Monday, September 17, 2018

11 years on, airline told to pay Rs 90,000 for missing baggage

The forum said that though the airlines claimed that the baggage was lost due to technical snags developed in the system, no proof was submitted to substantiate this.

Published: 17th September 2018 03:09 AM 



For representational purposes (File | PTI)
By Express News Service

CHENNAI: Almost 11 years after a city resident lost his checked-in baggage which contained medical reports and business documents while travelling in a British Airways flight, the District Consumer Disputes Redressal Forum, South Chennai, has ordered the airlines to pay Rs 90,000 to the traveller.

The matter dates back to September 2007 when Sumanth Subramanian of Besant Nagar was travelling from Chennai to USA with his wife in British Airways. When the couple landed at the Washington International Airport, they found one of their three checked-in baggages to be missing. After they lodged a complaint with the airline, they were informed that a compensation will be paid.

A month later Sumanth was offered Rs 41,610 as compensation for the missing baggage by the airlines. But no efforts were made to trace the baggage which went missing due to negligence and deficiency on their part, said the resident in his complaint to the forum. “We didn’t even have a set of extra clothes to change. I could not attend any business meeting as all my important documents were lost. My wife lost her medical reports also,” said Sumanth in his complaint.

The airlines denied all allegations and said according to the Carriage by Air Act 1972 they were not liable for the incident. “The complainant is entitled to get only Rs 20,875 as the baggage weighed 23kg, the maximum permissible weight. But we offered Rs 20,000 more than that amount,” said the airline in defence.

The forum said that though the airlines claimed that the baggage was lost due to technical snags developed in the system, no proof was submitted to substantiate this.

Rs 50,000 for lost items
The forum comprising President M Mony and Judicial Member K Amala ordered the airlines to pay Rs 50,000 towards the lost items and Rs 40,000 as compensation
Course on health journalism

CHENNAI, SEPTEMBER 17, 2018 00:00 IST

The Tamil Nadu Dr. MGR Medical University has introduced two new postgraduate diploma courses in health promotion and education and public health journalism.

Admission process for six courses in the Department of Epidemiology for this academic year have alr

For details on eligibility and application process, visit the University websitewww.tnmgrmu.ac.in. The last date for receipt of applications is October 15.
7-வது பட்டமளிப்பு விழா: ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியில் 61 பேருக்கு ரூ.25 லட்சத்தில் தங்கப் பதக்கம்

Published : 16 Sep 2018 12:35 IST



சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியில் 7-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், பல்கலைக்கழக ரேங்க் பெற்ற 61 மாணவ, மாணவிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் ஏஐசிடிஇ துணைத் தலைவர் எம்.பி.பூன்யா, சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, மேலாண்மைத் துறை இயக்குநர் கே.மாறன், கல்லூரி முதல்வர் கே.பழனிகுமார், ஆராய்ச்சி, வளர்ச்சித் துறை டீன் ஏ.ராஜேந்திர பிரசாத் பங்கேற்றனர்.

மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழாவில் 612 மாண வர்கள் பட்டம் பெற்றனர். பல்கலைக் கழக ரேங்க் பெற்ற 61 மாணவர் களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள லியோமுத்து உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் கலைச்செல்வி லியோ முத்து குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அகில இந் திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (ஏஐசிடிஇ) துணைத் தலைவர் முனைவர் எம்.பி.பூன்யா, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார்.

விழாவில் 612 மாணவ, மாணவி கள் பட்டம் பெற்றனர். 61 பேர் பல் கலைக்கழக ரேங்க் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப் புள்ள தங்கப் பதக்கங்கள் வழங்கப் பட்டன.

சமுதாய வளர்ச்சி

சாய்ராம் கல்விக் குழும தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து தனது தலைமை உரையில், ‘‘சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளி லேயே அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 10 தரவரிசைக்குள் தன் இடத்தை நிரந்தரமாக தக்கவைத்துக் கொண் டது. சமுதாய வளர்ச்சி என்ற நோக் கத்தோடு கலந்த கல்வி போதிப்பது தான் எங்கள் கல்லூரியின் பலம். கடந்த 10 ஆண்டுகளாக இந்திய மற்றும் உலக அளவிலான நிறுவனங் களில், எங்கள் மாணவர்களில் 90 சதவீதம் பேருக்கு மேல் உறுதியாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருதல் எங்கள் தனிச்சிறப்பு’’ என்றார்.

