Friday, October 5, 2018

I-T to close gutka case, confiscate valuables seized

Sivakumar.B@timesgroup.com

Chennai:05.10.2018

The income tax department is likely to conclude the gutka case ex-parte as the accused in the case have not responded to the summons issued to them after seizure of cash and documents — including a diary maintained by gutka baron A V Madhava Rao — from their premises during searches in 2016.

The I-T department is set to confiscate cash and other properties seized during the searches and it would be adjusted against the tax and penalty due from the parties concerned, said an official. It was the I-T department which brought out the gutka scam. The CBI is now probing the involvement of health minister C Vijayabaskar, DGP T K Rajendran and former Chennai police commissioner S George in the scam.

“During our searches on the offices and residences of Rao and his associates, we found that they had evaded tax to the tune of ₹250 crore,” said a senior official of the I-T investigation wing.

The diary, which was seized during the searches, exposed the links of many influential VIPs with the gutka dealer, showing in detail how much money was paid to various officials to keep the business going.

“Once the searches were completed, we wrote a letter to then chief secretary as well as then DGP to inform them about our findings. We never asked the government to take action against the people whose names were found in the diary. We also summoned Rao and other people involved in the gutka business. But they kept dodging. Some did not appear. Those who appeared for inquiry, did not respond to our queries,” said the official.

Even as the CBI probe is on, I-T is heading towards closure of its case. “In I-T, we are bothered about the tax evasion and unaccounted income. CBI is probing the corruption angle. As per the I-T Act, we have to complete the case by December 31 this year,” said the official.

The I-T department will raise demand for tax and penalty. “If the assessee needs to pay more tax after confiscation of the seized properties, we will raise further tax demand against Rao,” said the official.

CBI is now probing the involvement of health minister C Vijayabaskar, DGP T K Rajendran and former Chennai police commissioner S George in the scam
Now, you can check metro train arrival timings on app
New Updates Introduced To CMRL App


TIMES NEWS NETWORK

Chennai:05.10.2018

Commuters will no longer have to wait in metro rail stations and feel disappointed by delay in metro trains. To make it easier for passengers, CMRL has introduced new updates to their mobile app which would provide real time information on train arrivals in all the stations across the city. The app will also let passengers recharge their smart cards and send complaints to the concerned metro rail official instantly.

“Earlier, the app only had the daily train timetable. Now, the app will be updated with real-time train timings, including delays, which will help commuters plan trips accordingly,” a metro rail official said.

The mobile app was launched in May 2017, and it is periodically updated. The latest update will let commuters recharge their smart cards through the app instead of waiting in long queues at ticket counters.

With the latest update, commuters can simply key in their smartcard number and recharge upto₹1000 online. . They may, however, have to swipe the cards at the ticket vending machine to update the balance in the card, before boarding trains. Futher, the app has been updated with a travel planner, which will guide the commuter through station corridors to reach their destination.

“The app will give information on various feeder services that were introduced in the stations, including bus, cab and share auto services, along with details on the localities where they are operated,” an official said.

Thursday, October 4, 2018


குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி]

Added : அக் 04, 2018 02:32





நவக்கிரகங்களில் பூரணசுப கிரகமான குருபகவான் துலாம் ராசியில் இருந்து இன்று இரவு 10:05 மணிக்கு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகே தென்குடித்திட்டை, மதுரை அருகே குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், திருச்சி அருகே உத்தமர் கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், திருவொற்றியூர் காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி, அகரம் குருகோயில், வேலுார் அருகே தக்கோலம், திருச்செந்துார் உள்ளிட்ட தலங்களிலும், சிவாலயங்களில் உள்ள தட்சிணா மூர்த்தி, நவக்கிரக சன்னதிகளிலும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிேஷகம், ஆராதனை நடக்கும்.இந்த பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ராசியினருக்கு நற்பலனும், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசியினருக்கு சுமாரான பலனும் உண்டாகும். மேஷம், மிதுனம், கன்னி, தனுசு ராசியினர் பரிகாரமாக குரு பகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

குரு ஸ்லோகம்தேவனாம்ச ரிஷிணாம்சகுரும் காஞ்சன ஸந்நிபம்!புத்தி பூதம் த்ரிலோகேசம்தம் நமாமி ப்ருகஸ்பதிம்!!

