Saturday, December 1, 2018


செட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்!


Added : நவ 30, 2018 22:17


சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும், 'செட்டில்மென்ட்' பத்திரங்களை, அதில் கூறப்பட்ட நிபந்தனைகள் நிறைவேறாத நிலையில், ரத்து செய்ய அனுமதிக்கலாம் என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.பொதுவாக, குடும்ப தலைவர் பெயரில் உள்ள சொத்தை, உயில் வாயிலாக, வாரிசுகளுக்கு வழங்கலாம். இல்லையெனில், 'செட்டில்மென்ட்' எனப்படும், தானமாக எழுதி தரப்படும் பத்திரங்கள் வாயிலாகவும் கொடுக்கலாம்.

இவ்வகையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த, கண்ணன் என்ற விவசாயி, 'செட்டில்மென்ட்' வாயிலாக, மகன்களுக்கு நிலத்தை பங்கிட்டு கொடுத்துஉள்ளார். அதன்பின், மகன்கள், அவரை முறையாக பராமரிக்கவில்லை என, கூறப்படுகிறது.இது தொடர்பான புகாரை விசாரித்த, திருவண்ணாமலை கலெக்டர், சம்பந்தப்பட்ட நபர் எழுதி கொடுத்த, 'செட்டில்மென்ட்' பத்திரத்தின் பதிவையும், பட்டா மாறுதலையும் ரத்து செய்து, கண்ணன் பெயருக்கே, அந்த சொத்து திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்தார்.இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது, செட்டில்மென்ட் பத்திரங்களை எழுதி கொடுத்தவர், ரத்து செய்ய அணுகினால், அந்த கோரிக்கையை, எப்படி அணுக வேண்டும் என்பதில், குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் பிறப்பித்துள்ள உத்தரவு: எவ்வித நிபந்தனைகளும் இல்லாத, செட்டில்மென்ட் பத்திரங்களை எழுதி கொடுத்தவர் மட்டும், ரத்து செய்வதற்கான ஆவணத்தை தாக்கல் செய்தால், அதை ஏற்காமல், மறுப்பு சீட்டு வழங்கலாம் எழுதி கொடுத்தவர், பெற்றவர் இருவரும் நேரில் ஆஜராகி, ரத்து ஆவணம் அளித்தால், அதை ஏற்று, செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்யலாம் செட்டில்மென்ட் பெற்றவர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்று, ரத்து ஆவணம் தாக்கல் செய்தால், அதில் நிபந்தனைகளை ஆராய்ந்து, சார் -- பதிவாளர் முடிவு எடுக்கலாம் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாதது உறுதியாக தெரியும் நிலையில், ரத்து ஆவணத்தை, சார் - பதிவாளர்கள் ஏற்கலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. - நமது நிருபர் -
திருப்பதி லட்டு இனி அட்டைப்பெட்டியில்

Added : டிச 01, 2018 04:40 |



 
திருப்பதி : திருமலை, திருப்பதி தேவஸ்தானம், லட்டு பிரசாதம் எடுத்துச் செல்ல, பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, அட்டை பெட்டிகளை தயாரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருமலையில், கடந்த மாதம் முதல், பிளாஸ்டிக் கவர்கள், பொருட்கள் பயன்படுத்த, தேவஸ்தானம் தடை விதித்தது. ஆனால், லட்டு பிரசாதம் எடுத்துச் செல்லும் லட்டு கவருக்கு மாற்றுத் தீர்வு காணும் வரை, பிளாஸ்டிக் கவர்களையே பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. தினமும், திருமலையில், ஐந்து லட்சம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்படுகின்றன. அதை எடுத்துச் செல்ல, ஒரு லட்சம் கவர்களை தேவஸ்தானம் விற்று வருகிறது.

