Saturday, September 8, 2018

குட்கா,முறைகேடு,Sasikala,சசிகலா,சூத்திரதாரி,
dinamalar 08.09.2018

தமிழகத்தை உலுக்கும், 'குட்கா' முறைகேட்டுக்கு சூத்திரதாரியாக, சசிகலா இருந்திருக்கலாம் என, சி.பி.ஐ., வட்டாரத்தில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், 'அப்ரூவர்' ஆன, குட்கா ஆலை உரிமையாளர், யார் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதை, விசாரணையில் அம்பலப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக, சி.பி.ஐ., அதிகாரிகள், புதிய கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், 2013ல், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட, போதை பொருட்களை விற்க, ஜெ., அரசு தடை விதித்தது. எனினும், கடைகளில் அவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. வருமான வரித்துறை அதிகாரிகள், 2016ல், சென்னையில் உள்ள, குட்கா, பான் மசாலா நிறுவனங்களில், அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, 250 கோடி ரூபாய் அளவிற்கு, தமிழகத்தில், சட்ட விரோதமாக, குட்கா வர்த்தகம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா தயாரிப்பாளர் மாதவ ராவுக்கு சொந்தமான, சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள, குடோனில் நடத்திய சோதனையில், 'டைரி' ஒன்று சிக்கியது. அதில், குட்கா விற்பனை செய்ய, அமைச்சர்கள், மூத்த போலீஸ் அதிகாரிகள் போன்றோருக்கு, எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விபரத்தையும், மாதவ ராவ் எழுதி வைத்திருந்தார்.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள், அப்போது,




தமிழக, டி.ஜி.பி.,யாக இருந்த அசோக்குமாருக்கு, கடிதம் அனுப்பினர். அவர் அந்தக் கடிதத்தை, முதல்வருக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின் மீது, தமிழக அரசு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன்பின், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, 2017ல், குட்கா ஊழல் குறித்து, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு விசாரணை, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.

சி.பி.ஐ., அதிகாரிகள், சில தினங்களுக்கு முன், மாதவ ராவிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல் அடிப்படையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர், ஜார்ஜ், வணிக வரித்துறை முன்னாள் அமைச்சர், ரமணா மற்றும் பல்வேறு அதிகாரிகள் வீடுகளில், செப்., 5ல், அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், குட்கா நிறுவன உரிமையாளர்களான மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் வரி அதிகாரி பாண்டியன், மாநில உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள், சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மத்தியில், இடைத்தரகர்களான ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். கைதான குடோன் உரிமையாளர், அப்ரூவராக மாறி உள்ளார். அவர், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், முன்னாள் முதல்வர், ஜெ.,வின் தோழியும், தற்போது பெங்களூரு சிறையில் இருப்பவ ருமான, சசிகலாவும் சிக்குவார் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

குட்கா ஊழல் குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள்,

2016ல், டி.ஜி.பி.,க்கு எழுதிய கடிதம்; அது தொடர்பாக, முதல்வருக்கு, டி.ஜி.பி., அனுப்பிய கோப்பு ஆகியவை, 2017 நவ., 17ல், போயஸ் கார்டனில் உள்ள சசிகலா அறையில் கண்டுபிடிக்கப்பட்டன.

முதல்வர் பார்வைக்கு, டி.ஜி.பி., அனுப்பிய கடிதமும், கோப்பும், சசிகலா அறையில் கண்டுபிடிக்கப்பட்டது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு, குட்கா ஊழலில் பங்கு உள்ளதா; வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் அடிப்படையில், விசாரணை நடத்த விடாமல், அவர் தடுத்தாரா; ஜெ., பார்வைக்கு கடிதம் செல்லாமல் மறைத்தாரா என்ற, கேள்விகள் எழுந்தன.

இதுகுறித்து, தற்போது, சி.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது. இதன் காரணமாக, குட்கா ஊழல் வழக்கில், மேலும் பல தலைகள் சிக்கலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

காவலில் விசாரிக்க திட்டம்!

'குட்கா' முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 'குடோன்' உரிமையாளர்கள் உள்பட ஐந்து பேரை, காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் மற்றும் கலால் வரி அதிகாரி எம்.கே.பாண்டியன் ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களை, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று மற்றும் நாளை விடுமுறை தினம் என்பதால் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் திங்கள் கிழமை தாக்கல் செய்ய உள்ளனர்.
வரவிருக்கும் விசேஷங்கள்
  • செப்டம்பர் 11 (செ) பாரதியார் நினைவு தினம்
  • செப்டம்பர் 13 (வி) விநாயகர் சதுர்த்தி
  • செப்டம்பர் 21 (வெ) மொகரம்
  • செப்டம்பர் 22 (ச) மகா பிரதோஷம்
  • செப்டம்பர் 25 (செ) மகாளயபட்சம் ஆரம்பம்
  • அக்டோபர் 2 (செ) காந்தி ஜெயந்தி
விரைவில் பெயர் மாறுகிறது ஐ.ஆர்.சி.டி.சி.,