பொருள்: தேவர்கள், ஞானிகளுக்கு குருவாகத் திகழ்பவரே! பொன் போலபிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவனாக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம்.

இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் 12 முறை படித்தால் குருவருளால் குறையனைத்தும் தீரும். கோடிநன்மை சேரும்.

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு, 'பல்டி' : சீராய்வு மனு தாக்கல் இல்லை என திடீர் அறிவிப்பு

Added : அக் 03, 2018 21:53

திருவனந்தபுரம்: 'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை' என, கேரள அரசும், திருவாங்கூர் தேவசம் போர்டும் தெரிவித்துள்ளன. தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப் போவதாக, ஏற்கனவே அறிவித்திருந்த தேவசம் போர்டு, திடீரென, 'பல்டி' அடித்திருப்பது, சபரிமலை பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனுமதி மறுப்பு : கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில், பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், மகர விளக்கு பூஜை காலத்தில், இந்த கோவிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள், 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டிச் சென்று, அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர். எனினும், இந்த கோவிலில், 10 - 50 வயது வரை உள்ள பெண்கள் வழிபடு வதற்கான தடை, பல ஆண்டுகளாக உள்ளது.இந்த வயதுக்கு உட்பட்ட காலத்தில், பெண்கள், மாதவிடாய் நிலையை எதிர்கொள்வதால், சபரி மலையில், பிரம்மச்சாரி கோலத்தில் உள்ள அய்யப்பனை தரிசிக்க, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 'சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி உண்டு' என, சமீபத்தில் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்புக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக, சபரிமலை கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டு, ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் நேற்று கூறியதாவது:சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசு சார்பில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை. திருவாங்கூர் தேவஸ்வம் போர்டும், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யாது. தீர்ப்பை முழு மனதுடன் ஏற்கிறோம்.
பாதுகாப்பு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது, அரசின் கடமை. சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு, தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.கோவிலுக்குள் பெண்கள் சென்று வழிபடுவதை தடுக்க, யாருக்கும் உரிமையில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, கோவில் நிர்வாகத்துக்கு, ஏற்கனவே உத்தரவுகள் 
பிறப்பிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, திருவாங்கூர் தேவசம் போர்டின் தலைவர், பத்மகுமார் கூறுகையில், ''சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யும் திட்டம் எதுவும் இல்லை,'' என்றார்.

பெண்கள் கண்டன பேரணி

'சபரிமலை கோவிலுக்குள், 10 - 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்கக் கூடாது; கோவிலின் ஐதீகத்தை காப்பாற்ற வேண்டும்' எனக் கோரி, கேரளாவின் பல பகுதிகளில், ஹிந்து அமைப்புகள் சார்பில், நேற்று முன்தினம் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தன.பந்தளத்தில், பந்தளம் ராஜா தலைமையில் நடந்த பேரணியில், பெண்களுடன், அரச குடும்பத்தினரும் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில், அய்யப்ப பக்தர்கள் பலர், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இடுக்கியைச் சேர்ந்த அம்பிலி என்ற பெண், தீக்குளிக்க முயற்சித்தார். அவரை போலீசார் தடுத்தனர்.
மாவட்ட செய்திகள்

பார்பிகியூ கிரில்





இப்போது வித விதமான உணவு வகைகளை வீட்டிலேயே சமைப்பதில் இல்லத்தரசிகள் மிகுந்த முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளனர்.