சாய்ராம் மேலாண்மைத் துறை இயக்குநர் கே.மாறன் வாழ்த்திப் பேசினார். கல்லூரி முதல்வர் கே.பழனிகுமார் வரவேற்புரை ஆற்றினார். ஆராய்ச்சி, வளர்ச்சித் துறை டீன் ஏ.ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார். பட்டம் பெற வந்த மாணவர்கள், பெற்றோர் உட்பட 2,500 பேர் விழாவில் கலந்துகொண்டனர்.
தமிழுக்கு ரத்தினக் கம்பளம் விரித்த கூகுள்!

Published : 27 Feb 2018 10:47 IST

ம.சுசித்ரா


பல வருடங்களாக ஃபேஸ்புக், யூடியூப், வலைப்பூ போன்ற டிஜிட்டல் தளங்களில் தங்களுடைய சிந்தனைகளையும் படைப்புகளையும் தமிழிலேயே வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அநேகர். ‘இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனமும் கே.பி.எம்.ஜி. (KPMG) நிறுவனமும் இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. அதில், இணையத்தில் பகிரப்படும் இந்திய மாநில மொழியிலான உள்ளடக்கத்தில் 42% தமிழ் என்ற அடிப்படையில் தமிழ் முதலிடத்தைப் பிடிப்பதாக ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. தமிழுக்கு அடுத்ததாக 39% இந்தி என்று அதில் கண்டறியப்பட்டது.

மறுக்கப்பட்ட அங்கீகாரம்

ஆனால், சில தினங்களுக்கு முன்புவரை டிஜிட்டல் தொழில் உலக ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தமிழ் மொழியைத் தன்னுடைய அலுவல் மொழியாக அங்கீகரித்திருக்கவில்லை. 2014-ம் ஆண்டிலேயே இந்தியை, 2017-ல் வங்காள மொழியை கூகுள் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால், தமிழை ஏற்காமலேயே இருந்துவந்தது. ஒருவழியாக கூகுளின் ‘AdWords’, ‘AdSense’ ஆகிய பிரிவுகளில் 41-வது மொழியாகத் தமிழ் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு பிப்ரவரி 21 அன்று வெளியானது.

‘கூகுள் இந்தியா’வின் கூகுள் மார்க்கெட்டிங் சொல்யூஷன்ஸின் இயக்குநர் ஷாலினி கிரிஷ், “இணையத்தைப் பயன்படுத்தும் பெருவாரியான இந்தியர்களுக்கு ஆங்கிலத்தில் புலமை இல்லை. ஆகவே, இந்திய மொழிகளை கூகுளில் இணைப்பதன் மூலம் பலருக்கு இணையத்தைக் கொண்டுசேர்க்கத் திட்டமிட்டோம். தமிழை கூகுள் அங்கீகரித்திருப்பதால் இனி டிஜிட்டல் ஊடகத்தில் தமிழில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களும் விளம்பரதாரர்களும் இணைக்கப்படுவார்கள்” என்று பிப்ரவரி 21 அன்று அறிவித்தார்.

திறந்தது புதிய பொருளாதாரக் கதவு

இப்படி கூகுள் அறிவித்திருப்பதன் அர்த்தம் என்ன? இணைய உலகின் மிகப் பெரிய தேடுபொறியான கூகுள், செய்திகள், தகவல்கள், துணுக்குகள் ஆகியவற்றுக்கு ஆட்சென்ஸ் (Adsense) என்ற அதிகாரபூர்வமான பிரிவை வைத்துள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றிடம் இருந்து கூகுளின் ஆட்சென்ஸ் விளம்பரங்களைப் பெறும். பிறகு, அந்த விளம்பரங்களை வெளியிடும் அனுமதியை இணையதளம், வலைப்பூ நடத்துபவர்களிடம் இருந்து பெறும். இதன் மூலம் இணையப் படைப்பாளிகளுக்கு வருமானம் கிடைக்கும்.

