது, டிஜிட்டல் முறையிலான கேள்வித் தாள்கள், தேர்வு துவங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன் வரை,

பார்க்க முடியாத வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக உருவாக்கப்படும்.

அதற்கென, பிரத்யேக தொழில் நுட்பத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி உள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் தயாராகும் வினாத்தாள்கள், சிறப்பு குறியீடு உடையவை. எனவே, எந்த சமயத்தில் தவறு நிகழ்ந்தாலும், எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்த தொழில் நுட்பம் தொடர்பாக நடந்துள்ள அனைத்து சோதனைகளும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய ரயில்வே அட்டவணை : நாளை வெளிவரும்

Added : ஆக 14, 2018 05:27



புதுடில்லி: நாளை முதல் புதிய ரயில்வே கால அட்டவணை இணையதளத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ரயில்வே அட்டவணை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆகஸ்டு 14 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த முறை புதிய ரயில்வே கால அட்டவணையை ஐ.ஆர்.சி.டி.சி. தயாரித்துள்ளது. இந்தப் புதிய கால அட்டவணை நாளை முதல் (ஆக.15) முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும், நாளையே இணையத்தளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய கால அட்டவணையில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பல விரைவு ரயில்களின் புறப்படும் நேரமும் சேரும் நேரமும் மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தவிர புதிய கால அட்டவணையைப் புத்தகமாக அச்சிடும் பணி மும்பையில் நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒருவாரத்தில் புத்தகங்கள் ரயில்நிலையங்களில் விற்பனைக்கு வரும்


Monday, August 13, 2018

கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து அஞ்சலி

By DIN | Published on : 12th August 2018 04:33 PM |



சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். பின்னர் புதனன்று அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி வளாகத்தின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார்.

மு.க.முத்துவுடன் அவரது குடும்பத்தினரும் உடன் வந்து இருந்தனர். கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு.க. முத்து என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக உடல்நலக் குறைவின் காரணமாக வெளியே எங்கும் செல்லாமல் இருந்த அவர், தற்போது தனது தந்தை கருணாநிதியின் நினைவிடத்திற்கு முதன்முறையாக வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் எண்பது கவனிக்கத்தக்கது.
வரிகளால் ஆய பயன் என்?

By வெ.ந. கிரிதரன் | Published on : 13th August 2018 02:45 AM |

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். நாட்டு நடப்புகள் குறித்து கலந்துரையாடி கொண்டிருந்தபோது வருமான வரி குறித்து பேச்சு வந்தது. "நாங்கள் எல்லாம் உயர் வருவாய் பிரிவின்கீழ் வருவதால் 30 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு அதிகமாக வரி விதிப்பது எந்த விதத்தில் நியாயம்' என பேச்சை ஆரம்பித்தவர், "எங்களை இத்துடன் விட்டுவிட்டால் பரவாயில்லை. ஹோட்டலுக்கு சென்றால் ஜி.எஸ்.டி., தியேட்டருக்கு போனால் ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசலுக்கு 50 சதவீதத்துக்கு மேல் வரி, போதாகுறைக்கு சமையல் எரிவாயு மானியத்தையும் விட்டுக் கொடுங்கள் எனவும் கேட்கின்றனர்.

சரி, நாம் நன்றாக சம்பாதிப்பதன் பயனாக வருமான வரி செலுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறோம் என மகிழ்ச்சி கொள்ளலாம் என்றால் அதுவும் முடியவில்லை' என வருந்தினார்.
"மின்னல் வேகத்தில் வாகனங்கள் பறக்கும் நான்கு வழி, ஆறு வழி, எட்டு வழி சாலைகள் உள்ள இதே நாட்டில்தான், குண்டும் குழியுமான சாலைகளும், இன்னும் சாலை வசதியையே காணாத ஆயிரக்கணக்கான கிராமங்களும் இருக்கின்றன. ஆனால், நாட்டின் எந்த மூலையில் வசிப்பவராக இருந்தாலும், அவர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும்போது, அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும்போது ஆயுள்கால சாலை வரி என மொத்தமாக ஒரு தொகையை வசூலித்து விடுகின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு மணி நேரம் தொடர்ந்தால் போல் மழை பெய்தால் போதும். மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து குளம் போல் தேங்கி நிற்கும்படிதானே உள்ளன இங்கு உள்கட்டமைப்பு வசதிகள்?