தற்போது, லட்டு கவருக்கு மாற்றாக அட்டை பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த அட்டை பெட்டிகள், ஏழுமலையான் உருவப்படங்கள், தேவஸ்தான முத்திரையுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், லட்டு பிரசாதத்தை, 10 நாட்களுக்கு மேலாக வைத்து, தேவஸ்தான தர பரிசோதனை நிலையத்தில் சோதிக்கப் பட்டது. அதில், லட்டு பிரசாதத்தின் தரமும், சுவையும் மாறாததால், அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கதையின் அடிப்படையே கோளாறு: ‘2.0’ படம் குறித்து சாரு நிவேதிதா

Published : 30 Nov 2018 14:46 IST

 


ரஜினி நடிப்பில் நேற்று (நவம்பர் 29) ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகிறார்கள். தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த தமிழ்ப்படமாக இது இருக்கிறது என ஆச்சரியப்படுகின்றனர். ஆனால், எழுத்தாளர் சாரு நிவேதிதாவோ இந்தப் படத்தைக் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்திருக்கிறார்.

  இதுகுறித்து தனது முகநூலில், “சிலரைப் பார்த்து, ‘இவர் தப்பான ஆள்’ என்று சொல்வோம் இல்லையா... அதுபோல் ‘2.0’ ஒரு தப்பான படம். பொதுவாகவே ஷங்கரின் படங்கள் ஆரம்பத்திலிருந்தே தப்பான கருத்துகளை மக்கள் நலனைப் பேணும் கோட்பாடுகளாக முன்வைக்கப்படுகின்றன. 5000 கோடி ஊழல் பண்ணினவன் பற்றிப் பேச்சே இருக்காது; ஆனால், அம்பது ரூபாய் லஞ்சம் வாங்கும் ட்ராபிக் போலீஸை ஷங்கரின் ஹீரோ சுட்டுப் பொசுக்குவான். இதுதான் ஷங்கரின் சமூகவியல் அறிவு.

அதே அறிவுதான் இந்தப் படத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. அதிலும் கொஞ்சம்கூட சுவாரசியமே இல்லாமல், படு அலுப்பைத் தரும் விதத்தில். செல்போன் டவர்களால் பறவை இனங்கள் அழிகின்றதாம்; அதனால் மனித இனத்துக்குக் கேடு விளைகிறதாம். ஆரம்பக் காட்சியில் செல்போன் டவர்களையும், அதன் பக்கத்தில் சிட்டுக்குருவிகளையும் பார்த்த கணத்திலேயே, ‘ஐய்யய்யோ... மோசம் போனோமே... முடிஞ்சுது கதை’ என்று தலையில் கையை வைத்துவிட்டேன். ஏனென்றால், இதுபோன்ற போலி விஞ்ஞானக் கோட்பாடுகளை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே தானே இருக்கிறோம்? ‘ராக்கெட் விடாதீங்க... போய் விவசாயம் பாருங்க...’ என்று கூச்சல் போடும் தலைவர்களை நாம் பார்க்கிறோம் இல்லையா? அதேதான் ‘2.0’. இப்படியே இவர்கள் சட்டை வேட்டி கூடப் போட வேண்டாம் என்று சொல்லி, நம்மையெல்லாம் காட்டுமிராண்டி காலத்துக்கு அழைத்துப்போய் விடுவார்கள். இதுபோன்ற கலாச்சாரப் புரட்சிவாதிகளை நாம் சீனாவில் மா சே துங் ஆட்சியில் பார்த்திருக்கிறோம். தாலிபான்களின் ஆட்சியிலும் சமீபத்தில் பார்த்தோம். இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் அடிப்படையில் தாலிபான்கள். ஆனால், தாலிபான்களுக்கும் ஷங்கருக்கும் என்ன வித்தியாசம் என்றால், தாலிபான்களிடம் இருக்கும் அடிப்படை நேர்மை கூட ஷங்கரிடம் இருக்காது. உதாரணம், செல்போன் டவர்களால் பறவையினங்கள் அழிந்து மனித குலத்துக்குக் கேடு என்று சொல்லும் ‘2.0’வை 600 கோடி ரூபாயில் எடுத்த லைகா நிறுவனமே செல்போன் விற்பனை செய்யும் நிறுவனம்தான். அதிலும் ஐரோப்பாவில். எப்படி இருக்கிறது பாருங்கள்... ஊருக்கு உபதேசம் செய்பவன்தான் ஊரைக் கெடுப்பதில் முதல் ஆளாக நிற்பான்.