அதேபோல் குறிசொற்கள் (keywords) மூலம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி ஒரு செய்தியையோ பிராண்டையோ இணையதளத்தையோ டிரெண்டாக்கச் செயல்பட்டுவருவதுதான் ஆட்வர்ட்ஸ் (AdWords).

இவை இரண்டும் சேர்ந்துதான் டிஜிட்டல் ஊடகத்தில் நாம் வெளியிடும் எந்தத் தகவலை டிரெண்டாக்கலாம், எதற்கு வருமானம் வழங்கலாம் என்பதை முடிவுசெய்கின்றன. இதுவரை இலக்கியம், அறிவியல், கல்வி, பொழுதுபோக்கு போன்ற பிரிவுகள் தொடர்பான உள்ளடக்கங்களைத் தமிழ் மொழியிலேயே இணையத்தில் பலர் வெளியிட்டுவந்தாலும் மிகச் சிலரால் மட்டுமே அதன் மூலம் வருமானம் ஈட்ட முடிந்திருக்கிறது.

காரணம், ஆட்சென்ஸும் ஆர்வர்ட்ஸும் இதுவரை தமிழை அங்கீகரித்திருக்கவில்லை. தற்போது தமிழ் மொழியை இவை ஏற்றுக்கொண்டிருப்பதால் தமிழுக்குப் புதிய பொருளாதாரக் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக டிஜிட்டல் ஊடக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழர் வி. ஏ. சிவா அய்யாதுரை, கூகுளின் தலைவராக உயர்ந்துநிற்கும் தமிழர் சுந்தர் பிச்சை - போன்ற டிஜிட்டல் தமிழர்களை மட்டுமல்லாமல் இனித் தமிழையும் கூகுள் கொண்டாடும் என நம்புவோம்!

‘சுந்தர் பிச்சைக்கு தொடர் டிவீட்’

தமிழை கூகுள் அங்கீகரிக்கச் செய்வதற்கான முயற்சியில் கடந்த பத்தாண்டுகளாகப் பலர் ஈடுபட்டுவந்தாலும் ‘ஆட்சென்சின்’ சரியான திறவுகோலைக் கண்டுபிடித்தவர் கொழும்பைச் சேர்ந்த ஈழத் தமிழர் விக்டர். சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொலி டிரெண்டிங் ஆனது.

கொழும்பில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைவராகச் செயல்பட்டுவரும் இவர், 2016-ம் ஆண்டின் ‘உலகத் தொழிலதிபர் மாநாட்டில்’அன்றைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார். அப்போது தான் சுந்தர் பிச்சையை நேரில் சந்தித்ததாகவும் அதன் பிறகு தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் தமிழ் இணைக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.


விக்டர்

“தமிழில் இயங்கும் இணையதளங்கள் பெரிய அளவில் இணையவாசிகளைக் கவராது என இத்தனை காலமாக கூகுள் நினைத்துக்கொண்டிருந்தது. ஆனால், உலகில் ஏழு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருப்பதையும் அதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இணையத்தைத் திறம்படப் பயன்படுத்துவதையும் சுட்டிக்காட்டி ஆட்சென்ஸுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

அது மட்டுமல்லாமல் சுந்தர் பிச்சையுடன் நேரில் அறிமுகம் கிடைத்ததால் ஆட்சென்ஸ் தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த இரண்டாண்டுகளாக அவருக்கு டிவீட் செய்துகொண்டே இருந்தேன். அதற்க்கான பலன் கிடைத்துவிட்டது என நினைக்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இனித் தமிழ் இணையதளங்களுக்கு கூகுளே விளம்பரங்களைத் தேடிக் கொடுக்கும். தமிழிலேயே விளம்பரங்கள் வெளியிடப்படும். உதாரணமாக, உணவு வகைகள் பற்றிய கட்டுரைகளை ஒருவர் தன்னுடைய வலைப்பூவில் தமிழில் எழுதுகிறார். அவருக்கு நிறைய பார்வையாளர்கள் கிடைக்கிறார்கள். அப்படியானால் அவர் எழுதும் உணவு வகைளுக்குத் தொடர்புடைய விளம்பரங்களை கூகுளே வாங்கி அவருடைய வலைப்பூவில் வெளியிடும். இவ்வாறாக அவர் வருவாய் ஈட்டலாம்” என்கிறார் விக்டர்.