பதிவு: அக்டோபர் 03, 2018 15:55 PM

ஓட்டலுக்குச் சென்று குடும்பத்தோடு சாப்பிடுவதில் வேலை மிச்சம் என்றாலும், வீட்டில் சமைப்பது போன்ற கை பக்குவமும், சுகாதாரமும் ஓட்டலில் நிச்சயம் கிடைப்பதில்லை. ஓட்டலில் கிடைக்கும் உணவு வகை களை வீட்டிலேயே சமைக்க தேவை யான அனைத்து கருவிகளும் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன. இது இல்லத்தரசிகளின் வேலையை ஓரளவு குறைத்துவிட்டது. அந்த வகையில் வந்துள்ளதுதான் பார்பி கியூ.

இறைச்சி போன்ற உணவு வகைகளை மசாலா தடவி அதை சுடுவதற்கு மிகவும் உபயோகமாக இருப்பதுதான் இந்த கிரில்கள். இது மின்சாரத்தில் இயங்குவதால் வேலை மிச்சம். இறைச்சியும் நீங்கள் எதிர்பார்க்கும் பக்குவத்துக்கு வெந்துவிடும்.

யூரோலைன் நிறுவனத்தின் பார்பிகியூ கருவி 2000 வாட் மின்சக்தியை வெப்ப சக்தியாக வெளிப்படுத்தக் கூடியது. இதனால் இறைச்சி மிக எளிதாக வெந்து சுவையானதாக இருக்கும்.

இதில் பவர் இன்டிகேட்டர் உள்ளது. இந்த கிரில்லை எளிதில் கழற்றி மாட்டலாம். இதனால் இதை சுத்தம் செய்வது எளிது. மூன்று விதமான வெப்ப நிலையை இதில் மாற்றி அமைக்க முடியும். தானியங்கி கண்ட்ரோல் வசதி உள்ளதால் நிர்ணயித்த வெப்ப நிலையை எட்டியவுடன் இது தானாக அணைந்துவிடும். வீட்டு உபயோகத்துக்கென தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓராண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. கிரில் சூடேறினாலும் இதன் கைப்பிடியைத் தூக்குவதற்கு வசதியாக உள்ளது. இதனால் கைப்பிடி சூடேறாது. இனி வார விடுமுறை நாட்கள் அல்லது விருந்தினர் வந்தால் அவர்களுக்கு சுவையான விருந்து படைக்க இந்த கிரில் உதவும். இறைச்சி மட்டுமன்றி சீஸ் ரோல், உருளைக் கிழங்கு ரோல் போன்றவற்றையும் தயாரித்து சாப்பிடலாம். இதன் ஆரம்ப விலை ரூ.3,499 ஆக இருந்தது. இப்போது அமேசானில் தள்ளுபடி விலையில் ரூ.2,199-க்கு கிடைக்கிறது.
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் “சம்பளம் பிடித்தாலும் பிரச்சினை இல்லை” என திட்டவட்டம்





5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று(வியாழக்கிழமை) தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பதிவு: அக்டோபர் 04, 2018 05:30 AM
சென்னை,

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று(வியாழக்கிழமை) தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். விடுப்பு போராட்டத்தால் சம்பளம் பிடித்தாலும் பிரச்சினை இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதை உடனே வழங்கிட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்(தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

அதற்கு முன்னோட்டமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) ஈடுபட உள்ளனர்.

இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதையும் மீறி இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் கூறியதாவது:-

எங்கள் கோரிக்கைகளுக்காக முதல் முறையாக நாங்கள் இப்போது போராட்டம் நடத்தவில்லை. பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தியும் எங்களை அரசு இதுவரை அழைத்து பேசவில்லை. அதன் தொடர்ச்சியாக தான், இந்த போராட்டத்தை நாங்கள் அறிவித்து அதில் ஈடுபட இருக்கிறோம்.

ஒவ்வொரு முறை போராட்டம் செய்யும்போதும் இதுபோல் எச்சரிக்கை வரத்தான் செய்யும். எங்கள் கோரிக்கைகளுக்காக ஒரு வருடம் பொறுத்துவிட்டோம். இனிமேலும் அப்படி இருக்க முடியாது. தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் ஒருநாள் சம்பளம் பிடித்தாலும் பிரச்சினை இல்லை. அதற்கு நாங்கள் அஞ்சப்போவதும் இல்லை. நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடுகிறோம்.