படத்தில் சுவாரசியம் என்பது துளிகூட இல்லை. முதல் காட்சியில் செல்போன் டவர்களையும் சிட்டுக்குருவிகளையும் பார்த்ததுமே ரஜினி என்ன செய்யப் போகிறார், அக்‌ஷய் குமார் என்ன செய்யப் போகிறார், ரஜினி கடைசிக் காட்சியில் என்னென்ன வசனம் பேசப் போகிறார் என்ற விபரத்தையெல்லாம் நான் என் அருகில் அமர்ந்திருந்த நண்பரிடம் சொல்லிவிட்டேன். இப்படித் தெரிந்துபோனால் அப்புறம் என்னத்தைப் பார்ப்பது?

பறவையியலாளர் சலீம் அலியை வேறு நாற அடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் படத்தில் வரும் ஆர்னிதாலஜிஸ்ட் பக்ஷிராஜன், பறவைகளைச் சாப்பிடுவதைக் கண்டிப்பது போல் வருகிறது. அதாவது பறவையியலாளர்கள் பறவைகளைச் சாப்பிடக்கூடாது. இதுபோன்ற அறிவுகெட்டத்தனமான romanticization-ஐ சலீம் அலி கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அவருக்குப் பிடித்த உணவு, பறவை. இதுபற்றிப் பலரும் அவ்வப்போது அவரிடம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும்போது, “அட மூடர்களே, நான் பிறந்ததிலிருந்தே பறவைக்கறிப் பிரியன். எங்கள் வீட்டு டைனிங் டேபிளில் இல்லாத பறவைகளே கிடையாது. பறவை ஆய்வுக்கும், சைவ உணவுக்கும் என்னய்யா சம்பந்தம்?” என்று சொல்லியிருக்கிறார். அதேசமயம், அழிந்து வரும் விலங்கினங்களை அடிக்கக் கூடாது என்பது வேறு விஷயம் என்றும் கூறுகிறார்.

ஆனால், இந்தப் படத்தில் அநியாயத்துக்கு அதையும் romanticise செய்திருக்கிறார்கள். மேலும், இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான பலவீனம், பறவைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கவலைப்படும் ஒருவன், எப்படி மனிதர்களைக் கொல்லும் அரக்கனாக இருக்கிறான் என்பது. காந்தியைக் கொலைகார வில்லனாகப் பார்ப்பது போல் இருக்கிறது. கதையின் அடிப்படையே கோளாறு என்பதால் எல்லாமே கோளாறு.

டெக்னாலஜி விஷயங்களுக்காக சின்னப் புள்ளைங்க பார்க்கலாம்.

ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள்... அடுத்த படத்தில் ஏதாவது வில்லனுக்கு சாரு நிவேதிதா என்று பெயர் வைத்து விடாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார் சாரு நிவேதிதா.

டிச., 4 முதல் மீண்டும் கன மழை!


