Saturday, September 22, 2018

கூரியர் நிறுவனம் சேவை குறைபாடு இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

Added : செப் 22, 2018 00:54


கோவை:சேவை குறைபாடு செய்த கூரியர் நிறுவனம் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவை, ராமநாதபுரம், திருச்சி ரோட்டை சேர்ந்த வக்கீல் முத்துவிஜயன், பங்கஜா மில் ரோட்டில் உள்ள, 'புரொபஷனல்' கூரியர் மூலமாக, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியை சேர்ந்த ஜேக்கப் என்பவருக்கு, 2014, ஜூலை, 25ல் தபால் அனுப்பினார். குறிப்பிட்டதேதியில் கடிதம் சென்றடையவில்லை. கூரியர் நிறுவனத்தினர், 28ம் தேதிக்குள் கிடைத்து விடும் என்றனர். அந்த தேதியிலும் கூரியர் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட முத்துவிஜயன், கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.ஜேக்கப் என்பவருக்கு கூரியர் கிடைக்காததால்,சென்னையில் நடக்க இருந்த நேர்முக தேர்வில், அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக, மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.விசாரித்த நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரன் அளித்த தீர்ப்பில், 'கூரியர் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மனுதாரருக்குஇழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு தொகை 2,500 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

இன்று புரட்டாசி 'முதல்' சனி: பெருமாளை தரிசிக்கலாம் வாங்க

Added : செப் 22, 2018 01:20



ஸ்ரீவில்லிபுத்துார்:புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு மிக்கது. அதிலும் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாசபெருமாளை தரிசிப்பது என்பது அதனினும் சிறப்பு. 

புரட்டாசி மாதத்தில் பல்லாயிரம் மக்களுக்கு மத்தியில் தரிசிப்பது வாழ்வின் பெரும்சிறப்பு. மாதங்களில் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் தான் பிரம்மோத்ஸவ விழா 108 திவ்யதேசங்களில் வெகுசிறப்புடன் நடக்கிறது. இம்மாதத்தில் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து பெருமாளை வணங்கினால் வாழ்வில் வளம் பெருகும். உடல் நலன் மேம்படும். வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

இத்தகைய சிறப்பு மிக்க புரட்டாசி சனி உற்சவங்கள் இன்று துவங்குகிறது. அதிலும் தென்திருப்பதி என்றழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாளை படியேறி பக்தியுடன் தரிசித்தால் வாழ்வில் மேலும் நன்மைகள் உண்டாகும். அதனால் தான் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள், ஐந்து சனிக்கிழமைகள் தோறும் பெருமாளை தரிசிக்க படியேறி வருகின்றனர். 

அதிலும் அதிகாலையில் நடை திறந்தவுடன் பெருமாளின் திவ்யதரிசனம் காண்பதற்கு, அளவில்லா பக்தியுடனும், ஆனந்த மகிழ்வுடனும், கோவிந்தா, கோபாலா கோஷத்துடனும் தரிசிப்பது பக்தியின் உயர்ந்த மாண்பை வெளிப்படுத்துகிறது.பெருமாளை சில நிமிடம் தரிசித்தாலே வாழ்வின் பெருவளங்கள் பெறலாம்.
தமிழக அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வுக்கு புது முடிவு

Added : செப் 21, 2018 23:52

சென்னை: அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில், பிற மாநில டாக்டர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு பார்க்க, ஆய்வு கமிட்டி முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு கோரி, தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், 20 ஆயிரம் டாக்டர்கள், போராடி வருகின்றனர். இதையடுத்து, அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு குறித்து ஆராய, சுகாதாரத் துறை கூடுதல்செயலர், நாகராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு டாக்டர்களால், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றவோ, கிளினிக் நடத்தவோ முடியாது. தமிழக அரசு டாக்டர்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பின், தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றுகின்றனர்.இதனால் அவர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் அளிப்பது சாத்தியமில்லை.எனவே, மற்ற மாநிலங்களில், அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், தமிழக அரசு டாக்டர்கள் பெறும் சம்பளத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். அதன்பின், அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு குறித்து, தமிழக நிதித்துறைக்கு பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மாணவர் பிறந்த தேதி சரிபார்க்க உத்தரவு