உயர்கல்விக்கு 2 சதவீதம், பள்ளிக்கல்விக்கு 1 சதவீதம் என கல்விக்கென தனியாக வரி வசூலிக்கப்பட்டாலும் (எஜுகேஷன் செஸ்), மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு தரவேண்டியது கட்டாயமென சட்டம் போட்டிருப்பது, அரசாங்கமே தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிப்பது போல இல்லையா?

அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், அவசர மருத்துவத் தேவைக்கு நாம் விரும்பியோ, விரும்பாமலோ தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று லட்சக்கணக்கில் செலவு செய்துதானே மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளது?
உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குறிப்பாக, சென்னை போன்ற மாநகராட்சிகளுக்கு குடிநீருக்காக வரி செலுத்திவிட்டு, அன்றாட தேவைகளுக்காக லாரி தண்ணீரையும், குடிநீருக்கு கேன் தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கும் அவலநிலை நம் மக்களைத் தவிர உலகின் வேறெந்த நாட்டு மக்களுக்காவது ஏற்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.
குடிநீருக்காக குடங்களைச் சுமந்துக் கொண்டு மக்கள் வீதி வீதியாக அலைவதும், தண்ணீர் கேட்டு தொண்டைநீர் வற்ற பொதுமக்கள் சாலை மறியல் செய்வதும் ஒவ்வொரு கோடையிலும் நடக்கும் கொடுமைகளாகத்தானே தொடர்கின்றன?

அரசு இயந்திரத்தின் அலட்சிய போக்கால், தங்கள் ஊரின் ஏரி, குளம், கால்வாய்களை தங்களது சொந்த செலவில் தூர்வார வேண்டிய துர்பாக்கிய நிலைக்கும் அல்லவா நம் மக்கள் தள்ளப்படுகின்றனர்?
இவையெல்லாவற்றுக்கும் மேலாக, செய்யும் வேலைக்கான சரியாக ஊதியம் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. "அவுட்சோர்சிங்' எனப்படும்

அயல்பணி நியமனமுறையை கொண்டு வந்து, பணியாளர்களின் சம்பளத்திலும் மாதந்தோறும் கைவைத்து விடுகின்றனர்.
ஏடிஎம்-களில் இவ்வளவு முறைக்கு மேல் பணம் எடுத்தால் அபராதம், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் இவ்வளவு தொகை இல்லையென்றால் அதற்கும் அபராதம், ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கும் வரி என,வங்கிகளும் தங்கள் பங்குக்குக் கொள்ளை அடித்து வருகின்றன.

இப்படி தரமான கல்வி, மருத்துவம், சுத்தமான குடிநீர், சிறப்பான உள்கட்டமைப்பு வசதி, உழைப்பை சுரண்டாத வேலை என ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் வருமான வரி, சாலை வரி, ஜி.எஸ்.டி. என பல்வேறு வரிகளை ஓர் அரசு வசூலிப்பதால் ஆன பயன் என்ன' என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் நண்பர்.
"இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? நம் நாடு வளர்ச்சி அடையவே இல்லையென சொல்கிறீர்களா?' என அவரிடம் கேட்டேன். "அப்படிச் சொல்லிவிட முடியாது; நம் தேசத்தின் வளர்ச்சி சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியாக இல்லை என்பதுதான் என் வருத்தம்' என்றார் அவர்.

அவரது இந்த வருத்தத்தை நேர்மையாக வரி செலுத்தும் அனைவரின் ஒட்டுமொத்த குரலாகதான் நாம் பார்க்க வேண்டும். இத்தகையோரின் ஆதங்கத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து வருமான வரிவிதிப்பு மற்றும் வசூலிக்கும் முறையில் அதிரடி சீர்திருத்தங்களை கொண்டு வருவது அவசியமாகும். 