மொத்தம் உள்ள 10 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், குறைந்தது 5 லட்சம் பேராவது பங்குபெறுவார்கள். அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், அடுத்தகட்ட வேலைநிறுத்த போராட்டத்துக்கு நாங்கள் செல்ல நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய செய்திகள்

சபரிமலை கோவிலுக்கு செல்ல நவம்பர் 16-ந்தேதி முதல் பெண்களுக்கு அனுமதி





சபரிமலை கோவிலுக்கு செல்ல அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி முதல் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

பதிவு: அக்டோபர் 04, 2018 05:45 AM
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இன்றி பெண்கள் உள்பட அனைத்து பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு தீர்ப்புக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நந்தன்கோட்டில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தேவஸ்தான தலைவர் பத்மகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய விருப்பம் இல்லாத நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அப்படியே அமல்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதித்து சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் முதல் பெண்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில் கூடுதலாக 600 கழிப்பறைகளும், ஓய்வறைகளும் கட்டப்படும். மழை வெள்ளப்பெருக்கின் போது பம்பையை கடந்து சன்னிதானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனை கருத்தில் கொண்டு பம்பை மலை உச்சி முதல் கணபதி கோவில் வரை ரூ.25 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும்.

கேரளாவில் தற்போது மழை வெள்ள சேத பணிகள் நடந்து வருவதாலும், பெண்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது இருப்பதாலும் இம்மாதம் 17-ந்தேதி நடைபெறும் ஐப்பசி மாத பூஜைக்கு பெண்களை அனுமதிக்க வாய்ப்பு இல்லை.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று சபரிமலைக்கு வரும் பெண்களை நாங்கள் தடுக்கவும் மாட்டோம்.

பெண்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து முடித்த பிறகு வருகிற மண்டல, மகர விளக்கு சீசன் முதல் சபரிமலை தரிசனத்திற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவர்.

அதாவது அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் சபரிமலைக்கு பெண்கள் வந்து அய்யப்பனை தரிசிக்கலாம்.

மேலும் சபரிமலைக்கு வரும் பெண்களின் வசதிக்காக ரூ.125 கோடியில் 10 ஆயிரம் ஓய்வு மையங்கள் கட்டப்படும். பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் கட்டப்படும். இதற்கான பணிகள் மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு பெற்றதும் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள மந்திரிசபை கூட்டம் திருவனந்தபுரம் தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதே அரசின் கடமை. அதனை நிறைவேற்றுவோம். சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதனை திறம்பட அரசு நிறைவேற்றும். சபரிமலை தரிசனத்திற்கு செல்ல ஏராளமான பெண்களுக்கு விருப்பம் உள்ளது. சன்னியாசி சமூகத்தில் உள்ள பெண்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அரசு சிறப்பான திட்டங்களை வகுத்து திறம்பட அதனை செயல்படுத்தும்.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதற்கிடையே சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக கேரளாவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பந்தளத்தில் நடைபெற்ற சரணகோஷ பேரணியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. கொச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது.

கோட்டயத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநில அரசின் வற்புறுத்தல் காரணமாக மேல்முறையீடு செய்யும் முடிவை தேவசம் போர்டு கைவிட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. பந்தளம் அரச குடும்பத்தினரை சந்தித்த பிறகு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா வெள்ளிக்கிழமை பந்தளத்தில் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டார்.

மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் சுப்ரீம் கோட்டில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லபள்ளி ராமசந்திரன் வலியுறுத்தி இருக்கிறார்.

பா.ஜனதா இளைஞர் அமைப்பு சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நடைபெற்ற இப்போராட்டத்தின்போது தேவசம் மந்திரியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று போராட்டத்தின்போது அவர்கள் வலியுறுத்தினர்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...