Added : செப் 21, 2018 23:48

சென்னை: பொது தேர்வு எழுதவுள்ள, மாணவர்களின் பிறந்த தேதியை சரிபார்க்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களே, ஒவ்வொரு மாணவருக்கும், அவரது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு கணக்கில் எடுக்கப்படுகிறது. இந்த சான்றிதழில் உள்ள, பிறந்த தேதி அதிகாரபூர்வமானதாக கருதப்படுகிறது. எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ்களில், பிறந்த தேதி தவறாக உள்ளவர்கள், திருத்தம் கேட்டு, தேர்வுத்துறைக்குவிண்ணப்பிக்கின்றனர்.இந்நிலையில், புதிய சான்றிதழ்களை, தவறுகள் இன்றி வழங்க, அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் மற்றும் சுய விபரங்களை, அரசு தேர்வுத்துறையின் இணையத்தில், சரியாக பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு, 2019 மார்ச், 1ல், 14 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.அதேபோல, பிறந்த தேதியை பல முறை சரிபார்த்து, தவறின்றி பதிவு செய்ய வேண்டும். வரும் காலங்களில், சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்ற அனுமதிக்கப்படாது. எனவே, தலைமை ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரிப்பு

Added : செப் 22, 2018 05:45

புதுடில்லி: அமெரிக்காவில், தெலுங்கு மொழி பேசுவோர் எண்ணிக்கை,86 சதவீதமும், தமிழ் பேசுவோர் எண்ணிக்கை, 55 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.அமெரிக்காவில், 2017க்கான மக்கள் தொகை விபரம், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், அவர்களின் தாய் மொழி ஆகிய தகவலும் இடம் பெற்றுள்ளது.இதன்படி, 2010ல், வெளியிடப்பட்ட மக்கள் தொகை பட்டியலுடன் ஒப்பிடுகையில், 2017ல், தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை, கடந்த ஏழு ஆண்டுகளில், 86 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, வங்க மொழி பேசுவோர், 57 சதவீதமும், தமிழ் பேசுவோர், 55 சதவீதமும் அதிகரித்துள்ளனர்.ஹிந்தி பேசுவோர், 42 சதவீதமும், குஜராத்தி பேசுவோர், 23 சதவீதமும் அதிகரித்துள்ளனர்.அமெரிக்க மக்கள் தொகை, 30.6 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. 

இதில், வீட்டில், ஆங்கிலம் அல்லாத மொழிகளை பேசும், 5 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, 21.8 சதவீதமாக உள்ளது.இந்திய மொழிகளில், ஹிந்தி பேசுவோர் எண்ணிக்கை தான், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில், 8.83 லட்சம் பேர், ஹிந்தி பேசுகின்றனர்.இதற்கு அடுத்தபடியாக, 4.34 லட்சம் பேர், குஜராத்தியும், 4.15 லட்சம் பேர், தெலுங்கும் பேசுகின்றனர். தமிழ் மொழியை, 1.48 லட்சம் பேர் பேசுகின்றனர்.அமெரிக்க மக்கள் தொகையில், 26.10.லட்சம் பேர், இந்தியாவில் பிறந்து, அங்கு குடியேறியவர்கள்.
சிறப்புக் கட்டுரைகள்

60 வயதில் தடுமாற வைக்கும் ‘அல்சைமர்’



இன்று (செப்டம்பர் 21-ந்தேதி) உலக அல்சைமர் தினம்.