Added : செப் 07, 2018 18:49 |

 

புதுடில்லி : உச்சரிக்க எளிமையாகவும், எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையிலும், ஐ.ஆர்.சி.டி.சி.,யின்(இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம்) பெயர் மாற உள்ளது. இதற்கான அறிவிப்பு 2 மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி.,யின் பெயரை மாற்ற கடந்த ஆண்டு இந்தியன் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு 1,852 பேர் தங்கள் தேர்வு செய்த பெயரை பதிவு செய்திருந்தனர். இதிலிருந்து 700 பேரின் பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது அதிலிருந்து ஒரு பெயரினை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு பதிலாக தேர்வு செய்ய சிறந்த பெயர் பட்டியலை கொண்டு வரும் படி இந்தியன் ரயில்வே அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். உச்சரிக்க எளிதாக இருக்கும் படியும், மனதில் பதியும்படியும் அப்பெயர் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 2 மாதத்திற்குள் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை தமிழக அமைச்சரவை நாளை அவசர கூட்டம்



தமிழக அமைச்சரவை நாளை அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரைப்பது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 08, 2018 05:45 AM
சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை வரவேற்று உள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது மகன் விடுதலை தொடர்பாக முதல்-அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, இந்த பிரச்சினையில் அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும விடுதலை செய்வது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும், பின்னர் அந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன் ஆகிய 3 பேரும், சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, தங்களை விடுதலை செய்யக் கோரி கவர்னர், முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நேற்று தனித்தனியே சிறைத்துறை மூலம் நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்த தகவலை நேற்று சிறையில் நளினியை சந்தித்து பேசிய அவரது வக்கீல் புகழேந்தி, பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

நளினி 6 மாதம் பரோல் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்ததாகவும், அந்த மனுவை நேற்று அவர் வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும் புகழேந்தி கூறினார்.
தலையங்கம்

தமிழக அரசும், கவர்னரும்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்





1991–ம் ஆண்டு மே 21–ந்தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டு தாக்குதலால் ராஜீவ்காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கடுகளவும் யாரும் நியாயப்படுத்த முடியாது.

செப்டம்பர் 08 2018, 04:00

1991–ம் ஆண்டு மே 21–ந்தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டு தாக்குதலால் ராஜீவ்காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கடுகளவும் யாரும் நியாயப்படுத்த முடியாது. ராஜீவ்காந்தி விரும்பிய தமிழக மண்ணில் நடந்த இந்த சம்பவம் தமிழக மக்களின் மனதில் ஆறாத சோகவடுக்களை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை செய்து 26 பேரை கைது செய்தது. பூந்தமல்லியில் தடா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, 26 பேருக்கும் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த அப்பீலை உச்சநீதிமன்றம் விசாரித்து, முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை என்பதை உறுதிசெய்து, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, மற்ற 19 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தநேரத்தில், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவெடுத்து, கவர்னர் பாத்திமாபீவிக்கு அனுப்பிய நேரத்தில் முதலில் ஏற்றுக்கொள்ளாத கவர்னர், உயர்நீதிமன்றத்தில் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு எதிராக கவர்னர் செயல்பட முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்ட காரணத்தால், நளினியின் தூக்குத்தண்டனையை 2000–ம் ஆண்டில் ஆயுள் தண்டனையாக குறைத்தார். தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளனும் 11 ஆண்டுகளுக்கு மேல் நடத்திய சட்ட போராட்டத்தின் விளைவாக, அவர்களது தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்கள் எல்லோரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா அரசு அறிவிப்பு வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற, அதைத்தொடர்ந்து மன்மோகன்சிங் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து அந்த வழக்கும் நிலுவையில் இருந்தது.

இதற்கிடையில், படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்து பேசினார். ராகுல்காந்தி தன் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாங்கள் காயப்பட்டுள்ளோம், மனக்கவலைக்கு ஆளாகி யுள்ளோம். ஆனால் அவர்களை முழுமையாக மன்னித்துவிட்டோம் என்று கூறியது மிகவும் உணர்ச்சி கரமாக இருந்தது. இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் நேற்றுமுன்தினம் உத்தரவு வழங்கப்பட்டது. பேரறிவாளனின் கருணை மனுமீது கவர்னர் முடிவெடுக்கலாம். அரசியல் சட்டத்தின் 161–வது பிரிவின்கீழ் தமிழக அரசு

7 பேரையும் விடுதலை செய்வதாக ஒரு முடிவெடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பலாம். அந்த பரிந்துரையின்மீது கவர்னர் முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இப்போது இந்த பிரச்சினை இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. தமிழக அரசு நாளை கூட்டியிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.

