Sunday, March 3, 2019

TN tops number of PG Medical seats in the country

Education

Tamil Nadu tops number of PG medical seats in the country

The record high follows the decision by the Board of Governors of the Medical Council of India to convert 384 diploma medical seats to postgraduate seats.

TNM Staff

Saturday, March 02, 2019 - 09:06

Post graduate medical seats in Tamil Nadu witnessed a record high from 1,250 in 2018-2019 to 1,758 in 2019-2020, following the Medical Council of India's decision to convert diploma seats. An additional sanction of 124 post graduate degrees have also been made for the academic year between 2019 and 2020. While the state originally had 1250 postgraduate medical seats up for grabs in 2018- 2019, it had requested an additional 124 seats. These seats were subsequently sanctioned by the Medical Council of India in two phases. With the conversion of 384 postgraduate diploma programmes to full time postgraduate seats, the total number of postgraduate medical seats is at 1,758.

According to one report in The New Indian Express, the six colleges where the diploma seats underwent conversion include: Madras Medical College where the number of seats have now risen to 433, Stanley Medical College to 204, Kilpauk Medical College to 121, Madurai Medical College to 184, Thanjavur Medical College to 102 and Coimbatore Medical College to 33.

Speaking to the newspaper, Dr A Edwin Joe, Director of Medical Education said that the move also made the Madras Medical College, Chennai the college with the most number of postgraduate degree seats - from 250 to 433 - doubling the number of its undergraduate seats.

According to the Director of Medical Education, Tamil Nadu has additionally applied for a further sanction of 350 undergraduate MBBS seats for the academic year between 2019 and 2020. While Tamil Nadu has highest number of state-run medical colleges in the country, proposals for medical colleges in Perambalur and Ramanathapuram districts are pending.

Madras HC

Madras HC allows 144 students of defunct TN medical college to take exams

The students stated that the state government had issued a circular barring them from taking their second-year exams in 2019 since they did not have the required clinical hours.

TNM Staff

Sunday, March 03, 2019 - 10:12

In a relief to 144 medical students, the Madras High Court directed the Directorate of Medical Education to accommodate the students in other medical colleges in the state to fulfil their attendance requirements for taking second-year exams. The order came following a group of petitions filed by the students, whose college was denied recognition by Medical Council of India.

The students had stated that the state government had issued a circular barring them from taking their second-year exams in 2019 since they did not have the required clinical hours.

In his order, justice N Kirubakaran said that the DME must conduct the second-year examinations for these students in August 2019 and allow them to continue their studies and attend third-year classes from April 2019 onwards. The judge also noted that all the 144 students already had 60 to 70 percent attendance, which was close to the mandatory attendance requirement of 75 percent set by the authorities.

This court is of the view to allow the relocated students to continue to attend the second-year classes until March 2019. After classes for third-year commence, the accommodated students will be allowed to merge with the regular students, namely, third-year students and continue their studies from April 2019 onwards, the judge ordered. He added that since the attendance requirement is 75 percent, it should not be a problem to allow the students to take their second-year exams in August 2019. The judge also said that the order was passed taken into consideration the students’ sufferings due to no fault of theirs.

In March 2018, the state government had relocated these students to government medical colleges in the state, after the Medical Council of India (MCI) cancelled the recognition provided to Annaii Medical College and Hospital in Pennalur, Kanchipuram district as the institution did not meet the standards set by the MCI.

Although the students were accommodated in various colleges, the state government did not allow them to sit for exams this year citing lack of attendance.

Justice Kirubakaran had noted that the state government had issued the Essentiality Certificate to the college in 2010 and had cancelled it in 2011 without informing the same to the central government or the medical university. The judge also pointed out that had this fact been informed to the relevant authorities on time, Dr MGR Medical University and Medical Council of India would not have granted approval to the college and this problem could have been avoided.

கர்நாடகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிக் கட்டணம் 10 சதவீதம் உயர்த்த முடிவு
By DIN | Published on : 03rd March 2019 02:19 AM 



கர்நாடகத்தில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.

கர்நாடகத்தில் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பாடங்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து விவாதிக்க பெங்களூரில் சனிக்கிழமை கர்நாடக அரசு மானியம் பெறாத தனியார் பொறியியல் கல்லூரிகளின் சங்கம், கர்நாடக மதம் மற்றும் மொழி சிறுபான்மையினர் தொழில் கல்லூரிகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர்ஜி.டி.தேவெ கெளடா தலைமையில் நடைபெற்றது.


இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பின்னர் ஜி.டி.தேவெ கெளடா செய்தியாளர்களிடம் கூறியது:

2019-20-ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த அதன் நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. நீண்ட விவாதத்துக்கு பிறகு கல்விக் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. கல்லூரி பிரதிநிதிகளிடம் முதல்வர் குமாரசாமியும் தொலைபேசியில் பேசி 10 சதவீத கல்விக் கட்டண உயர்வுக்கு ஒப்புக்கொள்ள வைத்தார்.

2 ஆண்டு காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில் கல்விக் கட்டணத்தை 15 சதவீதமாக உயர்த்த அரசு விரும்பியபோதும், அதற்கு ஒப்புக்கொள்ளாத நீதிபதி சைலேந்திரகுமார் தலைமையிலான கட்டண ஒழுங்குமுறைக் குழு, 8 சதவீத கல்விக் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்திருந்தது. சட்ட சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அதற்கு அரசு ஒப்புக் கொண்டிருந்தது.

ஆனால், இம் முறை 25 சதவீதத்துக்குப் பதிலாக 10 சதவீதக் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதித்துள்ளது.

7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம், கல்லூரியை நடத்துவதற்கான செலவைக் கருத்தில் கொண்டு கட்டண உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. அரசு பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார் அவர்.

நீதிபதி சைலேந்திரகுமார் தலைமையிலான கட்டண ஒழுங்குமுறைக் குழு கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய குழுவை அரசு அமைக்கவில்லை. இந்தநிலையில், கல்விக் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது குறிப்
பிடத்தக்கது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம்

கல்வி ஆண்டு அரசு ஒதுக்கீடு தனியார் ஒதுக்கீடு

2018-19 ரூ.53,460+பல்கலை. கட்டணம் ரூ.1,43,748
2019-20 ரூ.58,800+பல்கலை. கட்டணம் ரூ.2,01,960
தெருக் குழந்தைகளின் நரக வாழ்க்கை!

By ரமாமணி சுந்தர் | Published on : 02nd March 2019 01:19 AM |

உலகில் சுமார் 12 கோடி குழந்தைகள் வீடுகள் இன்றி தெருக்களில் வசிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தெருக் குழந்தைகள் வாழும் நாடு என்ற அவப்பெயரை இந்தியா பெற்றுள்ளது.

மும்பை, கொல்கத்தா, தில்லி, சென்னை, கான்பூர், ஹைதராபாத், பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் தெருக் குழந்தைகள் அதிகமாகக் காணப்படுகிறார்கள். தெருக் குழந்தைகள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் நடைபாதைகள் மட்டுமல்லாமல், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், அங்காடிகள், மேம்பாலங்களின் கீழ், கோயில்கள், குருத்வாராக்கள் என்று பல பொது இடங்களை தங்கள் இருப்பிடமாகக் கொண்டுள்ளனர். கிராமங்களிலிருந்தும், சிறு ஊர்களிலிருந்தும் ரயில் மூலம் பல குழந்தைகள் வீட்டை விட்டு ஓடி வந்து பெரு நகரங்களை வந்தடைகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 70,000 முதல் 1,20,000 குழந்தைகள் இந்தியாவின் 50 முக்கிய ரயில் நிலையங்களில் வந்திறங்குகின்றனர்.
தெருக் குழந்தைகளை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். முதலாவது வகை, தங்கள் குடும்பத்துடன் நடைபாதைகள் போன்ற பொது இடங்களில் வசிக்கும் குழந்தைகள்; இவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்துடன் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நகரத்துக்குப் பிழைப்புத் தேடி புலம் பெயர்ந்தவர்களாக இருப்பார்கள்;

இரண்டாவது வகை, தனியாகவோ அல்லது குழுக்களாகவோ தெருக்களில் வசிப்பவர்கள்; ஓரளவு தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பவர்கள்;
மூன்றாவது வகையைச் சார்ந்த குழந்தைகள், குடும்பத்தினருடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் அல்லது யாருமற்ற அநாதைகள். இந்த மூன்று வகையினரில், உணர்வுப்பூர்வமாகவும், உள ரீதியாகவும் குடும்பத்தினரின் ஆதரவு ஒன்றும் இல்லாமல் தன்னந்தனியாக இந்த உலகில் நீச்சல் போடும் மூன்றாவது வகையைச் சார்ந்த குழந்தை
களின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது. 
 