பதிவு: செப்டம்பர் 21, 2018 10:54 AM

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகமக்களை அதிக அளவில் கொல்லும் ஐந்து முக்கிய நோய்களில் அல்சைமரும் ஒன்று. உலகில், அல்சைமர் நோயில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்தியாவில் தான் உள்ளார்கள். அல்சைமர் நோய் என்பது மூளையின் செல்களைத்தாக்கி, நம்முடைய நினைவுகளை தொடர்ந்து அழித்து, சிந்திக்கும் திறனை முற்றிலும் பாதித்து விடுகிறது. இறுதியில் மிக சாதாரணமான வேலைகளை செய்யும் திறன்களைக்கூட முழுமையாக இழக்கிறோம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் குணப்படுத்த தற்போது வாய்ப்புகள் இல்லை. ஆரம்பக்கட்டத்தில் அறிந்தால், மேலும் சீர்கெடுவதை தவிர்க்க முடியும்.

அல்சைமர் என்பது டெம்னீஷியா என்கிற நோயின் ஒரு வகையாகும். டெம்னீஷியா என்பது மூளைக்கும் உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை துண்டித்தும், ஒருவரின் அன்றாட செயல்பாடுகளை பாதிக்கவும் செய்கிறது. அல்சைமர் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை அழித்து, நினைவுகள், மற்றும் மொழியாற்றலை செயலிழக்க செய்கிறது. இந்நோயினை முதன்முதலாக கண்டறிந்த மருத்துவர் அலோய்ஸ் அல்சைமர் பெயரிலேயே இந்நோய் அழைக்கப்படுகிறது. தன்னிடம் நோயாளியாக வந்து இறந்துப் போன பெண் ஒருவரின் மூளை திசுக்களை ஆராயும்போது அவைகள் இயல்பாக இன்றி, ஒன்றுக்கொன்று பிணைந்தும், முறுக்கிக்கொண்டும் இருந்தன. படலங்கள் திசுக்கள் மீது படர்ந்து இருந்தது. இதன்காரணமாக, நரம்புமண்டலத்திற்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மூளையிலிருந்து நரம்புமண்டலத்தின் வாயிலாகத்தான் உடலிலுள்ள வெவ்வேறு உறுப்புகளுக்கும் உத்தரவுகள் செல்கின்றன. இத்துண்டிப்பின்காரணமாக உறுப்புகள் செயல்பாட்டினை இழக்கிறது. மூளையில் ஏற்பட்டிருந்த இந்நோயின் காரணமாகவே அப்பெண் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அல்சைமர் கண்டறிந்தார்.

அல்சைமர் நோய்க்கான ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு தகவல்களை உள்வாங்குவதிலும், அதனை நினைவில் தக்கவைத்துக் கொள்வதிலும் சிரமம்உண்டாகும். இதனால், நினைவில் நிறுத்த திரும்ப திரும்பகேள்விகள் கேட்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு பொருளைஎங்கே வைத்தோம் என்றுநினைவுக்கு வராமல் தேடிக்கொண்டே இருத்தல், தினமும் சென்று வரும் இடங்களுக்கான வழிகளைக்கூட மறந்துவிடுதல் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. மேலும், தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும்ஆற்றலும் மங்கிவிடுகிறது. இதனால், சாதாரண முடிவுகள் உதாரணமாக, சாலையை கடப்பதில் கூட தவறுகள் உண்டாகி விபத்தில் முடிகின்றன. மேலும், பேச்சு, படிப்பு, எழுதுதல் போன்றவை பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

பெரும்பாலும் அறுபது வயதானவர்கள், அறுபது வயதினை கடந்தவர்களை இந்நோய் தாக்கினாலும், இளம் வயதினருக்கும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அல்சைமர் நோய் ஏற்படுவதற்கு வயது மூப்பு மட்டுமின்றி, முன்னோர்களிடமிருந்து மரபணுக்கள் வாயிலாக சந்ததியினருக்கு கடத்தப்படுகிறது. இவைகளைத்தவிர விபத்துகளில் தலையில் காயம் ஏற்பட்டு மூளைபாதிக்கப்பட்டால் அல்சைமர் நோய் ஏற்படுகிறது. இதனால்தான் மோட்டார் வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதும், காரில்பயணிப்போர் இருக்கை பட்டை அணிவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.