அதாவது, அதிகமாக சம்பாதித்தால் அதிக வரிவிதிப்பு என்றில்லாமல், அனைவருக்கும் சமமான அளவு வரி விதிக்கும் முறையை கொண்டுவர வேண்டும். அத்துடன், அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு வருமான வரி விதிப்பில் கடைப்பிடிக்கப்படும் டி.டி.எஸ். முறை போன்று, பல்வேறு சுயதொழில் புரிவோர், வணிகர்கள், பலவித சேவை நிறுவனங்களை நடத்துவோர் என பலதரப்பினரும் வருமான வரி ஏய்ப்பு செய்யாதபடி புதிய வழிமுறையை கண்டறிந்து அதனைக் கடுமையாக செயல்படுத்த வேண்டும். 

பல்வேறு வரி இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் வகுக்கப்படும் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பை, பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் மட்டும் ஒப்படைக்காமல், வாய்ப்புக்காக காத்திருக்கும் நம் இளைஞர்களை கொண்டு நடத்தப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் அவற்றில் சரி பங்கு தர வேண்டும்.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கலின்போது, முந்தைய நிதியாண்டில் கிடைத்த மொத்த வரி வருவாய் எவ்வளவு, அதில் எந்தெந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது, அத்திட்டங்களில் தற்போதைய நிலை என்ன என்பவை குறித்தும் மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவைதான், நேர்மையாக வரி செலுத்தும் குடிமக்களுக்கு ஓர் நல்லரசு தரும் வெகுமதியாக இருக்கும்.

ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் பட்டு

Added : ஆக 13, 2018 01:55




ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று நடக்கும் ஆடித்தேரோட்டத்தை முன்னிட்டுஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு மற்றும் மங்கலபொருட்கள் நேற்று கொண்டு வரப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், தினமலர் திருச்சி பதிப்பு ஆசிரியர் ஆர். ராமசுப்பு, அறங்காவலர்கள் டாக்டர் ஸ்ரீனிவாசன், ரெங்காச்சாரி, கவிதா மற்றும் சுந்தர் பட்டர் ஆகியோர் கொண்டு வந்த பட்டுவஸ்திரம் மற்றும் மங்கல பொருட்களை, ஆண்டாள் கோயில் தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் மாடவீதிகள் சுற்றி, வரபட்டு ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதைப்போல் மதுரை கள்ளழகர் கோயிலிலிருந்தும் நேற்று மாலை 6:00 மணியளவில் பரிவட்டங்கள் கொண்டு வரப்பட்டு, ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.
கனமழை அறிவிப்பால் அச்சத்தில் மூணாறு மக்கள்

Added : ஆக 13, 2018 00:55

மூணாறு: மூணாறில் கடந்த மூன்று நாட்களாக மழை குறைவாக இருந்தாலும்,கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கேரளாவில் தென்மேற்கு பருவமழை மற்ற பகுதிகளைக்காட்டிலும், மூணாறில் அதிகம் பெய்யும். இந்தாண்டு பருவமழை மே 29ல் துவங்கி ஒரு வாரம் பெய்தது. அதன்பிறகு அவ்வப்போது கன மழை பெய்த நிலையில், இம்மாத துவக்கத்தில் மழை குறைந்து வெயில் முகம் காட்டியது.இந்நிலையில் ஆக.6 முதல் மழை தீவிரமடைந்து ஆக.9ல், 34.64 செ.மீ., பெய்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டு,போக்குவரத்து பாதிக்கப்பட்டது .அதன்பின் மழை வெகுவாக குறைந்தது. ஆக.10ல் 7.04, 11ல் 8.10, நேற்று காலை 8:30மணிப்படி 6.34 செ.மீ., என பதிவானது. எனினும் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். -----
மருத்துவம்: 76 இடங்களுக்கு கவுன்சிலிங்

Added : ஆக 13, 2018 01:35

சென்னை : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 192 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 76 இடங்களுக்கு இன்று கவுன்சிலிங் நடக்கிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 3,501 எம்.பி.பி.எஸ்., - 1,198 பி.டி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7 வரை நடந்தது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பி வகுப்புகள் துவங்கின. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாதவை, கவுன்சிலிங்கில் இடம் பெற்று, கல்லுாரியில் சேராதவர்கள் என, 268 இடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார், அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், 35 இடங்கள் நிரம்பின. நேற்று நடந்த கவுன்சிலிங்கில், 940 மாணவர்கள் பங்கேற்றதில், 157 பேர் இடங்கள் பெற்றனர். இரண்டு நாட்களில், மொத்தம், 192 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 76 இடங்களை நிரப்ப, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.

NEWS TODAY 28.06.2026