விளம்பரதாரரை ஈர்க்கும் சொல்

தமிழை கூகுள் ஏற்றுக்கொண்டதால் மீண்டும் தமிழ் ‘பிளாகர்ஸ்’ புத்துணர்ச்சிப் பெறுவார்கள் என நம்பிக்கையுடன் கூறுகிறார் டெல்லியைச் சேர்ந்த தமிழ் பத்திரிகையாளரும் இணைய எழுத்தாளருமான ஆர். ஷாஜஹான்.


ஆர். ஷாஜஹான்

எல்லோரும் ஆட்சென்ஸ் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஆட்வர்ட்ஸும் மிக முக்கியமான பிரிவு என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் இவர். “ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வந்த பிறகு பிளாகிங் செய்யும் ஆர்வமும் அதற்கான வரவேற்பும் குறைந்துபோனதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஆட்சென்ஸ் தமிழை அங்கீகரிக்காததும் பிளாகர்ஸ் சோர்வடைந்துபோனதற்கு முக்கியக் காரணம்.

இந்தியை ஆட்சென்ஸ் அங்கீகரித்த பிறகு இந்தி பிளாகர்ஸ் இணையம் மூலமாக நல்ல சம்பாத்தியம் பெற ஆரம்பித்தார்கள். இனிமேல் தமிழர்களுக்கும் அப்படியான பிரகாசமான வாய்ப்பு கிடைக்கும் எனத் தோன்றுகிறது. அதற்கு முதலாவதாகத் தமிழ் உள்ளடக்கப் படைப்பாளிகள் ஆட்சென்ஸில் முறையாகப் பதிவுசெய்ய வேண்டும்.

அடுத்து, ஆட்வர்ட்ஸ் நிர்வகிக்கும் keywords மிகவும் முக்கியம். எந்தச் சொற்கள் நம்முடைய உள்ளடக்கத்தில் இடம்பெற்றால் விளம்பரதாரர்களை ஈர்க்கலாம் என்பதையும் ஆராய்ந்து அதற்கேற்றாற்போல எழுதினால்தான் இணைய வழியில் பணம் சம்பாதிக்க முடியும். பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எவ்வளவு பணம் நிர்ணயிக்கப்படும் என்பதும் அதன் மூலம் எவ்வளவு வருமானம் ஈட்டலாம் என்பதும் போகப்போகத்தான் தெரியும்” என்கிறார் ஷாஜஹான்.
ஆசிரியப் பணியெனும் புனித வேள்வி!

By வெ. இன்சுவை | Published on : 17th September 2018 02:54 AM

இப்போதெல்லாம் காலையில் செய்தித்தாளைப் பிரித்தால், கொலை, கொள்ளை போன்ற செய்திகளுக்கு இணையாக, "ஆசிரியர் மாணவியிடம் சில்மிஷம்', "பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை' போன்ற செய்திகளைப் படிக்கும்போது மனம் வலிக்கிறது. இச்செய்திகள் நம் நெஞ்சைச் சுடுகின்றன. சமுதாயத்தை உருவாக்க வேண்டியவர்களே தவறான பாதையில் பயணிக்கிறார்கள் என்று எண்ணும்போது நமக்குக் கோபம் வருகிறது.

சிறந்த மருத்துவர்களையும், பொறியாளர்களையும், விஞ்ஞானிகளையும் மேலாண்மை அதிகாரிகளையும், வழக்குரைஞர்களையும் உருவாக்குவது மட்டுமே கல்வி நிறுவனங்களின் பணி அல்ல. சிறந்த மனிதர்களையும், நற்பண்புகளும் மனித நேயமும் கொண்ட நல்ல குடிமக்களையும் உருவாக்க வேண்டும். பால் வைக்கும் பாத்திரம் அழுக்காக இருந்தால் அதில் இடும் பாலும் திரிந்துபோகுமல்லவா? அதேபோல் தான் மனத்துக்கண் மாசுடையவர்களாக ஆசிரியர்கள் இருந்தால் அவர்களால் நல்ல குடிமக்களை உருவாக்க முடியாது.