பத்து நாட்கள் இடைவெளிக்கு பின், வரும், 4ம் தேதி முதல்,
சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில், கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, நவ., 1ல் துவங்கியது.
முதலில், சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களிலும், பின், டெல்டா மாவட்டங்களிலும், தொடர்ந்து, தென் மாவட்டங்களிலும் மழை கொட்டியது.இதையடுத்து, 'கஜா' புயல் உருவாகி, நவ., 16ல், நாகை மாவட்டத்தில் கரையை கடந்தது. இந்த புயல், தமிழக டெல்டா மாவட்டங்களுக்கு, மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. புயல் தாக்கிய பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.அதேநேரம், வடகிழக்கு பருவ மழையின் தீவிரமும் குறைந்தது. நவ., 23 முதல், பெரும்பாலான இடங்களில் மழை இல்லை. நேற்று முன்தினம் முதல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மீண்டும் மழை துவங்கியது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, கும்ப கோணத்தில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கிடையில், வடக்கு கடலோர மாவட்டத்தினர், மழையை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். வரும் கோடை காலத்தை சமாளிக்க, நீர்நிலைகளில் பருவமழை வாயிலாகவே, நீரை சேகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், மழையை எதிர்பார்த்து, மக்கள் காத்துள்ளனர்.இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று, வரும், 3ம் தேதி முதல், மீண்டும் வலுப்பெறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், 4ம் தேதி முதல், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில், கனமழை பெய்யலாம். எனவே, தமிழகம் மற்றும் ஆந்திர கடல் பகுதிக்கு, டிச., 4ம் தேதியில், 11 செ.மீ., வரை மழை பெய்வதற்கான, 'மஞ்சள் அலர்ட்' விடப்பட்டுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

NEET: TN seeks extension of application deadline

Posted on November 29, 2018 by NT Bureau


 


Following Cyclone Gaja affecting the delta districts of the State, the Tamilnadu government has requested the NTA to extend the deadline for applying for NEET (UG) – 2019 medical entrance examination.

With just a day left for the deadline to apply for the test, students in the delta districts are in trouble as they do not have access to Internet to apply for the competitive examination, it said.

Medical aspirants of eight districts in central Tamilnadu became victims of Cyclone Gaja and most of them have lost their house, properties and their families, their livelihood. The last date to apply for NEET (UG) – 2019 is 30 November 2018.
HDFC unveils next-gen mobile banking app 

Posted on November 30, 2018 by NT Bureau

 


Chennai: HDFC Bank unveiled its next-gen mobile banking app that it claims offers users effortless access to their bank account on the go.

HDFC says the app has simple, intuitive navigation and incorporates features such as biometric log in for enhanced security and access. It also eliminates all financial and technical jargon for users by grouping transactions into three easy to understand categories – pay, save, and invest, the bank says.

The over 120 transactions available on the app have been selected based on an intensive study of existing navigation and usage patterns coupled with customer research and feedback, the bank stated in a release.

Country head – Digital Banking, HDFC Bank, Nitin Chugh, said, “The next-gen mobile banking app is effortless and intuitive, allowing you to #BankTheWayYouLive. Today, the way that people use the mobile is constantly evolving and our next-gen app reflects this evolution. The next gen app is one more step by the bank in its on-going journey to become a constant part of customers’ life, understand their needs and give products and services that offer a real time experience.”
Sister of unmarried man entitled to damages: Madras HC 

DECCAN CHRONICLE.


Published Dec 1, 2018, 3:36 am IST

The judge directed the United Insurance Company to pay Rs 2 lakh as compensation to Malliga. 



 

Madras high court

Chennai: The Madras high court has held that the sister of an unmarried man, who died in a road accident, is also entitled to compensation.

Partly allowing an appeal from Malliga, sister of deceased Ganapathy, Justice M.V.Muralidaran set aside an order of the Motor Accident Claims Tribunal, Vellore, declining the entitlement of compensation by the appellant.

The judge directed the United Insurance Company to pay Rs 2 lakh as compensation to Malliga.

According to Malliga, even though the tribunal had held that the accident had occurred due to rash and negligent driving of the lorry driver and that the owner and the insurance company were liable to pay compensation, it refused to pass any order on October 29, 2014, since she had failed to prove that she was the legal heir of the deceased. Hence, she filed the present appeal, she added.

Citing judgments of the Supreme Court and high courts, the judge said as regards dependency compensation was concerned, there was no hard and fast rule that brothers and  sisters cannot maintain a claim petition for compensation under the said head. Each case has to be considered on its own merits. In the case on hand, the appellant was the sister of the deceased and she has produced the  relationship certificate to that effect.

“This court is of the view that the appellant is the dependent of the deceased and she is entitled to maintain the claim petition for the death of her deceased brother, as no class I heir available,” the judge added.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...