அல்சைமர் நோய்வராமல் எப்படிதடுப்பது? தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், இதயம் சீராக இயங்கும் வகையில் உடலை பேணுதல், நீரழிவு நோயினைக்கட்டுப்பாட்டில் வைத்தல், உடல் பருமனை குறைத்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருத்தல் போன்றவைகள் உதவுகின்றன. மேலும் மிக முக்கியமாக, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருத்தல்அவசியம்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம், நமக்கு வயதாகிவிட்டது என்று, தூங்குவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற மூளைக்குவேலைத்தராத எளிமையான, செயல்களை செய்வது அல்சைமர் நோய்க்கு வழிவகுத்துவிடும். மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க புதியதிறன்களை கற்றுக்கொள்ள முயற்சிப்பது நன்று. உதாரணமாக, புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிர்கள், அறிவு விளையாட்டுகள், போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டும். சதுரங்கம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள் நன்று. புத்தகங்கள் படிப்பது, படித்ததை மற்றவர்களிடம் பகிர்வது, எழுதுவது போன்றவைகளும் மூளைக்கு வேலைத்தரக் கூடியவைகள். தன்னார்வ தொண்டராக, பொது தொண்டாற்றுவது அல்சைமர் நோய் வருவதை தடுப்பதாக கனடா நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்று சொல்கிறது. புதியவர்களை சந்திக்கும் போதும், புதிய வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் போதும் நமதுமூளையில் என்டோர்பின்ஸ் என்கிற ஹார்மோன் சுரக்கிறது, இது மூளையை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும்வைத்திருக்க உதவுகிறது.ஒரேவிதமான வேலைகளை தினம் தொடர்ந்து செய்யும் போது மூளைதானியங்கி முறைக்கு சென்றுவிடுகிறது. நாளடைவில், மூளைசெல்கள் இறக்கத்தொடங்குகின்றன. புதியவைகள், வித்தியாசமானவைகளை முயற்சிக்கும் போது மூளைவிழிப்புநிலையில் இயங்குகிறது. காலை எழுந்தவுடன் பல்துலக்கும்போது, வலதுகையில் குச்சியை வைத்து தேய்ப்பவராக இருந்தால் அதைமாற்றி இடது கையில்தேய்க்க முயற்சி செய்யுங்கள். பல்தேய்க்கும் போது ஏதோ எண்ண ஓட்டத்தில் இருக்கும் மூளை அன்றைக்கு விழிப்பு நிலைக்கு வந்துவிடும். இந்த எளிய உதாரணம், மூளையை எப்படி தானியங்கி நிலையிலிருந்து விழிப்புநிலைக்கு கொண்டு வருவது என்பதை விளக்கும். இதுப்போன்று, கடைக்கு தினம் செல்லும் வழியில்செல்லாமல், வேறு வழிகளில் செல்லமுயற்சிக்கலாம். இது போன்ற பயிற்சிகள் மூலமாகவும், உடலினை சரியாக பேணுவதன் மூலமாகவும் மூளையை சுறுசுறுப்பாக்கி, அல்சைமர் நோய் வருவதைதடுக்கலாம்.

-கலையரசி, சிறப்பு கல்வி பயிற்சியாளர்
தேசிய செய்திகள்

4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடக்கம்




4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகள் மற்றும் அவர்கள் புகைப்படங்கள் அடங்கிய தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளம் தொடங்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 21, 2018 11:31 AM
புதுடெல்லி

மத்திய அரசு முதல் முறையாக பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதளத்தை ( என்டிஎஸ்ஓ) வெளியிட்டு உள்ளது. இதில் 4.5 லட்சம் தண்டனை பெற்றவர்கள் உள்ளனர். மேலும் இதில் 3.5 லட்சம் பேரின் புகைப்படம் இடம் பெற்று உள்ளது.

இதில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஈவ் டீசிங் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் பெயர் விவரங்கள் இடம் பெற்று உள்ளன.