குழந்தைகள் தெருக்களையே தங்கள் வாழ்விடமாகக் கொள்வதற்கு வறுமையே முக்கியக் காரணம் என்று கூறப்பட்டாலும், குடும்ப உறவுகளின் சிதைவு, குடும்ப வன்முறைகள் போன்ற பிரச்னைகளும் அவர்கள் நடைபாதைகளை நாடுவதற்குக் காரணமாகின்றன. கல்வியில் நாட்டமின்மை, பெற்றோரின் மரணம், மாற்றாந்தாயின் கொடுமை, தந்தையின் குடிப்பழக்கம், பெற்றோரின் கண்டிப்பான கண்காணிப்பு , பெற்றோரிடம் அடி உதைக்கு ஆளாகுவது, குடும்ப உறவினர்கள் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகள் போன்றவை குழந்தைகள் வீட்டை விட்டு ஓடிப் போவதற்கு முக்கியக் காரணங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நகர்ப்புற வாழ்க்கையின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, நகரங்களில் தங்களுக்கு வளமான எதிர்காலம் இருப்பதாக எண்ணி ஏமாந்து போகும் சிறார்கள் எண்ணிலடங்கா.இப்படி நகரங்களுக்கு வந்து சேரும் குழந்தைகள் எந்த வழியிலாவது பணம் சம்பாதித்து தங்களது வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப் படுகிறார்கள்.
பிச்சை எடுப்பது, போக்குவரத்து சிக்னல்களில் பொருள்கள் விற்பது, குப்பைத் தொட்டிகளில் பிளாஸ்டிக் பொருள்கள், இரும்பு சாமான்களைப் பொறுக்குவது, தெருவோரக் கடைகள், உணவகங்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறைகளில் எடுபிடி வேலை என இந்தக் குழந்தைகள் செய்யாத பணிகளே இல்லை. திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது, போதைப் பொருள்கள் கடத்துவது என்று சட்ட விரோதமான செயல்களுக்கும் இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். தெருக் குழந்தைகள் பலர் போதைப் பொருள்களைக் கடத்துவதுடன், தாங்களும் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

இந்தக் குழந்தைகள் தங்களது குழந்தைப் பருவத்தை இழக்கிறார்கள்; கல்வி பெறும் வாய்ப்பை இழக்கிறார்கள். திறந்த வெளியில் வாழும் இவர்கள் மழை, வெயில், கடும் குளிர் போன்ற பருவங்களின் தாக்குதலுக்கும் உள்ளாகிறார்கள். கழிப்பிடம், குளிப்பதற்கு மற்றும் குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் போன்ற வசதிகள் இன்றி அசுத்தமான சூழ்நிலையில் வாழும் இந்தக் குழந்தைகள், அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் தக்க மருத்துவ உதவி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. எந்த ஓர் அடையாளமும் இல்லாமல் வாழும் இந்தக் குழந்தைகளுக்கு அரசின் சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. நடைபாதைகளில் படுத்துறங்கும் இந்தக் குழந்தைகள் சாலை விபத்துகளுக்குள்ளாவதும், பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதும் சகஜம். 

இத்தகைய குழந்தைகளை பணிக்கு அமர்த்திக் கொள்ளும் முதலாளிகள், காவல் துறையினர் போன்றோர் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தயங்குவதில்லை. அடித்து உதைத்துச் சம்பாதிக்கும் சொற்பப் பணத்தைப் பறித்துக் கொள்வது, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குவது, சட்ட விரோதமான செயல்களுக்குப் பயன்படுத்துவது என்று பலராலும் இவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

