Friday, November 16, 2018

பல் மருத்துவ படிப்பை தொடர முடியாத மாணவி

Added : நவ 16, 2018 02:13



சேலம்:கூலித் தொழிலாளியின் மகளான, பல் மருத்துவக் கல்லுாரி மாணவி, கல்வி கட்டணம் செலுத்த முடியாமல், படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், கொல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம், 44; மூட்டை துாக்கும் தொழிலாளி.இவரது மனைவி வசந்தா, 38; மகன் அருண், 20, காரைக்குடி, அழகப்பா கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறார். மகள் சரிகா, பிளஸ் 2 வகுப்பில், 1,027 மதிப்பெண்கள் பெற்று, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்காத நிலையில், தனியார் மருத்துவக் கல்லுாரியில், பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

கல்லுாரி கட்டணம், 25 ஆயிரம் ரூபாய், புத்தகம் மற்றும் மருத்துவ கருவிகள் வாங்க, 85 ஆயிரம் ரூபாய், விடுதிக்கு, 1.10 லட்சம் ரூபாய் என, ஆண்டுக்கு, 2.20 லட்சம் ரூபாய் என, நான்காண்டுகள் கட்ட வேண்டும்.ஆனால், கல்லுாரி கட்டணத்தை செலுத்தி, படிப்பில் சேர்ந்த சரிகாவால், மேற்கொண்டு பணம் செலுத்த முடியவில்லை.

இது குறித்து, மாணிக்கம் கூறியதாவது:அரை மதிப்பெண் பற்றாக்குறையால், மகளுக்கு, மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைக்கவில்லை. அதேநேரம், சென்னை, தாகூர் பல் மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது. பணம் கட்ட முடியாமல், படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை உள்ளது. யாரேனும் உதவினால், பயனாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.உதவ, 63842 51070 என்ற எண்ணில் அழைக்கலாம்.

கஜா புயல்: 16 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Updated : நவ 16, 2018 07:08 | Added : நவ 16, 2018 04:26




சென்னை: கஜாபுயலை அடுத்து 10மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

16 மாவட்டங்களுக்கு விடுமுறை


கஜா புயல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை, வேதாரண்யம் அருகே கரையை கடந்ததையடுத்து கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. 

இந்நிலையில் கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, தேனி ,மதுரை .திருச்சி , அரியலூர், திருப்பூர் .உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று புதுச்சேரியிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
விருதுநகர், தூத்துக்குடி, சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி ,திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

'கஜா' புயல் சின்னம் எதிரொலி புதுச்சேரிக்கு விமான சேவை ரத்து

Added : நவ 16, 2018 04:52

புதுச்சேரி:'கஜா' புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரியில் விமான சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.ஐதராபாத், பெங்களூ ரில் இருந்து, புதுச்சேரிக்கு நாள்தோறும் 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், வங்கக் கடலில் 'கஜா' புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை மற்றும் பலத்த காற்று வீசும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வானிலை மாற்றம் காரணமாக, புதுச்சேரிக்கு இயக்கப்படும் இரண்டு விமானங்களும் நேற்று காலை ரத்து செய்யப்பட்டன.விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது குறித்து, புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கு செல்ல இருந்த 57 பயணிகள், பெங்களுருக்கு செல்ல இருந்த 47 பயணி களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டது.

முழுமையாக கரையை கடந்தது கஜா புயல்

Updated : நவ 16, 2018 03:48 | Added : நவ 15, 2018 23:44 |




சென்னை: வேதாரண்யம், நாகை இடையே கஜா புயல் முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த நவ, 1ல், வட கிழக்கு பருவ மழை துவங்கியது. நவ., 6ல், தென் சீன கடலில் உருவான காற்றழுத்த சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, அந்தமானுக்கு நகர்ந்தது. அது, 8ம் தேதி, காற்றழுத்த தாழ்வு பகுதியானது. படிப்படியாக வலுப்பெற்று, நவ., 9ல், புயல் சின்னமானது. இந்த புயலுக்கு, இலங்கை வழங்கிய, 'கஜா' என்ற, பெயர் சூட்டப்பட்டது. கஜா புயலின் மிரட்டல் தொடர்ந்தது.

புயல் வேதாரண்யம் -நாகை இடையே 12 மணீக்கு கரையை கடக்கும்அப்போது, மணிக்கு, 100முதல்110 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும். புயலின் கண் பகுதி கரையை தொடும் என, வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு எச்சரித்திருந்தது. இதையடுத்து இரவு 12 மணிக்கு புயல் கரையை கடக்க துவங்கியது.

நள்ளிரவு இரவு 2: 30 மணியளவில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாதவது, கஜா புய முழுமையாக கரையை கடந்துவிட்டதாக தெரிவித்தது. புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் கனமழை காரணமாக பாம்பன் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.கஜா புயல் காரணமாக 6 மாவட்டங்களில் 431 மையங்களில் 81 ஆயிரத்து 698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட செய்திகள்

‘கஜா’ புயல்: பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடலூர் , சிதம்பரம் வெறிச்சோடியது


கஜா புயல் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடலூர், சிதம்பரம் வெறிச்சோடியது.

பதிவு: நவம்பர் 16, 2018 04:00 AM
கடலூர்,

வங்க கடலில் உருவான கஜா புயல் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

‘கஜா’ புயல் எதிரொலியாக கடலூரில் கடல் சீற்றம் ராட்சத அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் கடற்கரைக்கு செல்ல தடை



கஜா புயல் காரணமாக கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

பதிவு: நவம்பர் 16, 2018 05:00 AM

கடலூர்,

வங்கக்கடலில் உருவான கஜா புயல் காரணமாக கடல் அலைகள் வழக்கத்தை விட 2 மீட்டர் உயரத்துக்கு எழும் என்றும், இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
மாவட்ட செய்திகள்

கஜா புயல் கரையை கடந்தது




கஜா புயல் முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பதிவு: நவம்பர் 16, 2018 04:04 AM மாற்றம்: நவம்பர் 16, 2018 05:06 AM
நாகை வேதாரண்யம் அருகே அதிராமபட்டினத்தில் 111 கி.மீ. வேகத்தில் கஜா புயல் கரையை கடந்தது .

கஜா புயலின் தாக்கம் அடுத்த 6 மணி நேரத்தில் குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

NEWS TODAY 14.07.2026