இந்த ஆவணங்களை உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்துடன்( டபிள்யூசிடி) இணைந்து தேசிய குற்றப்பதிவு ஆணையமும்( என்சிஆர்பி) பராமரிக்கும்.

பாலியல் குற்ற வழக்குகளை கண்காணித்து, விசாரணை செய்வதற்கு, சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்களுக்கு இந்த ஆவணங்கள்(என்டிஎஸ்ஓ) உதவும்.

ஏப்ரல் 2018 ல் அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த ஆவணம் உலகில் ஒன்பதாவது நாடாக இந்தியா பாலியல் குற்றவாளிகளின் தேசிய ஆவணத்தை (என்டிஎஸ்ஓ) அமைப்பதற்கும் பராமரிக்க உள்ளது.

மத்திய உள்துறை தகவல் படி மாநில போலீஸ் 2005 ஆம் ஆண்டு முதல் இந்த ஆவணத்தை தொடர்ந்து புதுப்பிக்கும்படி கோரப்பட்டு உள்ளது. ஆவணத்தில் ஒவ்வொருவருக்கும் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் கைரேகை விவரங்கள் உள்ளன. எனினும், ஆவணமானது எந்த நபரின் தனியுரிமையையும் சமரசம் செய்யாது.

மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே சைபர் கிரைம் விசாரணையை வலுப்படுத்தவும், போலீஸ் அதிகாரிகள், பொது வக்கீல்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் ஆகியோரின் திறன்களை மேம்படுத்துவதற்காக பயிற்சி திட்டங்களை நடத்தவும் சைபர் பார்ன்சிக்-கம்-பயிற்சி ஆய்வகங்களை நிறுவுவதற்காக மாநிலங்களுக்கு / யூனியன் பிரேதேசங்களுக்கு 94.5 கோடி ரூபாய் வழங்கி உள்ளது

பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் தகவல் படி, ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சமூகத்திற்கு ஒரு தீவிர ஆபத்தை ஏற்படுத்த கூடிய பாலியல் குற்றவாளிகள் குற்றம்சார்ந்த வரலாற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவார்கள் என கூறினார்.

மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறும் போது, நான் மூன்று வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முன் முயற்சிகளாகும். இது பெரும் பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டது. பாலியல் குற்றவாளிகள் மற்றும் சைபர்கிரைம் புகாரளிப்பு வலைதளத்தை தேசியமயமாக்குதல் எங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மற்றொரு நடவடிக்கை ஆகும். என அவர் கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சைபர் குற்ற தடுப்புச் சட்டம் (சிசிபிடபிள்யூசி) எனும் மற்றொரு வலைப்பக்கமும், தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வழக்குகளைப் பற்றி புகார் தெரிவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களைச் சரிபார்க்க பல நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கடுமையான தண்டனையை வழங்குவதற்கும், நவீன தடயவியல் வசதிகளை உருவாக்குவதற்கும், விசாரணைகளை மேம்படுத்துவதற்கும், MHA வில் பெண்களின் பாதுகாப்புப் பிரிவை உருவாக்கும் என மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

இதன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள், சம்பந்தப்பட்ட மாநில / யூனியன் பிரதேசங்களின் போலீஸ் அதிகாரிகளால் கையாளப்படும் மற்றும் மாநில போலீஸ் விசாரணையில் உதவுவதற்கு ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கம் மற்றும் URL ஐயும் பதிவேற்ற முடியும்.

பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை உள்ளடக்கிய இணையதள தொடக்க விழா, டில்லியில் நடந்தது, இந்த நிகழ்ச்சியில், இணையதளத்தை மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மத்திய பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா பேசியதாவது:-

நாட்டில் நடக்கும், 30 சதவீத பாலியல் குற்றங்கள், பெண்கள் காப்பகத்தில் தான் நடக்கின்றன. எனவே, இந்த குற்றங்களை கண்காணித்து, குற்றவாளிகள் மீது, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...