புலனடக்கம் இல்லாதவர் துறவறம் மேற்கொள்ளக்கூடாது. அதேபோல சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாதவர்கள் ஆசிரியர் பணிக்கு வரக்கூடாது. தன்னிடம் பயிலும் மாணவிகளைத் தங்கள் குழந்தைகளாகப் பார்க்க வேண்டாமா? அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது எதில் சேர்த்தி? இப்படிப்பட்ட இழி மக்களுக்குத் தங்கள் செயலின் சாதக, பாதகங்கள் தெரியாமலா இருக்கும்? தங்கள் பணியின் புனிதம் புரியாமலா இருக்கும்?

கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை "ரௌடிகள்' என்று நாம் முத்திரை குத்தி விடுகிறோம். தவறு செய்வது அவர்களின் இயல்பு என்றும் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் தவறு செய்வதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. பிள்ளைகளின் அறிவுக் கண்களைத் திறந்து அவர்களுக்கு ஒழுக்கத்தையும், உயர் பண்புகளையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் தவறு செய்யலாமா? வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி? தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் தான் மட்டுமே பொறுப்பு என்று ஏன் அவர்கள் உணரவில்லை?

தற்போது ஆசிரியர்-மாணவர் இடையே புரிதல் இல்லை. காரணம் ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பிக்கும் இயந்திரங்களாக மாறிப் போயினர். தன் மாணவர்களின் பிரச்னைகள், குடும்பச் சூழல், சிலர் கற்றலில் பின்தங்கியுள்ளதற்கு காரணங்கள் என எதைப்பற்றியும் தெரிந்து கொள்வதில்லை. ஆனால், அவர்களின் ஜாதி, இனம் பற்றி முதலில் தெரிந்து கொள்கிறார்கள். அக்கால ஆசிரியர் சமுதாயம் பணத்தைவிட சுய கௌரவத்தைப் பெரிதாக நினைத்தது. ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்குக் கூட ஊரில் தனி மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆசிரியரின் சொல்லுக்கு ஊர் கட்டுப்பட்டது.

தங்கள் வறிய நிலை குறித்து அவர்கள் வருந்தவில்லை. சட்டையின் கிழிசலை மேலே போட்டுக் கொண்டிருந்த கோட் மறைத்தது. கறாரும், கண்டிப்பும் அவர்களின் இயல்பாக இருந்த போதிலும் பிள்ளைகள் அவர்களை நேசித்தார்கள். அதற்குக் காரணம் கற்பித்தலில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடே ஆகும். தங்கள் தொழில் மீது அவர்களுக்குப் பக்தி இருந்தது. தம் மாணாக்கரின் முழு திறமையையும் வெளிக் கொணர்வது தங்களது கடமை என்று நினைத்தார்கள். "இவர்கள் என் மாணவர்கள் மட்டுமல்ல என் குழந்தைகளும் கூட. இவர்கள் வாழ்வு வளம் பெற என் அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்துவேன். கல்வியோடு நற்பண்புகளையும் ஊட்ட வேண்டியது என் கடமை' என்றே உறுதியேற்றார்கள்.

வாசிப்பு மட்டுமே அவர்களின் மூச்சாக இருந்தது. கண்டிக்கும்போது கண்டித்து, கனிவு காட்ட வேண்டிய நேரத்தில் கனிவு காட்டி பிள்ளைகளை அரவணைத்துச் சென்றனர். எனவேதான் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டித்தபோது, பெற்றோர்கள் சண்டைக்கு வரவில்லை; மாணவர்களும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆசிரியர் கண்டித்தாலோ அடித்தாலோ நியாயமான காரணம் இருக்கும் என்று நம்பினார்கள். கீழ்த்தரமான எண்ணங்களுக்குத் தங்கள் மனதில் இடம் கொடுத்தது இல்லை.