27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது ஜெயலலிதாவின் நிலைப்பாடு. எனவே, தாமதமில்லாமல் தமிழக அமைச்சரவை இதுகுறித்து உரிய முடிவெடுத்து கவர்னருக்கு அனுப்பும் என்பதால், அந்த 7 பேரின் விடுதலைக்காக சிறைச்சாலை கதவுகள் திறக்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

Friday, September 7, 2018

தெரு விளக்கு இல்லாததால் சேலையூர், அகரம்தென் சாலையில் விபத்து, வழிப்பறிகள் அதிகரிப்பு

தெரு விளக்கு இல்லாததால் சேலையூர், அகரம்தென் சாலையில் விபத்து, வழிப்பறிகள் அதிகரிப்பு

தாம்பரம்:  சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர்-அகரம்தென் பிரதான சாலையில் ஏராளமான தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த பிரதான சாலையை பயன்படுத்தி சேலையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளில் இருந்து மப்பேடு, பதுவஞ்சேரி, திருவஞ்சேரி, அகரம்தென், வெங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மின்விளக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை.

இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். செயின் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன.
சேலையூர்-அகரம்தென் பிரதான சாலையில் மின்விளக்குகளை பொருத்தி, சாலை விபத்து மற்றும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும்.
அங்குள்ள சாலையோர மதுபான பார்களையும் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மாணவர்களுக்கு கூறும் விந்தை செய்திகள்... *அற்புதமான பொது அறிவு

படித்துப் பாருங்கள், மெய்சிலிர்த்துப் போவீர்கள்....
***************

-----------------

👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  *ஒட்டகப்பால்*.

👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –
*கங்காரு எலி*.

👉துருவக் கரடிகள் அனைத்துமே *இடது கை* பழக்கம் உடையவை.

👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – *கரடி*.

👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் *கார்பன் மோனோ ஆக்சைடு* என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

👉சீனாவில் ஒரு மனிதனின் *பிறந்தநாள்* அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

👉ஆக்டோபஸ்க்கு *மூன்று இதயம்* இருக்கும். அதன் ரத்தம் *நீல நிறத்தில்* இருக்கும்.

👉குரங்குக்கு இரண்டு *மூளை* இருக்கிறது.

👉சூரியனின் வயது *470* கோடி ஆண்டுகள். (2010 ஆண்டு வரை) பூமியின் மீது காணப்படும் பழைய *பாறைகளை* கொண்டு இதை கணக்கிட்டு உள்ளனர்.

👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் *ஜூலியஸ் சீசர்*. அதனால்-தான் இந்த முறைக்கு *சீசரியன்* என்று பெயர் வந்தது.

👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் *அழுதால்* கண்ணீர் வராது.

👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் *100* கேள்விகள் கேட்கும்.


👉தைவான் நாட்டில் உள்ள *மூன்யூச்* மரம்
4120 ஆண்டுகள் பழைமையானவை.

👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு *சிங்கம்*. ஆனால், அதன் ஆயுட்காலம் வெறும் *15* ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்-தான் *சிங்கம்* கர்ஜிக்கும்.

👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – *சிங்கம்*.

👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் *ரத்தத்தால்* எழுதப்பட்டது.

👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – *ஒட்டகம்*.

👉இலைகள் உதிர்க்காத மரம் – *ஊசி இலை மரம்*.

👉காட்டு வாத்து *கருப்பு* நிறத்தில் தான் முட்டையிடும்.

👉குளிர் காலத்தில் *குயில்* கூவாது.

👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் *மூன்று மாதங்கள்* மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே, மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகப்புகழ் பெற்ற *மோனாலிச ஓவியம்* இடது கையால் வரையப்பட்டது.

👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும், அது தலை இன்றி *ஒன்பது நாள்* வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

👉கிளியும், முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.

👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – *இதயம்*.
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – *இதயம்*.

👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் *3100* பேர் தான்.

👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – *ஈரிதழ் சிட்டு*.

👉வால்டிஷ்ணி மொத்தம் *32* ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

👉ஒருதலைமுறை என்பது *33* ஆண்டுகள்.


👉ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் – *புருஸ்லீ*.

👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை *குளிக்காமல்* தன் கூட்டுக்குள் நுழையாது.

👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி *ஆரஞ்சு* நிறத்தில் இருக்கும்.

👉சீல்வண்டுகள் *17* ஆண்டுகள் தூங்கும்.

👉யானை, குதிரை *நின்று* கொண்டே தூங்கும்.

👉நீர் நாய் *ஒன்றரை* நிமிடம் மட்டுமே தூங்கும்.

👉டால்பின் *ஒரு கண்* விழித்தே தூங்கும்

👉புழுக்களுக்கு *தூக்கமே* கிடையாது.

👉நாம் இறந்து பிறகும் கண்கள் மட்டும் *6* மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
 

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...