பல குழந்தைகள் பாதுகாப்பிற்காக தங்களைவிட வயதில் மூத்தவர்களுடன் ஒரு குழுவாகச் சேர்ந்து வாழ்வதும் உண்டு. ஆனால், அந்த மூத்த தோழர்களே இவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் கொடுமையும் உண்டு.
இப்படிப் பெரு நகரங்களில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குழந்தைகளின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மத்திய அரசு தெருக்குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தி வருகிறது. 2009-2010-ஆம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் அந்தந்த நகரங்களில் வாழும் தெருக் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான வசதிகள் போன்றவற்றைப் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்வது, 24 மணி நேரமும் திறந்திருக்கும் உறைவிடங்கள் அமைத்துக் கொடுப்பது, இரவு நேர தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்வது, முறைசாரா கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அளித்தல், நோய்கள் வராமல் தடுப்பதற்கு வழிவகுத்தல், ஆறு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை அங்கன்வாடியில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய- மாநில அரசுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் நிதியுதவி அளிக்கிறது. சலாம் பாலக் டிரஸ்ட், சேவ் தி சில்ரன், ரயில்வே சில்ரன், சேத்னா போன்ற தன்னார்வ நிறுவனங்கள் தெருக் குழந்தைகளுக்காகப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன.
இக்கட்டான நிலைமையில் உள்ள குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு 24 மணி நேரம் இயங்கும் சைல்டு லைன் வசதியை மத்திய அரசின் கீழ் இயங்கும் சைல்டு லைன் ஃபவுன்டேஷன் என்னும் அமைப்பு வழங்குகிறது.வீட்டை விட்டு ஓடி வந்து பெருநகரங்களில் ரயிலில் வந்திறங்கும் குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அமைத்துக்கொடுக்கும் பணியை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தன்னார்வநிறுவனங்களின் துணையுடன் மேற்கொள்கின்றனர். முக்கியமான ரயில் நிலையங்களில் பணிபுரியும் இந்தப் படை, நிராதரவாக வந்திறங்கும் குழந்தைகளின் முகவரியைக் கேட்டறிந்து அவர்களைப் பெற்றோரிடம் சேர்க்க முயற்சிக்கின்றனர். அப்படி குடும்பத்தினரிடம் சேர்க்க முடியாத குழந்தைகளை, தன்னார்வ நிறுவனங்களில் ஒப்படைக்கின்றனர்.
எனினும், ரயில் நிலையங்களில் பிடிபட்டு திருப்பி அனுப்பப்படும் குழந்தைகள் பலரும் திரும்பி நகரத்திற்கே வந்து சேர்ந்து விடுகின்றனர். இதற்கு அந்தக் குழந்தைகளின் குடும்பச் சூழ்நிலை ஒரு காரணமாக இருந்தாலும், இந்தக் குழந்தைகள், தங்கள் இச்சைப்படி பெரியவர்களின் கண்காணிப்பு அல்லது கண்டிப்பு இல்லாமல் ஓரளவு பொருளாதாரச் சுதந்திரத்துடன் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்வதில் மகிழ்ச்சியைக் காண்பதே முக்கியக் காரணம். 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகக் காணப்படும் ரயில் நிலையங்கள் இந்தக் குழந்தைகளுக்கு, பயணிகள் விட்டுப் போகும் பத்திரிகைகள், செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் புட்டிகள் சேகரிப்பது, சிறு சிறு பொருள்களை விற்பது போன்ற வாய்ப்புகளை வழங்குவதோடல்லாமல், உண்ண, உறங்க, நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் இடமளிக்கிறது. 
 
இந்தக் குழந்தைகளை மீட்டு அவர்களைப் பெற்றோரிடம் சேர்க்க முயற்சிப்பது என்பது எல்லா குழந்தைகளின் விஷயத்திலும் சரியான தீர்வாக இருக்க முடியாது என்று ரயில்வே துறையின் தொடர்பில் உள்ள குழந்தைகளின் உரிமைகளுக்காக அமைக்கப்பட்ட அகில இந்திய ஆய்வுக் குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தெருக் குழந்தைகளைப் பொருத்தவரை, அவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அடிப்படை உரிமைகளும் கிடைக்க வழிவகுக்கும் அணுகுமுறையே சிறந்தது என்று தற்போது கருதப்படுகிறது.

வீதிகளிலேயே தங்களது வாழ்க்கையைக் கழிக்கும் தெருக் குழந்தைகளின் அவல நிலையைப் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கவும், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ஆம் நாள் சர்வதேச தெருக் குழந்தைகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சமூகத்தின் விளிம்பில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குழந்தைகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்கி, அவர்களை நல்வழிப்படுத்தி அவர்கள் குற்றவாளிகளாக தலையெடுப்பதைத் தடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.