ஆரம்பப்பள்ளி ஆசிரியராகட்டும், கல்லூரிப் பேராசிரியர்களாகட்டும் குன்றி மணி அளவு கூட ஒழுக்கம் தவறி நடந்தது இல்லை. பணத்தின் முன் மண்டியிட்டதில்லை ; பதவிக்காக குறுக்கு வழியை நாடியதில்லை. தங்களின் தன்மானத்திற்கு இழுக்கு வரும்படி யாரிடமும் யாசித்தது இல்லை. "ஏழை' என்ற சொல் தங்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் அதிகம் அலட்டிக் கொண்டது இல்லை. "சரஸ்வதியும், லட்சுமியும் ஒருசேர வாசம் செய்ய மாட்டார்கள்' என்று சமாதானம் கூறிக் கொண்டார்கள்.
வயதில் சிறியவர்கள் ஆனாலும் ஆசிரியர்கள் தந்தைக்கு ஒப்பாவர். "இவர் என் ஆசான். அறியாமை என்னும் இருளைப் போக்கி என் வாழ்வில் ஒளி ஏற்றுபவர்; நான் தவறு செய்யும் போது என்னைக் கண்டித்து நல்வழிப்படுத்துபவர்; இவர் வழிகாட்டலில் நான் வெற்றி பெறுவேன்' என்று மாணவர்கள் நினைத்தார்கள்.

இன்றைக்கு ஏன் எல்லாமே மாறிப்போய் விட்டன? பெரும்பாலான ஆசிரியர்கள் நல்ல முன்னுதாரணங்களாகத் திகழ்வது இல்லையே?
தனி வகுப்பு வைக்க வேண்டும் என்று மிரட்டும் ஆசிரியரை, ஒழுங்காகப் பாடம் நடத்தாத ஆசிரியரை, மாணவர்களைத் தங்கள் சொந்த வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆசிரியரை, எதற்கெடுத்தாலும் பிரம்பு ஒடிய அடிக்கும் ஆசிரியரை, நடத்தை சரி இல்லாத ஆசிரியரை, குடித்துவிட்டுப் பள்ளிக்கு வரும் ஆசிரியரை, மாணவியரிடம் அத்துமீறும் ஆசிரியரை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்?

ஆசிரியர் பணியை ஒருவர் விரும்பி ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஈடுபாட்டுடன் செய்ய முடியும். பாடங்களைக் கற்பிக்கும் போது அது அந்தரங்க சுத்தியுடன் ஒலிக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனையைச் செம்மைப்படுத்தி மெருகூட்டும் ஆசிரியர்கள், மேதா விலாசமும், நேர்மையும் சுய கட்டுப்பாடும் கொண்டு திகழ வேண்டும்.
ஒழுக்கமான இளைய சமுதாயத்தை உருவாக்குவது மிக மிக முக்கியம். இன்று பிள்ளைகளின் கவனத்தை சிதறடிக்கப் பல காரணிகள் உள்ளன. தங்களைச் சுற்றியுள்ள வக்கிரங்களில் வழுக்கி விழாமல் மாணவர்கள் இருக்க வேண்டுமானால் அதற்கு ஆசிரியர்கள் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அடித்தட்டுப் பிள்ளைகளுக்குப் பிரச்னை இருந்தால் அவர்கள் யாரிடம் போய்   தங்கள் மனக்குறையைக் கொட்ட முடியும்? குடிகாரத் தந்தை, பொறுப்பில்லாத தாய், மிரட்டும் வறுமை, கூடா நட்பு, குற்றப் பின்னணி என்ன செய்வார்கள் அவர்கள்? சரியான மேய்ப்பர் இல்லாவிட்டால் தடம்மாறிப் போய் விடுகிறார்கள்.

தாங்கள்போகும்பாதையின் விபரீதம் அறியா வயது. அவர்களை நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை. வெறுமனே புரட்டிப் பார்த்து கையெழுத்துப் போட வேண்டிய கோப்புகள் அல்ல மாணவர்கள். ரத்தமும், சதையும் கொண்ட உணர்ச்சி உள்ள உயிர்கள். மோப்பக் குழையும் அனிச்சம் போன்றவர்கள். சில சமயம் நத்தையாய் கூட்டுக்குள் ஒடுங்கிப் போவார்கள். அவர்களைத் தம் குழந்தைகளாய் பாவித்து, அவர்களின் கை பிடித்து வெற்றிப் பாதையில் அவர்களைப் பயணிக்க வைப்பது ஒரு நல்லாசிரியரின் கடமை ஆகும்.