கட்டுரையாளர்:
சமூக ஆர்வலர்
பி.எப்., விதிமுறையில் மாற்றம்?

Added : மார் 03, 2019 00:26

புதடில்லி:'அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஊழியர்களுக்கு, நிறுவனம் வழங்கும் அடிப்படை சம்பளத்தில், சிறப்பு படியையும் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகை, மாதம்தோறும் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருங்கால வைப்பு நிதி கமிஷனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து சில நிறுவனங்கள், மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஊழியருக்கு நிறுவனம் வழங்கும் சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடிக்கக் கூடாது' என உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

பல நிறுவனங்கள் சார்பிலும், சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் நடந்தது.

விசாரணை முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும் சிறப்பு படியையும் சேர்த்தே, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். சிறப்பு படி என்பதை, சம்பளத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.

ஊழியருக்கு, சிறப்பு படிகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்பதை, மனு தாக்கல் செய்த நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை. எனவே, அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
எழும்பூர் -கொல்லம்மார்ச் 5 முதல் தினசரி ரயில் : விருதுநகர்-செங்கோட்டை வழித்தடத்தில் கிடைத்தது கூடுதல் ரயில்

Added : மார் 03, 2019 04:33


ஸ்ரீவில்லிபுத்துார்:சென்னை எழும்பூரிலிருந்து கொல்லத்திற்கு திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மார்ச் 5 முதல் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரிலிருந்து (ரயில் எண்.16101) தினமும் மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் 5:28, விருத்தாசலம் இரவு 8:13, திண்டுக்கல் அதிகாலை 12:15, மதுரை 1:10, விருதுநகர் 2:13, சிவகாசி 2:39, ஸ்ரீவில்லிபுத்துார் 2:54, ராஜபாளையம் 3:08, செங்கோட்டை 5:10, ஆரியங்காவு 5:54 வழியாக 8:45 மணிக்கு கொல்லம் வந்தடைகிறது.

கொல்லத்திலிருந்து (ரயில் எண்:16102) தினமும் காலை 11:45 மணிக்கு புறப்பட்டு புனலுார் 12:35, தென்மலை 1:38, ஆரியங்காவு 2:03, செங்கோட்டை 3:10, தென்காசி 3:28, கடையநல்லுார் 3:44, ராஜபாளையம் 4:38, ஸ்ரீவில்லிபுத்துார் 4:42, சிவகாசி 4:56, விருதுநகர் 5:23, மதுரை மாலை 6:30, திண்டுக்கல் இரவு 7:55, திருச்சி 9:15, விருத்தாசலம் 11:23, விழுப்புரம் அதிகாலை 12:25, செங்கல்பட்டு 2:13, தாம்பரம் 2:43 மணிக்கு வந்து 3:30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது.

14 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 2 மூன்றாம் வகுப்பு ஏ.சி.,பெட்டிகள், 8 சிலிப்பர் பெட்டிகள், தலா 2 முன்பதிவில்லா பெட்டிகள் உள்ளன. இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.இந்த ரயில் இயக்கப்படுவதன் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு விருதுநகர்- செங்கோட்டை வழித்தடத்தில் சென்னைக்கு கூடுதலாக ஒரு ரயில் கிடைத்துள்ளது.

மனைவிக்கு சொத்து பரிசளித்தால் இனி முத்திரை கட்டணம் இல்லை

Added : மார் 03, 2019 00:13

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில், 'கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும், அசையா சொத்து மீதான பதிவுக்கு முத்திரை கட்டணம் வசூலிப்பதில்லை' என, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஒருவர் பெயரில் இருந்து, அவரது தந்தை, தாய், மகன், சகோதரி, மருமகள், பேரன் மற்றும் பேத்தி பெயருக்கு மாற்றப்படும் அசையா சொத்து பதிவுக்கு, 2.5 சதவீதம் முத்திரைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், மனைவி அல்லது மகளுக்கு, அசையா சொத்துகளை பரிசாக வழங்கும்போது, அதன் பதிவுக்கு, சொத்தின் சந்தை மதிப்பில், 1 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 1 லட்சம் ரூபாய் வரை, முத்திரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும் அசையா சொத்தின் மீதான பதிவுக்கு, முத்திரைக் கட்டணம் வசூலிப்பதில்லை என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...