ஒழுக்கத்தின் மேன்மையை, உண்மையின் பலத்தை அவர்கள் ஒருமுறை ருசித்தால் போதும், அதற்குப் பின் தடம் மாற மாட்டார்கள். நூறு சதவீதம் தேர்ச்சி கொடுப்பவர் மட்டுமே நல்லாசிரியர் ஆகார். அதற்கான பயிற்சி அப்பிள்ளைகளுக்கு நிறைய வலியையும், மனச்கசப்பையும், உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

மதிப்பெண் மட்டுமே வாழ்கை ஆகாது. மாணவர்களை கற்றலில் ஈடுபாடு கொள்ளச் செய்து, பள்ளிக்கு வருவதை ஒரு கொண்டாட்டமாக அவர்களை நினைக்கச் செய்து எதையும் குருட்டு மனப்பாடம் செய்யாமல் புரிந்து கொண்டு படிக்கச் செய்து, அவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர ஒரு தூண்டுகோலாய் இருப்பவரே நல்லாசிரியர். ஆசிரியப் பணியை அனைத்து ஆசிரியர்களும் அகம் மகிழ்ந்து புனித வேள்வியாய் எடுத்துக் கொண்டால் சிறந்த சந்ததியினரை உருவாக்க முடியும்.

ஆசிரியர்களில் சிலர் தங்களின் தார்மிகப் பொறுப்பை உணராமல் கீழ்த்தரமாக நடந்துகொள்வதைப் பார்க்கும்போது நமக்கு வருத்தம் மேலோங்குகிறது. என்ன பிறவிகள் இவர்கள் என நினைக்கத் தோன்றுகிறது. அப்படிக் கூட மிருக இச்சை தோன்றுமா? பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பும்கூட அந்த ரணம் ஆறாமல் இருக்குமே. ஆண்கள் மேல் ஒருவித வெறுப்பும், பயமும், அருவருப்பும் தோன்றுமே.
இந்த மோசமான நிகழ்வு அந்தக் குழந்தையின் குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிக்கும்? இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா? விபரம் தெரியாத, புரியாத பிஞ்சுகளிடமா தங்கள் வக்கிரத்துக்கு வடிகால் தேடுவது? சே! வெட்கக்கேடு. ஒரு சில கரும் புள்ளிகளால் நல்லவர்களும் அவமானம் அடைகிறார்கள். இனியாவது இந்த அவலம் மாற வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தொடர்ந்து உச்சம்! பெட்ரோல் ரூ.85.31.. டீசல் ரூ.78.00.
.
Added : செப் 17, 2018 06:24

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.31 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.00 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.31 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 6 காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாகவும் உள்ளன
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

Added : செப் 16, 2018 22:28




தேனி: தேனி வடபுதுப்பட்டி மகாலட்சுமி கோயிலில் பக்தர்களை சாட்டையால் அடித்து, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்திய வினோத திருவிழா நடந்தது.தேனி வடபுதுப்பட்டி ஜெ.,ஜெ., காலனியில் குரும்ப கவுண்டர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி கோயில் உள்ளது. 31 ஆண்டாக சக்தி தேங்காய் திருவிழா ஓராண்டு விட்டு மறு ஆண்டு நடத்தப்படுகிறது.நேற்றுமுன்தினம் மகாலட்சுமிக்கு காலை 6:00 மணிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.2வது நாளான நேற்று கோயில் முன் நெய் தீபமிட்டு, பக்தர்களை சாட்டையால் அடித்தும், பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தும் சக்தி தேங்காய் பூஜை நடந்தது.விழா நிர்வாகக்குழுத் தலைவர் முருகேசன் கூறியதாவது: மக்கள் வேண்டிக்கொண்ட விஷயங்கள் நடந்து விடுவதால் அந்த நம்பிக்கையில் மறு ஆண்டே விரதம் இருந்து சக்தி தேங்காய் பூஜையில் பங்கேற்கின்றனர். சாட்டை அடி நேர்த்திக்கடனும் அவர்களின் விருப்பப்படியே நடக்கிறது,''என்றார்.

NEWS TODAY 03.07.2026